மவ்லூத் கூடாது - தேவ்பந்த் ஃபத்வா தமி

மீலாதும் மவ்லூதும் கூடாது - தேவ் பந்த் மதரஸா ஃபத்வாவின் தமிழாக்கம்:


உலக அளவில் ஹனபி மத்ஹபை பின்பற்றும் மக்களின் தலைமைக் கல்விக்கூடமாக தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா அமைந்துள்ளது. பல்லாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் படித்து வரும் இம்மாபெரும் ஹனபி மத்ஹபின் பல்கலைக் கழக்மான இம்மதரஸா மீலாதும் மவ்லூதும் மார்க்கத்தில் கிடையாது அவ்லியாக்கலள் அதை ஓதச் சொல்லவில்லை என்று தேவ்பந்த் மதரஸா ஃபத்வா கொடுத்துள்ளது. நாங்கள் ஹனபிகள் என்று கூறிக் கொண்டு மேற்கண்ட செயல்களைச் செய்து வருவோர் இனியாவது இதில் இருந்து திருந்திக் கொள்வார்களா

தொடர்ந்து படிக்க 28.08.2011. 12:55

சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு 3

சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு 3

முந்தைய இரண்டு தொடர்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
நடுவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு தன்னையும் உட்படுத்தி தமுமுகவையும் உட்படுத்த வேண்டும் என்று பிஜேயாகிய நான் வைத்த கோரிக்கையை ஏற்பது போல் நடித்த தமுமுக கடைசி நேரத்தில் நடுவர்கள் முன்னிலையில் விசாரணக்கு வராமல் ஓட்டம் பிடித்தது.

தொடர்ந்து படிக்க 11.08.2011. 17:12

சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு-2

சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு- தொடர் 2

முதல் தொடரை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

சுனாமி மற்றும் ஃபித்ரா வசூல் தொடர்பாக பொது விசாரணைக்குத் தயார் என்று நாம் அறைகூவல் விட்ட போது அதை தமுமுக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த விவகாரம் நடக்கும் போது நடுவர்களாக நாம் குறிப்பிட்ட ஆறு இயக்கத்தவர்களும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு நெருக்கமானவர்கள் அல்லர். மாறாக தமுமுகவுக்குத் தான் நெருக்கமாக இருந்தனர்.

தொடர்ந்து படிக்க 09.08.2011. 16:59

சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு

சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு- தொடர் -1

நீல வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள் சுனாமி விவகாரம் நடந்த போது நாம் உணர்வில் எழுதியவை. கறுப்பு வண்ணத்தில் உள்ளவை இப்போது எடுத்துக் காட்டுபவவை

தொடர்ந்து படிக்க 08.08.2011. 19:14

ஜெர்ரி தாமஸுடன் விவாத ஒப்பந்தம் கையெ

நேற்று (29-7-2011)  மாலை 5 மணிக்கு ஆரம்பித்து  இன்று (30-7-2011) காலை 4 மணி வரை அலசப்பட்டு ஜெர்ரி தாமஸுடன் கையெழுத்தான விபாத ஒப்பந்த நகல்:

Downoad in PDF English
Downoad in PDF Tamil

Downoad in Zip English
Downoad in Zip Tamil

30.07.2011. 08:59

JAQH TMMK TNTJ வரலாற்றுப் பார்வை

JAQH TMMK TNTJ  வரலாற்றுப் பார்வை

ஜாக், தமுமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு வரலாற்றுப் பார்வை

இப்பிரசுரம் தஞ்சை வல்லம் மாநாட்டின் போது ஷம்சுள்ளுஹா அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டதாகும். தவ்ஹீத் கொள்கையில் புதிதாக இணைந்துள்ள சகோதரர்களுக்கு இந்த வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக அதை நமது தளத்தில் வெளியிடுகிறோம்.

இறைவன் திருப்பெயரால்

தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி

1980களுக்கு முன்னால் தமிழக முஸ்லிம்களின் நிலையும், தமிழக உலமாக்களின் நிலையும் எவ்வாறு இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிய மாட்டார்கள்.

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை அவர்களிடமிருந்து அறவே எடுபட்டுப் போயிருந்தது. திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் அனுமதிக்கப்படாத போலிச் சடங்குகளைத் தான் இஸ்லாம் என்ற பெயரால் தமிழக முஸ்லிம்கள் செய்து வந்தனர். மத்ஹபு என்ற பெயரால் முரண்பட்டுக் கிடந்தனர். போலி ஷைகுமார்களின் கால்களில் விழுந்து வணங்குவதை பெரும் பாக்கியமாகக் கருதி வந்தனர்.

இந்தக் காலகட்டத்தில் தான் மயிலாடுதுறை அருகில் அமைந்துள்ள சங்கரன்பந்தல் என்ற கிராமத்திலிருந்து தவ்ஹீத் பொறி பற்றத் தொடங்கியது.

பைஜுல் உலூம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த அரபுக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்த இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த பி.ஷைகு அலாவுத்தீன் எனும் பி.எஸ். அலாவுத்தீன், அவரது சகோதரர் மல்லவி பி.ஜைனுல் ஆபிதீன் ஆகியோர் அந்த அரபுக்கல்லூரியில் படித்துக் கொடுப்பதோடு நின்று விடாமல் மக்களை நல்வழிப்படுத்த மாதந்தோறும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலானார்கள்.

தீன் விளக்கக் குழு என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதுடன் துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும், அவ்வூரில் நிலவிய மூடநம்பிக்கைகளை எதிர்த்து வந்தனர்.

மேலப்பாளையத்தைச் சேர்ந்த மவ்லவி ஷம்ஸுல் லுஹா, மவ்லவி முஹம்மது அலி ரஹ்மானி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி போன்றவர்களும் சங்கரன்பந்தல் சிராஜுத்தீன், அப்துல் பத்தாஹ் போன்ற நண்பர்களும் இப்பிரச்சாரத்துக்குப் பக்கபலமாக இருந்தனர்.

இவர்களில் யூசுப் மிஸ்பாஹி கொள்கையில் முரண்பட்டு ஜாக் இயக்கத்தில் இன்னும் இருக்கிறார்.

இந்த நிலையில் 1984ல் தஞ்சை நகரில் ஆற்றங்கரைப் பள்ளிவாசல் வளாகத்தில் தமிழக உலமாக்கள் சபை சார்பில் வலிமார்கள் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் உரையாற்றிய எல்லா உலமாக்களுமே தர்கா வழிபாட்டை ஊக்குவித்தும் ஆதரித்தும் பேசினார்கள். ஏகத்துவ சிந்தனைவாதிகளின் இரத்தம் சூடேற்றும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலை நியாயப்படுத்தினார்கள்.

அதைக் கண்டு கொதித்துப்போன பி.ஜைனுல் ஆபிதீன், அம்மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் அனைத்தும் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரானவை என்பதைத் தக்க ஆதாரங்களுடன் "ஒரு நாடகம் அரங்கேறியது'' என்ற ûலைப்பில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு பிரசுரம் வெளியிட்டார்.

ஒரு நாடகம் அரங்கேறியது என்ற பிரசுரத்தை வாசிக்க

அப்பிரசுரத்தால் ஆத்திரம் அடைந்த உலமாக்கள் வேன்களில் வந்து இறங்கி சங்கரன்பந்தலில் பணியாற்றும் பி.ஜைனுல் ஆபிதீனை மதஸாவில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி முறையிட்டனர். கல்லூரி நிர்வாகம் அதை ஏற்க மறுத்துவிட்டாலும் உலமாக்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதித்தது.

சங்கரன்பந்தலில் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் வேறு சில பகுதிகளிலும் பிரச்சாரம் நடத்தப்பட்டு வந்தது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் மவ்லவி கமாலுத்தீன் மதனி,

கடையநல்லூரில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி,

பேர்ணாம்பட்டில் பி.அன்வர்பாஷா, ரபீக் அஹ்மது தலைமையிலான குழுவினர்,

கோவையில் அப்துல் மாஜித் உமரி,

திருச்சியில் அப்துல் மஜீத், அப்துல் சமத் தலைமையிலான குழுவினர்,

சென்னையில் உஸ்மான் கான் தலைமையிலான குழுவினர்

பிரச்சாரம் செய்து வந்தனர்.

இவர்களில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி கொள்கையில் உறுதியாக நின்று மரணித்து விட்டார். மவ்லவி கமாலுத்தீன் மதனி, ரபீக் அஹ்மது, அப்துல் மாஜீத் உமரி, அப்துல் மஜீத், அப்துல் சமத், உஸ்மான் கான் ஆகியோர் கொள்கையில் முரண்பட்டு ஜாக் இயக்கத்தில் இருந்து வருகின்றனர். அன்வர் பாஷா அவர்கள் இன்று வரை தடம் மாறாமல் உறுதியுடன் நம்மோடு இருந்து வருகிறார்.

சங்கரன்பந்தலில் பி.ஜைனுல் ஆபிதீன் தெளிவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டு மேற்கண்ட பகுதிகளில் உள்ளவர்கள் அவரைப் பேச்சாளராக அழைத்து பொதுக் கூட்டங்கள் நடத்தினார்கள். இதனால் அவர்களுக்கிடையே அறிமுகமும், ஒருங்கிணைப்பும் ஏற்பட்டது.

இதே காலகட்டத்தில் துபையில் இஸ்லாமிய விழிப்புணர்வு மையம் ..சி என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இவர்களும் தமிழ் கூறும் துபை வாழ் மக்களிடம் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

மவ்லவி முஹம்மது இக்பால் மதனி, லெப்பைக்குடிகாட்டைச் சேர்ந்த ஜஹாங்கீர், கள்ளக்குறிச்சி சுலைமான், மேலப்பாளையம் பழ்லுல் இலாஹி உள்ளிட்டவர்கள் இஸ்லாமிய விழிப்புணர்வு மையத்தை நடத்தி வந்தனர்.

(இவர்களில் ஜஹாங்கீர் கொள்கையில் உறுதியாக நின்று மரணித்து விட்டார். மற்றவர்கள் கொள்கையில் முரண்பட்டு நமக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர்.)

நஜாத் மாத இதழ்

தமிழகத்தின்  சில பகுதிகளில் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்தாலும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் எழுத்தும், பேச்சும் பாமரர்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் தக்க ஆதாரங்களுடன் இருந்ததை ஒலி நாடாக்கள் மூலமும், துண்டுப் பிரசுரம் மூலமும் துபை இஸ்லாமிய விழிப்புணர்வு மையத்தினர் கண்டறிந்தனர்.

சங்கரன்பந்தல் மதரஸாவில் தொடர்ந்து பணியாற்ற முடியாத அளவுக்கு கெடுபிடிகள் அதிகமானதால் அங்கிருந்து வெளியேறும் எண்ணத்தில் இருந்த பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை ..சி இயக்கத்தினர் நேரிலும் தபால் மூலமும் தொடர்பு கொண்டனர்.

"உங்கள் எழுத்தாற்றலைப் பயன்படுத்தி ஏன் மாத இதழ் ஒன்றை நடத்தக் கூடாது'' என்று அவர்கள் பி.ஜைனுல் ஆபிதீனிடம் கேட்டனர். தவ்ஹீத் அடிப்படையில் நடத்தப்படும் பத்திரிகைகளை இலாபகரமாக நடத்த முடியாது என்று பி.ஜே சொன்ன போது "மாதம் மாதம் எவ்வளவு நட்டம் ஏற்படுகிறதோ அதை நாங்கள் தந்து விடுகிறோம். நீங்கள் மதஸாவை விட்டு வெளியேறி பத்திரிகை நடத்த முன் வாருங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர்.

"எழுதுகின்ற பணியை மட்டும் தான் என்னால் ஏற்க முடியும், பண விவகாரத்தை வேறு யாரிடமாவது ஒப்படைத்துக் கொள்ளுங்கள்'' என்று பீ.ஜே திட்டவட்டமாகக் கூறி விட்டார்.

அதன் பின்னர் திருச்சி அப்துல் சமத், அப்துல் மஜீத் தலைமையில் செயல்பட்டு வந்த திருச்சியில் வாட்ச் ரிப்பேர் கடை வைத்திருந்த அபூ அப்துல்லாஹ் என்பவரை நிர்வாகம் செய்ய ..சி இயக்கத்தினர் நியமித்தனர்.

..சி யின் சார்பில் அந்நஜாத் என்ற மாத இதழ் துவக்கப்பட்டது. அதன் எழுத்துப் பொறுப்பு முழுவதும் பீ.ஜே.யைச் சேர்ந்தது. இந்த இதழ் தமிழகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் குடும்பத்திற்காக ஏராளமான சந்தாக்களை அனுப்பி பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினார்கள். இதன் காரணமாகவே தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களை நஜாத் கூட்டம் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

பத்திரிகையின் மாபெரும் வளர்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. ..சிக்கும் அபூ அப்துல்லாஹ்வுக்கும் மத்தியில் பண விஷயத்தில் விவகாரம் ஏற்பட்டது. ..சி பக்கம் நியாயம் இருந்ததால் ..சி பக்கம் பீ.ஜே நின்றார். மற்ற ஆரம்பகால பிரச்சாரகர்களும் ஐ.ஏ.சி பக்கம் நின்றனர்.

அபூ அப்துல்லா நஜாத் பத்திரிகையைத் தனது சொந்தப் பத்திரிகை என்று சட்டப்படி பதிவு செய்து கொண்டதால் அவர்களால் நியாயம் பெற முடியவில்லை. அந்த அநியாயத்துக்குத் துணை போகக் கூடாது என்று பீ.ஜே நஜாத் பத்திரிகையிலிருந்து வெளியேறினார். பல்லாயிரம் பத்திரிகைகள் விற்பனையை சில நூறு பிரதிகளில் கொண்டு வந்த அபூ அப்துல்லா அதைக் கோமா ஸ்டேஜில் நிறுத்தினார். அவரும் அவருடன் இருந்த சிலரும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டனர்.

ஜாக் உதயம்

அதே காலகட்டத்தில் தான் தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே பிரச்சாரம்  செய்தவர்கள் கூட்டமாக ஒரு அமைப்பை உருவாக்கி ஏன் செயல்படக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

அனைவரும் திருச்சியில் உள்ள தேவர் ஹாலில் (இது இப்போது இல்லை) கூட்டப்பட்டு அஹ்லுல் குர்ஆன் வல்ஹதீஸ் (ஆக்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பி.ஜைனுல் ஆபிதீன் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்த இயக்கம் ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (ஜாக்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஓராண்டுக்குப் பின் தனக்கு தலைமைப் பொறுப்பு வேண்டாம். பொறுப்பு இருப்பதால் அதிகமான பிரச்சார நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியவில்லை என்று பீ.ஜே மறுத்து கமாலுத்தீன் மதனியைத் தலைவராக்குமாறு வலியுறுத்தினார். மக்கள் இதைக் கடுமையாக எதிர்த்தாலும் பீ.ஜே தனது நிலையை மாற்றிக் கொள்ள விரும்பாததால் வேண்டா வெறுப்பாக கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார்.

அதன் பின்னர் கமாலுத்தீன் தலைமையில் பி.ஜைனுல் ஆபிதீன், சம்சுல்லுஹா, அலி ரஹ்மானி உள்ளிட்ட பல அறிஞர்கள் தீவிரப் பிரச்சாரகர்களாகச் செயல்பட்டனர்.

மவ்லவி அப்துல்லா என்பவர் மதுரையில் புரட்சி மின்னல் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி வந்தார். ஏகத்துவப் பிரச்சாரத்தால் கவரப்பட்ட அவர் தனது பத்திரிகையை ஏகத்துவக் கொள்கையைப் பிரதிபலிக்கும் இதழாக நடத்த முன்வந்தார். ஏற்கனவே அந்நஜாத் பத்திரிகையை இழந்து புதிய பத்திரிகை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்த ..சி  இயக்கத்தினர் மவ்லவி அப்துல்லாஹ்வின் விருப்பத்தை ஏற்று புரட்சி மின்னலைத் தத்தெடுத்தனர். பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் உலமாக்களுடைய ஆக்கங்களைத் தாங்கி புரட்சி மின்னல் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

எதிர்ப்பு வலுத்தது

மேடைப் பிரச்சாரம் மூலமாகவும் புரட்சி மின்னல் பத்திரிகை வழியாகவும முடுக்கி விடப்பட்ட தீவிரப் பிரச்சாரம் காரணமாக மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டது போல் எதிர்ப்பும் அதிகமானது.

பள்ளிவாசலில் தொழத்தடை, ஊர் நீக்கம், அடக்கு முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன.

உலமாக்களால் தூண்டி விடப்பட்ட மார்க்கம் அறியாத மக்கள் தவ்ஹீத் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.

பீ.ஜே அவர்கள் முத்துப்பேட்டை, நாகூர், மதுரை, சென்னை, முரார்பாத், பொதக்குடி, பண்டாரவாடை, லெப்பைக்குடிக்காடு, தேங்காய்ப் பட்டிணம், கோவை எனப் பல ஊர்களில் தாக்கப்பட்டார். மேலப்பாளையத்தில் கொலை முயற்சியில் மேடையேறி அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். மற்ற பிரச்சாரர்களும் ஆங்காங்கே தாக்கப்பட்டனர்.

அந்தத் தடைகளைக் கண்டு தவ்ஹீத் பிரச்சாரர்களும் கொள்கைவாதிகளும் நிலை மாறவில்லை. முன்பை விட இன்னும் உறுதியுடனும், தீவிரமாகவும் பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.

நன்றாகப் போய்க் கொண்டிருந்த பிரச்சாரத்தில் அரபு நாட்டு நிதியை மையமாக வைத்து பிரச்சனை தலைதூக்கியது.

ஜாக் தலைவராக இருந்த கமாலுத்தீன் மதனியும், மதீனாவில் படித்த மற்ற மதனிகளும், சவூதி அரசிலிருந்து சம்பளம் பெற்று வந்தனர். இந்தத் தொடர்பைப் பயன்படுத்தி சவூதி அரசுடன் தொடர்பு கொண்டு ஜாக் இயக்கத்துக்கு நிதியாரங்களைப் பெற முயன்றனர். எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மேடையில் அரபு மொழியில் பெரிய பேனரைக் கட்டி அதை வீடியோவாக்கி அதை சவூதிக்கு அனுப்புவது மட்டுமே குறிக்கோளாக ஆனது.

அரபு நாட்டிலிருந்து உதவிகள் பெற வேண்டாம் என்று பீ.ஜேயும் மதனிகள் அல்லாத மற்ற பிரச்சாரகர்களும் மறுப்புத் தெரிவித்ததால் பீஜேயை அழைக்காமலே ஆலோசனைக் கூட்டம் நடக்கலானது.

அரபு நாட்டுப் பணம் வர ஆரம்பித்துள்ளது என்பதற்காக இயக்கத்திலே சேர்ந்தவர்கள் சுய ஆதாயத்துக்காக அரபுநாட்டு நிதி உதவி பெறுவதை ஆதரித்து தூபம் போட்டனர். பள்ளிவாசல், மதரஸா, நோன்புக் கஞ்சி, தஃவா என்று பல வகைகளில் இலட்சம் இலட்சமாகப் பணம் வர ஆரம்பித்தது. என்ன வரவு என்பதும், என்ன செலவு என்பதும மதீனாவில் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் தான் தெரியுமே தவிர, ஜாக் மாநில நிர்வாகிகளுக்குக் கூட தெரியாத நிலை ஏற்பட்டது.

தங்களுக்குக் கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக தவ்ஹீத்வாதிகளே இல்லாத ஊரிலும் பள்ளிவாசல் கட்டப் பணம் வாங்குவது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக ஆனது. ஆனாலும் சிரமப்பட்டு உருவாக்கிய இயக்கம் பாழாகி விடக்கூடாது என்பதற்காக பிரச்சாரகர்கள் உள்ளிருந்து போராடி வந்தனர்.

கோவை அய்யூப் உள்ளிட்ட பலர் மீது பொருளாதார மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் பீ.ஜே யால் எடுத்துக் காட்டப்பட்டும் அவர் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டார். அதற்கு கமாலுத்தீன் மதனியும் உடந்தை என்பது உறுதியானது.

இதை பின்வரும் லின்குகளில் இருந்து அறியலாம்

ஜாக் பிரிவினை ஏன்

கோவை அய்யூப் ஒரு புளுகன்

அரபு நாடுகளில் நிதி உதவி பெறக்கூடாது என்பதில் பிரச்சனை ஆரம்பித்தாலிம் அதன் பின்னர் மேலும் பிரச்சனைகள் உருவாயின. அதாவது கணக்கு வழக்குகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். அனைத்து சகோதரர்களுக்கும் உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டு அவர்களுக்கு தட்டிக் கேட்கும் அதிகாரம் இருக்க வேண்டும். தலைமைப் பொறுப்பு நிரந்தரமாக ஒருவரிடம் இருக்கக் கூடாது என்பன போன்ற பிரச்சனைகள் உருவாயின.

அரபு நாடுகளில் உதவி பெறக் கூடாது;

நிரந்தரமாக பொறுப்பில் இருக்கக் கூடாது;

கொள்கைவாதிகளுக்கு தட்டி கேட்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்;

அதற்காக உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும்

என்பன போன்ற கோரிக்கைகளை கமாலுத்தீன் மதனி ஏற்க மறுத்தார். இதனால் இவர்களுடன் சேர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.

மற்ற நிர்வாகிகளுக்குக் கூடத் தெரியாமல் வரவு செலவு வைப்பது முறையா? நீங்கள் மரணித்துவிட்டால் என்னவாகும் என்று கமாலுத்தீன் மதனியிடம் பீ.ஜே நேரடியாகக் கேட்ட போது, "எல்லாக் கணக்குகளும் என் மனைவிக்குத் தெரியும்'' என்று கமாலுத்தீன் மதனி பதிலளித்தார். இவர் நிர்வாகிகளிடம் கூட கணக்குக் காட்டத் தயார் இல்லை என்றால், இதைவிட மோசடி இருக்க முடியாது என்ற எண்ணம் தவ்ஹீத் பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்த அனைத்து பிரச்சாரகர்களுக்கும் ஏற்பட்டது.

இதே காலகட்டத்தில் தான் அல்ஜன்னத் என்ற மாத இதழ் துவக்கப்பட்டது. ..சி இயக்கத்தின் ஆதரவில் புரட்சி மின்னல் நடத்தப்பட்டாலும் தன் பொறுப்பில் ஒரு இதழ் இருந்தால் நல்லது; இன்னும் அழுத்தமாக செய்திகளைச் சொல்ல முடியும என்று நினைத்து பீஜேயால் அல்ஜன்னத் மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது.

பீ.ஜேயின் சொந்தப் பத்திரிகையாக அவரது சொந்தப் பொறுப்பில் அல்ஜன்னத் நடத்தப்பட்டது. அதில் கிடைக்கும் லாப நட்டம் பீ.ஜேயைச் சேர்ந்தது என்ற அடிப்படையில் தான் அல்ஜன்னத் நடத்தப்பட்டது.

பத்திரிகையின் விற்பனை அதிகமாக இருந்தாலும், பத்திரிகையின் ஏஜெண்டுகள் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் நாளுக்கு நாள் நட்டம் அதிகரித்தது. இனிமேல் தொடர்ந்து நடத்துவது என்றால், மக்களிடம் நன்கொடை திரட்டித் தான் நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. நன்கொடை கேட்டு மக்களிடம் அறிவிப்புச் செய்தால் கடந்த கால நட்டத்தையும் ஈடு செய்யலாம். இனியும் நட்டமில்லாமல் நடத்தலாம் என்று நண்பர்கள் ஆலோசனை கூறினார்கள்.

பத்திரிகையின் லாப நட்டம் ஜமாஅத்தைச் சேர்ந்தது என்றால், நன்கொடை கேட்கலாம். எனக்குச் சொந்தமான பத்திரிகை எனும் போது நன்கொடை கேட்க மாட்டேன் என்று பீ.ஜே மறுத்து விட்டார். நான் ஆக்கங்களை எழுதித் தருகிறேன்; ஜாக் இதன் உரிமையைப் பெற்றுக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளட்டும் என்று பீ.ஜே விட்டுக் கொடுத்தார். இதற்காக எந்தத் தொகையையும் அவர் கேட்கவில்லை.

இதன் பின்னர் ..சி யின் சார்பில் புரட்சி மின்னலும், ஜாக் சார்பில் அல்ஜன்னத்தும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வலம் வந்தன. பின்னர் புரட்சி மின்னல் இதழ் அல்முபீன் என்று  பெயர் மாற்றப்பட்டது. அதுவே தற்போது ஏகத்துவம் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் ஷிர்க், பித்அத், லஞ்சம், லாட்டரி, சினிமா போன்ற தீமைகளை மட்டுமே எதிர்த்துப் பிரச்சாரம் அமைந்தது. அரசியல், சமுதாயப் பிரச்சனைகளில் நாம் ஆர்வம் காட்டவில்லை.

சமுதாயப்பணியில் தவ்ஹீத் ஜமாஅத்

பாபரி மஸ்ஜிதும் பயண மாற்றமும்

இப்படியே தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணம் தொடர்ந்தது. காலம் எனும் சாலையில் 89,90,91 என்ற மைல் கற்களைத் தாண்டி 92 ஆம் ஆண்டில் அந்த நிகழ்வு நிகழ்ந்தது. 1992, டிசம்பர் 6 ஆம் தேதி அன்று பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டது தான் அந்த நிகழ்வு. பட்டப்பகலில் சங்பரிவார பயங்கரவாதிகளால் பள்ளிவாசல் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

உடைக்கப்பட்டது பள்ளிவாசல் மட்டுமல்ல! சமுதாயத்தின் முதுகெலும்பும் தான். சமுதாய இயக்கங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த லீக்குகள் சமுதாயத்தைக் காக்கின்ற ஆயுதங்களாகவும், சமுதாயத்தின் மானம் காக்கும் ஆடைகளாகவும் இருக்கத் தவறிவிட்டன.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகும் கேரளாவில் முஸ்லிம்லீக், காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து அமைச்சர் பதவியை அனுபவித்துக் கொண்டிருந்தது. இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயம், தான் ஒரு அனாதை என்பதை உணர்ந்து கொண்டது.

இத்தகைய காரணங்களால் முஸ்லிம் தலைவர்கள் சமுதாயத்தில் செல்லாக் காசானார்கள். செல்லரித்துப் போனார்கள். இந்த இயக்கங்கள்  அவரச சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருந்ததால் கேரளாவில் நாஸர் மஃதனி போன்றோர் சமுதாயப் பணி செய்யக் களமிறங்கினார்கள்.

இதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன் விருப்பமின்றியே ஒரு திருப்பம் திணிக்கப்பட்டது. சமுதாயப் பிரச்சனைகளில் தலையிட்டே ஆக வேண்டும் என்பது தலைவிதியானது.

அதுவரை தவ்ஹீத் என்ற இலக்கை மட்டும் நோக்கிப் பயணம் செய்த தவ்ஹீத் ஜமாஅத், அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் சமுதாயப் பிரச்சனைகளையும் கையில் எடுத்தாக வேண்டும் என்று முடிவுக்கு சகோதரர் பி.ஜே வந்தார். தானாக வந்தார் ன்று சொல்வதை விட அந்த முடிவுக்குத் தள்ளப்பட்டார்.

தமிழகத்தில் தலைகாட்டிய பி.டி.பி

நாஸர் மஃதனியின் உணர்வுப்பூர்வமான உரையில் மக்கள் கவரப்பட்டனர். மக்களிடம் அப்படியொரு தேட்டமும், தணியாத தாகமும் இருந்தது. அதனால் அவரது கட்சிக்கொடி கேரள எல்லையைத் தாண்டி தமிழகக் கம்பங்களிலும் பறக்க ஆரம்பித்தது. அந்த அளவுக்குத் தமிழக முஸ்லிம் சமுதாயத்திலும் ஒரு தேட்டம் இருந்தது. பி.டி.பி (பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் பார்ட்டி- மக்கள் ஜனநாயகக் கட்சி) என்ற அவரது கட்சிக்கு தமிழகத்திலும் செல்வாக்கு ஏற்பட ஆரம்பித்தது.

ஆனால் நாஸர் மஃதனி அவர்கள் அப்போது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கொள்கையில் இருந்தார். அவரது உரை, யாஸய்யதீ, யாரசூலுல்லாஹி என்ற இணைவைப்புக் கவிதைகளுடனே துவங்கும். இதனால் அவரது இயக்கம் தமிழகத்தில் வலுப்பெறுவது தவ்ஹீத பிரச்சாரத்துக்குப் பின்னடைவாக அமையும் என்ற கவலை தவ்ஹீத் சகோதரர்களுக்கு ஏற்பட்ட்து.

ஆனால் தவ்ஹீத்வாதிகளுக்கு சிரமம் தராமல் பிடிபியின் முடிவுரையை நாசர் மதனி தானே எழுதினார். சமுதாயப் போர்க்களத்தில் ஒரு காலை இழந்தும் சிங்கமாய் கர்ஜித்துக் கொண்டிருந்த அவர் சிகரத்தைத் தொடவிருந்தார். ஆனால் அரசியல் கட்சிகளுடனான அவரது கூட்டணி அவரை ஏறிய அதே வேகத்தில் குப்புறத் தள்ளியது. முஸ்லீக் செய்த அதே பிழையை இவரும் செய்தார். அதனால் அதன் விளைவை அவர் சந்திக்க நேரிட்டது.

ஜிஹாத் கமிட்டி

கேரளத்தில் நிலவிய வெற்றிடத்தை நிரப்புவதற்கு நாஸர் மஃதனி தேவைப்பட்டது போலவே தமிழகத்திற்கு ஒருவர் தேவைப்பட்டார். பழனிபாபா அந்த வெற்றிடச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார்.

இவரிடம் பேச்சுத்திறமை இருந்தது. ஆனால் ஏகத்துவம் இல்லை. தெளிவான இஸ்லாமியக் கொள்கை இல்லை. பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் ஒருவரை எழுப்பி, உனக்கு ஐந்து கலிமா தெரியுமா? என்று கேட்பார். இந்த ஐந்து கலிமாக்கள் என்பதெல்லாம் மார்க்கத்தில் இல்லை, இதைத் தெரிந்திருந்தால் தான் ஒருவர் முஸ்லிம் என்பதும் இல்லை என்ற மார்க்க ஞானம் கூட அவருக்கு இருக்கவில்லை.

முன்கர் நகீர் கேள்வி கேட்டால் நான் அவரிடம் எதிர்க் கேள்வி கேட்பேன். எனது பேச்சு குற்றம் என்று அல்லாஹ் என்னை நரகில் போட்டால் போடட்டும் என்றெல்லாம் அவரது மேடைப் பேச்சு அமைந்தது.

எனினும் மக்களுக்கு ஒரு தேட்டம் இருந்தது. ஒரு தேவை இருந்தது. அந்த தேட்டத்தையும், தேவையையும் பழனிபாபா நிறைவேற்றினார்.

அவரது பேச்சில் அனல் பறக்கும். ஆங்கிலம் ஆட்டம் போடும். பிசிறடிக்காத அந்தப் பேச்சு இளைஞர்களைத் தன் வசப்படுத்தியது. அதன் விளைவு அவர் சென்று வரும் ஊர்களில் கலவரத் தீ பற்றிக் கொள்ளும் என்றானது.

அந்தக் கலவரத் தீயால் உயிர்களும், உடைமைகளும் சேதமாகும். எனவே அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி சிறைவாசம்!

இங்கே நாம் இதைக் குறிப்பிடக் காரணம், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு ஒரு வெற்றிடம் நிலவியது. அதை நிரப்புவதற்கு அப்போது யாருமில்லை. சமுதாயத்திலிருந்து யார் அந்த வெற்றிடத்தை நிரப்ப முன்வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் காத்திருந்தது. அவரிடம் மார்க்கம் இருக்கின்றதா? என்ற தரத்தையெல்லாம் யாரும் பார்க்கத் தயாரில்லை.

சமுதாய உணர்வு, வீரம் உள்ள எவர் வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் தயாராக இருந்தது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

சத்தியத்திற்கு ஜாக்; சமுதாயத்திற்கு பி.டி.பி

இந்த வெற்றிடம் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் ஒரு கேள்விப் புயலை மீண்டும் மீண்டும் கிளப்பியது. அதிலும் குறிப்பாக ஜாக்கின் மேல்மட்ட நிர்வாகக் குழு உறுப்பினருக்குக் கூட பி.டி.பி மீது பகிரங்கக் காதல்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் பாணியில், அவரது பாதையில், தங்கள் பெற்றோர், உற்றாரைப் பகைத்துக் கொண்டு ஒன்று கூடியிருக்கும் ஓர் இயக்கத்தில், அதிலும் குறிப்பாக அதை வழிநடத்தும் உயர் பொறுப்பிலிருந்து கொண்டு, ஷிர்க்கைக் கொள்கையாகக கொண்ட பி.டி.பி தலைமை மீது காதல் கொள்கிறார்; புகழ்கிறார் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் வெற்றிடம் என்ற கோளாறு தான்.

தவ்ஹீத் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடமே இந்த நிலை என்றால் தவ்ஹீத் இயக்கத்தில் உள்ள சாதாரண உறுப்பினர்களின் நிலை என்ன? உண்மையில் அவர்களிடமும் பி.டி.பியில் ஈடுபாடு இருந்தது. இன்னும் சிலருக்கு ஜிஹாத் கமிட்டியின் மீது நாட்டம் இருந்தது. இது தான் பி.ஜேவை சமுதாயப் பிரச்சனையை நோக்கி கொண்டு சென்றது.

அப்போதிலிருந்து அவரது மேடைப் பேச்சுக்கள் சமுதாயப் பிரச்சனையையும் மையமாகக் கொண்டு சுழன்றதுமத்திய, மாநில அரசுகள், அரசியல்வாதிகள், கட்சிகள் முஸ்லிம்களுக்குச் செய்த துரோகங்களைத் தோலுரித்துக் காட்டியது.

பழனிபாபா, நாஸர் மஃதனி போன்று மக்களின் உணர்ச்சிகளை மட்டும் தூண்டி விடாமல், மக்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைத்தது. விடிவு காலம் இல்லை என்று விரக்தியில் வீழ்ந்திருந்தவர்களை வீறு கொண்டு எழ வைத்தது. அத்துடன், சமுதாய வெற்றி என்பது சத்தியக் கொள்கை மூலமே சாத்தியம் என்பதை உணர்த்தி, மக்களை அசத்தியத்திலிருந்து சத்தியப் பாதைக்கு கொண்டு வந்தது.

சத்தியப் பேச்சுடன் சமுதாயப் பேச்சையும் கலந்து கொடுக்க ஆரம்பித்த மாத்திரத்தில் ஜாக் இயக்கம் பல பரிமாணங்களில் வளர்ச்சி கண்டது. இதனால் சமுதாய மக்கள் நம் மீது கொண்டிருந்த வெறுப்பின் அளவு மிகப் பெரிய அளவில் சரிந்தது.

ஆடியோ, வீடியோ அணிவகுப்பு

அந்தக் கட்டத்தில் வெளிநாடுகளில் இளைஞர் வட்டாரங்களில் மிக வேகமாக வலம் வந்தவை பழனிபாபா அவர்களின் ஒலி நாடாக்கள் தான். அந்த இடத்தை பி.ஜேயின் ஒலி நாடாக்கள் பிடித்தன. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! ஆடியோ,வீடியோ கேஸட்டுகள் வளைகுடா நாடுகளில் சமுதாய உணர்வுள்ள மக்களிடம் அணிவகுத்தன.

பி.ஜேயின் இந்த சத்தியப் பேச்சு அரசியல்வாதிகளையும், அதிகாரவர்க்கத்தினரையும் ஓர் உலுக்கு உலுக்கியது. தமிழகத்தையே குலுக்கியது.

யாரையும் தடாவில் கைது செய்யலாம் என்ற ஒரு குட்டி அவசரநிலைப் பிரகடன நிலை மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த கால கட்டத்தில் பி.ஜே பேசிய பேச்சுக்கள் ஓர் அக்னிப் பிரவேசமாகும்.

சத்தியப் பிரச்சாரத்துடன் சமுதாயப் பிரச்சனையையும் கையில் எடுத்ததால் மத்திய, மாநில அரசுகளின் கழுகுப் பார்வைக்கும் பி.ஜே ஆளானார். அதனால் தான் இதை ஓர் அக்னிப் பிரவேசம் என்று குறிப்பிட வேண்டியுள்ளது.

ஆனால் அதுவும் அழைப்புப் பணிக்கு அடுக்கடுக்கான பலன்களைத் தந்தது. அதிகமான ஆட்களை சத்தியத்தில் கொண்டு வந்து சேர்த்தது. இது, சத்தியப் பேச்சு என்ற ஆயுதத்தால் கிடைத்த வெற்றியாகும். அடுத்தது எழுத்துப் பணி!

மாத இதழ் அல்ல! மந்திர இதழ்!

தவ்ஹீத் ஜமாஅத்தினரின் கையில் இருந்த ஒரே ஒரு மாத இதழ் அல்ஜன்னத் தான். அன்று அது மந்திர இதழாக இருந்தது. அரசியல், சமுதாயப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு, அதில் பி.ஜே தீட்டிய நுழைவாயில் (தலையங்கம்) பகுதி வாசகர்களின் உள்ளங்களை சத்தியத்தின் பக்கம் வளைத்துப் போட்டது.

சமுதாய மாற்றத்திற்கு தவ்ஹீத் கொள்கை தான் அவசியம் தேவை என்ற சிந்தனையை அவர்களின் உள்ளங்களில் பதிவு செய்தது. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அவ்விதழ், அவர்களைச் சத்தியத்தின் பக்கம் வரவழைத்தது.

(இன்று இவ்விதழ் குர்ஆன், ஹதீஸ்  ஆகிய இரண்டு அடிப்படைகளை விட்டு விட்டு, அதற்கு எதிரான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது வேறு விஷயம்.)

தவ்ஹீத்வாதிகளின் தடா எதிர்ப்புப் பேரணி

பேச்சு, எழுத்து என்ற இவ்விரு ஆயுதங்களைக் கொண்டு அல்லாஹ்வின் அருளால் நடத்திய அக்னிப் பிரவேசத்தின் உச்சக்கட்டம் தான், தடா எதிர்ப்புப் பேரணி! "இம்' என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற அடிப்படையில் இந்தியாவில் பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சில சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்கள் சரமாரியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

தமிழகத்தில் ஒரு குட்டி அவசர நிலைப் பிரகடனம் தான் அப்போதைய ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றது என்று உறுதியாகக் குறிப்பிடலாம்.

ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து சமுதாயமே குரல் கொடுப்பதற்கு அஞ்சிய காலம் அது! அடங்கிப் போன காலம் அது! காவல் துறையின் கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த காட்டு தர்பார் அது!

குரல் கொடுப்பவரின் குரல்வளை நெறிக்கப்படும். கூட்டம் சேர்ப்பவரின் குறுக்கு உடைக்கப்படும். இக்கால கட்டத்தில் தான் மேலைப்பாளையத்தில் திருக்குர்ஆன் மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற தடா எதிர்ப்புப் பேரணி!

அனுமதி மறுத்த அன்றைய தலைமை

இந்தப் பேரணி நடத்துவதற்கு அன்றைய தலைமையிடம் அனுமதி கோரிய போது கமாலுத்தீன் மதனி அனுமதி தர மறுத்தார். நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு அனுமதி கிடைத்தது.

சமுதாய இயக்கங்கள் சமாதி ஆன பின், சத்திய இயக்கமான தவ்ஹீத் ஜமாஅத் (ஜாக்) நடத்திய இந்தப் பேரணியில் இளைஞர் பட்டாளம் குவிந்தது.

நஜாத்காரன், நஜாத்காரன் என்று நம்மைத் தூரவைத்த, தூக்கி எறிந்த, தூற்றி எறிந்த சுன்னத் வல்ஜமாஅத்தினர் சாரை சாரையாக அணிவகுத்தனர். சிறைக் கைதிகளை விடுவிக்கக் சொல்லி சிங்கங்களாய் கர்ஜித்தனர். பெண்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டது அந்தப் புது அத்தியாயமாகும்.

தமிழகத்தில் தடாவை எதிர்த்து யாரும் குரல் உயர்த்தாத கால கட்டத்தில், இந்தத் தாடா எதிர்ப்புப் பேரணியில் தங்கள் குழந்தை குட்டிகளுடன் தாய்மார்கள் கலந்து கொண்டது அதிகார வர்க்கத்திற்கு ஓர் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் அமைந்தது.

தமிழகம் எங்கும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்களில் பெருமளவு பெண்கள் பங்கேற்பதற்கு அடிப்படையாகவும், அஸ்திவாரமாகவும் அமைந்தது இந்த தடா எதிர்ப்புப் பேரணி தான்.

அல்லாஹ்வின் அருளால் அன்று தடா எதிர்ப்புப் பேரணியில் அடியெடுத்து வைத்த தாய்மார்கள் குடந்தை இட ஒதுக்கீட்டுப் பேரணி, சிறை நிரப்பும் போராட்டம் வரை பங்கெடுத்து, தமிழகத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முஸ்லிம் இயக்கங்களில் தாய்மார்களை அதிகமாகக் கொண்டிருக்கும் அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத் தான் என்ற தனிப் பெயரைப் பதிவு செய்வதற்கு அவர்கள் காரணமாக அமைந்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாக!

பொதுசிவில் சட்டம் என்ற புது சதித்திட்டம்

இப்படி தடாவை எதிர்த்து ஒரு போர் நடந்து கொண்டிருக்கும் போதே மீண்டும் ஒரு போர் முழக்கம் செய்ய வேண்டிய புது சோதனை உருவெடுத்தது.

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்ட பின், உடைந்து கிடந்த சமுதாயத்தை மேலும் உடைப்பதற்கு ஒரு புதுப்பிரச்சனை பூதகாரமாகக் கிளம்பியது. புயலாகப் புறப்பட்டது. அது தான் பொது சிவில் சட்டம்.

சமுதாயம் மரண மவுனத்தில் கிடந்த சந்தர்ப்பத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும்படி சுப்ரீம் கோர்ட், மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

இப்படி ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் வெளியிட்ட மாத்திரத்திலேயே அதைச் சமுதாயம் மிருக பலம் கொண்டு எதிர்த்தாக வேண்டும். அவ்வாறு எதிர்க்க வேண்டுமென்றால் சமுதாயம் அதன் தீமையை நன்றாக விளங்கியிருக்க வேண்டும்.

பொது சிவில் சட்டத்தின் பூதாகரமான பாதகங்களை சமுதாயத்திற்குப் புரிய வைக்கும் பணியை யாரும் செய்யவில்லை. இந்த சமயத்தில் தமிழகத்தில் இந்தப் பணியை தவ்ஹீத் ஜமாஅத் தான் செய்தாக வேண்டிய நிலை.

அரசியல் பண்டிதர்கள், அரசியல் ஞானம் பெற்றவர்கள், அரசியல் சட்ட மேதைகள் என்று யாரும் அன்று தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லை. அதிலும் பி.ஜே களமிறங்கினார்.

பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு

என்ற கட்டுரை தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

சட்டம் படித்த வழக்கிறஞர்களும் விளக்குவதற்குத் தாளம் போடும் இந்தப் பொது சிவில் சட்டத்தைப் பாமரனுக்கும் விளங்கும் வகையில் மிக எளிய பரிமாணத்தில் சகோதரர் பி.ஜே அளித்திருந்தார்.

எழுத்தளவில், ஏட்டளவில் நின்று விடாமல் பொதுக் கூட்டங்களிலும் பி.ஜே உரை நிகழ்த்தினார். பொது சிவில் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் வியக்கின்ற அளவில் அவரது உரை அமைந்திருந்தது. இந்த உரை ஒளி. ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு உலகெங்கும் வாழும் தமிழ் முஸ்லலிம்களைச் சென்றடைந்தது.

வீடியோ வடிவிலும்

வெளியிடப்பட்ட்து

இந்தப் பணியை அன்று எந்த இயக்கமும் செய்யவில்லை. தமிழக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் தான் இதை மக்களிடம் கொண்டு சேர்த்தது.

பொது சிவில் சட்டம் என்பது முஸ்லிம்களின் பிணத்தின் மீது தான் அமலாகும் என்ற பேச்சு மத்திய அரசின் காதில் விழுந்தது. அதனால் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுக்கு அது செவிசாய்க்கவில்லை.

இப்படிப் பொது சிவில் சட்டத்தைப் பற்றிய ஒரு பொது விழிப்புணர்வை அன்று மக்களிடம் ஊட்டியதும் உணர்த்தியதும் தவ்ஹீத் ஜமாஅத் தான். பொது சிவில் சட்டத்திற்கு எதிரான இந்தப் போர் முழக்கம், முஸ்லிம்களை தவ்ஹீதின் பக்கம் ஈர்த்தது.

இது போன்ற குழல்கள் தான் நம்மை சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுப்பதற்குத் தள்ளியது என்பதற்கு இது மற்றோர் எடுத்துக்காட்டு!

ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு கால கட்டத்தில் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகளின் இஸ்லாமிய விரோதப் போக்கு ஓர் எல்லையைக் கடந்து சென்றது. காமத்தில் மிஞ்சியது கன்னி மேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு அந்தத் தீய சக்திகள் விஷம் கக்க ஆரம்பித்தன. அப்போது சமுதாயம் மயான அமைதியில் தான் இருந்தது. அதற்கும் ஆக்கப்பூர்வமான எதிர்ப்புக்களைத் தெரிவிக்க வேண்டியவர்கள் தவ்ஹீத்வாதிகள் தான் என்ற நிலை ஏற்பட்டது.

ராஜகோபாலன் கொலை

இப்படிப்பட்ட அக்கினிப் பிரவேசத்தின் போது மதுரையில் இந்து முன்னணி தலைவராக இருந்த ராஜகோபாலன் என்பவர் கொலை செய்யப்படுகின்றார். அதில் ஜாக் இயக்கத்தைத் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியானது. அதற்கு மறுப்பும் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாகத் தான் எஸ்.எம்.பாக்கர் தடாவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் அமைப்பு ரீதியாக ஜாக்கில் இல்லாவிட்டாலும் சமுதாயப் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்து வந்ததால் பி.ஜே யுடன் சேர்ந்து சமுதாயக் களப்பணியாற்றினார்.

(அவர் பாலியல் குற்றச்சாட்டுக்காகவும் பண மோசடிக்காகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தனி விஷயம்)

பாக்கரிடம் நடத்திய நேரடி விசாரணை

பாக்கர் விஷயத்தில் நடந்தது என்ன

பாக்கர் தடாவில் கைது செய்யப்பட்டது தவ்ஹீத்வாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியானது. அப்போது தான் ஓர் ஆழமான சிந்தனை தோன்றுகிறது. இன்று பாக்கர் நாளை பி.ஜே என்று இந்தக் கைதுப் படலம் தொடரும். எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை முளையிலேயே கிள்ளி விட வேண்டும். அதற்கு வழி என்ன?

அப்போது வலிமையாக இருந்த ஜமாஅத் அமைப்பு ஜாக் தான். ஆனால் ஜாக்கின் தலைவர் கமாலுத்தீன் மதனி, இன்னும் சில செல்வந்தர்கள் இது போன்ற விஷப் பரீட்சைக்கு வர மாட்டார்கள்.

மதுரை ராஜகோபாலன் கொலையில் ஜாக் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் ஜாக்கில் நிதி வசூலிப்பவராக இருந்த சீன் நெய்னா முகம்மது விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி கிடைத்த்தும் பீஜேயைத் தவிர அனைத்து நிர்வாகிகளும் பல மாதங்கள் அல்ஜன்னத் அலுவகத்தின் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை.

உளவுத் துறையின் ஆந்தைப் பார்வைக்கு அல்ஜன்னத் ஆளாகியிருக்கின்றது  என்று தெரிந்த மாத்திரத்திலேயே பேர்ணாம்பட்டைச் சார்ந்த ஒரு செல்வந்தர் தலைதெறிக்க ஓட்டமெடுத்தார்.

அதில் ஒரு போதும் ஓட்டமெடுக்காத, ஆட்டம் காணாத செல்வந்தர் அன்வர் பாய் மட்டுமே!

தமுமுக உதயம்

இவரைத் தவிர்த்து கமாலுத்தீன் மதனி உட்பட செல்வந்தர்கள் இதற்கு இசைய மாட்டார்கள். இதற்கு என்ன செய்வது? இதற்கான ஆலோசனை அல்ஜன்னத் அலுவலகத்தில் தான் நடைபெற்றது. விடை கிடைத்தது. விடிய விடியப் பேசி ஒரு விடை கிடைத்தது.

பின்னர் விஞ்ஞானி அப்துல் ஜலீல் வீட்டில் மீண்டும் ஆலோசனை நடந்தது. கூட இருந்தவர் குணங்குடி ஹனீபா அவர்கள். அவர் தான் நமக்கு அரசியல் குரு என்ற உண்மையை இங்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவர் ஆலோசனை மட்டும் தரவில்லை. ஒரு அமைப்பையும் சேர்த்தே தந்தார். அதுதான் தமுமுக.

தமுமுக என்ற பெயரில் பதிவு செய்யப்படாத ஒரு இயக்கத்தை அவர் நடத்தி வந்தார். அதற்கு கொடி கூட இருக்கவில்லை. பீஜே தான் கறுப்பு வெள்ளைக் கொடியை வடிவமைத்தார். இந்த இரண்டு வண்ணங்களையும் தேர்வு செய்யக் காரணத்தையும் விளக்கினார். இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு என்பது கருப்பு வெள்ளையின் கருத்தாகும்.

இப்போது தமுமுகவின் தலைவர்களாக வலம் வரக்கூடியவர்களுக்கு இந்த அமைப்பை உருவாக்குவதில் பெரிய பங்களிப்பு ஏதும் இல்லை. தமுமுக முதலில் வெளியிட்ட பைலாவின் முதல் பக்கத்தைதக் காணுங்கள்! இப்போதைய பொதுச் செயலாளர் 6 வது இடத்திலும், இப்போதைய தலைவர் 7 வது இடத்திலும் இருப்பதைக் காண்க.

ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட தமுமுக பைளாவின் முதல் பக்கம்

தமுமுக துவங்கும் போது ஜவாஹிருல்லாவோ, ஹைதர் அலியோ மக்களால் அறியப்பட்டவர்களாக  இருக்கவில்லை. இவர்களது அழைப்பை ஏற்று வரக்கூடிய ஐம்பது பேர் கூட தமிழகத்தில் இருக்கவில்லை. மக்களை ஈர்க்கக் கூடிய சொல்லாற்றலும் இவர்களிடம் இருக்கவில்லை. கடந்த காலங்களில் சமுதாயத்துக்குத் தியாகம் செய்த வரலாறும் இவர்களுக்கு இருக்கவில்லை.

பீ.ஜே  அவர்கள் பதினைந்து ஆண்டுகள் அடி உதைபட்டு கொள்கைச் சகோதரர்களையும், பிரச்சாரகர்களையும் உருவாக்கியிருந்ததால் - அவரே தமுமுகவின்           தூணாகவும், முதல்நிலை தகுதியுடையவராகவும் இருந்தார். நெருக்கடியான காலங்களில் எந்தப் போராட்டத்திலும் அதன் தற்போதைய தலைவர் கலந்து கொண்டதில்லை. பின்வாங்கி விடுவார். இப்போது கருணாநிதியின் சிறுபான்மைப் பிரிவாக ஆன பின்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் துணிவு (?) அவருக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.                

தமுமுக வரலாறை விளக்கும் சி.டியை தமுமுக வெளியிட்டது. அதில் பி.ஜேயை இருட்டடிப்பு செய்து விட்டு தாங்களே தமுமுகவை உருவாக்கியது போல் புளுகியதால் இதைக் குறிப்பிடுகிறோம்.

பாக்கரைக் கைது செய்த காவல்துறை, மற்றவர்களையும் வேறு ஏதேனும் வழக்கில் தூக்கிப்போட்டு விடக்கூடாது. அதற்கு உடனே ஒரு தற்காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்கரின் கைதைக் கண்டித்தாக வேண்டும். அதற்கு மக்கள் கூட்டம் திரள வேண்டும். 50 பேர் திரண்டால் காவல் துறையிடம் அதற்கு ஒரு பார்வை! 100 பேர் திரண்டால் அதற்கு ஒரு பார்வை! 200 பேர் என்றால் காவல்துறையின் பார்வையில் ஒரு மாற்றமிருக்கும். 500 பேர் என்றால் அதற்கு ஒரு மரியாதை! மக்கள் நினைத்ததைச் சாதிக்கலாம். நாம் நான்கு பேர் கூடிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் என்ன பேசினாலும் அது காவல்துறையிடம் எடுபடாது. நமது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை தான் பேசும். அந்தப் பேச்சு தான் எடுபடும் என்ற அரசியல் அடிச்சுவட்டைப்  போதித்தவர் குணங்குடி ஹனீபா அவர்கள்.

இப்பேரணிக்காக தமுமுகவில் இப்போது ஆதாயம் அடைந்து வருபவர்கள் ஒரு துரும்பை எடுத்துப் போடக் கூட இயலாதவர்களாக இருந்தனர். காரைக்கால் அப்துல் ரஜாக் என்பவரை பி.ஜே தனது பிரதிநிதியாக தமிழகமெங்கும் அனுப்பி தவ்ஹீத்வாதிகளைத் திரட்டியதால் தான் அப்பேரணி சாத்தியமானது.

அவரது ஆலோசனைப்படி அந்தப் பேரணி சென்னை மன்றோ சிலைக்கருகில் திரண்டது. அங்கிருந்து கிளம்பி தலைமைச் செயலகம் நோக்கிப் புறப்பட்டது. இடையில் பாரிமுனை சிக்னலில் நிறுத்தப்பட்டது. தமுமுகவின் முதல் பொதுச் செயலாளர் பொறியாளர் அப்துஸ்ஸமது, தலைவர் குணங்குடி ஹனீபா மற்றும் சிலர் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்து விட்டு வந்தனர்.

இது தான் தமுமுகவின் முதல் பேரணி! இப்பேரணியில் மக்கள், வெள்ளம் போல் குவிந்தனர். தவ்ஹீத் மக்கள் தான் இதில் வந்து குவிந்தனர். அவர்களைப் பார்த்து மற்ற பொதுமக்களும் வந்து கலந்து கொண்டனர்.

குணங்குடி ஹனீபா அவர்கள் கூறியது போன்று இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை, காவல்துறையின் பார்வையில் கண்ணியத்தை மட்டுமல்ல! ஒரு கலக்கத்தையும் ஏற்படுத்தியது.                     

இங்கு உறுதியாக ஒரு கருத்தைப் பதிவு செய்து கொள்கிறோம். அன்று தமிழகத்தில் வலிமை பெற்ற அமைப்பு, இன்னும் சொல்லப் போனால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகின்ற மக்கள் சக்தி கொண்ட அமைப்பாக ஜாக் என்ற தவ்ஹீத் அமைப்பு தான் இருந்தது. அந்த தவ்ஹீத் மக்களை முதலீடாக, மூலதனமாகக் கொண்டு தான் தமுமுக என்ற அமைப்பு துவங்கியது என்பதை அழுத்தமாக மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

காவல் துறையின் அடுத்தக்கட்ட சுழி, அக்னிப் பிரவேசம் மேற்கொண்டிருக்கும் பி.ஜேவை நோக்கித் தானே என்ற கவலை தான் அந்த தவ்ஹீத் மக்களை இயக்கியது. அது தான் அவர்களை அங்கு வந்து குவித்தது.

பாக்கருக்காக இப்படியொரு ஆர்ப்பாட்டத்தைச் செய்து முடித்த பின்னர் சில மாத இடைவெளியில் அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆரம்பித்தது. காரைக்காலில் ஜாக்கின் கட்டுப்பாட்டில் இருந்த ஜாமிஆ புஷ்ரா பெண்கள் மதரஸாவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜே.எஸ். ரிபாயி பார்சல் குண்டு வழக்கில் கைது  செய்யப்பட்டார்.

முதல் மற்றும் கடைசி உண்ணாவிரதப் போர்

மீண்டும் மக்கள் சக்தியைத் திரட்டி ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தும் நிர்பந்தம் ஏற்பட்டது. ஜாக் தலைமையிடம் இது தொடர்பாக பி.ஜே தொடர்பு கொண்டார். கலந்து பேசினார்.

ரிபாயீயைக் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும், நாகூர் காவல்துறை அதிகாரி இந்திரஜித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உண்ணாவிரதம் நடத்துவதற்கு தலைவர் என்ற முறையில் தவ்ஹீத் மக்களைத் திரளுமாறு அழைப்பு விடுங்கள். தமுமுக என்ற பெயரில் அழைத்தால் மக்கள் வர மாட்டார்கள் என்று பி.ஜே வலியுறுத்தினார். ஆனால் கமாலுத்தீன் மதனி அதற்கு உடன்படவில்லை.

எனது தலைமையில் உள்ள மக்களை ஹனீபாவின் பின்னால் திரளுமாறு நான் அறிவிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார். இரண்டு தலைமை ஏற்படுவதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். அப்பாவிகள் கைது செய்யப்பட்டதும் அவரது மதரஸாவில் பணியாற்றிய ஆசிரியர் கைது செய்யப்பட்டதும் அவரை எந்த விதத்திலும் பாதிக்கவேயில்லை.

நீங்கள் அழைப்பு விடுக்காவிட்டடால், பி.ஜே என்ற என் பெயரிலேயே மக்களை அழைப்பேன். நீங்கள் அழைப்பு விடுக்காமலே தவ்ஹீத் சகோதரர்கள் நிச்சம் திரளுவார்கள் என்று பீஜே எச்சரிக்கை விடுத்தார். தனது தலைமைப் பீடம் டம்மியாகி விடும் என்று அவர் அஞ்சியதால் கீழிறங்கி வந்து, ஜாக் தலைவர் என்ற பெயரில் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அதைப் பிரசுரங்களாக நாம் வெளியிட்டோம்.

கமாலுத்தீன் மதனியின் பதவி ஆசை இப்போது தான் தெளிவாக அனைவருக்கும் தெரிந்தது. தமுமுக என்பதற்கு தவ்ஹீத் மக்களைத் தவிர அன்றைக்கு கடுகளவு ஆதரவும் இருக்கவில்லை என்பதும் இதிலிருந்தும் தெளிவாகும்.

உண்ணாவிரதம் சென்னை குறளகத்திற்கு எதிரில் நடைபெறுகின்றது. மக்கள் அந்தப் போராட்டத்திற்கும் வந்து கலந்து கொண்டனர். காவல் துறையின் கண்களை மிரளச் செய்யும் அளவுக்கு மக்கள் கூட்டம், ஆம்! தவ்ஹீத்வாதிகளின் கூட்டம் வந்து குவிந்தது. குறளகத்திற்கு எதிரில் குரல் கொடுத்தோம்; கைதுக்கு  எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இவர்களில் யார் மீது கை வைத்தாலும் மக்கள் சக்தி திரளும் என்பதை ஒரு முறை அல்ல! இரண்டாவது முறையாக, வலிமையாக எடுத்துக் காட்டினோம்.

(உண்ணாவிரதம் நடத்துவது மார்க்க அடிப்படையில் கூடுமா? என்பது விவாதப் பொருளாகி, இறுதியில் கூடாது என்று முடிவானது. இதனால் அன்றிலிருந்து உண்ணாவிரதத்தைக் கை கழுவிவிட்டோம்.)

தவ்ஹீத்வாதிகளின் தலைமையாக இருந்த ஜாக்குக்கும் தமுமுகவுக்கும் பிரச்சனைகள் ஏற்படாமல் செயல்பட வேண்டும் என்று தமுமுக நிர்வாகிகள் முடிவு செய்து இது குறித்து கமாலுத்தீன் மதனியிடம் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஏனெனில் அப்போது தமுமுகவுக்கு என தனியாக எந்த ஆள் பலமும் இல்லாமல் இருந்த்து. அதனடைப்படையில் பீஜெ சென்னை புதுப்பேட்டைக்கு வந்திருந்த கமாலுத்தீன் மதனியை சந்தித்து தமுமுகவுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். இரண்டு தலமை வேண்டாம் என்று நீங்கள் கருதினால் இரண்டுக்கும் நீங்களே தலைமை ஏற்பதற்கு தமுமுக நிர்வாகிகள் உடன்படுகிறார்கள் என்று எவ்வளவோ பீஜே எடுத்துச் சொன்னார். ஆனால் கொள்கயற்றவர்களுடன் சேர்ந்து செயல்பட முடியாது என்று கமாலுத்தீன் மறுத்து விட்டார். மேலும் இந்த தமுமுக ஒரு காலத்தில் தவ்ஹீதை ஒழிக்க பாடுபடும் எனவும் கமாலுத்தின் மதனி சொன்னார். அதற்கு பீஜே அப்படி ஒரு நிலை வந்தால் நான் தமுமுகவை தூக்கி எறிந்து விட்டு தவ்ஹீதின் பக்கம் நிற்பேன் எனக் கூறி விட்டு பீஜே வெளியேறினார்.

அந்த நிலை வந்த போது பீஜெ சொன்ன படி தமுமுகவை கை கழுவினார், ஆனால் அந்த நிலை வந்த பின்னர் கமாலுத்தீன் மதனி தமுமுகவுடன் ஒட்டிக் கொண்டார்.

இதன் பின்னர் தவ்ஹீத்வாதிகளின் எழுச்சிமிகு உரையில் ஊர்கள் தோறும் தமுமுக கிளைகள் வேரூன்றின. இத்துடன் தவ்ஹீத் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இயக்கத்தில் இணைந்தனர்.

இயக்கம் வளர்ந்து விட்ட பின் இனிமேல் இயக்கம் தடை செய்யப்பட முடியாது என்ற நிலை ஏற்பட்டு, தமுமுகவுக்கு ஒரு மரியாதை ஏற்றப்பட்ட பின் பி.ஜே அமைப்பாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.

இப்போது இருப்பவர்கள் நல்ல தலைவர்கள்; இந்த இயக்கத்தை கஷ்டமான காலத்தில் நான் விட்டு விட்டு ஓடவில்லை. இனி மேல் நான் இல்லாவிட்டாலும் சிறப்பாக நடத்துவார்கள் என்று மனம் திறந்து மடல் எழுதி, பீஜே பொறுப்பிலிருந்து விலகினார்.

மாபெரும் மக்கள் இயக்கமாக ஒரு இயக்கத்தை வளர்த்துவிட்டு, அதன் முதல்நிலைத் தலைவராக இருக்கும் ஒருவர் மன நிறைவோடு ஒதுங்குவது எங்குமே நடந்திராத ஒன்று. இவர்கள் நன்றாக இயக்கத்தைக் கொண்டு செல்வார்கள் என்று பீ.ஜேயை இவர்கள் நம்ப வைத்திருந்தார்கள்.

ஆனால் பீ.ஜே முழுமையாக இயக்கத்தை இவர்கள் கையில் ஒப்படைத்த பிறகு தான் இவர்கள் நயவஞ்சக வேடம் போட்டது ஒவ்வொன்றாக அம்பலமானது.

பீ.ஜே பொறுப்பிலிருந்து விலகியது முதல், பிஞ்சிலே பழுத்த ஒருவரை ஊர்கள் தோறும் அனுப்பி, நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து, தவ்ஹீத்வாதிகளைக் களையெடுத்தனர்.

தவ்ஹீத்வாதிகளுக்கும், மற்றவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு நியாயம் கேட்டு தலைமையை அனுகினால் தமுமுக பொறுப்பில் இருப்பது என்றால் பிரச்சனைக்குரியவற்றை விட்டு விலக வேண்டும் என்று இப்போதைய தலைவரும், செயலாளரும் எச்சரிக்கும் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன.

பொறுப்பில் இருந்து பீ.ஜே விலகினாலும் அமைப்புக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. ஆலோசனை கேட்கும் போதெல்லாம் ஆலோசனை வழங்கத் தவறவில்லை. அதே சமயம் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலை போவதைக் கவனித்துக் கவலைப்பட்டார். இந்த அளவுக்கு கீழ்த்தரமாகச் செல்வார்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கவலைப்பட்டார்.

ஜாக்கில் இருந்து கொண்டே, கமாலுத்தீனின் பணத்தாசை, பதவி வெறியைக் கண்டு புளுங்கியது போன்ற நிலை ஏற்பட்டது. தவ்ஹீத் தாயிகள் மத்தியில் அதிருப்தியும், கொந்தளிப்பும் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட தவ்ஹீத்வாதிகளுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறோமே என்று வேதனைப்படும் அளவுக்கு தமுமுக தவ்ஹீதுக்கு எதிராகக் காய்களைத் திட்டுமிட்டு நகர்த்தி வந்தது.

ஜாக் தமுமுக உரசலும் விரிசலும்

தான் தடை செய்யப்படலாம் என்ற கவலை ஜாக்கிற்கு இருந்தது. இந்த தயக்கத்தை பி.ஜே நன்கு புரிந்து வைத்திருந்தார். அதனால் தான், தன்னால் ஜாக்கிற்கு எந்தவொரு ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஜாக்கின் தலைமை நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து விலகினார்.

(இதுவே அவருக்குப் பின்னர் பாதகமானது. அவர் வளர்த்த அந்த ஜாக் இயக்கத்தில் உறுப்பினர் உரிமை கூட இல்லாமல் பறிக்கப்பட்டது.)

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜாக்கின் அரசியல், சமுதாயப் பிரிவாக தமுமுகவைச் செயல்படுத்திக் கொள்ளலாம். இதை வெளிப்படையாகக் கூட கமாலுத்தீன் மதனி செய்ய வேண்டியதில்லை, மறைமுகமாக அனுமதி தந்தால் போதும் , அதற்காக பொறியாளர் அப்துஸ்ஸமது, குணங்குடி ஹனீபா ஆகியோர் கமாலுத்தீன் மதனியிடம் பைஅத் செய்வதற்குக் கூடத் தயாராக இருந்தார்கள். (அப்போது நாம் "அமீர்' சித்தாந்தத்தை ஆதரித்த காலம் அது)

பி.ஜே உட்பட பலர் மாநில அமீரிடம் ஒரு மன்றாட்டத்தையே நடத்தினார்கள். பலப்பல அமர்வுகள்! பலப்பல கலந்தாலோசனைகள்! பல்வேறு கட்ட முயற்சிகள்! இத்தனையும் எதற்கு? இவ்வளவு நாள் வியர்வை அல்ல! இரத்தத் துளிகளால் வளர்த்த ஓர் இயக்கத்தை விட்டுப் பிரிந்து விடக் கூடாது என்பதற்காகவே!

ஜாக் என்ற கட்டமைப்பு வருவதற்கு முன்பே தவ்ஹீத் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்த சகோதரர் கலீல் ரசூல் அவர்களும், நானும் தனிப்பட்ட முறையில் கமாலுத்தீன் மதனியை நாகர்கோவிலில் போய்ச் சந்தித்தோம். நீண்ட நேரம் உரையாடினோம்; கெஞ்சினோம். கல்லும் கரையும் என்பார்கள். ஆனால் கல்மனம் கொண்ட கமாலுத்தீன் மதனி கரையவில்லை.

இதன் பின்னர் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழகம் முழுவதிலும் உள்ள தாயீக்கள் கலந்து கொண்டனர். அதில் தமுமுகவின் அப்போதைய செயல்பாடுகள் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டவை தான் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகளை குர்ஆன், ஹதீஸ் ஒளியிலிருந்து பி.ஜே எடுத்து வைத்தார். நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு கமாலுத்தீன் மதனி, நான் பரிசீலித்து விட்டுச் சொல்கிறேன் என்று இறுதியில் சொல்லி விட்டுப் போனார். பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் பேசுகின்ற மேடை தோறும் தமுமுகவை விமர்சிக்கலானார்.

கமாலுத்தீன் மதனி, தமுமுகவை அடாது விமர்சித்தாலும், விடாது நமது தரப்பில் சமரச முயற்சிகளை மேற்கொண்டோம். ஜாக் உருவாக்கத்தில் ஆரம்ப காலகட்டத்தில் பங்கெடுத்து, உழைப்பு தியாகங்கள் செய்த சகோதரர்களைத் திரட்டி மீண்டும் அதே அரிஸ்டோ ஹோட்டலில் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மக்களைத் திரட்டும் பணியில் நானும், ஸைபுல்லாஹ் ஹாஜா, அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோரும் ஈடுபட்டிருந்தோம்.

(சைபுல்லாஹ் ஹாஜாவும் நம்பிக்கை துரோகம் செய்து அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அது பற்றி அறிய

சைபுல்லா நீக்கப்பட்டது ஏன்)

ஊர் ஊராகச் சென்று ஆட்களை அழைத்தோம். அதன் பின்னர் 31.08.1997 அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள இயலாமல் போனது. காரணம், அப்போது மேலப்பாளையத்தில் நடைபெற்ற சில அசம்பாவித சம்பவங்களில், சம்பந்தமில்லாமலேயே நானும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தேன்.

இந்தக் கூட்டத்திற்குப் பின் ஓர் இணக்கம் ஏற்பட்டது. ஜாக்கின் வேனை எடுத்துக் கொண்டு பி.ஜே திருச்சியில் நடைபெற்ற தமுமுக கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட அந்த இணக்கம் அற்ப ஆயுளிலேயே முடிந்து விட்டது. அந்த வருடம் ரமளான் பிறை விஷயத்தில் கமாலுத்தீன் தான்தோன்றித் தனமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் ஜாக் - தமுமுக உறவில் உரசல் அல்லவிரிசல் ஏற்பட்டது.

தவ்ஹீத் பிரச்சாரக் குழு உதயம்

துளைத்தெடுத்த துரோகங்கள், வரம்பு மீறிய வாக்குமீறல்கள், அடுக்கடுக்கான அவமானங்கள் இவ்வுளவுக்குப் பிறகும் இவருடன் இருக்க இயலாது என்பதை விட இவர் நம்முடன் இருக்க விரும்பவில்லை, நம்மை வெளியேற்ற விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்டோம்.

வெளிநாட்டுத் தொடர்புகள், தொடர் வரவுகள் இவையெல்லாம் அவருக்குத் தன்னிறைவையும், தலைக்கனத்தையும் ஏற்படுத்தியிருந்தன. அதனால் ஜாக்கிலிருந்து வெளியேறி தவ்ஹீத் பிரச்சாரக் குழு என்ற இயக்கத்தைக கண்டோம். தமுமுக என்ற அமைப்பு நம்மிடம் இருந்தாலும் தவ்ஹீதுக்கு என்று தனி அமைப்பு இருக்கட்டும் என்றெண்ணி இந்த அமைப்பைத் துவக்கினோம். அதற்கு ஹாமித் பக்ரி தலைவராக இருந்தார். அதன் பிறகு நான் தலைவராக நியமிக்கப்பட்டேன்.

(ஹாமித் பக்ரி இரகசியமாகச் செயல்படும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து துரோகம் செய்ததால் அவரும் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

அது குறித்து விபரம் அறிய)

இந்த அமைப்பின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, செய்யது முஹம்மது மதனீ, ஆர்.டி.ஓவில் பணிபுரிந்த பஷீர் ஆகியோரின் முயற்சியில், நாகர்கோவில் ஹனீபா நகர் பள்ளிவாசலில் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை சகோதரர் எம்.எஸ். சுலைமான் முன்னின்று ஏற்பாடு செய்தார்.

இந்த சமரசக் கூட்டத்திற்கு வரமாட்டேன் என்று கமாலுத்தீன் முரண்டுபிடித்தார். கடைசியில் ஒருவாறாக அவரைப் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

வாதப்பிரதிவாதங்கள்! இறுதியில் பீ.ஜே இரண்டு கோரிக்கைகளை அல்லது நிபந்தனைகளை முன்வைத்தார்.

1. ஜாக்கில் உள்ள கொள்கைவாதிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும். (நாங்கள் ஜாக் என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை நிலை இருந்தது. பி.ஜே உட்பட அனைவருக்கும் இந்தக் கதி! எனவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது)

2. நிர்வாகச் சீரமைப்பு

இன்னும் இது போன்ற சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

இதற்குப் பதிலளித்த எஸ்.கமாலுத்தீன் நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் அவர்கள் தவ்ஹீத் பிரச்சாரக் குழுவை உடனே கலைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதற்கு பி.ஜே நாங்கள் தவ்ஹீத் பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். ஆனால் மூன்று மாதங்களுக்கு இந்தப் பெயரில் செயல்பட மாட்டோம். அதற்குள் எங்கள் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். காரணம், அடிக்கடி எஸ்.கமாலுத்தீன் இப்படி வாக்குறுதி கொடுத்துவிட்டு மாறு செய்வார். வாக்குறுதியை மீறுவார். எனவே தவ்ஹீத் பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். இந்த மூன்று மாதங்களுக்குள் நாங்கள் வைத்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பி.ஜே கேட்டுக் கொண்டார். அதற்கு நாங்கள் பொறுப்பு என்று சமரசக் குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆறப்போட்டு நாறடித்தல்

ஆறப்பட்டு நாறடிக்கும் கலையில் வல்லவர் நரசிம்மராவ். ஆனால் அவரை மிஞ்சிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது எஸ் எஸ்.கமாலுத்தீன் மதனி தான். காலை வாருவதில் கை தேர்ந்த கமாலுத்தீன் மதனி வழக்கம் போல் இந்த சமரச முயற்சியிலும் காலை வாரினார். இம்முயற்சியில் இறங்கியவர்களின் முகத்தில் கரியைப் பூசினார்.

இனிமேல் நாம் நமது வழியில் தவ்ஹீதைச் சொல்வோம் என்று பிரச்சாரக் குழு என்ற பெயரிலேயே தவ்ஹீத் பணி தொடர்ந்தது. தவ்ஹீத் இயக்கத்தில் இருந்து கொண்டே சத்தியப் பணியையும் சமுதாயப் பணியையும் சேர்த்து செய்ய வேண்டும் என்று எங்கள் முயற்சி, கமாலுத்தீனின் வறட்டுப் பிடிவாதத்தாலும் வாக்குமீறல்களாலும் தோற்றுப் போயிற்று! நாங்கள் வளர்த்த ஜாக்கை விட்டு விட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதை எடுத்துக் காட்டவே இந்தச் சுருக்க வரலாறு. இப்போது சமுதாயப் பணிக்காகத் தொடங்கிய தமுமுகவின் வரலாற்றைப் பார்ப்போம்.

அவரசப் பிரசவம்

தமுமுக ஓர் அவசரப் பிரசவம் எனினும் அது அரைகுறைப் பிரசவமல்ல! முழுமையாகப் பிறந்த குழந்தை! ஏற்கனவே இருந்த சமுதாய இயக்கங்கள் அழிந்ததற்கான காரணங்களைக் கண்டறிந்து, அது போன்ற காரணங்கள், கரையான்கள் இதை அண்டக் கூடாது, அணுகக் கூடாது என்பதில் முழுக் கவனம் செலுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கொள்கையாகக் கொள்ளப்பட்டது.

இதனால் தமுமுகவின் ஒவ்வொரு அறிமுக்க் கூட்டங்களிலும் அடுத்த கட்டக் கூட்டங்களிலும், "நாங்கள் உங்களிடம் ஒரு போதும் எங்களுக்காக ஓட்டுக் கேட்டு வர மாட்டோம்'' என்று வாக்குறுதி அளித்தனர். "எங்களுக்கு வாக்குக் கேட்டால் எங்களைச் செருப்பால் அடியுங்கள்'' என்று கூடப் பேசியதுண்டு. இப்படி ஓர் உறுதியான குரலில், உச்சஸ்தாயில் பேசியது மக்களுடைய உள்ளங்களில் ஊடுறுவியது.

தவ்ஹீத் ஒரு தடைக்கல்லா?

வெகு வேகமாக இந்த இயக்கம் மக்களிடம் வளர்ச்சி கண்டது. இத்தனைக்கும் பி.ஜே ஒரு பக்கா தவ்ஹீத்வாதியாக இருந்தும் (தமுமுக வளாச்சிக்கு தவ்ஹீத் ஒரு போதும் தடைக்கல்லாக இருக்கவில்லை) தமுமுக மேடையில் சமுதாயப் பிரச்சனைகளை மட்டும் பேசுவோம்; அங்கு தவ்ஹீதைப் பேச மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கினார். அதன்படி அந்த இயக்கம் பெருவளர்ச்சி கண்டது.

தனிஇட ஒதுக்கீடும் தவ்ஹீத் ஜமாஅத்தும்

தமுமுக என்ற இந்த சமுதாய இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், ஆணிவேராகவும் அமைந்தது இடஒதுக்கீடு கொள்கை தான். பாபரி மஸ்ஜித் முதல் அனைத்துப் பிரச்சனைகளுக்கும், முஸ்லிம்கள் கிள்ளுக்கீரைகளாக நடத்தப்படுவதற்கும் காரணம் சுதந்திரத்திற்குப் பிறகு, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு பறிக்கப்பட்டது தான் என்பதைக் கருத்தில் கொண்டு இடஒதுக்கீடு கோரிக்கையைக் கையில் எடுத்தது. இட ஒதுக்கீடு கிடைத்துவிட்டால் தமுமுகவைக் கலைத்து விடுவோம் என்று கூட மக்களிடம் அறிவிக்கப்பட்டது.

இந்த இட ஒதுக்கீட்டைக் கையில் எடுத்ததும், ஏற்கனவே சரிந்து விழுந்த சமுதாயம், "இது சாத்தியமா?'' என்ற கேள்வியை எழுப்பினார்கள். சாத்தியமே என்று கூறி அதை மூலை முடுக்குகளுக்கு அதன் பேச்சாளர்கள் எடுத்துச் சென்றார்கள்.

தவ்ஹீத் தாயீக்கள்தான் தமுமுக பேச்சாளர்கள்

இடஒதுக்கீட்டுக் கொள்கையை மக்களிடம் எடுத்துச் சென்றவர்கள் யார்? அவ்வியக்கத்திற்கென்று பேச்சாளர்கள் கிடையாது. நாவலர், பாவலர் கிடையாது. வாணியம்பாடி வாத்தியார் மட்டும் பாடம் நடத்துவார். அதுவும் இந்தியாவைத் தாண்டி, செசன்யா, கஜகஸ்தான் என்று தான்.

இந்த இயக்கம் மக்களிடம் போய்ச் சேருவதற்கு தவ்ஹீத் தாயீக்கள் தான் முதலீடானார்கள். அவர்கள் தான் இந்த இடஒதுக்கீடு கொள்கையை எட்டுத் திக்குகளுக்கும் எடுத்துச் சென்றார்கள்.

விழிப்புணர்வை ஏற்படுத்திய விஜய் டிவி பேட்டி

இடஒதுக்கீடு என்றால் என்ன? அதன் பயன் என்ன? என்ற விளக்கங்கள் கூட சமுதாயத்திற்குத் தெரியாமல் இருந்தது. காயிதேமில்லத்திற்கு மணிமண்டபம் கட்டுவதையும், மீலாது நபிக்கு விடுமுறை அறிவிப்பதையும் முஸ்லிம் சமுதாயத்திற்குச் செய்த மிகப்பெரிய சாதனைகளாகக் கருதப்பட்ட காலம் அது.

இப்படிப்பட்ட காலத்தில் தான் விஜய் டி.வியில் பி.ஜேயின் பேட்டி ஒளிபரப்பானது. "மணி மண்டபங்கள் கட்டுவதால், காயிதே மில்லத் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைப்பதால் முஸ்லிம்களுக்கு என்ன பயன்? முஸ்லிம்கள் வாழ்வுரிமை இழந்து நிற்கிறார்கள். வயிற்றுக்கு உணவில்லாமல் நிற்கிறார்கள். மண்டபம் கட்டினால் முஸ்லிம்களின் பசி போய்விடுமா? எங்களுக்குத் தேவை இடஒதுக்கீடு தான்'' என்று ஆணியடித்தாற்போல் பி.ஜே கூறிய போது, அவரைப் பேட்டி கண்ட ரபி பெர்ணாட் என்பவர் அதிர்ந்து போனார்.

முஸ்லிம்களிடம் இப்படி ஒரு கோரிக்கை இருப்பதே அப்போது தான் உலகுக்குத் தெரிய வந்தது. அந்தப் பேட்டி ஒளிபரப்பானவுடன் சட்டசபையில் கருணாநிதி அதற்குப் பதிலளித்துப் பேசினார். நாங்கள் தான் முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று வழக்கம் போல் பல்லவி பாடினார். அதன் பிறகு இந்தத் தீ தமிழகமெங்கும் பற்றிக் கொண்டது.

தவ்ஹீத் பள்ளிவாசல்களின் ஜும்ஆ மேடைகளில் இடஒதுக்கீடு பற்றிப் பேசப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இதற்குப் பிறகு எல்லா அரசியல் கட்சிகளும் இந்தக் கருத்தை எதிரொலிக்க ஆரம்பித்தன.

பாபரி மஸ்ஜித் மீட்புக் கோரிக்கை

இடஒதுக்கீட்டிற்கான குரல் ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டிருந்த போது, இன்னொரு பக்கத்தில் பாபரி மஸ்ஜித் மீட்புக்கான போராட்டங்களை தமுமுக தொடர்ந்து நடத்தியது.

பாபரி மஸ்ஜித் இடிந்து விழுந்தது போலவே, அதை மீண்டும் எழுப்ப வேண்டும் என்ற எண்ணமும் இடிந்து விழுந்திருந்தது. அதை மறக்க முற்பட்டனர்.

 அப்போது தான் தவ்ஹீத் பேச்சாளர்கள் வெள்ளி மேடைகளிலும், இதர சொற்பொழிவு மேடைகளிலும், யார் தனது பொருளைப் பாதுகாப்பதற்காக போரிட்டுக் கொல்லப்படுகின்றானோ அவன் ஷஹீத் ஆவான் என்ற ஹதீஸையெல்லாம் ஆதாரமாகக் காட்டி, பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காகப் போராட வேண்டும்; அதற்காகப் போர்க்குரல் கொடுக்க வேண்டும் என்று தூண்டினர். மஸ்ஜிதை மீட்பதற்கு முன்பாக மக்களை மறதியிலிருந்து மீட்டனர்.

இதன் விளைவாய் மக்கள் கடல் கடந்து அலை போல் டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் போராட்டங்களில் திரண்டனர். இந்தப் போராட்டங்கள் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

முதல்வர் வீட்டு முற்றுகை

ஒரு டிசம்பர் 6 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி வீட்டை முற்றுகையிட வேண்டும் என்று தமுமுக அறிவித்தது. அதற்கும் தவ்ஹீத்வாதிகள் தயாரானார்கள். அந்த அளவுக்கு தர்பியாக்கள் நடத்தப்பட்டன.

அந்த தர்பியாக்களில் மரணத்திற்கு அஞ்சாத தியாகிகள் பற்றிப் போதிக்கப்பட்டன. குறிப்பாக மூஸா நபியவர்களிடத்தில் போட்டிக்கு வந்த மந்திரவாதிகள் ஈமான் கொண்டு, ஃபிர்அவ்னால் தண்டிக்கப்பட்ட வரலாறு பற்றிப் போதிக்கப்பட்டது. அதனால் தான் முறுக்கேறிய நரம்புகளுடன் முதல்வர் வீட்டு முற்றுகைக்கு தவ்ஹீத்வாதிகள் தயாரானார்கள். காக்கிச் சட்டை பயம் கழற்றி எறியப்பட்டது. இதற்கான அடிப்படையே தவ்ஹீத்தான். தவ்ஹீத் இல்லையேல் இந்தத் தெம்பு, திராணி, துணிச்சல் அவர்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டிருக்காது.           

முதல்வராயிருந்தும் தன் வீட்டை முற்றுகையிடுவதைக் கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. கடுமையான கைது நடவடிக்கைகள், தடுப்புச் சுவர்கள், துப்பாக்கிச் சூடு நடக்கும் என்ற மிரட்டல்கள் இவையனைத்தையும் மிஞ்சி குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கொள்கைவாதிகள் குவிந்தனர்; கைது செய்யப்பட்டனர். இப்படிப் பாபரி மஸ்ஜித் மீட்புப் போர் மக்களிடம் துவக்கி வைக்கப்பட்டது.

இதன் மாபெரும் பயன், பாபரி மஸ்ஜித் மீட்கப்பட்டதோ இல்லையோ ஆனால் சங்பரிவாரங்களின் பட்டியலில் இருந்த காசி, மதுரா போன்ற பள்ளிவாசல்கள் மீது அவர்கள் கை வைக்க அஞ்சினர்.

இதர பிரச்சனைகளுக்காக எழுச்சிப் போராட்டங்கள்

கடந்த காலத்தைப் போன்றில்லாமல் சமுதாயத்தில் யார் அநியாயமாகக் கைது செய்யப்பட்டாலும் வீதியில் இறங்கும் வீரத்தைத் தந்தது தவ்ஹீத் கொள்கை. வீறு கொண்டு எழ வைத்தது. முஸ்லிம்களின் சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளில் அநீதி, அக்கிரமம் இழைக்கப்பட்ட போது ஆர்த்தெழும் போர்க்குணத்தை ஊட்டியது தவ்ஹீத் கொள்கை தான்.

தடையைத் தாண்டிய தமுமுக

இக்கட்டத்தில் தான் வாழ்வுரிமை மாநாடு! இதன் பயனாய் தடையிலிருந்து தப்பியது. தமிழக வட்டத்தில் மட்டுமின்றி டெல்லியிலும் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை எதிரொலிக்கச் செய்தது.

இதன் பின்பு அவ்வப்போது தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தமுமுக நிர்வாகிகளுக்கும் அவ்வப்போது உரசல் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில் தான் மதுரை தமுக்கம் மைதானத்தில் தவ்ஹீதுக்கான ஒரு மாநாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு உதயமாகின்றது.

நஞ்சைக் கலக்கிய தஞ்சை பேரணி

இதன் பின்பு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தஞ்சையில் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி தமுமுக ஒரு பேரணியை நடத்தியது. இந்தத் தஞ்சை பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் அந்த இயக்கத்தின் நிர்வாகிகளின் உள்ளத்தில் நஞ்சைக் கலக்கியது. இந்தக் கூட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தவ்ஹீத்வாதிகளை வெளியேற்ற வேண்டும் என்று தப்புக் கணக்குப் போட ஆரம்பித்தனர். அரசியல் கட்சிகளின் சகவாசங்கள் அவர்களின் உள்ளங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தன. அரசியல் கட்சியினர் காணும் கனவுகளை இவர்களும் காணத் துவங்கினர்.

இதற்கு முந்தைய இயக்கங்கள் நீர்த்துப் போவதற்கும் நிர்மூலமானதற்கும் அடிப்படைக் காரணம் தேர்தலில் போட்டி என்ற நிலைபாடு தான். அதனால் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற நிலைபாட்டை தமுமுக அடிப்படைக் கொள்கையாகக் கொண்டது. அந்த நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதில் பி.ஜே கண்ணும் கருத்துமாக இருந்தார்.

1. தேர்தலில் பங்கெடுப்பதைத் தடுக்கும் பி.ஜேயின் நடவடிக்கைகள்.

2 தமுமுகவின் தனித்தன்மையைத் தக்க வைப்பதிலும், பிற இயக்கங்களுடன் கலந்து விடாமல் அதைத் தடுக்க பி.ஜே கொண்டிருந்த கரிசனம், காட்டிய கண்டிப்பு

3. தமுமுக தலைவர்களிடம் நாள்பட நாள்பட தலைதூக்கிய தவ்ஹீத் கொள்கையிலேயே சமரசம் செய்யும் உணர்வு, இன்னும் சொல்லப் போனால் தவ்ஹீத் எதிர்ப்புணர்வு

ஆகியவை ஏற்கனவே உரசலில் இருந்ததை விரிசலாக்கியது. விளைவு! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயமானது.

தவ்ஹீத் கொள்கை தான் தமுமுக வளர்ச்சிக்குத் தடை என்று எழுதியே கொடுத்தனர்.

அந்தக் கடிதத்தை பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயம்

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! தவ்ஹீத்வாதிகளுக்கு, குறிப்பாக தவ்ஹீத் தாயீக்களுக்கு இது உண்மையில் ஒரு விடுதலை உணர்வை அளித்தது.

தவ்ஹீத்வாதிகளை மூலதனமாகக் கொண்டு வளர்க்கப்பட்ட ஒரு இயக்கத்தில் சமுதாய நலனுக்காக தவ்ஹீதை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் அநியாயத்திலிருந்து விடுதலை! அதாவது கண்ணை விற்று ஓவியம் வாங்கும் அக்கிரமத்திலிருந்து ஒரு விடுதலை! இந்த அநியாயங்களுக்கு விடுதலை இயக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயமானது. அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்பது பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தாக உருவெடுத்தது.

இந்த இயக்கத்தில் கண் தான் பிரதானமானது. சித்திரம் இரண்டாவது என்றானது. தவ்ஹீத் என்ற கண்ணுக்குத் தான் இங்கு முன்னுரிமை! முதலுரிமை! மற்றவை பின்னுக்கு!

எந்தச் சமுதாய நலனுக்கு தவ்ஹீத் கொள்கை பாதகமாக உள்ளது என்று நம்மை வெளியே தள்ளினார்களோ அந்த சமுதாயப் பணிகளுக்குத் தவ்ஹீத் ஒரு தடைக்கல் அல்ல என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துவங்கிய இரண்டாண்டு காலத்தில் கும்பகோணத்தில் நிரூபித்தோம்.

இது குறித்து முழு உண்மை அறிய

தமுமுகவில் இருந்து விலகியது ஏன்

தமுமுகவின் கேள்விகளும் பதில்களும்

குலுங்கியது கும்பகோணம்

இது பற்றி விபரமறிய

மேலும் அறிய

"குடந்தை குலுங்கட்டும்'' என்று சொன்னோம். தவ்ஹீதை இந்த இயக்கம் முன்வைத்த காரணத்தால், நாம் இரண்டாவதாகக் கொண்ட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டான். குடந்தை குலுங்கட்டும் என்ற வார்த்தையை அவன் ஒப்புக் கொண்டான். இல்லையெனில் இவ்வளவு கூட்டத்தைக் கொண்டு வந்து குவித்திருப்பானா?

தவ்ஹீத் என்ற பெயரை நமது இயக்கத்தின் பெயரிலேயே தாங்கிக் கொண்டு, சமுதாயப் பிரச்சனைகளுக்காக அழைத்தால் மக்கள் வருவார்களா? என்ற ஐயம் தவ்ஹீத்வாதிகளிடம் இருந்தது. ஆனால் அந்த ஐயத்தை உடைக்கும் விதமாக, மக்களைக் கொண்டு வந்து கொட்டுகிறேன் என்று அல்லாஹ், குடந்தையைக் குலுங்க வைத்தான்.

தேர்தல் நேரத்தில் எங்களுக்காக வாக்குக் கேட்டு உங்களிடம் வர மாட்டோம் என்று சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுபவர்கள் இவர்கள் தான் என்று நம்மை நம்பி மக்கள் பெருக்கெடுத்தார்கள். காவிரியைத் தாங்க முடியாத குடந்தை இந்த மக்கள் கடலைத் தாங்குமா? என்ற கேள்வி எழுமளவுக்கு கும்பகோணத்தில் மக்கள் குழுமினார்கள்.

எதற்கு வாரியம் வாங்குவதற்காகவா? இலட்சக்கணக்கில் பணத்தை வாரிச் சுருட்டவா? இல்லை, தமுமுக மறந்துவிட்ட இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடந்த இந்தப் பேரணியில் கடலாய்ப் பெருக்கடுத்தனர்.

முதலில் ஒரு கட்சியில் கள்ளக் காதல் வைத்துக் கொண்டு குடந்தை பேரணியைக் கூட்டவில்லை.

கையிலே காசு வாயிலே தோசை

இன்றைய ஆளும் திமுக, அன்றைய ஆளும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளில் இடஒதுக்கீட்டை அறிவிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் எங்கள் ஆதரவு என்று இரு கட்சிகளையும் சம தூரத்தில் வைத்திருந்தோம்.

அதிமுக முதலில் பதிலளித்தது. ஆந்திர மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீதிமன்றம் நிறுத்தி வைத்த கசப்பான அனுபவத்தையெல்லாம் கருத்தில் கொண்டு, இடஒதுக்கீடு கோரிக்கையைப் பரிசீலிப்பதற்கான ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் நீதிமன்றம் தலையிடாது. மேலும் இந்த ஆணையம் பரிந்துரைத்தால் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இட ஒதுக்கீடு அளித்தே தீரவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். எனவே இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். கும்பகோணம் பேரணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இது அமைந்தது.

இதன் அடிப்படையில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்காக உழைத்தோம். தேர்தலில் அதிமுக தோற்றாலும், திமுகவுக்குப் பெரும்பான்மை பலமில்லாத வெற்றி கிடைத்தது.

திமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட சென்னையை தனது பிரச்சாரத்தின் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தகர்த்தெறிந்தது. முஸ்லிம்களின் வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில் போட்டியிட்ட கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகியோர் கூட இழுபறி வெற்றியைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்படி ஒரு தொங்கல் வெற்றி கிடைப்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் வலிமையான பிரச்சாரம் தான் காரணம் என்பதை திமுகவே உணர்ந்தது.

திமுக ஆட்சியும் இட ஒதுக்கீடும்

ஆட்சிக்கு வந்தாலும் இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தோம். தானைத் தலைவர் கருணாநிதியும் ஆணையத்தைத் தான் அறிவித்தார். அன்றைய முதல்வர் ஜெயலலிதா இந்தப் பணியைச் செய்த போது, வெற்றுப் பேப்பர் என்று கேலியும் கிண்டலும் செய்த தமுமுக, இப்போது அதை வரவேற்றது.

மேற்படி ஆணையத்தில் ஜெயலலிதா ஒரு முஸ்லிம் நீதிபதியை நியமித்திருந்தார். ஆனால் கருணாநிதி அறிவித்த ஆணையத்தில் முஸ்லிம்கள் யாரும் இடம்பெறவில்லை.

மேலும் இந்த ஆணையம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை ஓராண்டு என்று நிர்ணயித்திருந்தார். ஆனால் கருணாநிதி ஆணையத்தின் காலக் கெடுவை இரண்டு ஆண்டுகளாக மாற்றினார். இதை எதிர்த்து களத்தில் குதித்தது தவ்ஹீத் ஜமாஅத் தான்.

கருணாநிதியின் இந்தக் காலம் தாழ்த்தும் முயற்சியைக் கண்டித்து தமிழகமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெரும் மக்கள் கூட்டம் திரண்டது.

இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ஆணையத்தின் அறிக்கை தாக்கல் பணி நடைபெற்றது. அதில் கூறப்பட்ட பரிந்துரையின் படி இடஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்று காத்திருந்தோம். கண்கள் பூத்துப் போகும் வரை காத்திருந்தோம்.

கருணாநிதி காக்க வைத்து கழுத்தறுப்பதில் வல்லவர். அதனால் இவரிடம் அமைதி காத்தால், இஸ்லாமியர்களுக்கு இதயத்தில் இடஒதுக்கீடு எப்போதும் உண்டு என்று வசனம் பேசியே ஆட்சிக் காலத்தைக் கடத்தி விடுவார். அதனால் இவரிடம் போராடித்தான் பெற வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன்படி 2007 ஜனவரி 29 அன்று குடந்தைப் பேரணியை நினைவூட்டும் விதமாக, தமிழகமெங்கும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினோம்.

 அந்தப் போராட்டத்திலேயே அடுத்தக் கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்தோம். அதன் பிறகும் இடஒதுக்கீடு என்பது கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

சிறை நிரப்பும் போராட்டம்

மூச்சும் இல்லாமல், பேச்சும் இல்லாமல் கிடந்த இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு உயிர் கொடுக்கும் விதமாக, வாழ்வுரிமை மாநாடு நடைபெற்ற தினமான ஜூலை 4ம் தேதியைத் தேர்ந்தெடுத்து அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினோம். ஆண்களும் பெண்களும் வந்து குவிந்தனர். தாங்கள் பெற்ற பச்சிளம் குழந்தைகளுடன் வந்து குவிந்தனர்.

காவல்துறை வேனில் தொட்டில் கட்டித் தங்கள் குழந்தைகளைத் தூங்க வைத்த வரலாறு தமிழகத்தில் இதுவரை எந்தவொரு இயக்கமோ கழகமோ கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சிறை நிரப்பும் போராட்டத்தை எந் அரசியல் கட்சியும் நடத்தியதில்லை என்று உளவுத் துறையினர் வியக்கும் அளவுக்கு மக்கள் சிறை செல்லத் துணிந்தனர்.

டெல்லி சுற்றுலா

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதே வீரியத்துடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாறிவிட்ட தமுமுக, திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழித்துக் கொண்டிருந்தது.

திமுக ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் வாரியப் பதவிகள் வாய்க்காமல் போய்விடும். ஆளும் கட்சியின் கூட்டணி என்ற பெயரில் நடத்தும் அடாவடிகளுக்கு ஆப்பு வந்துவிடும் என்று பயந்த தமுமுக, தனது சுய லாபங்களுக்காக சமுதாயத்திற்குக் குழிபறிக்கும் காரியங்களில் இறங்கியது.

இடஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உண்டு. மாநில அரசுகளுக்கு அதிகாரமே இல்லை என்று மனசாட்சியை விற்று மடமை வாதம் பேசியது தமுமுக.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் படிப்பறிவில்லாமல் மாநில அரசிடம் போய் இடஒதுக்கீடு கேட்கிறார்கள் என்ற நம்மைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தது. கருணாநிதி அரசைக் காப்பாற்றுவதற்காக, நாங்கள் டெல்லியில் போய் இட ஒதுக்கீடு கேட்கப் போகிறோம் என்று மாய்மாலம் செய்தது தமுமுக.

ஊரான் வீட்டுப் பணத்தில் டெல்லிக்கு உல்லாசப் பயணம் சென்றது. டெல்லி சுற்றுலா சென்று மத்திய அரசை ஏதாவது அறிவிக்கச் செய்ததா? என்றால் ஒன்றுமில்லை. அழைத்த பிரமுகர்கள் கூட கல்தா கொடுத்தார்கள். ஒரு குட்டி அணி வகுப்பை நடத்தி விட்டுடெல்லியில் பேரணி நடத்தியதாக பீற்றிக் கொண்டது.

ஏற்கனவே உள்ள சமுதாய இயக்கங்கள் ஆளுங்கட்சியிடம் ஒரு சில சீட்டுக்களை வாங்கி விட்டு, தன்மானத்தை இழந்து பிணமானார்கள் அல்லவா? அது போன்று இவர்களும் வாரியத்தை வாங்கி விட்டு வாய் பொத்திக் கிடக்கின்றார்கள். இவர்கள் வாய் பொத்திக் கிடந்தால் கூடப் பரவாயில்லை. வாரியப் பதவியைப் பெறுவதற்காக சமுதாயத்தின் வாழ்வாதாரக் கோரிக்கையான இடஒதுக்கீட்டையே பலி கொடுக்கத் துணிந்து விட்டார்கள்.

இடஒதுக்கீட்டிற்கான இறுதி யுத்தம் - சட்டமன்ற முற்றுகை

பதவிக்காக யாரிடமும் கையேந்துவதில்லை என்ற கொள்கையில் அன்றிலிருந்து இன்றுவரை உறுதியாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இடஒதுக்கீட்டிற்காக இறுதிவரை போராட முன்வந்தது. அதன் உச்சக்கட்டமாகத் தான் சட்டமன்ற முற்றுகையை அறிவித்தது.

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்படா விட்டால் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் சமயத்தில் சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. இனியும் தாமதிக்க முடியாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி உணர்ந்து இடஒதுக்கீட்டை அறிவிக்க முன்வந்தார். கனிமொழி மூலமாக இட ஒதுக்கீட்டிற்கான சாத்தியக் கூறுகளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்தது. அதன்படி மூன்றரை சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க முன் வந்தார் கருணாநிதி. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

நன்றி அறிவிப்புக் கூட்டம்

இதனிடையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமிக்க போராட்டங்களால் இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகி விடும் என்ற செய்தி கசிய ஆரம்பித்தவுடன், டிசம்பருக்குள் இட ஒதுக்கீட்டை அறிவிக்கவில்லையென்றால் போராட்டம் என்ற கேலிக் கூத்தான அறிவிப்பை தமுமுக வெளியிட்டது.

அது வரை மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறிக் கொண்டிருந்த திமுகவின் சிறுபான்மைப் பிரிவினர் தமுமுக, இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதன் கிரடிட் தவ்ஹீத் ஜமாஅத்திற்குச் சென்று விடும் என்று பயந்து இப்படியொரு அறிவிப்பைச் செய்துள்ளனர் என்று மக்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர்.

இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியானவுடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது ஆதரவை திமுகவுக்கு அளிப்பதாக வாக்குறுதியும் கொடுத்து விட்டு வந்தனர். இதிலும் தங்களின் கேடுகெட்ட அரசியலை நடத்த தமுமுக முன்வந்தனர்.

தவ்ஹீத்வாதிகள் இருந்த வரை தான் தமுமுக சார்பில் இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள் நடைபெற்றன. தவ்ஹீத்வாதிகளைக் கழற்றிவிட்ட பின் இடஒதுக்கீட்டிற்காக உருப்படியான எந்தப் பேராட்டத்தையும் நடத்தவில்லை என்பதை மக்கள் அறிவார்கள். அத்துடன் திமுக ஆட்சிக்கு வந்த பின் வாரியப் பதவி பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததால், சிறுபான்மைப் பிரிவின் இடஒதுக்கீட்டுக் கோரிக்கை சுத்தமாக வீரியமிழந்தது. இதையெல்லாம் மக்களுக்கு மறக்கடிக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதி நன்றி அறிவிப்பு கூட்டத்தை மானங்கெட்டுப் போய் நடத்தினார்கள்.

மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றார்கள். ஜெயலலிதா ஒரு ஆணையத்தை அமைத்த போது வெற்றுப் பேப்பர் என்றார்கள். கருணாநிதி அந்த ஆணையத்தை மாற்றியமைத்த போதும் இதற்கும் இட ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தமில்லை என்றார்கள்.

 அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசு இடஒதுக்கீட்டை வழங்கிய போது, கருணாநிதியின் அறிவிப்பு செல்லாது என்று அறிக்கை விட்டு விட்டு ஒதுங்க வேண்டியது தானே? அவ்வாறு செய்யாமல் கோடிக்கணக்கில் செலவு செய்து நன்றி அறிவுப்புக் கூட்டம் எதற்காக நடத்த வேண்டும்? அப்போது அதிகாரமில்லை என்று சொன்னது, வாரியம் தந்த வள்ளலைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவா?

இப்போது நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்துவது, நாங்கள் தான் வாங்கித் தந்தோம் என்று கூறி மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்காக!

ஏமாற்றமளித்த இடஒதுக்கீடு

இப்படிப்பட்ட துரோகங்களையெல்லாம் தாண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது. அத்துடன் காரியம் முடிந்து விடவில்லை. கருணாநிதி அறிவித்த இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. தமிழக அரசுத் தேர்வாணையம் வெளியிட்ட விளம்பரத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவிகித இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் கொதித்தெழுந்தது.

மூன்றரை சதவிகிதம் வழங்கப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்து, சென்னையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. கண்டனப் பொதுக் கூட்டங்களை நடத்தி சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

ஆனால் ஏற்கனவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் துரோகமிழைத்த தமுமுக இந்த விஷயத்திலும் தனது சமுதாய விரோதப் போக்கைத் தொடர்ந்தது. பதவியையும், பதவி தந்தவர்களையும் காப்பாற்றுவதற்காக வாரியடித்துக் கொண்டு, வரிந்து கட்டிக் கொண்டு, இந்தக் குளறுபடிகளை நியாயப்படுத்தினார்கள்.

ரோஸ்டர் முறை, புரோட்டா மாஸ்டர் முறை என்று வியாக்கியானம் கொடுத்தார்கள். படிப்பறிவில்லாததால் இதுவெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்குத் தெரியவில்லை என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நையாண்டி பேசினார்கள். ஆனால் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடந்திருப்பது உண்மைதான் என்று கருணாநிதியே முரசொலியில் எழுதி, இவர்களின் முகத்தில் கரியைப் பூசினர். இவர்களது சமுதாய துரோகங்களைத் தோலுரித்துக் காட்டினர்.

ஆள்பவரே சொல்லி விட்ட பிறகு இந்த அடிமைகள் என்ன செய்ய முடியும்? படிப்பறிவில்லாதவர்கள் சொன்ன அதே குற்றச்சாட்டை, முதல்வரிடம் சென்று கோரிக்கையாக வைத்துவிட்டு, மானங்கெட்டுப்போய் அதைப் பத்திரிகைச் செய்தியாகவும் அளித்தார்கள்.

இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டும் என்று இந்த படித்த (?) அறிவாளிகள் கருணாநிதியிடம் சொல்லிவிட்டு வந்தார்கள். இவர்களது அடிமைத்தனத்தையும், பதவிக்காக சமுதாயத்தை அடகு வைக்கும் போங்கையும் பார்த்து, "நாங்க எவ்வளவோ பரவாயில்லையப்பா!'' என்று ஒரு லீக் பிரமுகர் சொன்னது தான் இதில் வேடிக்கை!

உண்மையில் ஏனைய அரசியல்வாதிகள் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். அந்த அரசியல்வாதிகள் இவர்களிடம் தோற்றுப் போய்விட்டார்கள் என்றே கூற வேண்டும்.

ஆனால் மக்கள் உண்மை நிலையைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இடஒதுக்கீட்டில் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர்த்து வேறு யாரும் உரிய முறையில் குரல் கொடுக்கவில்லை என்பதை நன்றாக விளங்கி வைத்திருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடிகள் களையப்படுவதற்காக தவ்ஹீத் ஜமாஅத் காத்திருக்கின்றது. தவ்ஹீத் எழுச்சி மாநாட்டிற்குள் அவ்வாறு களையப்படவில்லை எனில், சட்டமன்ற முற்றுகைக்கான தேதி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு, வல்ல ரஹ்மான் ஏற்படுத்திய நிர்பந்தத்தால் சமுதாயப் பணிக்காகக் களமிறங்கிய தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு துரோகங்களை, குழி பறிப்புகளைத் தாண்டி இன்று வரை களத்தில் நிற்கின்றது. இவ்வாறு நிற்பதற்குக் காரணம், நீர்த்துப் போகாத அதன் நிலைபாடு! நிறம் மாறாத நெருப்புக் கொள்கை!   

இத்தனையும் எதற்கு? நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தேர்தலில் சீட் வாங்கவா? இல்லை இந்தச் சமுதாயப் பணிகளைக் கண்டு யாராவது தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பில் தான்.

இனி ஈரமைப்பில்லை! ஓரமைப்பு தான்!

உலகாதாயத்தை மட்டும் லட்சியமாகக் கொண்ட இவர்களிடம் மறுமை லாபத்தை எதிர்பார்ப்பது இலவு காத்த கிளி கதை தான் என்றெண்ணி, சமுதாயப் பாதைக்கு ஓர் அமைப்பு, சத்தியப் பாதைக்கு அதாவது ஏகத்துவ அழைப்புப் பணிக்கு ஓர் அமைப்பு என்று கண்டோம்.

சமுதாயப் பணிக்காகக் கண்ட இயக்கம் காலப்போக்கில் தவ்ஹீத் பணியை ஜீரணிக்கவில்லை. சத்தியத்திற்குக் கிடைத்த கிரெடிட்டை, பலனை மட்டும் அனுபவித்து விட்டு, சாறை உறிஞ்சி விட்டு நம்மை சக்கையாக வெளியே தள்ளியது. முகத்துக்கு நேராகப் புகழ்ந்து தள்ளிய அந்த முனாஃபிக்குகள் முதுகில் குத்தினார்கள். ஏகத்துவம் எனும் வட்டத்திற்குள் நாங்கள் வரமாட்டோம்; நாங்கள் வகுக்கும் வட்டத்திற்குள் தான் ஏகத்துவம் வர வேண்டும் என்ற நிலைபாட்டை நிறுவினர்.

இது தான் நம்மைச் சிந்திக்க வைத்தது.

சத்தியத்திற்கென்று ஒரு அமைப்பைக் கண்டோம். அதில் மதனிகள் சம்பளத்தைக் கவனத்தில் கொண்டு சமுதாயப் பிரச்சனைகளை மறுத்தார்கள்.

சமுதாயத்திற்கென்று ஒரு அமைப்பைக் கண்டோம். அவர்கள் சத்தியத்திற்குக் கதவைத் சாத்துகிறார்கள்.

இனிமேல் நமக்கு முன் இருப்பது, சத்தியத்திற்கு ஓரமைப்பு, சமுதாயத்திற்கு வேறமைப்பு என்ற அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதிவிட்டு, இரண்டிற்கும் ஒரே அமைப்பு என்ற புதிய அத்தியாயத்தைத் துவங்க வேண்டியது தான் என்று முடிவெடுத்தோம்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அது        தான் இன்று நம்மை அரவணைத்துக் கொண்டிருக்கின்ற ஓர் இயக்கம், அந்தப் பேரியக்கம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

இப்போது சத்தியம், சமுதாயம் என்ற இரு சக்கரங்களுடன் இந்த இயக்கம் தமிழகத்தில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வேளையில் ஒரு வேதனையையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

சமுதாயப் பிரச்சனையை நாங்கள் கையில் எடுக்க மாட்டோம் என்று கூறிய அந்த இயக்கமும், ஏகத்துவம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் என்று நம்மை வெளியே அனுப்பிய பங்காளி இயக்கமும் நாம் வெளியே வந்த பிறகு, பக்காவாகக் கூட்டாளிகளாகிக் கொண்டன. எதற்கு? நம்மை எதிர்ப்பதற்கு!

முற்றும்

06.11.2011. 10:31

தவ்ஹீத்வாதி என்ற சொல் ஹதீஸில் உள்ளதா

தவ்ஹீத்வாதி என்ற சொல் ஹதீஸில் உள்ளதா

கேள்வி தவ்ஹீத்வாதி என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா?

தொடர்ந்து படிக்க 24.10.2011. 13:22

ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே!

ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே!

அல்ஜன்னத் மாத இதழில் பீ.ஜைனுல் ஆபிதீன் ஆசிரியராக இருந்த போது 1993ல் எழுதிய தலையங்கம். வரலாற்றுப் பதிவாக இதை வெளியிடுகிறோம். இதைத் தேடி எடுத்து கம்போஸ் செய்து அனுப்பித் தந்த இலங்கை ஹஃபீல் மவ்லவி அவர்களுக்கும் இலங்கை ரிசாஃப் அவர்களுக்கும் நன்றிகள்

P. ஜைனுல் ஆபிதீன்

இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களைவிட அதிக சலுகையும் சுதந்திரமும் பெற்று வருகின்றனர்என்று இந்து மத வெறியர்கள் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இத்தகைய பிரச்சாரத்தின் மூலம் அப்பாவி இந்துக்களை சிறுபான்மையினருக்கு எதிராகத் திரட்டி வருகின்றனர்.

சிறுபான்மை மக்கள் அதிக சலுகைகள் பெறுவது ஒருபுறமிருக்கட்டும். அவர்கள் உரிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளார்களா? அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுகிறார்களா? இல்லை! நிச்சயமாக இல்லை! இரண்டாந்தரக் குடிமக்களைப் போலவே சிறுபான்மையினர் நடத்தப்பட்டு வருகின்றனர்.

அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும் மதச்சார்பின்மை என்பது சிறுபான்மையினரையும் உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்கு மட்டுமே இந்திய அரசியல்வாதிகளுக்குப் பயன்பட்டு வருகிறது.

அல்லாஹ்வின் இல்லம் தகர்க்கப்பட்டதன் காரணமாக மடடும் நாம் இந்த முடிவுக்கு வரவில்லை. பாபர் பள்ளிவாசல் இடிக்கப்படுவதற்கு முன்னர் நடந்த நாடகங்கள், அதன் பின்னர் நடந்துவரும் நாடகங்கள் யாவும் இதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

பாபர் பள்ளிவாசல் பிரச்சினையில் மட்டுமின்றி எத்தனையோ பிரச்சினைகளிலும் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை நாம் காணமுடிகின்றது.

மதச் சார்பற்ற ஒரு நாட்டில் - ஒரு மானிலத்தின் - தமிழ்நாட்டின் - அரசுச் சின்னமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் கோபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் ஒரு மதத்தினரின் வழி பாட்டுத்தலம் எப்படி அரசுச் சின்னமாக இருக்க முடியும்? சிறுபான்மை மக்களின் உள்ளத்தில் ஐயப்பாட்டைத் தோற்றுவிக்கும் இந்தப் போக்கு எதைக் காட்டுகின்றது?

எல்லா மதத்தவர்களுக்கும் பண்டிகைகள் வருகின்றன. மற்ற மதத்தினரை விடக் குறைவான எண்ணிக்கையிலேயே முஸ்லிம்களின் பண்டிகைகள் அமைந்துள்ளன. மதச்சார்பற்ற நாட்டில் தீபாவளி பண்டிகையின் போது மட்டும் இருமடங்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றனவே! இதற்குப் பெயர்தான் மதச்சார்பின்மையா? எந்தப் பண்டிகைகளுக்கும் சலுகை காட்டாமல் இருந்தால் மதச் சார்பின்மை என்று கூறலாம். அல்லது எல்லா மதத்தவர்களின் பண்டிகைகளுக்கும் இந்த சலுகைகள் வழங்கப்பட்டிருந்தால் அதையும் மதச் சார்பின்மை என்று கூறலம். இது எப்படி மதச் சார்பின்மையாக முடியும்?

அரசுப் பணத்தில் வேதாகமக் கல்லூரி நடத்தப் போவதாக அரசே அறிவுப்புச் செய்யும். ஹிந்து மத வேதங்களைப் படித்துக் கொடுக்க அரசுப் பணத்தைச் செலவு செய்வது எப்படி மதச் சார்பின்மையாக இருக்க முடியும்? ஹிந்துக்கள் மட்டும்தான் அரசுக்கு வரி செலுத்தி வருகின்றனரா?

ஹிந்துக் கோவில்களைப் பராமரிக்க மதச்சார்பற்ற நாட்டின் ஒரு மாநில முதல்வரால் நிதி வசூலிக்கப்படுகிறதே! இதுதான் மதச் சார்பின்மையா? மத்திய அரசுக்குச் சொந்தமான மத்திய வங்கி ஒன்று அதற்கு நிதி வழங்குகின்றதே! இதுதான் மதச் சார்பின்மைக்கு அடையாளமா?

அரசுச் செலவில் கோவில்களைப் பாதுக்க தனிப்படை அமைப்பதும் மதச் சார்பின்மைதானா?

மகாமகக்குளம் அரசுப் பணத்தில் ஆழப்படுத்தப்படும்! தண்ணீர் நிரப்பப்படும்! ஆடிப்பெருக்கு அன்று மட்டும் காவிரி புரண்டு ஓடும்! ஸ்ரீரங்கத்தில் இராஜ கோபுரம் கட்டப்பட்டு அதையொட்டி நடத்தப்பட்ட விழா அரசுச் செலவிலேயே நடைபெறும்! மதச்சார்பற்ற நாட்டின் ஜனாதிபதி அரசுச் செலவில் வந்து கலந்து கொள்வார்! இதையெல்லாம் மதச் சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக சிறுபான்iமை மக்கள் கருதிக் கொள்ள வேண்டும்!

அகில பாரத இசை, கர்நாடக இசை என்றெல்லாம் தொலைக்காட்சியும், வானொலியும் இந்து மதப்பிரச்சாரம் செய்யும்! அதை மதச் சார்பற்ற நாடு என்பதற்கு அடையாளமாக நாம் கருதிக் கொள்ள வேண்டும்.

கம்பராமாயணமும், மகாபாரதமும் தொலைக்காட்சியில் காட்டப்படும், “திப்புசுல்தான் வாள்மட்டும் இது முழுக்க முழுக்க கற்பனையே என்ற டைட்டிலுடன் ஒளிபரப்பப்படும். நடந்த நிகழ்ச்சியை கற்பனை எனவும், கற்பனைகளை உண்மை எனவும் விளம்பரப்படுத்துவது ஒரு மதச்சார்புக்கு அடையாளமாக இல்லையா?

இந்து மத வேதங்களும், புராணங்களும் சமஸ்கிருத மொழியல் அமைந்துள்ளது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக செத்த மொழிக்கு அரசுப் பணத்தில் உயிரூட்ட முயற்சிப்பது மதச் சார்பின்மையாகுமா?

அரசு அலுவலகங்களுக்கு உள்ளேயே ஹிந்து மத தெய்வங்களின் சிலைகள் நிறுவப்படும்! படங்கள் மாட்டப்படும்! அவற்றுக்கு ஆராதனையும் செய்யப்படும்! காவல் நிலையங்களுக்குள்ளேயே கோவில் கட்டப்படும்! அரசு நிகழ்ச்சிகள் ஹிந்து மத ஆச்சாரப்படி குத்து விளக்கேற்றி விஷேச பூஜையுடன் தெடங்கும்! இவற்றைக் கூட மதச் சார்பின்மை என்று நாம் நம்பியாக வேண்டும்!

விவேகானந்தர் என்பவர் இந்து மதச் சாமியார்களில் ஒருவர். அவருக்காக கன்னியாகுமரியில் விழா நடத்தப்படும்! பிரதமரும், ஐந்து மாநில முதல்வர்களும் அதில் கலந்து கொள்வார்கள். ஒரு மதத்தின் சாமியார் பற்றிய விழா மதச்சார்பின்மைக்கு எடுத்துக் காட்டு என்று இவர்கள் காதில் பூச்சுற்றுவார்கள். சிறுபான்மையினர் பேசாமல் காதுகளைக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

சமீபத்தில் தமிழக அரசின் செய்திக் குறிப்பு ஒன்று, மதச் சார்பின்மை எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. தினமணியில் (12-12-92-மதுரைப் பதிப்பு) வந்த செய்தியைப் படியுங்கள்.

மருதமலை கோவில் திருப்பணிக்கு 1.09 கோடி அனுமதி.

சென்னை டிச-11 கோயம்பத்தூர் அருகே உள்ள மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தங்கத்தேர் செய்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா 71 லெட்சம் அனுமதித்துள்ளார், இது தவிர கோவில் திருப்பணிக்காக 38 லெட்ச ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தினமணி)

ஏதோ இந்து அறநிலையத் துறையிலிருந்து இந்த நிதி ஒதுக்கப்பட்டதாக எண்ணி ஆறுதலடைய வேண்டாம். 11-12-92 மாலை மாநிலச் செய்தியில் கைத்தறித் துறையிலிருந்து இந்த நிதி ஒதுக்கப்படுவதாக வானொலி தொpவிக்கின்றது.

கைத்தறித் துறைக்கும், மருதமலைக் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்? மதச்சார்பற்ற நாட்டில் இது அக்கிரமம் இல்லையா?

தழிழகத்தை ஆளும் அ.இ.அ.தி.க வின் பொதுக்குழு கூடுகிறது. மதச்சார்பற்ற நாட்டின் முதல்வர் ஜெயலலிதா திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக தமிழக அரசு மண்டபம் கட்டித் தரும்என்று அறிவிக்கிறார்.

இவையெல்லாம் இந்தியாவில் மதச் சார்பின்மைக்கு இருக்கும் மதிப்பை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

பாபர் மசூதி தகர்க்கப்பட்ட விஷயத்துக்கு வருவோம். தகர்க்கப்படுவதில் உடந்தையாக காங்கிரஸ் நடந்து கொண்டதை அனைவரும் அறிவோம். மசூதி தகர்க்கப்படுவதற்கு முன்பு இவர்கள் நடந்து கொண்ட விதம். அதன் பிறகு அரசியல் கோமாளி நரசிம்மராவ் நடத்தும் நாடகம் ஆகியவைகளையும் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

மதச் சார்பற்ற நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரு, அவரது புதல்வி இந்திரா, அவரது புதல்வன் ராஜிவ், இன்றைக்கு நரசிம்மராவ் ஆகியோர் மதச்சார்பின்மையைக் காலில் போட்டு நசுக்கி வந்தனர் என்பதில் ஐயமில்லை.

 1949ல் பாபர் பள்ளிவாசலுக்குள் ராமர் சிலை அத்து மீறி சட்ட விரோதமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. மதச்சார்பின்மை பற்றி வாய் கிழியப் பேசும் காங்கிரஸ் தான் மத்தியிலும், உ.பி மாநிலத்திலும் அப்போது ஆண்டது.

அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்குள் செல்ல தடுக்கப்பட்டார்கள். அப்போதும் அதிகாரம் காங்கிரஸ் கையில்தான்.

பிறகு பள்ளிவாசலுள் வைக்கப்பட்ட சிலைக்கு பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டது. இதுவும் காங்கிரஸின் ஆசியோடுதான் நடந்தது.

செங்கல் ஊர்வலம் விட்டு, பல உயிர்களைக் குடித்துவிட்டு ராமர் கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது! அப்போதும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தது மதச்சார்பின்மையைக் காக்கும்(?) காங்கிரஸ்தான்.

கட்டுமானப்பணி துவங்கிய போதும் , அல்லாஹ்வின் இல்லம் இடிக்கப்பட்டபோதும் மாநிலத்தை பிஜேபி ஆட்சி புரிந்தாலும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் காங்கிரஸ்தான் இருந்தது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பிஜேபியின் மாநில அரசின் மீது நரசிம்மராவ் பழிசுமத்த முடியும். மாநில அரசு என்பது தனிநாடு அல்ல. அது தன்னிஷ்டத்துக்கு எதையும் செய்ய முடியாது. மத்திய அரசு நினைத்திருந்தால் அதை முன்கூட்டியே தடுத்திருக்க முடியும். நரசிம்மராவின் இந்தப் புலம்பலை நம்பித் தொலைப்போம்.

அதன் பிறகு நடந்தது என்ன? இடிக்கப்பட்ட இடத்தில் சாவகாசமாக ராணுவத்தின் பாதுகாப்புடன் சிறிய கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கு யார்மீது பழியைப் போடப் போகிறார்? அதன் பிறகு பூசாரிக்கு மட்டும் பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டதே? அது யாருடைய ஆட்சியில்?

பாபர் மசூதி கட்டித் தரப்படும் என்று வாக்களித்து விட்டு அதே இடத்தில் கட்டித் தருவதாக அரசு கூறவில்லை என்று அதிகாரிகளை விட்டு அறிவிக்கச் செய்தது யாருடைய ஆட்சியில்? பள்ளிவாசல் கட்டித் தருவது பற்றி கலந்து பேசி முடிவெடுக்கப்படும், என்று அந்தர் பல்டி அடித்தது துரோகி நரசிம்மராவ் அல்லவா?

 27.12.92 அன்று பக்தர்களை தரிசனத்துக்காக அனுமதிக்க பைஸாபாத் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்கிறது! அதை நடைமுறைப்படுத்துகின்றது! திருவனந்தபுரம் வந்த நரசிம்மராவிடம் நருபர்கள் இது பற்றிக் கேட்கின்றனர்.

அவர் அளித்த பதிலைப் படியுங்கள்!

 “நாங்கள் எந்த அனுமதியையும் அளிக்கவில்லை. மைய அரசு என்ற முறையில் அத்தகைய அனுமதி எதையும் அளிக்கவில்லை

   “தரிசனத்துக்கு அனுமதியளிப்பதும் ஊரடங்கு பிரப்பிப்பதும் மைய அரசின் பணியல்ல

   “அயோத்தியில் தகராறுக்குட்பட்ட இடத்தில் தற்காலிகமாகக் கட்டப்பட்டுள்ள அமைப்பில் வைக்கப்பட்டுள்ள பலராமர் சிலை தரிசனத்துக்கு அனுமதியளித்தது பைஸாபாத் மாவட்ட நிர்வாகம் தானே தவிர மைய அரசு அல்ல

முஸ்லிம்களை முட்டாள்களாக்கும் விதமாக இத்தகைய தத்துவங்களை உதிர்க்கிறார். சென்ற மாத தலயங்கத்திலேயேஇந்த துரோகியை நம்பமுடியாதுஎன்று எச்சரித்திருந்தோம். அந்த எச்சரிக்கையை மெய்படுத்தியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் மனப்பான்மை கொண்ட அவரை இனியும் முஸ்லிம்கள் நம்பப்போகிறார்களா? இனியும் ஏமாந்து கொண்டே இருப்பது என்று முடிவு செய்யப்போகிறார்களா?

மாநிலத்தில் நடக்கும் அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்த முடியாத கையாளாகாத நரசிம்மராவ் பிரதம பதவிக்குத் தகுதியானவர்தானா? இதை எல்லா சிறுபான்மையினரும் சிந்திக்க வேண்டும்.

இந்த துரோகிகள் தங்களை இவ்வளவு தெளிவாக அடையாளம் காட்டிய பிறகும், பதவி வெறிபிடித்த முஸ்லிம் லீக் கட்சியினர் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகிக்கின்றனர். தங்களின் பதவியைப் பெரிதாகக் கருதும் சந்தர்ப்பவாத முஸ்லிம் லீக்கை இனியும் நம்ப வேண்டுமா?

இந்தச் சமுதாயம் இதன் பிறகுகூட துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.  சமீபத்தில் கேரளத்தில் நடத்தப்பட்ட முஜாஹித்களின் மாநாட்டில் கருனாகரன், மற்றும் மத்திய அமைச்சர்கள், முஸ்லிம் லீக்கினர் அழைத்துக் கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். இவ்வளவு சீக்கிரம் தங்களுக்கு எற்பட்ட அவமானத்தை மறந்துவிட்டனர். குர்ஆன், ஹதீஸை அடிப்படையாகக் கொண்ட அமைப்பினருக்கே சொரணை இல்லையென்றால் மற்றவர்களின் நிலை என்ன?

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் போலி மதச்சார்பின்மை பேசுவோருக்கு நாம் உணர்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்ட வேதனையில் உணர்ச்சி வசப்பட்டு பாகிஸ்தானில் சில ஹிந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன. பாகிஸ்தான் தன்னை மதச்சார்பற்ற நாடு என்று கூறவில்லை. இஸ்லாமிய நாடு என்றே பிரகடனம் செய்துள்ளது. ஆனால் பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட கோவில்களை அரசுச் செலவில் கட்டித் தரும்பணி துவங்கி விட்டதாக தினமணி 28-12-92 செய்தி கூறுகின்றது.

மதச்சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்ட இந்தியாவில் இந்நேரம் இடிக்கப்பட்ட பள்ளிவாசலைக் கட்டி முடித்திருக்க வேண்டாமா? இது பற்றி இன்னும் முடிவே செய்யவில்லையாம்! பிரதமர் திருவாய் மலர்ந்துள்ளார்!

 “அயோத்தியில் ராமர் கோவில், மற்றும் மசூதி கட்டும் பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு அறக்கட்டளைகளை மைய அரசு விரைவில் அமைக்கும்என்று பிரதமர் அறிவித்தார்.

எவ்வளவு விரைவில் இந்த அறக்கட்டளைகள் அமைக்கப்படும்? என நிரூபர்கள் கேட்டதற்கு சில நாட்கள் அவகாசம் தாருங்கள் என்றார்.

 “அறக்கட்டளைகள் அமைப்பதற்கு சிறிது காலம் ஆகும்

பள்ளிவாசல் கட்டுவதற்கு அவகாசம் கேட்கவில்லை. பள்ளிவாசல் கட்டுவதற்காக ஒரு அறக்கட்டளை அமைக்கப் போகிறாராம்! அது அமைவதற்கே சிறுது காலம் பிடிக்குமாம்! ஏன் இந்த அவகாசம்? முஸ்லிம்கள் அதற்குள் அனைத்தையும் மறந்து விடுவார்கள் அல்லவா? அதற்குத் தான் ஐயாவுக்கு அவகாசம் தேவைப்படுகின்றது.

மதச்சார்புள்ள நாட்டின் நடவடிக்கையை விடவும் மேசமாக மதச்சார்பற்ற நாட்டின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

மற்றொரு செய்தியைப் படியுங்கள்! இது தினமணியின் தலையங்கத்தில் (26.12.92) இடம் பெற்றுள்ளது.

 “அதே வேளையில் ஐக்கிய அரபுக் குடியரசு நாடு 2000 பாகிஸ்தானியரை நாடு கடத்தியதானது பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அயோத்தி சம்பவத்துக்காக அரபு நாட்டிலிருந்த ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களையும் தாக்கியமைக்காக அவர்களை அந்த அரசு நாடு கடத்தியது. தனது வளர்ச்சித் திட்டங்களை இந்த வெளியேற்றம் பாதிக்கும் என்று தெரிந்திருந்தும் கூட ஐக்கிய அரபுக் குடியரசு மதக் கலவரத்தைத் தனது நாட்டில் தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுத்தது. (தினமணி தலையங்கம்)

இதை ஒரு முறை அல்ல! பல முறை படியுங்கள்! பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்காக ஐக்கிய அரபுக் குடியரசு இந்துக்களை நாட்டை விட்டு வெளியேற்றவில்லை. கோவில்களைச் சேதப்படுத்தியதற்காக முஸ்லிம்களை வெளியேற்றுகின்றது! இதனால் தனது நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கும் என்று தெரிந்தே இந்த நடவடிக்கையை எடுக்கின்றது. எத்தகைய நடவடிக்கை! நாடு கடத்தும் நடவடிக்கை!

ஐக்கிய அரபுக் குடியரசு மதச்சார்பின்மையை அரசியல் சாசனத்தில் எழுதிவைக்கவில்லை. இஸ்லாமிய நாடு என்றே அது தன்னைக் கூறிக் கொள்கிறது! அப்படி இருந்தும் அந்த நாடு பாரபட்சமற்ற கடுமையான நடவடிக்கை எடுத்தது. காரணம் அங்கே நடப்பது சட்டத்தின் ஆட்சி.

வெட்கங்கெட்ட இந்திய ஆட்சியாளர்கள் பள்ளியை இடித்தவர்களுக்கு எதிராக எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் காணோம்! உயர் நீதிமன்ற உத்தரவையும், அரசியல் சாசனத்தையும் அவமதித்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உயிரைக் குடித்தது போலீஸும் ராணுவமுமே! கரசேவையில் கூட இந்தக் கயவர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். இவர்களைக் களை எடுக்கக் காணோம்.

நடைமுறைப்படுத்தப்படாத ஏட்டளவு மதச்சார்பின்மையை விட நடைமுறைப்படுத்தப்படும் ஐக்கிய அரபுக் குடியரசின் மதச்சார்புக் கொள்கை ஆயிரம் மடங்கு உயர்ந்தது. அறிவுடையோர் இந்த முடிவுக்கே வருவார்கள்.

மொத்தத்தில் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக இந்த நாட்டில் ஒருநாடகம் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள், குறிப்பாக காங்கிரஸ் - அதிமுக வினர் மிகவும் சிறப்பாக நடிக்கின்றனர். சொரணையற்ற சமுதாயம் நடிப்பை உண்மை என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கின்றது.

(அல் ஜன்னத் ஜனவரி 1993)

25.03.2012. 08:02

மீண்டும் மீண்டும் நழுவும் சான், விடா

மீண்டும் மீண்டும் நழுவும் சான், விடாமல் துரத்தும் TNTJ!

சான் கும்பல் எப்படியாவது விவாதத்தில் இருந்து நழுவி ஓடும் வகையில் விவாதத்துடன் தொடர்பு இல்லாத விஷயங்களை எழுதி அதைக் காரணமாக்கி ஓட்டம் எடுக்க நினைக்கிறது. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்காமல் அவர்கள் ஒப்புக் கொண்ட தலைப்பில், ஒப்புக் கொண்ட ஊரில், அவர்கள் ஏற்பாடு செய்யும் மண்டபத்தில் விவாதம் நடத்த தயார் என்று அறிவித்திருப்பது சான் அமைப்பினருக்கு மட்டுமில்லாமல், கிறித்தவ சபைகளுக்கும் அச்சத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல் தலைப்பில் கிறித்தவ் மக்கள் காரித்துப்பியதும் இந்த விவாத சீடியைப் பார்த்து விட்டு கிறித்தவ மக்கள் கண்ணீர்விட்ட சம்பவங்களும் ஏராளம். ஏற்கனவே குர் ஆன் குறித்த விவாதத்தில் நம் தரப்பு வாதங்களை லைவ் ஆக ஒளிபரப்பிய பின்னரும் அவர்கள் அதற்கான பதிலைத் தயாரித்துக் கொண்டு வர வாய்ப்பு இருந்தும் தவ்ஹீத் ஜமாஅத் அதே தலைப்பில் விவாதிக்க முன்வந்திருக்கிறது. ஏதாவது நொண்டிச்சாக்குகளைச் சொல்லி ஓட நினைத்தாலும் அவர்களை தவ்ஹீத் ஜமாஅத் விடப்போவதில்லை. இதனால் தான் விவாத்துடன் தொடர்பு இல்லாமல் அவர்கள் எழுதும் கிறுக்குத் தனங்கள் எதற்கும் பதில் எழுதாமல் விவாதம் குறித்து மட்டும் எழுதி அவர்கள் விவாதத்துக்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என்ற் நிர்பந்தத்தை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியுள்ளது.

அதன் இறுதிக் கட்டமாக நேற்று (3-2-2012)  சானுக்கு தவ்ஹீத் ஜமாஅத் எழுதிய கடிதம்

தமிழில்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை  ஏற்படுத்திக்கொள்ளாதஎல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால்…

சான்குழுவினருக்கு,

ஏற்பாடுகளைத் துவங்கிவிட்டோம், மண்டபம் பார்த்துவிட்டோம்,

காவல் துறை அனுமதிக்கு விண்ணப்பித்துவிட்டோம்.

இன்னின்ன தேதிகளில் விவாதத்தை வைத்துக் கொள்வோம் என்று உங்களிடம் இருந்து பதில் வரும் என எதிர்ப்பார்த்தோம்.

ஆனால், நீங்கள் அனுப்பிய மார்ச் 2 ம் தேதிய மெயிலில் வழக்கம்போல் வழவழா கொள கொளா என ஏதேதோ எழுதியுள்ளீர்கள். விவாத ஏற்பாடுகளைச் செய்யாமல் சம்பந்தமின்றி எதையாவது எழுதி திசை திருப்புவீர்கள் என்பதால் தான் விவாதத்துடன் சம்மந்தமில்லாத விஷயங்களுக்கு பின்னர் பதில் தருகிறோம், இப்போது ஏற்பாட்டை கவனியுங்கள் என்று சொன்னோம். 

திருக்குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் இரண்டாம் தடவை மீண்டும் ஒருமுறைவிவாதம் செய்வதற்கும் தயார் என்று நாங்கள் எழுதிய பின்னரும் ஏற்பாடுகளைத் துவங்காமல் நீங்கள் தயங்குவது ஏன்?

பிப்ரவரி 28 மற்றும் பிப்ரவரி 29 ஆகிய தேதிகளில் நாங்கள் அனுப்பிய இரண்டு மெயில்களில் உள்ள கருத்துகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அவற்றில் மாறுதல் இல்லை. நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முழுமைபடுத்த வேண்டும், எல்லாதலைப்புகளிலும் விவாதிக்க வேண்டும் என்ற காரணத்தால் நாங்கள் கூடுதலான சில நிபந்தனைகளைச் சொன்னோம். அந்த நிபந்தனைகளையே சர்ச்சையாக்கிக் கொண்டு குர்ஆன் தலைப்பில் மீண்டும் விவாதிப்பதற்கு நீங்கள் இழுத்தடிப்பதால் தற்காலிகமாக அவற்றை தளர்த்துகிறோம்.

  •  உங்கள் கொச்சியிலே போலீஸ் அனுமதியைப் பெறுவதற்கு நீங்கள் தனித்தே பொறுப்பேற்றதால் நீங்களே முறையான அனுமதியைப் பெற்றுவாருங்கள்.
  •  விவாதம் நடக்கும் தேதிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக பொறுப்புள்ள ஒரு அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட அதன் நகலை எங்களுக்கு அனுப்பித்தரவேண்டும்.
  •  காவல்துறையில் அனுமதி பெறும்போது முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இந்த தலைப்பில் நடத்தப்படும் விவாதத்துக்கு அனுமதி என்று தெளிவாக இருக்கவேண்டும். தெளிவற்ற முறையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி என்பது போல் இருக்கக்கூடாது.
  •  போலீஸ் அனுமதியில் தொலைக்காட்சியிலும் இன்டர்நெட்டிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யலாம் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.
  • ஒப்புக்கொண்டதற்கு ஏற்ற மண்டபமாக இருந்தால் போதும். நாங்கள் பார்வையிடத் தேவையில்லை.
  • மார்ச்17, 18 அல்லது மார்ச்24, 25 அல்லது மார்ச்31, ஏப்ரல்1 அல்லது  ஏப்ரல்7, 8 அல்லது ஏப்ரல்14, 15 அல்லது ஏப்ரல்21, 22 அல்லது ஏப்ரல்28, 29

ஆகிய ஏதாவது தேதிகளில் உங்களுக்கு வசதியான தேதியைத் தேர்வு செய்து எங்களுக்கு தாமத மின்றி தெரிவிக்கவும்.

இப்படிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 

ஆங்கில மொழிபெயர்ப்பு..

In the Name of Allah; the Most Beneficent, the Most Merciful and the Almighty who did not make any

Son for Himself

SAN Friends,

We expected the following reply from you:

“We have started making arrangements, booked the Auditorium, applied for Police permission, will

debate in the so and so dates”

But,

As usual, you have hauled unnecessarily, in the mail you sent on March 3rd. Since, you will deviate by

writing unnecessary things and evade from debate, we informed you that we will be replying to the

things irrelevant to the debate later and asked you to make necessary arrangements for the debate.

Why are you hesitant even after we showed our readiness to you to debate on the topic “Is Quran God’s

word?” for the second time?

We are firm on the points outlined in the emails we sent on February 28th and February 29th. There is no

change to this.

In order to fulfill the agreements we made and debate on all topics; we put forth certain additional

conditions.

Since you are making it as a controversy to evade from debating on the topic Quran, we are postponing

those temporarily.

a) As you took sole responsibility to take Police permission, get the necessary permission on your

own.

b) You should be sending us the Xerox copy of the permission letter attested by a Responsible

officer before 15 days of the date of debate.

c) The Police order should have clear permission for the debate between Muslims and Christians

on the so and so topics and not have vague permission for “some program”.

d) The order should also permit live telecast on TV and internet

e) It is sufficient if the Auditorium is as per our agreement and we don’t have to examine

f) Select your convenient dates from the following and respond to us without any delay:

March 17th-18th or March 24th-25th or March 31st- April 1st, or April 7th-8th, or April 14th-15th, or

April 21st – 22nd or April 28th- 29th.

04.03.2012. 13:52

மீண்டும் மீண்டும் ஓடினாலும் விடமாட்

விவாதத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டுமே சான் குழுவினர் கவனத்தில் கொண்டு கடிதம் எழுதுகின்றனர் என்பதற்கு மற்றுமொரு சான்றாக நேற்றையை (29-2-2012) அவர்களது மெயில் அமைந்துள்ளது.

”சரி நீங்க சொன்னபடியே உங்க மாநிலத்துக்கு வந்து நீங்க சொன்ன தலைப்புல விவாதம் பன்ன நாங்க ரெடி நீங்க ரெடியாக? எப்பன்னு சொல்லுங்க என தெளிவாக அனுப்பிய மெயிலுக்கு அவர்கள் உண்மையில் விவாதம் செய்ய தயாராக இருந்தால் என்ன பதில் எழுதி இருக்கு வேண்டும் இன்ன தேதியில் வைத்துக் கொள்ளலாம் என எழுதி இருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் அவர்கள் அவ்வாறு எழுதவில்லை.

 

அவர்களின் மழுப்பல் மெயில்:

Let the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in flesh was known by the name Lord Jesus Christ be glorified forever and ever. Amen.

Dear Friends at TNTJ,

We are in receipt of your partial reply dated February 28, 2012 to our email dated February 24, 2012. As you have mentioned that you will be sending another reply to our email dated February 24, 2012, we will wait to receive that as well before we respond to this partial reply.

If you cannot reply by March 3 as we requested, and require more time to respond fully, please take time till March 6. However, if you still require more time, do let us know by when you will be able to fully respond.

Or alternatively, if you have a change of mind and wants us to treat this reply as your full and final response to our email dated February 24, 2012, do let us know and we will respond to your suggestions. If not, we will respond to this partial email along with the response for your full email which is yet to be received.

Looking forward for a debate on Quran.

Thanks and regards,

SAN

இரு சாராரின் கடித போக்குவரத்துக்களை படிக்கும் எவரும் ”சான் குழுவினர் விவாதத்திலிருந்து தப்பிக்க மழுப்பிக் கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு விவாதம் செய்ய திராணி இல்லை” என்றே கருதுவார்கள்

அந்த அவர்களது மழுப்பழுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றுமொரு அதிரடி பதில் மின்னஞ்லை நேற்றே (29-2-2012) அனுப்பியது.

 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்ளாத எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

சான் குழுவினருக்கு,

உங்களது 24.02.2012 மெயிலில் உள்ள பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் பதில் சொல்வது அவசியமாகும். எனினும், விவாதம் நடைபெற வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கமாகும். அதனால் தான் விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயங்களுக்கு பதில் எழுதுவதை தள்ளிவைத்து விட்டு விவாதம் தொடர்பான விஷயங்களை மட்டும் எழுதினோம்.

விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயத்துக்குப் பதில் எழுதிக் கொண்டு விவாதத்துக்கு வராமல் நீங்கள் திசை திருப்புவதற்கு இடம் தரக்கூடாது என்பதே இதற்குக் காரணமாகும்.

அதனால்தான் உங்களது பொய்யான செய்திகளுக்குப் பதில் சொல்லும் எங்களது உரிமையைச் சற்று தாமதப்படுத்திவிட்டு, விவாதம் செய்வதற்கு நாங்கள் தயார் நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் என்று விவாதத் தேதிகளையும் குறிப்பிட்டு உங்களுக்கு நேற்று பதில் அனுப்பினோம்.

இதன் பிறகும் விவாத ஏற்பாடுகளைச் செய்யாமல் உங்களுக்கு வசதியான தேதிகளையும் குறிப்பிடாமல் வழக்கம் போல் மழுப்பலான பதிலை அனுப்பியுள்ளீர்கள்.

உங்கள் பொய்களுக்குப் பதிலளிக்கும் உரிமையை நாங்கள் விட்டுத் தரமாட்டோம். விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயங்களுக்கு விவாதத்தின் போது கூட நாங்கள் பதிலளிக்கலாம். அல்லது விவாதம் முடிந்த பின்னர் கூட நாங்கள் பதிலளிக்கலாம். அது எங்கள் வசதியைப் பொருத்த விஷயம். அந்தப் பதிலுக்கும் தற்போது நடக்க வேண்டிய விவாதத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

எங்கள் பதில் என்னவாக இருந்தாலும் விவாத ஒப்பந்த்துக்கு அது சம்மந்தமில்லாத விஷயம் என்பதால் உங்களது கொச்சியில் உங்களது ஏற்பாட்டில் நீங்கள் சொல்லும் தலைப்பிலேயே விவாதம் செய்யத் தயார் என்று நாங்கள் ஏற்கனவே எழுதிய நிலைபாட்டுக்குத் தான் நீங்கள் பதிலளிக்க்க் கடமைப்பட்டுள்ளீர்கள்.

விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத உங்களது பொய்களை அம்பலப்படுத்தி நாங்கள் எப்போது எழுதுகிறோமோ அப்போது நீங்கள் பதில் தந்தால் போதும். அது உங்களைப் பொய்யர்கள் என்றும் உலகிற்குத் தோலுரித்துக் காட்டும் கடிதமாகத் தான் அது இருக்குமே தவிர விவாத ஒப்பந்தம் சம்பந்தமானவை அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே தாமதமில்லாமல் கொச்சி காவல்துறை ஆணையரை அணுகி அனுமதி ஆணையைப் பெற்று அரங்கை முன்பதிவு செய்து விவாத ஏற்பாடுகளைச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே எழுதிய மெயிலின் வாசகத்தை உறுதி செய்யும் வண்ணமாக அதன் முக்கிய பகுதியை கீழே தருகிறோம்.

  • ஆகவே, உங்கள் கொச்சியிலேயே வந்து மீண்டும் ஒரு முறை குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் விவாதிக்கத் தயாராக உள்ளோம். ஏற்கனவே நடந்த இந்த விவாதத்தை நாங்கள் லைவ் ரிலே பண்ணினோம். அதை நீங்கள் முழுமையாகப் பார்த்தீர்கள். முடிந்தால் அதற்குப் பதில் தயாரித்து வாருங்கள்.
  • இந்த விவாதம் முடிந்த மறு வாரம் சனி ஞாயிறுகளில் ஓடி ஒளிந்தது யார் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற வேண்டும்.
  • போலீஸ் அனுமதியைப் பெறுவதற்கு நீங்கள் தனித்தே பொறுப்பேற்றதால் நீங்களே முறையான அனுமதியைப் பெற்று விவாதம் நடக்கும் தேதிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அதன் ஒரிஜினலை எங்களுக்கு அனுப்பித் தரவேண்டும்.
  • எங்கள் தரப்பில் 150 நபர்கள் கலந்து கொள்வார்கள். (அவர்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு வசதியாக போலீஸ் அனுமதியைப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தர வேண்டும்.)
  • காவல்துறையில் அனுமதி பெறும் போது முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இந்த தலைப்பில் நடத்தப்படும் விவாதத்துக்கு அனுமதி என்று தெளிவாக இருக்க வேண்டும். தெளிவற்ற முறையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி என்பது போல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பின்னர் விபரம் தெரிந்தவுடன் அனுமதியை மறுக்கும் நிலை ஏற்படும்.
  • சென்னையில் விவாதம் செய்ய நீங்கள் தயார் என்று சொன்னீர்கள். ஆனால் நேரடி ஒளிபரப்பு செய்ய போலீஸ் தடை விதித்துள்ளது என்று தான் மறுத்தீர்கள். எனவே நீங்கள் வாங்கும் அந்த போலீஸ் அனுமதியில் தொலைக்காட்சியிலும் இன்டர்நெட்டிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யலாம் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  • நீங்கள் ஒப்புக் கொண்டபடி இதற்கான செலவுகளை நீங்களே ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
    மார்ச் 17, 18 அல்லது மார்ச் 24, 25 அல்லது மார்ச் 31, ஏப்ரல் 1 அல்லது ஏப்ரல் 7, 8 அல்லது ஏப்ரல் 14, 15 அல்லது ஏப்ரல் 21, 22 அல்லது ஏப்ரல் 28, 29
  • ஆகிய ஏதாவது தேதிகளில் உங்களுக்கு வசதியான தேதியைத் தேர்வு செய்து எங்களுக்கு தாமதமின்றி தெரிவிக்கவும்.
  • இதில் எந்தவொன்றை நீங்கள் ஏற்க மறுத்தாலும் நீங்கள் ஒடி ஒளிந்தீர்கள் உறுதிபட தெளிவாகிவிடும்.

உங்களுக்கு வசதியான தேதியையும் விவாத ஏற்பாடுகளை துவங்கி விட்டோம் என்ற உங்களின் பதிலை மார்ச்-3 ஆம் தேதிக்குள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 

01.03.2012. 11:17

சான் குழுவினருக்கு பகிரங்க அறைகூவல்!

திருக்குர்-ஆன் இறைவேதமா? என்ற தலைபில் விவாதிக்க வராமல் பொய்க்காரணங்களைக்கூறி ஓட்டமெடுத்த சான் குழுவினர், கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி ஒரு மெயிலை நமக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அந்த மெயில் இதோ:





அவர்களுக்கு அளித்த பதிலை இங்கே தருகின்றோம்.

SAN REPLY.pdf

18.02.2012. 11:07

சான் குருப், விவாதத்திலிருந்து பின்

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.
அல்குர்ஆன் 74:49,50,51

என்ற இறைவசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் முதல் தலைப்பில் விவாதம் செய்த கிறிஸ்தவ அறிஞர்கள், இரண்டாம் தலைப்பில் விவாதத்திற்கு வராமல் ஓட்டமெடுத்த நிகழ்வு கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஜனவரி 21 மற்றும் 22 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் சென்னை தி.நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும், ஜெர்ரி தாமஸ் குழுவினருக்கும் இடையே அனல் பறந்த விவாதம் நடைபெற்றதை சென்ற வார உணர்வு இதழில் நாம் எழுதியிருந்தோம்.

இது ஆன்லைன் பீஜே டாட் காம் இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. உடனடியாக அவை குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டன.

பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பைத் தொடர்ந்து ஜனவரி 28 மற்றும் 29 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில், குர்ஆன் இறைவேதமே என்ற தலைப்பில் விவாதம் நடத்த இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டு, கிறிஸ்தவ மிஷனரிக்குச் சொந்தமான சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள வித்யோதயா ஆடிட்டோரியத்தில் இந்த விவாதம் நடைபெறுவதாக இருந்தது.

தலைகுனிந்த கிறிஸ்தவ அறிஞர்கள் :

கடந்த வாரம் நடந்து முடிந்த பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக வைக்கப்பட்ட பைபிளிலுள்ள ஆபாச வசனங்களுக்கும், கேவலமான சட்டங்களுக்கும், பொய்யான உளறல்களுக்கும், கணக்கில்லாத முரண்பாடுகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் கிறிஸ்தவ அறிஞர்கள் குழுவினர் திணறினார்கள்.

எதிரணியினரை ஆட்டம் காண வைத்த பீஜேவின் அறிவிப்பு:

பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் பேச வந்த கிறிஸ்தவ அறிஞர்கள் கூட்டம் பைபிளில் உள்ள ஆபாசங்களை நாம் வண்டி வண்டியாக அள்ளிப்போட ஆரம்பித்தவுடனே பதில் சொல்ல முடியாமல் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஆபாசம் உள்ளது என்று கூறி சம்பந்தமில்லாத வசனங்களையும், ஹதீஸ்களையும் கூறி விவாதத்தைத் திசை திருப்ப்ப் பார்த்ததை நாமெல்லாம் அறிவோம்.

இவர்களது இந்த குள்ள நரித்தனத்தைப் பற்றி பீஜே சென்ற விவாதத்தில் குறிப்பிடும் போது இது குறித்து அவர்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தார்.

தயார் நிலையில் 600க்கும் மேற்பட்ட சிலேடுகள்:

பைபிள் இறைவேதம் என்று நிரூபிக்க வந்தவர்கள் குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் மேற்கோள்களைக் காட்டி தலைப்புக்கு வெளியே சென்று விட்டனர். இவர்கள் எப்படி பைபிளைப் பற்றி பேசாமல் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி தலைப்புக்கு வெளியே சென்றார்களோ அது போல இவர்கள் காட்டித் தந்த முன்மாதிரியின் அடிப்படையில் நாமும் அடுத்த விவாதத்தில் தலைப்பில் விவாதிப்பதுடன் பைபிளில் உள்ள ஆபாசங்களையும் பட்டியல் போடுவோம்.

பைபிளிலுள்ள ஆபாசங்களில் சொற்பமான அளவுதான் இப்போது போட்டுக் காட்டியுள்ளோம்(சுமார் 20 சிலேடுகள் மட்டும்தான்). இது போல இன்னும் நாங்கள் தயாரித்து வைத்துள்ள 600 சிலேடுகளை அடுத்த விவாதத்தின் போது போட்டுக் காட்டுவோம் என்று பீஜே அறிவிப்பு செய்திருந்தார்.

20க்கே இந்த நாற்றம் என்றால் 600 போட்டால் என்னவாகுமோ?:

பைபிள் பற்றிய தலைப்பில் வெறும் இருபது சிலேடுகளுக்கே இப்படி நாறி நாற்றமெடுத்து விட்டது என்றால், 600 சிலேடுகளையும் போட்டுகாட்டுவார்களேயானால் என்னவாகும் என்று பயந்த அந்தக் குழுவினர் தவ்ஹீத் ஜமாஅத்தின் பிடியிலிருந்து தப்பித்து தலைதெறித்து ஓட்டமெடுக்க வழிதேடிக் கொண்டிருந்தனர்.

வயிற்றில் புளியைக் கரைத்த பீஜேயின் அடுத்த அறிவிப்பு:

600 சிலேடுகள் அடுத்த தலைப்பில் வரவுள்ளன என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, மற்றுமொரு விஷயத்தையும் கடந்த விவாதத்தின் போது பீஜே அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார்.

இவர்கள் இப்னு கஸீர் நூலில் அப்படி உள்ளது; இத்கான் என்ற நூலில் இப்படி உள்ளது; அல்கசாலி அப்படி சொல்லியுள்ளார்; அல்சுயூத்தி இப்படி சொல்லியுள்ளார்; அலிகான் என்பவர் அவ்வாறு கூறியுள்ளார்; அல்கபாரியும், அல்மசூதியும் இவ்வாறு கூறியுள்ளார்கள் என்று மனம்போன போக்கில் தங்களது கற்பனைக் கோட்டையின் கதவுகளை திறந்துவிட்டு இஷ்டத்திற்கு புகுந்து விளையாடினர்.

இவர் இவர் இவ்வாறெல்லாம் சொல்லியுள்ளார் என்று சொன்னீர்களே அதற்கெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுடைய மூல நூல்களிலிருந்து விவாத ஒப்பந்தத்தின்படி ஆதாரம் காட்டியாக வேண்டும். எனவே நீங்கள் சொன்ன அனைத்திற்கும் ஆதாரம் தற்போது வேண்டும் என்று பீஜே சென்ற விவாதத்தில் கேட்ட போது அவர்கள் எதற்கும் ஆதாரம் தரவில்லை. புகாரி என்று மேற்கோள்காட்டிய ஒரு ஹதீஸிற்கு மட்டும் முஸ்லிமில் உள்ளதாக பலமணி நேர போராட்டத்திற்கு பின்பு ஆதாரம் தந்தனர்.

பைபிளில் பல வசனங்களைக் காணவில்லை. பல வசனங்களுக்கு பிராக்கேட் (அடைப்புக்குறி) போட்டுள்ளனர். பல வசனங்களில் வெறும் வசன எண் மட்டும் தான் உள்ளது என்று இவர்கள் பைபிளில் செய்துள்ள கைவரிசையை கலீல் ரசூல் அவர்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய போது, அதற்கு விவாதக்குழுவில் ஒருவரான பவுல் என்பவர் பதிலளித்தார். குர்ஆனின் மூலப்பிரதியிலும் இது போன்ற அடைப்புக்குறிகள் போடப்பட்டுள்ளது என்று அப்போது அவர் உளறியவுடனே, பீஜே அவர்கள் அதற்கும் ஆதாரத்தை மூலப்பிரதியிலிருந்து காட்ட வேண்டும் என்று கேட்கவிவாதத்தின் இறுதி வரை அவர்கள் அதற்கு ஆதாரம் தரவில்லை.

இது குறித்து கருத்துச் சொன்ன பீஜே ., இவர்கள் ஆதாரமில்லாமல் சொன்ன விஷயங்கள் பலவற்றிற்கு ஆதாரம் கேட்டோம். அவர்கள் இது வரை எந்த ஆதாரத்தையும் தரவில்லை. ஆனால் அடுத்த தலைப்பில் நாங்கள் இவ்வாறு விடமாட்டோம். குர்ஆன் குறித்த ஏதாவது ஒரு குற்றச்சாட்டை இவர்கள் சொல்வார்களேயானால், அதற்குரிய ஆதாரத்தை மூலப்பிரதியில் இருந்து காட்டினால்தான் அடுத்த அமர்வுக்குச் செல்வோம்; ஒப்பந்தத்தின் படி ஆதாரத்தை எடுத்து காட்ட வேண்டும் என்ற பீஜேயின் அறிவிப்பு அவர்களுக்குக் கலக்கத்திற்கு மேல் கலக்கத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில், இவர்கள் குர்ஆன் பற்றி சுமத்தக்கூடிய குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை இவர்களால் ஜோடிக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களே. இது குறித்து நாம் ஆய்வு செய்த வகையில் அதை உறுதி செய்து கொண்டோம்.

இவர்கள் விவாதத்திலிருந்து எப்படியாவது தப்பியோடிவிட வேண்டும் என்பதற்கான அவசியத்தை பீஜேவின் இந்த அறிவிப்பும் அவர்களுக்கு ஏற்படுத்தியது.

கிறிஸ்தவ அறிஞர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய நேரடி ஒளிபரப்பு :

நிலைமை இவ்வாறு இருக்க விவாதம் செய்யும் இரண்டு தரப்பினரும், தங்களது இனையதளங்களின் வாயிலாக பரஸ்பரம் பேசிக் கொண்ட அடிப்படையில் விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய ஒப்புக்கொண்டு அவரவர் இணையதளத்தில் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலான விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மட்டும், ஆன்லைன் பீஜே, டிஎன்டிஜே டாட் நெட், தவ்ஹீத் வீடியோ , ஜீஸஸ் இன்வைட்ஸ் ஆகிய நான்கு தளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதையும், ஒரு லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் இந்த விவாதத்தை உலகம் முழுவதும் கண்டு களித்துள்ளனர் என்ற புள்ளி விபரத்தையும் கடந்த உணர்வு இதழில் தெரிவித்திருந்தோம். அது போல் அவர்களும் தமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.

இவர்களுக்கு இது மிகப்பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியதும், உலகம் முழுவதுமுள்ள மக்கள் இவர்களையும், இவர்களது கொள்கையையும் புரிந்து கொள்ளும் நிலை உருவாவதற்கும், பைபிளின் புகழ்(?) உலகம் முழுவதும் பரவுவதற்கு இந்த நேரடி ஒளிபரப்பு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததும் இவர்களுக்கு பெருத்த மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இவர்கள் தப்பியோட வழிவகை தேட அடுத்த காரணியாக அமைந்தது.

கிறிஸ்தவ அறிஞர்களுக்கு பீதியை ஏற்படுத்திய விவாத முறை :

இவர்கள் ஆரம்பம் முதலே நம்மிடத்தில் விவாத அழைப்பு விடுத்ததிலிருந்து, விவாதம் ஒப்பந்தம் போட்டு முடிக்கும் வரைக்கும் ஒரே ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தனர்.

எந்த முறையில் விவாதம் நடத்துவது என்று பேசும் போது ஒவ்வொரு தலைப்பிலும் மொத்தம் விவாதம் செய்ய ஒதுக்கப்பட வேண்டிய நேரம் 3 மணி நேரம். 1 மணி நேரம் அவர்கள் ஒரு உரை நிகழ்த்துவார்களாம்; அடுத்து நாம் 1மணி நேரம் உரை நிகழ்த்த வேண்டுமாம்; அடுத்து இருவரும் அரை மணி நேரம், அரைமணி நேரம் உரை நிகழ்த்திவிட்டு விவாதத்தை முடித்துவிட வேண்டுமாம். இதுதான் உலகம் முழுவதும் விவாதம் செய்ய ஏற்றுக் கொண்டுள்ள நடைமுறை. எனவே நாமும் அதைப்போலத்தான் விவாதிக்க வேண்டும் என்று சொல்லி அடம்பிடித்தனர்.

உலகம் முழுவதும் ஒரு கிறுக்குத்தனத்தைச் செய்து வந்தால் நாமும் அந்த கிறுக்குத்தனத்தை ஏன் செய்ய வேண்டும்? விவாதம் என்பது 2 மணி நேரம் உரை நிகழ்த்திவிட்டு படம்காட்டிவிட்டு செல்வதற்கல்ல. சத்தியம் எது? அசத்தியம் எது? என்று மக்கள் உணர்ந்து கொள்வதற்காகத்தான் விவாதம். எனவே ஒரு தலைப்பிற்கு குறைந்தது மூன்று நாளிலிருந்து ஒரு வாரம் காலமாவது தேவை. அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்றால் குறைந்தது இரண்டு நாளாவது விவாதம் நடைபெற வேண்டும்.

அந்த விவாத நேர இடைவெளி கூட தரப்புக்கு பத்து பத்து நிமிடங்கள் தான் இருக்க வேண்டும் என்றும், இதுதான் நாங்கள் பின்பற்றக்கூடிய முறை என்று கூற அரண்டு போன எதிர்தரப்பினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு நாட்கள் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டனர்.

விவாதம் என்றால் என்ன என்று பாடம் நடத்திக்காட்டிய டிஎன்டிஜே :

இவர்கள் நினைத்து வந்ததோ 1 மணி நேர உரை நிகழ்த்திவிட்டு ஓடிவிடலாம் என்று, தவ்ஹீத் ஜமாஅத்தோ இவர்களுக்கு விவாதம் என்றால் என்ன என்று பாடம் நடத்திக் காட்டியது.

கடந்த ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய நாட்களை தங்கள் வாழ்நாளிலே இவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அல்லாஹ்வின் பேருதவியால் அவர்கள் துவைக்கப்பட்டனர். அப்போதுதான் இவர்களுக்கு புரிந்திருக்கும் விவாதம் என்றால் இதுதானா? என்று.

காரணமென்னவெனில் இவர்கள் இதற்கு முன்பு நடத்திய விவாதமெல்லாம் ஒரு மணி நேரம் படம் காட்டும் விவாதங்களே!. இப்பொழுதுதான் தங்கள் வாழ்க்கையில் விவாதம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டனர்.

இப்படி அடிவாங்கிக் கொண்டு எத்தனை நாட்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினரிடத்தில் தாக்குப்பிடிக்க முடியும் என்பதையும் அனுபவப்பூர்வமாக இவர்கள் உணர்ந்ததும் தப்பியோட வேண்டிய நிர்பந்தமான நிலைக்கு அவர்கள் ஆளாக்கப்படுவதற்கான அடுத்த காரணம்.

குர்ஆன் பற்றிய தலைப்பில் தலைதெறிக்க ஓட வேண்டிய அவசியம் என்ன? :

பைபிள் சம்பந்தமாக அத்துனை ஆபாசங்களையும், கேவலங்களையும் அள்ளிப்போட்ட பிறகும் அதைக் கேட்டுக் கொண்டு தாங்கிக்கொண்டு இருந்தவர்கள், குர்ஆன் பற்றிய தலைப்பிலிருந்து ஏன் தப்பியோட வேண்டும் என்ற கேள்விக்கான விடைகள்தான் மேலே நாம் சுட்டிக்காட்டியவை:

பைபிளில் உள்ள அசிங்களில் இன்னும் 600 சிலேடுகள் மிச்சமுள்ளன; அவைகளையும் இந்த தலைப்பில் அள்ளிப் போடுவோம் என்ற பீஜேயின் எச்சரிக்கை ஒருபுறம்
எந்த ஆதாரம் சொன்னாலும் அதற்கான மூலப்பிரதி ஆதாரம் கேட்போம் என்ற பீஜேயின் எச்சரிக்கை ஒருபுறம்
உலகம் முழுவதும் தலைக்குனிவை ஏற்படுத்தும் நேரடி ஒளிபரப்பு மறுபுறம்

கிடுக்கிப்பிடி போட்டு கேள்விகேட்டு அடித்தளத்தை ஆட்டம் காணவைக்கும் டிஎன்டிஜேயின் விவாத முறை மறுபுறம்
இவ்வளவையும் சகித்துக் கொண்டு எப்படி இவர்களோடு விவாதம் செய்வது? எனவே ஏதாவது காரணம் சொல்லி தப்பித்தோம் பிழைத்தோம் என்று பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடினால் மட்டுமே நம்முடைய கொள்கையை தக்க வைக்க முடியும். இல்லை என்றால் இவர்கள் நம்முடைய கொள்கைக்கு சமாதி கட்டி, இந்த வெத்துக்கோட்பாட்டை சிலுவையில் தொங்கவிட்டு விடுவார்கள் என்று பயந்த காரணத்தினால் தான் பின்வாங்கி ஓட்டமெடுத்துள்ளனர்.

ஓட்டமெடுப்பதற்கு கிடைத்த நம்பர் ஒன் நொண்டிச்சாக்கு :

எப்படியாவது தப்பியோடி விடலாம் என்று இவர்கள் ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் இவர்களுக்கு ஒரு நொண்டிச்சாக்கு கிடைத்தது.

கிறுஸ்தவ மிஷனரிக்குச் சொந்தமான வித்யோதயா ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று இவர்களது அமைப்புக்கு மட்டும் போலீஸ் தரப்பு தடை போட்டுள்ளதாக ஒரு செய்தியை ஜனவரி 27 வெள்ளிக்கிழமை அன்று மாலை கூறினர்.

வித்யோதயா ஆடிட்டோரியம் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் சாக்‌ஷி ஆகிய இரு அமைப்புகள் பெயரிலும் தான் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களுக்கு மட்டும் எப்படி தடை உத்தரவு போட்டார்கள் என்பது அவர்கள் மட்டுமே அறிந்த பரம ரகசியம். இது குறித்து காவல்துறை நமக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பதே இவர்கள் உள்வேலை செய்துள்ளார்கள் என்பதற்குச் சரியான ஆதாரமாக உள்ளது.

இவர்கள் வெளியிட்ட போலீஸ் கமிஷனர் அலுவலக கடிதத்தில் உள்ள ஒரு வாசகம் கவனிக்கத் தக்கது.

கிறிஸ்தவர்களும், இந்துக்களும் டி.என்.டி,ஜே தவிர மற்ற முஸ்லிம்களும் இதை நடத்தக் கூடாது என்று கோரிக்கை வைத்ததாக அந்த கடிதத்தில் உள்ளது. சான் அமைப்பைத் தவிர மற்ற கிறிஸ்த்தவர்கள் இப்படி கேட்டுக் கொண்டதாக கமிஷனர் கடிதம் சொல்லவில்லை. இதில் இருந்து கோரிக்கை வைத்த கிறிஸ்தவர்களில் இவர்களும் இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது. ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஆட்சேபனை செய்தாலும் அதில் டிஎன்டிஜே இருக்கவில்லை என்றும் கமிஷனர் கடிதம் கூறுகிறது.

இதன் பின்னர் நம்மை அவர்கள் தொடர்பு கொண்டு விவாதம் தடை செய்யப்பட்ட தகவலைச் சொன்னார்கள். வித்யோதையா அரங்கத்தில் தடை செய்யப்பட்டால் கவலை இல்லை. திட்டமிட்டபடி விவாதம் நடக்க வேண்டும். எனவே எங்கள் தலைமை அலுவலகத்தில் இதை நடத்திக் கொள்வோம் என்று நாம் தொலைபேசியில் தெரிவித்தோம்.
பார்வையாளர்களை மட்டும் ஒரு தரப்புக்கு 25 பேர் எனக் குறைத்துக் கொள்வோம் என்றும் நாம் கூறினோம்.
இதை ஏற்றுக் கொண்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள். அத்துடன் டி.என்.டி.ஜே தலைமை அலுவலகத்தில் நடத்திட எழுத்துமூலம் அழைப்பு தருமாறு அதில் குறிப்பிட்டனர்.

இது வெள்ளிக்கிழமை இரவு 7.46 க்கு அவர்களிடமிருந்து வந்த மின்னஞ்சல்

 

கருத்தாக்கம்- TNTJ வினருக்கு துணை ஆணையாளர் விவாதத்திற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து உங்கள் மாநிலத் தலைமையில் 25 பார்வையாளர்கள் அனுமதியுடன் விவாதம் நடத்தலாம் என தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தீர்கள் அதை அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் மூலமாக அழைப்பு விடுமாறு தங்களை கேட்டுக் கொள்கின்றோம்.

அதன்படி 09.01 மணிக்கு நாம் அவர்களுக்கு முறைப்படி அழைப்பு கொடுத்து கீழ்க் கண்ட அழைப்பையும் அனுப்பினோம். எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் உரிய பாதுகாப்புடன் இதை நடத்துவோம் என்று உறுதி மொழியும் அளித்தோம்.

நாம் 9.01 க்கு அனுப்பிய மின்னஞ்சல்

இடத்தையும், பார்வையாளர்கள் எண்ணிக்கையும் தவிர மற்ற அனைத்தும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருக்கும் என்றும் நாம் மெயில் அனுப்பியவுடன் வெள்ளிக்கிழமை இரவு 9.07க்கு மணிக்கு தலைமையகத்தில் வைத்து விவாதம் நடத்த சம்மதம் தெரிவித்தனர்.

நமது அதிகாரப்பூர்வ அழைப்பை தொடர்ந்து இரவு 9.07 க்கு அவர்கள் அனுப்பிய மெயில்

 

கருத்தாக்கம் – TNTJ நண்பர்களுக்கு உங்கள் அலுவலகத்தில் வைத்து விவாதம் நடத்த எங்களை அழைத்ததற்கு மிக்க நன்றி உங்கள் அலுவலகத்தில் நடைபெறும் விவாத்திற்கு நாங்கள் வருவோம் என உறுதி அளிக்கின்றோம்.

இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு நாங்கள் உறங்கச் சென்ற பின்னர் நள்ளிரவில் 12.40 மணிக்கு ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினார்கள். அதில் நேரடி ஒளிபரப்பை தவிர்ப்பது நல்லது என்ற கருத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். அதை நிபந்தனையாக சொல்லவில்லை. இந்த மெயிலை நாங்கள் காலையில் தான் பார்த்தோம்.

நள்ளிரவு 12.40 க்கு அவர்கள் அனுப்பிய மெயில்

கருத்தாக்கம் – TNTJ விற்கு காவல் துறை துணை ஆணையாளர் உத்தரவிற்கு இனங்க தாங்கள் நாளை விவாத நிகழ்ச்சியில் நேரடி இணையதள ஒளிரப்பை வைத்துக் கொள்ள வேண்டாம்.

இணையதள ஒளிபரப்பு இருந்தால் நாங்கள் விவாத்திற்கு வர மாட்டோம் என சனிக்கிழமை 28-1-2012 காலை 7.30 க்கு மணிக்கு அவர்கள் தொலைபேசியில் பேசியதை தொடர்ந்து

8.47 க்கு அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல்

 

கருத்தாக்கம்: இணையதள ஒளிபரப்பை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டால் நாங்கள் விவாத்திற்கு வரத் தயார்.

உடனே நேரடி ஒளிபரப்பைத் தவிர்க்க மாட்டோம் அதனால ஒரு பிரச்சனையும் வராது. வந்தால் அதை நாங்கள் சுமந்து கொள்கிறோம் என்று மறுத்து

நாம் அனுப்பிய மின்னஞ்சல்

இதன் பின்னார் விவாதம் நடப்பதற்கு முக்கால் மணி நேரம் இருக்கும் போது தான் நேரடி ஒளிபரப்பை நிறுத்துவதாக சொன்னால் தான் நாங்கள் வருவோம் என்று மின்னஞ்சல் அனுப்பினார்கள். இது தான் நடந்த உண்மை.

இணையதள நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்ற துணை ஆணையாளர் உத்தரவிடவில்லை. என்று

அவர்களே ஒப்புக் கொண்டு 9:19 க்கு அனுப்பிய மின்னஞ்சல்

விவாதத்திற்கு வர வேண்டியது உங்கள் மீது கடமை எனக்கூறி நாம் 9:46 க்குஅனுப்பிய மின்னஞ்சல்

அப்பட்டமான பொய்கள்:

தலைமையகத்தில் வைத்து விவாதம் நடத்த சம்மதம் தெரிவித்து இரவு 9.07 மணிக்கு இவர்கள் மின்னஞ்சல் அனுப்பிய போது, நேரடி ஒளிபரப்பு சம்பந்தமாக எதுவும் அவர்கள் பேசவில்லை. ஆனால் இதுகுறித்து ஜெர்ரிதாமஸ் அவர்கள் “நாங்கள் ஏன் விவாதத்திலிருந்து பின்வாங்கினோம்?””’“ என்று விளக்கமளித்து நேரடி ஒளிபரப்பு செய்த போது புளுகிய அண்டப்புளுகுகளின் பட்டியல்:

புளுகள் 1 :
விவாதத்தின் போது நேரடி ஒளிபரப்பை ரத்து செய்தால்தான் விவாதத்திற்கு நாங்கள் வருவோம் என்ற நிபந்தனைக்கு உட்பட்டுத்தான் தலைமையகத்தில் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டோம் என்று அப்பட்டமாக புளுகித் தள்ளியுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவில் நம்முடைய தலைமையகத்தில் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டார்கள் விவாதம் நடப்பதற்கு முக்கால் மணி நேரம் இருக்கும் போது தான் அர்த்தமற்ற நிபந்தனையை விதித்தார்கள்.

புளுகள் 2 :
அதுமட்டுமல்லாமல் விவாதம் தொடங்குவதற்கு முன்னரே கிறிஸ்தவ தரப்பில் 25 பார்வையாளர்கள் தலைமையகத்திற்கு வந்துவிட்டார்கள் என்றும் தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யை ஜெர்ரி அவிழ்த்துவிட்டுள்ளார்.
நம்முடைய தலைமையகத்தில் 16 இடங்களில் கண்கானிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகின்றன. சனிக்கிழமை காலையில் இருந்து விவாதம் துவங்கும் வரை உள்ள பதிவுகளைக் காட்டி இவர்கள் தரப்பில் ஒருவரும் வரவில்லை என்று நிரூபிக்க நாம் தயாராக இருக்கிறோம்
.
புளுகள் 3:
அதோடுமட்டுமல்லாமல், ஜெர்ரி தனது விளக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று துணை ஆணையருடைய உத்தரவில் தெளிவாக உள்ளது என்று கூறி மக்களை முட்டாளாக்க முயற்சித்துள்ளார்.
துணை ஆணையருடைய உத்தரவில் டிவி சேனல்கள் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று உள்ளதைத் தான் தனக்கு ஏதுவாக மாற்றி புளுகியுள்ளார்.

விரட்டிச்சென்ற தவ்ஹீத் ஜமாஅத் :

இரவு விவாதத்திற்குரிய அனைத்து முன் ஏற்பாடுகளும் நமது மாநிலத் தலைமையகத்தில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

எப்படியாவது போலீஸ் பெயரைச் சொல்லி தப்பி விடலாம் என்று ஐடியா பண்ணினால் அவர்களது தலைமையகத்திலேயே வைத்து நடத்தலாம் என்று சொல்லி விட்டார்களே! இனிமேலும் எப்படி தப்பியோடுவது என்று ஆலோசித்து அடுத்த கட்டநடவடிக்கையாக நள்ளிரவு 12.40க்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்கள்.

டிவி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று சொன்ன விஷயத்தை, இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று இவர்களாக திரித்து கள்ளத்தனம் செய்துள்ளனர் என்பது பிறகு நமக்கு தெரியவந்தது.

சட்டம் ஒழுங்கை ரொம்ப(?) மதிப்பவர்களாம்:

எப்படியாவது தப்பியோடி மானத்தையும், மரியாதையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இருக்கின்ற கொஞ்ச நஞ்ச மானத்தையும் விவாதம் செய்கின்றோம் என்ற பெயரில் இழந்துவிடக் கூடாது என்று முடிவெடுத்த அந்தக்கூட்டம் நேரடி ஒளிபரப்பை நிறுத்தினால்தான் வருவோம் என்று அடம்பிடித்தனர்.

நேரில் வாருங்கள்; நாம் தலைமையகத்தில் அமர்ந்து ஆலோசனை செய்து கொள்வோம் என்று நாம் அழைத்தும், எங்கே அங்கு போனால் அப்படியே கோழியை அமுக்குவது போல அமுக்கி விவாத களத்தில் உட்கார வைத்து விடுவார்களோ என்ற பயத்திலும், நடுக்கத்திலும், தலைமையகத்திற்கு வரவும் மறுத்துவிட்டனர்.
விவாத ஒப்பந்தம் செய்வதற்காக பல முறை அவர்கள் நம்முடைய அலுவலகம் வந்தனர். நாம் எவ்வளவு கண்ணியமாக அவர்களை நடத்தினோம் என்பது அவர்களுக்கே தெரியும்.

உச்சகட்ட காமெடி :

கிறிஸ்தவர்கள் சட்டம் ஒழுங்கை மதிக்கக் கூடியவர்கள். எனவே தான் துணை ஆணையாளருடைய உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்று டிஎன்டிஜேவினரை கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. எனவே தான் சட்ட ஒழுங்கை மீறக்கூடாது என்பதற்காக விவாததிலிருந்து பின்வாங்கி விட்டோம் என்று பொய்க் காரணத்தை கூறியுள்ளதுதான் உச்சகட்ட காமெடி.

இவர்கள் சட்ட ஒழுங்கை மதிப்பவர்களாக இருந்தால், துணை ஆணையாளருடைய உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக இருந்தால் வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு இந்த நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று துணை ஆணையாளருடைய உத்தரவு நகல் இவர்களது கையில் கொடுக்கப்பட்டவுடனே இவர்கள் நிகழ்ச்சிக்கு வரமாட்டோம் என்று சொல்லியிருக்க வேண்டும்.

பைபிள் பாணியில் உதாரணம் :
நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்ற போலீஸ் துறையின் உத்தரவை மீறுவார்களாம்; போலீஸ் போடாத உத்தரவான இணையதள நேரடி ஒளிபரப்பு விஷயத்தில் போலீஸுக்குக் கட்டுப்படுவார்களாம். பைபிளைப் போலவே இவர்களது பேச்சும் செயலும் முரண்பாடாகவும், உளறலாகவும் உள்ளது. தாங்கள் பைபிளை பின்பற்றக்கூடியவர்கள் எனபதை இப்படியும் இவர்கள் நிரூபித்து விட்டனர்.

ஒரு வழியாக ஏதோ ஒரு நொண்டிச்சாக்கைச் சொல்லி பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டமெடுத்த கூட்டம் தங்களது இணையதளத்தில் உட்கார்ந்து கொண்டு நேரலை நிகழ்ச்சி நடத்தி குர்ஆனை விமர்சித்து பேசியதுதான் இவர்கள் எத்தகைய பொய்யர்கள் என்பதற்குப் பலமான ஆதாரம்.

விவாதம் நடத்துவதாக நம்மிடம் ஒப்புக்கொண்டு போலீஸ் உத்தரவை மீறி சட்டம் ஒழுங்கை(?) நிலைநாட்டியது ஒருபுறம் அவர்களது இணையதளத்தில் உட்கார்ந்து கொண்டு திருக்குர்ஆனை விமர்சித்து நேரலை நிகழ்ச்சி நடத்தி இவர்கள் எந்த நொண்டிச்சாக்கைக் கூறினார்களோ அதை அவர்களே மீறி தங்களைப் பொய்யர்கள் என்று நிரூபித்தது மறுபுறம் அல்லாஹ் இவர்களது நயவஞ்சகத்தனத்தை இவர்களை வைத்தே நிரூபித்து விட்டான்.

திருக்குர்ஆன் இறைவேதமே!:

அவர்கள் வராமல் ஓடிவிட்டாலும் பரவாயில்லை; இணையதளத்தில் உலகம் முழுவதும் எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருந்த நேயர்களுக்கும், விவாதத்தைக் காண பல நூறு கிலோ மீட்டர்களைக் கடந்து வந்திருந்த பார்வையாளர்களுக்கும், இந்த உலகத்திற்கும் இது குறித்த ஆதாரங்களை எடுத்து வைப்பது நாம் கடமை என்பதால் தவ்ஹீத் ஜமாஅத் குழுவினர் திருக்குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகளைக் கொண்டு நிரூபித்தனர்.

மேலும், இந்த அரைவேக்காடுகள் கேட்ட மற்றும் கேட்கக்கூடிய கேள்விகளைப் பட்டியல் போட்டு அக்குவேறு ஆணிவேறாக பிரித்து பீஜே அவர்கள் வரிக்குவரி அவற்றிற்குப் பதிலளித்தார்.
இந்த நிகழ்ச்சி நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பது மீண்டும் நிரூபணமானது.

எஸ்கேப்….. எஸ்கேப்…. எஸ்கேப்….

ஆக மொத்த்த்தில் பைபிளின் ஆபாசங்களையும், கேவலங்களையும், முரண்பாடுகளையும், உளறல்களையும், பொய்களையும் கேட்டுவிட்டு கடந்த விவாதத்தில் அவர்கள் தரப்பு பார்வையாளர்களாக வந்தவர்களில் 85 பார்வையாளர்கள் எஸ்கேப். ஆனால் தற்போது விவாதம் செய்ய வந்த மதபோதகர்களே எஸ்கேப் ஆகிவிட்டனர் என்றால் இதுவே சொல்கின்றது. பைபிள் இறைவேதமல்ல என்று.

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும் பாதிரி களையும் மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளை யிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.

அல்குர்ஆன் 9:31,32
 

Download Video

30.01.2012. 07:40

S.P.பட்டிணம் பள்ளிவாசல் தீர்ப்பு

S.P.பட்டிணம் பள்ளிவாசல் தீர்ப்பு

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத்தினர் உரிமை கொண்டாடியதால் வட்டாட்சியர் உத்தரவின் படி பூட்டி சீல் வைக்கப்பட்ட்து.

இதற்கு எதிராக பல்வேறு சட்டப்போராட்டங்களையும் அறவழிப் போராட்டங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து நட்த்தி வந்த்து.

இப்பள்ளிக்கு உரிமை கொண்டாடி சுன்னத் ஜமாஅத்தினர் திருவாடாணை உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டனர். இவர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் சென்ற வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் பின்னர் வட்டாட்சியர் அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து தனது தடை உத்தரவை ரத்துச் செய்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசலைத் திறந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தார். இத்தீர்ப்பை மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு பள்ளிவாசல் திறக்கப்பட உள்ளது. இன்ஷா அல்லாஹ். காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்க உறுதி அளித்துள்ளனர்.

மேலும் சுன்னத் ஜமாஅத்தினர் யாரும் பள்ளிவாசலை தவ்ஹீத் ஜமாஅத் திறக்கும் போது எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று பள்ளிவாசலில் பொது அறிவிப்பு செய்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கடைப்பிடித்துக் காட்டிய முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஆர்ப்பாட்டமோ அமர்க்களமோ இல்லாமல் திறப்பு விழா என்ற பெயரில் அதிக மக்களைக் கூட்டி மற்றவர்களைப் புண்படுத்தக் கூடாது என்பதால் அமைதியான முறையில் இன்ஷா அல்லாஹ் திறக்கப்பட உள்ளது.

அனைவரும் துஆ செய்யுங்கள். இதற்காக ஆர்வத்துடன் வெளியூர் மக்கள் குழும வேண்டாம் எனபதற்காக கடைசி நேரத்தில் இச்செய்தி வெளியிடப்படுகிறது.

நல்ல படியாக பிரச்சனை ஏதுமில்லாமல் பள்ளிவாசல் திறக்கப்பட்டு இறைப்பணி நடக்க வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக் கொள்கிறோம்.





வட்டாட்சியர் ஆணை

09.04.2012. 13:19

விவாதம் உறுதி செய்யப்பட்டது!

திருக்குர்-ஆன் இறைவேதமே! என்ற தலைப்பில் ஏப்ரல் 28, 29 சனி மற்றும் ஞாயிறு ஆகிய தேதிகளில் விவாதம் நடத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. 

விவாதத்திலிருந்து தப்பி நழுவி ஓடுவதற்காக அவர்கள் விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்ற பொருந்தாக்காரணத்தை கூறி வந்தனர்.

அவர்களை தப்பி ஓடவிட்டுவிடக்கூடாது என்பதற்காக நாம் இறங்கி வந்து, நேரடி ஒளிபரப்பு இல்லாமலேயே விவாதம் செய்ய நிர்பந்தித்து அவர்கள் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனவே, நேரடி ஒளிபரப்பும், விளம்பரமும் இல்லாமல் தரப்புக்கு 25 பார்வையாளர்களைக் கொண்டு இவ்விவாதம் நடைபெற உள்ளது.

விவாதம் முடிந்த பிறகு தாமதமின்றி முழு விவாத வீடியோக்கள் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்

13.04.2012. 09:12

<< First < Previous [3 / 3] Next > Last >>



செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
137 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி