அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தா

அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால்?

அருகில் மத்ஹப் பள்ளி மட்டுமே இருந்தால் அங்கே தொழலாமா? தொப்பி போடாமல் தொழக்கூடாது என்று போர்டு போடாவிட்டால் அங்கே தொழலாமா?

முஹம்மத் மிஸ்பாஹுல்லாஹ்

பதில்:

எந்தப் பள்ளிகளுக்குச் சென்று தொழக் கூடாது என்பதை மார்க்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கு மார்க்கம் கூறும் அளவுகோல் எந்த பள்ளிகளுக்குப் பொருந்துகிறதோ அந்தப் பள்ளிகளுக்குச் சென்று தொழக்கூடாது.

நம்முடைய பகுதியில் மார்க்கம் அங்கீகரித்த பள்ளிவாசல்கள் இருந்தால் அங்கு சென்று தொழுகையை நிறைவேற்ற முடியும். கடமையான தொழுகையைப் பள்ளியில் நிறைவேற்றுவது இந்தச் சூழ்நிலையில் தான் நம் மீது கடமையாகும்.

நம் பகுதியில் பள்ளிவாசல்கள் எதுவும் இல்லாவிட்டால் அல்லது தொழ தடைசெய்யப்பட்ட பள்ளிகள் மட்டும் இருந்தால் இது கடமையான தொழுகையைப் பள்ளியில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையாகும். இது போன்ற நிலையில் உள்ளவர்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளலாம்.

இவர்கள் பள்ளியில் தொழ வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை. எண்ணத்திற்கு நற்கூலி வழங்கப்படும் என்ற அடிப்படையில் பள்ளியில் தொழுத நன்மை இவர்களுக்குக் கிடைக்கும்.

ஆனால் அனுமதிக்ப்பட்ட பள்ளிவாசல்கள் இல்லை என்பதைக் காரணமாகக் கூறிக்கொண்டு தடைசெய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று விடக்கூடாது.

மார்க்கம் தடைசெய்த காரியத்தைச் செய்து நன்மையைச் சம்பாதிக்க முடியாது. அப்படிச் செய்தால் அந்தச் செயலுக்கு நன்மை கிடைக்காததோடு மார்க்க வரம்பை மீறிய குற்றம் ஏற்படும்.

ஒருவர் நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்தவருடைய செல்வத்தைத் திருடி தர்மம் செய்தால் இவர் நன்மை செய்தவராக மாட்டார். திருட்டுக் குற்றத்தைச் செய்த பாவியாகி விடுவார்.

எனவே மார்க்க உத்தரவுகளை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டும். மார்க்கம் தடை செய்த விஷயங்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட வேண்டும்.

7288 حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும், அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (லி)

நூல் : புகாரி (7288)

தொழக்கூடாத பள்ளிவாசல் குறித்து அறிந்திட

http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/thozakuutatha_pallivasal/

http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/shrkana_palliyi_thozalama/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/thozakudatha_palli_undaa/

06.02.2012. 02:27




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
105 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி