விவாதம் உறுதி செய்யப்பட்டது!

திருக்குர்-ஆன் இறைவேதமே! என்ற தலைப்பில் ஏப்ரல் 28, 29 சனி மற்றும் ஞாயிறு ஆகிய தேதிகளில் விவாதம் நடத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. 

விவாதத்திலிருந்து தப்பி நழுவி ஓடுவதற்காக அவர்கள் விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்ற பொருந்தாக்காரணத்தை கூறி வந்தனர்.

அவர்களை தப்பி ஓடவிட்டுவிடக்கூடாது என்பதற்காக நாம் இறங்கி வந்து, நேரடி ஒளிபரப்பு இல்லாமலேயே விவாதம் செய்ய நிர்பந்தித்து அவர்கள் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனவே, நேரடி ஒளிபரப்பும், விளம்பரமும் இல்லாமல் தரப்புக்கு 25 பார்வையாளர்களைக் கொண்டு இவ்விவாதம் நடைபெற உள்ளது.

விவாதம் முடிந்த பிறகு தாமதமின்றி முழு விவாத வீடியோக்கள் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்

April 13, 2012, 7:42 PM

“திருக்குர்-ஆன் இறைவேதமே!” நிரூபித்த

“திருக்குர்-ஆன் இறைவேதமே!”

- அடுக்கடுக்கான சான்றுகளை வைத்து நிரூபித்த டிஎன் டிஜே! திக்குமுக்காடிய கிறித்தவ போதகர்கள்!!

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46). மேற்கண்ட வார்த்தைகள் ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியாகப் புலம்பிய வார்த்தைகள். இதே வார்த்தைகளைத் தான் “திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் விவாதத்தின் இறுதியில் சொல்லி புலம்பிக் கொண்டு சென்றிருப்பார்கள் என்று நினைக்கின்றோம்.

அந்த அளவிற்கு அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் “திருக்குர்ஆன் இறைவேதமே!”

என்ற தலைப்பில் கிறித்தவ போதகர்களுடனான விவாதம் சிறப்பாக நடந்து முடிந்தது.

கடந்த 28, மற்றும் 29 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமயகத்தில் வைத்து நடைபெற்ற விவாதத்தில் பீஜே தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுவினர் கிறித்தவ போதகர் ஜெர்ரி தாமஸ் குழுவினரோடு விவாதித்தனர். தரப்புக்கு தலா 25 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக சான் தரப்பினர் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் நம்முடன் இந்தத் தலைப்பில் விவாதிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, விவாதத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவு 1.40க்கு விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்தால் நாங்கள் வரமாட்டோம் என்று கூறி விவாதத்திலிருந்து நழுவி ஓடினர். விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என்று நாம் ஒப்புக் கொண்டால் தான் விவாதத்திற்கு வருவோம் என்று விடாப்பிடியாக அவர்கள் இருந்ததால், இவர்களுடன் இந்தத் தலைப்பில் விவாதித்தே ஆக வேண்டும். இவர்களை விட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்து நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்ற அவர்களது நிபந்தனையையும் ஏற்று இந்த விவாதத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்.

ஆரம்பமே அதிர்ச்சி:

ஜனவரி 21, 22 ஆகிய நாட்களில் நடைபெற்ற “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாதத்தில் அவர்களுக்கு நாம் வைத்த அந்த விஷப்பரீட்சை அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இதுவரை இன்னும் மீளவில்லை என்பது இந்த வாதத்திலும் நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

சென்ற வாதத்தில், “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் “பைபிள் இறைவேதம் தான்” என்பதற்கு ஒரு சான்றைக்கூட எடுத்து வைக்கவில்லை. மாறாக நாம் பைபிளிலிருந்து காட்டிய ஆபாசங்களுக்கும், கேவலங்களுக்கும், உளறல்களுக்கும் விளக்கம் சொல்ல முடியாமல் திணறிப்போய் பைபிளைப் போலவே தாங்களும் உளற ஆரம்பித்தனர்.

ஆனால், “திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற இந்தத் தலைப்பில், இந்த வேதம் படைத்த இறைவனிடத்திலிருந்துதான் வந்தது என்பதையும், இது அவனுடைய வேதம் தான் என்பதையும் நிரூபிக்கும் வகையில் அடுக்கடுக்கான சான்றுகள் எடுத்து வைக்கப்பட்டன.

எதிர்த்தரப்பினரை ஆட்டம் காண வைத்த அடுக்கடுக்கான சான்றுகள் :

- இது போன்றதொரு குர்ஆனை கொண்டு வரமுடியுமா? என்ற திருக்குர்ஆனின் அறைகூவல்

- குறைந்த வார்த்தையில் அதிகப் பொருள் தரக்கூடிய திருமறையின் நடை

- சிந்தித்துப் பார்க்கச் சொல்லி சிந்தனையைத் தூண்டக்கூடிய வான்மறையின் வழிகாட்டல்

- எளியநடையில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ள திருக்குர்ஆனின் நடை

- முஹம்மது நபிக்கு இந்த வேதத்தில் பங்கு இல்லை என்ற தெளிவான, திட்டவட்டமான அறிவிப்பு

- தீமையைத் தூண்டாத தெளிவான வழிகாட்டுதல்கள்

- இறைவனது இலக்கணக்கங்களைத் தெளிவுபடுத்தும் வேதம்

என்று தர்க்க ரீதியாக “இது இறைவனுடைய வேதம் தான்” என்பதை நிரூபிக்கும் வகையிலான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதிசயிக்க வைத்த அறிவியல் சான்றுகள் :

1400 ஆண்டுகளுக்கு முன் அருளப்பட்ட இந்த வேதத்தில், எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வேதத்தில், இந்த நூற்றாண்டு மனுதனுக்குக்கூட தெரியாத எண்ணற்ற அறிவியல் சான்றுகள் உள்ளனவே? இது எப்படி முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதனுக்குத் தெரியும்? படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியக்கூடிய பற்பல அறிவியல் உண்மைகளை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால் இது படைத்த இறைவனிடம் இருந்துதான் வந்துள்ளது என்பது நிரூபணமாகின்றது என்று கூறி அடுக்கடுக்கான அறிவியல் சான்றுகள் அள்ளிவைக்கப்பட்டன.

காட்டப்பட்ட அறிவியல் சான்றுகளில் சில:

- வேதனையை உணரும் நரம்புகள் மனிதனது தோல்களில் தான் உள்ளன

- தேனியின் வயிற்றிலிருந்து தான் தேன் உருவாகின்றது என்ற அதிசயம்

- மலைகளை முளைகளாக ஆக்கியுள்ளோம் என்ற அறிவியல் உண்மை

- மனிதனது மூளையில் முன்னெற்றி பாகம் தான் பொய் சொல்லத் தூண்டுகின்றது என்பதற்கான சான்று

- கால்நடைகளில் பால் உற்பத்தியைப் பற்றி குர்ஆன் தத்ரூபமாக விளக்கும் அதிசயம்

- மலையின் உச்சி அளவுக்கு மனிதன் பூமிக்கு அடியில் போக முடியாது என்று திருக்குர்ஆன் விடுக்கும் சவால்

- விந்து வெளியேறும் இடத்தை விவரிக்கும் திருமறையின் அற்புதம்

- பூமியைக் கடந்து செல்ல முடியும்; அதற்கு ஆற்றல் தேவை என்ற திருமறையின் வழிகாட்டல்

- விண்வெளிப் பயணத்தின் போது இதயம் சுருங்கும் என்று சொல்லும் திருமறையின் அதிசயம்

- குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஆண் தான் தீர்மானிக்கின்றான் என்ற அறிவியல் உண்மை

- திருக்குர்ஆன் விவரிக்கும் பெருவெடிப்புக் கொள்கை

- இரும்பு விண்ணிலிருந்துதான் இறக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம்

இப்படி அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை நாம் அள்ளிப்போட்டவுடன் செய்வதறியாது திகைத்த கிறித்தவ போதகர்கள் ஏதேதோ சொல்லி சமாளித்துப் பார்த்தனர். முடியவில்லை.

தங்களை அறியாமல் ஒப்புக் கொண்ட எதிர்த்தரப்பினர் :

இறுதியில் இவைகளை மறுக்க வழியில்லாமல், விஞ்ஞான உண்மைகள் இருந்தால் அது இறைவனுடைய வேதமாக ஆகிவிடுமா? என்று அறிவுஜீவிகளைப் போல கேள்வி கேட்டனர். மேலும், மேற்கண்ட அறிவியல் உண்மைகளையெல்லாம் முஹம்மது என்ற எழுதப்படிக்கத் தெரியாத மனிதருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம். வேறு ஏதோ ஒரு சக்திதான் அவருக்கு இதைச் சொல்லிக் கொடுத்துள்ளது. அது கெட்ட ஆவியாகத்தான் இருக்கும் என்று உளற ஆரம்பித்து விட்டனர்.

அப்படியானால், கெட்ட ஆவிக்கு எப்படி இவ்வளவு அறிவியல் உண்மைகளும் தெரியும்? என்று நாம் கேட்க அவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்ல இயலவில்லை.

கடவுளை மகிமைப்படுத்துவது கடவுளுடைய வேதமா?

அவரைக் கேவலப்படுத்துவது கடவுளுடைய வேதமா? :

மேலும், இறைவனுடைய வேதம் என்றால் அதைப் படித்தாலே இது கடவுளிடத்திலிருந்து தான் வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். திருமறைக்குர்ஆன் அவ்வாறுதான் உள்ளது. இந்த அற்புத வேதத்தில்,

- உளறல் இல்லை

- முரண்பாடுகள் இல்லை

- ஆபாசங்கள் இல்லை

- அசிங்கங்கள் இல்லை

- தரங்கெட்ட வார்த்தைகள் இல்லை

- அருவறுப்பு இல்லை

- இறைவனைக் கேவலப்படுத்துதல் இல்லை

- கேவலமான சட்டங்கள் இல்லை

- பொய்கள் இல்லை

என்று மேற்கண்ட செய்திகளை நிறுவியதுடன் கிறித்தவ போதகர்களுக்கு உரைக்கும் வண்ணமும், ஏற்கனவே அவர்கள் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் திருக்குர்ஆனை இழுத்ததன் காரணமாகவும் மேற்கூறிய அத்தனை அபத்தங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படும் பைபிள் எப்படி இறைவேதமாக இருக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு கீழ்க்கண்ட கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.

1. யாக்கோபுடன் கர்த்தர் சண்டை போட்டு தொடைச்சந்துக்குள் கையைவிட்டு யாக்கோபின் மர்ம உறுப்பை கர்த்தர் பிடித்தது நியாயமா?

2. தந்தையே தான் பெற்ற மகளை திருமணம் முடிக்கலாம் என்ற கேவலத்தை சட்டமாக பைபிள் சொல்லலாமா?

3. உடலுறவு கொண்ட பின்பு தனது மனைவி கன்னிதானா என்பதை சோதிக்க பாதிரியாரிடம் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி பைபிள் சொல்லும் சட்டம் சரிதானா?

4. அடிமைப்பெண்களுடன் உடலுறவு வைக்கலாம் என்று அல்லாஹ் கூறும் சட்டத்தை விமர்சிக்கும் நீங்கள் உங்களது வேதத்தில் அண்ணன் பொண்டாட்டியை தம்பி அனுபவிக்கலாம் என்று எழுதி வைத்துள்ளீர்களே இது நியாயமா?

5. உங்களது பைபிளில் புருஷசம்யோகத்தை அறியாத இளசுகளாகப் பார்த்து உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது சரியா?

6. ஒருவன் செய்த தவறுக்காக அவன் பொண்டாட்டியை அடுத்தவன் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி சாபம் போடும் கர்த்தரின் சாபம் சரிதானா?

7. ஊனமுற்றவனும், கூனனும், குருடனும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டவனும், விதை நசுங்கியவனும் கர்த்தருடைய சபைக்குள் வரக்கூடாது என்று சொல்லி அநீதியிழைக்கும் கர்த்தரின் சட்டம் சரியா?

8. இறந்த சிங்கத்தின் உடலுக்குள் தேனீ கூடுகட்டுவதாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதே! இது நடக்குமா?

9. இராஜாக்களின் முலைப்பாலை குடிக்கச் சொல்லி பைபிள் போடும் கட்டளையை எப்படி நிறைவேற்றுவீர்கள்?

10. சிம்சோன் என்ற நல்லவர்(?) செய்த சில்மிஷங்களின் பட்டியல்களுக்கு பதில் என்ன?

11. ஒரு வயது போன தாத்தாவை வளைத்துப் போட தனது மருமகளுக்கு வழிகாட்டிய மாமியாரின் மன்மத லீலைகளுக்கு பதில் என்ன?

12. வீட்டுக்கு குஷ்டரோகம், ஆடைக்கு குஷ்டரோகம் என்று பைபிள் சொல்லும் அதிசய குஷ்டரோகத்திற்கு உங்களது பதில் என்ன?

13. மாதவிடாய்ப் பெண்களைத் தொட்டால் தீட்டு, அவள் உட்கார்ந்த இடத்தைத் தொட்டால் தீட்டு, தொட்டவனைத் தொட்டால் தீட்டு என்று கொடுமையான சட்டத்தை பைபிள் சொல்லக் காரணம் என்ன?

14. சபையில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லி பெண்ணுரிமையை(?) பைபிள் பேணக்கூடிய லட்சணம் என்ன?

15. ஸ்தீரியிடத்தில் பிறந்தவன் சுத்தமாவதில்லை என்ற பைபிள் கூற்றுப்படி ஏசு அசுத்தமானவரா?

16. விருத்தசேதனம் செய்யாதவன் ஜெருசலத்திற்குள் வரமாட்டான் என்று பைபிள் சொல்லும் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டதே!

17. சிரங்கு வந்த மொட்டைத்தலையனோ அரை மொட்டையனோ தீட்டு, தீட்டு என்று கத்தினால் சொறி, சிரங்கு போய்விடும் என்று பைபிள் சொல்லும் அற்புதச் சட்டத்தின் விளக்கம் என்ன?

18. பைபிளில் சொல்லிக் காட்டியுள்ளபடி கர்த்தர் அம்மணமாகத்தான் ஓடுவாரா?

19. பைபிளில் சொல்வது போல கர்த்தர் ஆந்தையைப் போல அலறி, நரியைப் போல ஊளையிடுவாரா?

20. கர்த்தர் மனஸ்தாபப்பட்டு இளைத்துப் போவாரா?

21. நான் ஒரு லூசு என்று பவுல் பைபிளில் தன்னைப்பற்றி சுய அறிமுகம் செய்கிறாரே! அந்த பைத்தியம் எழுதி வைத்தவை எப்படி வேதமாக முடியும்?

22. இது எனது அபிப்பிராயம் என்று பவுல் சொல்லுவதெல்லாம் வேதமா?

23. நான் விசாரித்து அறிந்ததை சொல்லுகின்றேன் என்று லூக்கா சொல்லுவது உங்களுக்கு வேதமா?

24. ஏசுவுக்கு முத்தம் கொடுத்து அதுவும் ஓயாது முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்து காலில் தைலம் பூசிவிட்டாளே! அந்தப் பெண்ணை ஏசு தடுக்காமல் காலைக் காட்டிக் கொண்டிருந்ததேன்?

25. விதவையையும், விவாகரத்தான பெண்ணையும் திருமணம் முடிக்கக்கூடாது என்பதுதான் கர்த்தர் சொல்லும் அற்புதச் சட்டமா?

26. ஓணான் என்பவன் தனது விந்தை தனது அண்ணன் பொண்டாட்டியோடு உடலுறவு கொள்ளும் போது தரையில் விட்டதற்காக அவனை தண்டித்த கர்த்தர், அவளோடு விபச்சாரம் செய்ததைக் கண்டிக்காதது ஏன்?

27. ஏசுவை கெட்ட நட்த்தை உள்ளவர் என்று பைபிளை ஆங்கிலத்தில் வெளியிட்ட கிங் ஜேம்ஸ் என்ற மன்னர் சொல்லியுள்ளாரே! அதுக்கு உங்கள் பதில் என்ன?

28. திருக்குர்ஆன் மறுமையில் கிடைக்கும் பேறுகளைக் குறிப்பிட்டு சொல்லும் வசனங்களைக் கொச்சையாகச் சொல்லுகின்றீர்களே, ஒரு மனைவியை விட்டவனுக்கு அது போல நூறு மனைவி கிடைக்கும் என்று சொல்லித்தானே ஏசு உங்களையும் ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார். உங்களுக்கு மட்டும் அது நியாயமா?

29. ஒருவனை சபிக்கின்றோம் என்ற பெயரில் கூறுகெட்டதனமாக கர்த்தர் சபிப்பதாக பைபிளில் உள்ளதே! அது சரியா?

30. கடவுளைத் துதிப்பதாக வரும் இடங்களில் கூட மச்சங்களே! ஆழங்களே! கிழவிகளே! குமரிகளே! பெரியோர்களே! தாய்மார்களே! என்ற ரீதியில் பைபிள் வழ வழா என்று பேசுகின்றதே! இதுதான் இறைவேதமா?

இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நாம் கேட்க, ஆடிப்போன சான் தரப்பினர் திருக்குர்ஆனுக்கு முன்னால் சரண்டர் ஆகிவிட்டனர்.

சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை :

மேற்கண்ட பழமொழி இவர்களுக்கு கனகச்சிதமாக பொருந்திப்போகும். காரணமென்னவென்றால், முதலில் திருக்குர்ஆன் அனைத்து விஷயத்திற்கும் தீர்வு சொல்லும் வேதம் என்கின்றீர்களே! அப்படியானால், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் குறித்து முழுமையாக குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? என்ற ரீதியில் தான் முக்கால் வாசி கேள்விகளை எழுப்பினர்.

அதற்குரிய விளக்கமும் குர்ஆனிலேயே உள்ளது. நபியவர்கள் வசனங்களை ஓதிக்காட்டிய பிறகு, தான் ஓதிக்காட்டிய வசனங்களுக்கு விளக்கம் சொல்லுவதற்காகத்தான் அல்லாஹ் தனது நபியை அனுப்பியதாக கூறுகின்றான். அவர்களது விளக்கத்தில் இதற்கான விபரங்கள் உள்ளன என்று பீஜே சொல்லச் சொல்ல திரும்பத் திரும்ப கேட்ட அதே கேள்வியையே சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பது போல ஜெர்ரி தாமஸ் கேட்டுக் கொண்டே இருந்தது மிகவும் கேலிக்குரியதாக இருந்தது.

குர்ஆனில் முரண்பாடு என்று சொல்லிக் கொண்டு அவர்கள் வைத்த வாதங்கள் சிறுபிள்ளைத்தனமாக அமைந்திருந்தன.

குர்ஆனில் எழுத்துக்கள் மாறியுள்ளனவே! அவைகளை ஒரு சில நபித்தோழர்கள் மாற்றி ஓதியுள்ளனரே! என்று பெரிய பட்டியல் வாசிக்க, அவை எதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏனெனில் அவை ஓரிருவர் அறிவிக்கக்கூடிய செய்திகள்; திருக்குர்ஆன் என்பது கல்வியாளர்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்படும் என்று இறைவன் சொல்லியுள்ளான். தற்போது கோடிக்கணக்கான மக்கள் மனனம் செய்து வைத்துள்ள மூலப்பிரதிகளுக்கு மாற்றமாக உள்ள இந்தச் செய்திகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொன்னவுடன் அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழிபிதுங்கினர்.

விவாதத் துளிகள் :

- விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும், அவ்வாறு ஒளிபரப்பு செய்தால் நாங்கள் விவாதிக்க வரமாட்டோம் என்றும் சொல்லி அதை ஒரு நிபந்தனையாக்கியதால், இணையதளத்தில் நாம் ஒளிபரப்பு செய்ய முடியவில்லை

- ஆனால், தமிழகம் மற்றும் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாநிலத் தலைமையகத்தை தொடர்பு கொண்ட நமது சகோதரர்கள் ஆவலோடு அவ்வப்போது விவாதத்தின் நிலவரங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.

- உலகத்தின் பல பகுதிகளிலிருந்துமுள்ள நமது சாகோதரர்கள் வைத்த வேண்டுகோளுக்கிணங்க விவாதம் முடிந்த மறுநாள், 30.04.12 திங்கள் மற்றும் 01.05.12 செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள், “ஆன்லைன் பீஜே” இணையதளத்தில் விவாதத்தை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

- இதற்கு பிறகு தான், பல நாடுகளிலிருந்துமுள்ள இணையதள நேயர்களின் அன்புத் தொல்லை கொஞ்சம் குறைந்தது.

- பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத டிவிடிக்களில் ஒளிப்பதிவு செய்யும் போது நாம் எந்தக் கூடுதல் குறைவும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிரேமிலும் நேரத்தை குறிப்பிட்டு ஒளிப்பதிவு செய்திருந்தோம்.

- ஆனால், ஒப்பந்தத்திலும் இவ்வாறு தான் நேரத்தோடு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று இருக்கும் நிலையில் சான் தரப்பினர் தங்களது இணையதளத்தில் யூ ட்யூப் இல் வெளியிட்ட வீடியோவில் நேரம் பதிவு செய்யப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டி இந்த விவாதத்திலாவது ஒப்பந்த அடிப்படையில் நேரப்பதிவோடு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது.

- நமது தலைமையகத்தில் இந்த விவாதம் நடைபெற்றதால் நம் இடத்திற்கு வருகை தந்திருந்த கிறித்தவ தரப்பு விவாதக் குழுவினர், நல்ல முறையில் நாம் உபசரித்ததற்காக நமக்கு விவாத இறுதியில் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

- விவாதத்தில் ஒரு நபரை அழைத்து வந்திருந்தனர். அவர் திருக்குர்ஆன் வசனங்களை அரபியில் ஓதிக் காட்டினார். அதற்காகவே அவரைத் தேடிப்பிடித்து அழைத்து வந்திருந்தனர் போலும். அவர் குர்ஆன் வசனங்களையும் அரபி உச்சரிப்புகளையும் கொலை செய்தார்

- அவரை வைத்து ஒரு சில பைபிள் வசனங்களை அரபியில் வாசித்துக் காட்டிவிட்டு திருக்குர்ஆனைப் போல நாங்களும் கொண்டு வந்து விட்டோம் என்று ஜெர்ரி அவர்கள் காமெடி பண்ண, அதற்கு பீஜே இவர் அரபியில் வாசித்த லட்சணத்தை அரபி படித்தவர்களிடம் போய்க் கேளுங்கள். இவரைக்கொண்டு போய் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தான் சேர்க்கச் சொல்லுவார்கள் என்று சொல்ல சபையில் ஒரே சிரிப்பலை.

- விவாதம் செய்யும் போது எதிர்த்தரப்பில் விவாதித்த ஒரு நபர் கொஞ்சம் அதிகப் பிரசிங்கித்தனமாக தண்ணியடித்துவிட்டு வந்து உளறும் மனிதரைப்போல பேசிக் கொண்டு எழுந்து நின்று வரம்பு மீறினார். இது போன்ற போதையில் உளறும் ஆட்களையெல்லாம் இனிமேல் விவாதிக்க அழைத்து வரவேண்டாம் என்று பீஜே சொல்ல, ஜெர்ரியும் சபையிலேயே அந்த போதை பார்ட்டியைக் கண்டித்தார்.

- கிறுக்குத்தனமாகவும்,ஏட்டிக்குப் போட்டியாகவும் குர்ஆன் வசனங்களைக்காட்டி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் பீஜே அவர்கள் ஒவ்வொரு குர்ஆன் வசனங்களாக மேற்கோள்காட்டியும், லாஜிக்காகவும், பைபிள் வசனங்களை இணைத்தும் சொன்ன பதில்கள் ஆக்கப்பூர்வமாகவும், அறிவிப்பூர்வமாகவும் இருந்தன.

- கர்த்தர் தொடைக்குள் கையை விட்டு யாக்கோபின் மர்ம உறுப்பைத்தான் பிடித்தார் என்று கலீல் ரசூல் சொல்ல, அதற்கு ஆதாரம் கேட்ட எதிர்தரப்பினருக்கு கிரேக்க மொழியில் ஆணுறுப்பைத்தான் கர்த்தர் பிடித்தார் என்று வரும் ஆதாரத்தை எடுத்துக்காட்டியவுடன் கேட்டவர் கப்சிப்.

- தேனீக்கள் பூக்களில் உண்பதோடு மட்டுமல்லாமல், கனிகளிலும் உண்கின்றது என்று சொல்லும் குர்ஆன் வசனம் பொய் என்று ஜெர்ரி சொல்ல மறு அமர்விலேயே அதற்கான ஆதாரத்தை அள்ளிப்போட்டவுடன் ஜெர்ரியும் கப்சிப். இந்த நூற்றாண்டில் கூட இவர்கள் அறிந்து கொள்ளாத உண்மைகளையும் 1400 வருடத்திற்கு முன்பாக போகிற போக்கில் திருக்குர்ஆன் சொல்லியுள்ளது என்பதை நினைக்கும் போது “இது அல்லாஹ்வுடைய வேதம் தான் என்பது மறுபடியும் நிரூபணமாகின்றது.

விவாதத்தில் பீஜே சொன்னதை உண்மைப்படுதிய கிறித்தவ தரப்பு பார்வையாளர்கள் :

விவாத டிவிடிக்களை வெளியிட வெட்கப்பட்ட கிறித்தவ போதகர்கள்:

வாதத்தை துவக்கிய பீஜே அவர்கள் தனது முன்னுரையில் “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாதத்தில் பைபிள் இறைவேதமில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபித்தோம். எந்த அளவிற்கென்றால், “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாத டிவிடிக்களை நீங்கள் வெளியிட வெக்கப்படுகின்ற அளவிற்கு உங்களை அந்த விவாதம் தள்ளியுள்ளது என்ற உண்மையை தனது துவக்க உரையிலேயே போட்டு உடைத்தார்.

அதற்கு பதிலளித்த சான் தரப்பினர் நாங்களும் டிவிடிக்களை வெளியிட்டுள்ளோம் என்று சப்பைக்கட்டு பதிலை கொடுத்தனர். ஆனால், அவர்களது இந்த மழுப்பல் சில மணி நேரத்திலேயே வெளியானது. உணவு இடைவேளையின் போது நம்மைச் சந்தித்த கிறித்தவ தரப்பிலிருந்து பார்வையாளர்களாக வந்து அமர்ந்திருந்த கிறித்தவ சகோதரர்கள் நம்மிடம் “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பிலான விவாத டிவிடிக்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. உங்களால் தர இயலுமா? என்று நம்மிடம் கேட்க, விவாத அரங்கத்திற்குள் ஒப்பந்தப் பிரகாரம் எதுவும் கொடுக்கக்கூடாது என்று இருப்பதால் அருகில் உள்ள எங்களது அலுவலகத்தில் டிவிடிக்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று பதிலளித்தனர். இந்த விஷயத்தை பீஜே அவர்கள் தனது உரையில் விவாதத்தின் இரண்டாவது அமர்வில் சுட்டிக்காட்டியவுடன் சான் தரப்பினர் முகம் சுருங்கிவிட்டது.

முதல் நாள் விவாதத்தின் இறுதியிலும், மறுநாள் விவாதம் முடிந்த பிறகும் பல கிறித்தவ சகோதரர்கள் நமது அலுவலகத்திற்கு வந்து விவாத டிவிடிக்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

வரும்! – ஆனா வராது! :

ஆரம்பத்தில் பீஜே அவர்கள், தனது உரையில் இறைவனுடைய இலக்கணத்தை சொல்லக்கூடிய வேதத்தில் இப்படி கிறுக்குத்தனங்கள் இருக்கலாமா? என்று கேட்டு பைபிளில் உள்ள சில உளறல்களை பட்டியலிட்டார்.

அதற்கு ஆவேசமாக பதிலளித்த ஜெர்ரி அவர்கள், பைபிள் குறித்து கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் நாங்கள் பதிலளிப்போம் என்று ஒரு வேகத்தில் கூறிவிட்டார். பைபிளில் உள்ள கேவலங்களாஇயும், ஆபாசங்களையும், அசிங்கங்களையும், உளறல்களையும் அள்ளிப்போட்டப் போட செய்வதறியாது திகைத்தவர்கள், “இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லமாட்டோம்” என்று கூறி அந்தர்பல்டி அடித்தனர்.

பெண்ணுரிமை பேணும் லட்சணம் இதுதானா?:

பெண்களை இஸ்லாம் அடிக்கச் சொல்கின்றது. பெண்களிடம் இஸ்லாம் தனது இஷ்டத்திற்கு அவர்களது கணவனை உடலுறவு கொள்ளச் சொல்லி அனுமதி வழங்குகின்றது. இது சரியா? என்று ஏதோ பெண்கள் மேல் ரொம்ப அக்கறையுள்ளவர்கள் போல கேள்விகளைக் கேட்டனர்.

அதற்கு விளக்கமும் அளித்துவிட்டு, இதைக் கேட்க உங்களுக்கென்ன அருகதை இருக்கின்றது என்று கேட்டு, கர்த்தர் அடுத்தவன் மனைவியை எடுத்து இன்னொருவனுக்கு கையளித்தாரே! இது தான் பெண்களுக்கு நீதி செலுத்தும் லட்சணமா? பாதிரியாரிடம் அழைத்து சென்று கன்னிப்பரிசோதனை செய்யச் சொல்லுவதும், விபச்சாரம் செய்துவிட்டாளா? இல்லையா? என்பதற்கு மனைவியை நாற்றமெடுத்த தண்ணீரை குடிக்கச் சொல்லுவதும், சபைகளில் பெண்கள் பேசக்கூடாது என்று சொல்லுவதும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களை பாடாய்ப்படுத்தி எடுப்பதும் தான் பெண்ணுரிமை பேணும் லட்சணமா? என்று கேட்க கடைசி வரைக்கும் வாய்திறக்கவில்லை.

விளக்கம் கொடுப்பது ஒப்புக் கொள்வதா?:

“முத்ஆ” திருமணம் செய்வது சரியா?, அடைமைப் பெண்களுடன் உறவு வைக்கலாமா? என்ற ரீதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, “திருக்குர்-ஆன் என்பது, சிறுகச் சிறுக 23ஆண்டுகள் இறக்கப்பட்ட வேதம். ஆரம்பத்தில் அந்த மக்களிடத்தில் அறியாமைக்காலத்திலிருந்த பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாகத்தான் இறைவன் தனது வேத அறிவிப்பின் மூலம் தடை செய்தான். அந்த அடிப்படையில் ஆரம்பகட்டத்தில் எப்படி வட்டி, மது போன்ற விஷயங்கள் அனுமதிக்கப்பட்டு, பிறகு தடை செய்யப்பட்டதோ அதைப் போல மேற்கண்ட பழக்க வழக்கங்களும் அந்த மக்களிடத்திலிருந்த நிலையில், பின்னர் வேத அறிவிப்பின் மூலம் தடுக்கப்பட்டுவிட்டது என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல பீஜே விளக்கமளித்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு தாங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்களை பீஜே ஒப்புக் கொண்டுவிட்டார் என்று சொன்னார்களே! பார்க்கலாம். இவர்களது சிந்தனைத்திறன் இவ்வளவு தான் என்பதை அங்கே தெளிவாக அறியமுடிந்தது.

விசித்திரமான விவாதம் :

ஒரு மாணவனுக்கு தான் பரீட்சை எழுதப் போவதற்கு பல மாதங்களுக்கு முன்பே அவனது தேர்வு வினாத்தாளை கொடுத்தால் எப்படியிருக்குமோ அதைப்போலத் தான் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி இவர்கள் ஓட்டமெடுத்த நாள் அன்றே, இப்போது வைக்கப்பட்ட விவாதத்தில் பெரும்பகுதி வைக்கப்பட்ட ஆதாரத்தையும், வாதங்களையும் நாம் வைத்துவிட்டோம். அந்த விவாதத்தை நாம் நேரடியாக “ஆன்லைன்பீஜே” இணையதளத்திலும் ஒளிபரப்பு செய்தோம். அதை நாம் நேரடி ஒளிபரப்பு செய்ததை பார்த்துவிட்டு வந்திருந்த இவர்களுக்கு அந்த வாதங்களுக்கு பதில் சொல்ல இயலவில்லை என்றால் உண்மையிலேயே இது ஒரு விசித்திரமான விவாதம் தான் என்று பீஜே தனது இறுதி உரையில் குறிப்பிட்டார்.

பீஜே தர்காவிற்கு போனது ஆதாரமாகுமா? :

1986 ஆம் ஆண்டு பீஜே தனது பத்திரிகையில் சூனியம் உண்டு என்று சொன்னாராம். அதை நாங்கள் ஆதாரமாகத் தருகின்றோம் என்று கூறி சில ஆதாரங்களை மேற்கோள்காட்டினார்கள். நாங்கள் அறியாமல் இருந்த போது செய்த தவறை ஆதாரமாகக் காட்டுகின்றீர்கள். 1986 அல்ல அதற்கு இன்னும் சில வருடங்களுக்கு முன்னால் சென்று தேடிப்பார்த்தால் “தர்கா” தட்டு தகடு தாயத்தை நான் ஆதரித்ததற்கும் உங்களுக்கு ஆதாரம் கிடைக்கும். இதுவெல்லாம் ஒரு ஆதாரமா? என்று கேட்க அந்த கேள்வி அதோடு சப்பையாகிவிட்டது.

புளித்துப்போன பழைய கஞ்சி :

பரவலாக குர்-ஆனின் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, சல்மான் ருஷ்டி என்ற கிறுக்கன் எழுதிய சாத்தானிய வேதம் என்ற நூலில் அவன் வைக்கும் குற்றச்சாட்டு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அதை குடித்துவிட்டு வந்தது போல வந்து பேசிக் கொண்டிருந்த சான் தரப்பு சகோதரர் ஒருவர், ஏதோ மிகப்பெரிய ஆதாரத்தை எடுத்து வைப்பது போல எடுத்து வைக்க, இதற்கு 1990ஆம் வருடத்திலேயே, “வேதம் ஓதும் சாத்தான்கள்” என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டு பதில் கொடுத்துவிட்டோம் என்று பதிலையும் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்ட அந்த வாதம் புஷ் என்று போகிவிட்டது. இது புளித்துப்போன பழைய கஞ்சி என்பது அவருக்கு தெரியவில்லை போலும்.

தேவதூதர்களுக்கு எதுவும் பத்தாதா? :

சுவனத்தில் அழகிய பெண்களை மணமுடித்து வைப்போம் என்று அல்லாஹ் சொல்லிக்காட்டும் வசனங்களை மேற்கோள்காட்டி இப்படித்தான் உங்கள் வேதம் உங்களை அழைக்கிறது என்று குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

அனைவரும் மரித்தவுடன் வானுலகத்தில் தேவ தூதர்களாக வாழ்வார்கள் என்பது கிறித்தவ நம்பிக்கை. அப்படியானால், வானிலுள்ள தேவ தூதர்கள் கீழுலகத்திற்கு இறங்கி வந்து இங்குள்ள பெண்களோடு உடலுறவு கொண்டார்கள் என்று ஆதியாகமத்தில் உள்ளதே. தேவதூதர்களுக்கு அங்கே கிடைப்பது போதவில்லை என்று தானே இங்கே இறங்கி வருகிறார்கள் என்றும், ஒரு மனைவியை தியாகம் செய்தால் உனக்கு நூறு மனைவி கிடைப்பாள் என்று சொல்லித்தானே ஏசுவும் உங்களை ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார் என்றும் பீஜே கேட்க அமைதியானார்கள் ஊழியக்காரர்கள்.

May 2, 2012, 12:22 AM

கஃபதுல்லாஹ் இடம் பெயர்ந்ததா ?

கஃபதுல்லாஹ் இடம் பெயர்ந்ததா ?

பீ. ஜைனுல் ஆபிதீன்

நஜாத் பத்திரிகையில் 1986ல் பீஜே ஆசிரியராக இருந்த போது நவம்பர் இதழில் எழுதிய கட்டுரையை கிளியனூர் முஹம்மது பாசில் என்ற சகோதரர் தட்டச்சு செய்து அனுப்பியுள்ளார். அதை இங்கே வெளியிடுகிறோம்.

இம்மாம் ஹஸன் பஸரீ அவர்களின் காலத்தில், அவர்கள் ஹஜ்ஜு செய்யச் சென்றபோது, கஃபதுல்லாஹ்வை அதன் இடத்தில் காணவில்லையாம்! எங்கே என்று விசாரித்தபோது ராபியா பஸரிய்யா அவர்களை வரவேற்க கஅபா சென்றுவிட்டதாகத் தெரிந்ததாம்.

இது கதை சுருக்கம்.

இந்தக் கதை பல வகைகளில் விரிவுபடுத்தப்பட்டு பல விதமாகச் சொல்லப்படுகின்றது.

"இந்தக் கதை சரியானது தானா?" என்று நாம் ஆராய்வோம்! 

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜு செய்வதற்காக ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு மக்காவுக்குத் தம் தோழர்களுடன் புறப்பட்டனர். ஹுதைபியா என்ற இடத்தில் வைத்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள் !

கஃபதுல்லாவை சந்திக்க வேண்டும் என்ற பேராசையில் நபி (ஸல்) அவர்களும் , அவர்களின் தோழர்களும் வந்திருந்தனர். அந்த நேரத்தில் மக்கத்துக் காபிர்கள் தடுத்துவிட்டனர்.

கஃபதுல்லா எவருக்காகவும் நடந்து வரக் கூடியதாக இருந்தால், இந்த இக்கட்டான நிலையில் நபி (ஸல்) அவர்களைத் தடுத்தபோது அவர்களை நோக்கி வந்திருக்க வேண்டுமே?

அல்லாஹ்வின் திருத்தூதருக்காக இடம் பெயர்ந்து வராத கஅபா, ராபியதுல் பசரிய்யா என்ற பெண்ணை வரவேற்பதற்காக வந்தது என்றால் அதுவும் எவ்வித அவசியமும் இல்லாமல் அவர்களை வரவேற்பதற்காகச் சென்றதென்றால் இதை எவராவது ஏற்க இயலுமா? எண்ணிப் பாருங்கள்!

அதன்பின் இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்களும், அவர்களின் ஆருயிர்த் தோழர்களும் மக்காவுக்குச் சென்றபோது மக்காவின் எல்லையில் நபி (ஸல்) அவர்களையும் , அவர்களின் தோழர்களையும் வரவேற்க கஃபதுல்லா மக்காவின் எல்லைக்கு இடம் பெயர்ந்து வரவில்லை!

ஒருவரை வரவேற்பதற்காக கஃபதுல்லா இடம் பெயர்ந்து வருமென்றால் அல்லாஹ்வின் தூதர் அல்லவா வரவேற்கப்பட மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் !

அதன்பின் நாற்பெரும் கலீபாக்கள், ஸஹாபக்கள், தாபியீங்கள், நாற்பெரும் இமாம்களெல்லாம் ஹஜ்ஜு செய்ய வந்திருக்கின்றார்கள்! அவர்களை எல்லாம் வரவேற்க கஃபதுல்லா இடம் பெயர்ந்து வரவில்லையே?

திருக்குர்ஆன் வசனங்களும் இந்தக்கதை பொய்யானது என்பதை மிகவும் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

கஃபதுல்லாவை இப்ராஹீம் (அலை) இஸ்மாயில்  (அலை) இருவரும் கட்டி முடித்தபோது அவர்களிடம் கஃபதுல்லாவின் நோக்கம் என்ன என்பதை அல்லாஹ் தெளிவாகச் சொல்கிறான். எவரையும் வரவேற்க இடம் பெயர்ந்து செல்வதை அதன் நோக்கங்களில் ஒன்றாக ஆக்கவில்லை.

அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! "தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.

 அல்குர் ஆன் 2 : 125

கஃபதுல்லாஹ்வை நோக்கி மக்கள் வரும்போது மக்களின் ஒதுங்குமிடமாக அதை அல்லாஹ் ஆக்கியுள்ளதாகக் கூறுகிறான். கஃபதுல்லாவைத் தேடி மக்கள் செல்லும்போது,ச்"அது அங்கே இல்லையானால் "மக்களுக்கு சிறிது நேரம் அது ஒதுங்குமிடமாக இல்லாமல் போகின்றதே! அல்லாஹ்வின் உத்தரவாதத்தைப் பொய்யாக்கக் கூடிய இந்த கதையை எவராவது இயலுமா ?

தவாபு செய்பவர்கள், அங்கே தொழ வருபவர்கள், தியானிப்பவர்கள் ஆகியோருக்காகவே கஃபதுல்லா நிர்மாணிக்கப்பட்டது என்று அதன் நோக்கத்தையும் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்.

ஆனால் இந்தக் கதையின் படி திக்ரு செய்வதற்காகவும், தவாபு செய்வதற்காகவும் , தொழுவதற்காகவும் அங்கே சென்ற ஹஸன் பஸரீ (ரலி) அவர்களுக்காகவும், அவர்களைப் போன்ற பல்லாயிரம் மக்களுக்காகவும் கஃபத்துல்லா அங்கே இருக்கவில்லை. அதாவது எந்த நோக்கத்திற்காக கஃபாவை அல்லாஹ் நிர்மாணிக்க செய்தானோ அந்த நோக்கத்திற்காக 'கஃபா' அங்கே இல்லை என்று இந்தக் கதை உணர்த்துகின்றதே! இது எப்படி உண்மையாக இருக்க முடியும் ?

அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

அல்குர் ஆன் 3 : 96

இந்தத் திருவசனம் கஃபத்துல்லா மனிதர்கள்  இறைவனை வணங்குவதற்கென ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருப்பதையும், கஃபா மக்கள் அனைவருக்கும் பொதுவானது எந்தத் தனி நபருக்கும் விஷேச மரியாதை செய்ய நடந்துவராது என்பதையும் உணர்த்துகின்றது.

மக்கள் அனைவருக்கும் நேர்வழியாக இருக்கின்ற - மக்கள் அனைவருக்கும் பரக்கத்து நிறைந்ததாகவும் இருக்கின்ற கஃபதுல்லாவைத்தான் மக்கள் தேடிச் செல்ல வேண்டும் என்பதை நமக்கு விளக்குகின்றது. இந்தக் கதையின்படி " பரக்கத்தைப் பெறுவதற்காக அதைத் தேடிச் சென்றுள்ள மக்களுக்காக காட்சி தரவில்லை என்றால், " குர் ஆனின் உத்தரவாதம் இங்கே பொய்யாக்கப்படுகின்றது.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவைகளற்றவன்.

அல்குர் ஆன் 3 : 97 

பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கின்ற மக்கள் அவ்வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை அல்லாஹ் கடமையாக ஆக்கிவிட்டு , அந்தக் கடமையை நிறைவேற்ற அவ்வீட்டைத் தேடி வருகின்ற மக்களுக்காக அந்த இடத்தில் அல்லாஹ் வைக்காமலிருப்பானா? என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் . அவ்வீடு எவரையும் தேடி வராது என்பதையும் இந்தத் திருவசனம் உணர்த்துவதை நாம் காணலாம்.

இந்த கதை திருக்குர்ஆனின் வசனங்களுடன் நேரடியாகவே மோதுகின்றது. அல்லாஹ்வின் நோக்கத்தையும் , அவனது உத்தரவாதத்தையும் பொய்ப்படுத்துகின்றது.

அல்லாஹ்வின் கூற்றுக்கு முரணாக இருக்கும் இந்தக் கதை எப்படி உண்மையாக இருக்க இயலும் ?

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பின்வரும் இறைவசனம் மிகவும் தெளிவாகவே இந்தக் கதையைப் பொய்யாக்கி விடுகின்றது.

புனித ஆலயமான கஅபாவையும், புனித மாதத்தையும், குர்பானிப் பிராணியையும், (அதற்கு அணிவிக்கப்படும்) மாலைகளையும் மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆக்கி விட்டான். வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதையும், அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் என்பதையும் நீங்கள் அறிவதற்காகவே இது (கூறப்படுகிறது.)

அல்குர்ஆன் 5 : 97

இந்தத் திருவசனத்தில்  "கியாமன் லின்னாஸ்" மக்களுக்கு நிலையான தலமாக ஆக்கிவிட்டதாக அல்லாஹ் ஆணி அடித்தாற்போல் சொல்லி விருகிறான். மனிதர்களுக்காக அது இருந்த இடத்தில் நிலையாகவே இருக்கும், இடையில் இடம் பெயர்ந்து செல்லாது என்பதை மிகவும் தெளிவாகவே அல்லாஹ் சொல்லி விடுகிறான்.

இந்தக் கதை பொய்யானது; ஒரு முஸ்லிம் இதை நம்பக்கூடாது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் ?

மனிதர்களை உயர்த்துவதற்காக அவர்களின் மரணத்திற்குப்பின் பல கதைகள் கட்டிவிடப்படுவது வாடிக்கையாகவே நடந்து வருவதாகும்.

ஆனால் ராபி பஸரிய்யா (ரஹ்) அவர்களைப் பொறுத்த வரை அவர்கள் வாழ்ந்திருந்த காலத்திலேயே இதுபோன்ற கதைகள் கட்டிவிடப்பட்டன . இதை செவியுற்ற ராபி பஸரிய்யா (ரஹ்அவர்கள் , இவற்றைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்! இவை ஷைத்தான் மக்களுடன் விளையாடுகிறான் என்று கூறிவிட்டர்கள். இந்தக் கதையின் நாயகியாகிய அவர்களே திட்டவட்டமாக இது போன்ற கதைகளை மறுத்துள்ளது இந்தக் கதை பொய் என்பதற்கு போதுமான சான்றாகத் திகழ்கின்றது.

ராபிஆ பஸரிய்யா (ரஹ்) அவர்கள் இப்படி மறுத்துள்ளதை ஸனதுடன் இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் தனது ' தல்பீஸு இப்லீஸ் ' என்ற நூலில் 383 ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

திருக்குர்ஆனுடன் மோதும் இது போன்ற கதைகளை நம்புவதும், பேசுவதும், குர்ஆனையே மறுப்பதாகும் . இது போன்ற பொய்களை நம்புவதைவிட்டும்  அல்லாஹ் நம்மைக் காத்தருள்வானாக !

குறிப்பு : நாம்  கதைகளின் பின்னணியில் ' என்ற தொடரில் அடையாளம் காட்டி வருகின்ற கதைகள் இந்தக் கிதாபில் உள்ளது ! அந்தக் கிதாபில் உள்ளது ! என்று சில ஆலிம்கள் பெரிய மறுப்பு என்று எண்ணிக்கொண்டு எழுதி வருகின்றனர். நாம் அந்த நூல்களில்  அந்தக் கதைகளைப் பார்த்துவிட்டுத்தான் , அது குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்டுள்ளதைக் காட்டுகிறோம். குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மாற்றமாக எந்த கிதாபில் இருந்தாலும், அதை எந்த முஸ்லிமும் ஏற்க முடியாது.

April 21, 2013, 12:26 AM

உண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை)

உண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை)

- பீ.ஜே

1986 ல் அந்நஜாத் இதழில் பீஜே எழுதிய கட்டுரையை கிளியனூர் முஹம்மது பாசில் தட்டச்சு செய்து அனுப்பியுள்ளார். அதை இங்கே வெளியிடுகிறோம்

இத்ரீஸ் (அலை) ஹிஸ்ஸலாம் அவர்கள் 'மலக்குல் மவ்த்' துக்கு நண்பராக இருந்தார்களாம். " மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விருப்புவதாக " மலக்குல் மவ்திடம் கேட்டுக் கொண்டார்களாம் ! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்ப்பித்தார்களாம்! "தான் நரகத்தைக் கண்கூடாகக் காணவேண்டும் " என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்ப்பித்தார்களாம் ! தமது இறக்கையில் இத்ரீஸ் நபியைச் சுமந்து சென்று நரகத்தை மலக்குல் மவ்த் சுற்றிக் காண்பித்தார்களாம்! தாம் சுவர்க்கத்தைக் காண விரும்புவதாக மூன்றாவது கோரிக்கையை மலக்குல் மவ்த் முன்னே வைக்க, அதையும் மலக்குல் மவ்த் நிறைவேற்றினார்களாம். சுவர்க்கத்தை சுற்றி பார்த்தபின், சுவனத்திலிருந்து வெளியே வர மறுத்துவிட்டு இன்று வரை சுவர்க்கத்திலேயே இருக்கிறார்களாம்:

இப்படி ஒரு கதை பரவலாகச் சொல்லப்படுகின்றது இந்தக் கதை உண்மையானது தானா? என்று நாம் ஆராய்வோம்.

இந்தக் கதையில் சொல்லப்படுகின்ற , மலக்குல் மவ்த் , சுவர்க்கம் நரகம் போன்றவை சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன . இது போன்ற நிகழ்ச்சி நடந்திருக்குமானால், அல்லாஹ்வும், அவனது திருத் தூதரும் தான் நமக்கு சொல்லித் தரமுடியும். நம்முடைய அறிவு, அனுமானம் கொண்டோ, சரித்திர நூல்களின் ஆதாரம் கொண்டோ இவைகளை நாம் அறியமுடியாது.

அல்லாஹ் இது போல் நடந்ததாக திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லவில்லை. " அல்லாஹ்வின் தூதராவது இதைச் சொல்லி இருக்கிறார்களா ? என்று ஆராய்ந்தால், இப்படி அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் சொல்லவில்லை,

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு காலித் என்பவர் மூலமாக இமாம் தப்ரானி அவர்கள் பதிவு செய்துள்ளனர். மேற்கூறிய இப்ராஹீமைப் பற்றி : "பெரும் பொய்யன்" என்று ஹாபிழ் ஹைஸமீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இமாம் ஹாகிம் அவர்கள் " இவரது எல்லா ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவையே" என்று கூறுகிறார்கள். நபி (ஸல்) பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யைத் தவிர இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.

"அல்லாஹ்வும், அவனது திருத்தூதரும் இதைச் சொல்லவில்லை " என்பதே , இந்தக் கதை பொய்யானது என்பதற்கு போதிய ஆதாரம், என்றாலும், திருக்குர்ஆன் வசனங்களுக்க்கும் எவ்வாறு இந்தக் கதை முரண்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.

"இத்ரீஸ் நபியவர்கள் திட்டமிட்டு மலக்குல் மவ்தை ஏமாற்றினார்கள் " என்ற கருத்தை இந்தக் கதை வெளிப்படுத்துகின்றது. "சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக் " கூறிவிட்டு . சுவர்க்கத்திலிருந்து வெளியேற மறுத்ததன் மூலம் . ஒரு மலக்கையே ஏமாற்றினார்கள் என்பது நபிமார்களின் பண்பாக இருக்க முடியுமா ?

 " அவர் மிகமிக உண்மை பேசுபவராக இருந்தர்" என்று இத்ரீஸ் நபியைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறி இருக்கும் போது, (அல்குர் ஆன் 19 : 56) உண்மைக்கு மாற்றமாக அவர்கள் எப்படிப் பேசி இருக்க முடியும்? அதுவும் அல்லாஹ்விடமே பொய் சொன்னதாக ஆகாதா?

நபிமார்களின் பண்புகளையும், மலக்குகளின் பண்புகளையும் உணர்ந்தவர்கள் இதை எப்படி உண்மை என்று நம்ப முடியும் ?

"நல்லடியார்கள் சுவர்க்கத்தில் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் " என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 39 : 73 வசனம் சொல்கின்றது.

இந்தக் குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக தனி நபராக இத்ரீஸ் நபியவர்கள் எப்படி சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள் ? அவர்களுக்கு மட்டும் இந்தப் பொது விதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அல்லவா அதைச் சொல்ல முடியும் !

"நரகத்திற்கென்று தனியாக அல்லாஹ் சில மலக்குகளை நியமனம் செய்திருக்கிறான், அவர்கள் கடின சித்தமுடையவர்கள். எவருக்காகவும் பரிதாபப்பட மாட்டார்கள் . அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவிட்டதில் ஒரு சிறிதும் மாறு செய்யமாட்டார்கள் ! தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள் " என்ற கருத்தைக் திருக்குர் ஆனின் 66 :6  வசனம் நமக்குச் சொல்கிறது.

நரகத்தின் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி மலக்குல் மவ்த் அவர்கள் எப்படி நரகத்திற்கு அழைத்துச் சொன்றிருக்க இயலும் ? உயிரை வாங்குவதற்காக நியமனம் செய்யப்பட்ட மலக்குகள் , தங்களுக்கு கட்டளை இடப்படாதவைகளைச் செய்யமாட்டார்கள் . இடப்பட்ட கட்டளைகளையே செய்வார்கள் என்ற கருத்தைக் குர் ஆனின் 21 : 27 வசனம் சொல்லும் போது மலக்குல் மவ்து இதை செய்திருக்க மாட்டார்கள் என்று தெளிவாக உணரலாம்.

நரகத்தின் காவலர்களாக உள்ள மலக்குகளின் அதிகாரத்தில் மலக்கு மவ்த் தலையிட்டிருக்க மாட்டார்கள் என்று எவரும் உணர முடியும்.

நாம் எடுத்துக் காட்டிய திருக்குர் ஆனின் வசனங்களுடன் மூரண்படுவதாலும் இந்தக் கதை பொய்யானது என்று தெளிவாகிறது.

சுவன வாழ்வை அடைய இப்படி ஒரு குறுக்கு வழியை அல்லாஹ் ஏற்படுத்தித் தரவில்லை. நல் அமல்கள் செய்து வல்ல ரஹ்மானிடம் சுவன வாழ்வைத் தரும்படி பிரார்த்தனை செய்வதுதான் ஒரு முஸ்லிம் செய்ய வேண்டும். நபிமார்கள் இப்படித்தான் செய்துள்ளனர். குர் ஆனின் 26 : 35 வசனம் இதை நமக்கு நன்றாக தெளிவுபடுத்துகின்றது.

குறுக்கு வழிகள் இருப்பதாக நம்பி ஏமாந்துவிடாமல் , அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் காட்டிய வழியில் நாம் நடப்போமாக. அல்லாஹ் அதற்குத் துணை செய்வானாகவும்.

April 20, 2013, 10:39 AM

நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்டப�

நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்டபோது

-பி.ஜே

(1986ல் அந்நஜாத் பத்திரிகையில் பீஜே ஆசிரியரக இருந்த போது ஜூலை இதழில் எழுதிய கட்டுரையை கிளியனூர் பைசல் என்ற சகோதரர் தட்டச்சு செய்து அனுப்பியுள்ளார். அதை இங்கே வெளியிடுகிறோம்.)

இப்ராஹீம் (அலை) அவர்களின் இறையச்சமும், தியாகமும் , வீரமும் நிறைந்த வரலாற்றை நாம் அறிவோம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முதலிடம் உண்டு என்பதையும், நாம் தெரிந்திருக்கிறோம்! மிகபெரும் கொடுங்கோல் மன்னனுக்கு முன்னிலையில் கொஞ்சமும் அஞ்சாமல் சத்தியத்தைஒரிறைக் கொள்கையை துணிவுடன் எடுத்துச் சொன்னார்கள்.

அதற்காக எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள்! ந்தக் கொடுமைகளுக்கெல்லாம் சிகரமாக மிகப்பெரும் நெருப்புக் குண்டத்தை வளர்த்து அதில் இப்ராஹீம் (அலை) அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்! அல்லாஹ் தன் பேராற்றலால், அந்த மாபெரும் நெருப்பைக் குளிரச்செய்து அவர்களைக் காப்பாற்றினான் . இந்த அற்புத வரலாற்றை திருக்குர்ஆன் மிகவும் அழகாக நமக்கு எடுத்துரைக்கின்றது.

இந்த உண்மை வரலாற்றுடன் பொய்யான கதை ஒன்றையும் சிலர் கலந்து விட்டுருக்கின்றனர். அந்தக் கற்பனைக் கதை மக்கள் மன்றங்களில் அடிக்கடி சொல்லப்பட்டும் வருகின்றது.

குர்ஆனும், நபி வழியும் போதிக்கின்ற தத்துவத்திற்கு அந்தக் கதை முரண்படுவதாலும், அந்தக்கதையை வைத்து சிலர் தவறான வழியை நேர்வழிபோல் காட்ட முயற்சிப்பதாலும் அதனைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எற்படுகின்றது. முதலில் அந்தத் தவறான கதை என்னவென்று பார்ப்போம்! பிறகு அது எப்படித் தவறாக உள்ளது என்பதை விளக்குவோம்!

இதுதான் கதை:

இப்ராஹீம் (அலை) நெருப்புக் குண்டத்தில் எறியப்படுவதற்கு சிறிது முன்பு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இப்ராஹீம் (அலை) அவர்களுடன் பின் வருமாறு உரையாடினார்களாம்!

 

ஜிப்ரீல் (அலை) :- இப்ராஹீமே ! இந்த இக்கட்டான நேரத்தில் உமக்கு எதுவும் தேவையா ?

இப்ராஹீம் (அலை) :- உம்மிடம் எனக்கு ந்த்த் தேவையும் கிடையாது!

ஜிப்ரீல் (அலை) :- என்னிடம் உமக்குத் தேவை எதுவும் இல்லையானால் உம்மைப் படைத்த இறைவனிடம் இந்தத் துன்பத்திலிருந்து விடுவிக்கும்படிக் கேளும்!

இப்ராஹீம் (அலை):- இறைவனிடம் நான் என் துன்பத்திலிருந்து விடு விக்கும்படி கேட்க வேண்டியதில்லை. நான் மிகப்பெரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருப்பது அந்த இறைவனுக்குத் தெரியாதா என்ன? நான் எதற்காக அவனிடம் கேட்க வேண்டும்?

இப்படி ஒரு உரையாடல் நடந்ததாகத் தான் சிலர் கற்பனை செய்துள்ளனர் .

இதனை அல்லாஹ் தன் திருக்குர் ஆனில் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. சிலர் தங்களின் சொந்தக் கற்பனையால் உருவாக்கியது தான் இந்த கதை.

பிரார்த்தனையின் நோக்கம்:

அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன் என்பதில் ஜயமில்லை. "அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும்" என்பதற்காக நாம் நமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்காமலிருக்க அனுமதி உண்டா? மிகச் சிறந்த நபியாகிய இப்ராஹீம் (அலை) அவர்கள் இப்படிச் சொல்லி இருப்பார்களா? என்று ஆராயும் போது நிச்யம் அப்படி சொல்லி இருக்க முடியாது என்ற முடிவுக்குத்தான் வரமுடியும்.

ஏனெனில், இப்ராஹீம் (அலை) அவர்கள், பல்வேறு சந்தர்ப்ப ங்களில் தங்கள் தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட்டிருக்கிறார்கள் என்று பிரார்த்தனையை  அவர்கள் விடவில்லை.

"பிரார்த்தனை என்பது நம்முடைய அடிமைத்தனத்தையும், அல்லாஹ்வின் மகத்துவத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் மிகப்பெரும் வணக்கம்" என்பதை இப்ராஹீம் (அலை) நன்றாகாவே தெரிந்திருந்தார்கள். அவர்கள் , அல்லாஹ்விடம் கேட்ட பல துஆக்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். அவற்றில் சிலவற்றைக் கீழே காண்போம்.

அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது 'எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்' (என்றனர்.)

'எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்' (என்றனர்.)

எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்  கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்' (என்றனர்.)

 அல்குர் ஆன் 2 :127 -129

இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக  ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!' என்று இப்ராஹீம் கூறிய போது, '(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டது' என்று அவன் கூறினான்.

அல்குர் ஆன் 2 :126

என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக!பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார். (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில்1 என்னை இழிவுபடுத்தி விடாதே!

அல்குர் ஆன் 26 : 83 -87

இறைவனே! எனக்கு நன்மகனைத் தந்தருள்வாயாக!

அல்குர் ஆன் 37 : 100

எங்கள் இறைவா ! (உன்னை) மறுப்பவர்களுக்கு ங்களை சோதனைப் பொருளாக ஆக்கி விடாதே! எங்கள் இறைவா! ங்களுக்கு மன்னிப்பும் வழ ங்ககுவாயாக!

 அல்குர் ஆன் 60 :5

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!

 அல்குர் ஆன் 14 :37

மேலே கூறப்பட்ட அனைத்தும் இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தைனைகள். அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும் என்று அவர்கள் மேற்கூறிய ந்தர்ப்பங்களில் பிரார்த்தனை செய்யாமல் இருக்கவில்லை. மாறாக தன்னுடைய இயலாமையை, பலவீனத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக தன்னுடைய பல தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறார்கள். தன்னுடைய தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டு விட்டு பின்வருமாறு அவர்கள் கூறவும் செய்கிறார்கள்.

எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்துபவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.

அல்குர் ஆன் 14: 38

இறைவனுக்குத் தன்னுடைய தேவைகள் தெரியும் என்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரத்தில் துஆ கேட்க அவர்கள் மறுக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

அப்படிப்பட்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகப்பெரும் இக்கட்டில் மாட்டிக் கொண்ட நேரத்தில் எப்படி துஆச் செய்ய மறுத்திருப்பார்கள்? அதுவும் மிகப்பெரும் மலக்கு ஒருவர் நினைவூட்டிய பின்னர் எப்படி மறுத்திருப்பார்கள்? இதிலிருந்தே ந்த உரையாடல் கற்பனையானது என்பதை தெரிய முடியும்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் மட்டுமல்ல, இன்னும் பல நபிமார்கள் தங்களுக்கு கஷ்டங்கள் ஏற்பட்டபோது "இறைவனுக்குத் தெரியும்" என்று அவர்கள் அல்லாஹ்விடம் முறையிடாமல் இருந்ததில்லை. தங்களுக்கு ஏற்பட்ட தேவைகளை அல்லாஹ்விடம் கேட்காமல் இரு ந்ததிலை.

ஆதம் (அலை) அவர்கள் தவறு செய்தபின், அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ததை குர்ஆன் 7 :22 வசனத்திலும்,

அய்யூப் (அலை) அவர்களுக்கு எற்பட்ட துன்பத்தை அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்டதை 21 :83 வசனத்திலும்,

யூனுஸ் (அலை) தாம் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதை 21 :87 வசனத்திலும்,

ஈஸா (அலை) தன்னுடைய தேவையை அல்லாஹ்விடம் கேட்டதை 5:114 வசனத்திலும்,

ஜக்கரியா (அலை) தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று துஆ செய்தை 3:38 வசனத்திலும்,

நூஹ் (அலை) தம் சமுதாயத்திற்கு எதிராக துஆ செய்ததை 21:76 வசனத்திலும்,

யஃகூப் (அலை) தன் மகனைப் பிரிந்த வேதனையை அல்லாஹ்விடம் முறையிட்டதாக 12:86 வசனத்திலும்,

மிகப்பெரும் ஆட்சி தனக்கு வேண்டும் என்று சுலைமான் (அலை) அவர்கள் துஆ செய்ததாக 38:35 வசனத்திலும்,

லூத் (அலை) அவர்கள் தன் சமுதாயத்தினரின் தீய செயல்களிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்கும்படி துஆ செய்ததை 26:169 வசனத்திலும்

 ஷுஐபு (அலை) அவர்கள் தன் சமுதாயத்திற்கு எதிராகச் செய்த பிரார்த்தனையை 7:89 வசனத்திலும்,

மூஸா (அலை) தனக்கு விரிவான ஞானத்தையும், இன்னும் பல தேவைகளையும் கேட்ட தாக 20:25-32 வசனங்களிலும்

அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

மேற்கூறிய நபிமார்களில் எவரும் " தங்கள் தேவைகள் இறைவனுக்குத் தெரியும்" என்பதை உணராதவர்களில்லை கேட்பதை அல்லாஹ் விரும்புகிறான் என்பதற்காக அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டுள்ளார்கள், இந்த வசனங்கள் மூலம் அந்த உரையாடல் கற்பனையானது தான். அல்லாஹ்விடம் துஆ செய்வதைவிட உயர் ந்த நிலை எதுவுமில்லை என்பதைத் தெரியாலாம்.

ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்தினர் இந்தக் கற்பனை நிகழ்ச்சியை ஆதாரமாக வைத்து. அல்லாஹ்விடம் கேட்காமலிருப்பது தான் உயர்ந்த நிலை! அல்லாஹ்விடம் துஆ செய்வது அல்லாஹ்வையே சந்தேகிப்பது ஆகும் என்று மக்களை வழிகெடுக்கத் துவங்கி விட்டனர். நபிமார்கள் அடைய முடியாத உயர்ந்த நிலை இருப்பதாகக் கருதுவது எவ்வளவு பெரும் பாவம் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் பல இடங்களில் துஆ செய்யும்படி, தேவைகளைக் கேட்கும்படி, மன்னிப்புக் கேட்கும் படி . நமக்கு ஆணையிடுகிறான். ஒரு இடத்தில் கூட என்னிடம் கேட்காமலிருங்கள் என்று சொல்லவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

அல்குர் ஆன் 40:60

 "எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்!

அல்குர் ஆன் 7:29

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.

அல்குர் ஆன் 7:55

இந்த வசனங்கள் எல்லாம் பிரார்த்தனை செய்ய வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.

அல்குர் ஆன் 18:28

தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

அல்குர் ஆன் 6:52

மேற்கூறிய வசனங்கள் துஆ செய்வதை அல்லாஹ் விரும்புகிறான், வரவேற்கிறான், தன் நபியையும் அத்தகைய மக்களுடன் சேர்ந்திருக்கும் படி கட்டளையிடுகிறான் என்பதை தெளிவுபடுத்துகின்றது. தாங்கள் அதிக ஞானம் பெற்றுவிட்டதாக கருதிக்கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்யாமலிருக்க எவருக்கும் அனுமதி இல்லை என்பதை நாம் புரி ந்து கொண்டோம்.

அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் செருப்பின் வார் அறுந்து விட்டாலும் அல்லாஹ்விடம் கேளுங்கள்! என்றனர்.(நூல் : திர்மிதீ)

":துஆ என்பதே ஒரு வணக்கமாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு," ந்த இடத்தில் நீ ங்கள் விரும்பினால் பின் வரும் குர்ஆன் வசனத்தையும் சேர்த்துக் கொள்ளு ங்கள்" என்று கூறினார்கள்.

'உங்கள் இறைவன் கூறுகிறான் ;- என்னையே அழையுங்கள் ! நான் ங்களுக்காக (உங்கள் அழைப்பை) அங்கீகரிக்கிறேன். எவர்கள் எனது வணக்கத்தை விட்டும் (புறக்கணித்து) பெருமை அடிக்கின்றார்களோ அவர்கள் நரகில் இழிந்தவர்களாக நுழைவர்" (அல் குர் ஆன் 40:60) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல்   : அபூ தாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னு மாஜா

மேற்கண்ட நபிமொழி துஆ ஒரு வணக்கம் என்பதையும், அந்த வணக்கத்தைப் புறக்கணிப்பவர்கள் நரகில் இழிந்த நிலையில் நுழைவார்கள் என்பதையும் நமக்குப் பறை சாற்றுகின்றது.

இந்த எச்சிரிக்கைக்கு முரணாக மிகச்சிறந்த நபி ஒருவர் இருந்திருக்க முடியுமா? நரகில் சேர்க்கக் கூடிய ந்த வார்த்தையை ஒரு நபி சொல்லி இருக்க முடியுமாஎன்பதயும் எண்ணிப்பாரு ங்கள்!

மேலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் தான் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட வேளையில், " யா அல்லாஹ் ! வணங்கப்படத் தகுதியானவன் நீ ஒருவனே ; இந்த பூமியில் உன்னை வணங்கக் கூடியவன் (இன்றைய நீலையில்) நான் ஒருவனே! (எனவே என்னைக் காப்பாற்றுவாயாக) என்று பிரார்த்திதார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

,ஆதாரம் : முஸ்னத் அபூ யஃலா)

இப்ராஹீம் (அலை) நெருப்பில் எறியப்பட்டபோது,' எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்: அவனே என்னுடைய மிகச்சிறந்த பொறுப்பாளனாகவும் இருக்கிறான்" எனக் கூறினார்கள் .

(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ், ஆதாரம் : புகாரி)

மேற்கூறிய இரு ஹதீஸ்களும் இப்ராஹீம் (அலை) துஆ செய்துள்ளதை மிகத் தெளிவாகவே தெரிவிக்கின்றன.

எனவே இப்ராஹீம் (அலை) துஆ செய்ய மறுத்தார்கள் என்பது முற்றிலும் ஆதாரமற்ற , குர்ஆன் போதனைக்கு முரண்பட்ட கற்பனை தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அந்தக் கதை இஸ்லாத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டது என்பதைப் பின்வரும் நபிமொழி தெளிவாகவே சொல்லிவிடுகின்றது. எவன் அல்லாஹ்விடம் தன் தேவைகளைக் கேட்கவில்லையோ, அவன் மீது அல்லாஹ் கோபப்படுகிறான் என்பது நபிகள் நாயகம் (ஸல்) , அவர்கள் கூறிய பொன்மொழியாகும் .

இதனை இமாம் ஹாகிம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஹதீஸ்கலை வல்லுனர்கள் இது ஆதாரபூர்வமானது என்று கூறியுள்ளனர்.

இந்த நபி மொழியிலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னுடைய தேவையை கேட்க மறுத்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவு! அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு காரியத்தை மிகப்பெரும் நபி எப்படி செய்திருப்பார்கள்?

துஆ கேட்காமலிருப்பதற்கு இஸ்லாத்தின் அனுமதி கிடையாது. அத்தகையவர்களை அல்லாஹ் கோபிக்கிறான் எனும்போது அது மிகப் பெரும் பாவம் என்பதும் தெளிவு. அதனால் நபி (ஸல்) அவர்கள் நமக்கு எண்ணற்ற துஆக்களைக் கற்றுத் தந்துள்ளனர்.

இது போன்ற கதைகளும், அது போதிக்கின்ற தவறான வழிகாட்டுதல்களும் தவிர்க்கப்பட்டாக வேண்டும்...

அல்லாஹ் உண்மை மார்க்கத்தை அறிந்து அதன்படி செயல்பட அருள் புரிவானாக....

April 18, 2013, 10:28 AM

ஒளியிலிருந்து

ஒளியிலிருந்து

-பி.ஜே

(1986 ஆம் ஆண்டு பீஜே அந்நஜாத் பத்திரிகையில் ஆசிரியராக இருந்த போது செப்டம்பர் இதழில் எழுதிய கட்டுரையை கிளியனூர் பைசல் என்ற சகோதரர் தட்டச்சு செய்து அனுப்பியுள்ளார். அதை இங்கே வெளியிடுகிறோம்)

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது (ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் "ஷபாஅத்" என்னும் பரிந்துரை செய்வர்களாகவும், 'மாகமுன் மஹ்மூத்' என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியரிடையே கருத்து வேறுபாடு இல்லை.

அல்லாஹ் அவர்களுக்கு எந்தச் சிறப்புகளை வழங்கி இருப்பதாகக் கூறி இருக்கிறானோ , நபி (ஸல்) அவர்கள் எந்த சிறப்புக்கள் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்களோ, அவற்றைத் தவிர நாமாகப் புகழ்கிறோம் என்ற பெயரில் கற்பனைக் கதைகளைக் கட்டிவிடுவது மிகப் பெரும் குற்றமாகும். காரணம் நபி (ஸல்) அவர்களுக்கு உரிய தனிச்சிறப்ப்புகள் அல்லாஹ் சொல்லாமல் நாமாக அறிந்து கொள்ள இயலாத ஒன்றாகும்.

இவ்வாறு வரம்பு மீறிப் புகழ்வதை நபி (ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

"ஷைத்தான் உங்களைக் கெடுத்து விடவேண்டாம் நான் அப்துல்லாவின் மகன் முஹம்மதாவேன், மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்."

நூல் : அஹ்மத், பைஹகீ, ஸுனன் ஸயீது இப்னுமன்ஸுர்

"எனது தகுதிக்கு மேல் என்னை உயர்த்தாதீர்கள் ! ஏனெனில் அல்லாஹ் என்னை அவனது தூதராக ஆக்குமுன்பே என்னை அவனது அடியானாக ஆக்கி விட்டான்.

நூல்கள் : ஹாகீம், தப்ரானி

"கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் மீறிப் புகழாதீர்கள்!"

நூல்கள் : புஹாரி, தாரமி, அஹமத், ஷமாயில் திர்மிதீ, மஜ்வுல் பவாயித்)

மேற்கூறிய மூன்று நபிமொழிகளிலும் நபி (ஸல்) அவர்கள் தன்னை வரம்பு மீறிப் புகழ்வதைக் கண்டித்துள்ளார்கள் . அவர்கள் உத்தரவுக்கு மாற்றமாக புகழ்கிறோம்' என்ற எண்ணத்தில் வரம்பு மீறுவது உண்மையில் புகழாகாது. மாறாக நபி (ஸல்) அவர்களின் உத்தரவை அலட்சியம் செய்த மாபெரும் குற்றமாகிவிடும். இந்த அடிப்படையை நாம் தெரிந்து கொண்டபின் , பிரச்சனைக்குள் இப்போது நேரடியாக நுழைவோம்.

முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்தான் என்பதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்லிக் காட்டுகின்றது. ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளின் சங்கிலித் தொடரில் அப்துல்லாவுக்கும், ஆமீனாவுக்கும் மகனாக நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். ஈஸா (நபி) தவிர மற்ற மனிதர்கள் எந்த முறையில் பிறந்தார்களோ, அப்படித்தான் நபி (ஸல்) அவர்களும் பிறந்தார்கள். எல்லா மனிதர்களுக்கும் எது மூலமாக இருந்ததோ அதுவே நபி(ஸல்) அவர்களுக்கும் மூலமாக இருந்தது. இது தான் குர் ஆன் ஹதீஸ் மூலம் பெறப்படும் உண்மையாகும்.

"இன்னும் அவன் தான் மனிதனை (ஒரு குறிப்பிட்ட) நீரிலிருந்து படைத்தான்"

(அல் குர் ஆன் 25 :54)

"அவனை நாம் "விந்து"விலிருந்து படைத்தோம் என்பதை மனிதன் அறிய வேண்டாமா?

(அல் குர் ஆன் 36 :77)

இன்னும் பல வசனங்கள் மனித இனத்தின் மூலப் பொருளாக விந்துத் துளியையே குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் களி மண்ணால் படைக்கப்பட்டார்கள் என்பதைப் பல வசனங்கள் நமக்குத் தெளிவு படுத்துகின்றன.

"களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அவன்) துவக்கினான்."

(அல் குர் ஆன் 32:7)

"அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான்."

(அல் குர் ஆன் 35 :11)

இது போன்ற ஏராளமான வசனங்கள் மனிதத் தோற்றம் மண்ணிலிருந்து துவங்கி, பின்னர் விந்திலிருந்து தொடர்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

இதற்கு மாற்றமாக

"முதலில் அல்லாஹ் , முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளியைப் படைத்தான் . அந்த ஒளியிலிருந்து எல்லாப் படைப்புக்களையும் படைக்கத் துவங்கினான்" என்று கூறுவது திருக்குர்ஆனின் வசனங்களுடன் நேரடியாகவே மோதுவதாகும்.

"களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அல்லாஹ்) துவக்கினான்"

(அல்குர் ஆன் 32:7)

இந்த வசனத்தைக் கொஞ்சம் ஆராயந்து பாருங்கள்! மனிதப் படைப்பின் துவக்கமே "களிமண்தான்" ன்று எவ்வளவு தெளிவாகக் கூறுகின்றது! களி மண்தான் மனிதப் படைப்பின் துவக்கம் ,ஆரம்பம், என்று அல்லாஹ் கூறிகொண்டிருக்க, "இல்லை! முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளிதான் ஆரம்பம்" என்று கூறுவது அல்லாஹ்வுக்கு தாம் சொல்லிக் கொடுப்பது போலவும், அதிகப் பிரசங்கித் தனமாகவும் தோன்றவில்லையா? (நவூதுபில்லாஹ்)

அல்லாஹ் திருக்குர்ஆனின் எந்த வசனத்திலும், நபி (ஸல்) அவர்கள் "ஒளியால் படைக்கப்பட்டார்கள்" என்று கூறவே இல்லை. நபி (ஸல்) அவர்களும் "தன்னை அல்லாஹ் ஒளியிலிருந்து படைத்தான்" என்று கூறியதாக எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படவில்லை.

இந்தக் கதையைக் கட்டி விட்டவர்கள் "முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்" என்ற ஹதீஸ் நூலில் இது உள்ளதாக ஆதாரம் காட்டிக் கொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளாக இது நம்பப்பட்டு வந்தது. வழிகெட்ட பரேலவிகள் இந்த "முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்" எனற நூலையே தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் கூறிக் கொண்டிருந்தனர்.

"முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்" என்ற நூல் உண்மையும், பொய்யும் கலந்த ஒரு நூல் . அது ஆதாரமாக எடுத்து வைக்கும் அளவுக்கு உயர்ந்த நூல் அல்ல என்பதால் அறிஞர்கள் அந்த நூலுக்கு முக்கியத்துவம் தரவில்லை . அவர்கள் கூறுவது அந்த நூலிலாவது இருக்கிறதா என்று பாகிஸ்தானைச் சேர்ந்த 'தர்ஜுமானுல் ஹதீஸ் ' என்ற மாத இதழின் ஆசிரியர், இஹ்ஸான் இலாஹி ழஹீர்' என்ற அறிஞர் வரிக்கு வரி பார்வையிட்டு அந்தக் கதை அதில் இல்லை என்று கூறிய பிறகு தான். இந்த அறிவீனர்கள் எவ்வளவு துணிந்து பொய் சொல்லி இருக்கிறார்கள் என்ற உண்மை உலகுக்குத் தெரியலாயிற்று.

("முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்" என்ற நூல் இந்தியாவிலும் அச்சிடப்பட்டு தற்போதும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சந்தேகமுள்ளவர்கள் பார்த்துக் கொள்லாம்)

எந்த நூலில் இந்தக் கதை இருப்பதாக இதுகாலம் வரை கூறிக்கொண்டிருந்தார்களோ, எதை நம்பி, பல நூல்களில் எழுதி வைத்து சென்றார்களோ. அந்த நூலிலேயே அது இல்லை என்று நிரூபணமாகி விட்டபின், எள்ளளவும் ஆதாரமற்ற கட்டுக் கதைதான் அது என்பது ஜயத்திற்கிடமின்றி முடிவாகி விட்டது.

"இறைவா! என் உள்ளத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் எனக்கு ஓளியை ஏற்படுத்துவாயாக! எனது செவியிலும் எனக்கு ஓளியை ஏற்படுத்துவாயாக! என் வலது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் மேல் புறத்திலும், கீழ்ப்புறத்திலும் எனக்கு முன்னும், பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக !'' என்று நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி துஆ செய்பவர்களாக இருந்துள்ளார்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள் : புஹாரி, முஸ்லிம், அபுதாவூத், திர்மிதீ, அஹ்மத்

நபி (ஸல்) அவர்கள் ஒளியால் உருவாக்கப்பட்டிருந்தாலோ, அவர்களே ஒளியாக இருந்திருந்தாலோ, இந்தப் பிரார்த்தனையை அடிக்கடி செய்திருக்க வேண்டியதில்லை. "ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்று கூறுவது எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படாத போது இதை சொல்பவர்களின் நிலை என்ன ?

"நூரே முஹம்மதியா " எனறு கூறித் திருபவர்களின் நிலை என்ன ? அதையும் அல்லாஹ்வின் தூதரே தெளிவுபடுத்துகிறார்கள்.

"எவன் என்மீது திட்டமிட்டு ஒரு பொய்யைச் சொல்கிறானோ, அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்". இந்த நபிமொழி இடம்பெறாத ஹதீஸ் நூலே இல்லை,"

முதவாதிர்" என்ற அந்தஸ்து பெற்ற ஹதீஸ்களில் முதலிடத்தை வகிக்கின்ற ஹதீஸ் இது. இதற்கு ஆதாரம் குறிப்பிடக் கூற வேண்டாத அளவு , எல்லா ஹதீஸ் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை மீறி துணிந்து இப்படிப் பொய்யைப் பிர்ச்சாரம் செய்வர்கள் எங்கே செல்ல விரும்புகின்றனர்?

நபி (ஸல்) அவர்களின் உண்மையான தனி சிறப்புக்களைச் சொல்லவே நேரம் போதவில்லை. அவர்களின் ஒழுக்கம், நேர்மை, தூய்மையான அரசியல், சிறந்த இல்லறம், வணக்க வழிபாடு, அவர்களின் வீரம் , தியாகம், போன்ற எண்ணற்ற சிறப்புகளை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான். பொய்யானவைகள். மூலம் அவர்களைப் புகழும் நிலையில் அல்லாஹ் அவர்களை வைத்திருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களின் அன்பு மகன் இப்ராஹீம் (ரலி) இறந்த  போது ஏற்பட்ட கிரகணத்திற்கு ஸஹாபாக்கள் இப்ராஹீமின் மரணத்தைக் காரணமாகக் காட்டிய போது நபி (ஸல்) அவர்கள் இந்தப் பொய்யான புகழைக்கண்டித்துள்ள வரலாறு ( புஹாரி, முஸ்லிம்) எவரும் அறிந்த ஒன்று

இந்தக் கதையை அடிப்படையாக வைத்து " நபி (ஸல்) அவர்கள் வெயிலில் நடந்தால் நிழல் விழாது" என்ற துணைக்கதை வேறு. இதற்கும் எவ்வித ஆதாரமும் கிடையாது. இது போன்ற பொய்களைக் கூறி நரகத்திற்கு ஆளாவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்கட்டும்! அவர்களின் உண்மை வரலாற்றைக் கூறி அவர்களை உண்மையாகப் புகழ்ந்தவர்களில் அல்லாஹ் நம்மை ஆக்கட்டும்.

April 18, 2013, 10:00 AM

பகிரங்க அறைகூவல்

இலங்கைப் பெண்மணி ரிசானாவுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை சரியல்ல என்று கூறி இஸ்லாத்தை விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்ட நக்கீரன், ஆனந்த விகடன் இதழ்கள் மற்றும் அந்த இதழ்களில் கட்டுரைகளை எழுதிய மனுஷ்ய புத்திரன், ஜே.பி.ஜோஸபின் பாபா, பாரதி தம்பி ஆகியோருக்கு பகிரங்க விவாத அறைகூவல் கடிதம் :


Click Here to download

இந்தக் கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்று பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். இன்ஷா அல்லாஹ்

January 21, 2013, 8:18 AM

பைபிள் கடவுளின் வார்த்தை அல்ல!

பைபிள் கடவுளின் வார்த்தை அல்ல! கிறித்துவ போதகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்!!

கடந்த 28.11.12 புதன் கிழமையன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், அனாரியன் சமாஜ் ஊழியங்கள் என்ற கிறித்தவ சபையினருக்கும் இடையில், “திருக்குர்ஆன் இறைவேதமா? பைபிள் இறைவேதமா?” ஆகிய இரு தலைப்புகளில் விவாதம் பரபரப்புடன் நடந்து முடிந்தது.

டிஎன்டிஜே சார்பாக கலீல் ரசூல் அவர்கள் தலைமையில் எம்.எஸ்.சுலைமான், தாங்கல் ஹபீபுல்லாஹ், சையது இப்ராஹீம் ஆகியோர் அடங்கிய குழுவினர் விவாதித்தனர்.

காலை 9 மணி முதல் இரவு 8.30 வரை நடைபெற்ற இரண்டு தலைப்புகளிலான விவாதம் அனல் பறந்தது. விவாதம் ஆன்லைன்பீஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. திருக்குர்ஆன் இறைவேதமே!:

முதலில் திருக்குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பிலும், அடுத்ததாக பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலும் விவாதிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

விவாதம் ஆரம்பித்த உடனேயே, “இயேசுவுக்கு முன்னதாக வந்த மோசே கொண்டு வந்தது நியாயப்பிரமாணம் என்றும், இயேசு அதை மாற்றி கிருபையின் பிரமாணத்தைக் கொண்டு வந்தார் என்றும், பின்னர் வந்த முஹம்மது என்பவர் கிருபையின் பிரமாணத்தை மாற்றி, பைபிளில் உள்ள “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்ட வேண்டும்” என்ற அழகிய சட்டங்களை மாற்றி, கண்ணுக்குக்கண், பல்லுக்குப் பல் என்று நடைமுறைக்குச் சாத்தியமில்லாத, குர்ஆன் என்று சொல்லக்கூடிய கிரியையின் பிரமாணத்தைக் கொண்டு வந்தார்” என்றும் கிறித்தவத் தரப்பினர் குற்றச்சாட்டு வைத்தனர்.

முதல் அடியே மரண அடி:

திருக்குர்ஆனுக்கு எதிராக அவர்கள் வைத்த முதல் வாதமே சொத்தை வாதமாக அமைந்தது.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று இயேசு சட்டம் கொண்டு வந்ததாகக் கூறுகின்றீர்களே! அது நடைமுறைக்குச் சாத்தியமான சட்டமா? அந்தச் சட்டத்தைச் சொன்ன இயேசுவாவது அந்த சட்டத்தைக் கடைப்பிடித்தாரா? என்று கேள்வியெழுப்பி, பைபிளில் வரக்கூடிய கீழ்க்கண்ட சம்பவம் சுட்டிக்காட்டப்பட்டது.

கன்னத்தில் அறைந்தவனை கேள்வி கேட்ட ஏசு:

சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன் பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார். யோவான் 18 : 22, 23

இயேசுவை ஒருவர் கன்னத்தில் அறைந்த போது தனது மறுகன்னத்தைக் காட்டாமல், என்னை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டுள்ளார். அவர் கூறிய போதனையை அவராலேயே நடைமுறைப்படுத்த முடியவில்லை.

இந்தப் போதனையை எந்த ஒரு கிறித்தவரும் நடைமுறைப்படுத்துவதுமில்லை.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று இயேசு சட்டம் சொல்லுகின்ற அதே வசனத்தில், உனது வஸ்திரத்தை ஒருவன் கழற்றினால் அவனுக்கு உனது அங்கியையும் கழற்றிக் கொடு என்று இயேசு கட்டளையிடுகின்றார். அப்படியானால் தேவாலயங்களில் உண்டியலில் கொள்ளையடித்த கொள்ளையர்களைத் தேடிப்பிடித்து, அந்தக் கொள்ளையர்கள் ஒரு லட்சம் கொள்ளையடித்திருந்தால் இயேசு சொன்ன போதனையை ஏற்று இன்னுமொரு லட்ச ரூபாயை அவர்களுக்கு அன்பளிப்பாக கிறித்தவர்கள் வழங்க வேண்டும். அப்படி எந்த கிறித்தவர்களும் வழங்குவதில்லையே என்று கேள்வியெழுப்பியவுடனேயே போதகர்கள் பேதலித்துப் போயினர்.

இந்தச் செய்தியை நாங்கள் வாதமாக எடுத்து வைக்கவில்லை. ஒரு தகவலுக்காகச் சொன்னோம் என்று அந்தர் பல்டி அடித்தார்களே பாருங்கள். அப்போது ஆரம்பித்த அந்தர் பல்டி, விவாதம் முழுவதும் தொடர்ந்தது. கடைசி வரைக்கும் அந்தக் கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.

முதல் வாதத்திற்கு கொடுத்தது மரண அடியாக இருந்ததால் முதல் அடியில் விழுந்தவர்கள் கடைசி வரைக்கும் எழுந்திருக்கவே இல்லை.

மோசே கொண்டு வந்த நியாயப் பிரமாணத்தை இயேசு மாற்ற வந்தாரா?:

மேலும், மோசே கொண்டு வந்த நியாயப்பிரமாணத்தை இயேசு மாற்றி கிருபையின் பிரமாணத்தைக் கொண்டு வந்தார் என்று தாங்கள் சொல்வதும் பொய் என்று கூறி இயேசு சொன்ன கீழ்க்கண்ட பைபிள் வசனம் எடுத்துக்காட்டப்பட்டது.

நியாயப்பிரமாணத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். மத்தேயு 5:17

மேற்கண்ட வசனத்தை நாம் எடுத்துக்காட்டியதும், அவர்களது ஆரம்ப வாதமே பொய் என்பது அம்பலமானது. திருக்குர்ஆன் விடும் சவால்:

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! அல்குர்ஆன் 2 : 23, 24

மேற்கண்ட வசனம் நமது முதல் வாதமாக முன் வைக்கப்பட்டது. திருக்குர்ஆன் இந்த சவாலை 1400 ஆண்டுகளுக்கு முன் விடுத்த போது, அந்த அரபுலகத்தில் அரபி பேசத்தெரிந்த கிறித்தவர்கள், யூதர்கள், இன்னும் பெரும் பெரும் அரபிப் பண்டிதர்கள் எல்லாம் இருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் விடப்பட்ட இந்த சவால் 1400 ஆண்டுகள் ஆகியும் முறியடிக்கப்படாமல் உள்ளது. திருக்குர்ஆன் இவ்வாறு சவால் விட்ட பின்னர் அன்றைய அரபு மொழி பேசும் கிறித்தவர்கள் குர் ஆனை இறைவேதம் என்று ஏற்று இஸ்லாத்தில் இணைந்தார்கள். இதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது என்ற செய்தியை எடுத்து வைத்து திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளிக்கத் திராணியற்ற போதகர்கள், திருக்குர்ஆன் அனைத்து விஷயங்களையும் கூறுவதாகச் சொல்லிக்காட்டுகின்றது. ஆனால் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், ஹலால் போன்றவற்றை முழுமையாக அது சொல்லிக்காட்டவில்லை என்ற சொத்தை வாதத்தையே திரும்பத் திரும்ப வைத்துக் கொண்டிருந்தனர்.

திருக்குர்ஆன் அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தும் என்று சொன்னால் அதில் அனைத்தும் இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அனைத்து வரையறைகளும் உள்ளன என்று சொல்கின்றோம். ஆனால், அதில் அனைத்து சட்டங்களும் மிகவும் விலாவரியாக விளக்கப்பட்டு இருக்காது. குறிப்பிட்ட அதிகாரங்களை மாநில அரசுக்கு வழங்கப்பட்டதாகவும், “ஆக்ட்” என்று தனியாகவும் விளக்கப்பட்டு இருக்கும்.

அதுபோலத்தான், தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், ஹலால் போன்றவைகள் இதில் மேலோட்டமாக சொல்லப்பட்டாலும் இறைவன் தனது தூதர் மூலம் அதை விளக்குகின்றான் என்பதை கீழ்க்கண்ட வசனம் தெளிவுபடுத்துகின்றது என்று சொல்லி விளக்கமளிக்கப்பட்டது.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். அல்குர்ஆன் 16 : 44

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அவைகளை விளக்கும் அதிகாரத்தை இறைவன் தனது தூதருக்கு வழங்கியுள்ளான். இந்த அடிப்படையில் பார்த்தால் அனைத்துமே திருக்குர்ஆனில் விளக்கப்பட்டுவிட்டது என்று விளக்கமளித்தும், விளங்காததுபோல கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர் அந்த பேதகர்கள்.

மேலும், திருக்குர்ஆன் வசனங்களை ஒன்றுகிடக்க ஒன்று தவறாக விளங்கிக் கொண்டு இந்த வசனத்திற்கு அது முரண். அந்த வசனத்திற்கு இது முரண் என்று உளறிக் கொட்டினர். அவற்றிற்கும் தக்க முறையில் நமது விவாதக் குழுவினர் பதிலளித்தனர்.

மேலும், திருக்குர்ஆன் வசனங்களில் குறிப்பிட்ட வாசகங்களை மட்டும் இருட்டடிப்புச் செய்துவிட்டு, சில வசனங்களை வேண்டுமென்றே விட்டுவிட்டு இடையிலிருந்து வாசித்து தங்களது கள்ள வேலைகளை விவாத அரங்கத்திலும் அரங்கேற்றினர்.

அப்படி அவர்கள் இருட்டடிப்புச் செய்து வேண்டுமென்றே விட்டுவிட்டு வாசித்த வசனங்களை நாம் திரும்ப வாசித்துக் காண்பித்தவுடனேயே அவர்கள் சாயம் அந்த இடத்திலேயே வெளுத்தது. எது ஆபாசம்?:

திருக்குர்ஆனில் பல இடங்களில் மனிதனது படைப்பைப் பற்றி இறைவன் சொல்லிக்காட்டுகின்றான். அப்படிச் சொல்லிக்காட்டும்போது மனிதனை விந்துத் துளியிலிருந்து படைத்ததாகச் சொல்லிக்காட்டுகின்றான். இவ்வாறு விந்துத்துளி என்று சொல்லப்படும் வார்த்தை ஆபாசமானதாம். எனவே குர்ஆன் ஆபாசமாகப் பேசிவிட்டது என்று கூறி குற்றச்சாட்டை வைத்தனர் போதகர்கள்.

இவர்களுக்கு ஆபாசம் என்றால் என்னவென்று தெரியாததுபோலப் பேசினர்.

மனிதனே உன்னை விந்துத்துளியிலிருந்து படைத்தோம். இதை நீ சிந்தித்துப்பார் என்று இறைவன் கேட்பது எப்படி ஆபாசம் என்று தெரியவில்லை. அடுத்த அமர்வில் ஆபாசம் என்றால் என்ன என்று விளக்குகின்றோம். பைபிளில் உள்ள ஆபாசங்களை புட்டு புட்டு வைக்கின்றோம் என்று கூற போதகர்கள் கதிகலங்கிப்போயினர்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் வைத்த விஞ்ஞான ரீதியான அறிவியல் உண்மைகளை திருக்குர்ஆன் சொல்லிக்காட்டுகின்றது என்ற வாதங்களுக்கு அவர்களால் பதிலளிக்க இயலவில்லை. மேலும் அவர்கள் வைத்த வாதங்கள் அனைத்தும் கிறுக்குத்தனமானவை என்பதை அதற்கு நாம் அளித்த பதில்கள் மூலம் அவர்களுக்கு உணர வைத்தோம். அத்துடன் முதல் அமர்வு முடிந்தது.

பைபிள் இறைவேதமில்லை என்பதை நிரூபித்த அமர்வு:

அடுத்ததாக, “பைபிள் இறைவேதமா?” என்ற தலைப்பில் விவாதம் மாலை 4மணிக்கு ஆரம்பமானது. ஆரம்பமே அதிரடித்தாக்குதல்:

விவாதத்தின் ஆரம்பத்திலேயே அதிரடித்தாக்குதல் பாணியை கையிலெடுத்து கிறித்தவ போதகர்களை நையப்புடைத்தனர் நமது விவாதக் குழுவினர்.

பைபிளை இறைவேதம் என்று சொல்லுகின்றீர்கள். ஓர் இறைவேதம் என்பது எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ, அப்படியெல்லாம் பைபிள் உள்ளது.

அதில் பொய்கள், உளறல்கள், முரண்பாடுகள், சொல்வதற்கே நாக்கூசக்கூடிய ஆபாசங்கள், பொருந்தாத சட்டங்கள், கேடுகெட்ட சட்டங்கள், கடவுளை இழிவுபடுத்தக்கூடிய வசனங்கள் என்று குவிந்து கிடக்கின்றன. அவைகளின் பட்டியல் இதோ என்று நீண்ட பட்டியல் போட மூச்சுத் திணறிப்போன போதகர்கள் விளக்கம் அளிக்கின்றேன் என்ற பெயரில் உளறிக்கொட்டி மேற்கொண்டு ஆபாசங்களையும், அசிங்கங்களையும் தங்களது வாதத்தில் வைக்க விவாதக்களம் சூடுபறந்தது.

கர்த்தர் சொன்னதல்ல; நானே சொல்கின்றேன்:

முதலில் கிறித்துவத்தை நிறுவிய பவுல் மற்றும் லூக்கா ஆகியோர் பைபிளில் சொல்லியுள்ள ஒரு விஷயத்தை முன் வைத்து இப்படிப்பட்ட வாசகங்கள் அடங்கியது இறைவேதமா? என்று கேள்வியெழுப்பப்பட்டது

ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. லூக்கா 1 : 2,3

மேற்கண்டவாறு லூக்கா கூறியுள்ளார்.  அதாவது நான் விசாரித்து அறிந்ததை இந்த வேத வரிகளாக எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார். இவர் விசாரித்து கேட்டு எழுதியவைதான் வேதமா?

ஒருபுறம் இப்படியென்றால் மறுபுறம், பவுல் என்பவரோ, “மற்றவர்களைக் குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். முதலாம் கொரிந்தியர் 7:12

மேற்கண்ட வசனத்தில் கர்த்தர் சொல்லவில்லை; நானே சொல்லுகின்றேன் என்று பவுல் கூறுகின்றார் என்றால் இது இறைவேதமாக இருக்கவே முடியாது என்று ஆதாரங்களை வைத்ததும் கிறித்தவ போதகர்கள் ஆடிப்போயினர்.

அதற்கு விளக்கமளிக்கப் புகுந்த போதகர்கள் விளக்கம் சொல்கின்றேன் என்ற பெயரில் மென்மேலும் உளறிக்கொட்டி பைபிள் இறைவேதமில்லை என்பதை அவர்களே நிரூபித்தனர்.

அதாவது லூக்கா விசாரித்து அறிந்து எழுதியதாக சொல்லும் வசனத்திற்கு முந்தைய வசனத்தில், “ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்” என்று உள்ளது. இந்த வசனத்தின் அடிப்படையில் கண்ணாரக் கண்டதைத்தான் எழுதினார்கள் என்று போதகர்கள் விளக்கம் கூற அது அவர்களுக்கு எதிராக வந்து அமைந்தது.

அப்படியானால் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு பைபிள் எழுதப்பட்டதாக சொல்வது சுத்தப் பொய்தானே! விசாரித்து அறிந்ததையும், கண்ணாரக் கண்டதையும்தான் எழுதியுள்ளார்கள் என்றால் அது கர்த்தருடைய வார்த்தை அல்ல என்பது நிரூபணமாகிவிட்டது என்று நாம் சொன்னவுடன் சொல்ல பதிலின்றி வாயடைத்துப் போயினர் போதகர்கள்.

பவுல் கூறிய, கர்த்தர் சொல்லவில்லை; நான் சொல்லுகின்றேன் என்ற வசனம் குறித்து கடைசி வரைக்கும் அவர்கள் வாய்திறக்கவில்லை.

உன்னதப்பாட்டுக்கு அளித்த மன்மத விளக்கம்:

கடவுளுடைய வேதத்தில் சொல்லவே நாக்கூசக்கூடிய அளவிற்கு ஆபாசங்களும், அசிங்கங்களும் இருக்கலாமா? இந்த ஆபாசங்களையும், அசிங்கங்களையும் ஒரு மகளும், ஒரு தந்தையும் ஒன்றாக அமர்ந்து படிக்க முடியுமா? என்ற கேள்வியெழுப்பி பைபிளில் உள்ள உன்னதப்பாட்டு என்ற மன்மதப்பாட்டு குறித்து அதிலுள்ள வசனங்களை வாசித்துக் காண்பித்து கேள்வியெழுப்பப்பட்டது.

உன்னதப்பாட்டு என்பது அண்ணன் தங்கைக்கு சொல்லும் ஆறுதல் வார்த்தைகளாம்:

உன்னதப்பாட்டு என்னும் அதிகாரத்தில், ஒரு ஆண் தனது கள்ளக்காதலியை ஆபாசமாக வர்ணிக்கும் மகாமட்டமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இப்படி தனது கள்ளக்காதலியை, “தங்காய்! தங்காய்!” என்று அழைத்து கள்ளக்காதல் செய்யக் கற்றுத்தரும் இந்த கேடுகெட்ட நூல்தான் இறைவேதமா? என்று நாம் கேள்வியெழுப்பினோம்.

அதற்கு ஓர் அற்புதமான விளக்கமளித்த போதகர்கள் கிறித்தவ பார்வையாளர்கள் உட்பட அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.

உன்னதப்பாட்டு என்பது ஓர் அண்ணன் - தங்கை இருவருக்குமிடத்தில் நடைபெறும் பாசத்தின் அடிப்படையிலான பேச்சுக்கள். தங்கையானவள் கறுப்பான நிறத்தில் இருக்கின்றாள். கறுப்பாக உள்ள தனது தங்கையைப் பார்த்து அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் அண்ணன் சொல்கின்றார், “தங்கையே! உன் முலைகள் திராட்சைக் குலைகள் போன்றவை” என்று. இப்படி தனது தங்கைக்கு அவளது அண்ணன் ஆறுதல் சொல்வதை தாங்கள் கொச்சைப்படுத்தலாமா? என்று விவாதத்தில் கிறித்தவ போதகர் கேட்டாரே ஒரு கேள்வி. கிறித்தவ பார்வையாளர்களே அவர்களை காரித்துப்பிவிட்டனர்.

ஓர் அண்ணனும் தங்கையும் இப்படித்தான் கேவலமாகப் பேசிக் கொள்வார்களா? இப்படித்தான் கிறித்தவர்கள் தங்களது தங்கைகளுக்கெல்லாம் ஆறுதல் சொல்லிக் கொண்டுள்ளார்களா? இதையும் சிரித்துக் கொண்டே சொல்கின்றீர்களே! உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கேள்வியெழுப்ப அதற்கும் சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்தனர் கிறித்தவ போதகர்கள்.

உனது வளர்த்தி ஓங்கிய பனையாம், உன் முலைகள் இரண்டும் அதன் குலைகளாம்.

பனை மரமேறி நான் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; உன் முலைகள் திராட்சைக் குலைகள் போன்றவை, உன் மூச்சு கிக்சிலிப் பழங்கள் போல் இனிய மணமுள்ளது உன்னதப்பாட்டு 7 : 7, 8

மேற்கண்ட வசனத்திலுள்ள, “நீ பனைமரம் போன்றவள். நான் பனை மரத்தில் ஏறி உன் முலைகளைப் பிடிப்பேன். உன் முலைகள் திராட்சைக் குலைகள் போல் ஆகுக!” என்ற உன்னதப்பாட்டு வேத(?) வரியை வாசித்துக் காண்பித்து, இதுதான் இறைவேதத்தின் லட்சணமா என்று நாம் கேள்வியெழுப்பினோம்.

இந்த கேவலப்பட்ட வசனங்களுக்கு விளக்கம் சொன்னால் நாம் நாறிப்போய்விடுவோம் என்று அரண்டு போன போதகர்கள், “முலைகள்” என்ற வார்த்தையே பைபிளில் இல்லை என்றும், நாம் வேதத்தை புரட்டுவதாகவும் அந்தர்பல்டி அடித்து குற்றச்சாட்டு வைத்தனர். முலைகள் என்று பைபிளில் வரக்கூடிய இடங்களையெல்லாம் எடுத்து வாசித்துக் காண்பித்தவுடன் கப்சிப் ஆகிவிட்டனர்.

அடுத்ததாக இதுவெல்லாம் ஓர் ஆபாசமா? என்று கேட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். சாலமோன் என்பவர்தான் இந்த ஆபாச வார்த்தைகளையெல்லாம் பேசியவர். அவரது காலத்தில் இதுவெல்லாம் ஆபாசமே கிடையாது. இதற்கெல்லாம் வெட்கப்படமாட்டார்கள். எப்படி ஒரு சிறுவயது குழந்தை நிர்வாணமாக இருப்பதை தவறாகச் சொல்ல முடியாதோ அதுபோல இதையெல்லாம் தவறாகச் சொல்ல முடியாது என்று அற்புத(?) விளக்கமளித்தனர்.

அதுமட்டு மில்லாமல், காட்டுவாசிகளை இப்போது டிஸ்கவரி சேனலில் காட்டுகின்றார்கள். அவர்களெல்லாம் நிர்வாண கோலத்தில்தான் உள்ளார்கள். அவர்களுக்கு அது தவறில்லை என்பது போல உன்னதப்பாட்டும் தவறில்லை. டிஸ்கவரி சேனலில் தற்போது அந்தக் காட்டுவாசிகளைக் காட்டும் போது அவர்களது குறிப்பிட்ட அந்த பாகங்களை கறுப்படித்துக் காட்டுகின்றார்கள். அதுபோலத்தான் இதுவும் என்று போதகர்கள் விளக்கமளிக்க, வந்திருந்த கிறித்தவ பார்வையாளர்களே முகம் சுளித்தனர்.

சாலமோன் பாடிய உன்னதப்பாட்டு அசிங்கமில்லை; அவர்களுக்கு அது வெட்கமில்லை என்று நீங்கள் சொல்வது சுத்தப் பொய். காரணமென்னவென்றால் உன்னதப்பாட்டின் கடைசி அதிகாரமாக வரக்கூடிய 8வது அதிகாரத்தில் முதல் வசனத்தில் கள்ளக் காதலியானவள் தனது கள்ளக் காதலனைப் பார்த்து சொல்கின்றாள், “நீ எனது தாயின் பால் குடித்த உடன்பிறந்த சகோதரனாக இருந்திருந்தால் நான் கண்ட இடத்திலெல்லாம் உன்னை முத்தமிடுவேனே!” என்று கேட்கின்றாள். அதாவது கள்ளக் காதலனை கண்ட இடத்திலெல்லாம் முத்தமிட்டால் ஊர் மக்கள் இவனை ஏன் முத்தமிடுகின்றாய் எனக் கேட்பார்கள். அதனால் நீ என் கூடப் பிறந்த அண்ணனாக இருந்தால் உன்னை கண்ட இடத்திலெல்லாம் நான் முத்தமிடுவேனே! அப்போது என்னை யாரும் நிந்தனை செய்யமாட்டார்கள் என்று அவள் கூறுகின்றாள். அப்படியானால் அது அசிங்கம் என்பதால்தானே இப்படி கூறுகின்றாள்.

அதுமட்டு மல்லாமல், உன்னதப்பாட்டிற்கு முன்பாகவே மோசேவுடைய நியாயப் பிரமாணத்தில் விபச்சாரம் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது. சாலமோன் சொன்ன நீதிமொழிகளிலும் விபச்சாரத்திற்கு எதிரான வசனங்கள் உள்ளன என்று நாம் விளக்கம் கூற விழிபிதுங்கியது போதகர் கூட்டம்.

அதுமட்டுமல்லாமல் காட்டுவாசிகளைப்போல நிர்வாணமாகத் திரிவது தவறில்லை என்றால், அந்த அசிங்கங்களை தற்போது நீங்கள் வேதமாக வைத்து வாசித்து வருகின்றீர்களே! அப்படியானால் நீங்கள் என்ன காட்டுவாசிகளா? அவர்களுக்குத்தான் வெட்கமில்லை என்றால் அதை வைத்து வாசிக்கும் உங்களுக்கும் வெட்கமில்லையா? என்று கேட்க கடைசி வரைக்கும் பதிலில்லை.

பைபிள் கூறும் இரசம்:

உன் தொப்பூழ் கலப்பு இரசம் குறையாதிருக்கும் கடைந்தெடுத்த கலசம் போன்றது. உன்னதப்பாட்டு 7 : 2

மேற்கண்ட வசனத்தில் தொப்புளில் இருந்து ரசம் வருவதாக ஒரு வசனம் உன்னதப்பாட்டில் வருகின்றதே! இதுதான் வேதமா? இதை ஒரு தகப்பனும், மகளும் ஒன்றாக எப்படி வாசிக்க முடியும்? என்று கேள்வியெழுப்ப அப்படி ஒரு வசனமே இல்லை என்று அந்தர்பல்டி அடித்தனர் போதகர்கள்.

உன்னதப்பாட்டு 7வது அதிகாரத்தில் 2வது வசனத்தில் தொப்பூளில் ரசம் வருவதாக அவர்கள் வாசித்துக்காட்டினார்கள். அது பொய். இதோ நான் அந்த வசனத்தை வாசித்துக் காண்பிக்கின்றேன் என்று கிறித்தவ போதகர் அவரது பாணியில் கீழக்கண்ட வசனத்தை வாசித்துக் காண்பித்தார்.

உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம் போலிருக்கிறது; உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது. உன்னதப்பாட்டு 7 : 2

இங்கே எங்கே தொப்பூள் என்று உள்ளது. இதிலே எங்கே ரசம் உள்ளது என்று ஒன்றும் அறியாதவர்கள் போல கேள்வியெழுப்பினர்.

மேற்கண்ட வசனத்தில் வரக்கூடிய, “நாபி” என்ற தூய தமிழ்ச்சொல்லின் பொருள்தான் தொப்பூள் என்பதாகும். அது தமிழ் மக்களுக்குத் தெரியாது என்ற அசட்டுத் தைரியத்தில் இந்த பொய்யை அவர்கள் அவிழ்த்துவிட்டனர்.

அதுபோல, “முலைகள்” என்று வரக்கூடிய இடங்களில் அவைகளை வெளியே தெரியாத வண்ணம், “ஸ்தனங்கள்” என்று மொழிபெயர்த்த மொழி பெயர்ப்பை வாசித்துக் காட்டி இங்கே எங்கே முலைகள் என்று உள்ளது என்று கேட்டு பைபிள் வசனங்களை இருட்டடிப்புச் செய்தனர்.

நாபி, ஸ்தனங்கள் என்று மொழி பெயர்த்தவை புராட்டஸ்டாண்ட் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்த மொழிபெயர்ப்பில் பெரும்பாலன மக்களுக்கு புரியாத வண்ணம் வார்த்தைகளைப் போட்டு மொழிபெயர்த்திருப்பார்கள்.

பைபிளில் உள்ள இது போன்ற நல்ல போதனைகள்(?) மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு மற்றும் பொது மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் கொப்பூழ், முலைகள் என்று மொழிபெயர்த்துள்ளார்கள். அந்த வசனங்களை நாம் வாசித்துக் காண்பித்த பிறகும், “இல்லை; இல்லை; அப்படி இல்லை. இல்லவே இல்லை. இதோ பாருங்கள் நாபி என்றுதான் உள்ளது; ஸ்தனங்கள் என்றுதான் உள்ளது என்று மீண்டும் மீண்டும் புராட்டஸ்டண்ட் பைபிளை எடுத்து வாசித்துக் காண்பித்து நல்ல பிள்ளைபோல நாடகமாடினர் கிறித்தவ போதகர்கள்.

நீங்கள் வாசித்தது கத்தோலிக்க பொது மொழிபெயர்ப்பு அல்ல. நீங்கள் மக்களை ஏமாற்றி பொய் சொல்லுகின்றீர்கள் என்று நாம் இறுதியில் சுட்டிக்காட்ட அவர்களது பொய் வேடம் கலைந்து கிறித்தவ பார்வையாளர்கள் மத்தியில் அவர்கள் அசிங்கப்பட்டனர்

ஆட்டம் காண வைத்த ஆபாசங்களின் பட்டியல்:

அதைத் தொடர்ந்து பைபிள் சொல்லிக்காட்டும் ஆபாச கதைகளின் பட்டியல் அள்ளிப்போடப்பட்டது.

ரூத் என்ற அதிகாரத்தில் நகோமி என்ற ஒரு பெண்மணி ரூத் என்ற பெண்மணியின் மாமியாக உள்ளார். அந்த நகோமி மாமி தனது மருமகளுக்கு ஒரு நல்ல(?) வழிகாட்டுதலை காட்டுகின்றார். போவாசு என்ற வயது போன தாத்தா ஒருவரை வளைத்துப் போடுவது எப்படி என்ற வழிகாட்டுதலை வழங்கும் நிகழ்ச்சியை பைபிள் விலாவரியாக விளக்குகின்றது.

போவாசு என்ற தாத்தா இரவில் படுத்திருக்கும் போது, நன்கு குளித்து எண்ணெய் தடவி அவரது இரு கால்களுக்கும் மத்தியில் அவரது போர்வையை தூக்கிக் கொண்டு உள்ளே தலையைவிட்டு நீ படுத்தால், நீ அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே உனக்கு சொல்வார் மருமகளே! என்று அந்த மாமி தனது மருமகளுக்கு வழங்கும் வழிகாட்டுதல்களும், அவ்வாறு போவாசு உடைய இரு கால்களுக்கு மத்தியில் போர்வையை தூக்கிக் கொண்டு ரூத் என்ற பெண்மணி படுத்த செய்தியையும் நாம் வாசித்துக் காண்பித்து இதுதான் புனித வேதமா என்று கேள்வியெழுப்பினோம்.

அதை மறுத்த அந்த போதகர்கள் கூட்டம், இரு கால்களுக்கு உள்ளே போய் படுக்கச் சொல்லி எங்கே உள்ளது? ஒரு காலுக்கு உள்ளேதான் படுக்கச் சொல்லி பைபிளில் உள்ளது. இவர்கள் வேதத்தை புரட்டுகின்றார்கள் என்று சொல்லி விளக்கமளித்தார்களே பார்க்கலாம். இப்படியுமா இவர்கள் கேடுகெட்டத்தனமாக இருப்பார்கள் என்று அனைவரும் காரித்துப்பினர்.

ஆனால் போவாசு என்பவரது இரு கால்களுக்கு மத்தியில் போர்வையைத் தூக்கிவிட்டுப் படுக்கச் சொல்லித்தான் பைபிளில் உள்ளது. இதோ அந்த வசனம்:

அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள். ரூத் 3 : 4

தலையில் குஷ்டம் வந்தால் தீட்டு தீட்டு என்று கத்த வேண்டுமாம்:

அடுத்து பைபிள் சொல்லக்கூடிய ஒரு அற்புதமான(?) சட்டம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

43. அவனுடைய மொட்டைத் தலையிலாவது அரைமொட்டைத் தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாக்கும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக் கண்டால்,

44. அவன் குஷ்டரோகி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.

45. அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, "தீட்டு, தீட்டு" என்று சத்தமிடவேண்டும். லேவியராகமம் 13 : 43 - 45

தலையில் ஒருவனுக்கு குஷ்டம் வந்தால் அவன் தனது தாடியை மூடிக்கொண்டு தீட்டு தீட்டு தீட்டு என்று கத்தினால் குஷ்டம் போய்விடும் என்று பைபிள் கூறுகின்றதே! இதுதான் இறைவேதமா எனக்கேட்க அதற்கும் பதில் இல்லை.

ஆடைக்கும், வீட்டுக்கும் குஷ்டரோகம்:

அதுபோல ஆடைக்கு குஷ்ட ரோகம் வந்தால் அதை எரிக்க வேண்டும் என்றும், வீட்டுக்கு குஷ்டரோகம் வந்தால் அதை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்றும் பைபிள் கூறுகின்றதே! இதுதான் இறைவேதமா? எனக்கேட்க தற்போது நாகர்கோவிலில் கூட புளிக்கு குஷ்டம் என்று சொல்கின்றார்கள் அதுபோலத்தான் இங்கும் சொல்லப்பட்டுள்ளது என்று அதையும் நியாயப்படுத்தினார்கள் போதகர்கள்.

அப்படியானால் அந்த குஷ்டரோகம் வந்தால் ஆடையை எரித்து, வீட்டை இடிக்க வேண்டும் என்பதற்கு விளக்கம் என்ன என்று கேட்டதற்கு பதில் இல்லை.

தீண்டாமையை போதிக்கும் பைபிள்:

பின்னும் கர்த்தர்மோசேயிடம் நீ ஆரோனோடும் பேசியதைச் சொல். உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவர்கள் தலைமுறை தோறும் கடவுளின் அப்பத்தைப் படைக்கும் படி கிட்டிவரலாகாது. குருடன், சப்பானி, முகவிகாரமுள்ளவன் அளவுக்கு மிஞ்சி நீண்ட அவையவம் உள்ளவன் கால் ஒடிந்தவன், கை ஒடிந்தவன், கூனன், அதிகம் மெலிந்தவன், பூவிழுந்த கண்ணன், சொறியன், அசருள்ளவன், விதை நசுங்கினவன் ஆகிய இவர்கள் கிட்டிவரலாகாது. (லேவியராகமம் 21:16-23)

மேற்கண்ட வசனத்தை காண்பித்து தீண்டாமையை அப்பட்டமாக போதிக்கக்கூடிய பைபிள் எப்படி கடவுளுடைய வேதமாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியதற்கு, கூனன், குருடன், நொண்டி ஆகியோர் பலி கொடுக்க இயலாத நிலையில் இருப்பார்கள். அதனால்தான் அவர்களை ஆலயத்திற்குள் வரக்கூடாது என்று கர்த்தர் சொல்லியுள்ளதாகச் சொல்லி மாட்டிக் கொண்டனர்.

அப்படியானால் பலி கொடுக்க இயலாததால்தான் அவர்களை ஆலயத்திற்குள் வரக்கூடாது என்று கர்த்தர் சொல்லியிருபாரேயானால், அதுவும் அநியாயம்தான். காரணமென்னவென்றால், கூனன், குருடனோடு சேர்த்து அங்க அவயங்கள் நீளமாக உள்ளவன் கூட தேவாலயத்திற்குள் வரக்கூடாது என்று கர்த்தர் சொல்லியுள்ளார். அப்படியானால் விவாதத்தில் கலந்து கொண்டுள்ள தங்களுக்குக் கூட மூக்கு நீளமாக உள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால் நீங்கள் கூட தேவாலயத்தில் நுழைய முடியாதே! என்று கேள்வியெழுப்பி, மூக்கு நீளமாக உள்ளவர் பலி கொடுக்க என்ன தடங்கல் உள்ளது என்று கேட்க வாயடைத்துப் போயினர் போதகர்கள்.

அதுமட்டுமல்லாமல், இந்நிலைப்பாடு ஒருவேளைக்கு சரி என்று வைத்துக் கொண்டாலும், இதுபோன்ற குறைபாடு உள்ளவர்கள் தேவாலயத்தினுள் வரக்கூடாது என்றல்லவா கர்த்தர் கூறியுள்ளார். பலி கொடுக்கக்கூடாது என்று கூறுவதுதான் சரியானதாக இருந்திருக்கும்.

மேலும் அப்படிப்பட்ட குறைபாடுள்ளவர்கள் மட்டுமல்ல; அவர்களது தலைமுறை தோறும் யாரும் தேவாலயத்திற்குள் வரக்கூடாது என்று கூறுவது அப்பட்டமான தீண்டாமைதானே என்று கேள்விகேட்க பதிலில்லாமல் திக்குமுக்காடினர் போதகர்கள்.

நாம் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளால் ஆட்டம் கண்ட கிறித்தவ போதகர்கள் கடைசியில் தங்களது வாய்களாலேயே பைபிளில் உள்ள அனைத்தும் கர்த்தரது வார்த்தைகள் என்று நாங்கள் சொல்லவில்லை.

பைபிளில் கர்த்தருடைய வசனங்களும் உள்ளன; அயோக்கியர்களது வசனங்களும் உள்ளன; சாத்தானுடைய வசனங்களும் உள்ளன; மனிதர்களது வசனங்களும் உள்ளன என்று கூறி பைபிள் இறைவேதமில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

பைபிளில் உள்ள தீவிரவாதத்தைத் தூண்டக்கூடிய வசனங்கள், அடுக்கடுக்கான ஆபாசங்கள், பொய்கள், உளறல்கள், கேவலமான சட்டங்கள், கடவுளை இழிவுபடுத்தக்கூடிய வசனங்கள் என்று இன்னும் அடுக்கடுக்கான பட்டியலை அள்ளிவீச ஆடிப்போன போதகர்கள் கலக்கம் கண்டுவிட்டனர்.

December 4, 2012, 2:16 PM

விவாதத்திலிருந்து தப்பி ஓட்டம்!

பெங்களூரிலுள்ள DIET என்கின்ற ஸலஃபுக் கொள்கையுடைய அமைப்பினர் சுன்னத் வல் ஜமாஅத்தினரை விட தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக கடுமையான விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வழிகெட்ட எல்லா இயக்கங்களையும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக திருப்பிவிடும் வேலையையும் கள்ளத்தனத்தையும் இவர்கள் செய்து வந்தனர். எனவே இவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி இவர்களிடம் நேர்வழி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியத்தை இவர்களே ஏற்படுத்திய காரணத்தால் கட்ந்த 09.09.2007 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்கள் பகிரங்க விவாதத்திற்கு இவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது விவாதத்திற்கு வராமல் ஓட்டமெடுத்த ஸலஃபுகள் கடந்த 5ஆண்டுகளாக ஓடிக்கொண்டே இருந்தனர்.

தொடர்ந்து படிக்க October 28, 2012, 6:47 PM

விவாதிக்க வேண்டிய 101 தலைப்புகள்

விவாதிக்க வேண்டிய 101 தலைப்புகள் தொடர்பாக சைபுத்தீனுக்கு 06.09.2012 அன்று அனுப்பிய  கடிதங்கள்

http://www.onlinepj.com/PDF/6.9.12.vivatham0001.JPG

http://www.onlinepj.com/PDF/101_thalaippu_1.pdf

http://www.onlinepj.com/PDF/101_thalaippu_2.pdf

http://www.onlinepj.com/PDF/101_thalaippu_3.pdfசைபுத்தீன் ரசாதி 08.09.12 அன்று மேற்கண்ட கடிதங்களுக்கு அளித்த பதில்


http://www.onlinepj.com/PDF/reply_saifudeen.JPG

September 12, 2012, 7:41 PM

ஒப்பந்தம் கையெழுத்தானது

 

சைஃபுத்தீன் ரஷாதியுடன் கடந்த 26-8-2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர்பட்டிணத்தில் 101 தலைப்புகளில் விவாதம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. அல்ஹம்துலில்லாஹ்! விவாத ஒப்பந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ் கீழ்கண்ட ஒப்பந்தத்தில் கூறியபடி கடந்த 30.8.2012 அன்று நமது தரப்பு விவாத குழுவில் இடம் பெறுபவர்கள் பட்டியல் அனுப்பப்பட்டது.  ஒப்பந்த நகலுக்கு கீழே பார்க்கவும்

தொடர்ந்து படிக்க August 27, 2012, 10:45 PM

ஷைஃபுத்தீன் ரஷாதியுடன் விவாத ஒப்பந்�

கடந்த 25 ஆண்டுகளாக பல மேடைகளில் விவாதச் சவடால் விட்டுவிட்டு நம்மிடமிருந்து ஓடி ஒளிந்து கொண்டிருந்த ஷைஃபுத்தீன் ரஷாதியுடன் விவாத ஒப்பந்தம் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 26.08.12 அன்று நடைபெற உள்ளது.

தொடர்ந்து படிக்க August 20, 2012, 11:05 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top