சபதம் ஏற்போம்!

சபதம் ஏற்போம்!

சகோதரர் பீஜே அவர்கள் அந்நஜாத்தில் இருந்த காலத்திலும், அதற்கு பிறகு அல்ஜன்னத் மாத இதழில் இருந்த போதும் அதன் கடைசி பக்கத்தில், "சபதம் ஏற்போம்" என்ற தலைப்பில் மாதா மாதம் வெளியாகும் பத்திரிக்கையின் கடைசிப் பக்கத்தில் கீழ்க்கண்ட கொள்கை முழக்கம் இடம் பெறும்.

கீழே  நீங்கள் பார்ப்பது  1989ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான அந்நஜாத் மாத இதழின் கடைசிப் பக்கத்தைத்தான்.
அப்போதே இந்த ஜமாத் தனது கொள்கையை தெளிவாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இதோ அந்த கொள்கை முழக்கம்:

சபதம் ஏற்போம்!

 • எந்நிலையிலும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவோம்!
 • இணைவைத்தலின் சாயல் கூட நம்மீது படிய விடமாட்டோம்!
 • அல்லாஹ்வின் தூதரை மட்டுமே பின்பற்றுவோம்!
 • அவர்களுக்கு இணையாக மனிதர்களில் எவரையும் கருதமாட்டோம்!
 • திருக்குர் ஆனையும், நபி மொழியையும் உயிருக்கு மேலாய் மதிப்போம்!
 • இவிரண்டிற்கும் முரண்பட்ட எவரது கருத்தையும் நிராகரிப்போம்!
 • இஸ்லாத்திற்காக தியாகங்கள் சேவைகள் செய்த உத்தமர்களை மதிப்போம்!
 • அல்லாஹ்வுக்கு இணையாக அவனது தூதருக்கு சமமாக அவர்களில் யாரையும் கருத இடம் தரமாட்டோம்!
 • தவறுகள் எவரிடத்திலிருந்து வந்தாலும் அந்த தவறுகளை மட்டும் தாட்சண்யமின்றி விமர்சிப்போம்!
 • தவறிய மனிதர்களை தரைக்குறைவாக விமர்சிக்கமாட்டோம்!
 • தவறுகளை எவர் சுட்டிக்காட்டினாலும் அடக்கத்துடன் ஏற்போம்!
 • வரட்டுக் கௌரவம் பார்ப்பவர்களையும், முரட்டுப் பிடிவாதம் கொள்பவர்களையும் அலட்சியம் செய்வோம்!
 • தனி நபர் வழிபாட்டை தரைமட்டமாக்குவோம்!
 • தனி நபர் தாக்குதலை அடியோடு தவிர்ப்போம்!

June 27, 2015, 7:47 PM

நமது பொறுப்பு அதிகமாகிறது!

நமது பொறுப்பு அதிகமாகிறது!

மலரும் நினைவுகள்!

பீ,ஜைனுல் ஆபிதீன் அவர்களின் அண்ணனும், மார்க்க அறிஞருமான பீ.ஷேக் அலாவுத்தீன் அவர்கள் இளம் வயதில் மரணித்ததை ஆரம்ப காலக் கொள்கைச் சகோதரர்கள் அறிவார்கள். மிகச் சிறந்த வசீகரமான பேச்சாளராகவும், பீஜே அவர்களுக்கு வழிகாட்டியாகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். ஷேக் முரீது என்ற பித்தலாட்டத்தை எதிர்த்து வந்த அவர்கள் தனது பெயரில் கூட ஷேக் என்ற சொல் வேண்டாம் என்பதற்காக பீ. ஷேக் அலாவுதீன் என்பதை பீ. எஸ். அலாவுதீன் என்று மாற்றிக் கொண்டார்கள்.

பீஜே அவர்கள் அந்நஜாத் எனும் மாத இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற சில நாட்களில் பீ.எஸ். அலாவுத்தீன் அவர்கள் மரணித்த போது பீஜே அவர்கள் அந்நஜாத் மாத இதழில் எழுதிய தலையங்கத்தை வரலாற்றுப் பதிவாக இங்கே வெளியிடுகிறோம்.

நமது பொறுப்பு அதிகமாகின்றது

1986 மே, அந்நஜாத் தலையங்கம்...

பேரன்பு கொண்ட செயல் வீரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும், ஓரிறைக் கொள்கையில் ஆழ்ந்த உறுதி கொண்ட நம் சகோதரர்களால் “பீஎஸ்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட, எனது அண்ணன் P.S. அலாவுதீன் அவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து நமது பொறுப்பு அதிகமாகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் முன்னே எடுத்து வைத்த கொள்கையில் கடைசி வரை “P.S.” அவர்கள் உறுதியாக நின்றார்கள். மரணத்தின் விளிம்பை அடைந்து விட்ட நேரத்தில் கூட, “மாயம் மந்திரங்கள்” மூலம் இந்த நோய் குணமாகும் என்றால் அல்லது தர்ஹாக்களில் சென்று தங்குவதால் இந்த நோய் குணமாகும் என்றால் என் நோய் குணமடைய வேணடாம்” என்று திட்டவட்டமாகக் கூறினார்கள்.

தர்ஹாக்களில் நடக்கும் அனாச்சாரங்களைக் கண்டித்துப் பேசியதால் தான் அவர்களுக்கு நோய் வந்ததாகக் கதை கட்டினர் சிலர்.

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்பட பல நபிமார்களும், நல்லவர்களும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள்” என்ற வரலாற்று உண்மை தெரியாதவர்கள் தான் இப்படி எல்லாம் பேசுவார்கள்.

“தர்ஹாக்களின் பெயரால் நடக்கும் தில்லுமுல்லுகளைச் சுட்டிக் காட்டியதால் தான் இந்தச் சின்ன வயதிலேயே மரணத்தை தழுவிக் கொண்டார்”என்று நாக்கில் நரம்பின்றி பேசுவோர் சிலர்.

நபிகள் நாயகத்தின் அருமை மகள்கள் பாத்திமா (ரழி) அவர்களும், ருகையா (ரழி) அவர்களும், நபிகளின் அன்பு மகன் இப்ராஹிம் (ரழி) அவர்களும் P.S.ஐ விட சின்ன வயதில் மரணமடைந்த வரலாறு நமக்கு நன்றாகத் தெரியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் போர்க்களத்துக்கு புறப்படும் வேளை, அவர்களின் அன்பு மகளார் ருகையா (ரழி) அவர்களின் உடல் நிலை, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது தனது மருமகன் உஸ்மான் (ரழி) அவர்களை தம் மகளின் அருகே இருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு போர்க்களம் சென்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

போர் அங்கே மும்முரமாக நடக்கும்போது, இங்கே அவர்களின் மகளார் (மிகவும் சின்ன வயதில்) மரணமடைந்து விடுகிறார்கள். அந்த நேரத்தில், மக்கத்துக் காபிர்களும், மதீனத்து யூதர்களும் சொன்ன அதே வார்த்தைகளைத்தான், மார்க்கத்தை வைத்து வயிறு வளர்ப்போர் இன்றைக்கு சொல்கிறார்கள்.

நஜாத் என்ற திருப்பணியை நான் ஏற்ற நேரத்தில், அதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நேரத்தில் எனது அண்ணனை அல்லாஹ் அழைத்துவிட்டான். அவனது முடிவு எதுவானாலும், அதனைப் பொருந்திக் கொள்வதுதூனே ஒரு மூமினுடைய பண்பாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற விமர்சனங்கள் எனது கொள்கையிலிருந்து எள்ளளவும், எள்ளின் முனையளவும் என்னை மாற்றிவிடாது. உலகத்து விளைவுகளை வைத்து மார்க்கத்தை முடிவு செய்கின்ற நிலமையில் நாம் இல்லை.

இந்த இதழில் இடம் பெற்றுள்ள P.S. அவர்கள் ஆற்றிய உரை இதனை நமக்கு நன்கு தெளிவுபடுத்தும்.

நான் காயல்பட்டிணத்தில் முபாஹலா செய்ததால் தான் இந்த இதய நோய் ஏற்பட்டது என்றும் கூட சிலர் பச்சைப் பொய்யை அவிழ்த்து விடுவர். P.S.அவர்கள் இரண்டு ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டார்கள். முபாஹலா நடந்து ஆறேழு மாதங்களே ஆகின்றன.

P.S. அவர்கள் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான் நான் முபாஹலாவுக்குச் சென்றேன்.

அல்லாஹ்வினால் நமக்குத் தரப்பட்ட இந்த மார்க்கம் எவரையும் நம்பி இருக்கவில்லை.

அவன் யாரை வைத்து வேண்டுமானாலும் இந்த தீனுடைய வேலையை வாங்கிக் கொள்வான்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்பு கூட இந்த இஸ்லாம் அழிந்து விடவில்லை. அவர்கள் விட்டுச் சென்ற பணியினை நாம் தொடர்ந்து செய்வோம். இன்னும் வேகமாக, உறுதியாகச் செய்வோம். அந்த நெஞ்சுறுதியை அல்லாஹ் நமக்குத் தருவான்.

ஒரு P.S. மறைந்துவிட்டாலும், ஆயிரம் P.S.களை நாடெங்கும் உருவாக்கிச் சென்றுள்ளார்கள். P.S. அவர்கள் துவக்கி வைத்த திருக்குர்ஆன் விரிவுரை திறமை மிக்க அறிஞர்களைக் கொண்டு தொடர்ந்து நஜாத்தில் இடம் பெறும்.

அன்புடன்,

P.ஜைனுல் ஆபிதீன்

குறிப்பு : P.S. அவர்களின் மரணச் செய்தியை நான் எவருக்கும் தந்தி மூலமோ, தொலைபேசி மூலமோ தெரிவிக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்.

வேண்டுகோள்

பீ. எஸ். அவர்கள் ஆற்றிய உரைகள் அன்று ஆடியோ பதிவுகளாக இருந்தன. அவை அனைத்தும் நம்மிடமிருந்து தவறிவிட்டன. அந்த உரைகள் யாரிடமாவது இருந்தால் மாநிலத் தலைமைக்கு அனுப்பி உதவுங்கள்!

June 8, 2015, 11:52 AM

சூனியம் ஒப்பந்தம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தனக்கு யாரேனும் சூனியம் செய்து அதனால் பாதிப்பு ஏற்படுத்தினால் அவர்களுக்கு 50 லட்சம் பரிசு தருவதாக ரமளான் உரையில் அறிவித்திருந்தார்கள்.

இதை கேள்வி பட்ட திருச்சியை சேர்ந்த ஒருவர் நான் பி.ஜே விற்கு சூனியம் செய்கின்றேன் என வந்தார். பி.ஜே விற்கு 2 மாத்தில் சூனியம் செய்கின்றேன் என்றார். தனக்கு சூனியம் செய்வதற்கு அவர் கேட்ட பொருட்களை பி.ஜே அவர்கள்  கொடுத்து விட்டு அவருடன் இன்று (31-7-2014)  ஒப்பந்தம் செய்தார்கள். 

ஒப்பந்த வீடியோ

பாகம் - 1

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் - 2

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

இது குறித்து குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தி வெளியானது:

 

ஒப்பந்தத்தின் நகல்:

August 1, 2014, 8:56 PM

இலங்கை நவமணி வார இதழக்கு பீஜேயின் பேட்டி

இலங்கை நவமணி வார இதழுக்கு பீஜேயின் பேட்டி

இலங்கையில் இருந்து வெளிவரும் நவமணி வாரைதழ் தவ்ஹீத் ஜமாஅத் குறித்தும் அதன் இலங்கைக் கிளையாக உள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் குறித்தும், முஸ்லிம்களின் நிலை குறித்தும் பீஜே அவர்களை பேட்டி கண்டு விரிவாக வெளியிட்டுள்ளது. அதனை நன்றியுடன் இங்கே அப்படியே வெளியிடுகிறோம்.


பி.ஜே தீவிரவாதியா? அவரே பதில் சொல்கின்றார். 

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பி.ஜே பிரபல தென்னிந்திய மார்க்க அறிஞரும், தமிழுலகறிந்த பேச்சாளரும், எழுத்தாளரும், குர்ஆனை சரளமாக தமிழ் மொழியில் பெயர்த்தவருமாவார். இஸ்லாத்தின் தூய செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்கும் தனது பயணத்தில் ஆயிரக்கணக்கான உரைகளை இவர் ஆற்றியுள்ளார். கிறிஸ்தவர்கள் மற்றும் வேறு பல இயக்கத்தவர்களுடன் குர்ஆனும் நபியவர்களின் வாழ்க்கை வழிகாட்டலும் தான் மறுமை வெற்றிக்கு வழி செய்துதரும் என்பதை பல விவாதங்கள் மூலமாக இவர் நிரூபித்திருக்கின்றார்.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற பெயரில் இஸ்லாம் பற்றிய மாற்று மத அன்பர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக இவர் நடத்தும் நிகழ்ச்சி தமிழுலகில் பிரபலமானதாகும். இவர் நூற்றுக்கணக்காண நூல்களை எழுதியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவருடைய உரைகள், விவாதங்கள், கேள்வி-பதில் நிகழ்ச்சி மற்றும் கட்டுரைகளை www.onlinepj.com என்ற இவருடைய இணையதளத்தில் பார்க்கலாம்.

கேள்வி - உங்களைப் பற்றியும், உங்களது அமைப்பு பற்றியும் கூறுவீர்களா? உங்களது நோக்கமென்ன? அதன் செயற்பாடுகள் எவ்வாறு இடம் பெறுகின்றன?

பதில் - திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியையும் முஸ்லிம்கள் முறையாகவும், முழுமையாகவும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை ஏற்று பிரச்சாரம் செய்யும் பல்லாயிரம் மக்களில் நானும் ஒருவன்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற எங்கள் அமைப்பு நான்கு செயற்திட்டங்களை வகுத்து அதைச் செயல்படுத்தி வரும் இயக்கமாகும்.

01. முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளையும், வணிகம், திருமணம் மற்றும் வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளிலும் திருக்குர்ஆன் காட்டும் வழியிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியிலும் நடக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் சமுதாயத்தில் நுழைந்துவிட்ட எல்லா சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் மத்தியில் பிரசாரம் செய்வது முதல் திட்டம்.

02. பிற மத மக்களுக்கு இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் எழும் சந்தேகங்களுக்குத் தெளிவை ஏற்படுத்தி கசப்புணர்வை நீக்குவது இரண்டாவது திட்டம். பிறசமய மக்கள் மத்தியில் கேள்வி-பதில் நிகழ்ச்சி வழியாகவும், பொதுக்கூட்டங்கள் வழியாகவும், துண்டுப் பிரசுரங்கள் வழியாகவும் பிரசாரம் செய்து அனைத்து மதத்தவரும் இணக்கமாக வாழ உழைக்கிறோம். அனைத்து மதத்தவருக்கும் பயன்படும் வகையில் இரத்ததானம், இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது, சுனாமி போன்ற அனர்த்தங்களின் போது சாதி, மத பேதம் பாராமல் பாதிக்ப்பட்டவர்களுக்கு உதவுவது எல்லாம் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

03. கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய முஸ்லிம்களை முன்னேற்றுவதற்காக ஸகாத் நிதியைத் திரட்டி உதவுதல், கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலம் கல்வி கற்க ஆர்வமூட்டுதல், தொழில் தொடங்குவதற்கு வழிகாட்டுதல், ஆதரவற்ற சிறுவர்களுக்காகவும், முதியோர்களுக்காகவும், தனித்தனியாக சகல வசதிகளுடன் இலவசமாக ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்துதல்.

04. முஸ்லிம்களுக்கு இந்திய அரசின் மூலமோ அல்லது மற்றவர்கள் மூலமோ பாதிப்பு ஏற்படும்போது அவர்கள் வன்முறையில் இறங்காமல் சட்டத்தை மீறாமல் அறவழிப் போராட்டம் மூலமும், நீதிமன்ற நடவடிக்கை மூலமும், பிரசாரம் மூலமும் நியாயம் கிடைக்கப் பாடுபடுதல்.

கேள்வி - இலங்கையில் செயற்பட்டுவரும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் பற்றிக் கூறுவீர்களா?

பதில் - இந்தியாவுக்கு வெளியே தமிழ் பேசும் மக்கள் வாழும் எல்லா நாடுகளிலும் எங்கள் அமைப்புக்கு கிளைகளும் வலுவான அடித்தளமும் உள்ளது. அந்த வகையில் இலங்கையிலும் உள்ளது. மற்ற நாடுகளில் செயல்படும் இயக்கத்தின் கொள்கைகளும், எங்கள் கொள்கையும் ஒன்றுதான். நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ப செயற்திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை காரணமாக சில செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள சட்டப்படிதான் நடக்க முடியும். இது போல் சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருக்கலாம்.

கேள்வி - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்கு துணை போகின்றதா?

பதில் - 25 ஆண்டுகளுக்கு மேலாக ஏகத்துவக் கொள்கையில் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இவ்வளவு நீண்ட காலகட்டத்தில் பல்வேறு ஆட்சிகள் தமிழகத்திலும், இ்ந்தியாவிலும் மாறியுள்ளன. எந்த ஆட்சியிலும் எங்கள் அமைப்பின் மீதோ அதன் தலைவர்கள் மீதோ ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. தீவிரவாதம், வன்முறைக்கு எதிராக நாங்கள் தீவிரப் பிரசாரம் செய்து வருகிறோம். மேலே நான் எடுத்துச் சொன்ன நான்காவது திட்டமே வன்முறை வழியில் மக்கள் செல்லக் கூடாது என்பதற்காகத்தான்.

கேள்வி - இலங்கையிலுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்குத் துணை போவதாக முத்திரை குத்தப்படுகிறதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் - இலங்கையிலுள்ள எங்கள் ஜமாஅத் ஒருகாலத்திலும் தீவிரவாதத்தில் இறங்காது. அப்படி இறங்கும் அமைப்பு எங்களின் கிளை அமைப்பாக இருக்க முடியாது. இப்படி யாரேனும் குற்றம் சுமத்தினால் எங்கள் இலங்கை நிர்வாகிகளின் பேச்சு அல்லது நடவடிக்கையை ஆதாரமாக் காட்டி அதை நிரூபிக்க வேண்டும். இப்படி எங்களுக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்வோர் யாராக இருந்தாலும் அவர்களுடன் அது குறித்து பகிரங்க விவாதம் செய்ய ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறைகூவல் விட்டது. எங்களை தீவிரவாதிகள் என்று சொன்னவர்கள் இன்றுவரை அந்த அறைகூவலை ஏற்கவில்லை. இதுவே இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்ற பொய் என்பதை நிரூபித்துக் கொண்டு உள்ளது.

கேள்வி - பொதுபல சேனா, சிங்கல ராகவ போன்ற இனவாத அமைப்புகளின் அண்மைக்கால செயற்பாடுகளால் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி உங்களின் கருத்து என்ன?

பதில் - கண்டிப்பாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் உள்ளன. கடந்த காலங்களில் இது போன்ற பிரச்சாரம் காரணமாகத்தான் ஈழப் பிரிவினை வாதமும் ஈடுகொடுக்க முடியாத வன்முறைகளும் நடந்தன.  இது போல் கடந்த காலங்களில் பேரினவாதிகள் பேசியதை ஆதாரமாகக் காட்டித்தான் விடுதலைப் புலிகள் தமிழர்களை வென்றெடுக்க முடிந்தது.

இந்த வரலாற்றில் இருந்து இவர்கள் பாடம் படிக்கவில்லை என்பதை நாம் உணர்கிறோம். விடுதலைப் புலிகள் கடும் எதிர்ப்பை இலங்கை அரசு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் முறியடித்ததற்கும் முஸ்லிம்கள் அரசின் நிலைபாட்டை ஆதரித்தது முக்கியக் காரணம். முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டு இருந்தால் இன்றும் கூட புலிகளைத் தோற்கடிக்க முடியாது. இதற்கு இப்படி நன்றி செலுத்துவது போல் தெரிகிறது.

மேலும் சர்வதேச நெருக்கடிகளில் இருந்து இலங்கை அரசு தப்பித்துக் கொள்வதற்கும் முஸ்லிம்கள் தான் பயன்பட்டனர். முஸ்லிம்கள் இலங்கையில் நல்ல நிலையில் உள்ளனர் என்று பிரச்சாரம் செய்துதான் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை அரசால் பெற முடிந்தது. சக முஸ்லிம் நாடுகள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அது இலங்கைக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மேற்கண்ட அமைப்பினர் உணர வேண்டும். இலங்கை அரசு இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

கேள்வி - எல்.டி.டி. அமைப்பிற்கு எதிராக அதன் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் குறித்து நீங்கள் விமர்சித்திருந்தீர்கள். இதற்கான காரணங்கள் ஏதுமுண்டா?

பதில் - சட்டம் ஒழுங்கைக் கையில் எடுக்கக் கூடாது என்பது எங்களின் அடிப்படைக் கொள்கையாக உள்ளதாலும், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளங்களுக்குள் நுழைந்து பலநூறு முஸ்லிம்களை, புலிகள் சுட்டுக் கொன்றதாலும் இன்னும் பல நியாயமற்ற நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் இறங்கியதாலும் நாங்கள் விடுதலைப் புலிககைளை ஆரம்பம் முதல் எதிர்த்தோம்.

எங்கள் ஆதரவைக்கோரி விடுதலைப் புலிகளின் சார்பில் சிவாஜிலிங்கம் என்ற இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரைப்பட இயக்குனர் அமீர் என்பவருடன் வந்து எம்மைச் சந்தித்தார். அவரிடமே அனைத்து ஆதாரங்களையும் கொடுத்து புலிகளை, கடுகளவும் நம்பிக்கையுள்ள முஸ்லிம்கூட ஆதரிக்க மாட்டான் என்று சொல்லி அனுப்பினோம். ஒஸ்லோ மாநாட்டில் முஸ்லிம்களை ஒரு தரப்பாக சேர்க்கக் கூட ஒப்புக்கொள்ளாமல் கிழக்கு மகாணத்தையும் தங்கள் கைவசத்தில் வைத்து கொள்ள நினைத்த புலிகளின் முஸ்லிம் விரோதப் போக்கையும் நாம் அவரிடம் தெளிவாக விளக்கினோம்.

கேள்வி - எல்.டி.டி. ன் மோசமான யுகத்திற்கு முடிவுகட்டப்பட்டவை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் - இப்போது நாடு அமைதியாக உள்ளது. புலிகளின் ஆதிக்கமிருந்த கால கட்டத்தில் நான் இலங்கைக்கு பல தடவை வந்துள்ளேன். கொழும்பிலிருந்து கல்முனைக்குப் போய்ச் சேர்வதற்குள் பத்துக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் பயணிகளை இறக்கிவிட்டு சோதிப்பார்கள். காலையில் புறப்பட்டால் இறவில்தான் போய்ச்சேர முடியும். அந்த நிலை இப்போது இல்லை.

நாங்கள் கொலன்னாவ என்ற இடத்தில் தங்கியிருந்து காலையில் விமானத்தில் சென்னை செல்லக் காத்திருந்தோம். எங்கள் பயணத்துக்கு சிலமணி நேரங்களுக்கு முன்னால் கொழும்பு விமான நிலையத்தைப் புலிகள் தாக்கினார்கள். நாங்கள் ஒரு மணிநேரம் முன்னதாகப் புறப்பட்டிருந்தால் கொல்லப்பட்டவர்களில் எங்கள் பெயரும் இடம் பெற்று இருக்கக்கூடும்.  இது போன்ற நிலை இப்போது இல்லை.

ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டிய சிங்கள இயக்கங்கள் இந்த அமைதியை நீடிக்க விடமாட்டார்களோ என்று அச்சமாக உள்ளது.

கேள்வி - நீங்கள் தீவிரவாதியா?

பதில் - நான் மேலே கூறியவற்றில் இதற்குப் பதில் உண்டு.

கேள்வி - தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே ஆட்சி தொடர்பாக ஏதாவது கூறுவீர்களா?

பதில் - இலங்கையிலுள்ள அரசியல் நிலவரங்கள் எங்களுக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால் இலங்கைக்கு வெளியே வாழும் எல்லா முஸ்லிம்களும் பேரினவாத வெறியர்கள் விஷயத்தில் மென்மையாக அல்லது மறைமுக ஆதரவாக ராஜபக்ஷே இருக்கிறார் என்ற எண்ணம் பதிந்து வருகிறது. இதை அவர்தான் தனது நடவடிக்கை மூலம் மாற்ற வேண்டும்.

கேள்வி - .நா பேரவையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு எழுந்தபோது இலங்கைக்கு ஆதரவாக உங்கள் குரல் வந்தது ஏன்?

பதில் - புலிகள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதால் அதைச்செய்த இலங்கை அரசைக் கண்டிக்கக் கூடாது என்பதால் ஆதரவாக் குரல்கொடுத்தோம். ஆனால், பள்ளிவாசல்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் அதிகரித்தால் இந்த நிலை நிச்சயமாக மாறிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.

கேள்வி - பௌத்த இனவாதிகளுக்கு ஏதாவது கூற விரும்புகிரீர்களா?

பதில் - பெரும்பான்மை மக்கள் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டி அதிகாரம் செலுத்தவும், சொகுசாக வாழவும் இதேபோல் பேரிணவாதத்தைக் கையில் எடுக்கிறார்கள். ஆனால் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படும் போது நம்மில் ஒருவன் செத்தாலும் எதிரிகளில் ஆயிரம் பேரை அழிக்கவேண்டும் என்ற மனநிலைக்கு உள்ளாகிறான். இதே போல் உருவாகாத வரை தான் பெரும்பான்மை வாதத்தால் பயன் அடைய முடியும்.

கொடுமை எல்லை மீறிப் போனால் சாகத் துணிந்தவர்களை அது மீண்டும் உருவாக்கிவிடும். இதனால் பெரும்பான்மை சமுதாயம் பயந்து வாழும் நிலை ஏற்பட்டுவிடும்.  இதற்கு வரலாற்றில் அநேக ஆதாரங்கள் உள்ளன. விடுதலைப் புலிகளை விட வேறு என்ன ஆதாரம் தேவை? அனைத்து மக்களும் சகோதரர்களாக சம உரிமை பெற்றவர்களாக வாழ்வதற்கு பாடுபடுங்கள் என்பதுதான் இவர்களுக்குச் சொல்லும் செய்தி.

கேள்வி - இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு கூறுகளாக பிரிந்திருக்கின்றார்களே. இது பற்றி...?

பதில் - இலங்கை மட்டும் அல்ல. உலகம் முழுவதும் இந்த நிலை உள்ளது. மார்க்கம் அடிப்படையிலான பிளவுகளும் உள்ளன. அரசியல் ரீதியான பிளவுகளும் உள்ளன. மார்க்க அடிப்படையிலான பிளவுகள் பற்றித்தான் நாம் அதிகம் கவலைப்பட வேண்டும்.

மனது வைத்தால் இதில் அதிகமான பிளவுகளைக் குறைத்துவிட முடியும். அனைத்து பிரிவினரும் திருக்குர்ஆனை ஏற்றுக் கொண்டுள்ளனர். நபிகள் நாயகத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டுவிடுவோம் என்ற மனநிலைக்கு முஸ்லிம்கள் வந்துவிட்டால் இரண்டு மூன்று பேச்சுவார்த்தைகளில் ஏராளமான வேறுபாடுகளைக் குறைத்து விடலாம். புரிந்து கொள்வதில் ஏற்பட்ட மிகச் சில வேறுபாடுகள் மட்டுமே மிஞ்சும்.

யார் பதவியைப் பிடிப்பது என்பதற்காக உருவாக்கப்பட்ட பிரிவுகளையும் கூட நாம் மனது வைத்தால் குறைத்துவிடலாம். இயக்கங்களை நடத்தும் தலைவர்கள் தங்களின் ஆதாயத்திற்காகவே இயக்கம் நடத்துவதால் தங்கள் இயக்கத்தைக் கலைக்க மாட்டார்கள். ஆனால் மக்களுக்கு இவர்களைப் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. மக்கள் நினைத்தால் அதிகமான இயக்கங்களை ஒழித்துவிடலாம்.

எல்லா இயக்கங்களிலும் கேடுகளும் நல்லவைகளும் இருக்கும். முற்றுமுழுதான நல்ல இயக்கம் எதுவும் கிடையாது. முழுமையான கெட்ட இயக்கமும் கிடையாது.

எனவே இருக்கும் இயக்கங்களில் குறைவாக தவறு செய்யும் இயக்கம் எது என்றும், அதிகமான நன்மை செய்யும் இயக்கம் எது என்றும் திறந்த மனதுடன் ஆய்வு செய்து உள்ளதில் நல்லதை மட்டும் ஆதரித்து மற்றவைகளை அறவே ஒதுக்கினால் பெரியளவில் இயக்கங்களின் எண்ணிக்கை இருக்காது.

இருக்கும் இயக்கங்களில் ஓரளவு நல்ல இயக்கம் தவிர, வேறு இயக்கங்களை ஆதரிப்பதில்லை. நிதி அளிப்பதில்லை. அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை. என்று முடிவு செய்தால் லெட்டர் இயக்கங்கள் காணாமல் போய்விடும். எவன் எதை ஆரம்பித்தாலும் அதை ஆதரிக்கவும், உதவவும் நாலு பேர் இருப்பதால்தான் இயக்கங்கள் பெருகுகின்றன.

கேள்வி - ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏனைய அமைப்புகளுடன் முரண்படுகின்றதாம். இக்குற்றச்சாட்டு நியாயமானதா?

பதில் - ஒவ்வொரு அமைப்பும் மற்ற அமைப்போடு பல விடயங்களில் முரண்பட்டுத்தான் இருக்கின்றன. முரண்பட்டாலும் எங்கள் நிலை சரி உங்கள் நிலை தவறு என்று சொல்ல மாட்டார்கள். எங்கள் இயக்கத்தின் தவறுகளை நீங்கள் பேசாதீர்கள். உங்கள் இயக்கத்தின் தவறுகளை நாங்கள் பேசமாட்டோம் என்று எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது

ஆனால், குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம். வேறு எதுவும் மார்க்கம் இல்லை என்பது எங்கள் கொள்கை. இந்தக் கொள்கையில் நாங்கள் இருப்பதால் மற்றவை தவறு என்று நாம் பிரசாரம் செய்யும் அவசியம் ஏற்படுகிறது. இதனால் இக்கொள்கையை ஏற்காதவர்கள் எங்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள். நாங்களும் அவர்களுடன் ஒத்துப்போக மாட்டோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும் இதுதான் நடந்தது. யூதர்களும், நசாராக்களும் கொள்கை அடிப்படையில் அதிக வேறுபாடு உள்ள மக்கத்துக் காஃபிர்களுடன் இணக்கமாக இருக்க முடியாது. கொள்கையில் நெருக்கமாக உள்ள முஸ்லிம்களுடன் தான் இணக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கத்துக் காஃபிகளுடன் அவர்கள் இணைந்து கொண்டனர். நபியவர்கள் அனைவருடைய தவறுகளையும் தாட்சண்யமில்லாமல் போட்டு உடைக்கிறார்கள் என்பதே இதற்குக் காரணமாக இருந்தது.

இதன் காரணமாகத்தான் எல்லா இயக்கங்களும் மற்ற இயக்கங்களில் இருந்து வேறுபட்டாலும், எழுதப்படாத இந்த ஒப்பந்தம் காரணமாக சேர்கிறார்கள். குறிப்பாக எங்களை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு விடுகிறார்கள்.

கேள்வி - இலங்கையில் அண்மையில் நிறைவுற்ற மகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் உறுப்புரிமை குறைந்துள்ளதை பற்றி?

பதில் - இதுபற்றி முழுமையாக விபரம் என்னிடம் இல்லை. ஆனால் முஸ்லிம் இயக்கங்கள் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெறத் தவறிவிட்டன என்பது மட்டுமே தெரிகிறது. அவர்கள்தான் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கேள்வி - இலங்கையில் தமிழ் தலைவர்கள் ஒன்றுபட்டு உரிமைகளுக்குப் போராடும் போது முஸ்லிம் தலைவர்கள் பிரிந்திரக்கிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் - முஸ்லிமல்லாத தமிழர்களுக்கு வாழ்வா, சாவா என்ற பிரச்சினை என்பதால் அந்த நெருக்கடி அவர்களை ஒன்று சேர்த்து விட்டது. சாதாரண நிலை வந்ததும் ஒற்றுமை சிதறிவிடும்.

ஒரு ஊரில் கலவரம் நடந்தால் அந்த நேரத்தில் மட்டும் எல்லோரும் கருத்து வேறுபாட்டை மறந்து சேர்ந்து கொள்வதில் ஆச்சரியம் இல்லை.

முஸ்லிம்களுக்கும் வாழ்வா, சாவா என்ற அளவிற்கு நிலைமை ஏற்பட்டால் அந்த நெருக்கடியே அவர்களை ஒன்றுபடுத்திவிடும். சாதாரண நேரங்களில் ஒரு பார்வையும், நெருக்கடியான நேரத்தில் வேறுபார்வையும் இருப்பது மனிதர்களின் இயல்புதான். எனவே முஸ்லிமல்லாத தமிழர்கள் ஒன்றுபட்டதை முஸ்லிம்களுடன் ஒப்பிட முடியாது.

October 7, 2013, 2:40 PM

onlinepj.com ஓர் அலசல்

onlinepj.com ஓர் அலசல்

நம்முடைய இணையதளம் குறித்தும் அதில் செய்யப்படும் நேரடி ஒளிபரப்பு குறித்தும் டைம்ஸ் ஆப் இந்தியா சிறப்புச் செய்தியை 21-8-2010 அன்று வெளியிட்டிருந்தது. நமது இணையதளம் குறித்து வெளியிட்ட செய்தியுடன் ஷம்சுத்தீன் காசிமியின் இணையதளத்தின் நேரடி ஒளிபரப்பைச் சமநிலையில் வைத்துப் பார்க்கும் வகையில் அது எழுதியிருந்தது. எனவே நமது இணையதளத்துக்கு நெருக்கமாக மக்காமஸ்ஜித்.காம் இருப்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தி பல சகோதரர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

தொடர்ந்து படிக்க August 23, 2010, 1:50 AM

onlinepj.com பற்றி times of india

22-08-2010 அன்று வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி இந்தச் செய்தியில் மக்கா மஸ்ஜித் இணைய தளம் பற்றி மிகைப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த ஆய்வுக்கட்டுரை தனியாக வெளியிடப்பட்டுள்ளது பார்க்க  onlinepj.com பற்றி times of india

தொடர்ந்து படிக்க August 22, 2010, 12:02 PM

மாநாட்டு குறித்து கல்கி ஏடு

மாநாட்டு குறித்து கல்கி ஏடு நீண்ட பாரம்பரயம் கொண்ட கல்கி இதழ் தீவுத்திடல் முஸ்லிம்கள் மாநாட்டைச் சிறப்பாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. அந்தச் செய்தியை நன்றியுடன் எடுத்துக் காட்டுகிறோம்

தொடர்ந்து படிக்க July 10, 2010, 10:30 AM

பிரதமர் சந்திப்பு (புகைப்படம்)

 அல்லாஹ்வின் திருப்பெயரால்…

பிரதமருடன் தவ்ஹீத் ஜமாஅத் சந்திப்பு

 முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள்.

தொடர்ந்து படிக்க July 7, 2010, 3:38 AM

தமிழில் இன்னொரு குர்ஆன் மொழிபெயர்ப்

தமிழில் இன்னொரு குர்ஆன் மொழிபெயர்ப்பு தேவையா? 

 

திருக்குர்ஆனுக்கு பல அறிஞர்கள் தமிழில் மொழி பெயர்ப்பு செய்திருக்கும் போது இன்னொரு மொழி பெயர்ப்பு தேவை தானா என்ற கேள்வி சிலரால் எழுப்பப்பட்டது. இது குறித்து ஒற்றுமை இதழ் சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பீஜேயை பேட்டி கண்டார். இந்தப் பேட்டி ஒற்றுமை இதழில் வெளியானது.

தொடர்ந்து படிக்க January 18, 2010, 7:42 PM

பைபிளும் குரானும் பேசுவது ஒன்றுதானா

2002 ஆம் ஆண்டு கல்கி ஏட்டில் பீஜைனுல் ஆபிதீன் அளித்த பேட்டி. பின்னர் இது ஒற்றுமை இதழிலும் வெளியிடப்பட்டது. நேயர்களுக்குப் பயன்படும் என்பதால் இதை வெளியிடுகிறோம். பைபிளும் குரானும் பேசுவது ஒன்றுதானா

தொடர்ந்து படிக்க January 14, 2010, 7:43 AM

பெண் சல்மான் ருஷ்டியா? ஓர் உலகளாவிய ச

தஸ்லீமா நஸ்ரின் தலைஎடுத்த போது 1993ல் பீஜே எழுதிய தலையங்கத்தை அனுப்பியுள்ளேன். தஸ்லீமா பற்றி மக்கள் அறிந்து கொள்ள உதவும் என்பதால் இதை வெளியிடலாமே என்று பிரபல இலங்கை எழுத்தாளர் ஹஃபீள் அவர்கள் அனுப்பித் தந்துள்ளார்.

அதைக் கீழே வெளியிடுகிறோம்.

தொடர்ந்து படிக்க January 3, 2010, 8:43 PM

மண்டியிட வைத்த தொண்டி விவாதம்

மண்டியிட வைத்த தொண்டி விவாதம்

 

கே.எம். அப்துந் நாசிர், கடையநல்லூர்

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன். அல்குர்ஆன் 16:125

தொடர்ந்து படிக்க December 3, 2009, 11:51 PM

உமர அலி விவாததின் விளைவு

 

இலங்கை உமர் அலி என்பவருடன் நடந்த விவாதத்தின் போது இருந்த சூழ் நிலைகள் பல இப்போது எனக்கு நினைவில்லை. அதை நினைவுபடுத்தும் வகையில் இல்ங்கை அல்தாஃப் எனும் சகோதரர் சில விபரங்களை உங்கள் கருத்து பகுதியில் தெரிவித்துள்ளார். அது பதிவு செய்யப்பட வேண்டிய கருத்து என்பதால் வெளியிடுகிறோம்.

தொடர்ந்து படிக்க November 15, 2009, 11:41 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top