சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா?

சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா?

சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யக்கூடாதா?

பதில்

மூன்று நேரங்களில் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் தடை விதித்து உள்ளார்கள்.

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள்.

1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை,

2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும் வரை.

3. சூரியன் அஸ்தமிக்கத் தலைப்பட்டதிலிருந்து நன்கு மறையும் வரை.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி)

நூல் : முஸ்லிம் (1371)

இந்த நேரங்களில் எந்த தொழுகையும் தொழக்கூடாது. எனினும் இந்த நேரங்களில் துஆ செய்வதற்கு தடை  ஏதும் இல்லை.

தொழுவதற்கு தடை செய்யப்பட்ட இந்த நேரங்கள் சொற்ப நேரத்தில் முடிந்துவிடும். தொழ விரும்புபவர் இந்த நேரங்களை கடந்த பிறகு தொழுது கொள்ள வேண்டும்.

Published on: July 25, 2013, 1:25 AM Views: 5523

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top