வட்டிக்கு வாங்கி கட்டிய வீட்டில் வசி

வட்டிக்கு வாங்கி கட்டிய வீட்டில் வசித்தல்

கேள்வி :எனது தந்தை வட்டிக்கு கடன் வாங்கி கட்டிய வீடு எனக்கு ஹலாலாகுமா? வீடு எங்கள் பரம்பரைச் சொத்தாக உள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளது
 

ஷா

பதில்  : உங்கள் தந்தை வட்டிக்கு கடன் வாங்கியதால் அந்தப் பணம் ஹராமாகாது. மாறாக வட்டி கொடுத்த குற்றத்தையே அவர் செய்திருக்கிறார். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர் வசித்தது கூட ஹராமான சம்பாத்தியத்தில் அல்ல. ஒரு ஹராமான செயலுக்குத் துணை செய்த குற்றமே அவரைச் சேரும்.

அடுத்ததாக ஹராமான வழியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அவர் வீடு கட்டி இருந்தால் அது அவருக்குத் தான் ஹராம்.

வாரிசு உரிமைப்படி அச்சொத்து உங்களுக்கு வந்தால் அதை நீங்கள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு அது ஹராமாகாது.

ஏனென்றால் அந்த வீடு உங்கள் தந்தையிடமிருந்து உங்களுக்கு கிடைத்த வழி ஆகுமானதா? என்று மட்டுமே நீங்கள் பார்க்க வேண்டும். உங்கள் தந்தைக்கு அந்த வீடு எப்படி கிடைத்தது என்று பார்க்க வேண்டியதில்லை.

அந்த வீடு வாரிசு உரிமைப்படி உங்களுக்கு வருவதால் இது மார்க்கம் அனுமதித்த வழியிலேயே உங்களுக்கு வருகின்றது. எனவே அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது குறித்து மேலும் அறிய இந்த லின்கையும் பார்க்கவும்.

Published on: April 16, 2010, 10:12 AM Views: 1610

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top