அத்தஹிய்யாத் ஓத ஆதாரம் உண்டா

அத்தஹிய்யாத் ஓத ஆதாரம் உண்டா?

தொழுகையில் அத்தியாத்தில் இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாது ஓதினார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது பதில் தெரிவிக்கவும்?

பதில்

தொழுகையில் இருப்பின் போது அத்தஹிய்யாத்து ஓத வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

"அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ்  ஸாலிஹீன் அஷ்ஹது (ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு' என தொழுகையில் அமரும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறச் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்கள்புகாரீ (1202), முஸ்லிம் (609)

பொருள்:

சொல், செயல் பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், சுபிட்சமும்  ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரிவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

"நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி... கூறுங்கள். (பின்னர்) தமக்கு விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: நஸயீ 1151அத்தஹிய்யாத்தொழுகைருக்கூஸஜ்தா

Published on: August 3, 2011, 2:28 AM Views: 4805

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top