TNTJ லேபிளைப் பயன்படுத்துவது ஏன்

அனைவரும் பங்கு பெறும் போராட்டங்களில் TNTJ லேபிளைப் பயன்படுத்துவது ஏன்

அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவான இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக நடத்தும் போராட்டங்களில் பலரும் கலந்து கொள்கிறார்கள். அவ்வாறு இருக்க டி என் டி ஜே லேபிளைப் பயன்படுத்துவது சரியா

ஆரிஃப்

பதில்

அனைவரும் கலந்து கொள்கிறார்கள் என்பது உண்மை. அனைவருக்கும் பொதுவான கோரிக்கை என்பதும் உண்மை.

ஆனால் அதற்காக முயற்சித்து மக்களை தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது. அதன் காரண காரியங்களை மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஊட்டுகிறது. கடந்த கால செயல்பாடுகளால் மாற்றுக் கருத்து உள்ளவர்களிடமும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இதனால் தான் தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பை ஏற்று மக்கள் கலந்து கொள்கிறார்கள். இவை அனைத்தும் தவ்ஹீத் ஜமாஅத் லேபிளில் தான் செய்யப்படுகிறது.

யார் அழைக்கிறார்களோ அவர்கள் லேபிளைத் தான் போட முடியும், பங்கு கொண்டவர்களைக் கவனிப்பது அவசியம் இல்லை.

உங்கள் புது வீட்டுக்கு குடி போகும் போது விருந்துக்கு அழைக்கிறீர்கள். அதில் பல தரப்பட்ட மக்களும் கலந்து விருந்து உண்கிறார்கள் என்பதற்காக உங்கள் லேபிளைப் பயன்படுத்துவது தவறாகாது.

சரி தவ்ஹீத் ஜமாஅத் பற்றி நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். ஆனால் தமிழகத்திலும் உலகத்திலும் உள்ள இயக்கங்கள் அனைத்தும் இப்படித்தான் செயல்படுகிறார்கள். எல்லா இயக்கத்தினரும் எல்லா கட்சியினரும் பொதுவான காரியங்களுக்காக போராட்டம் நடத்தினால் தங்கள் இயக்க லேபிளில்தான் நடத்துகின்றனர். ஊர் ஜமாஅத் சார்பில் நடக்கும் விழாக்கள் மவ்லிதுகள், மீலாதுகள் அனைத்தும் அந்த ஜமாஅத்தின் பெயரில் தான் நடத்தப்படுகின்றன. ஆனால் அவை அனைத்திலும் பல தரப்பட்ட மக்கள் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.

யார் ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கிறார்களோ அவர்களது லேபிள் தான் பயன்படுத்தப்படும் என்பது அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரு வழிமுறையாகவும் உள்ளதை இதில் இருந்து அறியலாம்

Published on: April 9, 2013, 1:16 AM Views: 1382


www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top