கடவுளுடன் தான் விவாதிப்பேன் என்ற வாத

கடவுளுடன் தான் விவாதிப்பேன் என்ற வாதம் சரியா?

மசூது, கடையநல்லூர்

நாம் விடுத்த விவாத அழைப்புக்கு பதிலாகத் தான் கடவுளின் சட்டம் குறித்து கடவுளிடம் தான் விவாதிப்பேன் என்கிறார். இவருக்கு அறிவு என்பது அறவே கிடையாது என்பதற்கான பெரிய நிரூபணங்களில் இதுவும் ஒன்றாகும்.

மரண தண்டனை கடவுள் கொடுத்த தண்டனையா என்பது விவாத தலைப்பாக இருந்தால் கூட இவர் இப்படி கூறி தப்பிக்க முடியாது. கடவுளின் சொல் என்று மனிதனாகிய நான் தான் அவரிடம் சொல்கிறேன். அது குறித்து என்னிடம் தான் அவர் விவாதிக்க வேண்டும். கடவுளே இவரிடம் நேரடியாக்க் கூறும் போது கடவுளிடம் விவாதித்துக் கொள்ளட்டும்.

ஆனால் தலைப்பு இப்படி இருந்தால் கூட இது மனிதன் செய்யக் கூடிய வாதமல்ல.

ஆனால் நான் இரண்டு விஷயங்களுக்குத் தான் விவாத அழைப்பு கொடுக்கிறேன்.

குற்றங்களைக் குறைக்க மரண தண்டனை தான் ஒரே வழி. இது ஒரு தலைப்பு. இதில் கடவுள் இழுக்கப்பட மாட்டார். மரண தண்டனை சரியா இல்லையா என்பது தான் விவாதிக்கப்படும், இதற்கு ஏன் கடவுள் வர வேண்டும்?

மரண தண்டனை கூடாது என்று இவர் மனிதர்களிடம் தான் கூறினார். அதைப் பார்த்த மனிதன் தான் விவாத்த்துக்கு அழைக்கிறேன்.

இப்போது சொல்லுங்கள் இதற்குப் பிறகும் இவருக்கு அறிவு இருப்பதாக நீங்கள் நினைக்க முடியுமா?

அப்பாவிக்கும் மைனர் பெண்ணுக்கும் சவூதியில் மரண தண்டனை கொடுத்து விட்டனர் என்று மனிதர்களிட்ம தான் பேசினார். அது பொய் என்று கூறி விவாதிக்க அழைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் இவர் அறிவாளியா? சிந்தனை இல்லாத மிருகத்தின் அளவு அறிவு உள்ளவரா?கேள்வி பதில்விதண்டா வாதம்கடவுளின் சட்டம்மரண தண்டனைமனிதஅது பொய் என்று கூறிவிவாதிக்க அழைக்

Published on: January 29, 2013, 10:45 AM Views: 1592

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top