கடமையான தொழுகை முறைக்கும் உபரியான தொ

கடமையான தொழுகை முறைக்கும் உபரியான தொழுகை முறைக்கும் வித்தியாசம் உண்டா?

கேள்வி

இமாமுடன் ஒருவர் தொழுதால் அவர் இமாமுக்கு வலது புறமாக நேராக நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இமாமைப் பின்தொடரும் நிலை ஏற்பட்டால் அப்போது அனைவரும் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும். நபிகள் (ஸல்) அவர்கள் இவ்வாறு உபரியான தொழுகைகளில் தான் செய்துள்ளார்கள். கடமையான தொழுகைகளில் இது போன்று செய்துள்ளார்களா?

பதில்

இமாமுடன் ஒருவர் தொழுதால் அவர் இமாமுக்கு வலது புறமாக நேராக நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இமாமைப் பின்தொடரும் நிலை ஏற்பட்டால் அப்போது அனைவரும் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும். இதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.

539حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ وَسُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ وَيَحْيَى بْنُ الْفَضْلِ السِّجِسْتَانِيُّ قَالُوا حَدَّثَنَا حَاتِمٌ يَعْنِي ابْنَ إِسْمَعِيلَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ أَبُو حَزْرَةَ عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ أَتَيْنَا جَابِرًا يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ قَالَ سِرْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ فَقَامَ يُصَلِّي وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ ذَهَبْتُ أُخَالِفُ بَيْنَ طَرَفَيْهَا فَلَمْ تَبْلُغْ لِي وَكَانَتْ لَهَا ذَبَاذِبُ فَنَكَّسْتُهَا ثُمَّ خَالَفْتُ بَيْنَ طَرَفَيْهَا ثُمَّ تَوَاقَصْتُ عَلَيْهَا لَا تَسْقُطُ ثُمَّ جِئْتُ حَتَّى قُمْتُ عَنْ يَسَارِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ بِيَدِي فَأَدَارَنِي حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ فَجَاءَ ابْنُ صَخْرٍ حَتَّى قَامَ عَنْ يَسَارِهِ فَأَخَذَنَا بِيَدَيْهِ جَمِيعًا حَتَّى أَقَامَنَا خَلْفَهُ قَالَ وَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمُقُنِي وَأَنَا لَا أَشْعُرُ ثُمَّ فَطِنْتُ بِهِ فَأَشَارَ إِلَيَّ أَنْ أَتَّزِرَ بِهَا فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَا جَابِرُ قَالَ قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِذَا كَانَ وَاسِعًا فَخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ وَإِذَا كَانَ ضَيِّقًا فَاشْدُدْهُ عَلَى حِقْوِكَ رواه أبو داود

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் ஒரு போருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சென்றேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்து அப்படியே சுற்றிவரச் செய்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்.

பிறகு ஜப்பார் பின் ஸக்ர் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரின் கைகளைப் பிடித்து எங்களை அவர்களுக்குப் பின்னால் நிற்க வைத்தார்கள்.

நூல் : அபூதாவுத் (539) முஸ்லிம் (5328)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு செய்தது உபரியான தொழுகையில் என்றாலும் கடமையான தொழுகைக்கும் இதே சட்டம் தான். இவ்விஷயத்தில் கடமையான தொழுகைக்கும் உபரியான தொழுகைக்கும் வேறுபாடு இல்லை.

நபியவர்கள் உபரியான தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றும் போது இந்த ஒழுங்கு முறையைக் கடைபிடித்துள்ளார்கள். தொழுகையில் பலர் ஒன்று சேரும் போது நபியவர்கள் இதைச் செய்துள்ளதால் இது ஜமாஅத் தொழுகைக்குரிய பொதுவான ஒழுங்கு முறை என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

ரக்அத்களின் எண்ணிக்கை தொழுகையின் நேரம் ஆகிய விஷயங்களில் தான் கடமையான தொழுகை உபரியான தொழுகையை விட்டும் வேறுபடுகின்றது. தொழும் முறையைப் பொறுத்தவரை மார்க்கத்தில் இரண்டுக்கும் ஒரே சட்டம் தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையான தொழுகையில் நெஞ்சில் கை கட்டினார்கள். அத்தஹிய்யாத்தில் விரலசைத்தார்கள் என்று ஹதீஸ் உள்ளது. உபரியான தொழுகைக்கும் இதே முறை தான்

12.12.2011. 09:48




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
107 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி