பிற இயக்க பிரசுரங்களைப் பரப்பலாமா?
பிற இயக்க பிரசுரங்களைப் பரப்பலாமா?
இன்று மார்க்க பிரச்சாரங்களை , நோட்டீஸ் பிரசுரம் மூலம் நமது ஜமாஅத் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர் , அந்த வகையில் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத அமைப்புகள் நோட்டீஸ் பிரசுரம் வெளியிட்டால் நாமும் அதை விநியோகம் செய்யலாமா ?, உதாரணமாக தொழுகையின் அவசியம் , மறுமை இது போன்ற பொதுவான தலைப்புகளில் நோட்டீஸ் பிரசுரம் மற்றவர்கள் வெளியிட்டால் மற்றும் குர்ஆன் , ஹதீஸுக்கு உட்பட்டு பல்வேறு தலைப்புகளில் வேறு பலரும் வெளியிட்டால் நாமும் அதை விநியோகம் செய்யலாமா , கொள்கை அடிப்படையில் சிக்கல் என்று மறுத்தால் குர்ஆன் , ஹதீஸ் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் , ஜமாத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியா? சிலர் ஜமாஅத் வெறியை உங்களுக்குள் வளர்க்காதீர்கள் குர்ஆன் , ஹதீஸுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று நம்மை விமர்சிக்கிறார்களே , எனவே குர்ஆன், ஹதீஸுக்கு உட்பட்டு வேறு யார் விநியோகித்தாலும் நாமும் அதை விநியோகம் செய்யலாமா ? விளக்கவும்
ரபிக் , பவானி
மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான வாதம் போல் தோன்றினாலும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் சேர்த்து பார்த்துத் தான் நாம் முடிவு செய்ய வேண்டும்.
தவறான கொள்கை உடையவர்கள் தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பில் சரியான பிரசுரம் வெளியிடுகிறார்கள் என்றால் அதை நாம் பரப்பும் போது மக்களிடம் இரண்டு செய்திகள் சென்றடைகின்றன. தொழுகையின் சிறப்பு பற்றிய செய்தியும் அதை வெளியிட்ட இயக்கம் நல்ல இயக்கம் இயக்கம் என்ற செய்தியும் சேர்ந்தே மக்களிடம் சென்றடையும். அதுவும் நாமே அதை பரப்பும் போது தவ்ஹீத் சகோதரர்களில் துவக்க நிலையில் உள்ளவர்கள் அந்த இயக்கம் நல்ல இயக்கம் என்று கருதுவார்கள். இதன் பின்னர் அந்த இயக்கம் வெளியிடும் தவறான கொள்கைகளூம் சரியான கொள்கைகளாக ஆரம்ப நிலையில் உள்ள சகோதரர்களுக்குத் தோற்றம் அளிக்கும். இதையும் சேர்த்தே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள சில உதாரணங்களைக் காணலாம்.
காதியானிகள் என்ற காபிர் கூட்டம் தொழுகை குறித்து சரியான தகவல் அடங்கிய பிரசுரம் வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதில் உள்ள விஷயத்தை மட்டும் கவனத்தில் கொண்டு அதை நீங்கள் பரப்பினால் காதியானிகள் நல்ல பணி செய்யக் கூடியவர்கள் என்ற எண்ணம் எற்படும். இப்படியே சில பிரசுரங்களை வெளியிட்டு மக்கள் மனதில் இடம் பிடித்த பின்னர் மிர்சா குலாம் என்பவன் நபி என்று கூறும் பிரசுரத்தையும் நம் மக்கள் மத்தியில் பரப்புவார்கள். இதனால் விபரமில்லாத மக்கள் வழிகேட்டுக்குச் செல்ல நேரிடும்.
அது போல் கள்ளக் கிறித்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாராட்டும் வகையில் பிரசுரம் வெளியிட்டால் அதில் உள்ளது என்ன என்பதை மட்டும் பார்க்கக் கூடாது. இதன் பின்னணியில் உள்ளதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இப்படி சில பிரசுரங்களைப் பரப்பி அப்பாவி முஸ்லிம்கள் உள்ளத்தில் இடம் பிடித்த பின் இயேசு இறைமகன் என்ற கருத்தையும் அவர்கள் பரப்பும் போது அவர்கள் மீது இருந்த நல்ல எண்ணம் காரண்மாக அப்பாவிகள் வழி கெட்டுப் போக நேரிடும்.
அது போல் கள்ள பைஅத் கூட்டம் வரதட்சனை பற்றி வெளியிடும் பிரசுரத்தைப் பரப்பினால் அதனால் அந்த இயக்கம் மார்க்கத்தைச் சரியாகச் சொல்லக் கூடிய இயக்கம் என்ற கருத்தை நாமே ஏற்படுத்தி விடுகிறோம். இதன் பின்னர் அந்த இயக்கம் விரல் அசைத்தல் கைகளை நெஞ்சில் கட்டுதல் ஆகியன சின்ன விஷயங்கள் என்று பிரசுரம் வெள்யிடுவார்கள். நாம் ஏற்படுத்திய அந்த நல்ல எண்ணம் காரண்மாக அது சரியானது என்று சில அப்பாவிகள் நினைக்கக் கூடும்.
மார்க்கத்தைச் சொல்லக் கூடிய இயக்கம் என்ற தோற்றம் தரும் எந்த இயக்கத்தின் பிரசுரமாக இருந்தாலும் அந்த இயக்கம் குர் ஆன் ஹதீஸை மட்டும் தனது கொள்கையாகக் கொண்டுள்ளதா என்று கவனித்துதான் பரப்ப வேண்டும். இல்லாவிட்டால் தீய கொள்கை உடையவர்களை நல்ல கொள்கை உடையவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய குற்றம் நம்மைச் சேரும்.
அதே சமயம மார்க்கம் சம்மந்தப்படாத விஷயத்தை மார்க்கம் குறித்து எந்தக் கருத்தும் சொல்லாத ஒரு இயக்கம் வெளியிட்டால் அது சரியானதாகவும் இருந்தால் அதைப் பரப்பலாம். உதாரணமாக பெட்ரோல் விலை உயர்வைக் குறித்து இடது சாரிகள் ஒரு பிரசுரம் வெளியிட்டால் அதை நாம் பரப்பலாம். காரணம் அவர்கள் இஸ்லாத்தில் இல்லாததை இஸ்லாம் எனச் சித்தரிக்கும் பிரசுரம் வெளியிட மாட்டார்கள்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரு இயக்கத்துக்கு நாம் ஏற்படுத்தும் நற்பெய்ர காரண்மாக அவர்கள் மூலம் எதிர்காலத்தில் இஸ்லாம் குறித்து தவறான கருத்து பரவும் என்றால் அது போன்ற பிரசுரத்தை நாம் பரப்பாமல் அதை நாமே தயாரித்து நமது பெயரிலோ எந்தப் பெயரும் இல்லாமலோ பரப்பலாம்.
வரதட்சனை குறித்து பிரசுரம் வெளியிடுவதாக இருதால் அதை நாமே வெளியிடலாமே? அதற்கு என்ன தடை உள்ளது?
பிற இயக்கத்தினரை நமது மேடையில் நாம் ஏற்றுவதில்லை என்பதை கொள்கையாக வைத்துளோம். இது குறித்து நாம் எழுதியுள்ளதையும் பார்க்கவும்
http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/pira_iyaka_medaikalil/
20.02.2011. 22:21
எதுவரை இறைவனை வணங்க வேண்டும்?
எதுவரை இறைவனை வணங்க வேண்டும்?
சூபியாக்கள் என்ற பெயரில் மக்களை வழிகெடுக்கும் கூட்டம் தங்கள் வழிகேட்டுக்கான ஆதாரம் ஆதாரம் குர் ஆனிலும் நபிவழியிலும் உள்ளதாகக் கூறுவதை ஒரு தந்திரமாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் வழிகேட்டுக்கு பயன்படுத்தும் வசனங்களில் 15:99 வசனமும் ஒன்றாகும். இது குறித்து ஒற்றுமை இதழில் பீஜே எழுதிய கட்டுரையை சகோதரர் இலங்கை எழுத்தாளர் மவ்லவி ஹபீல் அவர்கள் கம்போஸ் செய்து அனுப்பியுள்ளார். அதை நன்றியுடன் வெளியிடுகிறோம்
“உமக்கு யகீன் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக.” (15:99)
“உலகில் உள்ள ஆன்மீக நெறிகளில் இஸ்லாம் தலைசிறந்த ஆன்மீக நெறியாகத் திகழ்கிறது. ஆன்மீகத்தின் பெயரால் சுரண்டல் நடப்பதை அடியோடு தடை செய்திருக்கும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றெல்லாம் நாம் பெருமிதம் கொள்கிறோம். முஸ்லிமல்லாத அன்பர்களும் கூட இதை ஒப்புக் கொள்கின்றனர்.
ஆயினும், முஸ்லிம் சமுதாயத்திலும் போலி ஆன்மீகவாதிகள் உருவானர்கள். அவர்களின் போலி ஆன்மீகக் கொள்கைக்கு குர்ஆனிலும் நபிவழியிலும் ஆதாரம் ஏதும் இல்லை என்ற போதிலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைத் தங்கள் விருப்பம் போல் வளைத்து, அதை ஆதாரமாகக் காட்டினார்கள். மார்க்கம் அறியாத மக்களை ஏமாற்றலானார்கள்.
போலி ஆன்மீகவாதிகள் தமக்குச் சாதகமாக வளைத்துக் காட்டும் வசனங்களில் மேலே கூறப்பட்ட வசனமும் ஒன்றாகும்.
ஆன்மீகக் குருமார்கள் என்று தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் போலிகள் இஸ்லாத்தின் ஏராளமான கட்டளைகளைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைக் கூட நிறைவேற்ற மாட்டார்கள்.
ஆடல், பாடல் கேளிக்கைகளில் கூட மூழ்குவார்கள்! அந்நியப் பெண்ணிடம் தனித்திருப்பார்கள்!
ஏன் இப்படி நடக்கிறீர்கள் என்று கேட்டால் சட்டதிட்டங்கள் எல்லாம் சாதாரணமானவர்களுக்குத் தான். நாங்கள் ஆன்மீகத்தில் கரை கண்டு விட்டதால் எங்களுக்கு எந்தச் சட்டதிட்டங்களும் இல்லை என்று கூறுவார்கள்.
உறுதி வரும் வரை இறைவனை வணங்க வேண்டும் என்று தான் அல்லாஹ் கூறுகிறான். உறுதி வராத சாதாரண மக்கள் மீது தான் வணக்க வழிபாடுகள் கடமையாகும். எங்களுக்கு உறுதி வந்து விட்டதால் நாங்கள் இறைவனை வணங்க வேண்டியதில்லை எனக் கூறுவார்கள். மேற்கண்ட வசனத்தை இதற்கு ஆதாரமாகக் காட்டுவார்கள்.
உறுதி வரும் வரை இறைவனை வணங்கு என்று குர்ஆனில் கூறப்பட்டடுள்ளதால் போலிகளின் வாதத்தை உண்மையென்று நம்பிப் பலரும் ஏமாந்து போகின்றனர்.
எனவே இந்த வசனம் கூறுவது என்ன? என்பதை விரிவாகவே நாம் ஆராய்வோம்.
‘உறுதி’ என்று தமிழாக்கம் செய்யப்பட்ட இடத்தில் ‘யகீன்’ என்ற மூலச்சொல் இடம்பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு உறுதி, உறுதியான நிகழ்வு என்று பொருள் உண்டு.
உறுதி, உறுதியான நிகழ்வு ஆகிய இரண்டு அர்த்தங்கள் இச்சொல்லுக்கு இருக்கிறது. இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
உறுதி என்றால் மனிதனின் சிந்தனையில் ஏற்படும் நம்பிக்கை.
உறுதியான நிகழ்வு என்றால் சந்தேகத்திற்கிடமில்லாத காரியத்தைக் குறிக்கும்.
உறுதியான காரியத்தைக் குறிப்ப்பதற்கும் உறுதியான நம்பிக்கையக் குறிப்பதற்கும் யகீன் என்ற சொல் அரபு மொழியில் பயன்படுத்தப்படும்.
ஒரு கல்லை எடுத்து மேலே நாம் வீசுகிறோம். வீசிய கல் கீழே விழுவது உறுதியாக நடந்து விடும் என்பதால் இதையும் யகீன் (உறுதியான நிகழ்வு) என்று எனலாம்.
கல்லை மேலே வீசாமலே ஒரு கல்லை மேலே வீசினால் கீழே விழும் என்று நம்புகிறோம். இதையும் யகீன் (உறுதியான நம்பிக்கை) எனக் கூறலாம்.
இந்த வசனத்தில் உள்ள யகீன் என்பதற்கு எவ்வாறு பொருள் கொள்வது?
உனது உள்ளத்தில் - சிந்தனையில் - உறுதி வரும் வரை என்று பொருள் கொள்வதா?
அல்லது உறுதியான ஒரு காரியம் அதாவது மரணம் உம்மிடம் வரும் வரை என்று பொருள் கொள்வதா? என்பதை முடிவு செய்து விட்டால் தெளிவு கிடைத்துவிடும்.
யகீன் (உறுதியான காரியம்) என்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டால் உறுதியான காரியங்கள் பல இருந்தாலும் மரணத்தையே அரபுகள் கருத்தில் கொள்வார்கள்.
ஏனெனில், உலகிலேயே மிகவும் உறுதியான ஒரே விசயம் மரணம் மட்டுமே.
ஒவ்வொரு மனிதனும் மரணிப்பான் என்பதை நம்பாத ஒரே ஒரு மனிதன் கூட உலகில் கிடையாது. அனைத்து மக்களும் உறுதியான காரியமாக நம்புவது மரணத்தை மட்டுமே. எனவே உறுதி என்ற பொருளைத் தவிர்த்து உறுதியான காரியம் என்று பொருள் கொண்டல் அதன் கருத்து மரணம் தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வசனத்தில் உமக்கு உறுதி(யான நம்பிக்கை) வரும் வரை என்று பொருள் கொள்ள முடியாது.
உமக்கு உறுதி(யான நிகழ்வு-மரணம்) வரும் வரை என்று தான் இங்கே பொருள் கொள்ளவேண்டும்.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
முதலாவது காரணம் என்னவென்றால் யகீன் என்ற சொல்லுடன் ‘வருகை’ என்ற சொல்லோ அல்லது வருகையிலிருந்து பிறந்த சொல்லோ இணையுமானால் அப்போது உறுதியான நம்பிக்கை என்று பொருள் கொள்ளக் கூடாது. உறுதியான நிகழ்வு - உறுதியான காரியம் - (அதாவது மரணம்) என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
யகீன் வந்தது
யகீன் வரும்
யகீன் வருமானால்
யகீனின் வருகை
என்றெல்லாம் யகீன் என்ற சொல்லுடன் வருகை அல்லது அதிலிருந்து பிறந்த சொற்கள் சேர்ந்தால் மரணம் என்றே பொருள்.
நாம் மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் உமக்கு யகீன் வரும் வரை என்று கூறப்பட்டுள்ளது. வருகையுடன் சேர்த்து கூறப்பட்டுள்ளதால் உறுதியான நம்பிக்கை என்று பொருள் கொள்ளவே முடியாது.
உள்ளத்தில் உறுதியான நம்பிக்கை வருவது வரை என்று கூற வேண்டுமானால் யகீன் என்ற சொல்லை வினைச் சொல்லாக மாற்றிக் கூறவேண்டும்.
அதாவது ஹத்தா தஸ்தைகின எனக் கூறினால் உறுதியான நம்பிக்கை உமக்கு வரும் வரை எனப் பொருள். யகீன் என்பது தஸ்தைகின என்று வினைச் சொல்லாக மாற்றப்பட்டுள்ளது.
யகீன் உம்மிடம் வரும் வரை என்று (ஹத்தா யஃதியகல் யகீன்) கூறப்பட்டால் உறுதியான நம்பிக்கை உமக்கு வரும் வரை என்ற அர்த்தம் செய்யவே முடியாது. உறுதியாக நிகழ வேண்டிய ஒரு காரியம் உம்மை வந்து அடையும் வரை என்று தான் பொருள் கொள்ள முடியும்.
அரை குறையான மொழியறிவை வைத்துக் கொண்டு தான் இவ்வசனத்திற்கு இலக்கணப்படி செய்யத் தகாத அர்த்தம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இதற்குச் சான்றாக திருக்குர்ஆனில் இடம்பெற்ற இது போன்ற மற்றொரு வசனத்தை நாம் எடுத்துக் காட்டலாம்.
திருக்குர்ஆனின் 74வது அத்தியாயத்தின் இறுதியில் நரகவாசிகளுடன் நல்லடியார்கள் உரையாடும் காட்சியை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.
நீங்கள் ஏன் நரகத்துக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு நரகவாசிகள் விடையளிக்கும் போது:
நாங்கள் தொழுகையாளிகளாக இருந்ததில்லை.
ஏழைகளுக்கு நாங்கள் உணவளிக்கவில்லை.
வீணர்களுடன் மூழ்கிக் கிடந்தோம்.
நியாயத் தீர்ப்பு நாளை நம்பாமல் இருந்தோம.
என்றெல்லாம் காரணங்களை நரகவாசிகள் அடுக்குவார்கள். எதுவரை இவ்வாறு நடந்து கொண்டோம் எனக் கூறும் போது:
“எங்களுக்கு யகீன் வரும் வரை” என்றும் அவர்கள் கூறுவார்கள். (74:47)
15:99 வசனத்தில் இடம் பெற்ற அதே யகீன் என்ற சொல் ‘வருகை’யிலிருந்து பிறந்த வரும் வரை என்ற சொல்லுடன் இணைந்து இங்கே இடம்பெற்றுள்ளது. 15:99வது வசனத்திற்கு போலி ஆன்மீகவாதிகள் எவ்வாறு பொருள் செய்தார்களோ அது போல் இங்கேயும் அவர்கள் பொருள் செய்து காட்டவேண்டும்.
அதாவது எங்களுக்கு உறுதி வரும் வரை தொழாமல் இருந்தோம்.
எங்களுக்கு உறுதி வரும் வரை நியாயத் தீர்ப்பு நாளை மறுத்து வந்தோம் என்று தான் இவர்களது வாதத்தின்படி பொருள் கொள்ள வேண்டும்.
உறுதி வரும் வரை தொழாமல் இருந்தோம். உறுதி வந்தவுடன் தொழுது விட்டோம் என்ற கருத்து அதனுள் அடங்கியுள்ளது.
உறுதி வந்த பின்னர் தொழுதார்கள் என்றால் ஏன் நரகத்தில் தள்ளப்பட வேண்டும்?
உறுதி வந்த பின் ஏழைகளுக்கு உணவளித்தவர்கள் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள்?
அவர்கள் சுவர்க்கத்திற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் இவர்களது அறியாமை அம்பலமாகின்றது.
மரணம் என்று இங்கே பொருள் செய்து பாருங்கள்!
எங்களுக்கு மரணம் வரும் வரை ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை என்று பொருள் கொண்டால் அவர்கள் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள் என்ற கேள்விக்குரிய பொருத்தமான விடையாக அமைந்து விடுகிறது.
“உறுதி வரும் வரை” என்று பொருள் கொண்டால் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள் என்ற கேளிவிக்கு விடையாக அது அமையாது.
எங்களுக்கு யகீன் (உறுதியான நிகழ்வு என்னும் மரணம்) வரும் வரை என்று இங்கே பொருள் கொள்ளும் நிலைக்கு அவர்கள் இப்போது தள்ளப்படுவார்கள்.
15:99 வசனத்திற்கும் இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும். அது தான் இலக்கண விதியாகும்.
எனவே உறுதியான நிகழ்வு என்னும் மரணம் வரும் வரை உமது இறைவனை வணங்க வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் பொருளாகும்.
மனிதர்களிலேயே அதிகமான உறுதியைப் பெற்றவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். உறுதி வரும் வரை தான் வணங்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா வணக்கத்தையும் விட்டிருப்பார்கள்.
எனக்கு உறுதி வந்து விட்டதால் நான் வணங்க மாட்டேன். வணங்கத் தேவையில்லை. நீஙகள் மட்டும் வணங்குங்கள் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மரணப் படுக்கை வரை இறைவனை வணங்கிக் கொண்டே இருந்தார்கள்.
மற்றவர்களுக்கு எதைத் தடை செய்தார்களோ அதை முதலில் தவிர்த்துக் கொள்பவர்களாக கடைசி வரை அவர்கள் இருந்தார்கள். மற்றவர்களை விட அதிகம் வணங்குபவர்களாக அவர்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை இவ்வசனத்தின் பொருளை நமக்கு மேலும் தெளிவாக விளக்கி விடுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அடுத்து உறுதியான நம்பிக்கையைப் பெற்றவர்கள் நபித்தோழர்கள். இந்தப் போலி ஆன்மீகவாதிகளை விட பல கோடி மடங்கு உறுதியை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களின் ஒருவர் கூட எனக்கு உறுதி வந்து விட்டதால் இனி மேல் வணங்க மாட்டேன் எனக் கூறவில்லை. மரணிக்கும் வரை அவர்கள் வணங்கிக் கொண்டு தான் இருந்தார்கள்.
இதன் காரணமாகவும், போலி ஆன்மீகவாதிகள் செய்த அர்த்தம் தவறானது என்பது உறுதியாகிறது.
ஆன்மீகம் என்பது மேலும் மேலும் மனிதனின் நிலையை உயர்த்த வேண்டும். மேலும் மேலும் மனிதனைக் பக்குவப்படுத்த வேண்டும். ஆனால், இந்தப் போலி ஆன்மீகவாதிகள் கொடுக்கும் விளக்கம் மனிதனை மேலிருந்து கீழே இறங்குவதாக அமைந்துள்ளது.
அதாவது உறுதி வரும் வரை தொழுவார்களாம்! உறுதி வந்து விட்டால் கஞ்சா அடிப்பார்களாம்! ஆட்டம் போடுவார்களாம்! ஒரு பொறுக்கியின் நடவடிக்கைக்கு ஒப்ப நடப்பார்களாம்!
மனிதனைப் பாதாளப் படுகுழியில் தள்ளுகின்ற இப்படி ஒரு வழியை இஸ்லாம் கூறுமா என்பதைச் சிந்தித்தால் இவர்கள் எந்த அளவுக்கு கேடுகெட்டவர்கள் என்பதை அறியலாம்.
உறுதியான காரியமாக இருக்கக் கூடிய மரணம் உங்களுக்கு வரும் வரை வணங்கிக் கொண்டே இருங்கள் என்பது தான் இவ்வசனத்தின் பொருளே தவிர போலி ஆன்மீக வாதிகள் கூறுவது போல் பொருள் கொள்ள முடியாது என்பதில் எள் முனையளவு கூட சந்தேகமில்லை.” (ஒற்றுமை)
06.02.2011. 09:26
இயக்கங்கள் வழிகேடு என்று சிலர் கூறுக
எம்.ஐ.எம்.சைஃபுல்லாஹ்
இயக்கம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்வியின் அபத்தத்தைப் புரிந்து கொள்ளலாம். சிலர் ஒன்று சேர்ந்து சில செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்படுவதற்குப் பெயர் தான் இயக்கம்.
இயக்கம் கூடாது என்று சொல்பவர்களும் ஒரு இயக்கமாகத் தான் செயல் படுகிறார்கள். அவர்கள் தனி மனிதராக இருந்து அதைச் சொல்லாமல் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டு அவரின் கீழ் செயல்பகிறார்கள். இது தான் இயக்கம் என்பது.
தனக்கென ஆள் சேர்ப்பது, தன்னை ஒரு குழுவுக்கு தலைவராக்கிக் கொள்வது என இயக்கமாக செயல்படக் கூடியவர்கள் இயக்கம் கூடாது எனக் கூறுவது கோமாளித்தனமானது.
இயக்கம் கூடாது என்று கூறுவோர் இதற்கு எந்த ஆதாரத்தையாவது எடுத்துக் காட்டி அதில் அர்த்தம் உள்ளதாக உங்களுக்குத் தோன்றினால் தெரிவியுங்கள். அது குறித்து விளக்கம் அளிப்போம்
06.12.2010. 05:16
செத்துப்போன வாதங்கள்
செத்துப்போன வாதங்கள்
போலிகள் ஜாக்கிரதை
ஆதாரமில்லாமல் மகான்கள் என்று நம்பப்படும் மையித்துகளிடம் பிரார்த்தணை செய்யக் கூடாது என்று ஆதாரங்களின் அடிப்படையில் நாம் கூறி வருகிறோம். அல்லாஹ்வின் அருளால் மக்கள் இன்று விழிப்படைந்து விட்டனர். மக்கள் தெளிவாக இருந்தாலும் மார்க்க அறிஞர்கள் போர்வையில் நடமாடுவோர் மூடத்தனமான வாதங்களை எடுத்து வைத்து செத்தவர்களைக் கடவுளாக்க முயற்சித்து வருகின்றனர். அ889 களில் செத்தவர்களை பிரார்த்திப்பதை நியாயப்படுத்தி கப்ரு வணங்கிகள் கூட்டம் ஒரு நூல் வெளியிட்டது. ஹமீது அப்துல் காதிர் என்ற ஞான சூனியம் எழுதி இலவசமாக வெளியிட்ட கலிகால இமாம்கள் என்ற அந்த நூலில் எடுத்து வைத்த கோமாளித்தனமான உளறல்களுக்கு பீஜே ஆசிரியராக இருந்த போது அல்ஜன்னத் 1993 மார்ச் இதழில் மறுப்புத் தொடர் எழுதப்பட்டது. அதில் ஒரு தொடர் இப்போது வெளியிடப்படுகிறது - தேவையான திருத்தங்களுடன்
கப்ரு வணங்கிகளின் வாதம்
கலிகால இமாம்கள் நபிகள் நாயகம் (ஸல்) கபுருகளில் போய் தங்கள் தேவைகளைக் கேட்கவில்லை என்று எதற்கெடுத்தாலும் எம்பெருமானார் (ஸல்) அவர்களையே சாடுகிறார்கள். நான் சொல்கிறேன். எம் பெருமான் (ஸல்) அவர்களின் முன்மாதிரியில் இலட்சத்தில் ஒன்றைக் கூட சாதிப்பதற்கு நமக்கு அறிவும் இல்லை. திராணியும் இல்லையே.
(உதாரணம்)
நாம் 25 வாட்ஸ் பவர் உள்ள ஒரு மின்சார பல்பு
வலிமார்கள் 40 வாட்ஸ் பல்பு
இமாம்கள் 100 வாட்ஸ் பல்பு
எம்பெருமானார் 1000 வாட்ஸ் பல்பு .
1000 வாட்ஸ் பல்பு மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்குமிடத்தில் 25 வாட்ஸ் பல்பை இணைத்தால் அது தீய்ந்து போய்விடும் என்பதைக் கவனித்து நமது புத்திக்குத் தக்கபடி தான் செயல்கள் இருக்க வேண்டும்.
இங்கு உங்களுக்கு நான் ஒரு நிகழ்ச்சியைக் கூற ஆசைப்படுகிறேன். ஒரு நாள் ஹாங்காங் ஜாமியா பள்ளியின் இமாம் அவர்களிடம் போய் ( அவர்கள் மிகவும் ஞானமுள்ளவர்கள்) நான் கேட்டேன். எம்பெருமான் (ஸல்) அவர்கள் தங்களது 63 வயதில் வபாத்தானார்கள். அவர்களின் அனுபவத்தை நமது வாழ்க்கையில் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் எத்தனை வயதுடையவர்கள் ( அந்த இமாம் அவர்களுக்கு 60 வயது இருக்கலாம்) எனக் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள் . நாம் ஒன்று அல்லது ஒன்றரை வயது குழந்தைகளுக்குச் சமமானவர்கள் என்றார்கள். நான் அவர்களிடம் கேட்டேன். ஒன்றரை வயது குழந்தை பசி எடுத்தால் பால் யாரிடம் கேட்கிறது என்றேன். குழந்தை தாயிடம் கேட்கும் என்றார்கள். அப்படி குழந்தை தாயிடம் கேட்பதும் சாதாரணமாக நமக்குப் பசி எடுத்தால் தாயாரிடமோ அல்லது மனைவியிடமோ பசிக்கிறது உணவு தாருங்கள் என்றால் அது ஷிர்கா? கலிகால இமாம்களின் கூற்றுப்படி எதுகேட்டாலும் அல்லாஹ்விடமே கேட்க வேண்டும். மற்றவர்களிடம் கேட்பது ஷிர்காக ஆகிறதே என்று சொன்னேன் அதற்கு அவர்கள் கலிகால இமாம்கள் சரியான ஞானமில்லாதவர்கள் என்றார்கள் (பக்கம் 7, 8,9)
நமது பதில்
சமாதியாகிவிட்டடவர்களிடம் பிரார்த்தனை செய்வது தவறில்லை என்பதற்கு ஹமீது அப்துல் காதிர் எடுத்து வைக்கும் ஆதாரம் இது தான்.
நபி (ஸல்) அவர்கள் கபுருகளில் எதையும் கேட்டதில்லை என்றாலும் நபியவர்களை நாம் பின்பற்ற முடியாது. அவர்கள் 1000 வாட்ஸ் பல்பு என்றும் நாம் 25 வாட்ஸ் பல்பு தான்.
ஒரு வயதுக் குழந்தை தாயிடம் பால் கேட்பது ஷிர்க் அல்ல. அது போல் நபியவர்களுடன் ஒப்பிடும் போது நாமும் ஒரு வயதுக் குழந்தை போன்றவர்கள் என்பதால் சமாதிகளில் போய் வேண்டுவது ஷிர்க் அல்ல.
இது தான் அவர் கூறுவதன் சாராம்சம். ஒரு குர்ஆன் வசனத்தையோ ஒரே ஒரு ஹதீஸையோ தனது செயலுக்கு ஆதாரமகாகக் காட்ட முடியாமல் உதாரணம் என்று உளறிக் கொட்டுகிறார். இவரது வாதத்தில் உள்ள அபத்தங்களைப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் சமாதிகளில் போய் எதையும் கேட்டது கிடையாது என்று இவர் ஒப்புக் கொள்கிறார். ஆனாலும் நபியவர்களின் நிலை வேறு நம் நிலை வேறு. அவர்களை நம்மால் பின்பற்ற முடியாது என்பதால் தான் சமாதியை வணங்கலாம் என்கிறார்.
இவர் கூறுவதை உண்மையாகவே இவர் நம்பினால் இஅவரிடம் நாம் கீழ்க்காணும் வினாக்களை எழுப்புகிறோம்.
1.நம்மால் பின்பற்ற முடியாத ஒருவரை இறைவன் ஏன் வழிகாட்டியாக அனுப்ப வேண்டும்?
2.அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகான முன்மாதிரி இருக்கிறது (33:21) என்று இறைவன் கூறுவதற்கு அர்த்தம் என்ன?
3.இந்தத் தூதர் உங்களிடம் எதைக் கொண்டு வந்தாரோ அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் (59:7) என்று இறைவன் கூறுவது ஏன்?
4.நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் (3:31) என்று நபியவர்களைக் கூறச் சொல்வது ஏன்?
5.ஐங்காலத் தொழுகை, சுன்னத்தான தொழுகைகள், நோன்பு , ஸகாத் மற்றும் ஏராளமான நல்லறங்களை நபியவர்கள் செய்துள்ளனர். அவர்களைப் போல் நாம் செய்ய முடியாது என்று கூறும் ஹமீது அப்துல் காதிர் இந்தக் கடமைகளை எல்லாம் செய்யத் தேவையில்லை என்கிறாரா? செய்ய வேண்டும் என்று அவர் கூறினால் 100 வாட்ஸ் பல்பு போல் 25 வாட்ஸ் பல்பு போல் ஆகிவிடுகின்றதே. இதற்கு என்ன சொல்லப் போகிறார்.
6.வட்டி, மதுபானம், திருட்டு, கொலை, கொள்ளை, புறங்கூறல், பொய் பேசுதல், மோசடி, ஏமாற்றுதல், விபச்சாரம், போன்ற அனைத்துத் தீமைகளிலிருந்தும் நபியவர்கள் விலகியிருந்தார்கள்.அவர்கள் மட்டும் தான் அவ்வாறு விலகிக் கொள்ள முடியுமே தவிர 25 வாட்ஸ் பல்புகளால் விலகிக் கொள்ள முடியாது என்று கூறப் போகிறாரா? மேற்கண்ட தீமைகளை 25 வாட்ஸ் பல்புகள் செய்வதில் தவறில்லை என்று போதனை செய்யப் போகிறாரா?
7.ஏகத்துவக் கொள்கை 1000 வாட்ஸ் பல்புகளுக்கு மட்டுமே உரியவை, 25 வாட்ஸ் பல்புகளுக்கு உரியவை அல்ல என்றால் 25 வாட்ஸ் பல்பை விடவும் குறைவான மக்கத்துக் காபிர்கள் இறைவனல்லாதவர்களை வேண்டியது எப்படித் தவறாகும்? 25 வாட்ஸ் பல்புகளே இறைவனல்லாதவர்களிடம் வேண்டலாம் என்றால் 0 வாட்ஸ் பல்புகள் இறைவனல்லாதவர்களை வேண்டுவது எந்த வகையில் தவறானது?
8.யூதர்களும், கிறத்தவர்களும் நபிமார்களிடம் வேண்டுவதும் இந்துக்கள் பற்பல தெய்வங்களிடம் வேண்டுவதும் கூட இவரது வாதப்படி தவறானதல்லவே? விளக்குவாரா ஹமீது அப்துல் காதிர்?
9.நபியவர்களுடன் ஒப்பிடும் போது நாம் ஒரு வயது குழந்தை போன்றவர்கள் என்றால் இந்த நிலையில் உள்ளவர்களைத் தண்டிப்பது அக்கிரமம் அல்லவா? அத்தகையவர்களின் தவறுகளுக்காக இறைவன் நரகத்தை ஏன் சித்தப்படுத்தி வைக்க வேண்டும்?
10.நாமாவது ஒரு வயதுக் குழந்தை போன்றவர்கள். காபிர்கள் ஒரு நாள் குழந்தையை விடவும் குறைவானவர்கள் தானே. அவர்களுக்கு நிரந்தர நரகத்தைச் சித்தப்படுத்தியிருப்பது ஏன்? இது அநியாயம் அல்லவா? ஒரு வேளை நரகம் என்று ஒன்று கிடையாது என்று கூறப் போகிறாரா?
இப்படி ஏராளமான கேள்விகள்!
ஹமீது அப்துல் காதிர் கம்பெனியாரிடம் இவற்றுக்கெல்லாம் எந்த பதிலும் கிடையாது. இது ஒருபுறமிருக்கட்டும்.
கபுரு ஜயாரத்துக்குச் செல்பவர்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகக் கேட்பதில்லை என்று இவர் கூறியதைச் சென்ற இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம். அவ்லியாக்களிடம் நேரடியாகக் கேட்கவில்லை என்று மறுத்து விட்டு அடுத்த பக்கத்தில் அவ்லியாக்களிடம் கேட்பதை ஒப்புக் கொண்டு அதை நியாயப்படுத்துகிறார்.
இவர்களுக்கென்று தெளிவான எந்தக் கொள்கையும் கிடையாது. எதையாவது உளறி தங்கள் தவறை நியாயப்படுத்துவதே இவர்களின் நோக்கம் என்பதற்கு இந்த முரண்பாடு சான்றாக உள்ளது.
அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் உதவி தேடுவது ஷிர்க் என்றால் தாயாரிடமும் மனைவியிடமும் உணவு கேட்பதும் ஷிர்காக ஆகுமே என்ற அவரது வாதமும் ஏற்கத்தக்கதல்ல.
அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் உதவி தேடக்கூடாது என்று நாம் கூறுவதன் பொருள் கடவுள் நிலையில் வைத்து எவரிடமும் உதவி தேடக்கூடாது என்பது தான். அவ்வாறின்றி சாதாரண நிலையில் வைத்து உதவி தேடுவதை நாம் கூடாது என்று கூறவில்லை.
நபி ஸல் அவர்களே எத்தனையோ சந்தர்ப்பங்களில் தம் மனைவியிடமும் , தோழர்களிடமும், எதிரிகளிடமும் உதவி தேடியுள்ளனர். நல்ல காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் (5:2) என்று அல்லாஹ் கூறுகிறான். நாங்களும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் பலரிடமும் உதவி தேடுகிறோம் . இறைத் தன்மையை மற்றவர்களுக்கு வழங்கி உதவி தேடும் வகையில் இவை அமையவில்லை. அதனால் இத்தகைய உதவி தேடுதலை நாம் ஷிர்க் என்று கூற மாட்டோம்.
ஆனால் ஹமீது அப்துல் காதிர் நியாயப்படுத்தும் உதவி தேடுதல். இறந்தவர்களுக்கு இறைத் தன்மை வழங்குகின்றது. அதனால் தான் இதை மட்டும் நாம ஆட்சேபணை செய்கிறோம். இதை நாம் விரிவாக முன்பு ஒரு முறை விளக்கியிருந்தாலும் ஹமீது அப்துல் காதிருக்காக மீண்டும் விளக்குவோம்.
தாயாரிடம் , மனைவியிடம், நண்பர்களிடம், ஆட்சியாளரிடம், வேலைக்காரர்களிடம், முதலாளிகளிடம் நாம் உதவி தேடும் போது சில ஒழுங்குகளைச் சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம்.
அ. மேற்கண்டவர்களிடம் உதவி தேடும் போது எங்கிருந்து வேண்டுமானாலும் அவர்களை ஹமீது அப்துல் காதிர் அழைக்கிறார். அப்துல் காதிர் ஜீலானியைப் பார்க்காமல், அவரது குரலைச் செவியுறாமல் அழைக்கிறார். அப்துல் காதிர் ஜீலானியின் கேட்கும் திறனுக்கு எந்த வரம்பும் கிடையாது என்று நம்புவதாலேயே இவ்வாறு அவர் கேட்கிறார். இந்த விஷயத்தில் இறைவன் எப்படி நமது கோரிக்கையைச் செவியுறுகிறானோ அப்படிச் செவியுறும் தகுதி அப்துல் காதிர் ஜீலானிக்கு உண்டு என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? மனித நிலையில் நிறுத்தி கேட்கப்படும் உதவியும், கடவுள் நிலைக்கு உயர்த்தி தேடப்படும் உதவியும் எப்படி சமமாக முடியும்?
ஆ.மேற்கண்டவர்களிடம் நாம் உதவி தேடும் போது அவர்களுக்கு என்ன மொழி தெரியுமோ அந்த மொழியில் அவர்களிடம் கேட்கிறோம். அவர்களுக்குத் தெரியாத மொழியில் கேட்பது கிடையாது.
அரபு மொழி மட்டுமே அறிந்திருந்த அப்துல் காதிர் ஜீலானியிடம் அவர் அறிந்திராத தமிழ் மொழியில் ஹமீது அப்துல் காதிர் ஏன் கேட்கிறார்? கேரளத்துக்காரர்கள் மலையாளத்தில் ஏன் கேட்கின்றனர்? இன்றும் பல மொழி பேசுவோர் தத்தமது மொழிகளில் கேட்பது ஏன்? இறைவனுக்கு மொழிகள் ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை என்பது போல் அப்துல் காதிர் ஜீலானிக்கும் மொழி ஒரு பிரச்சனை கிடையாது என்று அவர்களின் உள்ளத்தில் உள்ள நம்பிக்கை தான் இதன் காரணம். இது அவருக்குக் கடவுள் தன்மை வழங்கப்படுகிறது என்பதை நிரூபிக்கவில்லையா?
இ.சாதாரண மனிதர்களிடம் நாம் உதவி தேடும் போது ஒரு நேரத்தில் பல்லாயிரம் பேர் ஒருவரிடம் உதவி தேடுவது கிடையாது. ஏன் ஒரு நேரத்தில் ஒருவரிடம் இரண்டு நபர்கள் கூட உதவி தேடுவது கிடையாது. ஒரு நேரத்தில் ஒருவரது பேச்சைத் தான் அவருக்குக் கேட்க முடியும். அந்த அளவு பலவீனமான மனிதர் என்று நாம் அவரைப் பற்றி நம்புவதே இதன் காரணம்.
அப்துல் காதிர் ஜீலானியிடம் ஹமீது அப்துல் காதிர் உதவி கோரும் அதே நேரத்தில் எத்தனையோ ஆயிரம் பேர் அவரிடம் உதவி தேடுகிறார்கள்.அத்தனை பேருடைய அழைப்பையும் ஒரு சமயத்தில் அவரால் செவியுற முடியும் என்ற நம்பிக்கை தான் இதற்குக் காரணம்
இரண்டையும் சமமாக எப்படிக் கருதுகிறார் ஹமீது அப்துல் காதிர்?
ஈ) சாதாரண மனிதர்களிடம் நாம் உதவி தேடும் போது அவர்கள் தான் உதவுகிறார்கள் என்பது நமக்குத் தெரிகின்றது. அதாவது நமக்குத் தெரியும் வகையில் அவர்கள் செய்யும் உதவிகள் அமைந்துள்ளன.
அப்துல் காதிர் ஜீலானியிடம் தேடும் உதவிகளில் அவர்கள் எப்படி உதவுகிறார்கள் என்பது நமக்குத் தெரிவதில்லை. நமக்குத் தெரியாத வகையில் நாம் அறியாத விதத்தில் உதவி செய்வது என்பது இறைவனுக்கு மாத்திரமே உரியது. மற்றவர்கள் செய்யும் உதவிகள் அதற்கென்று உள்ள வழிகளில் தான் மற்றவர்களுக்கு கிடைக்கும்.
இந்த வகையிலும் இரண்டு உதவி தேடுதல்களும் வித்தியாசப்படுகின்றன.
உ) சாதாரண மனிதர்களிடம் உதவி தேடும் போது எதை வேண்டுமானாலும் நாம் கேட்பது இல்லை. அவரிடம் என்ன கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிகின்றதோ அதைத் தான் கேட்போம். அவரது சக்திக்கு உட்பட்டதைத் தான் கேட்போம்.
ஆனால் இறந்தவரிடம் உதவி தேடுவோர் எதை வேண்டுமானாலும் வேண்டுகின்றனர். அவரது சக்திக்கு உட்படாதது ஒன்றுமே இல்லை என்ற நம்பிக்கையில் கேட்கப்படுகிறது. அதாவது அனைத்தையும் எப்படி அல்லாஹ்விடம் கேட்போமோ அது போல் இறந்தவரிடம் கேட்கப்படுகிறது. இரண்டும் எப்படி சமமாக முடியும்?
ஊ) சாதாரண மனிதர்களிடம் நாம் உதவி தேடும் போது நாம் அவரிடம் உதவி தேடுவது போல் அவரும் மற்றவர்களிடம் உதவி தேடும் நிலையில் இருக்கிறார் என்று நம்புகிறோம். ஒரு விஷயத்தில் அவர் உதவி செய்தால் பல விஷயத்தில் அவர் உதவி தேடும் நிலையில் இருக்கிறார் என்பது நமக்குத் தெரிகிறது. ஆனால் அப்துல் காதிர் ஜீலானி அவ்வாறானவர் அல்ல. அவரிடம் தான் நாம் உதவி தேட வேண்டும். அவர் நம்மிடம் எந்த உதவியும் தேடத் தேவையில்லை. உதவுவதற்கென்றே அவதாரம் எடுத்தவர் என்றெல்லாம் நம்பப்படுகின்றது.
கடவுள் நிலைக்கு ஒருவரை உயர்த்தி வைத்து அவரிடம் தேடப்படும் உதவியைத் தான் நாம் ஷிர்க் என்கிறோம் இறைவனின் எந்த ஒரு அம்சத்தையும் வழங்காமல் சாதாராண மனிதர் என்ற நிலையில் ஒருவரிடம் ஒருவர் உதவி தேடுவதை நாம் ஷிர்க் என்று கூறியதில்லை.
இந்த வித்தியாசங்களை உணராமல் ஹமீது அப்துல் காதிர் மனைவியிடம் உணவு கேட்பதையும் சமாதிகளில் கேட்பதையும் சமநிலையில் நிறுத்துகிறார்.
கலிகால இமாம்கள் என்ற இந்த நூலில் உருப்படியான எந்த விஷயமும் அல்ல. இலவசமாக நாடு முழுவதும் வினியோகம் செய்யும் அளவுக்குப் பலமான வாதமும் இல்லை. இது போன்ற வாதங்களை விடுத்து அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நடக்க ஹமீது அப்துல் காதிருக்கும் நமக்கும் அல்லாஹ் அருள்புரியட்டும்.
இந்த நூல் செத்தவர்களைக் கடவுளாக்குவது மத்ஹபுகளையும் நியாயப்படுத்தி நானிலம் போற்றும் மத்ஹபுகள், நன்மை செய்வோம் நஜாத் நன்பர்களே என்ற பெயரில் இரண்டு நூல்கள் இலவசமாக வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அதில் உள்ள அபத்தங்களை நாம் அடுத்த இதழில் அலசுவோம்.
21.10.2010. 09:05
அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குற
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிகமாக தர்க்கம் புரிவது, இருட்டறையில் தூங்குவது போன்ற பல காரணங்களினால் ஒருவருக்கு அறிவு குறைவடையும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் கூறுகின்றனர். இது உண்மையா?விளக்கம் தேவை
முஹம்மது இஹ்ஸாஸ்
பதில் :
வஅலைக்குமுஸ்ஸலாம்.
அதிகமாக தர்க்கம் புரிவதால் அறிவு குறையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸையும் நம்மால் பார்கக்கமுடியவில்லை. இவ்வாறு ஹதீஸ் இருப்பதாக யார் கூறுகின்றார்களோ அவர்களிடம் இந்த செய்தி எந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது எனக் கேளுங்கள்.
இதன் கருத்து குர்ஆனுக்கு முரணாகவும் அமைந்துள்ளது. ஏனென்றால் அழகிய முறையில் விவாதம் செய்ய வேண்டும் என குர்ஆன் கூறுகின்றது.
ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ(125)16
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன் அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் (16 : 125)
இறைத்தூதர்கள் இறைமறுப்பாளர்களிடம் விவாதம் செய்த வரலாறுகளை திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. எனவே அழகிய முறையில் விவாதம் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் வந்து ஒருவர் அதிகமாக விவாதம் செய்தால் அது நன்மையான காரியமே.
மேலும் ஒருவர் முறையான அடிப்படையில் விவாதம் செய்தால் அதன் மூலம் அவருடைய அறிவு அதிகரிக்கும் என்பது தான் சரியானக் கருத்து.
எனவே அதிகமாக விவாதம் செய்தல் கூடாது குறைவாக விவாதம் செய்யலாம் என்று முடிவெடுக்காமல் அழகிய விவாதம் செய்யலாம் தேவையற்ற விவாதம் செய்யக்கூடாது என்று முடிவெடுப்பதே சரியானது.
அடுத்து இருட்டு அறையில் படுத்தால் அறிவு குறையும் என்ற கருத்தும் தவறானதே. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.
ஹதீஸ்களை ஆராயும் போது நபியவர்கள் காலத்தில் நபியவர்கள் உட்பட அனைத்து நபித்தோழர்களும் இருட்டில் தான் உறங்கினார்கள் என்பதை அறிய முடியும்.
5624 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَطْفِئُوا الْمَصَابِيحَ إِذَا رَقَدْتُمْ وَغَلِّقُوا الْأَبْوَابَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ وَأَحْسِبُهُ قَالَ وَلَوْ بِعُودٍ تَعْرُضُهُ عَلَيْه رواه البخاري
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்'' என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன்.
நூல் : புகாரி (5624)
எரியும் விளக்குகளை எலிகள் இழுத்துச் சென்று வீட்டை எரித்துவிடும் என்பதால் விளக்கை அணைக்குமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அன்றைய காலத்தில் இன்றைக்கு இருப்பது போல் மின் விளக்குகள் விடி பல்புகள் ஆகியவை இல்லை. எண்ணெய் ஊற்றி பற்ற வைக்கப்படும் விளக்குகளே இருந்தன.
07.08.2010. 14:25
தனி இட ஒதுக்கீட்டால் பாதிப்பா
தனி இட ஒதுக்கீட்டால் பாதிப்பா
கிறித்தவர்கள் விழித்துக் கொண்டு இட ஒதுக்கீட்டை மறுத்து விட்டனர். முஸ்லிம்கள் ஏமாந்து விழிக்கின்றனர் என்று சிலர் இட ஒதுக்கீட்டைக் கிண்டல் அடிக்கின்றனர். இது சரியா?
இட ஒதுக்கீட்டைக் கிறித்தவர்கள் ஏன் மறுத்தனர் என்ற காரணம் தெரியாமல் நுணிப்புல் மேய்ந்தவர்கள் இப்படி ஒரு வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பாதிப்பு என்று வாதிட்டால் இட ஒதுக்கீட்ட்டுக்கு முன் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள் எவ்வளவு? இட ஒதுக்கீட்டுக்குப் பின் கிடைத்துள்ள வாய்ப்புகள் எவ்வளவு என்பதைப் புள்ளி விபரத்துடன் எடுத்துக் காட்டி தங்கள் வாதத்தை நிறுவ வேண்டும்.
மொட்டை தாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல் உளறக் கூடாது.
கிறித்தவர்கள் கிடைத்த இட ஒதுக்கீட்டை மறுத்தனர் என்பது பற்றியாவது அறிந்து வைத்துக் கொண்டு வாதிட வேண்டும். அந்த அறிவும் இவர்களுக்கு இல்லை.
தமிழகத்தில் 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
இதில் 18 தலித்களுக்கு. ஒரு சதவிகிதம் பழங்குடியினருக்கும் ஆக 19 சதவிகிதம் போய் விடும்.
எம்பிசி எனப்படும் மிகவும் பிற்பட்ட மக்களுக்கு 20 சதவிகிதம் போய் விடும்.
இந்த இரண்டு வகையிலும் முஸ்லிம்களும் கிறித்தவர்களும் வர மாட்டார்கள்.
எஞ்சிய 30 சத விகிதம் பிற்பட்டோருக்கானது.
இதில் பிறபட்ட சாதிகளும், பிற்பட்ட கிறித்தவர்களும் பிற்பட்ட முஸ்லிம்களும் அடங்குவார்கள்.
இந்த முப்பதைத் தான் 23 இந்து பிற்பட்டோருக்கு என்றும், மூன்றரை சதம் முஸ்லிம்களுக்கு என்றும் மற்றொரு மூன்றரை கிறித்தவர்களுக்கும் என்று வழங்கப்பட்டது
இதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்
முஸ்லிமளில் பிற்பட்டவர் என்றால் முஸ்லிம்களில் மட்டும் உள்ள ஆறு பிரிவினர் மட்டுமே அடங்குவார்கள்.
.ஆனால் இந்து மதத்தில் உள்ள செட்டியார், நாடார், வன்னியர் உள்ளிட்ட எல்லா பிரிவும் கிறித்தவர்களிடமும் உள்ளது. கிறித்தவர்களிடம் இந்து மத்த்தில் உள்ள எல்லா சாதிப்பிரிவும் உள்ளதால் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அடைந்து வந்தனர்.
அதாவது கிறித்தவர் இட ஒதுக்கீடு பெறுவதற்கு மத்த்தைக் குறிப்பிட வேண்டியதில்லை. நாடார், வன்னியர் என்பன போன்ற சாத்திப்பிரிவுகளைத் தான் குறிப்பிட வேண்டும்.
கிறித்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு முன்னர் 30 சதவிகிதத்தில் சுமார் 25 சத்விகித்தைப் பெற்று வந்தனர். மத அடிப்படையில் இல்லாமல் சாதி அடிப்படியில் அவர்கள் அதிகம் பயன் பெற்றனர்.
உதாரணமாக குமரி மாவட்டத்தில் நாடார்கள் அதிகம். இவர்களில் இந்து நாடார்களும் கிறித்தவ நாடார்களும் உண்டு.
ஆனால் இந்து நாடார்களை விட கிறித்த்வர் நாடார்கள் தான் படிப்பதற்கு அதிக வாய்ப்பைப் பெற்றனர். காரனம் அவர்களிடம் தான் கல்விக்கூடங்கள் உள்ளன.
தம்மைக் கிறித்தவர் என்று குறிப்பிடாமல் நாடார் எனக் குறிப்பிட்டு முப்பது இடங்களில் 25 இடங்களை அவர்கள் எடுதுக் கொண்டு வந்தனர். இந்து நாடார்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்ததால் அவர்கள் ஏமாந்து வந்தனர்.
இப்போது மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் நாடார், வன்னியர் எனக் கூறி கிறித்தவர்கள் அதிக இடங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. கிறித்தவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டைப் பெற முடியும். அதுவும் மூன்றரை சதம் மட்டுமே கிடைக்கும் நிலை உருவானது.
இதன் காரணமாகத் தான் அவர்கள் தனி இட ஒதுக்கீடு வேண்டாம் என்றனர். இந்துக்களுக்குக் கிடைக்க வேண்டிய 25 இடங்களைத் தொடர்ந்து அனுபவிக்க இந்த தனி இட ஒதுக்கீடு அவர்களுக்கு தடையாக அமைந்தது. ஆபத்தாக முடிந்தது இதனனால் இட ஒதுக்கீடு அவர்களுக்கு பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆனால் முஸ்லிம்களின் நிலை இதற்கு நேர் முரணானது.
தனி இட ஒதுக்கீட்டுக்கு முன்னர் முஸ்லிமக்ள் இரண்டு சதம் அளவுக்குத் தான் வாய்ப்புகளைப் பெற்றனர். மூனரை என்பது அதை விட அதிகம் என்பதால் இது முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இந்த நுணுக்மான வேறுபாடு தெரியாதவர்கள் தான் இப்படி கேள்வி எழுப்புகிறார்கள்.
16.06.2010. 01:31
அபுதாபி ஸாலிம் விவாதிக்க அழைத்தாரா
அபுதாபி ஸாலிம் விவாதிக்க அழைத்தாரா
குரானுக்கு முரண்படும் ஹதீஸ்கள் தொடர்பாக தங்களை Salem al Aamry(இவர் ஜாகிர் நாய்க்,பிலால் பிலிப்ஸ் கூட்டத்தைச் சேர்ந்தவர்) அவர்கள் விவாதத்துக்கு அழைத்ததாகவும் ஆனால் தமிழில் வார்தைகளால் விளையாடுவது போல் அரபியில் செய்ய முடியாது என்பதற்காக தாங்கள் பின்வாங்கியதவும் அய்யம்பேட்டயை (தஞ்சாவூர் மாவட்டம்) சேர்ந்த பிலால் பிலிப்ஸ் வகையிராக்கள் என்னிடம் சில மாதங்களுக்கு முன்னால் கூறினார்கள். விளக்கவும்.
Regards
Abdul Hakim-Bangalore
பதில்
ஸாலிம் அல் அம்ரீ என்பவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். நான் அமீரகம் சென்றிருந்த போது எனது நிகழ்ச்சிகள் பல தடை செய்யப்பட்டன. அப்போது இந்த அறிஞரை சந்தித்து உரையாடும் வாய்ப்பை அபுதாபி ஹாமின், யூசுப் அலி ஆகியோர் ஏற்படுத்தித் தந்தனர். அவருடன் ஜகாத், குறித்தும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குறித்தும் கலந்துரையாடல் நடத்தினோம். நாம் கூறியதை கவனமாகக் கேட்ட இவர் நீங்கள் சொல்வது சிந்திக்கத் தக்கதாக உள்ளது என்று கூறினார். இன்னும் பல அறிஞர்கள் மத்தியிலும் இது பற்றி நான் கலந்து பேசுகிறேன் என்று கூறினார். இது தான் நடந்தது. விவாத அழைப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. இதன் பின்னர் இந்தியாவில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த இவர் என்னை நினைவு வைத்து எனைச் சந்திக்க விரும்பினார். சென்னையில் அவர் தங்கியிருந்த லாட்ஜில் சந்தித்து பேசிக் கொண்டேன். அவர் எனக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை. எனது நிலைபாடு சரி என்றோ தவறு என்றோ பேசவும் இல்லை. விவாதம் தொடர்பாக எந்தப் பேச்சும் எஙகளுக்குள் நடக்கவில்லை.
20.05.2010. 10:42
அமீரின் சொல், அல்லாஹ்வின் சொல்லா?
அமீரின் சொல், அல்லாஹ்வின் சொல்லா?
தப்லீக் ஜமாஅத்தில் அமீரின் சொல் அல்லாஹ்வின் சொல் என்றும் அமீரின் முடிவு அல்லாஹ்வின் முடிவு என்றும் சொல்கிறார்கள். இது உண்மையா? குர்ஆன் ஹதீஸ் கூறுவது என்ன?
ஜிஃப்ரீ
பதில் :
இவ்வாறு தப்லீக் ஜமாஅத்தில் சொல்லியிருப்பார்களேயானால், தப்லீக் ஜமாஅத்தின் வழிகேட்டிற்கு இதை விட பெரிய ஆதாரம் வேறு எதுவும் இருக்க முடியாது. தன்னுடைய கருத்தை அல்லாஹ்வுடைய கருத்து என்று கூறுபவனை விட அநியாயக்காரன் வேறுயாருமில்லை. இது அல்லாஹ்வின் மீது துணிந்து இட்டுக்கட்டும் செயல்.
இவ்வாறு பேசுபவர்கள் முஸ்லிம்களாகவே இருக்க முடியாது. ஏனென்றால் தன்னை அல்லாஹ்வுடைய இடத்தில் கொண்டு சென்று அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கும் காரியத்தை செய்கிறார்கள்.
இதுபோன்ற இழிசெயலில் ஈடுபடுபவர்களுக்கு அல்லாஹ் கடுமையான எச்சரிக்கை விடுகிறான்.
وَمَنْ أَظْلَمُ مِمَّنْ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ قَالَ أُوحِيَ إِلَيَّ وَلَمْ يُوحَ إِلَيْهِ شَيْءٌ وَمَنْ قَالَ سَأُنزِلُ مِثْلَ مَا أَنزَلَ اللَّهُ وَلَوْ تَرَى إِذْ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ بَاسِطُوا أَيْدِيهِمْ أَخْرِجُوا أَنفُسَكُمْ الْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى اللَّهِ غَيْرَ الْحَقِّ وَكُنتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ(93)6
அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டுபவன், எதுவுமே அவனுக்கு (இறைவனிடமிருந்து) அறிவிக்கப்படாதிருந்தும் "எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், மற்றும் "அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப் படுகிறீர்கள்!' (எனக் கூறுவார்கள்).
அல்குர்ஆன் (6 : 93)
وَمَنْ أَظْلَمُ مِمَّنْ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِآيَاتِهِ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ(21)6
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.
அல்குர்ஆன் (6 : 21)
قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّي الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْإِثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ وَأَنْ تُشْرِكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ(33)7
"வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' என (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் (7 : 33)
தங்களுடைய அசத்தியக் கருத்துக்களை மக்களிடம் விதைக்க வேதக்காரர்கள் தங்களுடைய சுயக்கருத்துக்களை அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறி அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டினார்கள். நீங்கள் கூறுவது உண்மையாக இருக்குமேயானால் இந்த மாபாதகச் செயலையே தப்லீக் ஜமாஅத்தும் செய்துவருகிறது.
وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنْ الْكِتَابِ وَمَا هُوَ مِنْ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ(78)3
அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' எனவும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (3 : 78)
وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ(28)7
அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது "எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறுகின்றனர். "அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!
அல்குர்ஆன் (7 : 28)
06.04.2010. 20:33
சூரா யூசுப் ஓதினால் குழந்தை அழகாக பி
சூரா யூசுப் ஓதினால் குழந்தை அழகாக பிறக்குமா ?
சூரா ”அன் ஆம்” ஓதினால் நாம் நினைத்த நாட்டங்கள் நிறைவேறும் என்கிறார்களே அது உண்மைதானா ?
சித்தி லைலா
பதில்:
குழந்தை வயிற்றில் இருக்கும் போது பத்து மாதமும் சூரா யூசுஃப் ஓதினால் குழந்தை அழகாக பிறக்கும் என்று நம்புவதற்கு ஏற்கத்தகுந்த எந்த ஆதாரமும் இல்லை. இந்தக் கருத்தை கூறும் ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தியை கூட நம்மால் பார்க்க முடியவில்லை.
மேலும் அல்அன்ஆம் அத்தியாயத்தை ஓதினால் நமது நாட்டங்கள் நிறைவேறும் என்று நம்புவதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.
இது மட்டுமல்லாமல் ”ஜின்” அத்தியாயத்தை ஓதினால் ஜின்னை வசப்படுத்தலாம் என்றும் சிலர் உளறிவருகின்றனர்.
”பகரா” அத்தியாயத்தை ஓதிகொண்டே இருந்தால் மாட்டை வசப்படுத்திவிட முடியுமா?
தேனீ, எறும்பு என்ற பெயரில் உள்ள அத்தியாயங்களை ஓதி தேனீக்களையும் எறும்புகளையும் வசப்படுதலாம் என்று சொல்வார்களா?
04.04.2010. 01:14
நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா
நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா?
இந்த நபியை படைக்காவிட்டால் உலகையே படைத்திருக்கமாட்டேன் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்வதாக பயான் கேட்டேன். இதற்கு ஆதாரம் உள்ளதா?
முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான் படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி இப்னு அசாகீர் என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றது.
اللآلي المصنوعة - (1 / 249)
وفضل شهر رمضان والشفاعة كلها لك حتى ظل عرشي في القيامة على رأسك ممدود وتاج الملك على رأسك معقود ولقد قرنت اسمك مع اسمي فلا أذكر في موضع حتى تذكر معي ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك علي ومنزلتك عندي ولولاك ما خلقت الدنيا موضوع أبو السكين وإبراهيم ويحيى البصري ضعفاء متروكون وقال الفلاس يحيى كذاب يحدث بالموضوعات
الموضوعات لابن الجوزي - (1 / 290)
ويحيى البصري متروكان. قال أحمد بن حنبل: حرقنا حديث يحيى البصري. وقال الفلاس: كان كذابا يحدث أحاديث موضوعة. وقال الدارقطني: متروك.
இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர்களும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்களான இப்ராஹீம் அபுஸ்ஸிக்கீன் மற்றும் யஹ்யா ஆகியோர் பலவீனமானவர்கள் என்று இமாம் தஹபீ இமாம் தாரகுத்னீ இமாம் இப்னுல் ஜவ்ஸீ மற்றும் இமாம் அஹ்மது ஆகியோர் குறைகூறியுள்ளனர்.
تلخيص كتاب الموضوعات للذهبي - (1 / 37)
195-حديث محمد بن عيسى بن حبان المدائني ثنا محمد بن الصباح ثنا علي بن الحسن عن إبراهيم بن اليسع عن العباس الضرير عن الخليل بن مرة عن يحيى البصري عن زادان عن سلمان قال أتى أعرابي جاف بدوي فذكر خبراً طويلاً سمجاً وآخره يا محمد لولاك ما خلقت الدنيا
قال ابن الجوزي موضوع بلا شك ويحيى البصري تالف كذاب والسند ظلمة
இந்த செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் இதன் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் பெரும் பொய்யர் என்றும் இமாம் இப்னுல் ஜவ்ஸீ தெரிவித்துள்ளார். மேலும் இதே கருத்தில் திர்மிதீ மற்றும் ஹாகிம் ஆகிய நூல்களிலும் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதம் அலை அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் 'லாயிலாஹ இல்லல்லாஹூ' என்பதுடன் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்றும் எழுதப்பட்டிருந்ததாம். ''இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்'' என்று ஆதம் (அலை) கேட்டர்களாம். அதற்கு இறைவன் ''அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்'' என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறிய போது சொர்க்கத்தில் பார்த்தது நினைவுக்கு வந்ததாம். ''இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக'' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.
இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டடுள்ளது. இச்செய்தி அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِي(56)51
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.
அல்குர்ஆன் (51:56)
இறைவன் தன்னை வணங்குவதற்காகத்தான் மனிதனையும், ஜின்களையும் படைத்திருப்பதாக கூறிக்காட்டும் போது, முஹம்மது நபி(ஸல்) அவர்களை படைக்காவிட்டால் இந்த உலகத்தையே படைத்திருக்கமாட்டேன் என்று கூறுவதாக சொல்லுவது இந்த வசனத்தோடு நேரடியாக மோதுகின்றது. எனவே இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பது இதன் மூலம் மேலும் உறுதியாகிறது.
02.04.2010. 23:44
ஹதீஸ்கள் தேவையா?
ஹதீஸ்கள் தேவையா?
கேள்வி
ஹதீஸ் தேவை என்றால் நபி ஏன் அதை எழுத சொல்லவில்லை ? நூறு ஆண்டுகளுக்கு பிறகு சொன்னவர்களின் வாதம் எப்படி உண்மை என்று நம்புவது ?
முஹம்மது ஃபைசல்
ஹதீஸ்களின் அவசியத்தை நீங்கள் விரிவாக அறிய சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய குர்ஆன் மட்டும் போதுமா? என்ற புத்தகத்தை வாசியுங்கள்.
ஹதீஸ்கள் தேவையில்லை என்பதால் தான் அவற்றை எழுத வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற வாதம் தவறானது.
குர்ஆன் வசனங்கள் இறங்கினால் அதை உடனே நபித்தோழர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். இப்பணியை அவர்கள் சிரமத்துடன் செய்து வந்தனர். ஏனென்றால் எழுதுவதற்குரிய இலகுவான சாதனங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. எலும்புகள் மரப்பட்டைகள் தோல்கள் ஆகியவற்றில் தான் எழுதி வந்தனர்.
இந்நேரத்தில் ஹதீஸ்களை எழுதினால் குர்ஆனுடன் ஹதீஸ்கள் கலந்து விடும் சூழல் ஏற்பட்டுவிடும் என்பதாலும் குர்ஆனை எழுதி பாதுகாப்பதற்கான முயற்சியில் முதலில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் ஹதீஸ்களை எழுத வேண்டாம் என்று ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
5326حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَكْتُبُوا عَنِّي وَمَنْ كَتَبَ عَنِّي غَيْرَ الْقُرْآنِ فَلْيَمْحُهُ وَحَدِّثُوا عَنِّي وَلَا حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَيَّ قَالَ هَمَّامٌ أَحْسِبُهُ قَالَ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ رواه مسلم
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும். என்னைப் பற்றி அறிவியுங்கள். தவறில்லை. யார் என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்'' என்று கூறினார்கள்.
முஸ்லிம் (5734)
ஆரம்ப நேரத்தில் ஹதீஸ்களை எழுதி வைப்பதை மட்டுமே நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். ஹதீஸ்களை அறிவிக்கக்கூடாது என்று அவர்கள் சொல்லவில்லை. மாறாக அறிவியுங்கள் என்று உத்தரவிட்டார்கள்.
ஹதீஸ்கள் தேவை என்ற காரணத்துக்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்து அறிவியுங்கள் என்ற கட்டளையை இட்டார்கள். ஹதீஸ்களை எழுத வேண்டாம் என ஆரம்பத்தில் அவர்கள் தடை விதித்ததற்குக் காரணம் நாம் முன்பு கூறிய விஷயமாகும்.
இதன் பிறகு குர்ஆனுடன் ஹதீஸ்கள் கலந்துவிடாது என்று கருதும் அளவிற்கு பாதுகாப்பான சூழல் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ்களை எழுதிக்கொள்ள நபித்தோழர்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.
ஹதீஸ்கள் மனிதகுலத்துக்கு அவசியம் என்பதால் இதை எழுதிக்கொள்வதற்கு நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். சில நேரங்களில் எழுதுமாறு உத்தரவும் இட்டுள்ளார்கள். இதை பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.
3161 حَدَّثَنَا مُسَدَّدٌ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَا حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ عَنْ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُغِيثٍ عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ كُنْتُ أَكْتُبُ كُلَّ شَيْءٍ أَسْمَعُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيدُ حِفْظَهُ فَنَهَتْنِي قُرَيْشٌ وَقَالُوا أَتَكْتُبُ كُلَّ شَيْءٍ تَسْمَعُهُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَشَرٌ يَتَكَلَّمُ فِي الْغَضَبِ وَالرِّضَا فَأَمْسَكْتُ عَنْ الْكِتَابِ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَوْمَأَ بِأُصْبُعِهِ إِلَى فِيهِ فَقَالَ اكْتُبْ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا يَخْرُجُ مِنْهُ إِلَّا حَقٌّ رواه الترمذي
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறும் அனைத்து விஷயங்களையும் மனனம் செய்துகொள்வதற்காக எழுதிக்கொள்வேன். அப்போது குரைஷியர் நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செவியுறும் அனைத்து விஷயங்களையும் எழுதிக்கொள்கிறாயா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்திலும் சந்தோஷமான நேரத்திலும் (தவறுதலாக எதையாவது) பேசிவிடும் மனிதர் தானே? என்று கூறி (எழுதுவதை விட்டும்) என்னைத் தடுத்தனர். எனவே நான் எழுதுவதை நிறுத்தினேன். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது தனது விரலால் தன்னுடைய வாயை சுட்டிக்காட்டி என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீதாணையாக இதிலிருந்து (அதாவது என்னுடைய வாயிலிருந்து) உண்மையைத் தவிர வேறெதுவும் வெளிப்படாது. நீ (நான் கூறுவதை) எழுதிக்கொள் என்று கூறினார்கள்.
திர்மிதி (3161)
2434 حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا فَتَحَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ قَامَ فِي النَّاسِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ مَكَّةَ الْفِيلَ وَسَلَّطَ عَلَيْهَا رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ فَإِنَّهَا لَا تَحِلُّ لِأَحَدٍ كَانَ قَبْلِي وَإِنَّهَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ وَإِنَّهَا لَا تَحِلُّ لِأَحَدٍ بَعْدِي فَلَا يُنَفَّرُ صَيْدُهَا وَلَا يُخْتَلَى شَوْكُهَا وَلَا تَحِلُّ سَاقِطَتُهَا إِلَّا لِمُنْشِدٍ وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا أَنْ يُفْدَى وَإِمَّا أَنْ يُقِيدَ فَقَالَ الْعَبَّاسُ إِلَّا الْإِذْخِرَ فَإِنَّا نَجْعَلُهُ لِقُبُورِنَا وَبُيُوتِنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا الْإِذْخِرَ فَقَامَ أَبُو شَاهٍ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اكْتُبُوا لِأَبِي شَاهٍ قُلْتُ لِلْأَوْزَاعِيِّ مَا قَوْلُهُ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ قَالَ هَذِهِ الْخُطْبَةَ الَّتِي سَمِعَهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்த போது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, "அல்லாஹ் மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) மூமின்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியüக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.
இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கின்றதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம்'' என்று கூறினார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள், "இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "இத்கிர் புல்லைத் தவிரத் தான்'' என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள்.
(அறிவிப்பாளர்கüல் ஒருவரான வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) கூறுகிறார்:) நான் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு எழுதிக் கொடுங்கள்' என்னும் அபூஷாஹ் (ரலி) அவர்களுடைய சொல் எதைக் குறிக்கின்றது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அவர் கேட்ட இந்த உரையைத் தான் (எழுதிக் கொடுக்கச் சொன்னார்)'' என்று பதிலளித்தார்கள்.
புகாரி (2434)
நூறாண்டுகளுக்கு பிறகு சொன்னவர்களின் வாதம் உண்மை என்று எப்படி நம்புவது என்று கேட்டுள்ளீர்கள்.
இன்றைக்கு உலகில் நடக்கின்ற நிகழ்வுகளையும் முன்பு நடந்த எத்தனையோ விஷயங்களையும் நீங்கள் எப்படி நம்பிக்கொண்டு இருக்கின்றீர்கள்? ஒருவர் ஒரு செய்தியை கொண்டு வந்தால் அவர் நம்பகமானவரா என்று பார்ப்போம். நம்பகமானவராக இருந்தால் ஏற்போம். இல்லையென்றால் அந்த செய்தியை மறுத்துவிடுவோம். நமக்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை அறிய வேண்டும் என்றால் அதற்குரிய சரியான வழி இது தான். இதை நிராகரித்துவிட்டால் ஹதீஸ்கள் என்ன? நமக்கு முன்னால் உலகில் நடந்த எந்த வரலாற்றுச் செய்திகளையும் நம்மால் நம்ப முடியாது.
ஹதீஸ்கள் என்பது நூறாண்டுகளுக்கு பிறகு வந்தவர்களின் கூற்று அல்ல. ஒருவரிடமிருந்து ஒருவர் கேட்டு சங்கிலித்தொடராக வருபவை. நபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர் கேட்பார். நபித்தோழரிடமிருந்து தாபிஉ கேட்பார். தாபிஉவிடமிருந்து அடுத்த நூற்றாண்டில் வந்தவர் கேட்பார் இப்படி புத்தக ஆசிரியர் வரைக்கும் தொடர்பு முறிவில்லாத முழுமையான அறிவிப்பாளர் தொடர் கொண்ட செய்திகளையே நாம் ஏற்போம். அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
நடைமுறையில் ஒரு செய்தியை ஏற்பதற்கு இது போன்ற அற்புதமான விதிமுறைகளை நாம் கண்டுகொள்வதில்லை. எந்த ஒழுங்கு முறையும் இல்லாமலேயே நாம் தகவல்களை ஏற்றுவருகிறோம்.
ஆனால் ஹதீஸ்களை பொறுத்தவைரை சரியான நிபந்தனைகளுக்கும் முறையான விதிமுறைகளுக்கும் உட்பட்டு இருந்தாலே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே ஹதீஸ்களை ஏற்றுக்கொள்வது தான் அறிவுடமை.
29.03.2010. 23:01
பாமரர்களால் குர்ஆனை விளங்க முடியுமா?
பாமரர்களால் குர்ஆனை விளங்க முடியுமா?
1991ம் ஆண்டு மார்ச் மாத அல்ஜன்னத் இதழில் சகோதரர்பி.ஜெ அவா;களிடம் கேட்கப்பட்ட கேள்வியையும், அதற்கான பதிலையும் இலங்கை ரஸ்மின் என்ற சகோதரர் கம்போஸ் செய்து அனுப்பியுள்ளார். அதை நன்றியுடன் வெளியிடுகிறோம்.
அரபு மொழி தெரியாதவர்களுக்கு குர்ஆன் விளங்குமா
கேள்வி : சாதாரணமானவர்களால் குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க முடியும்? மொழி பெயர்ப்புகளைத்தானே நம்ப வேண்டியுள்ளது ?
S.M செய்யிது அஹ்மது அலி BA தூத்துக்குடி.
பதில் : மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் ஆதாரமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும். குர்ஆன், ஹதீஸையே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுக்குக் கூட மயக்கத்தை ஏற்படுத்தும் பொய்யான வாதமாகும் இது.
குர்ஆனும், ஹதீஸ்களும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளன என்பது உண்மைதான். அரபு மொழி அறியாத மக்கள் மொழி பெயர்ப்புகளைத்தான் நம்பவேண்டியுள்ளது என்பதும் உண்மைதான்.
இந்தக் காரணங்களுக்காகத் தான் மத்ஹபுகள் அவசியம் என்றால் மத்ஹபுடைய இமாம்கள் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் மொழியில் தான் சட்டங்களை எழுதினார்களா? (அபூஹனீபா தவிர) நான்கு இமாம்களும் அரபி மொழியைத் தமது தாய் மொழியாகக் கொண்டவர்களே! அவர்கள் எழுதிய அல்லது எழுதியதாகச் சொல்லப்படும் நூல்கள் யாவுமே அரபி மொழியில் அமைந்தவையே.
இதே வாதத்தின் அடிப்படையில் இவர்கள் என்ன சொல்ல வேண்டும்? மத்ஹபுகளின் சட்டங்கள் அரபி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதனாலும், அந்த இமாம்கள் எழுதியதை மொழி பெயர்ப்புகளை வைத்து தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாலும், அந்த இமாம்களும் அரபியராக இருந்ததனாலும் மத்ஹபுகளும், அதன் சட்டங்களும் விளங்காது என்று கூறியிருக்க வேண்டும். தமிழ் நாட்டில் பிறந்த யாரையாவது இமாமாக ஏற்றிருக்க வேண்டும் அப்படிச் செய்யவில்லையே அது ஏன்?
இதைத் தான் நாம் சிந்திக்க வேண்டும்.
மத்ஹபுடைய மூல நூல்கள் அரபு மொழியில் இருந்தாலும் அதைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்குப் புரியும் என்று இவர்கள் நம்பியதால் தானே மத்ஹபுகளைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றார்கள்.
அரபு மொழியில் எழுதப்பட்ட மத்ஹபுச் சட்டங்கள் தமிழாக்கம் செய்தால் விளங்க முடியும் என்றால் இந்த நியாயம் குர்ஆன், ஹதீஸ் விஷயத்தில் பொருந்தாமல் போனது ஏன்?
மத்ஹபுகள் மீது இவர்களுக்கு வெறி இருப்பதாலும், குர்ஆன், ஹதீஸ் இவார்களுக்குத் தேவையற்றதாக இருப்பதாலுமே இந்தப் பாரபட்சமான முடிவுக்கு வருகின்றனர்.
தவறுகளும் சரியானவையும் கலந்துள்ள மனிதர்களின் அரபு மொழி வாசகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டால் விளங்க முடியும் என்றால் தவறே இல்லாத முற்றிலும் சரியாகவே உள்ள குர்ஆன், ஹதீஸ்கள் தமிழாக்கம் செய்யப்படும் போது ஏன் விளங்காது?
மொழி பெயர்ப்புகளில், மொழி பெயர்த்தவர்களின் கவனக் குறைவினாலோ, வேறு காரணங்களினாலோ சில தவறுகள் ஏற்படலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. குர்ஆன், ஹதீஸ் மட்டுமின்றி எல்லா மொழி மாற்றத்தின் போதும் இது ஏற்படத்தான் செய்யும். இதை அரபி மொழியறியாதவர்களால் சிலவேளை கண்டுபிடிக்கப்படாமலும் போகும். ஆனால் அதற்காக குர்ஆன், ஹதீஸை விட்டு விட முடியுமா? விட்டு விட வேண்டும் என்றால் மத்ஹபுகள் உள்பட எந்த மொழி மாற்றத்தையும் விட்டாக வேண்டும்.
நம்மால் இயன்றளவு முயற்சித்துப் பார்த்துவிட்டு மொழி பெயர்ப்பை நாம் நம்புகிறோம். நாம் அறியாத வகையில் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதை அல்லாஹ் மன்னிப்பான். வேண்டுமென்றே குர்ஆன், ஹதீஸை அலட்சியம் செய்வதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தக் கருத்துடையவர்கள் தாங்கள் சொற்பொழிவுகளில், குத்பாக்களில், புத்தகங்களில் குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்துகின்றார்களே விளங்காத குர்ஆன், ஹதீஸை ஏன் மக்களிடம் கூற வேண்டும்.
மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்கு மட்டும் குர்ஆன், ஹதீஸ்களைக் கூறினால் விளங்கும்; மற்ற விஷயங்களுக்கு விளங்காதா?
இதெல்லாம் ஷைத்தானின் மாயவலை இதில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
நாம் எப்படி திருக்குர் ஆனுக்கு தமிழாக்கம் வெளியிட்டுள்ளோமோ அது போல் குர்ஆன் விளங்காது என்ற கொள்கை உடையவர்கள் ஏன் திருக்குர்ஆன் தமிழாக்கம் வெளியிட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது..
20.02.2010. 15:40
இறந்தவருக்கு ஃபாத்திஹா ஓதுதல்