ஒருவர் வாய் வைத்ததை மற்றவர் பருகலாமா
ஒருவர் வாய் வைத்ததை மற்றவர் பருகலாமா
கேள்வி ஒருவர் குடித்து விட்டு அல்லது சாப்பிட்டு விட்டு மீதம் வைத்ததை மற்றவர்கள் சாப்பிடலாமா?
சுக்ருல்லாஹ்
பதில் ஒருவர் குடித்து விட்டு அல்லது சாப்பிட்டு விட்டு மீதம் வைத்ததை மற்றவர்கள் சாப்பிடுவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.
நபியவர்கள் தாம் சாப்பிட்டு விட்டு மீதமானதைப் பிற நபித்தோழர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ حَتَّى إِنِّي لَأَرَى الرِّيَّ يَخْرُجُ فِي أَظْفَارِي ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْعِلْمَ رواه البخاري
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. (அதிலிருந்த பாலை) நான் (தாகம் தீர) அருந்தினேன். இறுதியில் எனது நகக்கண்கள் ஊடே (பால்) பொங்கிவரக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த) மிச்சத்தை உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் இதற்கு (இந்தப் பாலுக்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க, அதற்கு அவர்கள் அறிவு என்று பதிலளித்தார்கள்.
நூல் புகாரி (82)
இது நபியவர்களின் கனவில் நடந்த சம்பவமாக இருந்தாலும் இதில் கூறப்பட்டவை மார்க்கமாகும்.
நபிமார்களின் கனவுகள் இறைச் செய்தியாகும். அதுமட்டுமல்ல நடைமுறையில் எது ஆகுமானதோ அதைத்தான் நபிமார்கள் கனவிலும் காண்பார்கள்.
நபியவர்கள் தாம் அருந்தி போக இருந்த மிச்சத்தை இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதிலிருந்து ஒருவர் மீதம் வைத்த உணவை மற்றொருவர் சாப்பிடுவதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் நபியவர்களி்ல் தாம் அருந்தி மீதமிருந்ததை நபித்தோழர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
2352 حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهَا حُلِبَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ دَاجِنٌ وَهِيَ فِي دَارِ أَنَسِ بْنِ مَالِكٍ وَشِيبَ لَبَنُهَا بِمَاءٍ مِنْ الْبِئْرِ الَّتِي فِي دَارِ أَنَسٍ فَأَعْطَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَدَحَ فَشَرِبَ مِنْهُ حَتَّى إِذَا نَزَعَ الْقَدَحَ مِنْ فِيهِ وَعَلَى يَسَارِهِ أَبُو بَكْرٍ وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ فَقَالَ عُمَرُ وَخَافَ أَنْ يُعْطِيَهُ الْأَعْرَابِيَّ أَعْطِ أَبَا بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ عِنْدَكَ فَأَعْطَاهُ الْأَعْرَابِيَّ الَّذِي عَلَى يَمِينِهِ ثُمَّ قَالَ الْأَيْمَنَ فَالْأَيْمَنَ رواه البخاري
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களுடைய வலப் பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்து விட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார். ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (அந்தப் பால்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்து விட்டார்கள்.
நூல் புகாரி (2352)
453 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مِسْعَرٍ وَسُفْيَانَ عَنْ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَشْرَبُ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ فَيَشْرَبُ وَأَتَعَرَّقُ الْعَرْقَ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ وَلَمْ يَذْكُرْ زُهَيْرٌ فَيَشْرَبُ رواه مسلم
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.
நூல் முஸ்லிம் (505)
மேற்கண்ட நபியவர்களின் செயல்பாடுகளிலிருந்து ஒருவர் மீதம் வைத்ததை மற்றொருவர் சாப்பிடுவதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
இது மனம் ஒப்புவது சம்மந்தமான பிரச்சனையாகும். ஒருவரது மனம் ஒப்பினால் இவ்வாறு செய்து கொள்ளலாம். ஒப்பாவிட்டால் விட்டு விடலாம். சமுதாயத்தில் கணவன் மனைவியரிடையே இந்த விஷயத்தில் அனைவருக்கும் மனம் ஒப்புவதை நாம் கான்கிறோம். மற்றவர்கள் விஷயத்தில் அவ்வளவாக மனம் ஒப்புவதில்லை.
ஒருவரிடம் உள்ள அசுத்தம் மற்றும் பொருத்தமான ஏனைய காரணங்களினால் ஒருவர் மீதம் வைத்ததை மற்றொருவர் வெறுத்தால் அதைக் குறை கூற மார்க்கத்தில் ஆதாரம் இல்லை.
18.01.2012. 23:00
பூண்டு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வ
பூண்டு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக்கூடாதா?
வெள்ளைப் பூண்டு வெங்காயம் சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று ஹதீஸ் உள்ளது. இதற்கு என்ன காரணம்?
மவ்லாஷா
பதில்
இதற்கான காரணத்தை அல்லாஹ்வின் தூதர் அவர்களே நமக்குத் தெளிவுபடுத்தி விட்டனர்.
பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்கள் அசுத்தமானவையோ உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்ல. ஆனால் அவற்றை உண்டால் நீண்ட நேரத்திற்கு வாயில் துர்நாற்றம் அடிக்கும். இந்த துர்நாற்றம் பள்ளியில் உள்ள மற்றவர்களுக்கு நோவினை ஏற்படுத்தும்.
தொழுகைக்காகப் பள்ளிக்கு வரும் போது, இது போன்ற நாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது தான் இதற்கான காரணம்.
"வெள்ளைப் பூண்டோ, வெங்காயமோ சாப்பிட்டவர் நம்மிடமிருந்து விலகியிருக்கட்டும். அல்லது நம் பள்ளிவாசலிலிருந்து விலகியிருக்கட்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 5452
வெங்காயம் சாப்பிட்டு விட்டு, நம்முடன் தொழ வேண்டாம் என்றும், மஸ்ஜிதிற்கு வர வேண்டாம் என்றும் பல்வேறு ஹதீஸ்களில் கூறப்பட்டாலும், பின்வரும் ஹதீஸில் அதற்கான காரணம் கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று தடை செய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்து விடவே அவற்றிலிருந்து நாங்கள் சாப்பிட்டு விட்டோம். அப்போது அவர்கள், "துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றவற்றைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில் மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 874
மனிதர்களுக்குத் தொல்லை தருவதால் தான் நபிகள் (ஸல்) அவர்கள், வெங்காயம் சாப்பிட்டு விட்டுப் பள்ளிக்கு வருவதைத் தடை செய்துள்ளார்கள்.
தொழுகை நேரம் அல்லாத மற்ற நேரங்களில் இவற்றைச் சாப்பிட்த் தடையில்லை. இவற்றைச் சாப்பிட்டுவிட்டு துர்வாடை கிளம்பாத அளவுக்கு வாயைத் தூய்மைப்படுத்திவிட்டால் ஜமாஅத்தில் தாராளமாக்க் கலந்து கொள்ளலாம்.
05.01.2012. 22:27
ஹலாலான இறைச்சி கிடைக்காவிட்டால்?
ஹலாலான இறைச்சி கிடைக்காவிட்டால்?
ஐரோப்பாவில் ஹலால் இறைச்சி கிடைப்பது கடினம். எனவே இறைச்சியை வாங்கி பிஸ்மில்லாஹ் கூறினால் அது ஹலால் ஆகிவிடுமா?
பதில்
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தவற்றையே ஒரு முஸ்லிம் உண்ண வேண்டும். இதற்கு மாற்றமான முறையில் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று குர்ஆனும் நபிமொழியும் கூறுகின்றன.
وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرْ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ(121)6
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம்.
அல்குர்ஆன் (6 : 121)
5503 حَدَّثَنَا عَبْدَانُ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ شُعْبَةَ عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ عَنْ جَدِّهِ أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ لَيْسَ لَنَا مُدًى فَقَالَ مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ لَيْسَ الظُّفُرَ وَالسِّنَّ أَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ وَأَمَّا السِّنُّ فَعَظْمٌ وَنَدَّ بَعِيرٌ فَحَبَسَهُ فَقَالَ إِنَّ لِهَذِهِ الْإِبِلِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَمَا غَلَبَكُمْ مِنْهَا فَاصْنَعُوا بِهِ هَكَذَا رواه البخاري
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் (கூரான) கத்திகள் இல்லையே'' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இரத்தத்தைச் சிந்தக்கூடிய எதுவானாலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அதனால் அறுக்கப்பட்டு) விட்டால் அதை நீங்கள் உண்ணலாம் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (5503)
இந்த ஒழுங்கு முறை பேணப்படாமல் அறுக்கப்பட்டவற்றை உண்பவர் பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டால் அது ஹலாலாகி விடும் என்ற வாதம் தவறானது.
உண்ணக்கூடியவர் பிஸ்மில்லாஹ் கூறிவிட்டால் அது ஹலாலாகி விடும் என்றால் அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! என்ற தடையை இறைவன் இடவேண்டிய அவசியம் இல்லை.
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாமல் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்ற இறைவனுடைய கட்டளையைச் செயல்படுத்த முடியாது. ஏனென்றால் இது சட்டமாக இருந்தால் ஹராமான முறையில் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை எல்லோரும் பிஸ்மில்லாஹ் கூறி உண்பார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என இறைவன் கூறியதற்குப் பொருள் இல்லாமல் போகின்றது. எனவே இது தவறான வாதம்.
இந்த வாதத்திற்கு ஆதாரமாக சிலர் பின்வரும் செய்தியை காட்டுகின்றனர்.
5507 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ حَدَّثَنَا أُسَامَةُ بْنُ حَفْصٍ الْمَدَنِيُّ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ قَوْمًا قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ قَوْمًا يَأْتُونَا بِاللَّحْمِ لَا نَدْرِي أَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ أَمْ لَا فَقَالَ سَمُّوا عَلَيْهِ أَنْتُمْ وَكُلُوهُ قَالَتْ وَكَانُوا حَدِيثِي عَهْدٍ بِالْكُفْرِ تَابَعَهُ عَلِيٌّ عَنْ الدَّرَاوَرْدِيِّ وَتَابَعَهُ أَبُو خَالِدٍ وَالطُّفَاوِيُّ رواه البخاري
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு கூட்டத்தார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், "(கிராமத்திலிருந்து) சிலர் எங்களிடம் இறைச்சி கொண்டு வருகிறார்கள். (அதை அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் நாங்கள் அதை உண்ணலாமா?)'' என்று கேட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதை உண்ணுங்கள்'' என்று பதில் சொன்னார்கள். கேள்வி கேட்ட கூட்டத்தார் இறை மறுப்பை அப்போதுதான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள்.
நூல் : புகாரி (5507)
இந்தச் செய்தியில் "நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதை உண்ணுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் இஸ்லாத்தில் வந்த முஸ்லிம்கள் வழங்கும் இறைச்சிகளுக்கு இச்சட்டத்தை நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
முஸ்லிமாக இருப்பவர் பிஸ்மில்லாஹ் கூறித் தான் அறுத்திருப்பார் என்று நல்லெண்ணம் வைக்க வேண்டும். அவர் இஸ்லாத்திற்கு வந்த பிறகும் அவருடைய உணவில் சந்தேகம் கொள்ளுதல் கூடாது. இதை நபியவர்கள் அவர்கள் அளித்த இறைச்சியை உண்ண அனுமதியளித்து உணர்த்துகிறார்கள்.
இந்தச் செய்தியில் உண்பவர் பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்று நபியவர்கள் கூறுகிறார்கள். இது இறைச்சியை ஹலாலாக்குவதற்காக கூறப்படும் பிஸ்மில்லாஹ் அல்ல. உணவு உண்பவர் எந்த உணவை உண்டாலும் உண்பதற்கு முன்பு பிஸ்மில்லாஹ் கூற வேண்டும். அதைத் தான் நபியவர்கள் இங்கே குறிப்பிடுகிறார்கள்.
உண்ணுவதற்கு இந்த இறைச்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றால் நிர்பந்தம் என்ற அடிப்படையில் இந்த இறைச்சியை சாப்பிடுவது மன்னிக்கப்படும். வேறு எந்த உணவும் கிடைக்காத நேரத்தில் இது மட்டுமின்றி பன்றி இறைச்சி இரத்தம் போன்றவை கூட மன்னிக்கப்படும்.
ஆனால் தற்போது ஐரோப்பாவில் இந்த இறைச்சியைத் தவிர்த்து வேறு எந்த உணவும் கிடைக்காது என்ற நிலை இல்லை. கண்டிப்பாக சைவ உணவுகள் கிடைக்கும். மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களும் கிடைக்கத்தான் செய்கின்றது. எனவே அங்கு ஹராமான முறையில் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ண மார்க்கத்தில் அனுமதியில்லை.
24.08.2011. 15:38
கந்தூரிக்காக அறுக்கப்பட்டதை காசு கொ
கந்தூரிக்காக அறுக்கப்பட்டதை காசு கொடுத்து வாங்கலாமா?
மீலாது விழா கந்திரிக்காக அறுக்கப்பட்ட மாட்டின் ஒரு பகுதியை ஒருவர் விலைக்கு வாங்கி விற்பனை செய்கிறார். நாம் அவரிடம் காசு கொடுத்து வாங்கி உண்ணலாமா?
ஃபாரூக்
பதில்
இறைவன் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 16:115)
அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் "உஹில்ல'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.
மேற்கண்ட முறையில் அறுக்கப்பட்டவைகளை அன்பளிப்பாக பெறுவதும் கூடாது. காசு கொடுத்து விலைக்கு வாங்குவதும் கூடாது.
மார்க்கம் ஒரு பொருளை எந்த விதிவிலக்கும் கொடுக்காமல் பொதுவாகத் தடைசெய்தால் அதை விற்பதும் வாங்குவதும் தடை செய்யப்பட்டதாகும். இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.
2224حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَاتَلَ اللَّهُ يَهُودَ حُرِّمَتْ عَلَيْهِمْ الشُّحُومُ فَبَاعُوهَا وَأَكَلُوا أَثْمَانَهَا رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யூதர்களை அல்லாஹ் தனது கருணையிலிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது அதை விற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (2224)
3026حَدَّثَنَا مُسَدَّدٌ أَنَّ بِشْرَ بْنَ الْمُفَضَّلِ وَخَالِدَ بْنَ عَبْدِ اللَّهِ حَدَّثَاهُمْ الْمَعْنَى عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ بَرَكَةَ قَالَ مُسَدَّدٌ فِي حَدِيثِ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ بَرَكَةَ أَبِي الْوَلِيدِ ثُمَّ اتَّفَقَا عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا عِنْدَ الرُّكْنِ قَالَ فَرَفَعَ بَصَرَهُ إِلَى السَّمَاءِ فَضَحِكَ فَقَالَ لَعَنَ اللَّهُ الْيَهُودَ ثَلَاثًا إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْهِمْ الشُّحُومَ فَبَاعُوهَا وَأَكَلُوا أَثْمَانَهَا وَإِنَّ اللَّهَ إِذَا حَرَّمَ عَلَى قَوْمٍ أَكْلَ شَيْءٍ حَرَّمَ عَلَيْهِمْ ثَمَنَهُ رواه أبو داود
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதுக்கு அருகில் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். அவர்கள் தமது பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தி சிரித்தார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ் யூதர்களைச் சபிப்பானாக என்று மூன்று முறை கூறினார்கள். மேலும் அல்லாஹ் அவர்களுக்குக் கொழுப்பைத் தடை செய்தான். ஆனால் அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள். அல்லாஹ் ஒரு கூட்டத்தாருக்கு ஒரு பொருளை உண்ணக் கூடாது என்று தடை செய்தால் அதை விற்ற காசையும் (சேர்த்தே) தடை செய்கிறான் என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (3026)
மார்க்கம் தடை செய்த பொருளை விற்பது கூடாதென்றால் காசு கொடுத்து அந்தப் பொருளை வாங்குவதும் கூடாது.
மேலுள்ள வசனத்தில் தானாகச் செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்ட பிராணி குறிப்பிடப்படுகின்றது. இரத்தம், பன்றி, தானாகச் செத்த பிராணியின் இறைச்சி ஆகியவற்றை ஒருவர் அன்பளிப்பாகக் கொடுத்தாலும் விலைக்குக் கொடுத்தாலும் அதை உண்ண மாட்டோம். உண்ணக் கூடாது. அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்ட பிராணிக்கும் இதே சட்டம் தான்.
24.08.2011. 15:07
துபையில் விற்கப்படும் சிக்கன் ஹலாலா?
துபையில் விற்கப்படும் சிக்கன் ஹலாலா?துபையில் விற்கப்படும் கோழி இறைச்சி ஹலால் இல்லை என்று ஒரு நண்பர் கூறுகிறார். அது சரியா?
