வங்கியில் வாடிக்கையாளர் பற்றிய புரஜ�

வங்கியில் வாடிக்கையாளர் பற்றிய புரஜக்டரை செய்து கொடுக்கலாமா 
நான் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். புதிய புராஜக்ட் ஒன்றில் என்னை வேலை செய்யுமாறு அழைக்கிறார்கள். அதன் விபரம் வருமாறு 

 

இந்த ப்ராஜெக்ட் ஒரு பிரபல வங்கி ப்ராஜெக்ட். இந்த ப்ரொஜெக்டை நான் வேலை பார்க்கும் கம்பெனி அவுட் சோர்ஸ் செய்து எடுத்து செய்து கொடுப்பார்கள். இந்த ப்ராஜெக்ட் அந்த வங்கியில் உள்ள வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் மற்றும் அவர்கள் தெரிவிக்கும் வங்கி சம்பந்தமான பிரச்சனைகளை சேகரித்து தக்க அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்கும். இது தான் அந்த ப்ரோஜெக்ட்ன் தகவல். இப்படிப்பட்ட ப்ரோஜெக்ட்ல் நான் வேலை செய்வது மார்கத்தில் அனுமதிவுண்டா?

ஜலாலுதீன்.

பதில் :

வங்கித் தொடர்பான தகவல்களைச் சேகரித்துக் கொடுக்கும் பணியைச் செய்வது கூடுமா? என்பது உங்கள் கேள்வியின் சாராம்சம். வங்கி வட்டியுடன் தொடர்புடைய நிறுவனம் என்பதால் இந்தச் சந்தேகம் உங்களுக்கு எழுந்துள்ளது.

வட்டித் தொடர்புடைய வேலைகைளை நீங்கள் செய்து கொடுப்பதே தவறு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களை சபித்துள்ளார்கள்.

வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (3258)

வட்டிப் பணத்தை வசூலித்தல் வட்டிக் கணக்குப் பார்த்தல் போன்ற வேலைகள் வட்டி தொடர்புடைய வேலைகள் என்பதால் இவற்றைச் செய்வது கூடாது.

வங்கியின் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது வெள்ளையடிப்பது போன்றவை வட்டியுடன் தொடர்புடைய பணிகள் அல்ல. எனவே இவற்றைச் செய்வது கூடும்.

வங்கி தொடர்பான தகவல்களை சேகரிப்பது வட்டிக்குத் தொடர்பில்லாத இது போன்ற அனுமதிக்கப்பட்ட பணியாகும்.

 கேள்வி பதில்வியாபாரம்வட்டித் தொடர்புடைய வேலைகைளைசெய்து கொடுப்பதே தவறுசபித்துள்ளார்கள்

Published on: March 12, 2011, 12:35 PM Views: 2502

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top