சர்ச் வரைந்த டி ஷர்ட் வியாபாரம் செய்யலாமா?

? எனது சகோதரர் பிரான்ஸில் ஒரு பொது வணிக வளாகத்தில் பணி புரிகின்றார். அந்த வணிக வளாகத்தில், ஈபிள் டவர் போன்ற நினைவுச் சின்னங்கள், சர்ச் வடிவில் படங்கள், சர்ச் வரைந்த டி-ஷர்ட்டுகள் போன்றவற்றை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. அவர் அந்த வேலையில் இருக்கலாமா? தான் செய்யும் தொழில் ஹலாலா? ஹராமா? என்று அவர் கேட்கிறார். விளக்கவும். 

எஸ். சாதிக், கருக்கங்குடி 

நான் இப்னு அப்பாஸ் (ரலி) உடன் இருந்த போது ஒரு மனிதர் வந்து, "அப்பாஸின் தந்தையே! நான் கைத் தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்'' என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), "நபி (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கின்றேன். "யாரேனும் ஒரு உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும் வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான். அவர் அதற்கு ஒருக்காலும் உயிர் கொடுக்க முடியாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன்'' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சு விட்டார். அவரது முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), "உமக்குக் கேடு உண்டாகட்டும். நீர் உருவம் வரைந்து தான் ஆக வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவைகளை வரைவீராக!' என்று கூறினார். 

அறிவிப்பவர்: ஸயீத் பின் அபில் ஹஸன், 

நூல்: புகாரி 2225 

இந்த ஹதீஸிலிருந்து உயிருள்ள உருவங்களைத் தவிர வேறு உயிரற்ற பொருட்களை வரைவதில் தவறில்லை என்பதை அறியலாம். எனவே ஈபிள் டவர் போன்ற கட்டங்கள் வரையப்பட்ட பொருட்களை விற்பதற்குத் தடையில்லை. நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட எந்தக் கட்டடமாக இருந்தாலும் அவற்றை வரைவதற்குத் தடையில்லை. 

எனினும் ஒரு பொருளுக்குப் புனிதம் உள்ளது என்று நினைத்து மக்கள் அவற்றை வழிபடுகின்றார்கள் என்றால் அத்தகைய பொருட்களை வரைவதோ அல்லது விற்பதோ கூடாது. 

உதாரணமாக சர்ச்சுகள், தர்காக்கள், கோயில்கள் போன்றவற்றின் படங்களில் கூட புனிதம் இருப்பதாக நினைத்து மக்கள் வழிபடுவதை நாம் பார்க்கிறோம். நாகூர் தர்கா, பொட்டல் புதூர் தர்கா போன்றவற்றின் போட்டோக்களை புனிதமாகக் கருதி அவற்றை வீடுகளிலும், கடைகளிலும் மாட்டி வைத்திருப்பார்கள். அவற்றுக்கு ஊதுபத்தி கொளுத்தி வழிபடவும் செய்வார்கள். இது போன்ற கட்டடங்கள் உயிரற்றவையாக இருந்தாலும் அவற்றை அச்சிட்டு விற்கக் கூடாது. இதற்கு கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதில் வணங்கப்படக் கூடிய அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு சிலை இருக்கின்றதா?'' என்று (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு (மக்கள்) இல்லை என்று பதிலளித்தார்கள். "அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதறகும் அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். "நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலோ அல்லது ஆதமுடைய மகனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி), 

நூல்: அஹ்மத் 16012 

அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமை! அது போன்ற ஒரு செயலைச் செய்யும் போது கூட அங்கு சிலைகள் உள்ளதா? இஸ்லாத்திற்கு மாற்றமான திருவிழாக்கள் நடக்கின்றதா? என்பன போன்ற விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் இந்த ஹதீஸில் பார்க்கிறோம். 

இந்த அடிப்படையில் கட்டடங்களாக இருந்தாலும், ஏனைய பொருட்களாக இருந்தாலும் அவற்றில் புனிதம் இருக்கின்றது என்று கருதி மக்கள் வழிபடுவார்களானால் அவற்றை நாம் அச்சிடுவதோ, வரைவதோ கூடாது என்ற முடிவுக்கே வர முடியும். அவ்வாறு அச்சிடப்பட்ட பொருட்களை வாங்கி விற்பதும் கூடாது. 

தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதும் தடுக்கப்பட்டது என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் கூறுகின்றது.

ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி) "அவரை அல்லாஹ் சபிப்பானாக! "யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப் பட்டபோது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை அவர் அறியவில்லையா?' என்று கேட்டார். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), 

நூல்: புகாரி 2223

குறிப்பு : 2004 ஜூன் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 11, 2015, 7:09 AM

வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாம் என்பது சரியா?

? வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா? என்ற கேள்விக்கு செய்யலாம், அவர்கள் தரும் விருந்தையும் சாப்பிடலாம் என்று பதிலளித்திருந்தீர்கள். தனக்குக் குழந்தை பிறந்தால் அதன் மலத்தைத் தின்பதாக நேர்ச்சை செய்த ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது வட்டி வாங்குபவன் வீட்டு நிழலில் நின்று சாப்பிடு, உன் நேர்ச்சை நிறைவேறி விடும் என்று கூறியதாக கேள்விப்பட்டிருக்கின்றேன். இதற்கு உங்கள் பதில் மாற்றமாக உள்ளதே! மேலும், யூதர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் விருந்துண்டதை உதாரணம் காட்டியிருந்தீர்கள். எல்லா யூதர்களும் வட்டித் தொழில் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா?

ஏ. அப்துர்ரஸாக், பி. சுலைமான், மேற்கு மாம்பலம்


நாம் தேடிப் பார்த்த வரையில் இப்படி ஒரு பலவீனமான ஹதீஸ் கூட எந்த நூலிலும் இல்லை. யூதர்கள் வட்டித் தொழில் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டுள்ளீர்கள்.

யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். எனினும் அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புகின்றனர். தொழுகையை நிலை நாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம். (அல்குர்ஆன் 4:160)

இந்த வசனத்தில் யூத சமுதாயத்தைப் பற்றி குறிப்பிடும் போது, வட்டி வாங்கினார்கள் என்று குறிப்பிடுகின்றான். எனவே யூதர்களின் தொழிலே வட்டியாகத் தான் இருந்தது என்பதற்கு இந்த வசனம் போதிய சான்றாகும்.

(குறிப்பு: 2004 மார்ச் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

January 2, 2015, 7:03 AM

வட்டித் தொழில் செய்பவரிடம் வேலை பார்க்கலாமா?

? நான் ஒரு துணி வியாபாரியிடம் ஒட்டுனராகப் பணி புரிகின்றேன். அவர் ஒரு மார்வாடி நல்ல சம்பளமும், தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளுக்கு அனுமதியும் தருகின்றார். இருப்பினும் அவர் மறைமுகமாக வட்டித் தொழிலும் செய்கின்றாரோ என்ற சந்தேகம் எழுகின்றது. நான் அவரிடம் வேலை செய்வது தவறாகுமா? அவர் வீட்டு விஷேசங்களில் சாப்பிடச் சொன்னால் சாப்பிடலாமா?

ஏ.எல். காதர் ஷரீஃப், சென்னை.

 நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!

(அல்குர்ஆன் 5 - 2)

இந்த வசனத்தின் அடிப்படையில் பாவத்திற்குத் துணை போகக் கூடாது.

உங்களுடைய முதலாளி வட்டித் தொழில் பார்க்கின்றார் என்றே வைத்துக் கொள்வோம். அந்த வட்டித் தொழில் சம்பந்தமாக உங்களை வேலை செய்யச் சொல்கின்றார் என்றால் அதைச் செய்யக் கூடாது. அவ்வாறின்றி பொதுவான, மார்க்கத்தில் தடுக்கப்படாத வேலைகளையே செய்யச் சொன்னால் அவரிடம் வேலை செய்வதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

மார்க்கத்தில் தடுக்கப்படாத உணவாக இருந்தால் அதை அவரது வீட்டில் சாப்பிடுவதற்கும் எந்தத் தடையும் இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் யூதர்களின் வீட்டில் விருந்துண்டதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

கீழ்க்காணும் ஆக்கத்தையும் வாசிக்கவும்

http://www.onlinepj.com/kelvi_pathil/porlatharam/vatti_vangiyavarin_nonbukanji_halala/#.VJasgV4Dpg

 

(குறிப்பு: 2003 ஜுன் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 21, 2014, 7:15 AM

வேலை பார்க்கும் கம்பெனிக்கு வாங்கி கொடுக்கும் பொருட்களில் கமிஷன் வைக்கலாமா?

? நான் வேலை பார்க்கும் கம்பெனியில் தேவையான பொருட்களை வாங்குவதற்கு என்னை அனுப்புவார்கள். இதற்காக நான் வெளியூர் சென்று பல கடைகள் ஏறி இறங்கி பொருட்களை வாங்கி வந்து கம்பெனியில் சேர்க்கிறேன். பொருட்கள் நன்றாக இருப்பதால் கம்பெனி நிர்வாகத்தினருக்கு திருப்தியாக உள்ளது. இதற்காக நான் பொருட்களை வாங்கும் கடைகளில் 10 சதவிகிதம் கமிஷன் பெற்றுக் கொள்ளலாமா?

இப்னு அப்துல் ஹபீப், கன்னூர்

நீங்கள் இவ்வாறு கமிஷன் வாங்குவது நிர்வாகத்திற்குத் தெரிந்து அவர்கள் சம்மதித்தால் வாங்கிக் கொள்ளலாம். அது உங்கள் கம்பெனியினர் உங்களுக்குத் தருகின்ற அன்பளிப்பாக ஆகிவிடும். ஆனால் கம்பெனியினருக்குத் தெரியாமல் கமிஷன் வாங்குவதற்கு அனுமதி இல்லை.

அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நபி (ஸல்)அவர்கள் நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, “இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “இவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டும். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ஸகாத் பொருளிலிருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும். பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்” என்றுகூறினார்கள்.

பிறகு அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தமது கைகளை உயர்த்தி, “இறைவா, நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?” என்று மும்முறை கூறினார்கள்.

அறிவிப்பவர் – அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி),

நூல் – புகாரி 2597

இந்த ஹதீஸில் ஸகாத் பொருள் குறித்துக் கூறப்பட்டாலும், அதை வசூலிக்கும் பணியில் அமர்த்தப்பட்டவர், தமக்கென்று அன்பளிப்பு வழங்கப்பட்டது என்று கூறுவதை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தால் இது கிடைத்திருக்குமா என்று கேட்கின்றார்கள். இந்த அடிப்படையில் கமிஷன் உங்களுக்கென்று வழங்கப்பட்டாலும்,அது அந்தப் பொருளை வாங்கியதற்காகத் தான் வழங்கப்படுகின்றது. எனவே அந்தக் கமிஷனும் கம்பெனிக்குச் சொந்தமானது தான். கம்பெனியினர் சம்மதிக்காத வரை அதைவாங்கிக் கொள்ள உங்களுக்கு அனுமதியில்லை.

 

(குறிப்பு: 2003 ஜுன் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

December 21, 2014, 6:53 AM

வங்கியில் வாடிக்கையாளர் பற்றிய புரஜ�

வங்கியில் வாடிக்கையாளர் பற்றிய புரஜக்டரை செய்து கொடுக்கலாமா  நான் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறேன். புதிய புராஜக்ட் ஒன்றில் என்னை வேலை செய்யுமாறு அழைக்கிறார்கள். அதன் விபரம் வருமாறு

தொடர்ந்து படிக்க March 12, 2011, 12:35 PM

தடை செய்யப்பட்டவைகளை விற்கலாமா

தடை செய்யப்பட்டவைகளை விற்கலாமா

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா? கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா?

தொடர்ந்து படிக்க January 21, 2011, 7:46 PM

வங்கிக் கடனை மோசடி செய்யலாமா

வங்கிக் கடனை மோசடி செய்யலாமா

என்னிடம் ஒருவர் ஒரு மார்க்கத் தீர்ப்பு கேட்கிறார் அதாவது அவர் சில வருடங்களுக்கு முன் மேலை நாடொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அவர் தன்னுடைய கடன் அட்டையைப் பயன்படுத்தி சில லட்சம் ருபாய் பெறுமதியான பொருட்களை வாங்கி சொந்த நாட்டுக்கு திரும்பி விட்டா.ர் பல வருடங்கள் ஓடி விட்டன

தொடர்ந்து படிக்க November 7, 2010, 1:37 AM

வட்டிக்கு வாங்கி கட்டிய வீட்டில் வசி

வட்டிக்கு வாங்கி கட்டிய வீட்டில் வசித்தல் கேள்வி :எனது தந்தை வட்டிக்கு கடன் வாங்கி கட்டிய வீடு எனக்கு ஹலாலாகுமா? வீடு எங்கள் பரம்பரைச் சொத்தாக உள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளது

தொடர்ந்து படிக்க April 16, 2010, 10:12 AM

வட்டிப்பணத்தில் நடக்கும் நிறுவனத்த�

வட்டிப்பணத்தில் நடக்கும் நிறுவனத்தில் வேலை செய்தல் கேள்வி :என்னுடன் பணிபுரிந்த முஸ்லிமல்லாத நண்பர் ஒருவர் விளம்பரப் பொருட்கள் தயார் செய்யும் ஒரு புதிய நிறுவனம் ஒன்றைத்  தொடங்க உள்ளார், அதில் பாதி சொந்தப் பணமும் பாதித் தொகை வங்கியில் வட்டிக்கு வாங்கியும் முதலீடு செய்ய உள்ளார், அதில் தயாரிப்பு மேற்பார்வையாளராகச் சேர என்னை அழைக்கின்றார். எனக்கு 30%வரை லாபத்தில் பங்கு தருவதாகவும் சொல்கிறார் , இதில் என்னுடைய முதலீடு எதுவும் இல்லை, இதைப் பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது? இது ஹலாலா, ஹரமா?

தொடர்ந்து படிக்க April 16, 2010, 9:59 AM

ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாம�

 ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாமா?

தங்க நகைகள் விற்பது போலவே கவரிங் நகைகளையும் விற்கலாம். மார்க்கத்தில் கவரிங் நகைகளை விற்கலாகாது என்று எந்தத் தடையும் இல்லை.

தொடர்ந்து படிக்க April 2, 2010, 6:06 PM

தடை செய்யப்பட்டவைகளை மற்றவருக்கு வி�

தடை செய்யப்பட்டவைகளை விற்பது 

? இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா? கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா?

தொடர்ந்து படிக்க March 23, 2010, 3:08 AM

கடன் கொடுத்த பின் பண மதிப்பு குறைந்த�

கடன் கொடுத்த பின் பண மதிப்பு குறைந்து விட்டால் 

?என்னுடைய நண்பர் அவசரத் தேவைக்காக 4000சவூதி ரியால் கடன் வாங்கினார். அன்றைய தினம் வங்கி மதிப்பு இந்திய ரூபாய் 1000க்கு 91ரியால்களாகும். நான்கு மாதம் கழித்து அவர் கடனைத் திருப்பித் தந்த போது வங்கி மதிப்பு இந்திய ரூபாய் 1000க்கு 96ரியால் என உயர்ந்து விட்டது. இரண்டுக்கும் வித்தியாசம் இந்திய ரூபாய் 2000. அதனால் என்னிடம் 4000ரியால் கடன் வாங்கிய எனது நண்பர் கூடுதலாக 200ரியால் தந்தார். இது வட்டியா? விளக்கம் தரவும்.

தொடர்ந்து படிக்க March 20, 2010, 11:42 PM

பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும்

பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும்

சமீர் அஹ்மத்

பள்ளிவாசலில் கவிதைகள் இயற்றுவதையும், விற்பதையும் வாங்குவதையும் நபிகள் நாயகம் ஸல அவர்கள் தடை செய்தார்கள்

நூல் திர்மிதி 296

தொடர்ந்து படிக்க March 12, 2010, 11:12 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top