பதில்
ஒரு முஸ்லிம் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினத்தை பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அறுத்தால் அந்த உயிரினம் ஹலலானதாகி விடுகின்றது. அதாவது அதை உண்பது ஆகுமானது.
இந்த ஒழுங்கு முறைகள் பேணப்படாமல் அறுக்கப்பட்ட உயிரினங்களை உண்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
வேறு நாடுகளில் அறுக்கப்பட்ட கோழிகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்தக் கோழிகள் ஹலாலானவை என்று இந்த பாக்கெட்டுகளின் மீதே போடப்பட்டிருக்கும். துபாய் அரசின் அங்கீகாரம் பெற்றே இவை நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
இவை ஹலால் என்று துபாய் அரசாங்கம் சான்று அளிக்கின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கோழிகளை உண்பது தவறல்ல.
இஸ்லாமிய முறைப்படி இவை அறுக்கப்படவில்லை என்று யாரேனும் கூறினால் அதை அவர் நிரூபிக்க வேண்டும். யூகமாகக் கூறாமல் ஆதாரத்துடன் நிரூபித்தால் அப்போது துபாய் அரசின் சாட்சியம் தவறானது என்ற முடிவுக்கு வரலாம். இந்நிலையில் இந்தக் கோழிகளை உண்ணக் கூடாது இவ்வாறு நிரூபிக்காத வரை யூகத்தின் அடிப்படையில் இந்தக் கோழிகள் ஹராமானவை என்று முடிவெடுக்கக் கூடாது.
அறுக்கப்பட்ட பிராணி ஹலாலா? ஹராமா? என்பதை நம்மால் நேரில் பார்த்து முடிவு செய்ய முடியாது. இதற்கு ஒரு முஸ்லிம் வழங்கும் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்ய முடியும். துபாய் ஆட்சியாளர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் இவ்விஷயத்தில் இவர்களுடைய சாட்சியத்தை ஏற்க வேண்டியுள்ளது.
நமக்குத் தெரியாமல் தவறான முறையில் அறுக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது? என்ற சந்தேகம் தேவையற்றது. ஒரு பேச்சுக்கு நமக்குத் தெரியாமல் தவறான முறையில் அறுக்கப்பட்டிருந்தால் அதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம். இத்தவறைச் செய்து மறைத்தவர்களே அதற்குப் பொறுப்பாளியாவார்கள்.
தவறான முறையில் அறுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டால் நமது கையால் அறுத்தவற்றைத் தவிர வேறு எந்த இடத்திலும் இறைச்சியை உண்ண முடியாது.
ஒரு முஸ்லிம் அளிக்கும் விருந்தில் இவ்வாறு சந்தேகப்பட்டால் யாருடைய விருந்திலும் கலந்து கொள்ள முடியாது. அண்டை வீட்டுக்காரர் தரும் உணவையும் உண்ண முடியாது. எனவே இது தேவையற்ற சந்தேகம்.
12.08.2011. 17:34
வினிகர் பயன்படுத்தலாமா
வினிகர் பயன்படுத்தலாமா
வினிகர், சிர்கா காடி எனப்படும் பொருளைப் பயன்படுத்தலாமா? அதில் பாக்டீரியாக்கள் உள்ளனவே? அது ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கபடுகிறதே
ஃபாத்திமா
பதில் :
வினிகர் என்று கூறப்படும் காடியைப் பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை உணவாக உட்கொண்டுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
3824 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَ أَهْلَهُ الْأُدُمَ فَقَالُوا مَا عِنْدَنَا إِلَّا خَلٌّ فَدَعَا بِهِ فَجَعَلَ يَأْكُلُ بِهِ وَيَقُولُ نِعْمَ الْأُدُمُ الْخَلُّ نِعْمَ الْأُدُمُ الْخَلُّ رواه مسلم
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
(ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரிடம் குழம்பு கேட்டார்கள். அதற்கு வீட்டார், "நம்மிடம் காடி மட்டுமே உள்ளது'' என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காடியைக் கொண்டு வரச் சொல்லி அதை(த் தொட்டு)க்கொண்டு உண்ணலானார்கள். மேலும், "குழம்புகளில் அருமையானது காடியாகும்'' என்று சொன்னார்கள்.
முஸ்லிம் (4169)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "குழம்பேதும் இல்லையா?'' என்று கேட்டார்கள். வீட்டார், "இல்லை, சிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லை'' என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "காடி தான் குழம்புகளில் அருமையானது'' என்று கூறினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள், "இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நான் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (4170)
வினிகர் என்பது புளிப்பான ஒரு பொருள். இதில் பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கூறினீர்கள். நாம் உண்ணும் எத்தனையோ பொருட்களில் பாக்டீரியாக்கள் இருக்கத் தான் செய்கின்றன. தண்ணீர், அரைத்த மாவு, தயிர் போன்ற பொருட்களில் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. பாக்டீரியாக்களால் தான் பால் தயிராகவும் மாவு புளிக்கவும் செய்கின்றது. இந்த வகை பாக்டீரியாக்களால் உடலுக்குப் பாதிப்பு இல்லை என்பதால் இதை உண்ணுவது தவறல்ல. வினிகரில் உள்ள பாக்டீரியாக்களால் பாதிப்பு ஏற்படுவதாக யாரும் கூறவில்லை.
அடுத்து ஆல்கஹாலில் இருந்து தான் வினிகர் தயாரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளீர்கள். ஆல்கஹாலில் இருந்து மட்டும் வினிகர் தயாரிக்கப்படுவதில்லை. வேறுவழிகளிலும் தயாரிக்கப்படுகிறது.
போதை தரும் பொருட்களை வினிகராக மாற்றக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
3669حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ح و حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ عَنْ السُّدِّيِّ عَنْ يَحْيَى بْنِ عَبَّادٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ الْخَمْرِ تُتَّخَذُ خَلًّا فَقَالَ لَا رواه مسلم
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "இல்லை (மாற்றக் கூடாது)'' என்று கூறினார்கள்.
முஸ்லிம் (4014)
எனவே போதை ஏற்படுத்தக்கூடிய அல்கஹாலை வினிகராக மாற்றினால் அதை உண்பது கூடாது. போதை இல்லாத பொருட்களிலிருந்து வினிகர் தயாரிக்கப்பட்டால் அதை உண்பது தவறல்ல.
30.12.2010. 12:30
பிறந்த நாள் அனபளிப்பை ஏற்கலாமா
பிறந்த நாள் அனபளிப்பை ஏற்கலாமா
உறவினர்கள் வீட்டில் நடை பெற்ற பிறந்த நாள் விழாவிற்குப் போகவில்லை. அவர்கள் நமது வீட்டிற்கு அனுப்பும் கேக் மற்றும் சாப்பாடு, பதார்த்தங்கள் சாப்பிடலாமா?
பதில் :
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் இருந்தாலே இவற்றைப் புறக்கணித்த நிலை ஏற்பட்டுவிடுகின்றது.
அதே நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் நமது வீடுகளுக்கு உணவு பதார்த்தங்களைக் கொடுத்தனுப்பினால் இவற்றை உண்ணுவது தவறல்ல.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 16:115)
அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் "உஹில்ல'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.
எனவே பூஜை செய்து தரும் பொருட்கள், அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவை, மது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை ஒருவர் தரும் போது வாங்கக் கூடாது. மற்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.
நமது வீட்டிற்கு உணவுகளைக் கொடுத்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் நமது வீட்டிற்குக் கொடுத்து விடப்படும் உணவு அன்பளிப்பு என்ற நிலையை அடைந்து விடுகின்றது.
பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப் பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், "இது பரீராவுக்குத் தர்மமாகும். ஆனால் நமக்கு இது அன்பளிப்பாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1495
தர்மப் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவது தடையாக இருந்தாலும், தர்மத்தைப் பெற்றவர் அதை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே அன்பளிப்பு என்ற அடிப்படையில் வீட்டிற்கு வரும் உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.
மேலும் விபரம் அறிய வீடியோ
நீங்களே கேட்ட இன்னொரு கேள்விக்கான பதிலையும் காண்க
06.11.2010. 22:04
இரவில் பறவையை வேட்டையாடலாமா?
முஹம்மத் பீர்
வேட்டையாடுவது மார்க்கத்தில் பொதுவாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான விதி முறைகளும் மார்க்கத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரவில் வேட்டையாடுவது கூடாது என்று எந்தத் தடையையும் குர் ஆனிலோ நபி மொழிகளிலோ நாம் காண முடியவில்லை.
எனவே இரவிலோ பகலிலோ வேட்டையாடலாம்.
24.03.2010. 11:47
