உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்

உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டிணிச்சாவு ஏன்

சாந்து மக்பூல் கான்

பதில்

அனைத்து உயிரினங்களுக்கும் இறைவன் உணவளிக்கிறான் என்பதை இப்படி நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது. ஒருவரும் பட்டிணியால் சாக மாட்டார்கள் என்பது இதன் கருத்து அல்ல. உணவுக்கு இறைவன் பொறுப்பு என்று மட்டும் இறைவன் சொல்லவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு காலக் கெடு உண்டு என்றும் சொல்கிறான்.

ஒருவனுக்கு எப்போது மரணம் என்று இறைவன் நிர்ணயம் செய்துள்ளானோ அதுவரை தான் உணவுக்கு இறைவன் பொறுப்பேற்றுள்ளான். தவணை வந்து விட்டால் பொறுப்பேற்றல் என்பது கிடையாது.

பார்க்க திருக்குர்ஆன் 6:2, 7:34, 10:49, 11:3, 16:61, 71:4

இது உணவுக்கு மட்டும் அல்ல. அனைத்துக்கும் உள்ள பொதுவான விதியாகும். ஒரு மனிதனின் ஆரோக்கியத்துக்கு இறைவன் தான் பொறுப்பு. ஒருவனின் பாதுகாப்புக்கும் இறைவன் தான் பொறுப்பு என்று கூறப்பட்டால் எந்த மனிதனும் சாக மாட்டான் என்று அர்த்தம் அல்ல.

19.01.2012. 03:24

நாவு பேசும் பேசாது என்று குர்ஆன் முர

நாவு பேசும் பேசாது என்று குர்ஆன் முரண்படுவது ஏன்

திருக்குர்ஆனின் 24:24 வசனமும், 36:65 வசனமும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதே?

ஜவாஹிரா, காயல்பட்டிணம்

ஒரு வசனம் மறுமையில் நாவுகள் பேசும் என்றும் இன்னொரு வசனம் வாய்களுக்கு மறுமையில் முத்திரை இடப்படும் என்றும் கூறுவதால் மேலோட்டமாகப் பார்க்கும் போது இது முரண்பாடு போல் தோன்றினாலும் சிந்திக்கும் போது இதில் முரண்பாடு இல்லை என்பது தெரியவரும்.

மனிதனின் நடவடிக்கைகள் பற்றி பேசும் போது சொல்லும் செயலும் சரியாக இருக்க வேண்டும் என்று நாம் குறிப்பிடுகிறோம்.

நாவு அல்லாத மற்ற உறுப்புக்களின் நடவடிக்கைகள் செயல் என்றும் நாவு மூலம் நடக்கும் பேச்சு எனும் நடவடிக்கை சொல் என்று நாம் வகைப்படுத்தியுள்ளோம்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு மேற்கண்ட வசனங்களைப் பார்த்தால் எவ்வளவு அற்புதமாக வார்த்தைகள் கையாளப்பட்டுள்ளன என்று நாம் அதிசயப்படும் அளவுக்கு பொருத்தமாக வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன..

இன்று அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.

திருக்குர்ஆன் 36:65

இந்த வசனம் வாய்களுக்கு முத்திரை இடப்படும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு உறுப்பும் செய்வதை உலகில் நாவு மூலம் தான் தெரிவிக்க இயலும். ஆனால் மறுமையில் உறுப்புகள் தனது செயலை தானே பேசி விடும் என்று இவ்வசனம் கூறுகிறது.

கை
செய்ததை நாவு பேசாது. கை தான் பேசும். கால் செய்தது குறித்து நாவு பேசாது. கால் தான் பேசும். இப்படி ஒவ்வொரு உறுப்பும் தான் செய்தது பற்றி பேசும் என்று இவ்வசனம் கூறுகிறது.

அப்படியானால்
நாவு செய்த்து பற்றி நாவு தான் பேச வேண்டும். மற்ற உறுப்புக்களின் செயல்களைப் பேசமுடியாமல் தான் நாவுக்கு முத்திரை இடப்படும். ஆனால் நாவு பேசியது குறித்து நாவு தான் சாட்சி சொல்லும் என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

இதில் அடங்கியுள்ள செய்தி தான் 24:24 வசனத்தில் வெளிப்படையாகக் கூறப்படுகிறது.

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.  அந்நாளில் அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.

திருக்குர்ஆன் 24:23, 24 

இங்கே அவதூறு கூறுவது குறித்து பேசப்படுகிறது. இது நாவால் நடப்பதாகும். நாவால் நிகழ்த்தப்பட்ட அவதூறை நாவு தான் பேச முடியும். எனவே தான் இந்த இட்த்தில் நாவு பேசும் எனக் கூறப்படுகிரது.

அதாவது அனைத்தையும் பேசும் சர்வாதிகாரம் படைத்திருந்த நாவின் அதிகாரம் பறிக்கப்பட்டு தான் செய்தது பற்றி மட்டும் பேசும் அளவுக்கு குறைக்கப்படும் என்பது தான் இரண்டு வசனங்களையும் இணைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் பொதுவான கருத்தாகும். இதில் முரண்படு ஏதுமில்லை.

11.01.2012. 13:16

எல்லா நபிமார்களும் வளைகுடாவைச் சேர்

எல்லா நபிமார்களும் வளைகுடாவைச் சேர்ந்தவர்களா?

ராஜ் முஹம்மத் குவைத்

குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் அனைவரும் வளைகுடா பகுதியைச் சார்ந்தவர்கள் என்ற கூற்று தவறானது.

 

ஒவ்வொரு இறைத்தூதாரும் எந்தெந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டார்கள் என்ற முழுமையான விபரம் குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. அவ்வாறிருக்க அனைத்து இறைத்தூதர்களும் வளைகுடாப்பகுதியில் தான் அனுப்பப்பட்டார்கள் என்று யூகிப்பது தவறாகும். 

வளைகுடாப் பகுதி அல்லாத வேறு இடங்களுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள். இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் எகிப்து நாட்டில் பிரச்சாரம் செய்தார்கள். எகிப்து வளைகுடாப் பகுதி இல்லை.

உலகின் எல்லாப்பகுதிகளுக்கும் நபிமார்கள் அனுப்பப்பட்டாலும் வளை குடாப்பகுதியில் உள்ளவர்கள் மட்டுமே இறைத்தூதர்களைப் பற்றிய குறிப்புகளை ஓரளவாவது பதிவு செய்து வைத்திருந்தனர். திருக்குர்ஆன் சொல்லக் கூடிய பல நபிமார்கள் வளைகுடாப் பகுதி மக்களால் முன்னரே அறியப்பட்டிருந்தார்கள்.

ஆனால் உலகின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த நபிமார்களின் பெயர்களையோ அவர்களைப் பற்றிய குறிப்புகளையோ அந்த மக்கள் பாதுக்காக்கத் தவறி விட்டனர். உதாரணமாக இந்தியாவின் பல்வேறு மொழிபேசும் மக்களுக்கு அனுப்பிய தூதர்களின் பெயர்களை அல்லாஹ் கூறினான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெயர் அந்த மக்களுக்கு பரிச்சயமில்லாத யாரோ ஒருவரைப் பற்றியதாகத் தான் எடுத்துக் கொள்ளப்படும். தங்களுக்கு அனுப்ப்ப்பட்ட தங்கலைச் சேர்ந்தவர்களைப் பற்றி கூறுவ்தாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே. இங்கு அனுப்ப்ப்பட்ட நபிமார்களின் பெயர்களைக் குறிபிடுவதால் ஒரு பயனும் இருக்காது.

பொதுவாக எந்தத் தனி நபரின் பெயரைப் பற்றி குறிப்பிடுவதாக இருந்தாலும் அந்தப் பெயர் மக்களுக்கு அறிமுகமாக இருக்க வேண்டும். அல்லது மக்களில் சிலருக்காவது தெரிந்திருந்தால் மட்டுமே கூறுவதுண்டு. யாருக்குமே தெரியாதவர்களின் செயல்பாடுகளைக் கூறுவது கிடையாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

07.01.2012. 01:21

திருடனின் கைவெட்டுவதை அல்லாஹ் தெளிவ

திருடனின் கைவெட்டுவதை அல்லாஹ் தெளிவுபடுத்தவில்லையா

கேள்வி

திருடனின் கையை வெட்ட வேண்டும் என்று திருக்குர்ஆன் 5:38 வசனம் கூறுகிறது. கை என்பது விரலில் இருந்து தோள் புஜம் வரையிலா? விரலில் இருந்து முழங்கை வரையிலா? விரலில் இருந்து மணிக்கட்டு வரையிலா என்பதற்கு குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ தெளிவுபடுத்தப்படவில்ல. சஹாபாக்களின் நடைமுறையை ஏற்காவிட்டால் இதற்கு தெளிவு கிடைக்காது. சஹாபாக்கள் திருடனின் மனிக்கட்டு வரை வெட்டியதை ஆதாரமாக்க் கொண்டு தான் இவ்வாறு முடிவு செய்கிறோம் என்று சிலர் வாதம் செய்கின்றார்கள். இந்த வாதம் சரியா?

அபூ அனூத், இலங்கை

பதில்

திருடனின் கைகளை எந்த அளவுக்கு வெட்ட வேண்டும் என்பதற்கு விளக்கம் அளிப்பதற்கு முன்னால் இப்படி கேள்வி கேட்டவர்களின் அறியாமையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சஹாபாக்கள் விளக்கம் இல்லாமல் 5: 38 வசனத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று இவர்கள் வாதிடுவதன் மூலம் சஹாபாக்களுக்கு மதிப்பு சேர்ப்பதாக நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் இதன் மூலம் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இழிவுபடுத்துகின்றனர். திருடனின் கையை வெட்ட வேண்டும் என்று சொன்ன அல்லாஹ் அதை தெளிவுபடுத்தாமல் குறைபடக் கூறி குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் என்று இவர்கள் சொல்லாமல் சொல்கின்றனர்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 5:3

என்று அல்லாஹ் கூறுகிறான். இவர்களோ அல்லாஹ் மார்க்கத்தை முழுமைப்படுத்தவில்லை மற்றவர்கள் வந்து தான் அதை முழுமைப்படுத்தும் வகையில் குறைவுடைய மார்க்கத்தையே தந்துள்ளான் என்று இவர்கள் சித்தரிக்கின்றனர்.

நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

என்று அல்லாஹ் கூறுகிறான். இவர்களோ அல்லாஹ்வுக்கு அவ்வளவாக விளக்கத் தெரியவில்லை; சஹாபாக்கள் தான் அல்லாஹ்வை விட நன்றாக விளக்கக்கூடியவர்கள் என்று சொல்லாமல் சொல்கின்றனர்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் 16:44

என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் விளக்குவதற்காக யாரை அல்லாஹ் அனுப்பினானோ அந்த தூதர் சில விஷயங்களை விளக்காமல் சென்று விட்டனர். என்று இவர்கள் நினைக்கின்றனர். அல்லது தூதருக்கு விளக்கத் தெரியவில்லை என்கின்றனர்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்ல வேண்டியதை முழுமையாக சொல்லி விட்டனர், மற்றவர்கள் வந்து அதில் எதையும் சேர்க்கும் அளவுக்கு பலவீனமாக இந்த மார்க்கத்தை அல்லாஹ் தரவில்லை என்பதை நம்புபவன் தான் முஸ்லிமாவான் என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வும் ரசுலும் ஒரு விஷயத்தைச் சொல்லாமல் சஹாபாக்கள் அதைச் சொல்லி இருந்தால் அது அல்லாஹ் சொன்னதாக ஆகாது. அவர்களின் கருத்தாகத் தான் ஆகும். அதை ஏற்கவேண்டும் என்று ஆகவே ஆகாது. அதற்கு மார்க்க அந்தஸ்து எதுவும் வந்து விடாது. நாம் சிந்தித்துப் பார்த்து அந்த வசனத்தில் இருந்து எதை விளங்குகிறோமோ அதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வும் அப்படித்தான் ந்மக்கு சொல்லிக் காட்டுகிறான்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர் ஆன் 16:44

அல்லாஹ் அருளிய வேத்த்தை அவனது தூதர் வழியாகக் கிடைக்கும் விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாத விஷயங்களில் நாம் சிந்தித்துப் பார்த்துத் தான் விளங்க வேண்டும் என்று மேற்கண்ட வசனம் சொல்கிறது. குர்ஆனிலிருந்து சிந்தித்து விளங்கும் விஷயங்களும் குர்ஆனில் உள்ளடங்கி இருந்தது தான் என்பது இந்த வசனத்தில் இருந்து தெரிகிறது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒன்றை குறிப்பாக சொல்லாமல் பொதுவாகச் சொன்னால் அதில் சிந்தனையைச் செலுத்தி காரணகாரியங்களுடன் ஆய்வு செய்து இதைத் தான் இவ்வசனம் சொல்கிற்து என்று ஆய்ந்து அறிவது தான் நம் மீது உள்ள கடமை.

திருடினால் கையை வெட்ட வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான். எதுவரை வெட்ட வேண்டும் என்று அல்லாஹ் சொல்லவில்லை. இதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அளித்த விளக்கம் குறித்து பலவீனமான ஹதிஸ் இருந்தாலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.

கை என்பது இந்த இட்த்தில் எதை குறிக்கிற்து என்று நாம் தான் சிந்திக்க வேண்டும்.

கை என்பது விரலில் இருந்து தோள் புஜம் வரை உள்ள பகுதியைக் குறிக்கும் என்பது உண்மை தான். ஆனால் எல்லா மொழிகளிலும் மனிதர்களின் பேச்சுக்களிலும் பொதுவாக கை என்று சொன்னால் மனிக்கட்டு வரை உள்ள பகுதியைக் குறிக்கவே நாம் பயன்படுத்துகிறோம். வேறு அர்த்தம் தரும் வகையில் வாசக அமைப்பு இருந்தால் தவிர மற்ற சந்தர்ப்பங்களில்  மனிக்கட்டு வரை உள்ள பகுதியைத் தான் கை எனக் கூறுகிறோம்.

கையால் பிடி கையால் எடு கை கழுவு கையால் முஸாபஹா செய் என்றெல்லாம் சொன்னால் முழுக்கை என்று நாம் புரிந்து கொள்வதில்லை. மனிக்கட்டு வரை உள்ள பகுதி என்றே புரிந்து கொள்கிறோம்.

ஊசி போட கையை நீட்டு என்று மருத்துவர் கூறினால் ஊசி எங்கே போடுவர்கள் என்பது நமக்குத் தெரிந்துள்ளதால் முழுக்கையை நீட்டுகிறோம்.

கையைக் கட்டிக் கொள் என்று கூறினால் கட்டிக் கொள் என்ற வார்த்தை இணைந்துள்ளதன் காரண்மாக முழங்கை வரை கட்டிக் கொள்கிறோம்.

இப்படியெல்லாம் சொல்லாமல் வெறும் கை என்று சொன்னால் மனிக்கட்டு வரை உள்ள பகுதியைக் குறிப்பதற்குத் தான் நாம் பயன்படுத்துகிறோம். மனிதர்களின் பேச்சு வழக்கில் தான் குர்ஆன் அருளப்பட்ட்து. எனவே இவ்வசன்ம் தெளிவாகவே உள்ளது.

கையைக் கழுவ்விவிட்டு சாப்பிடு என்று கூறினால் தோள் புஜம் வரை கழுவ வேண்டும் என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். மனிக்கட்டு வரை என்று சொல்லா விட்டாலும் வேறு அர்த்தம் கொள்ளும் வகையில் வாசக் அமைப்பு இல்லாத்தால் இதன் அர்த்தமே மனிக்கட்டு வரை என்பது தான்.

இதை அல்லாஹ்வும் தந்து திருமறையில் தெளிவுபடுத்துகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 5:6

இவ்வசனத்தில் கைகள் என்று இரு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று உளூ செய்வது பற்றியும் மற்றொன்று தயம்ம்ம் செய்வது பற்றியும் பேசுகிறது. உளூ செய்வதைப் பற்றி பேசும் போது மூட்டுக்கள் – முழங்கைகள்- வரை கழுவுங்கள் என்று அலாஹ் கூறுகிறான். ஆனால் தயம்மும் செய்வதைப் பற்றி பேசும் போது எந்த அளவும் கூறாமல் கைகள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

இதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் செயல் முறை விளக்கம் அளிக்கும் போது தரையில் உள்ளங்கையால் அடித்து முகத்தில் தடவிக் கொண்டார்கள். பின்னர் மனிக்கட்டு வரை கைகளில் தடவிக் கொண்டார்கள்.

பார்க்க புகாரி 342, 343, 339, 338

தயம்ம்ம் செய்யும் போது முழங்கை வரை அவர்கள் தடவவில்லை. பொதுவாக கை என்று கூறப்பட்டதால் மனிக்கட்டு வரை என்று செயல் விளக்கம் தந்துள்ளனர்.

கையை வெட்டுங்கள் என்று பொதுவாக அல்லாஹ் சொல்கிறான். மனிக்கட்டையும் தாண்டிய பகுதி என்று புரிந்து கொள்ள எந்த வாசகமும் இத்துடன் சேர்த்து சொல்லப்படவில்லை எனவே மனிக்கட்டு வரை என்று தான் இதை அறிவுடைய அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்பதால் அல்லாஹ் தெளிவாகவே சொல்லி இருக்கிறான். யாரையும் சார்ந்து விளங்கும் நிலையில் வைக்கவில்லை.

இப்படி விளங்குவது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் பெருமை சேர்க்குமா? இவர்கள் செய்யும் வாதம் பெருமை சேர்க்குமா?

01.01.2012. 00:08

நேர்வழி ஒன்றா பல வழிகளா

நேர்வழி ஒன்றா பல வழிகளா

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் நேர்வழியைப் பற்றிக் கூறும் போது ஒன்று என்று தான் கூறப்படுகின்றது. னால் 29:69 ம் வசனத்தில் வழிகள் என பன்மையாக அல்லாஹ் கூறுகின்றானே?  இதற்கான விளக்கத்தைத் தரவும்

தொடர்ந்து படிக்க 23.12.2011. 22:52

காதுகளில் அடித்தோம் என்பதன் பொருள்?

காதுகளில் அடித்தோம் என்பதன் பொருள்?
கேள்வி

உங்கள் திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் சூரா கஃப்பில் 11 வது வசனத்தை எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம்என்று மொழியாக்கம் செய்துள்ளீர்கள். இதே நேரம் ஜான் ட்ரஸ்ட் தர்ஜமாவில் ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். எது சரி?

உங்கள் மொழியாக்கத்தில் فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ என்ற அரபி வாசகத்திற்கான மொழியாக்கம் இல்லை

.فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا என்ற வாசகத்திற்கு மாத்திரம் தான் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தவறுதலாக விடுபட்டதா? அல்லது வேறு விளக்கங்களுக்காக விட்டீர்களா? என்பதைத் தெளிவுபடுத்துமாறு அன்பாய் வேண்டுகிறேன்.

ரஸ்மின், இலங்கை

எல்லா மொழிகளிலும் நேரடிப் பொருள் அல்லாமல் வேறு பொருளில் சில சொற்கள் பயன்படுத்தப்படும்.  மொழி பெயர்க்கும் போது எல்லா இடங்களிலும்அப்படியே மொழிபெயர்த்தால் சரியான கருத்து கிடைக்காது. எந்த இட்த்தில் அப்படியே மொழிபெயர்த்தால் சரியான கருத்து கிடைக்குமோ அந்த இட்த்தில் மட்டும் தான் அப்படியே அர்த்தம் செய்ய வேண்டும். அப்படி இல்லாத இடங்களில் அதன் கருத்து என்னவோ அதைத்தான் குறிப்பிட வேண்டும்.

உதாரணமாக வள்ளல் தன்மையைக் குறிக்க கை நீளமானவன் الاطول يدا  என்று சொல்வார்கள். நபிகள் நாயகம் ஸல் அவர்களும் இச்சொல்லை பயன்படுத்தியுள்ளனர்.

பார்க்க புகாரி 1420

باب حدثنا موسى بن إسماعيل حدثنا أبو عوانة عن فراس عن الشعبي عن مسروق عن عائشة رضي الله عنها أن بعض أزواج النبي صلى الله عليه وسلم قلن للنبي صلى الله عليه وسلم أينا أسرع بك لحوقا قال أطولكن يدا فأخذوا قصبة يذرعونها فكانت سودة أطولهن يدا فعلمنا بعد أنما كانت طول يدها الصدقة وكانت أسرعنا لحوقا به وكانت تحب الصدقة

இதற்கு வள்ளல் என்று தான் மொழி பெயர்க்க வேண்டும். கை நீளமானவன் என்று மொழி பெயர்த்தால் தவறான அர்த்தமாகி விடும். ஏனெனில் இச்சொல் தமிழ் மொழியில் திருடனைக் குறிப்பதற்கே பயன்படுத்தப்படும்.

அவன் ஒரு சிங்கம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இந்த இடத்தில் சிங்கம் என்பது வீரனைக் குறிக்கும். அரபு மொழியிலும் தமிழ் மொழியிலும் இது ஒரே கருத்தில் தான் பயன்படுத்தப்படும் என்பதால் சிங்கம் என்றே பொருள் செய்ய வேண்டும்.

இது போல் தான் காதுகளில் அடித்தல் என்பது அரபு மொழியில் தூக்கத்தைக் குறிக்க பயன்படுத்துவார்கள். ஆனால் தமிழ் மொழியில் காதுகளில் அடித்தல் என்பதை தூக்கத்தைக் குறிக்க பயன்படுத்தும் வழக்கம் இல்லை. இந்த நிலையில் காதுகளில் அடித்தோம் என்று நாம் இச்சொல்லுக்கு மொழி பெயர்த்தால் காதுகளில் அல்லாஹ் அடித்தான் என்று தான் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள். அரபியர்கள் தூங்கச் செய்தோம் என்று புரிந்து கொள்வார்கள்.

எனவே தான் காதுகளில் அடித்தோம் என்பதை எந்த அர்த்தத்தில் அரபுகள் பயன்படுத்துகிறார்களோ அந்த அர்த்தத்தையே நாம் செய்துள்ளோம்.

இதற்கு ஆதாரமாக பிரபலமான மூன்று தப்சீர்களை எடுத்துக் காட்டியுள்ளேன்.

تفسير الطبري (17/ 613)

: فضربنا على آذانهم بالنوم في الكهف : أي ألقينا عليهم النوم،

تفسير ابن كثير (5/ 139)

فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا } أي: ألقينا عليهم النوم حين دخلوا إلى الكهف، فناموا سنين كثيرة

تفسير القرطبي (10/ 363)

عِبَارَةٌ عَنْ إِلْقَاءِ اللَّهِ تَعَالَى النَّوْمَ عَلَيْهِمْ. وَهَذِهِ مِنْ فَصِيحَاتِ الْقُرْآنِ الَّتِي أَقَرَّتِ الْعَرَبُ بِالْقُصُورِ عَنِ الْإِتْيَانِ بِمِثْلِهِ

குர்துபீ, இப்னு கஸீர், தபரி ஆகிய மூன்று தப்ஸீர்களிலும் இதன் கருத்து தூங்கச் செய்தோம் என்பது தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் மற்றவர்கள் நேரடி அர்த்தம் செய்யப் போய் அவர்களுக்கே திருப்தி இல்லாமல் பிராக்கெட்டில் தூங்குமாறு என்று போட்டுள்ளனர்.

மேலும் அவர்களும் ஆதானிஹிம் என்பதற்கு காதுகள் என்று நேரடி அர்த்தம் செய்து விட்டு லரப்னா என்பதற்கு அடித்தோம் என்று பொருள் செய்யாமல் தடை ஏற்படுத்தினோம் என்று மறைமுகமான அர்த்த்தைத் தான் செய்துள்ளனர். அதாவது அவர்களும் பாதிக்கு நேரடி அர்த்தம் செய்து மீதிக்கு வேறு அர்த்தம் செய்துள்ளனர்.

14.11.2011. 12:58

இன்ன அன்ன ஏன் பொருள் செய்யவில்லை?

இன்ன அன்ன ஏன் பொருள் செய்யவில்லை?

எனது தமிழாக்கத்தில் இன்ன அன்ன என்ற சொற்களுக்கு மற்றவர்கள் செய்தது போல் நிச்சயமாக என்று ஏன் மொழி பெயர்ப்புச் செய்யாமல் விட்டுள்ளீர்கள் என்ற கேள்வி பரவலாக்க் கேட்கப்பட்டு வருகிறது.

இந்தக் கேள்வி வருவதற்கு முன்பே இதற்கு நான் எனது தமிழாக்கத்தின் முன்னுரையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.

அதைக் கீழே தருகிறேன்.

அரபு மொழியில் ஒரு கருத்தை வலியுறுத்தி சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெரிவிப்பதற்காக "இன்ன' அல்லது "அன்ன' என்ற இடைச் சொல்லைப் பயன்படுத்துவார்கள். இது போன்ற வழக்கு தமிழில் இல்லை. "நிச்சயமாக' என்று சிலர் இதற்குத் தமிழாக்கம் செய்துள்ளனர். இது தவறாகும்.

இன்ன, அன்ன என்பது இடைச் சொல்லாகும். இடைச் சொற்களுக்கு அது போன்ற இடைச் சொல்லாகத் தான் பொருள் செய்ய வேண்டும். இடைச் சொல் என்றால் அதைத் தனியாகக் கூறினால் அர்த்தம் இருக்காது. இன்னொரு சொல்லுடன் சேர்த்தால் தான் அர்த்தம் தரும்.

உதாரணமாக "ஃபீ' என்ற அரபு மொழி இடைச் சொல்லை எடுத்துக் கொள்வோம். இதற்குத் தனியாக அர்த்தம் இல்லை. "ஃபீ' என்பது "மக்கா' என்ற சொல்லுடன் சேர்ந்து "ஃபீ மக்கா' என்று வரும் போது "மக்காவில்' அல்லது "மக்காவிலே' என்று பொருள் செய்கிறோம். "லே' என்று மட்டும் சொன்னால் அதற்கு அர்த்தம் இல்லை. இது போல் தான் "இன்ன', "அன்ன' என்பதும்.

"ஃபீ' என்ற இடைச்சொல்லுக்கு தமிழ் மொழியில் "லே' என்ற இடைச்சொல் இருக்கிறது. அதனால் அதனால் இந்த இடைச்சொல்லுக்குத் தமிழாக்கம் செய்வதில் பிரச்சனை இல்லை.

ஆனால் "இன்ன' "அன்ன' என்ற இடைச் சொல்லுக்கு நிகரான மற்றொரு இடைச் சொல் தமிழ் மொழியில் இல்லை. அவ்வாறு இருந்தால் தான் அதற்குப் பொருள் செய்ய முடியும். அத்தகைய இடைச் சொல் தமிழில் இல்லாததால் மற்றவர்கள் செய்தது போன்று "நிச்சயமாக' என்று பொருள் செய்வதைத் தவிர்த்து விட்டோம்.

இப்படி நாம் விளக்கமாக சொன்ன பிறகும் மேலதிகமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அதற்காகக் கூடுதல் விளக்கத்தைத் தரும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

அரபு மொழியில் ஒன்றை உறுதிப்படுத்திக் கூறுவதற்காக இன்ன அன்ன ஆகிய சொற்கள் உள்ளன எனபது உண்மை தான். இவை மட்டுமின்றி இதே கருத்தைத் தருவதற்காக இன்னும் பல சொற்களும் உள்ளன. இன்ன, அன்ன என்ற சொல் எப்படி உறுதிப்படுத்திக் கூறுவதற்காக உள்ளனவோ அதே பொருளைத் தான் அந்தச் சொற்களும் தரும். இது போன்ற சொற்கள் தஃகீத் சொற்கள் என்று சொல்லப்படுகிறது.

இன்ன அன்ன என்ற சொல்லுக்கு நிச்சயமாக என்று தமிழில் சொல்லியே ஆக வேண்டும் என்று வாதிடக் கூடியவர்கள் இது போல் அமைந்த எல்லா சொற்களுக்கும் அப்படி பொருள் செய்ய மாட்டார்கள். அதைக் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.

இதற்குச் சில உதாரணங்களை நாம் எடுத்துக் காட்டுகிறோம்.

قَالَ فَاذْهَبْ فَإِنَّ لَكَ فِي الْحَيَاةِ أَنْ تَقُولَ لَا مِسَاسَ وَإِنَّ لَكَ مَوْعِدًا لَنْ تُخْلَفَهُ وَانظُرْ إِلَى إِلَهِكَ الَّذِي ظَلَلْتَ عَلَيْهِ عَاكِفًا لَنُحَرِّقَنَّهُ ثُمَّ لَنَنسِفَنَّهُ فِي الْيَمِّ نَسْفًا(97)20

இவ்வசனத்துக்கு நாம் செய்த தமிழாக்கம்

97. "நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் "தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக் கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்'' என்று (மூஸா) கூறினார்.19

நமது தமிழாக்கத்தை எதிர்த்து இக்கேள்வியைக் கேட்பவர்கள் செய்ய வேண்டிய தமிழாக்கம் இப்படித்தான் வரவேண்டும்.

97. "நீ சென்று விடு! நிச்சயமாக உனது வாழ்க்கையில் "தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும். நிச்சயமாக மாற்றப்பட முடியாத வாக்களிக் கப்பட்ட நேரமும் நிச்சயமாக உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நிச்சயமாக நெருப்பில் நிச்சயமாக எரித்து பின்னர் நிச்சயமாக அதைக் கடலில் நிச்சயமாக தூவுவோம்'' என்று (மூஸா) கூறினார்.19

மேற்கண்ட 20 வது அத்தியாயம் 97 வது வசனத்தில் ஏழு இடங்களில் நிச்சயமாக என்ற கருத்தைத் தரும் சொற்கள் உள்ளன. யாருடைய மொழி பெயர்ப்பிலாவது ஏழு தடவை நிச்சயமாக என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

ஏழு இடங்களில் அவர்கள் நிச்சயமாக என்று குறிப்பிடவில்லையானால் அவர்களும் தஃகீத் எனும வகையைச் சேர்ந்த சொல்லுக்கு பொருள் செய்யாமல் விட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது.

அது போல் பின்வரும் வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்

إِنَّ الَّذِينَ تَوَلَّوْا مِنْكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ إِنَّمَا اسْتَزَلَّهُمْ الشَّيْطَانُ بِبَعْضِ مَا كَسَبُوا وَلَقَدْ عَفَا اللَّهُ عَنْهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ(155)3

மேற்கண்ட 3:155 வசனத்துக்கு நாம் செய்த தமிழாக்கம் இது தான்

155. இரு அணிகளும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் பின்வாங்கியவர்களை, அவர்களின் சில செயல்கள் காரணமாக ஷைத்தான் வழி தவறச் செய்தான். அல்லாஹ் அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மைமிக்கவன்.

தஃகீத் சொற்களுக்கு நிச்சயமாக என்ற சொல்லை சேர்க்க வேண்டும் என்று வாதிடுவோர் இதற்கு ஐந்து இடங்களில் நிச்சயமாக என்று சேர்க்க வேண்டும்.

155. இரு அணிகளும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் நிச்சயமாக பின்வாங்கியவர்களை, அவர்களின் சில செயல்கள் காரணமாக நிச்சயமாக ஷைத்தான் வழி தவறச் செய்தான். நிச்சயமாக அல்லாஹ் நிச்சயமாக அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மைமிக்கவன்.

இப்படி ஐந்து இடங்களில் நிச்சயமாக என்ற சொல்லைப் பயன்படுத்தாவிட்டால் அவர்களும் தஃகீத் சொற்களுக்கு பொருள் செய்யாமல் விட்டுள்ளனர் என்பதே பொருளாகும்.

இது போல் மேலும் சில வசனங்களைச் சுட்டிக் காட்டியுள்ளேன். அவற்றுக்கு எத்தனை தடவை நிச்ச்யமாக என்று குறிப்பிட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளேன். அனைத்து தமிழாக்கங்களிலும் இது போல் பொருள் செய்யப்பட்டுள்ளதா என்று தேடிப்பாருங்கள்.

2:130 வசனத்தில்

وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ وَلَقَدْ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنْ الصَّالِحِينَ (130)2

நான்கு தடவை நிச்சயமாக என்ற சொல் வர வேண்டும்.

5:12 வசனத்தில்

وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمْ اثْنَيْ عَشَرَ نَقِيبًا وَقَالَ اللَّهُ إِنِّي مَعَكُمْ لَئِنْ أَقَمْتُمْ الصَّلَاةَ وَآتَيْتُمْ الزَّكَاةَ وَآمَنْتُمْ بِرُسُلِي وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمْ اللَّهَ قَرْضًا حَسَنًا لَأُكَفِّرَنَّ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ فَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ(12)5

ஒன்பது தடவை நிச்சயமாக என்று குறிப்பிட வேண்டும்.

12:41 வசனத்தில்

قَالُوا تَاللَّهِ لَقَدْ آثَرَكَ اللَّهُ عَلَيْنَا وَإِنْ كُنَّا لَخَاطِئِينَ(91)12

நான்கு தடவை தஃகீத் சொற்கள் உள்ளன. நான்கு தடவை நிச்சயமாக என்று குறிப்பிட வேண்டும்.

மேலும் கீழ்க்கண்ட வசனங்களில் எத்தனை தடவை நிச்சயமாக என்று வர வேண்டும்? எத்தனை தடவை வந்துள்ளன என்று சிவப்பு அடையாளத்தை வைத்து அறிந்து கொள்ளுங்கள் 

  • مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِنْهُمْ بَعْدَ ذَلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ(32)5

  • وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَاخْتُلِفَ فِيهِ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّهُمْ لَفِي شَكٍّ مِنْهُ مُرِيبٍ(110)11

  • قَالَتْ فَذَلِكُنَّ الَّذِي لُمْتُنَّنِي فِيهِ وَلَقَدْ رَاوَدتُّهُ عَنْ نَفْسِهِ فَاسْتَعْصَمَ وَلَئِنْ لَمْ يَفْعَلْ مَا آمُرُهُ لَيُسْجَنَنَّ وَلَيَكُونَ مِنَ الصَّاغِرِينَ(32)12

  • وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ(24)15

  • وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ(97)15

  • وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ(103)16

  • وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ بَلْ زَعَمْتُمْ أَلَّنْ نَجْعَلَ لَكُمْ مَوْعِدًا(48)15

  • وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ(3)29

  •   وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ وَلَئِنْ جِئْتَهُمْ بِآيَةٍ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ أَنْتُمْ إِلَّا مُبْطِلُونَ(58)30

  • وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنْ الْخَاسِرِينَ(65)39

  • قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَمُهْتَدُونَ(70)2

  • ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنْ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ(74)2

  • إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ وَإِنْ كُنَّا لَمُبْتَلِينَ(30)23

  • وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ جَاءَتْهُمْ آيَةٌ لَيُؤْمِنُنَّ بِهَا قُلْ إِنَّمَا الْآيَاتُ عِنْدَ اللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا يُؤْمِنُونَ(109)6

  • وَلَمَّا وَقَعَ عَلَيْهِمْ الرِّجْزُ قَالُوا يَامُوسَى ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ لَئِنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِي إِسْرَائِيلَ(134)7

  • وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ(10)11

  • وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ(7)14

  • وَلَئِنْ مَسَّتْهُمْ نَفْحَةٌ مِنْ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَاوَيْلَنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ(46)21

  • وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنْ الْخَاسِرِينَ(65)39

  • وَلَئِنْ أَذَقْنَاهُ رَحْمَةً مِنَّا مِنْ بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ هَذَا لِي وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِنْ رُجِعْتُ إِلَى رَبِّي إِنَّ لِي عِنْدَهُ لَلْحُسْنَى فَلَنُنَبِّئَنَّ الَّذِينَ كَفَرُوا بِمَا عَمِلُوا وَلَنُذِيقَنَّهُمْ مِنْ عَذَابٍ غَلِيظٍ(50) 41

உதாரணத்துக்குத் தான் சில வசனங்களைப் பட்டியல் போட்டுள்ளோம். தஃகீத் எனும் உறுதிப்படுத்தும் வகையில் ஏராளமான சொற்கள் அரபு மொழியில் உள்ளன. இவை அனைத்துமே உறுதிப்படுத்துவதில் சமமான தகுதியில் உள்ளவை தான்.

இன்ன என்பதற்கும் அன்ன என்பதற்கும் நிச்சயமாக என்று மொழி பெயர்க்க வேண்டும் என்று கூறுவதற்கு என்ன காரணமோ அதே காரணம் மற்ற அனைத்து தஃகீத் சொற்களுக்கும் உள்ளன. ஆனால் இன்ன அன்ன என்பதற்கு மட்டும் நிச்சயமாக என்று பொருள் செய்ய வேண்டும் என்று வாதிடுவோர் மற்ற தஃகீத் சொற்களுக்கு அவ்வாறு பயன்படுத்துவது இல்லை.

இதற்கான காரணம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதாவது எந்த மொழியாக இருந்தாலும் பெயர்ச்சொற்களுக்கும் விணைச் சொற்களுக்கும் தான் மொழி பெயர்க்க முடியும். இடைச் சொற்களைப் பொருத்தவரை ஒரு மொழியில் உள்ள இடைச் சொற்களுக்கு நிகரான இடைச் சொல் மற்ற மொழியிலும் இருந்தால் தான் மொழி பெயர்க்க இயலும். தஃகீத் என்ற வகைச் சொற்களுக்கு நிகரான இடைச் சொல் தமிழ் மொழியில் இல்லாததால் அது அரபு மொழியின் சிறப்பு நடை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன் காரணமாகவே ஏராளமான தஃகீத் சொற்களுக்கு மொழி பெயர்க்காமல் எல்லா அறிஞர்களும் தங்கள் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் விட்டு விடுகின்றனர். ஆனால் இன்ன என்பதற்கு மட்டும் காரணம் இல்லாமல் வித்தியாசமான நடைமுறையைக் கையாண்டு வருகின்றனர். அதைக் காப்பாற்றிக் கொள்வதற்காக என் மீது பழி போடுகின்றனர்.

இன்ன அன்ன என்பதற்கு பீஜே மொழி பெயர்க்கவில்லை என்று குற்றம் சாட்டும் ஒருவர் தனது பல்வேறு உரைகளின் போது இன்ன என்பதை வாசிப்பதையும் அதற்கு நிச்சயமாக என்று பொருள் செய்யாமல் விட்டு ஓடுவதையும் பாருங்கள்

பீஜே மொழிபெயர்க்கவில்லை என்று குற்றம் சாட்டும் காட்சி:

Play Without Downloading 
Download To your computer

குற்றம் சாட்டியவரே அதை விட்டு விடும் காட்சி:

Play Without Downloading 
Download To your computer

10.11.2011. 10:15

லூத் நபி விஷயத்தில் குர்ஆன் முரண்படு

லூத் நபி விஷயத்தில் குர்ஆன் முரண்படுகிறதா

குர்ஆனில் முரண்பாடு எனக் கூறும் கிறித்தவர்கள் நபி லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தின் பதில் இதுவாக இருந்தது என ஓரிடத்திலும் வேறொரு இடத்தில் வேறு ஒரு பதிலைச் சொன்னார்கள் என்றும் உள்ளதாக கூறுகின்றனர். குர்ஆனில் முரண்பாடுகள் இருப்பதாக வாதிடுகின்றனர். விளக்கம் தேவை

செய்யத் ஷம்சுத்தீன்

லூத் நபிக்கு அவர்களின் சமுதாயத்தார் அளித்த பதிலை அல்லாஹ் இரண்டு இடங்களில் குறிப்பிடுகின்றான். இந்த பதில்கள் வேறுபடுவதால் இதை முரண்பாடாகச் சிலுவை வணங்கிகள் குறிப்பிட்டுள்ளனர்.

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ(56)27

"லூத்துடைய குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! அவர்கள் தூய்மையான மக்களாகவுள்ளனர்'' என்பதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.

அல்குர்ஆன் (27 : 56)

أَئِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمْ الْمُنكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِنْ كُنتَ مِنْ الصَّادِقِينَ(29)29

"சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா?'' என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறிய போது, "நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக'' என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.

அல்குர்ஆன் (29 : 29)
27:56வது வசனத்தில் லூத்துடைய குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! என்று கூறியதாகவும் 29 : 29 வது வசனத்தில் "நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக'' என்று கூறியதாகவும் சொல்லப்படுகின்றது.

இதைத் தான் முரண்பாடு என்கின்றனர். இவர்களுக்கு சிந்திக்கும் திறன் சிறிதளவும் இல்லை என்பது இதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. லூத் நபி அவர்கள் அந்த மக்களுக்குப் பிரச்சாரம் செய்த போது அவர்கள் லூத் நபிக்கு சொன்ன பதில் நீர் உண்மையாளராக இருந்தால் வேதனையைக் கொண்டுவா என்பதாகும். அதே சமயம் தங்கள் இனத்தவர்களிடம் அவர்கள் சொன்ன பதில் இவர்களை வெளியேற்றுங்கள் என்பதாகும். இவர்களை வெளியேற்றுங்கள் என்பது லூத் நபியை நோக்கி சொன்னதாக இருக்க முடியாது என்பதை கடுகளவு மூளை உள்ளவனும் புரிந்து கொள்ள முடியும்.

இரண்டு வகையான மக்களிடம் அவர்கள் இரண்டு விதமான் பதில்கைச் சொல்லியுள்ளனர். இவரை வெளியேற்றுங்கள் என்பதைத் தவிர வேறு பதிலை தங்கள் சமுதாயத்துக்கு சொல்லவில்லை. நீ வேதனையைக் கொண்டுவா என்பதைத் தவிர வேறு பதிலை லூத்துக்கு சொல்லவில்லை. இதில் எந்த முரண்பாடும் இல்லை. வேதனையைக் கொண்டு வா கொண்டு வராதே எனக் கூறினால் அதாவது வரும் ஆனால் வராது என்று பைபிள் கூறுவது போல் கூறினால் தான் அது முரண்பாடு.

28.10.2011. 13:15

முதலில் படைக்கப்பட்டது வானமா பூமியா

முதலில் படைக்கப்பட்டது வானமா பூமியா 
கேள்வி

பூமி முதலில் படைக்கப்பட்டது என்று குர்ஆனில் ஓரிடத்திலும் வானம் தான் முதலில் படைக்கப்பட்டது என்று வேறொரு இடத்திலும் கூறப்பட்டிருப்பதாகக் கிறித்தவர்கள் கூறுகின்றனர்.

இது உண்மையா?

செய்யத் சம்சுத்தீன்

கிறித்தவர்களின் பைபிளில் நாம் ஏராளமான பொய்களையும் ஆபாசங்களையும் முரண்பாடுகளையும் பட்டியல் போட்டு கேட்டு வருகிறோம். ஆண்டுகள் பல ஓடிய பிறகும் அவற்றுக்கு எந்த பதிலும் அவர்களால் சொல்ல முடியவில்லை.

குர்ஆனிலும் முரண்பாடு என்று கூறி பேலன்ஸ் செய்யும் தந்திரத்தைத் தான் அவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் அதில் அவர்கள் உண்மையாளர்களாக இல்லை. இல்லாத முரண்பாட்டை இவர்களாகச் சித்தரிக்கின்றனர். அதில் ஒன்று தான் நீங்கள் சுட்டிக்காட்டுவது.

திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் இருபத்தி ஒன்பதாவது வசனத்தில்

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தைநாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும்அறிந்தவன்.

என்று கூறப்பட்டுள்ளது. பூமியைப் படைத்த பின்னர் வானத்தைப் படைத்ததாக இவ்வசனம் கூறுகிறது.

قُلْ أَئِنَّكُمْ لَتَكْفُرُونَ بِالَّذِي خَلَقَ الْأَرْضَ فِي يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُ أَنْدَادًا ذَلِكَ رَبُّ الْعَالَمِينَ (9) وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ (10) ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ائْتِيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَا أَتَيْنَا طَائِعِينَ (11) 41

"பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான்'' என்று கூறுவீராக! நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான்.அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே. பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடி "விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டுநடக்க வேண்டும்'' என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். "விரும்பியே கட்டுப்பட்டோம்'' என்று அவைகூறின.

அல்குர்ஆன் (41 :9)

இவ்விரு வசனங்கள் கூறுவதற்கு எதிராக பின்வரும் வசனம் பூமி பின்னர் படைக்கப்பட்டதாக கூறுகிறது எனக் கூறுகின்றனர்.

படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்.அதன் முகட்டை உயர்த்திச் சீராக்கினான். அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான்.இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும், மேய்ச்சல்பயிர்களையும் வெளிப்படுத்தினான். மலைகளை முளைகளாக நாட்டினான்.

அல்குர்ஆன் (79 : 27-30)

இந்த வசனத்தில் பூமி பின்னர் படைக்கப்பட்டதாகக் கூறப்படவில்லை. மாறாக பின்னர் பூமியை விரித்ததாகத் தான் கூறப்பட்டுள்ளது. ஒன்றைப் படைப்பதும் அதை விரிவுபடுத்துவதும் வேறுவேறாகும்.

பூமியை முதலில் படைத்து விட்டு பின்னர் வானத்தைப் படைத்தான். அதன் பின்னர் ஏற்கனவே படைக்கப்பட்டிருந்த் பூமியை விரிவுபடுத்தினான் என்பது தான் இவ்வசனத்தில் இருந்து பெறப்படும் கருத்தாகும்.
எனவே இதில் எந்த முரண்பாடும் இல்லை

 

 

28.10.2011. 13:02

மிஃராஜில் இமாமாக தொழுகை நடத்திய சம்ப

மிஃராஜில் இமாமாக தொழுகை நடத்திய சம்பவம் உண்மையா?

மிஃராஜ் பயணத்தில் எல்லா நபிமார்களுக்கும் முஹம்மத் ஸல் அவர்கள் இமாமாக தொழுகை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் குர் ஆனில் இப்ராஹீமை மனித குலத்துக்கு இமாமாக ஆக்கியதாக அல்லாஹ் கூறுகிறான். அப்படியனால் இப்ராஹீம் நபி தானே இமாமத் செய்ய வேண்டும்? இரண்டும் முரண்படுகிறதே?

பதில்

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை மக்களுக்கு தலைவராக இமாமாக ஆக்கினான் என்பதற்கும் விண்ணுலகப் பயணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களுக்கும் தலைமை தாங்கி தொழுவித்தார்கள் என்பதற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை.

وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ(124) 2

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மக்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று அவன் கூறினான். "எனது வழித் தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது'' என்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் (2 : 124)

இப்ராஹீம் (அலை) அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அப்போதிருந்த மக்களுக்கு அவர்கள் தலைவர் என்றே மேற்கண்ட வசனம் கூறுகின்றது. எனது வழிதோன்றல்களிலும் தலைவர்களை ஏற்படுத்துவாயாக என்று அவர்கள் கேட்ட பிரார்த்தனை இதைத் தெளிவுபடுத்துகின்றது.

மேலும் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இறைவன் வழங்கிய தலைமைத்துவம் என்பது மக்களை நிர்வகிக்கும் ஆட்சி அதிகாரமாகும். தலைமை தாங்கி தொழவைக்கும் பொறுப்பல்ல.

11.04.2011. 14:06

உம்மி என்பதன் பொருள் என்ன

உம்மி என்பதன் பொருள் என்ன

 

முஹம்மத்

பதில்

உம்மு என்றால் தாய் என்பது பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள். கைக் குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகள் உம்மீ எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் எழுதவும், வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில் கைக்குழந்தைகளின் நிலையில் இருப்பதால் உம்மீ எனப்பட்டனர்.

நபிகள் நாயகத்துக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியாது என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறது.

அல்குர்ஆன் 7 : 157 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை "உம்மீ' என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنجِيلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنْ الْمُنكَرِ وَيُحِلُّ لَهُمْ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمْ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ أُوْلَئِكَ هُمْ الْمُفْلِحُونَ(157)7

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர்.

அல்குர்ஆன் (7 : 157)

அரபுகளில் அதிகமானவர்கள் எழுதவும் வாசிக்கவும் தெரியாதவர்கள் என்பதால் அவர்களை உம்மீ என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது.

وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ(78)2

அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.

அல்குர்ஆன் (2 : 78)

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ(2)62

அவனே எழுதப் படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான்.

அல்குர்ஆன் (62 : 2)

1913حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ قَيْسٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ لَا نَكْتُبُ وَلَا نَحْسُبُ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا يَعْنِي مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ وَمَرَّةً ثَلَاثِينَ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நாம் "உம்மீ' சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; எண்ணுவதையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சிலை வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (1913)

எனவே உம்மீ என்றால் எழுதவும் வாசிக்கவும் தெரியாதவர் என்பது பொருள்.

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் (29 : 48)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியும்'' என்று படித்தவர்கள் தங்கள் பங்குக்கு இட்டுக் கட்டிக் கூறி வருகின்றனர்.

படிப்பறிவைக் கொண்டே மனிதர்களின் தகுதிகள் வரையறை செய்யப்படும் காலத்தில் இவர்கள் வாழ்வதால், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படிக்காதவர்கள்'' என்று சொல்ல இவர்கள் கூச்சப்படுகிறார்கள்.

இவ்வாறு கூறினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று கருதிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும் என்று வாதிட்டு வருகின்றனர்.

படிப்பறிவு இல்லாதிருப்பது பொதுவாக தகுதிக் குறைவாகவே கருதப்பட்டாலும் நபிகள் நாயகத்துக்கு இது தகுதிக் குறைவை ஏற்படுத்தாது. ஏனெனில், தகுதிக் குறைவாகக் கருதப்படும் சில விஷயங்கள் சில இடங்களில் தகுதியை அதிகப்படுத்தக் கூடியதாக அமைந்து விடும்.

படிப்பறிவு மனிதர்களுக்கு கூடுதல் தகுதியை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது தான் சிறப்பாகும்.

எனக்கு இறைவனிடமிருந்து தூதுச் செய்தி வருகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அந்தச் செய்தி மிகவும் உயர்ந்த இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தது. இது போல் யாராலும் இயற்ற முடியாது என்று அறை கூவல் விடும் அளவுக்கு அதன் தரம் இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படித்தவராக இருந்திருந்தால் தமது படிப்புத் திறமையினால் இதை இயற்றியுள்ளார் என்று தான் மக்கள் நினைத்திருப்பார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) திறமைசாலி என்பது நிரூபணமாகுமே தவிர அல்லாஹ்வின் தூதர் என்பது நிரூபணமாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழிப் பண்டிதர் என்பதை விட அல்லாஹ்வின் தூதர் என்பது தான் பல்லாயிரம் மடங்கு சிறந்த தகுதியாகும்.

அவர்கள் எழுதவோ, படிக்கவோ தெரிந்திருந்தால் அவர்களை நேரடியாகக் கண்ட மக்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்க மாட்டார்கள். அவர்கள் கூறிய தூதுச் செய்தியை அல்லாஹ்வின் வேதம் என்றும் ஏற்றிருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் என்பதை நிரூபிக்க அல்லாஹ் ஏற்படுத்திய நிலை தான் இந்தத் தகுதிக் குறைவு.

"எழுதப் படிக்கத் தெரியாதவர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் செய்திகளைக் கூறுகிறாரே! நிச்சயமாக இவரது திறமையால் இது உருவாக்கப்பட்டிருக்கவே முடியாது. இவர் கூறுவது போல் இது இறைவனது செய்தியாகத் தான் இருக்க முடியும்'' என்று அன்றைய மக்கள் நம்புவதற்கு நபிகள் நாயகத்தின் படிப்பறிவின்மை தான் முக்கியக் காரணமாக இருந்தது.

இதை நாம் கற்பனை செய்து கூறவில்லை. மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் அல்லாஹ்வே இவ்வாறு தான் கூறுகிறான். "வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்'' என்ற வாசகத்தைச் சிந்திப்பவர்கள் இதைச் சந்தேகமற அறியலாம்.

19.03.2011. 22:58

அர்ஷில் அமர்ந்தான் என்று கூறுவது சரி

அர்ஷில் அமர்ந்தான் என்று கூறுவது சரியா

நீங்கள் உங்கள் மொழிபெயர்ப்பில் ''இஸ்தவா அலல் அர்ஷ்'' என்பதை ''அர்ஷின் மீது (அல்லாஹ் அமர்ந்தான்'' என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். 'இஸ்தவா' என்பதற்கு 'அமருதல்' என்ற அர்த்தம் கிடையாது. 'அமருதல்' என்பதற்கு அரபியில் 'ஜலசா' என்ற வார்த்தை தான் சரியானது என்று சிலர் கூறுகிறார்கள்.

 

அஹ்மத்

பதில் :

அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்துள்ளான் என்று குர்ஆனில் ஏழு இடங்களில் கூறப்பட்டுள்ளது. இஸ்தவா என்ற அரபுச் சொல்லே இவ்விடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ (54)7

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (7 : 54)

إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ (3)10

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (10 : 3)

اللَّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُسَمًّى يُدَبِّرُ الْأَمْرَ يُفَصِّلُ الآيَاتِ لَعَلَّكُمْ بِلِقَاءِ رَبِّكُمْ تُوقِنُونَ(2)13

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆனூ; (13 : 2)

الرَّحْمَانُ عَلَى الْعَرْشِ اسْتَوَى(5)20

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (20 : 5)

الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ الرَّحْمَانُ فَاسْأَلْ بِهِ خَبِيرًا(59)25

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக!

அல்குர்ஆன் (25 : 59)

اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ مَا لَكُمْ مِنْ دُونِهِ مِن وَلِيٍّ وَلَا شَفِيعٍ أَفَلَا تَتَذَكَّرُونَ(4)32

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

அல்குர்ஆன் (32 : 4)

هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنْ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ(4)57

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (57 : 4)

மேற்கண்ட வசனங்கள் தான் நீங்கள் சுட்டிக்காட்டும் வசனங்களாகும். அமர்தல் என்பதற்கு ஜலஸ என்ற சொல் மட்டும் இல்லை. ஏராளமான சொற்கள் உள்ளன. அதில் இஸ்தவா என்பதும் ஒன்றாகும்.

இதே சொல் குர்ஆனில் வேறு இடங்களிலும் அமர்தல் என்ற அர்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

وَقِيلَ يَاأَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَاسَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ وَقِيلَ بُعْدًا لِلْقَوْمِ الظَّالِمِينَ(44)11

"பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!'' என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. "அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்'' எனவும் கூறப்பட்டது.

அல்குர்ஆன் (11 : 44)

இவ்வசனத்தில் அமர்ந்தது என மொழிபெயர்த்துள்ள இடத்தில் இஸ்தவா என்ற அரபுச் சொல்லே இடம்பெற்றுள்ளது. இங்கே அமர்தல் என்ற அர்த்தத்தைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் கொடுக்க இயலாது.

இதே போன்று பின்வரும் வசனத்திலும் அமர்தல் என்ற பொருளிலே இவ்வார்த்தை இடம் பெற்றுள்ளது. 

فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَنْ مَعَكَ عَلَى الْفُلْكِ فَقُلْ الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنْ الْقَوْمِ الظَّالِمِينَ(28)23

நீரும், உம்முடன் உள்ளோரும் கப்பலில் அமர்ந்ததும் "அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் (23 : 28)

எனவே இஸ்தவா என்பதற்கு அமர்தல் என்ற பொருள் இருப்பது இவ்வசனங்களின் மூலம் உறுதியாகிறது.

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஜலச என்ற அரபுச் சொல்லுக்கும் இஸ்தவா அரபுச் சொல்லுக்கும் அமர்தல் என்ற பொருள் இருந்தாலும் இவ்விரு சொல்லுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கின்றது.

ஜலச என்ற சொல் சாதாரணமாக தரையில் அமர்வதற்கும் அரபு மொழியில் பயன்படுத்தப்படும். ஆனால் இஸ்தவா என்ற சொல் சாதாரணமாக தரையில் அமர்வதற்கு பயன்படுத்தப்படாது. மாறாக உயரமான ஒரு பொருளின் மீது அமர்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

உதாரணமாக கப்பலின் மீது அமர்தல் மலையின் மீது அமர்தல் வாகனத்தின் மீது அமர்தல் மிம்பரின் மீது அமர்தல் ஆகிய அர்த்தங்களில் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இவ்வார்த்தை கூறப்பட்டுள்ளது.

வாகனத்தின் மீது அமர்தல் என்ற பொருளில் பின்வரும் வசனத்தில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

لِتَسْتَوُوا عَلَى ظُهُورِهِ ثُمَّ تَذْكُرُوا نِعْمَةَ رَبِّكُمْ إِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا سُبْحانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ(13)43

நீங்கள் அதன் முதுகுகளில் அமர்ந்து உங்கள் இறைவனின் அருட்கொடையை நினைப்பதற்காகவும், "எங்களுக்கு இவற்றை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதற்குச் சக்தி பெற்றோராக இல்லை. நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோர்'' என்று நீங்கள் கூற வேண்டுமென்பதற்காகவும் (அவற்றை வழங்கினான்).

அல்குர்ஆன் (43 : 13 14)

இந்த வசனத்திலும் அதே இஸ்தவா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2914حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ مَوْلَى أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ فَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ رواه البخاري

அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் மக்காவை நோக்கிச் செல்லும் சாலை ஒன்றில் இருந்த போது இஹ்ராம் அணிந்திருந்த தம் தோழர்களை விட்டுப் பின்தங்கி விட்டார்கள். நான் மட்டும் இஹ்ராம் அணிந்திருக்கவில்லை. அப் போது காட்டுக் கழுதை ஒன்றை நான் கண்டேன். குதிரை மீதேறி அமர்ந்து கொண்டேன்.

குதிரையின் மீதேறி அமர்தல் என்ற பொருளில் இங்கே இஸ்தவா என்ற சொல் கூறப்பட்டுள்ளது.

4278حَدَّثَنِي عَيَّاشُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ إِلَى حُنَيْنٍ وَالنَّاسُ مُخْتَلِفُونَ فَصَائِمٌ وَمُفْطِرٌ فَلَمَّا اسْتَوَى عَلَى رَاحِلَتِهِ دَعَا بِإِنَاءٍ مِنْ لَبَنٍ أَوْ مَاءٍ فَوَضَعَهُ عَلَى رَاحَتِهِ أَوْ عَلَى رَاحِلَتِهِ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள், தமது வாகனத்தில் நன்கு அமர்ந்து கொண்ட போது ஒரு பால் பாத்திரத்தை.... அல்லது தண்ணீர்ப் பாத்திரத்தை.... கொண்டு வரும்படிக் கூறி, அதைத் தம் உள்ளங்கையில் ....அல்லது தமது வாகனத்தில்.... வைத்தார்கள். பிறகு மக்களைப் பார்த்தார்கள். உடனே நோன்பை விட்டு விட்டவர்கள் நோன்பு நோற்றிருந்தவர்கüடம், "நீங்களும் நோன்பை விடுங்கள்'' என்று சொன்னார்கள்.

புகாரி (4277)

இந்தச் செய்தியிலும் நன்கு அமர்தல் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

1379أَخْبَرَنَا عَمْرُو بْنُ سَوَّادِ بْنِ الْأَسْوَدِ قَالَ أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ أَنَّ أَبَا الزُّبَيْرِ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ يَسْتَنِدُ إِلَى جِذْعِ نَخْلَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ فَلَمَّا صُنِعَ الْمِنْبَرُ وَاسْتَوَى عَلَيْهِ اضْطَرَبَتْ تِلْكَ السَّارِيَةُ كَحَنِينِ النَّاقَةِ حَتَّى سَمِعَهَا أَهْلُ الْمَسْجِدِ حَتَّى نَزَلَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاعْتَنَقَهَا فَسَكَتَتْ رواه النسائي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது பள்ளியின் ஒரு தூணாக இருந்த பேரீச்ச மரத்தின் மீது சாய்ந்து கொள்வார்கள். மிம்பர் செய்யப்பட்ட பிறகு நபி (ஸல்) அவர்கள் அதன் மீது அமர்ந்தார்கள்.

நஸாயீ (1379)

7269حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّهُ سَمِعَ عُمَرَ الْغَدَ حِينَ بَايَعَ الْمُسْلِمُونَ أَبَا بَكْرٍ وَاسْتَوَى عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشَهَّدَ قَبْلَ أَبِي بَكْرٍ فَقَالَ أَمَّا بَعْدُ فَاخْتَارَ اللَّهُ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي عِنْدَهُ عَلَى الَّذِي عِنْدَكُمْ وَهَذَا الْكِتَابُ الَّذِي هَدَى اللَّهُ بِهِ رَسُولَكُمْ فَخُذُوا بِهِ تَهْتَدُوا وَإِنَّمَا هَدَى اللَّهُ بِهِ رَسُولَهُ رواه البخاري

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த மறு நாள் முஸ்லிம்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (அவர்களை கலீஃபாவாக ஏற்று) விசுவாசப் பிராமணம் (பைஅத்) செய்து கொடுத்த போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள்.

புகாரி (7269)

மிம்பரின் மீது அமர்தல் என்ற பொருளில் இவ்விரு ஹதீஸ்களில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

லிசானுல் அரப் என்ற பிரபல அரபு அகராதி நூலில் இவ்வார்த்தைக்கு இப்பொருள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு பொருளின் மேற்பகுதியில் இருத்தல் என்று இதற்கு அர்த்தம் எனக் கூறப்பட்டுள்ளது.

لسان العرب - (14 / 408)

 وقال الأَخفش استَوى أَي علا تقول استَوَيْتُ فوق الدابة وعلى ظهر البيت أَي علَوْتُه واستَوى على ظهر دابته أَي استَقَرَّ

இஸ்தவா என்றால் மேல் இருத்தல் என்பது பொருள். வாகனத்தின் மேல் இருத்தல், வீட்டினுடைய முகட்டின் மீது இருத்தல் என்று கூறப்படும்.

லிசானுல் அரப் (பகாம் : 14 பக்கம் : 408)

எனவே இறைவன் அர்ஷ் மீது அமர்ந்து உயர்வாக இருக்கின்றான் என்று பொருள் கொள்வதே சரியானது.

இவ்வாறு அர்த்தம் செய்யக் கூடாது என்று கூறுபவர்கள் இவ்வார்த்தைக்கு வேறு விளக்கங்களைத் தருகின்றார்கள். அந்த விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணத்தின் படி பார்த்தாலும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன.

09.12.2010. 08:53

அல்லாஹ் போட்ட அணு குண்டு

நீங்கள் அல் ஜன்னத் பத்திரிகை ஆசிரியராக இருக்கும் போது,  அணு குண்டும் ஏவுகணையும் என்ற தலைப்பில் அளித்த அல்குர்ஆன் விரிவுரையை அல்லாஹ் போட்ட அணு குண்டு என்ற மகுடத்தில், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் வெளியீடான அழைப்பு இதழில்,  மீள் பிரசுரம் செய்தோம். இது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இலங்கையில் வெளிவரும் தேசிய நாளேடு ஒன்று இதை மீள் பிரசுரம் செய்தது. மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட  இவ்விரிவுரையைப் பாராட்டி வாசகர்பகுதிக்கு எழுதியிருந்தனர்.

  பாபர் மசூதி 1992 டிசம்பர் 6ம் நாள் சங்பரிவாரக் கும்பல்களால் தகர்க்கப்பட்ட போது, இதே 105வது அத்தியாயத்திற்கு நீங்கள் “அபாபீல் பறவைகள் எங்கே போயின?” என்ற தலைப்பில் விளக்கம் அளித்திருந்தீர்கள்.

இதை ஆன்லைனில் வெளியிட்டால் நேயர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அனுப்பி வைக்கின்றேன்.

எம்.ஏ.ஹஃபீழ் ஸலஃபி, இலங்கை.

அல்லாஹ் போட்ட அணு குண்டு

பீ. ஜைனுல் ஆப்தீன்

திருமறைக் குர்ஆனில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வசனங்களைத் தேர்வு செய்து, இப்பகுதியில் விளக்கமளிக்கத் தீர்மானித்துள்ளோம்

 அந்த வகையில், தற்போது உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் அணு குண்டு பற்றிய இஸ்லாமியப் பார்வை என்ன?  என்ற கேள்வி பலரிடமும் உள்ளது.  ஈராக்கில் அணுவாயுதம் இருப்பதாக நாடகமாடி, அந்நாட்டை அமெரிக்கா அநியாயமாக ஆக்கிரமித்தது.  அங்கு நிகழ்த்தப்பட்ட அக்கிரமத்தின் ரணங்கள் ஆறு முன்னரே ஈரானில் அணுசக்தி உள்ளதாக இப்போது அந்நாட்டைக் குறிவைத்துள்ளது

 இரசாயண ஆயுதப் போர்வைக்குள் ஒவ்வொரு முஸ்லிம் நாடும் குறிவைக்கப்பட்டு வரும் இவ்வேளை, அணு சக்தி பற்றி குர்ஆன் கூறுவது என்னவென்பதை,  அனைவரும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் எளிய நடையில் 105வது அத்தியாயத்திற்கு, சமகால இஸ்லாமிய அறிஞர; பீ. ஜைனுல் ஆப்தீன் அவர்கள் விளக்குகின்றார்கள்.  அவ்விளக்கத்தை காலத்தின் தேவை கருதி வெளியிடுகின்றோம். ஆசிரியர்- அழைப்பு

'யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு ஆக்கினான் என்பதை நீர்சிந்திக்கவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் முறியடிக்கவில்லையா?  அபாபீல் பறவைகளை அவர்கள் மீது அவன் அனுப்பவில்லையா?  அப்பறவைகள் சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது எறிந்தன.  அதனால் அவன், அவர்களை மெல்லப்பட்ட வைக்கோலைப் போன்று ஆக்கினான்.””       

(சூறா அல்ஃபீல் : 1-5)

 இந்த அத்தியாயத்தை ஆய்வு செய்வதற்கு முன், இந்த அத்தியாயம் கூறுகின்ற வரலாறு என்னவென்பதைச் சுருக்கமாக அறிந்து கொள்வோம்.

புனித மக்கா நகரில் இப்ராஹீம் நபி (ஆப்ரஹாம் தீர்க்கதரிசி)யால்  கட்டப்பட்ட ஆலயம் உள்ளது. அது கஅபா எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்த ஆலயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே புனிதத் தலமாக அரபு சமுதாயத்தால் கருதப்பட்டு வந்தது.  அரபுகள் கூட்டம் கூட்டமாக இந்த ஆலயம் வந்து வழிபட்டு வந்தனர்.

 எமன் நாட்டைச் சேர்ந்த அப்ரஹா என்ற மன்னன், இதனால் பொறாமை கொண்டு, கஅபாவுக்குப் போட்டியாக, தனது நாட்டில் அன்றைய தலைநகராக இருந்த ‘சன்ஆ’ எனும் நகரில் ஓர்ஆலயத்தை எழுப்பினான்.  அதன் புனிதம் குறித்துப் பரவலாகப் பிரசாரம் செய்தான்.

 ஆனாலும், இவனது பிரசாரம் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. கஅபாவை நோக்கிச் செல்லும் கூட்டம் குறையவில்லை.

 கஅபா ஆலயம் இருக்கும் வரை தனது நாட்டை நோக்கி மக்கள் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட மன்னன், கஅபாவை இடித்துத் தரைமட்டமாக்கிட யானைப்படையைத் திரட்டிக் கொண்டு, மக்காவை முற்றுகையிட்டான்.

ஆனால், அவனால் கஅபா ஆலயத்தை இடிக்க முடியவில்லை. இறைவனால் அனுப்பப்பட்ட ‘அபாபீல்’ எனும் பறவைகள் கற்களால் தாக்கி, அவனையும் அவனது படையினரையும் அழித்தன.

    இது தான், அந்த அத்தியாயத்தில் கூறப்படும் வரலாற்றுச் சம்பவம். இந்த நிகழ்ச்சி நடந்த ஆண்டில் தான், நபிகள் நாயகம் அவர்கள் பிறந்தார்கள்

இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தி இறைவன் தனது ஆலயத்தை - உலகில் ஒரே இறைவனை வணங்குவதற்காக, முதலில் எழுப்பப்பட்ட ஆலயத்தை அற்புதமான முறையில் காப்பாற்றியதைத் தான் இந்த அத்தியாயம் குறிப்பிடுகிறது.

இறைவனின் வல்லமையையும் அவனது ஆற்றலையும் விளங்கி, இறை நம்பிக்கையை வலுப்படுத்துவதும், இத்தகைய ஆற்றலுடைய இறைவன், நபிகள் நாயகத்தையும் அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயத்தையும் காப்பாற்றி, அவர்களுக்கு வெற்றியளிப்பான் என்று நம்பிக்கையூட்டுவதும் தான் இந்த அத்தியாயம் அருளப்பட்டதன் பிரதான நோக்கம்.

 இந்த அத்தியாயத்தைக் கேட்ட அன்றைய மக்கள், இப்படித் தான் இதைப் புரிந்து கொண்டனர். ஆனாலும், உலகம் உள்ளளவும் தோன்றக் கூடிய மக்களுக்கு, இன்னும் பல படிப்பினைகளும் இந்த அத்தியாயத்தில் அடங்கியுள்ளதை நாம் மறுக்க முடியாது.

இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை, இந்தச் சம்பவத்தை நூறு சதவிகிதம் நம்புவார்கள். ஆனாலும், இறை நம்பிக்கையற்றவர்களின் பார்வையில் இது நம்ப முடியாத நிகழ்ச்சி, கட்டுக்கதை என்று தான் இதைக் கருதுவார்கள்.

 நம்புவதற்குச் சிரமமான, அல்லது நம்ப முடியாத கட்டுக் கதைகளைக் கூறுவோர்கேட்பவர்கள் அப்படியே நம்ப வேண்டும் என்பற்காக 'இதைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது! கண்ணை மூடிக் கொண்டு நம்புங்கள்” என்று தான் கூறுவது வழக்கம்.

ஆனால், இந்த அத்தியாயத்தில் இறை நம்பிக்கையற்றவர்களால் நம்ப முடியாத ஒரு நிகழ்ச்சி கூறப்பட்டாலும், இதன் துவக்கத்திலேயே 'நீர் சிந்திக்கவில்லையா?” என்று கூறப்படுகிறது.

ஆம்’! சிந்திக்காது நம்புங்கள் என்று கூற வேண்டிய இடத்தில், சிந்திக்குமாறு தூண்டுகிறது இந்த அத்தியாயம்.

 அப்படியானால், இந்த அத்தியாயத்தில் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

 எதைச் சிந்திப்பது? யானைப் படையினரை உமது இறைவன் என்ன செய்தான் என்பதைச் சிந்திக்கவில்லையா? என்று கூறாமல் எப்படி ஆக்கினான் என்பதைச் சிந்திக்கவில்லையா?  என்று இந்த அத்தியாயம் கூறுகிறது.

 என்ன நடந்தது? என்பதைச் சிந்திப்பதற்கும் எப்படி நடந்தது? என்பதைச் சிந்திப்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது.

என்ன நடந்தது? என்பதைச் சிந்தித்தால், நடந்த சம்பவத்தைப் பூரணமாக அறிந்துகொள்க என்பது பொருள்.

எப்படி நடந்தது? எவ்வாறு அவர்கள் அழிக்கப்பட்டார்கள்? என்பதைச் சிந்திக்கச் சொல்கிறான்  இறைவன்.

 இது எப்படி நடந்தது?  இவர்களை அழிக்க எத்தகைய சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதைச் சிந்தியுங்கள் என்கிறான் இறைவன்.  அதனால் தான் ‘கைஃப ஃபஅல’ (எப்படி அழித்தான்) என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளான்.

எப்படி அழித்தான் என்பதைச் சிந்திக்கச் சொல்வதன் பயன் என்ன?  எப்படி நடந்தது என்பதை ஆராயுமாறு ஒருவரிடம் நாம் கூறினால், அதை அவர்கண்டுபிடித்து, அது போல் செய்ய முடியும் என்ற நிலையில் தான் 'எப்படி நடந்தது எனச் சிந்தித்துப் பார்” என்று நாம் கூறுவோம்.

இதுபோன்ற வார்த்தைப் பிரயோகமே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

எறியப்பட்ட கல்லை முதலில் எடுத்துக் கொள்வோம். 'சூடேற்றப்பட்ட கல்” என்று பரவலாக தமிழாக்கம் செய்யப்பட்டு வந்தாலும் அந்தப் பொருளே நமது ஆய்வுக்குப் போதுமானதாக இருந்தாலும், அந்தப் பொருள் சரியானதன்று.

ஹிஜாரதின் சிஜ்ஜீல்’ எனக் கூறினால், சூடேற்றப்பட்ட கல் எனும் தமிழாக்கம் சரியானதாக இருக்கலாம்.  'ஹிஜாரதின் மின் சிஜ்ஜீல்” என்று இறைவன் கூறுகிறான்.  இந்த ‘மின்’ என்ற வார;த்தை மிகவும் கவனமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

கா(த்)தமுன் மின் தஹபின்’ என்றால், தங்கம் எனும் மூலத்தாலான மோதிரம் என்று பொருள்.  ஒரு மூலத்தாலான என்ற கருத்து ‘மின்’ என்ற சொல்லில் அடங்கியுள்ளது.

ஹிஜாரதுன்’ என்றால், ‘கல்’ என்பது பொருள்.  ‘மின் சிஜ்ஜீல்’ என்றால், ‘சிஜ்ஜீல் எனும் மூலத்திலான’ என்பது பொருள்.

ஹிஜாரதுன் மின் சிஜ்ஜீல்” என்றால், 'சிஜ்ஜீல் எனும் மூலத்தினாலான கல்” என்பது ஆகும்.

அதாவது, கல் என்றால் வீதியில் கிடக்கும் சாதாரண கல் என்று நினைத்து விட வேண்டாம். மிக மிகக் கடுமையான வெப்பத்தைக் கொண்ட, 'சிஜ்ஜீல்” எனும் மூலத்திலான கல் என்று இறைவன் கூறுகிறான். 'சிஜ்ஜீல்” என்பதன் பொருள் மிகவும் வெப்பமானது என்பது பொருளாகும்.

அணுகுண்டுக்குத் தேவையான யுரேனியம், புளுட்டோனியம் போன்றவை அடிப்படையில் கல் வகை தான். ஆனாலும், கடுமையான வெப்பத்தைக் கொண்டது.  வெப்பத்தின் அளவைக் கொண்டு மதிப்பிடக் கூடியது.  ‘15 கிலோ டொன் வெப்ப முடையது’ என்று தான் அதன் சக்தியைக் குறித்துக் குறிப்பிடுகின்றனர;.

மண்ணில் மறைந்து கிடக்கின்ற, மிகவும் கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடிய, ஒரு மூலப் பொருளால் உருவாக்கப்பட்ட கல் என்று இந்த வசனம் கூறுகிறது.

வெறும் அற்புதம் என்ற வகையில் மாத்திரம் நடத்தப்பட்டதென்றால், அந்தக் கல்லுக்குரிய சக்தியை இறைவன் குறிப்பிட வேண்டியதில்லை.  இன்னும் சொல்வதானால், சாதாரண கல்லால் அழிப்பது தான் அற்புதமாகும். சக்தி மிக்க கல்லால் அழிப்பதில் பெரிய அற்புதம் இல்லை.

கல்லின் மூலத்தையும் அதன் தன்மையையும் இறைவன் கூறியிருப்பதிலிருந்தும், அதைச் சிந்தித்துப் பார்க்குமாறு கூறியிருப்பதிலிருந்தும் அற்புதமாக நடந்த சம்பவமாக நினைத்து விட வேண்டாம் என்று மறைமுகமாக உணர்த்தப் படுகிறது.

அதாவது, உலகில் மண் இனத்தைச் சேர்ந்த மூலப்பொருள் ஒன்று உண்டு. அது, கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடியது.  அதில், சிறிய அளவு கூட பெரும் படையை அழிக்க வல்லது. அதைச் சிந்தித்துக் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள் என்பது தான் இதிலிருந்து நாம் பெறவேண்டிய பாடம்.

இது மட்டுமன்றி, அந்தக் கற்களால் தாக்கப்பட்டவர்கள் அழிந்த விதம், இன்னும் நம்மை வியப்பிலாழ்த்துகிறது.

அந்தக் கல் பட்டதும் மூர்ச்சையுற்றார்கள்!, அல்லது அதிர்ச்சியில் பிணமானார்கள் என்றெல்லாம் இறைவன் கூறாமல், மென்று உமிழப்பட்ட வைக்கோல் போலானார்கள்” என்கிறான்.

அதாவது இந்தக் கல்லால் தாக்கப்பட்டவர்கள், வெடித்துச் சிதறித் தூழாகி விட்டனர்என்கிறான். எவரது உடலும் முழு உடலாக இருக்கவில்லை.

அணு சக்தியைப் பயன்படுத்தினால் அதன் மூலம் ஏற்படும் அழிவு எப்படி இருக்குமோ, அதை நம் கண் முன்னே கொண்டு வருகிறான் இறைவன்.

பெரும் படையைத் திரட்டி வந்தவர்கள் மீது போடப்பட்ட அந்த அணுகுண்டு, அளவில் மிகவும் குறைவானதாகும். ஒரு பறவையின் வாயில் குறிபார்த்து வீசுவதற்கு ஏற்ற வகையில், அதிக பட்சமாக பத்து கிராம் எடையைத் தான் வைக்க முடியும். நூறு பறவைகள் வந்திருந்தால் கூட, அவை சுமந்து வந்த கற்களின் மொத்த எடை ஒரு கிலோ தான்.  ஒரு கிலோவால் ஒரு படையை அழிக்க முடியுமா?  அணுகுண்டால் முடியும்.

அது மட்டுமன்றி, இந்தக் கற்களை பறவைகள் சுமந்து வந்து போட்டன என்கிறான் இறைவன்.

சூடேற்றடப்பட்ட கல்லை - படையினரையே அழிக்க வல்ல கல்லை - பறவைகள் வாயில் சுமக்கும் போது, அந்தச் சூட்டினால் கருகவில்லையே! இது ஏன்

இதுவும், சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.  சிலபேர் கூறுவது போல், அந்தக் கல் பழுக்கச் சூடு படுத்தப்பட்டிருந்தது என்று பொருள் கொண்டால், படையினர்அழிவதற்கு முன், பறைவகள் அழிந்து போயிருக்க வேண்டும்!

இந்தச் சூடு என்பது, வீசி வெடிக்கப்படும் போது தான் வெளிப்படுமே தவிர, வெடிக்காமல் சுமக்கும் போது வெளிப்படாது. எந்த வெடி குண்டையும் நாம் சுமந்தால், நம்மை அது சுடுவதில்லை.  வெடிக்கச் செய்தால், அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் நம்மையே அழித்துவிடும்.

இதிலிருந்து, அந்த வெப்பமான மூலப் பொருளின் தன்மை என்ன என்பதையும் இறைவன் கூறுகிறான்.

அது மாத்திரமன்றி, இத்தகைய வெடிகுண்டுகளை நாம் தூக்கிச் செல்ல வேண்டியதில்லை; இருந்த இடத்திலிருந்தே ஏவி, இன்னொரு இலக்கைத் தாக்க முடியும் என்பதையும், அதாவது ஏவுகணையைப் பற்றியும் இங்கே குறிப்பிடுகிறான்.

உலகில் உள்ள எந்தப் பறவையையும் அபாபீல் என்று கூறுவதில்லை. இது, இறைவனே சூட்டிய பெயர்.அவை, இந்தப் பணிக்காக மாத்திரம் அனுப்பிய பறவைகள்

நாட்டு மக்களுக்குத் தெரியாத பறவையைப் பற்றிக் கூறுகிறான். அது, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட உயிருள்ள பறவையாக இருக்கலாம் என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை.

இதையும் சிந்திக்க வேண்டுமல்லவா? தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளைத் தூக்கிக் கொண்டு அலையத் தேவையில்லை.  இருந்த இடத்திலிருந்தே பொருத்தலாம். அவை அபாபீல் பறவையைப் போல், பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி அழித்து விடும் என்பதை விளங்கலாம்.

ஏவுகணை குறித்து வேறு வசனங்கள் உள்ளன.  என்றாலும், அணுகுண்டு சக்தி குறித்து விளங்கிட இதுவே போதுமானதாகும்.

இன்றைய அரபுகள் இந்த வசனத்தை ஆய்வு செய்திருந்தால், அல்லது இனியாவது ஆய்வு செய்தால், அந்தப் பகுதியில் ‘சிஜ்ஜீல்’ எனும் மூலப் பொருளைக் கண்டெடுத்திருக்க முடியும். ஏனோ இதிலெல்லாம் அவர்களுக்கு அக்கறையில்லை.

08.02.2010. 17:58

மனிதன் சுமந்த அமானிதம் எது?

மனிதன் சுமந்த அமானிதம் எது?

அல்குர்ஆன் 33:72 வசனத்தில் அமானிதம் என்ற பதத்துக்கு பகுத்தறிவு என்று தமிழகத்து தவ்ஹீது உலமாக்கள் விளக்கமளிக்கின்றார்கள். கண்களுக்குப் புலப்படாத ஒன்றை ஒரு பொருளாகக் கொள்ள முடியாது. மேலும் அமானிதம் என்ற பதம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டிய ஒரு பொருளாகவே கருத வேண்டியுள்ளது. எனவே இந்த அமானிதம் என்பது திருக்குர்ஆனைத் தான் குறிக்கும் என்று எண்ணுகின்றேன். மேலும் அல்குர்ஆன் 59:21 வசனத்தில் இந்தக் குர்ஆனை மலைகள் மீது இறக்கி வைத்திருந்தால் அது பஞ்சு பஞ்சாகப் பறந்திருக்கும் என்று கூறுகின்றான். இந்த இரு வசனங்களையும் இணைத்துப் பார்த்தால் இரண்டுமே அருள் மறைக் குர்ஆனைத் தான் குறிப்பிடுகின்றன என்று ஏன் கூறக் கூடாது?

ஹெச்.எம். ஹனீபா, இலங்கை

வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன் வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அறியாதவனாகவும், அநீதி இழைப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:72)

இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் அமானிதம் என்பது என்ன என்பது குர்ஆனில் ஏனைய இடங்களிலோ அல்லது நபிமொழிகளிலோ சுட்டிக் காட்டப்படவில்லை.எனவே பொதுவாக மனிதர்களுக்கும் ஏனைய அனைத்துப் படைப்பினங்களுக்கும் உள்ள வித்தியாசம் பகுத்தறிவு தான். எனவே இதைத் தான் இந்த வசனம் குறிப்பிடுகின்றது என்று நாம் கூறி வருகின்றோம்.

இதை மறுப்பதற்கு நீங்கள் கூறும் காரணங்கள்

1. கண்ணுக்குப் புலப்படாத ஒன்றை இது குறிப்பிடவில்லை.

2.அமானிதம் என்றால் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த இரண்டு காரணங்களும் பகுத்தறிவு என்று பொருள் கொண்டால் பொருந்தாது என்று கூறுகின்றீர்கள். நீங்கள் குறிப்பிடும் திருக்குர்ஆன் என்ற பொருள் கொண்டாலும் இந்த இரண்டு காரணங்களும் பொருந்தாது என்பதைக் கவனிக்கத் தவறி விட்டீர்கள்.

திருக்குர்ஆன் என்பது கண்ணுக்குப் புலப்படும் பொருளாக அருளப்படவில்லை. ஓசை வடிவத்திலானது தான். நம்முடைய வசதிக்காக அதை அச்சிட்டு பொருள் வடிவத்தில் ஆக்கிக் கொண்டோம். திருக்குர்ஆன் வசனங்கள் என்பதும் கண்ணுக்குப் புலப்படாத ஓசை வடிவிலானது தான்.

அமானிதம் என்றால் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறினால் மறுமையில் திருக்குர்ஆனை நாம் திருப்பி ஒப்படைக்கப் போவதில்லை. அதன் போதனைகளின் அடிப்படையில் நடந்தது பற்றித் தான் அல்லாஹ் விசாரிப்பான். அதைத் தான் இது குறிப்பிடுகின்றது என்றால் அதே விளக்கம் பகுத்தறிவு என்பதற்கும் பொருந்தும்.

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.(அல்குர்ஆன் 59:21)

இந்த வசனத்தையும், மேற்கண்ட வசனத்தையும் இணைத்து அமானிதம் என்பது திருக்குர்ஆன் தான் என்ற முடிவுக்கு வரலாம் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இந்த வசனத்தில் நடக்காத ஒன்றை உதாரணமாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.இறக்கியிருந்தால்'' என்று அல்லாஹ் கூறுவது அவ்வாறு இறக்கவில்லை என்பதையே காட்டுகின்றது.

ஆனால் 33:52 வசனத்தில் அந்த அமானிதத்தை சுமக்குமாறு வானங்கள், பூமி, மலைகள் போன்றவற்றுக்கு நாம் முன் வைத்தோம்.ஆனால் அவை மறுத்து விட்டன. மனிதன் சுமந்து கொண்டான் என்று படைப்பின் போது நடந்த நிகழ்வுகளாகக் கூறப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வசனத்தில் மனிதன் சுமந்து கொண்டான்'' என்பது ஒட்டு மொத்த மனித இனத்தையும் குறிப்பதாகும். ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் வேதமாக திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தாலாவது திருக்குர்ஆனைக் குறிக்கின்றது எனலாம்.ஆனால் திருக்குர்ஆன் என்பது நபி (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு மட்டும் உரிய வேதம்! எனவே இந்த வசனத்தில் கூறப்படும் அமானிதம் என்பது திருக்குர்ஆனைக் குறிப்பதற்கு வாய்ப்பேயில்லை.

19.01.2010. 15:37

உறுதி வந்து விட்டால் வணங்க வேண்டாமா?

உறுதி வந்து விட்டால் வணங்க வேண்டாமா?

உறுதி வரும் வரை (யகீன்) என்றால் என்ன?

பி. ஜைனுல் ஆப்தீன்

திருக்குர்ஆன் விளக்கம்

ஒற்றுமை இதழில் வெளியான கட்டுரை நேயர்கள் பயன் பெறுவதற்காக வெளியிடப்படுகிறது

உமக்கு உறுதி வரும் வரை இறைவனை வணங்குவீராக!

(திருக்குர்ஆன் 15:99)

உலகில் உள்ள ஆன்மீக நெறிகளில் இஸ்லாம் தலை றந்த ஆன்மீக நெறியாகத் திகழ்கிறது!

ஆன்மீகத்தின் பெயரால் சுரண்டல் நடப்பதை அடியோடு தடை ய்திருக்கும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றெல்லாம் நாம் பெருமிதம் கொள்கிறோம். முஸ்லிமல்லாத அன்பர்களும் கூட இதை ஒப்புக் கொள்கின்றனர்.

ஆயினும் முஸ்லிம் சமுதாயத்திலும் போலி ஆன்மீகவாதிகள் உருவானர்கள். அவர்களின் போலி ஆன்மீகக் கொள்கைக்கு குர்ஆனிலும், நபிவழியிலும் ஆதாரம் ஏதும் இல்லை என்ற போதிலும் திருக்குர்ஆனின் சில வசனங்களைத் தங்கள் விருப்பம் போல் வளைத்து அதை ஆதாரமாகக் காட்டினார்கள். மார்க்கம் அறியாத மக்களை ஏமாற்றலானார்கள்.

போலி ஆன்மீகவாதிகள் தமக்குச் சாதகமாக வளைத்துக் காட்டும் வசனங்களில் மேலே கூறப்பட்ட வசனமும் ஒன்றாகும்.

ஆன்மீகக் குருமார்கள் என்று தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் போலிகள் இஸ்லாத்தின் ஏராளமான கட்டளைகளைக் கடைப் பிடிக்கமாட்டார்கள். தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைக் கூட நிறைவேற்ற மாட்டார்கள்.

ஆடல், பாடல் கேளிக்கைகளில் கூட மூழ்குவார்கள்! அந்நியப் பெண்ணிடம் தனித்திருப்பார்கள்!

ஏன் இப்படி நடக்கிறீர்கள் என்று கேட்டால் சட்டதிட்டங்கள் எல்லாம் சாதாரணமானவர்களுக்குத் தான். நாங்கள் ஆன்மீகத்தில் கரை கண்டு விட்டதால் எங்களுக்கு எந்தச் சட்ட திட்டங்களும் இல்லை என்று கூறுவார்கள்.

உறுதி வரும் வரை இறைவனை வணங்க வேண்டும் என்று தான் அல்லாஹ் கூறுகிறான். உறுதி வராத சாதாரண மக்கள் மீது தான் வணக்க வழிபாடுகள் கடமையாகும். எங்களுக்கு உறுதி வந்து விட்டதால் நாங்கள் இறைவனை வணங்க வேண்டியதில்லை எனக் கூறுவார்கள். மேற்கண்ட வசனத்தை இதற்கு ஆதாரமாகக் காட்டுவார்கள்.

உறுதி வரும் வரை இறைவனை வணங்கு என்று குர்ஆனில் கூறப்பட்டடுள்ளதால் போலிகளின் வாதத்தை உண்மையென்று நம்பிப் பலரும் ஏமாந்து போகின்றனர்.

எனவே இந்த வசனம் கூறுவது என்ன? என்பதை விரிவாகவே நாம் ஆராய்வோம்.

உறுதி என்று தமிழாக்கம் செய்யப்பட்ட இடத்தில் யகீன் என்ற மூலச்சொல் இடம்பெற்றுள்ளது. உறுதி, உறுதியான நிகழ்வு ஆகிய இரண்டு அர்த்தங்கள் இச்சொல்லுக்கு இருக்கிறது. இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

உறுதி என்றால் மனிதனின் சிந்தனையில் ஏற்படும் நம்பிக்கை.

உறுதியான நிகழ்வு என்றால் சந்தேகத்திற்கிடமில்லாத காரியத்தைக் குறிக்கும்.

ஒரு கல்லை எடுத்து மேலே நாம் வீசுகிறோம். அது கீழே வந்து விழுவது சந்தேகத்திற்கிடமில்லாத நிகழ்வு. அது கீழே விழுவதற்கு முன்பே கீழே விழும்என்று நாம் அடித்துக் கூற முடியும். இந்த நிகழ்வு உறுதியானது என்ற கருத்தில் இதை யகீன் (உறுதியான நிகழ்வு) எனலாம்.

கல்லை மேலே வீசாமலே ஒரு கல்லை மேலே வீசினால் கீழே விழும் என்று நம்புகிறோம். பொதுவாக நாம் நம்புவதை இது குறிக்கிறது. இதையும் யகீன் (உறுதியான நிகழ்வு) எனக் கூறலாம்.

இந்த வசனத்திற்கு எவ்வாறு பொருள் கொள்வது?

உனது உள்ளத்தில் - சிந்தனையில் - உறுதி வரும் வரை என்று பொருள் கொள்வதா?

அல்லது உறுதியான ஒரு காரியம் உம்மிடம் வரும் வரை என்று பொருள் கொள்வதா? என்பதை முடிவு செய்து விட்டால் தெளிவு கிடைத்து விடும்.

அதற்கு முன் மற்றொரு விசயத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

யகீன் (உறுதியான காரியம்) என்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டால் உறுதியான காரியங்கள் பல இருந்தாலும் மரணத்தையே அரபுகள் கருத்தில் கொள்வார்கள்.

ஏனெனில், உலகிலேயே மிகவும் உறுதியான ஒரே விசயம் மரணம் மட்டுமே.

ஒவ்வொரு மனிதனும் மரணிப்பான் என்பதை நம்பாத ஒரே ஒரு மனிதன் கூட உலகில் கிடையாது. அனைத்து மக்களும் உறுதியான காரியமாக நம்புவது மரணத்தை மட்டுமே. எனவே உறுதி என்ற பொருளைத் தவிர்த்து உறுதியான காரியம் என்று பொருள் கொண்டால் அதன் கருத்து மரணம் தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உமக்கு உறுதி(யான நம்பிக்கை) வரும் வரை என்று பொருள் கொள்ள முடியாது.

உமக்கு உறுதி(யான நிகழ்வு-மரணம்) வரும் வரை என்று தான் இங்கே பொருள் கொள்ள வேண்டும்.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

முதலாவது காரணம் என்னவென்றால் யகீன் என்ற சொல்லுடன் வருகை என்ற சொல்லோ அல்லது வருகையிலிருந்து பிறந்த சொல்லோ இணையுமானால் அப்போது உறுதியான நம்பிக்கை என்று பொருள் கொள்ளக் கூடாது. உறுதியான நிகழ்வு - உறுதியான காரியம் - (அதாவது மரணம்) என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

யகீன் வந்தது

யகீன் வரும்

யகீன் வருமானால்

யகீனின் வருகை

என்றெல்லாம் யகீன் என்ற சொல்லுடன் வருகை அல்லது அதிலிருந்து பிறந்த சொற்கள் சேர்ந்தால் மரணம் என்றே பொருள்.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் உமக்கு யகீன் வரும் வரை என்று கூறப்பட்டுள்ளது. வருகையுடன் சேர்த்துக் கூறப்பட்டுள்ளதால் உறுதியான நம்பிக்கை என்று பொருள் கொள்ளவே முடியாது.

உள்ளத்தில் உறுதியான நம்பிக்கை வருவது வரை என்று கூற வேண்டுமானால் யகீன் என்ற சொல்லை வினைச் சொல்லாக மாற்றிக் கூற வேண்டும்.

அதாவது ஹத்தா தஸ்தைகின எனக் கூறினால் உறுதியான நம்பிக்கை உமக்கு வரும் வரை எனப் பொருள். யகீன் என்பது தஸ்தைகின என்று வினைச் சொல்லாக மாற்றப்பட்டுள்ளது.

யகீன் உம்மிடம் வரும் வரை என்று (ஹத்தா யஃதியகல் யகீன்) கூறப்பட்டால் உறுதியான நம்பிக்கை உமக்கு வரும் வரை என்ற அர்த்தம் செய்யவே முடியாது. உறுதியாக நிகழ வேண்டிய ஒரு காரியம் உம்மை வந்து அடையும் வரை என்று தான் பொருள் கொள்ள முடியும்.

அரை குறையான மொழியறிவை வைத்துக் கொண்டு தான் இவ்வசனத்திற்கு இலக்கணப்படி செய்யத் தகாத அர்த்தம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதற்குச் சான்றாக திருக்குர்ஆனில் இடம்பெற்ற இது போன்ற மற்றொரு வசனத்தை நாம் எடுத்துக் காட்டலாம்.

திருக்குர்ஆனின் 74வது அத்தியாயத்தின் இறுதியில் நரகவாசிகளுடன் நல்லடியார்கள் உரையாடும் காட்சியை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

நீங்கள் ஏன் நரகத்துக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு நரகவாசிகள் விடையளிக்கும் போது:

நாங்கள் தொழுகையாளிகளாக இருந்ததில்லை.

ஏழைகளுக்கு நாங்கள் உணவளிக்கவில்லை.

வீணர்களுடன் மூழ்கிக் கிடந்தோம்.

நியாயத் தீர்ப்பு நாளை நம்பாமல் இருந்தோம.

என்றெல்லாம் காரணங்களை நரகவாசிகள் அடுக்குவார்கள். எது வரை இவ்வாறு நடந்து கொண்டோம் எனக் கூறும் போது:

எங்களுக்கு யகீன் வரும் வரை என்றும் அவர்கள் கூறுவார்கள். (74:47)

15:99 வசனத்தில் இடம் பெற்ற அதே யகீன் என்ற சொல் வருகையிலிருந்து பிறந்த வரும் வரை என்ற சொல்லுடன் இணைந்து இங்கே இடம் பெற்றுள்ளது. 15:99வது வசனத்திற்கு போலி ஆன்மீகவாதிகள் எவ்வாறு பொருள் செய்தார்களோ அது போல் இங்கேயும் அவர்கள் பொருள் செய்து காட்ட வேண்டும்.

அதாவது எங்களுக்கு உறுதி வரும் வரை தொழாமல் இருந்தோம்.

எங்களுக்கு உறுதி வரும் வரை நியாயத் தீர்ப்பு நாளை மறுத்து வந்தோம் என்று தான் இவர்களது வாதத்தின்படி பொருள் கொள்ள வேண்டும்.

உறுதி வரும் வரை தொழாமல் இருந்தோம். உறுதி வந்தவுடன் தொழுது விட்டோம் என்ற கருத்து அதனுள் அடங்கியுள்ளது.

உறுதி வந்த பின்னர் தொழுதார்கள் என்றால் ஏன் நரகத்தில் தள்ளப்பட வேண்டும்?

உறுதி வந்த பின் ஏழைகளுக்கு உணவளித்தவர்கள் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள்?

அவர்கள் சுவர்க்கத்திற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் இவர்களது அறியாமை அம்பலமாகின்றது.

மரணம் என்று இங்கே பொருள் செய்து பாருங்கள்!

எங்களுக்கு மரணம் வரும் வரை ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை என்று பொருள் கொண்டால் அவர்கள் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள் என்ற கேள்விக்குரிய பொருத்தமான விடையாக அமைந்து விடுகிறது.

உறுதி வரும் வரை என்று பொருள் கொண்டால் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள் என்ற கேள்விக்கு விடையாக அது அமையாது.

எங்களுக்கு யகீன் (உறுதியான நிகழ்வு என்னும் மரணம்) வரும் வரை என்று பொருள் கொள்ளும் நிலைக்கு அவர்கள் இப்போது தள்ளப்படுவார்கள்.

15:99 வசனத்திற்கும் இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும். அது தான் இலக்கண விதியாகும்.

எனவே உறுதியான நிகழ்வு என்னும் மரணம் வரும் வரை உமது இறைவனை வணங்க வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் பொருளாகும்.

மனிதர்களிலேயே அதிகமான உறுதியைப் பெற்றவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். உறுதி வரும் வரை தான் வணங்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா வணக்கத்தையும் விட்டிருப்பார்கள்.

எனக்கு உறுதி வந்து விட்டதால் நான் வணங்க மாட்டேன். வணங்கத் தேவையில்லை. நீஙகள் மட்டும் வணங்குங்கள் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மரணப் படுக்கை வரை இறைவனை வணங்கிக் கொண்டே இருந்தார்கள்.

மற்றவர்களுக்கு எதைத் தடை செய்தார்களோ அதை முதலில் தவிர்த்துக் கொள்பவர்களாகக் கடைசி வரை அவர்கள் இருந்தார்கள். மற்றவர்களை விட அதிகம் வணங்குபவர்களாக அவர்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை இவ்வசனத்தின் பொருளை நமக்கு மேலும் தெளிவாக விளக்கி விடுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அடுத்து உறுதியான நம்பிக்கையைப் பெற்றவர்கள் நபித்தோழர்கள். இந்தப் போலி ஆன்மீகவாதிகளை விட பல கோடி மடங்கு உறுதியை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களின் ஒருவர் கூட எனக்கு உறுதி வந்து விட்டதால் இனி மேல் வணங்க மாட்டேன் எனக் கூறவில்லை. மரணிக்கும் வரை அவர்கள் வணங்கிக் கொண்டு தான் இருந்தார்கள்.

இதன் காரணமாகவும், போலி ஆன்மீகவாதிகள் செய்த அர்த்தம் தவறானது என்பது உறுதியாகிறது.

ஆன்மீகம் என்பது மேலும் மேலும் மனிதனின் நிலையை உயர்த்த வேண்டும். மேலும் மேலும் மனிதனைக் பக்குவப்படுத்த வேண்டும். ஆனால், இந்தப் போலி ஆன்மீகவாதிகள் கொடுக்கும் விளக்கம் மனிதனை மேலிருந்து கீழே இறங்குவதாக அமைந்துள்ளது.

அதாவது உறுதி வரும் வரை தொழுவார்களாம்! உறுதி வந்து விட்டால் கஞ்சா அடிப்பார்களாம்! ஆட்டம் போடுவார்களாம்! ஒரு பொறுக்கியின் நடவடிக்கைக்கு ஒப்ப நடப்பார்களாம்!

மனிதனைப் பாதாளப் படுகுழியில் தள்ளுகின்ற இப்படி ஒரு வழியை இஸ்லாம் கூறுமா என்பதைச் சிந்தித்தால் இவர்கள் எந்த அளவுக்குக் கேடுகெட்டவர்கள் என்பதை அறியலாம்.

உறுதியான காரியமாக இருக்கக் கூடிய மரணம் உங்களுக்கு வரும் வரை வணங்கிக் கொண்டே இருங்கள் என்பது தான் இவ்வசனத்தின் பொருளே தவிர போலி ஆன்மீக வாதிகள் கூறுவது போல் பொருள் கொள்ள முடியாது என்பதில் எள் முனையளவு கூட சந்தேகமில்லை.!

18.01.2010. 10:28

இறைவன் கூறும் ஸலவாத்

இறைவன் கூறும் ஸலவாத்!

பி. ஜைனுல் ஆப்தீன்

திருக்குர்ஆன் விளக்கம்

இது ஒற்றுமை இதழில் வெளியான கட்டுரை. நேயர்கள் பயன் பெறுவதற்காக இங்கே வெளியிடுகிறோம்.

இந்த நபியின் மீது அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் ஸலவாத் கூறுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! அவர் மீது நீங்கள் ஸலவாத்தும் நல்ல முறையில் ஸலாமும் கூறுங்கள்! (அல்குர்ஆன் 33:56)

இது முஸ்லிம்கள் அதிக அளவில் செவியுறும் வசனங்களில் ஒன்றாகும். இவ்வசனத்தைத் தமிழகத்தின் மார்க்க அறிஞர்கள் பலர் தவறான பொருள் செய்து அதன் அடிப்படையில் விளக்கம் கூறி வருவதை நாம் காண்கிறோம்..

இவ்வசனத்தில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன.

1-இந்த நபியின் மீது அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும் ஸலவாத் கூறுகின்றனர்.

2-நீங்கள் அவர் மீது ஸலவாத் கூறுங்கள்.

இதில் இரண்டாவது வாக்கியத்துக்கு அனைவரும் சரியாகவே பொருள் கொள்கின்றனர். ஆனால், முதல் வாக்கியத்துக்கு மேற்கண்டவாறு பொருள் கொள்வது தவறாகும்.

இது எப்படி தவறான மொழிபெயர்ப்பாக உள்ளது என்பதை அறிவதற்கு முன் ஸலவாத் கூறுவது என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

இவ்வசனம் அருளப்பட்ட பின் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்ற சந்தேகம் நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உங்கள் மீது நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்று விளக்கம் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் சொற்களைக் கற்றுக் கொடுத்தனர்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்.

ஸலாவத் எவ்வாறு கூறுவது என நபித் தோழர்கள் கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு விடையளித்தார்கள் என்ற செய்தி புகாரி (3369, 4798, 6357, 6358, 6360) ஆகிய எண்களுடைய ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த மேற்கண்ட ஸலவாத்தின் பொருளை அறிந்து கொண்டால் ஸலவாத் கூறுதல் என்பதன் பொருளும் தெரிய வரும்.

இறைவா! இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும், நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அருள் புரிவாயாக!. நீ புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன்.

இறைவா! இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பரகத் புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக! நீ புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மேற்கண்ட ஸலவாத்தின் தமிழாக்கம் இது தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் நாம் வேண்டுவது தான் ஸலவாத் கூறுதல் எனப்படும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மற்ற சமுதாயத்தினர் தங்கள் நபிமார்களை வணக்கத்திற்குரியவர்களாகவும், பிரார்த்தனை செய்யப்படுவோராகவும் ஆக்கி விட்டனர். முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவ்வாறு ஆக்கி விடக் கூடாது என்பதற்கான கேடயமே ஸலவாத் கூறுதல்.

நபிகள் நாயகத்திடம் நமது தேவைகளைக் கேட்காமல் அவர்களுக்காக நாம் தான் இறைவனிடம் கேட்கிறோம். இதிலிருந்து இறந்தவருக்காக நாம் தான் பிரார்த்தனை செய்ய வேண்டுமே தவிர இறந்தவரிடம் பிரார்த்திக்கக் கூடாது என்ற கருத்தும் பெறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த - தொழுகையில் நாம் ஓதி வருகின்ற - ஸலவாத் மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்கும் போது, நாமாக ஓதி வரும் ஸலவாத்தின் பொருளைக் கவனித்தாலும் இந்த உண்மையை உணரலாம்.

அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி என்று சிலர் கூறுவார்கள். இறைவா! அவர்கள் மீது அருளும், பாக்கியமும் பொழிவாயாக என்பது இதன் பொருள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வேறு சிலர் கூறுவார்கள். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்து ஈடேற்றமளிப்பானாக என்பது இதன் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் செய்யும் பிரார்த்தனையே ஸலவாத் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதை விரிவாக விளக்குவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

ஸலவாத் கூறுதல் என்பதன் பொருளை விளங்காமல் நபிகள் நாயகத்திடம் நாம் எதையோ வேண்டுவதாகச் சிலர் நினைக்கின்றனர். சாதாரண மக்கள் இவ்வாறு நினைப்பதையாவது மன்னித்து விடலாம். மிகச் சில மவ்லவிமார்களும், இப்படி விளங்கி வைத்திருப்பது நமக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது.

நபிகள் நாயகத்திடம் எதையும் கேட்கக் கூடாது. அவர்களுக்காக நாம் தான் கேட்க வேண்டும் என்ற தத்துவத்தை உள்ளடக்கிய ஸலவாத்தை இதற்கு நேர் எதிராக விளங்கியுள்ளனர்.

இனி முன்னர் குறிப்பிட்ட விசயத்திற்கு வருவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று பொருள் கொள்வது எவ்வாறு தவறு என்பதைக் காண்போம்.

நபிகள் நாயகத்திற்காக இறைவனிடம் வேண்டுவதே ஸலவாத் என்பதை விளங்கியுள்ளோம். இதனடிப்படையில் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்றால் நபிகள் நாயகத்திற்காக அல்லாஹ் இறைவனிடம் அருளை வேண்டுகிறான் என்ற கருத்து வருகிறது.

அதாவது நாம் கூறுவது போலவே அல்லாஹ்வும் ஸலவாத் கூறுகிறான் என்றால்- அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி என்று அல்லாஹ் கூறுகிறான் என்றால்- இத்தகைய விபரீத அர்த்தம் வரும்.

இறைவா! நீ அருள் புரிவாயாக என்று அல்லாஹ் எப்படிக் கூறுவான்?

அப்படி அல்லாஹ் கூறினால் அல்லாஹ்வுக்கு மேல் ஒரு அல்லாஹ் இருக்கிறானா?

அந்த அல்லாஹ்விடம் இந்த அல்லாஹ் இவ்வாறு வேண்டுகிறானா?

என்றெல்லாம் பல கேள்விகள் இதில் எழும். அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று பொருள் கொள்வது அப்பட்டமான இணை கற்பித்தலாகவே அமையும்.

அப்படியானால் இதன் சரியான பொருள் என்ன?

ஸலவாத் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.

1. பிறருக்காக அருள் வேண்டுதல்.

2. பிறருக்கு அருள் புரிதல்.

என்பதே அந்த இரண்டு அர்த்தங்கள்.

இச்சொல்லை மனிதர்கள், வானவர்கள், ஜின்கள் உள்ளிட்டவர்களுடன் தொடர்புபடுத்தும் போது, அருள் வேண்டினார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இதே சொல்லை அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லும் போது, அருளை வேண்டினான் என்ற பொருளைக் கொள்ளாமல் அருள் புரிகிறான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இது நமது புதிய கண்டுபிடிப்பு அல்ல. அரபுக் கல்லூரிகளில் அல்ஃபியா போன்ற இலக்கண நூல்களிலேயே இந்த விபரம் கூறப்பட்டு உலமாக்கள் அறிந்து வைத்திருக்கிற சிறிய விசயம் தான். ஆனாலும், சில உலமாக்கள் தாம் அறிந்ததற்கு மாறாக அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று விபரீதம் புரியாமல் மேடைகளிலேயே பேசி விடுகின்றனர்.

இவ்வசனத்திற்கு முழுமையாகப் பொருள் கொள்வதென்றால் கீழ்கண்டவாறு தான் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே நீங்களும் அவருக்காக அருளை வேண்டுங்கள்! நல்ல முறையில் அவருக்காக ஸலாம் கூறுங்கள்.

இப்படித் தான் இவ்வசனத்திற்குப் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திருந்தால் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பது போன்ற விபரீதமான சொற்கள் வழக்கத்தில் வந்திருக்காது.

நாம் கூறியதை மேலும் வலுப்படுத்திட இதே அத்தியாயத்தின் 43வது வசனத்தையும் உதாரணமாகக் குறிப்படலாம்.

இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவனும், அவனது வானவர்களும் உங்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர். அவன் நம்பிக்கை கொண்டோரிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33:43)

இவ்வசனத்தைக் கவனியுங்கள்! 56வது வசனத்தில் நபிகள் நாயகத்தின் மீது அல்லாஹ் ஸலவாத் கூறுவதாகக் குறிப்பிட்டது போல் அனைத்து நம்பிக்கையாளர்கள் மீதும் அல்லாஹ் ஸலவாத் கூறுவதாக இவ்வசனம் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பயன்படுத்திய அதே சொல்லை இவ்வசனத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் இறைவன் இங்கே பயன்படுத்தியுள்ளான்.

அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று இந்த வசனத்திற்கு பொருள் கொள்ளாமல் அல்லாஹ் அருள் புரிகிறான் என்று சரியாக பொருள் செய்யும் உலமாக்கள், அது போன்று அமைந்த 56வது வசனத்திற்கு மட்டும் ஏறுக்கு மாறாகப் பொருள் செய்வதிலிருந்து அவர்கள் அறிந்து கொண்டே தான் தவறான கருத்தைத் தருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

33:43 வசனத்திற்குச் சரியான பொருள் கீழ்கண்டவாறு தான் அமைய வேண்டும்.

இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவன் தான் உங்களுக்கு அருள் புரிகிறான். அவனது வானவர்கள் உங்களுக்காக அவனது அருளை வேண்டுகிறார்கள். நம்பிக்கை கொண்டோரிடம் அவன் அன்புமிக்கவனாக இருக்கிறான்.

இவ்வசனத்திற்குப் பொருள் கொள்வது போலவே 33:56 வசனத்திற்கும் பொருள் கொண்டால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

பெரும்பாலான உலமாக்கள் சரியான முறையில் இதை விளக்கினாலும் மிகச் சிலர் தவறான பொருள் கொடுப்பதை எடுத்துச் சொல்லி அவர்களைத் திருத்தும் கடமை தங்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

18.01.2010. 09:23

லைலத்துல் கத்ர் இரவில்

லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா?

தொடர்ந்து படிக்க 12.08.2009. 05:04

அல்லாஹ்வின் கைப்பிடிக்கு அளவு என்ன

அல்லாஹ்வின் கைப்பிடிக்கு அளவு என்ன

ஆதம் அலை அவர்களை இறைவன் தனது ஒரு கைப்பிடி மண்ணில் படைத்தான் என்று ஹதீஸ் உள்ளது. அறுபது முழம் அவருடைய உயரம் எனவும் ஹதீஸ்கள் உள்ளன். ஆனால் வானங்கள் அவனது கைப்பிடிக்கும் அடங்கும் என்று குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் அல்லாஹ்வின் கைப்பிடி என்பது அறுபது முழத்தை உள்ளடக்கும் அளவா? வானங்களை உள்ளடக்கும் அளவா

ராஜ் முஹம்மத் குவைத்

அல்லாஹ்வைப் பொருத்தவரை அவனது பிரம்மாண்டம் பற்றி நாம் வரையறுக்க முடியாது. ஆனால் அவனை குறிப்பிட்ட் உயரத்துக்குள் அடக்க முடியாது. சில நேரங்களில் அவன் தனது தோற்றத்தை வானம் பூமியை விடவும் பெரிதாகக் காட்டுவான். சில நேரங்களில் மனிதர்கள் அண்ணாந்து பார்க்கும் சிறிய தோற்றத்திலும் இருப்பான். நிர்ணயித்த அளவு அவனுக்கு இல்லை என்பதால் நீங்கள் கேட்ட விஷயத்தில் முரன்பாடு ஏதும் இல்லை. இது குறித்து ஷேக் அப்துல்லா ஜமாலி விவாதத்தில் ஆதாரங்களை குறிப்பிட்டுள்ளோம்.

04.08.2011. 16:14

இரவை பகல் தொடருமா?

இரவை பகல் தொடருமா?

7 : 54 வசனத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.. தயவு செய்து விளக்கம் அளிக்கவும் உங்கள் மொழியாக்கத்தில் "இரவை பகலால் மூடுகிறான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறு வேறு தர்ஜுமாக்களில் "இரவைக்கொண்டு பகலை மூடுகிறான்", என்று மொழிப்பெயர்த்துள்ளனர்.

இரண்டும் முரண்பாடான கருத்தல்லவா? எது சரி?

இன்னொன்று, அதே வசனத்திற்கு , உங்கள் மொழியாக்கத்தில் "பகல், இரவை தொடர்கிறது", என்று சொல்லியுள்ளீர்கள். 
வேறு வேறு மொழியாக்கங்களில் "இரவு பகலை தொடர்கிறது", என்று மொழியாக்கம் செய்துள்ளனர்.

இரண்டும் முரண்பாடான கருத்தல்லவா? எது சரி?

ந்நாஷித் அஹ்மது

பதில்

நம்முடைய மொழி பெயர்ப்பு தான் சரியானது.

إِنَّ رَبَّكُمُ اللّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثاً وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلاَ لَهُ الْخَلْقُ وَالأَمْرُ تَبَارَكَ اللّهُ رَبُّ الْعَالَمِينَ (54)

யுக்‌ஷி 

அல்லைல

அன்னஹார

என்று மூலத்தில் உள்ளது.

அல்லைல - அன்னஹார என்ற இரண்டு செயப்படு பொருட்கள் உதில் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படு பொருள் வந்தால் முதலாவது கூறப்பட்ட செயப்படு பொருளுக்கு ஐ காரம் சேர்த்து அர்த்தம் செய்ய வேண்டும். அதாவது இரவால் என்று கூறாமல் இரவை என்று மொழி பெயர்ப்பது தான் சரியானது. 

இரண்டாவதாக கூறப்பட்ட மற்றொரு செயப்படு பொருளாக உள்ள அன்னஹார என்பதற்கு ஐ காரம் சேர்த்து பகலை என்று பொருள் கொள்ளாமல் ஆல் அல்லது மூலம் என்று சேர்த்து பொருள் செய்ய வேண்டும். அதாவது பகலால் பகல் மூலம் என்று கூற வேண்டும். தக்க காரணம் இருந்தால் தவிர இதில் மாற்றம் செய்யக் கூடாது என்பது அரபு இலக்கண விதி

இந்த இலக்கண விதி அனைவரும் அறிந்த விதியாக இருந்தாலும் அவர்கள் இரவு தான் பகலை மூடுகிறது என்று கருதியதால் அந்த அர்த்தம் வர வேண்டுமென்பதற்காக இதை மீறியுள்ளனர். தக்க காரணம் இருக்கும் போது இவ்வாறு மீறுவது இலக்கணப் பிழையாக ஆகாது என்ற அடிப்படையில் அவ்வாறு செய்துள்ளனர்.

ஆனால் இவர்கள் இரவு பகலின் அடிப்படையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உலகில் இரவு தான் இயற்கையானது. சூரியன் என்ற ஒரு பொருள் படைக்கப்பட்டதால் தான் பகல் ஏற்படுகிறது. சூரியன் என்ற ஒன்று இல்லாவிட்டால் எப்போதும் இருட்டு தான்.

பூமியின் இயற்கையான தன்மை இருட்டு எனும் போது அதை பகல் தான் மூடுகிறது. பகல் எனும் திரையை நீக்கி விட்டால் இரவாகி விடும்.

இதற்கேற்ப திருக்குர் ஆன் முதல் செயப்படு பொருளாக இரவை கூறி மாபெரும் அறிவியல் உண்மையைக் கூறியுள்ளது. ஆனால் இதை விளங்காமல் கருத்துப் பிழை வந்து விடும் என தவறாக கருதி இலக்கணத்தை மீறி பொருள் செய்துள்ளனர்.

இரவும் அவர்களுக்கு ஒரு சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள்.
திருக்குர்ஆன் 36:37

இவ்வசனத்தில் இரவில் இருந்து பகலை உரித்து எடுக்கிறோம் என இறைவன் கூறுகிறான். அதாவது இரவின் மீது பகல் எனும் போர்வை போர்த்தப்பட்டுள்ளதாகவும் பகலை உரித்து எடுத்தவுடன் தானாக இரவு வந்து விடுகிறது எனவும் இவ்வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான். அதே கருத்தைத் தான் நீங்கள் சுட்டிக்காட்டிய வசனமும் சொல்கிறது நாம் செய்த மொழி பெயர்ப்பு தான் மிகச் சரியானது, 

உங்களின் இரண்டாம் கேள்விக்கும் இதிலேயே விடை உள்ளது.

يَطْلُبُهُ حَثِيثاً அதை இது தொடர்கிறது என்று தான் மூலத்தில் உள்ளது.

எது முதலில் உள்ளதோ அது தான் தொடரப்படும் பொருள் என்பதும் எது பிந்தையதாக உள்ளதோ அது தான் தொடரும் பொருள் என்பதும் தான் சரியான கருத்தாக இருக்க முடியும். எனவே இதிலும் நாம் செய்த அர்த்தம் தான் சரியானது. இரவு தான் இயற்கையானது எனும் போது இரவை பகல் தொடர்கிறது என்பதே சரியானது.

 

29.07.2011. 21:24

நபியின் பெற்றோருக்கு வழிகாட்டி யார்?

நபியின் பெற்றோருக்கு வழிகாட்டி யார்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தகப்பனார் மற்றும் பாட்டனாருக்கு வழிகாட்டி யார்?

ரபீக் அஹ்மத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச் சமுதாயத்துக்கு தூதராக அனுப்பப்பட்டார்களோ அவர்களுக்கு எந்த வழிகாட்டியும் அனுப்பப்படவில்லை. இப்ராஹீம் நபி, இஸ்மாயீல் நபி ஆகியோரின் வழித்தோன்றல்களாக இவர்கள் இருந்த போதும் பல்லாயிரம் ஆண்டுகள் ஓடி விட்டதால் இப்ராஹீம் நபியின் வழிமுறை எதுவும் அவர்களிடம் மீதமாக இருக்கவில்லை. இப்ராஹீம் நபி மார்க்கத்தில் இருந்த பத்துக் காரியங்கள் மட்டுமே அவர்களிடம் மீதம் இருந்தன. இதைப் பின்வரும் நபிமொழியில் இருந்து அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், "பத்தாவது விஷயத்தை நான் மறந்து விட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம்'' என்று கூறினார்கள்.

நூல் முஸ்லிம் 436

இப்ராஹீம் நபியின் அனைத்து வழிமுறைகளையும் குழிதோண்டிப் புதைத்த அந்தச் சமுதாயத்தால் மேற்கண்ட பத்துக் காரியங்களையும் விட்டுவிட முடியாததால் இவை இயற்கையான வழிமுறைகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட இப்ராஹீம் நபி அவர்கள் இநதச் சமுதாயத்துக்கு அனுப்பப்பட்ட தூதராக இருக்க முடியாது.

ஆனாலும் இவர்கள் ஸாபியின்கள் எனும் கூட்டத்தில் சேர்ந்திருந்தால் அவர்கள் காபிராக கருதப்பட்டிருக்க மாட்டார்கள். இது குறித்து முழுமையாக அறிய

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/Thuthar-Anuppappadatha-NabiSal-Petror-Kafira/

http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/nabiyin_petror_entha_markathi_irukavendum/

23.07.2011. 06:40

<< First < Previous [1 / 2] Next > Last >>



செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
107 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி