பெண்களுக்கு கத்னா உண்டா
பெண்களுக்கு கத்னா உண்டா
கேள்வி: ஆண்களுக்கு கத்னா செய்வது போல் பெண்களுக்கு கத்னா செய்ய இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா?
கே.ஏ.ஜலாலுத்தீன், சென்னை.
பதில்: ஷாபி இமாம் உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கத்னா கடமை என்கின்றனர். அபூஹனீஃபா இமாம், மாலிக் இமாம் ஆகியோர் உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது சுன்னத் என்று கூறுவதாக நவவி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பெரும்பாலானவர்கள் பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்று கூறினாலும் அது சம்மந்தமாக வரும் ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளத்தக்கதாக இல்லை.
பெண்களின் பிறப்புறுப்பில் உணர்வுகளின் முடிச்சு என்று கூறப்படும் பகுதியை வெட்டி எடுப்பதை பெண்களின் கத்னா என்கின்றனர்.
உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் பெண்களுக்கு கத்னா செய்பவராக இருந்தார். அவரிடம் ஒட்ட நறுக்கி விடாதே! மேலோட்டமாக நறுக்குவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அபூதாவூதில் ஒரு ஹதீஸ் உள்ளது.
حدثنا سليمان بن عبد الرحمن الدمشقي وعبد الوهاب بن عبد الرحيم الأشجعي قالا حدثنا مروان حدثنا محمد بن حسان قال عبد الوهاب الكوفي عن عبد الملك بن عمير عن أم عطية الأنصارية أن امرأة كانت تختن بالمدينة فقال لها النبي صلى الله عليه وسلم لا تنهكي فإن ذلك أحظى للمرأة وأحب إلى البعل قال أبو داود روي عن عبيد الله بن عمرو عن عبد الملك بمعناه وإسناده قال أبو داود ليس هو بالقوي وقد روي مرسلا قال أبو داود ومحمد بن حسان مجهول وهذا الحديث ضعيف
அபூதாவூத் 4587
17338 - وأخبرنا أبو علي الروذباري أنبأ أبو بكر بن داسه ثنا أبو داود ثنا سليمان بن عبد الرحمن وعبد الوهاب بن عبد الرحيم الأشجعي قالا ثنا مروان ثنا محمد بن حسان قال عبد الوهاب الكوفي عن عبد الملك بن عمير عن أم عطية الأنصارية : أن امرأة كانت تختن بالمدينة فقال لها النبي صلى الله عليه و سلم لا تنهكي فإن ذلك أحظى للمرأة وأحب إلى البعل قال أبو داود محمد بن حسان مجهول وهذا الحديث ضعيف
سنن البيهقي الكبرى [8 /324]
இதுவும் முஹம்மத் பின் ஹஸ்ஸான் என்பவர் வழியாக அறிவிக்கப்படுவதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.
6236 - ما حدثناه أحمد بن سلمان الفقيه ببغداد ثنا هلال بن العلاء الرقي ثنا أبي ثنا عبيد الله بن عمرو عن زيد بن أبي أنيسة عن عبد الملك بن عمير عن الضحاك بن قيس قال : كانت بالمدينة امرأة تخفض النساء يقال لها : أم عطية فقال : لها رسول الله صلى الله عليه و سلم اخفضي و لا تنهكي فإنه أنضر للوجه و أحظى عند الزوج
تعليق الذهبي قي التلخيص : سكت عنه الذهبي في التلخيص
المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص [5 /264]
இதன் அறிவிப்பாளரான அலா என்பவர் இட்டுக்கட்டுபவர் என்று சந்தேகிக்கப்பட்டவர். எனவே இதுவும் பலவீனமான ஹதீஸ் தான்.
இந்தக் கருத்தில் பஸ்ஸார், அபூநயிம் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
8881 - وعن ابن عمر قال : دخل على النبي صلى الله عليه و سلم نسوة من الأنصار فقال : ص . 311
يا نساء الأنصار اختضبن غمسا واخفضن ولا تنهكن فإنه أحظى عند أزواجكن وإياكن وكفر المنعمين
قال مندل : يعني الزوج
رواه البزار وفيه مندل بن علي وهو ضعيف وقد وثق وبقية رجاله ثقات
مجمع الزوائد [5 /310]
இந்த ஹதீஸில் முன்தில் இப்னு அலி என்பார் இடம் பெறுகிறார். அவர் பலவீனமானவர் என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.
கத்னா ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும் என்ற ஹதீஸ் அஹ்மத் நூலில் இடம்பெற்றுள்ளது.
இறைவன் வழங்கிய பாக்கியத்தை அழித்துக் கொள்வது என்ற அடிப்படையில் பாக்கும் போது பெண்களுக்கு கத்னா செய்வது கொடூரமானது என்று அறியலாம்.
அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியாராக இருந்த போது அளித்த பதில்- தேவையான திருத்தங்களுடன்
27.09.2010. 00:01
