சம எண்ணிக்கையும் குர்ஆனும்

சம எண்ணிக்கையும் குர்ஆனும்

குரானில் ஜோடிகளின் எண்ணிக்கை சமமாக குறிப்பிடப்பட்டுள்ளதா , உதாரணமாக, இரவு = பகல் ,ஆண் = பெண் , முஃமின் = காஃபிர் , சூரியன் = சந்திரன். விளக்கவும்.

ஜிலானி, மும்பை

இரவு பகல், ஆண் பெண், உள்ளிட்ட இன்னும் பல சொற்கள் குர்ஆனில் சம எண்ணிக்கையில் உள்ளன என்று ஒரு கருத்து ரசாது கலீபா என்ற வழிகேடனால் சொல்லப்பட்டது. இஸ்லாத்துக்கு சிறப்பு சேர்ப்பதாக எண்ணிக் கொண்டு சிலர் அதைப் பரவலாக பரப்பியும் வந்தனர்.

ஆனால் அந்த எண்ணிக்கை அனைத்தும் பொய்யை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை 22-4-2010 அன்று நாம் விரிவாக அம்பலப்படுத்தியுள்ளோம். அந்தக் கட்டுரை இது தான்

http://onlinepj.com/aayvukal/quranil_kanithak_katamaipu/

குர்ஆனில்
அற்புதக் கணிதக் கட்டமைப்பு

ரஷாத் கலீஃபா என்பவனின் கூட்டத்தினரின் உளறல்களில் இதுவும் ஒன்று. திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளன என்று அவன் உளறியது குறித்து நம்முடைய தமிழாக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம். பார்க்க

இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன் நாம் நடத்தி வந்த ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தெளிவாக விளக்கியுள்ளோம். அதையே உங்களுக்குரிய பதிலாகத் தருகிறோம்.

ஒற்றுமையில் எழுதியது

திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது என்பது முற்றிலும் பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் இதுவரை நாம் நிரூபித்தோம்.

"மென்டல் 19எனும் ரஷாத் கலீபா 19 உடன் தனது உளறலை நிறுத்திக் கொள்ளவில்லை. குர்ஆனில் அனைத்துமே கணிதக் கட்டமைப்பில் தான் அமைக்கப்பட்டுள்ளன என்று தைரியமாகப் புளுகினான்.

"அவர் ஒவ்வொரு விஷயத்தையும் எண்ணிக்கையைக் கொண்டு மட்டுப்படுத்தியுள்ளார்''

(திருக்குர்ஆன் 72:28)

கணக்கிடுவதில் மேதைகளுக்கெல்லாம் மேதையான (அல்ஹஸீப்) அல்லாஹ்வின் குர்ஆனில் காணப்படும் மேற்காணும் வசனத்தின்படி குர்ஆனுக்கும் எண்ணிக்கைகளுக்கும் உள்ள தொடர்பையும் அவற்றின் அமைப்பில் உள்ள அற்புதங்களையும் காண்போம்.

குர்ஆனில்:-

1.         ஷஹர் - (மாதம்) எனும் வார்த்தை - 12  முறைகள் உள்ளன.

2.         யவ்ம் - (நாள்) எனும் வார்த்தை 365  முறைகள் உள்ளன.

3.         இய்யாம் - (நாட்கள்) எனும் வார்த்தை 30 முறைகள் உள்ளன. 

4.         ஷைத்தான் மற்றும் மலக்கு (வானவர்ஆகிய இரண்டும் சமமாக 88 முறைகள் உள்ளன. 

5.துன்யா (இம்மை) மற்றும் ஆகிரா (மறுமைஆகிய இரண்டும் சமமாக 115முறைகள் உள்ளன. 

6.          ஈமான் (நம்பிக்கை) மற்றும் குஃப்ர் (நிராகரிப்பு) ஆகிய இரண்டும் 25முறைகள் சமமாக உள்ளன.

7.குல் (சொல்வீராக) மற்றும் காலு (அவர்கள்  சொன்னார்கள்) ஆகிய இரண்டும் 332 முறைகள் சமமாக உள்ளன. 

8.         கிஸ்த் (நீதம்) மற்றும் ஜுல்ம் (அநீதம்) ஆகிய இரண்டும் 15 முறைகள் உள்ளன.

மாதங்கள் 12,

மாதத்தின் நாட்கள் 30,

வருடத்திற்கு 365 நாள்,

மேலும் நல்லவையும் தீயவையும் சமமான எண்ணிக்கையில் குர்ஆனில் அமையப் பெற்றிருப்பது தற்செயல் என்றா எண்ணுகிறீர்கள்இவை அல்லாஹ் தன் வேதத்தை ஒரு அற்புதமான கணிதக் கட்டமைப்பில் அமைத்திருப்பதை தெளிவாக எடுத்துக் காட்டவில்லையா?

என்று குறிப்பிட்டுள்ளான்.

இவனது புளுகை உண்மையென நம்பி சில முஸ்லிம் பத்திரிகைகளும் கூட அவற்றை மறு பிரசுரம் செய்துள்ளன. மலர் ஒன்றில் இவனது புளுகைபுளுகு என்பது தெரியாமல் பெரிய தத்துவமாக வெளியிட்டிருந்தனர்.

அந்தப் புளுகுகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆனில்மாதம் (ஷஹர்) என்ற சொல் 12 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

யவ்ம் (நாள்) எனும் சொல் 365 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

அய்யாம் நாட்கள் என்பது 30 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

பார்த்தீர்களா அதிசயத்தை! வருடத்திற்கு 12 மாதங்கள் என்பதால் அச்சொல் 12 தடவை அமைந்துள்ளது.

வருடத்துக்கு 365 நாள் உள்ளதால் நாள் என்பது 365 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாதத்துக்கு முப்பது நாட்கள் என்பதால் 30 தடவை நாட்கள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதெல்லாம் கணிதக் கட்டமைப்பில் குர்ஆன் அமைக்கப்பட்டுள்ளதற்குச் சான்றாகும் என்றெல்லாம் மென்டல் கூட்டம் கூறும் போதும் பிரசுரங்களில் எழுதும் போதும்அறியாத மக்கள் பிரமித்துப் போய் விடுவார்கள்.

ஆனால் மென்டல் கூட்டம் குறிப்பிட்ட இந்த எண்களில் இச்சொற்கள் இடம் பெறவில்லை எனும் போது இவர்கள் எந்த அளவு குர்ஆனுடன் விளையாடும் கீழ்மக்கள் என்பதை அறிந்து கொள்வார்கள்.

மாதம் என்பதைக் குறிக்கும் சொற்கள் மொத்தம் 21 தடவை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஷஹ்ர் (மாதம்) என்ற சொல் தனியாக  4 தடவை (2:185, 34:12, 34:12, 97:3 ஆகிய வசனங்கள்)

அல் என்ற அலங்காரச் சொல்லுடன் சேர்த்து  (அந்த மாதம்)  தடவை (2:185, 2:194, 2:194, 2:217, 5:2, 5:97ஆகிய வசனங்கள்

ஷஹ்ரைன் (இரு மாதங்கள்) என்பது    2 தடவை (4:92, 58:4 ஆகிய வசனங்கள்)

ஷஹ்ரன் (ஒரு மாதம்) என்பது    2 தடவை (9:36, 46,15 ஆகிய வசனங்கள்)

அஷ்ஹுர்  (மாதங்கள்)  தடவை (2:197, 2:226, 2:234, 9:2, 65:4 ஆகிய வசனங்கள்)

அல் அஷ்ஹுர்   (அந்த மாதங்கள்) தடவை (9:5 ஆகிய வசனம்)

அஷ் ஷுஹூர்   (அந்த மாதங்கள்)  1 தடவை (9:36 ஆகிய வசனம்

ஆக மொத்தம் 21 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனவே மென்டல் காலண்டர் படி வருடத்துக்கு 21 மாதங்கள் ஆகும்.

யவ்ம் - நாள் என்ற சொல் மென்டல் கூட்டம் கூறுவது போல 365 தடவை பயன்படுத்தப் படவில்லை. மாறாக 378 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளதுவருடத்துக்கு 378 நாட்கள் தான் என்று மென்டல் கூட்டம் தனிக் காலண்டர் வெளியிடலாம்.

அய்யாம் என்பது 30 தடவை இடம் பெறவில்லை. மாறாக 27 தடவை தான் இடம் பெற்றுள்ளது. இனி மேல் மாதத்துக்கு 27 நாட்கள் என்று மென்டல் காலண்டர் தயாரிக்கப்படலாம்.

அடுத்து ஷைத்தான் என்பது 88 தடவையும் மலக்கு என்பது 88 தடவையும் சமமாக இடம் பெற்றுள்ளது என்பது அடுத்த புளுகு.

இவ்வாறு புளுகி விட்டு பார்த்தீர்களாஇதைத் தற்செயல் என்றா நினைக்கிறீர்கள்தீய சக்தியான ஷைத்தான் எனும் சொல் இடம் பெற்ற அதே அளவு தான் நல்ல சக்தியான வானவர் என்பதும் இடம் பெற்றிருப்பது குர்ஆன் கணிதக் கட்டமைப்பில் அமையப் பெற்றுள்ளதைக் காட்டவில்லையா என்று மென்டல் கூட்டம் பிரமிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் ஷைத்தான் என்பது 88 தடவையும்மலக் என்பது 68 தடவையும் தான் இடம் பெற்றுள்ளது. சமஎண்ணிக்கையில் இடம் பெறவில்லை. இதுவும் பச்சைப் புளுகே என்பதில் சந்தேகம் இல்லை.

அது போல் ஈமான் என்பது 25 தடவையும்குஃப்ர் என்பது 25 தடவையும் இடம் பெற்றுள்ளது. நேர்எதிரான இரண்டு தத்துவங்களும் சமமான எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளது குர்ஆன் கணிதக் கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளதை நிரூபிக்கவில்லையா என்று மென்டல் கூட்டம் கேள்வி எழுப்புவார்கள்.

ஆனால் குர்ஆனில் ஈமான் என்பது 45 தடவையும்குஃப்ர் என்பது 36 தடவையும் தான் இடம் பெற்றுள்ளது. சமமான எண்ணிக்கையில் இடம் பெறவில்லை.

அது போல் கிஸ்த் (நீதி) என்பது  15 தடவையும் ளுல்ம் (அநீதி) என்பது 15 தடவையும் சமமாக இடம் பெற்று கணிதக் கட்டமைப்பில் குர்ஆன் அமைக்கப்பட்டுள்ளது என்று மென்டல் கூட்டம் புளுகும்.

ஆனால் உண்மையில் கிஸ்த் என்பது  15  தடவையும் ளுல்ம் என்பது  20  தடவையும் இடம் பெற்றுள்ளது. சமமாக இடம் பெறவில்லை.

அது போல் குல் என்பதும் காலூ என்பதும் 332 தடவை சமஅளவில் இடம் பெற்றுள்ளதாக இக்கூட்டம் புளுகும்.

ஆனால் உண்மையில் குல் என்பது  353  தடவையும் காலூ என்பது  332  தடவையும் இடம் பெற்றுள்ளது. சம எண்ணிக்கையில் அல்ல.

சில சொற்கள் சம அளவில் இடம் பெற்றிருந்தால் கூட அதை வைத்து கணிதக் கட்டமைப்பில் அமைக்கப்பட்டதாகக் கூற முடியாது. குர்ஆனில் உள்ள அனைத்து சொற்களும் இப்படி மைந்திருந்தால் தான் குர்ஆன் கணிதக் கட்டமைப்பில் உள்ளது என்பது நிரூபணமாகும்.

திருக்குர்ஆன் அதன் விழுமிய கொள்கைகளாலும் அற்புதமான தீர்வுகளாலும், உடைக்க முடியாத முன்னறிவிப்புகளாலும் தான் சிறந்து விளங்குகிறது. யாராலும் செய்து காட்ட முடியும் அர்த்தமற்ற உளறல்களால் அல்ல

திருக்குர்ஆன் 19 என்ற கணிதக்கட்டமைப்பில் உள்ளதா என்பதை அறிய

Published on: April 23, 2013, 10:21 PM Views: 2203

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top