கலைஞர் காப்பீட்டுதிட்டம் கூடுமா

அஸ்ஸலாமு அழைக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் நாம் (முஸ்லிம்) சேரலாமா?

 

ஷாஹுல்

பொதுவாக அறவே காப்பீட்டுத் திட்டங்களில் சேரக் கூடாது என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் அது தவறாகும். எந்தக் காப்பிடுத்திட்டத்தில் மார்க்க வரம்பு மீறப்படுமோ அந்தக் காப்பீட்டுத் திட்டம் மட்டுமே மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

உதாரணமாக ஆயுள் காபிட்டுத் திட்டத்தில் தொடர்ந்து மாதம் ஒரு தொகை செலுத்த வேண்டும். நாம் செலுத்திய பணத்துக்கு போன்ஸ என்ற பெயரில் வட்டி தருவார்கள். இதனால் இதைக் கூடாது என்பது சரியானது தான்.

ஆனால் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் நாம் செலுத்தும் பணம் நமக்குத் திரும்பக் கிடைப்பதில்லை. நமக்கு நோய் வந்தால் நம் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வார்கள். நமக்கு நோய் வரா விட்டால் அந்த நிறுவனம் அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளும். இதில் எந்தத் தவறும் இல்லை.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் நாம் பணம் செலுத்துவதற்கு பதிலாக அரசு பணம் செலுத்துகிறது. அவ்வளவு தான் வித்தியாசம். அது எந்த அளவு நம்பகமாக இருக்கும்? என்பது பற்றி நாம் உறுதி அளிக்க முடியாது. ஆனால் மார்க்கத்தில் தடை செய்ய எந்தக் காரணமுக் இதில் இல்லை.

இது குறித்து இஸ்லாம் கூறும் பொருளியல் தலைப்பில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பார்க்க

Published on: February 25, 2010, 6:15 AM Views: 926

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top