இஹ்திகாஃப் ஒரு நாட்கள் அல்லது 2,3 நாட்�

ஒரு நாள் அல்லது 2,3 நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?

தஹஜ்ஜத் தொழுகை 4 ரக்அத் தொழலாமா?

இஃதிகாஃப் என்றால் பள்ளிவாசலில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். இவ்வாறு பள்ளிவாசலில் ஒரு நாள் தங்கி இஃதிகாஃப் இருப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَ عَلَيَّ اعْتِكَافُ يَوْمٍ فِي الْجَاهِلِيَّةِ فَأَمَرَهُ أَنْ يَفِيَ بِهِ رواه البخاري

நாஃபிவு  அவர்கள் கூறுகிறார்கள் :

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு), ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன். (அந்த நேர்ச்சையை இன்னும் நான் நிறைவேற்றவில்லை. இப்போது அதை நான் நிறைவேற்றலாமா?)'' என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

நூல் : புகாரி 3144கேள்வி பதில்தொழுகைஒரு நாள்இஃதிகாஃப்மார்க்கம்

Published on: November 21, 2012, 6:06 PM Views: 4625

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top