மக்காவில் தொழுவதை இங்கிருந்து பின்ப

 மக்காவில் தொழுவதை இங்கிருந்து பின்பற்றலாமா? 

ரமலான் மாதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொழுகையை பின்பற்றி பெண்கள் வீடுகளில் தொழுது கொள்ளலாமா?

இம்தியாஸ்

நேரடி ஒளிபரப்பாக எந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் காட்டப்பட்டாலும் அது ஒரு செய்தியாக ஆகுமே தவிர அதில் நம்மையும் இணைக்காது என்பதை அறிய பெரிய ஆராய்ச்சி தேவையில்லை.

மக்காவில் தொழுகை நடக்கும் போது அங்கே மழை பெய்தால் இங்கும் அந்த மழை இருந்தால் அதில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள் என்று சொல்லலாம்.

அங்கே தீவிபத்து நடக்கும் போது மக்கள் ஓட்டம் பிடித்தால் அதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நீங்களும் ஓட்டம் பிடிக்க மாட்டீர்கள். காரணம் அதற்கும் நமக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று நம்முடைய அறிவு தீர்ப்பளிக்கிறது..  

உலகில் எங்கோ மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. அதைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு ஒருவர் சென்னையில் ஓடினால் அவர் தனியாக ஓடினார் என்றுதான் நம்முடைய அறிவு தீர்ப்பளிக்கும். அவர் அந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார் என்று எந்த மனிதனின் அறிவும் தீர்ப்பு அளிக்காது.

ஏனெனில் ஒன்றைப் பின்பற்றுவது என்றால் அதற்கும் உங்களுக்கும் தொடர்ச்சியும் தொடர்பும் இருக்க வேண்டும். தொலைக்காட்சியில் இது இல்லை.

நடக்கும் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பினாலும் அது அந்த விநாடியே உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் தெரியாது. சில விநாடிகளுக்குப் பிறகு தான் தெரியும். அவர் சஜ்தா செய்யும் போது ருகூவு செய்யும் காட்சி உங்களுக்குத் தெரியும் என்றால் அவரைப் பின்பற்றுதல் என்பது இங்கே இல்லை.

மக்காவில் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் காபாவின் எந்த திசையை நோக்கியும் தொழலாம். அவர் கிழக்கு நோக்கி தொழுதால் இங்கே அது உங்களின் கிப்லாவாக இருக்காது. ஏனெனில் இங்கே நமக்கு கிப்லா வடமேற்காக அமைந்துள்ளது. எனவே இதில் எந்த பின்பற்றுதலும். இல்லை.

தொலைக் காட்சியில் காட்டப்படுவது எங்கோ நடப்பதை தகவலாக சொல்வது தானே தவிர அதில் நம்மையும் இணைப்பது அல்ல. நாம் அதில் இணையவில்லை இணைய முடியாது என்பதால் தொலைக்காட்சியைப் பின்பற்றி தொழக் கூடாது.

இது தொடர்பான மற்றொரு செய்தியை அறிந்து கொள்ள கீழ்க்காணும் ஆக்கங்களைப் பாருங்கள் 

http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/veettil_irunthu_kondu_imaamai_pinpatralama/

http://onlinepj.com/vanakka_vazipatukal/Salah/thozukaiku_oliperukkiyai_payanpaduthalama/கேள்வி பதில்தொழுகைமக்காதொழுகை

Published on: April 17, 2013, 9:15 AM Views: 5544

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top