இமாம் மீது சந்தேகம் வந்தால்

இமாம் மீது சந்தேகம் வந்தால்

இமாம் இணைவைப்பவரா எனச் சந்தேகம் ஏற்பட்டால் அவரைப் பின்பற்றித் தொழலாமா?

அஷ்ரஃப் அலி

பதில்

ஒருவர் தன்னை இஸ்லாமிய சமுதாயத்தில் இணைத்துக் கொண்டு தன்னை முஸ்லிம் என்று கூறினால் அவருடைய வெளிப்படையான இந்த நிலையை கவனித்து அவர் முஸ்லிம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு மாற்றமாக அவர் வெளிப்படையாக இணை வைப்புக் காரியங்களில் ஈடுபடுவதை அறிந்தால் அப்போது அவர் இணை வைப்பவர் என்ற முடிவுக்கு வரலாம்.

அவர் இணை வைக்கும் காரியங்களில் ஈடுபடுவதை நாம் பார்த்தால் அல்லது அதைப் பார்த்த நம்பகமானவர்கள் நமக்குத் தெரிவித்தால் அப்போது அவர் இணை வைப்பவர் என்ற முடிவுக்கு வரலாம். அவரைப் பின்பற்றி தொழாமல் இருக்க வேண்டும்

இந்த ஆதாரங்கள் எதுவுமின்றி நமது சுய யூகத்தின் அடிப்படையில் ஒரு முஸ்லிமை இணை வைப்பவர் என்று சந்தேகப்படுவது கூடாது. இந்த சந்தேகத்தின் அடிப்படையில் முடிவெடுப்பதும் கூடாது. இவ்வாறு யூகம் கொள்வதை மார்க்கம் தடை செய்துள்ளது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنْ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ(12)49

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்!

அல்குர்ஆன் (49 : 12)

5144 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ عَنْ الْأَعْرَجِ قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ يَأْثُرُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلَا تَجَسَّسُوا وَلَا تَحَسَّسُوا وَلَا تَبَاغَضُوا وَكُونُوا إِخْوَانًا وَلَا يَخْطُبُ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَنْكِحَ أَوْ يَتْرُكَ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங்குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (5144)

30.08.2011. 14:09




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
101 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி