பாரத் பந்த் மாநாட்டை பாதிக்குமா

பாரத் பந்த் மாநாட்டை பாதிக்குமா

ஜூலை ஐந்தாம் தேதி பந்த் மாநாட்டைப் பாதிக்குமா

ஜூலை ஐந்தாம் தேதியன்று எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய பந்த் அறிவித்துள்ளன. இதனால் மாநாட்டுக்கு வரும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று பரவலாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநாடு ஜூலை நான்காம் தேதி சரியாக 11 மணிக்கு முடிந்து விடும். சுமார் 12 மணிக்கு வாகனங்கள் புறப்பட்டாலும் திருச்சி வரை உள்ள மக்கள் காலை ஆறு மணிக்கெல்லாம் ஊர் சென்று விடுவார்கள். திருச்சியைத் தாண்டி உள்ள ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் தான் பந்த் நேரத்தில் சில மணி நேரங்கள் பயணிக்கும் நிலை ஏற்படும்.

பந்த பற்றிய செய்தி கிடைத்தவுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரண்டு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளின் தலைமை அலுவலகத்துக்கு கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளது. மாநாடு முடிந்து திரும்பிச் செல்லும் மக்கள் காலை 10 மணி வரை திரும்பிச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களூக்கு இடையூறு இல்லாத வகையில் பந்தை நடத்துமாறு அந்தக் கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு முன்பே உங்கள் மாநாட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால் அதற்கு எந்த இடையூறும் செய்யாமல் இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துவோம் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் வாய் மொழியாக உறுதி தரப்பட்டுள்ளது. உங்கள் கொடியுடன் வருமாறு வலியுறுத்துங்கள் என அவர்கள் கூறியுள்ளனர். எனவே பந்த் காரணமாக நமது மாநாட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

அடுத்ததாக நாளை காவல் துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து திருச்சிக்கு அப்பால் உள்ள ஊர்களை நோக்கிச் செல்லும் வாகனங்கள் தொடராக செல்லும் வகையிலும் முன்னும் பின்னும் காவல் வாகனத்துடன் கூடிய பாதுகாப்பு வழ்ங்குமாறு நாளை கோரிக்கை வைக்கப்படவுள்ளது. பந்த காரணமாக இந்தக் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

இது தவிர மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இது குறித்து முன்னரே தகவல் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்ஷா அல்லாஹ் பந்த காரணமாக எந்தப் பாதிப்பும் ஏற்பட வழியில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்

30.06.2010. 15:36




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
107 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி