நேர்வழி ஒன்றா பல வழிகளா

நேர்வழி ஒன்றா பல வழிகளா

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் நேர்வழியைப் பற்றிக் கூறும் போது ஒன்று என்று தான் கூறப்படுகின்றது. னால் 29:69 ம் வசனத்தில் வழிகள் என பன்மையாக அல்லாஹ் கூறுகின்றானே?  இதற்கான விளக்கத்தைத் தரவும்.

ஜினான்

பதில்

நேர்வழி என்பது ஒரே வழிதான். பல வழிகள் கிடையாது. இதை திருக்குர்ஆனும் நபி மொழிகளும் தெளிவாக அறிவிக்கின்றன. சில இடங்களில் வழிகள் என்று பன்மையாகக் கூறப்படுவதில் குழப்பம் அடையத் தேவை இல்லை.

எல்லா மொழிகளிலும் சொற்கள் பேரினம் சிற்றினம் என இரு வகைகளில் உள்ளன.

உயிரினம் என்பது பேரினம். ஆடு மாடு என்பன போன்றவை சிற்றினம். அதாவது உயிரினம் என்பது அதனுள் அடங்கியுள்ள ஆடு மாடு மனிதன் போன்ற பலவற்றை உள்ளடக்கியுள்ளதால் அது பேரினம் எனப்படுகிறது. ஆடு மாடு போன்ற சொற்கள் ஒரு இனத்தை மட்டும் குறிப்பதால் அவை சிற்றினம் எனப்படுகிறது.

பேரினமாக உள்ள சொற்களை ஒருமையாகவும் சொல்லலாம். பன்மையாகவும் சொல்லலாம். உயிரினம் என்றாலும் அனைத்து உயிரினங்களையும் எடுத்துக் கொள்ளும். உயிரினங்கள் என்றாலும் அனைத்து உயிரினத்தையும் எடுத்துக் கொள்ளும்.

ஒரு சொல்லாக உள்ளதைக் கவனத்தில் கொண்டால் ஒருமையாகச் சொல்லலாம். அதனுள் பல இனங்கள் அடங்கியுள்ளதைக் கவனத்தில் கொண்டால் பன்மையாகச் சொல்லலாம். பன்மையாக சொல்லும் போது பல சிற்றின்ங்கள் அதனுள் உள்ளன என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ந்கை என்றும் சொன்னாலும் நகைகள் என்று சொன்னாலும் ஒன்று தான். நகை என்பது சொல்லைக் கவனித்தும் நகைகள் என்பது அதனுள் அடங்கியுள்ள வளையல் செயின் மோதிரம் உள்ளிட்ட பலவகைகளைக் கவனித்தும் சொல்லப்பட்ட்டுள்ளது. பரிசு வழங்கப்படும்; பரிசுகள் வழங்கப்படும் என்பது போல் ஏராளமான சொற்கள் இப்படி எல்லா மொழிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சொர்க்கம் சொர்க்கங்கள் என்று குர் ஆனில் பல இடங்களில் பயனப்டுத்தப்பட்டுள்ளதையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்

வஹீ மட்டுமே மார்க்கம் என்ற அடிப்படியில் இஸ்லாம் என்பது ஒரு வழிதான். ஆனால் அதற்குள் தொழுகை, நோன்பு, கொள்கை, சட்டதிட்டங்கள் எனப் பல உட்பிரிவுகள் உள்ளதால் அதைக் கவனத்தில் கொள்ளும் போது நேர்வழிகள் என்றும் சொல்லலாம். இது எல்லா மொழிகளிலும் உள்ள சாதாரணமான நடைமுறை தான்.

23.12.2011. 22:52




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
112 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி