எல்லாப் பெண்களும் ஒழுக்கம் கெட்டவர்கள் தானே?

எல்லாப் பெண்களும் ஒழுக்கம் கெட்டவர்கள் தானே?

உலகில் உள்ள எல்லாப் பெண்களும் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொண்டவர்கள் தான். இப்படியிருக்க இவர்களுடன் எப்படி வாழ்வது? உடற்கூறு அடிப்படையே இதை உறுதி செய்கிறதே?

ஹஜ்ஜூல் அக்பர்

இது போல் நீங்கள் உண்மையாகவே நினைத்துக் கொண்டு கேள்வி கேட்டால் உங்களுக்கு மனநோய் குறித்த சிகிச்சை அவசியமாகும்.

தக்க ஆதாரமில்லாமல் கற்பனை செய்து அதை உண்மை என்று நம்புவது தான் மனநோயின் முக்கிய விளைவாகும்.

ஒவ்வொரு பெண்ணாக சோதனை நடத்தி அவர்கள் திருமணத்துக்கு முன்பு கற்பிழந்துள்ளார்கள் என்று முடிவு செய்திருந்தால் இப்படி கூற முடியும்.

அல்லது ஒவ்வொரு பெண்ணும் இன்னொரு ஆணுடன் தொடர்பு கொண்டு இருந்த்தைக் கண்ணால் பார்த்து விட்டு இப்படி கூறலாம்.

இவ்விரண்டும் சாத்தியமற்றதாகும். பெண்களின் உடற்கூறு அடிப்படையில் அவர்களின் உடல் ஆண் துணையைத் தேடுவார்கள் என்று நீங்கள் கருதி இப்படிக் கூறினால் எல்லா ஆண்களுக்கும் இது பொருந்தும். நீங்கள் உட்பட எல்லா ஆண்களும் பெண்ணிடம் விபச்சாரம் செய்தவர்கள் என்றும் நீங்கள் சொல்ல வேண்டும். அப்படி நீங்கள் சொன்னால் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும் தகுதி அற்றவராகிறீர். உங்களுக்குப் பொருத்தமாகத் தான் உங்களுக்கு மனைவி அமைந்துள்ளார் என்று எடுத்துக் கொள்வது தான் உங்கள் நிலைபாட்டுக்கு ஏற்ற முடிவாகும்.

நீங்களே ஒழுக்கம் கெட்டவர் என ஆகும் போது ஒழுக்கம் கெட்ட பெண்ணை மணப்பதுதான் உங்களுக்கு பொருத்தமாகும். நல்ல பெண்ணை எப்படி மணப்பது என்று கேள்வி கேட்க முடியாது?  

மேலும் நீங்கள் கூறும் இந்தக் குற்றச்சாட்டு குா்ஆன் மற்றும் நபிவழிக்கு எதிரானதாகும். ஏனெனில் பெண்களில் கற்பொழுக்கமுள்ள நல்ல பெண்களும் இருக்கிறார்கள் என்றே குா்ஆனும் நபிமொழிகளும் எடுத்துரைக்கின்றன.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது வீண்பழி சுமத்துவோருக்கு எண்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என குா்ஆன் கூறுவதன் மூலம் நல்ல பெண்களும் உலகில் உள்ளனர் என்று குா்ஆன் தெளிவாகக் கூறுகிறது.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.

அல்குா்ஆன் 24 4

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.

அல்குா்ஆன் 24 23

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

அல்குர்ஆன் 24 26

உலகில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் திருமணம் செய்யப்படுகிறார்கள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கப் பற்றுக்காகவும் பெண்கள் திருமணம் முடிக்கப்படுகிறார்கள் என்று கூறுவதிலிருந்து நல்லொழுக்கமுள்ள மார்க்கப்பற்று நிறைந்த பெண்களும் உலகில் உள்ளனர் என்பது உறுதியாகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளது செல்வத்திற்காக.

2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.

3. அவளது அழகிற்காக.

4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  

நூல் : புகாரி 5090

இவ்வுலகில் பயனளிக்கும் செல்வங்கள் ஏராளம் இருந்தாலும் நல்லொழுக்கமுள்ள பெண் தான் மிக மேலான செல்வம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதும் இந்தக் கருத்தை வலுப்படுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 2911

உலகில் நல்ல பெண்கள் கெட்ட பெண்கள் என இரு வகையினரும் கலந்தே இருக்கின்றனர் என்பதே சரியான குா்ஆன் மற்றும் நபிவழிக்கு ஏற்ற கருத்தாகும்.

உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் ஷைத்தானுடைய ஊசலாட்டத்தால் ஏற்பட்ட வீணான சந்தேகமாகும். இது உங்கள் பிறப்பிலேயே சந்தேகத்தை உண்டாக்கும்.

இந்த தீய சிந்தனையிலிருந்து விலக ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருங்கள். இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும்.கேள்வி பதில்விதண்டா வாதம்தீய சிந்தனையிலிருந்து விலகஷைத்தானிடமிருந்துஅல்லாஹ்விடம் பாதுக

Published on: August 22, 2013, 11:40 PM Views: 9614

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top