ஜம்உ கஸர் எங்கே எப்போது செய்யலாம்?

ஜம்உ கஸர் எங்கே எப்போது செய்யலாம்?

முஹம்மத் அன்ஸர்

பதில்

சுமார் 25 கிலோ மீட்டர் அளவிற்கு ஒருவர் பயணம் செய்தால் அவர் ஜம்உ மற்றும் கஸர் செய்து கொள்ள மார்க்கம் அனுமதிக்கின்றது. காயல்பட்டணத்திலிருந்து ஒருவர் தூத்துக்குடிக்குப் புறப்பட்டு வருகின்றார். இவர் கஸர் தொழலாம்.

ஆனால் இதே அளவு தூரம் ஒருவர் சென்னையில் பயணம் செய்கின்றார். இவர் கஸர் தொழ மாட்டார். ஏனெனில் ஊருக்குள் தான் இவர் சுற்றுகின்றார். பயணம் என்றால் ஊரை விட்டுத் தாண்ட வேண்டும் என்று கூறுவோம்.

ஊர் என்பதற்கு என்ன அளவுகோல்? எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவு? என்றெல்லாம் மார்க்கத்தில் கூறப்படவில்லை. அதை நாம் தான் தீர்மானம் செய்கிறோம்.

ஒருவர் தான் வசிக்கின்ற இருப்பிடத்திலிருந்து 25 கிலோமீட்டர் அளவிற்கு செல்ல வேண்டும் என்பது முதல் நிபந்தனை.

ஊரின் எல்லையை கடந்திருக்க வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனை.

நமது பயணம் இவ்விரு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருந்தாலே ஜம்உ கஸ்ர் செய்யலாம்.

ஒருவர் ஊரின் எல்லையைக் கடந்து விட்டார். ஆனால் 25 கிலோமீட்டரை விட குறைவான தூரத்தில் அவருடைய பயணம்  இருந்தால் இப்போது ஜம்உ கஸ்ர் என்ற சலுகையை அவர் பயன்படுத்த முடியாது. அதே போன்று 25 கிலோமீட்டர் தூர அளவிற்கு பயணம் உள்ளது. ஆனால் ஊரின் எல்லையைக் கடக்கவில்லை என்றால் இப்போதும் அவர் இந்த சலுகையை பயன்படுத்த முடியாது.

பயண தூரத்தை எங்கிருந்து கணக்கிட வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள்.

உலகம் முழுவதும் பயணத்தூரத்தை கணக்கிடுவதற்கு ஸீரோ பாய்ண்ட் எனும் மையப்பகுதியை அளவு கோலாக வத்துள்ளன. சென்னையில் இருந்து ஒரு ஊர் 100 கிலோ மீட்டர் என்று சொன்னால் சென்னையின் ஸீரோ பாய்ண்டில் இருந்து 100 இலோ மீட்டர் என்று அர்த்தம். கடற்கரைக்கு அருகில் நேப்பியர் பாலத்தில் தான் தூரத்தை குறிக்கும் கல்லில் 0 என்று போட்டிருப்பார்கள். அங்கிருந்து நூறு கிலோ மீட்டர் என்று பொருள்.

ஆனால் மார்க்கத்தில் பயணத்தூரத்தை இப்படி கணக்கிட முடியாது. பயணம் என்றால் ஊரை விட்டு வெளியேறுவது தான். எனவே ஊரின் கடைசி எல்லையில் இருந்து நாம் சென்றடையும் ஊர் 25 கிலோ மீட்டர் அல்லத்கு அதர்கு அதிகமான தொலவில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.பயணம்ஜம்உ கஸர்தொழுகைகேள்வி

Published on: August 3, 2011, 2:06 AM Views: 4214

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top