நான்குவயது மகன் முன்னால் தாய் உடை மா
நான்குவயது மகன் முன்னால் தாய் உடை மாற்றலாமா?
ஹமீத்
பதில்
பெரியவர்கள் தன்னுடைய அந்தரங்கமான பாகங்களை சிறு குழந்தைகளுக்கு முன்பு வெளிப்படுத்தக்கூடாது. பின்வரும் வசனம் இதைத் தடைசெய்கின்றது.
பின்வரும் வசனங்களைச் சிந்தித்தால் இதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُمْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ (58)24
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் (24 : 58, 59)
· எந்த வீட்டுக்குள் செல்வதாக இருந்தாலும் அனுமதி பெற்றுத் தான் செல்ல வேண்டும்.
· ஆனால் அந்த வீட்டாரின் அடிமைகள் மற்றும் சிறுவர்கள் அனுமதி கேட்காமல் வீட்டுக்குச் செல்ல்லாம்.
· ஆனால் அடிமைகளும், சிறுவர்களும் கூட பெண்கள் உபரியான ஆடைகளைக் களைந்து இருக்கும் மூன்று நேரங்களில் அனுமதி பெற்றுத் தான் செல்ல வேண்டும்.
ஆகிய சட்டங்கள் இவ்வசனங்களில் இருந்து கிடைக்கின்றன. சிறுவர்களாக இருந்தாலும் பெண்கள் உபரியான ஆடைகளைக் களைந்துள்ள நேரங்களில் திடீரென உள்ளே நுழையக் கூடாது. உபரியான ஆடைகளைக் களைந்துள்ள நிலையில் பெண்களை பார்க்க்க் கூடாது என்பது தான் இதற்குக் காரணம்.
ஆனால் சிறுவர்கள் என்பது பிறந்த குழந்தை முதல் பருவ வயது வரை உள்ள பருவத்தைக் குறிக்கும் சொல்லாக இருந்தாலும் இந்த விஷயத்தில் அவ்வாறு புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அனுமதி கேட்டு செல்ல வேண்டும் என்ற விபரத்தைப் புரிந்து கொள்ளும் பருவத்தினரைத் தான் இது எடுத்துக் கொள்ளுமே தவிர அதற்குக் குறைவான வயதுடைய சிறுவர்களை எடுத்துக் கொள்ளாது. இந்த நிலையை அடைய ஏழெட்டு வயதாவது ஆக வேண்டும். அதற்குக் கீழே உள்ள சிறுவர்களுக்கு இந்தச் சட்டம் கிடையாது.
மூன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும் என்ற சொல்லில் இருந்து இதனை அறியலாம்.
எனவே மூன்று நான்கு வயதுடைய சிறுவர்கள் முன்னல் உடை மாற்றுவதும் உபரியான ஆடைகள் இல்லாமல் இருப்பதும் தவறல்ல.
17.01.2012. 09:29
பெண்களுக்கும் கத்னா செய்ய ஆதாரம் உள்
பெண்களுக்கும் கத்னா செய்ய ஆதாரம் உள்ளதாமே?
பெண்கள் கத்னா செய்யத் தேவையில்லையென்று தாங்கள் சொல்லியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கத்னா செய்யப்பட்ட இரண்டு உறுப்புக்கள் சந்தித்தால் குளிப்புக் கடமையாகும் என்ற ஹதீஸை வைத்து பெண்களுக்கு கத்னா செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் .எனவே இதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதரங்களுடன் விளக்கம் தரவும்.
முஹம்மத் நஸ் ரீன்
பதில் :
நீங்கள் குறிப்பிடும் செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
526 عَنْ أَبِي مُوسَى قَالَ اخْتَلَفَ فِي ذَلِكَ رَهْطٌ مِنْ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ فَقَالَ الْأَنْصَارِيُّونَ لَا يَجِبُ الْغُسْلُ إِلَّا مِنْ الدَّفْقِ أَوْ مِنْ الْمَاءِ وَقَالَ الْمُهَاجِرُونَ بَلْ إِذَا خَالَطَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ قَالَ قَالَ أَبُو مُوسَى فَأَنَا أَشْفِيكُمْ مِنْ ذَلِكَ فَقُمْتُ فَاسْتَأْذَنْتُ عَلَى عَائِشَةَ فَأُذِنَ لِي فَقُلْتُ لَهَا يَا أُمَّاهْ أَوْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكِ عَنْ شَيْءٍ وَإِنِّي أَسْتَحْيِيكِ فَقَالَتْ لَا تَسْتَحْيِي أَنْ تَسْأَلَنِي عَمَّا كُنْتَ سَائِلًا عَنْهُ أُمَّكَ الَّتِي وَلَدَتْكَ فَإِنَّمَا أَنَا أُمُّكَ قُلْتُ فَمَا يُوجِبُ الْغُسْلَ قَالَتْ عَلَى الْخَبِيرِ سَقَطْتَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ وَمَسَّ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ رواه مسلم
ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து கத்னா செய்யப்படும் இரு உறுப்புக்கள் சந்தித்து விட்டாலே (இருவர் மீதும்) குளிப்பு கடமையாகிவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (579)
இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆணுறுப்பையும் பெண்ணுறுப்பையும் கிதான் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள். இந்த வார்த்தைக்கு கத்னா செய்யப்பட்ட உறுப்பு என்று பொருள் இருக்கின்றது.
இதே வார்த்தையைக் கொண்டு பெண்ணுறுப்பைப் பற்றி கிதான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதால் ஆண்களுக்கு கத்னா செய்வதைப் போன்று பெண்களுக்கும் கத்னா செய்யும் நடைமுறை அன்றைய காலத்தில் இருந்துள்ளது என்ற வாதத்தைச் சிலர் வைக்கின்றனர்.
அரபு மொழியில் பரவலாக உள்ள ஒரு நடைமுறையைத் தெரியாதவர்களே இந்த வாதத்தை வைத்து வருகின்றனர். அந்த நடைமுறையைத் தெரிந்து கொண்டவர்கள் இந்த வாதம் தவறானது என்பதை எளிதில் புரிந்து கொள்வார்கள்.
இரண்டு பொருள்களை ஒரு பொருளின் பெய்ரால் குறிப்பிடுவது அரபுகளிடம் சர்வசாதாரணமான நடைமுறையாகும். இரண்டு பொருட்கள் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தால் அல்லது ஒன்றையொன்று ஒத்திருந்தால் அவற்றில் ஒன்றின் பெயரை மற்றதற்கும் சொல்லும் வழக்கம் அரபுமொழியில் தக்லீப் எனப்படுகிறது. பின்வரும் செய்திகளைக் கவனித்தால் இதைத் தெளிவாக அறியலாம்.
பேரீச்சம் பழத்தின் நிறம் கறுப்பாக இருப்பதால் இதை அஸ்வத் (கறுப்பு நிறம் கொண்டது) என்றும் அரேபியர்கள் அழைப்பார்கள். ஆனால் நீருக்கு நிறம் கிடையாது.
பேரீச்சம் பழத்துடன் நீரும் சேர்த்து பருகப்படுவதால் பேரீச்சம் பழத்திற்குரிய அஸ்வது என்ற சொல்லை நீருக்கும் சேர்த்து பயன்படுத்துவார்கள். இவ்விரண்டையும் குறிக்க அஸ்வதானி (இரு கருப்பான பொருட்கள்) என்று கூறுவார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
2567حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الْأُوَيْسِيُّ حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهِ عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ لِعُرْوَةَ ابْنَ أُخْتِي إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلَالِ ثُمَّ الْهِلَالِ ثَلَاثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَارٌ فَقُلْتُ يَا خَالَةُ مَا كَانَ يُعِيشُكُمْ قَالَتْ الْأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ إِلَّا أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيرَانٌ مِنْ الْأَنْصَارِ كَانَتْ لَهُمْ مَنَائِحُ وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَلْبَانِهِمْ فَيَسْقِينَا رواه البخاري
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம்; மீண்டும் பிறை பார்ப்போம்; பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம். அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது'' என்று கூறினார்கள். நான், "என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தினீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம்; (மற்றொன்று) தண்ணீர் ஆகும் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (2567)
இதை ஆதாரமாக வைத்து தண்ணீர் கறுப்பாக இருக்கும் என்று அறிவுடைய மக்கள் விளங்க மாட்டார்கள்.
கஅபாவில் ருக்னுல் யமானி என்ற மூலை ஒன்று உள்ளது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முத்தமிட்டுள்ளார்கள். இதைப் போன்று ஹஜருல் அஸ்வதையும் முத்தமிட்டுள்ளார்கள்.
ருக்னுல் யமானியுடன் ஹஜருல் அஸ்வதைச் சேர்த்துக் கூறும் போது மட்டும் ருக்னைனனி யமானியையனி இரண்டு ருக்னுல் யமானிகள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
1609حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا لَيْثٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَمْ أَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُ مِنْ الْبَيْتِ إِلَّا الرُّكْنَيْنِ الْيَمَانِيَيْنِ رواه البخاري
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
இரண்டு ருக்னுல் யமானிகைளத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை.
நூல் : புகாரி (1609)
பொதுவாக ஹதீஸில் அதான் என்ற சொல் தொழுகைக்குரிய பாங்கைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. பாங்கின் சில வாசகங்கள் தொழுகை ஆரம்பிப்பதற்கு முன் சொல்லப்படும். இதற்கு இகாமத் என்று சொல்லப்படுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கையும் இகாமத்தையும் அதானைனி இரண்டு பாங்குகள் என்று குறிப்பிடுள்ளார்கள். அதாவது பாங்கிற்குரிய சொல்லை இகாமத்திற்கும் பயன்படுத்தியுள்ளார்கள்.
624حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ قَالَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ الْجُرَيْرِيِّ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ ثَلَاثًا لِمَنْ شَاءَ رواه البخاري
அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இரு பாங்குகளுக்கு இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. இரு பாங்குகளுக்கு இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு'' என்று (இரண்டு முறை) கூறிவிட்டு, மூன்றாம் முறை "விரும்பியவர் (அதைத்) தொழலாம்'' என்றார்கள்.
நூல் : புகாரி (624)
மார்க்கத்தில் ஃபஜர் தொழுகையும் அஸர் தொழுகையும் அதிக முக்கியத்துவப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது. இவ்விரண்டு தொழுகைகளையும் நபி (ஸல்) அவர்கள் அஸரைனி இரண்டு அஸர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஃபஜர் தொழுகையை மட்டும் தனியே குறிப்பிட்டால் அதை அஸர் என்று கூறமாட்டோம். ஆனால் அஸருடன் அதைச் சேர்த்துச் சொல்லும் போது ஃபஜருக்கும் இதே வார்த்தை பயன்படுத்தப்படும்.
364حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ أَخْبَرَنَا خَالِدٌ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ فَضَالَةَ عَنْ أَبِيهِ قَالَ عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ فِيمَا عَلَّمَنِي وَحَافِظْ عَلَى الصَّلَوَاتِ الْخَمْسِ قَالَ قُلْتُ إِنَّ هَذِهِ سَاعَاتٌ لِي فِيهَا أَشْغَالٌ فَمُرْنِي بِأَمْرٍ جَامِعٍ إِذَا أَنَا فَعَلْتُهُ أَجْزَأَ عَنِّي فَقَالَ حَافِظْ عَلَى الْعَصْرَيْنِ وَمَا كَانَتْ مِنْ لُغَتِنَا فَقُلْتُ وَمَا الْعَصْرَانِ فَقَالَ صَلَاةُ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَصَلَاةُ قَبْلَ غُرُوبِهَا رواه أبو داود
ஃபளாலா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பல செய்திகளை) எனக்கு கற்றுத் தந்தார்கள். ஐந்து நேரத் தொழுகைகளை பேணிக் கொள் என்று கூறினார்கள். இந்த நேரங்களில் எனக்கு அதிகமான வேலைகள் உள்ளன. நான் எதைச் செய்தால் எனக்கு போதுமானதாகுமோ அத்தகைய பொதுவான ஓர் உத்தரவை இடுங்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், இரு அஸர் (தொழுகை)களை நீ பேணிக் கொள் என்று சொன்னார்கள். அது எங்களுடைய பேச்சு வழக்கில் இல்லாததால் இரு அஸர்கள் என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள தொழுகையும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையுமாகும் என்று பதிலளித்தார்கள். இந்தச் செய்தியும் அவர்கள் எனக்கு கற்றுத் தந்தவற்றில் உள்ளதாகும்.
நூல் : அபூதாவுத் (364)
கமர் என்றால் சந்திரன். சூரியனையும் சந்திரனையும் கமரைனி இரண்டு சந்திரன்கள் என்று அரேபியர் கூறுவார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் உமரைனி (இரண்டு உமர்கள்) என்று குறிப்பிடும் வழக்கமும் உள்ளது.
அல்அபு என்றால் தந்தை என்று பொருள். தாய் என்பதற்கு அரபியில் உம்மு என்ற சொல் உள்ளது. ஆனால் தாய் தந்தை ஆகிய இருவரையும் குறிப்பிடும் போது அபவைனி இரண்டு தந்தைகள் என்று கூறும் வழக்கம் உள்ளது. இது மாதிரியான சொற்பிரயோகம் ஹதீஸ்களில் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை ஆதாரமாக வைத்து ஒருவனுக்கு இரண்டு தந்தைகள் என்று யாரும் கூற மாட்டோம்.
நபி (ஸல்) அவர்கள் பெண்ணுறுப்பை கிதான் (கத்னா செய்யப்பட்டது) என்று கூறியது இந்த அடிப்படையிலாகும். இது ஆணுறுப்புடன் சேர்த்து சொல்லப்படுவதால் ஆணுறுப்புக்கு மட்டும் உரிய இந்த வார்த்தையை பெண்ணுறுப்புக்கும் பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் உண்மையில் பெண்ணுறுப்பு கத்னா செய்யபடக்கூடியதல்ல.
மேலும் இது நபிகள் நாயகம் காலத்துக்கு முன்பிருந்தே அரபுகளிடம் இருந்த சொல் வழக்காகும்.
எனவே பெண்களுக்கு கத்னா செய்யலாம் என்பதற்கு இது ஆதாரமாகாது.
மேலும் விபரத்துக்கு
http://onlinepj.com/kelvi_pathil/penkal_kelvi/pengaluku_kathna/
13.01.2012. 22:15
பெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்ய
பெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்யலாமா
ஷஃபானா அஸ்மி
பதில்
பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு நிலவும் நேரத்தில் மட்டும் திருமணம் முடிக்கத் தடைசெய்யப்பட்ட இரத்த பந்த உறவினர் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம்.
இன்றைய காலத்தில் மக்களுடன் சேர்ந்து பயணம் செய்வதில் பாதுகாப்பு இருப்பதால் பெண்கள் மஹ்ரமான துணையில்லாமல் பயணம் செய்யலாம். இது பற்றி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பார்க்க
http://onlinepj.com/pengal/pengal_payanm/
ஒரு பெண் மட்டும் தனியாக ஆட்டோவில் செல்வது பாதுகாப்பற்ற நிலையாகும். ஆட்டோ ஓட்டுபவன் அந்தப் பெண்ணை கடத்திக் கொண்டு போக நினைத்தால் சுலபமாகச் செய்துவிட முடியும்.
மேலும் பெண் எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்நிய ஆணுடன் தனித்திருப்பது கூடாது. பயணம் செய்தாலும் பயணம் செய்யாமல் ஊரில் இருந்தாலும் அந்நிய ஆணுடன் தனித்திருப்பது கூடாது.
ஒரு பெண் தனியாக ஆட்டோவில் பயணம் செய்தால் ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இதை இஸ்லாம் தடைசெய்துள்ளது.
ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 2611)
உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: அஹ்மத் 109)
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனித்திருக்கும் நிலை ஏற்பவதால் தான் இது தடுக்கப்படுகிறது. ஆனால் பல ஆண்கள் பயணம் செய்யும் பேருந்தில் ஒரு பெண் பயணம் செய்வது தவறல்ல. அது போல் பல பெண்கள் சேர்ந்து ஒரு ஆட்டோவில் பயணம் செய்வதும் தவறல்ல. ஏனெனில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனித்திருத்தல் என்பது இது போன்ற சந்தர்ப்பங்க்ளில் ஏற்படாது. பின்வரும் நபி மொழியில் இருந்து இதை மேலும் உறுதியாக நாம் அறியலாம்.
حدثنا هارون بن معروف حدثنا عبد الله بن وهب أخبرني عمرو ح و حدثني أبو الطاهر أخبرنا عبد الله بن وهب عن عمرو بن الحارث أن بكر بن سوادة حدثه أن عبد الرحمن بن جبير حدثه أن عبد الله بن عمرو بن العاص حدثه أن نفرا من بني هاشم دخلوا على أسماء بنت عميس فدخل أبو بكر الصديق وهي تحته يومئذ فرآهم فكره ذلك فذكر ذلك لرسول الله صلى الله عليه وسلم وقال لم أر إلا خيرا فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد برأها من ذلك ثم قام رسول الله صلى الله عليه وسلم على المنبر فقال لا يدخلن رجل بعد يومي هذا على مغيبة إلا ومعه رجل أو اثنان
நூல் : முஸ்லிம் 4385
4385 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த (ஆண்கள்) சிலர் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) (அவர்கள் தனிமையில் இருந்தபோது) அவர்களிடம் வந்தனர். அப்போது அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் வீட்டினுள் நுழைந்தார்கள். அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் வெறுப்படைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்துவிட்டு, "(ஆயினும்) நான் (என் துணைவி விஷயத்தில்) நல்லதையே கருதுகிறேன்'' என்று அபூபக்ர் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை அல்லாஹ் நிரபராதியாக்கிவிட்டான்'' என்று கூறி விட்டு, பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, "இன்றைய தினத்திற்குப் பின் எந்த ஆணும் தனிமையில் இருக்கும் எந்தப் பெண்ணிடமும் செல்ல வேண்டாம்; அவனுடன் மற்ற ஓர் ஆணோ, இரு ஆண்களோ இருந்தால் தவிர'' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
11.01.2012. 22:18
இரண்டு ஆண் சாட்சியமும் ஒரு பெண் சாட்
இரண்டு ஆண் சாட்சியமும் ஒரு பெண் சாட்சியமும் சமமா
இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணுடைய சாட்சிக்கு நிகரானது என்று இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளதா?
ஷேக் பஷீர்
பதில்
இஸ்லாம் இரண்டு பெண்களின் சாட்சியத்தை ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமமாக கூறுவது உண்மை தான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُبْ بَيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلْ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَإِنْ كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَنْ يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُوا شَهِيدَيْنِ مِنْ رِجَالِكُمْ فَإِنْ لَمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّنْ تَرْضَوْنَ مِنْ الشُّهَدَاءِ أَنْ تَضِلَّ إِحْدَاهُمَاأَنْ تَضِلَّ إِحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الْأُخْرَى (282)2
கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லா விட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள்.
அல்குர்ஆன் (2 : 282)
2658حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي زَيْدٌ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَيْسَ شَهَادَةُ الْمَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ قُلْنَ بَلَى قَالَ فَذَلِكَ مِنْ نُقْصَانِ عَقْلِهَا رواه البخاري
அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
"பெண்கüன் சாட்சியம் ஆண்கüன் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?'' என்று நபி (ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கிக்) கேட்டார்கள். அவர்கள், "ஆம் (பாதியளவு தான்)'' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்'' என்று கூறினார்கள்.
புகாரி (2658)
இந்த சட்டம் பெண்களை மட்டம் தட்டுவது போல் சிலருக்குத் தோன்றலாம்.
பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஆண்களை விடப் பெண்களே தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். இது பெண்களின் நினைவாற்றலுக்கும், அறிவுத் திறனுக்கும் சான்றாக உள்ளது.
சாட்சியம் கூறுவதற்குத் தேவையான அறிவுத்திறனும், நினைவாற்றலும் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாகவே உள்ள போது அவர்களின் சாட்சியத்தைப் பாதி சாட்சியமாகக் கருதுவது ஏன் என்றும் சிலர் நினைக்கலாம்.
பெண்களுக்கு நல்ல நினைவாற்றலும், அறிவுத் திறனும் உள்ளதை இஸ்லாம் மறுக்கவில்லை. சில விஷயங்களில் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாக அந்தத் தகுதிகள் உள்ளதையும் இஸ்லாம் மறுக்கவில்லை.
நல்ல, கூரிய மதி உடைய ஆண் மகனின் அறிவையே செயலிழக்கச் செய்யும் அளவுக்குப் பெண்களே உங்களுக்குத் திறமை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(பார்க்க: புகாரி 304, 1462)
அன்னை ஆயிஷா (ரலி), அன்னை உம்மு ஸலமா (ரலி) போன்ற பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கே பாடம் சொல்லித் தருமளவிற்கு நினைவாற்றல் மிக்கவர்களாக இருந்துள்ளனர். ஆண்களையே தர்க்க ரீதியாக மடக்கும் அளவுக்கு அவர்களின் அறிவுத் திறமை மேலோங்கியிருந்தது. இஸ்லாமிய வரலாற்றில் இவை ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகும்.
ஆனால் சாட்சியம் கூறுவதற்கு நினைவாற்றல், அறிவுத் திறன் என்ற இரண்டு தகுதிகள் மட்டும் போதுமா? நிச்சயமாகப் போதாது! இவ்விரண்டை விட மிக முக்கியமான தகுதி ஒன்று அவசியம். உள்ளதை உள்ளபடி கூட்டாமல், குறைக்காமல், மிகைப்படுத்தாமல், திரிக்காமல் கூற வேண்டும். இந்தத் தகுதி தான் சாட்சியம் கூறுவதற்கு மிக முக்கியம்.
சாட்சியம் என்பது உண்மையை உலகறியச் செய்வதும், இன்னொருவரின் எதிர் காலத்தை முடிவு செய்வதுமாகும்.
தனக்கு வேண்டியவர்களிடம் காணப்படும் மிகப்பெரும் குறையையும் மிகச் சிறிய குறையாகக் காண்பதும், தனக்கு வேண்டாதவர்களிடம் காணப்படும் சின்னஞ் சிறிய குறையையும் மிகப் பெரிய குறையாகக் காண்பதும் பெண்களின் இயல்பாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. நிறை விஷயத்திலும் அப்படியே.
பதற்றமின்றி பொய் சொல்வதில் ஆண்களை விடப் பெண்களே வல்லவர்களாக இருப்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளிடம் உண்மை கண்டறிவதற்காகக் கருவிகளின் மூலம் சோதனை நடத்தப்படுகின்றது. பொய் சொல்லும் போது ஏற்படும் பதற்றத்தால் மூளையில் உண்டாகும் அதிர்வுகளைக் கருவிகள் பதிவு செய்கின்றன. சொல்வது உண்மையா? பொய்யா? என்பதை இதைக் கொண்டு தீர்மானிக்கின்றனர்.
இந்தச் சோதனைகளின் போது பெண்கள் பொய் சொன்னால் பெரும்பாலும் கருவிகளில் அது துல்லியமாகத் தெரிவதில்லை. ஆண்கள் பொய் சொல்வதைத் தான் இக்கருவிகள் பெரும்பாலும் கண்டுபிடிக்கின்றன. பதற்றமோ, உறுத்தலோ இல்லாமல் பெண்கள் சகஜமாகப் பொய் சொல்வதால் அதைக் கருவிகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.
இதே போன்று நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணையின் போதும் பெண்கள், பதற்றமோ, தடுமாற்றமோ இன்றிப் பொய் சொல்வதால் அதைப் பொய்யென்று கண்டறிவது சிரமம்.
எனவே தான் இரண்டு பெண்களின் சாட்சியம், ஒரு ஆணின் சாட்சியத்திற்குச் சமம் என்று இஸ்லாம் கூறுகின்றது.
மேலும் சாட்சி கூறுவதற்காக அதற்கான சபைகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் செல்பவர்கள் எதிரிகளால் மிரட்டப்படுவதை சர்வ சாதாரணமாகக் காண்கிறோம்.
ஆண்களை விடப் பெண்கள் மிரட்டலுக்கு அதிகம் அஞ்சுவார்கள் என்பதும் இரு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்திற்குச் சமமாக்கப்பட்டதற்கான காரணமாகும்.
19.12.2011. 10:04
பெண்கள் பூ வைக்கலாமா?
பெண்கள் பூ வைக்கலாமா?
முஹம்மத் ஃபத்தாஹ் தஞ்சை
பதில்
பூ என்பது நறுமணப்பொருளாகவும் அலங்காரமாகவும் உள்ளது. பெண்கள் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண்கள் இஷாத் தொழுகைக்கு பள்ளிக்கு வரும்போது நறுமணம் பூசிக்கொண்டு வரக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பூ வைத்துக் கொண்டு இரவில் பள்ளிக்கு வரக்கூடாது.
பள்ளி அல்லாத மற்ற இடங்களுக்கு பூ வைத்துக்கொண்டு செல்லலாம். பூ அலங்காரமாக இருப்பதால் அந்நிய ஆண்களிடம் இதை வெளிப்படுத்துவது கூடாது.
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ(31)24
பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் (24 : 31)
எனவே அந்நிய ஆண்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாக பூ வைப்பது கூடாது. மற்ற அலங்காரங்களை அந்நிய ஆண்களிடமிருந்து மறைப்பது போல் இதையும் மறைக்க வேண்டும்.
மேலும் விபரத்துக்கு பார்க்க
28.11.2011. 06:47
நமது கூட்டங்களில் பெண்கள் திரள்வது ஏ
நமது கூட்டங்களில் பெண்கள் திரள்வது ஏன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் சாதாரண பொதுக்கூட்டங்களுக்கு கூட “மாநாடு” போல மக்கள் குறிப்பாக பெண்கள் திரண்டு வரக் காரணம் என்ன?
பொதுவாக மக்கள் திரண்டு வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெண்கள் திரண்டு வரக் காரணங்கள் பல உள்ளன. ஆண்களுக்கு கடவுள் அல்லாஹ், பெண்களுக்கு கடவுள் அவ்லியா எனக் கூறாமல் கூறி பெண்களை இறை வழிபாட்டில் இருந்து தூரமாக்கி வைத்திருந்தனர். பள்ளிவாசலுக்கு வருவதற்குக் கூட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலைமை இருந்தது. இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய இந்த உரிமையை அவர்களுக்கு மீட்டுக் கொடுத்தது தவ்ஹீத் ஜமாஅத்.
பெண்களிடம் சம்மதம் கேட்காமல் கட்டாயக் கல்யாணம் செய்யப்பட்டு வந்த நிலையை மாற்றி பெண்களுக்கு தமது மண வாழ்வைத் தேர்வு செய்ய உரிமை உண்டு என்பதை நிலைநாட்டியது தவ்ஹீத் ஜமாஅத். தலாக் விடப்படும் பெண்களுக்கு எவ்வித பரிகாரமும் காணப்படாமல் இருந்த நிலையை மாற்றி பெண்களை விவாகரத்து செய்தால் அவர்களுக்கு பாதுகாப்பு தொகை வழங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியதும் தவ்ஹீத் ஜமாஅத்தான்.
கணவனைப் பிடிக்காத பெண்கள் வழி தவறிச் செல்லவும் வேதனை அனுபவிக்கவும் காரணம் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய விவாகரத்து உரிமையை மறுத்தது தான்.
இந்த உரிமையை மீட்டுக் கொடுத்ததும் தவ்ஹீத் ஜமாஅத் தான். வரதட்சணை எனும் வன்கொடுமையால் பெண்கள் பட்ட இன்னல்கள் ஓரளவாவது குறைந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் தவ்ஹீத் ஜமாஅத் தான். இஸ்லாத்தை தூய வடிவில் கடைப்பிடித்தால் மட்டுமே பெண்கள் தமது உரிமையைப் பெற முடியும் என்ற கொள்கையை பெண்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளதால் பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள்.
அது போல் தங்கள் குடும்பத்து ஆண்களிடம் காணப்பட்ட மது சூது புகையிலைப் பழக்கம் உள்ளிட்ட பல தீமைகள் இந்த ஜமாஅத்தின் காரணமாக விலகி இருப்பதையும் அவர்கள் புரிந்து கொண்டதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
உணர்வு 16:9
21.11.2011. 06:03
பெண்கள் நறுமணம் பூசிக் கொண்டு வெளியே
பெண்கள் நறுமணம் பூசிக் கொண்டு வெளியே செல்லலாமா?
முஹம்மத் ராபி
பதில்
நறுமணம் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன.
தனது உடலில் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு. ஆட்களை தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு. முதல் வகையான நறுமணம் அருகில் நெருங்கி வருவோருக்கும் மட்டுமே உணர முடியும். இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும்.
பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இரண்டு வகையான நறுமணங்களையும் பூசிக் கொள்ளலாம். ஆனால் வெளியே செல்லும் போது முதல் வகையான நறுமணப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரண்டு வகையான நறுமணப்பொருட்கள் இருந்துள்ளன.
و حدثنا عمرو بن سواد العامري حدثنا عبد الله بن وهب أخبرنا عمرو بن الحارث أن سعيد بن أبي هلال وبكير بن الأشج حدثاه عن أبي بكر بن المنكدر عن عمرو بن سليم عن عبد الرحمن بن أبي سعيد الخدري عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال غسل يوم الجمعة على كل محتلم وسواك ويمس من الطيب ما قدر عليه إلا أن بكيرا لم يذكر عبد الرحمن وقال في الطيب ولو من طيب المرأة
Muslim 1400
வெள்ளிக்கிழமை குளிப்பதும் பல் துலக்குவதும் பருவமடைந்த அனைவர் மீதும் கடமையாகும். மேலும் தன்னால் இயன்ற நறுமணத்தையும் பூசிக் கொள்ள வேண்டும். (நறுமணப் பொருள் இல்லாத பட்சத்தில்) பெண்களுக்கான நறுமணப் பொருளையாவது பூசிக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் முஸ்லிம் 1400
ஆண்களின் நறுமணமும் பெண்களின் நறுமணமும் அன்று தனித்தனியாக இருந்துள்ளன என்பதையும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
حدثنا محمد بن بشار حدثنا يحيى بن سعيد القطان عن ثابت بن عمارة الحنفي عن غنيم بن قيس عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال كل عين زانية والمرأة إذا استعطرت فمرت بالمجلس فهي كذا وكذا يعني زانية وفي الباب عن أبي هريرة قال أبو عيسى هذا حديث حسن صحيح
Thirmithi 2710
ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் திர்மிதி 2710
கண்கள் விபச்சாரம் செய்கிறது எனக் கூறி விட்டு பெண்கள் நறுமணம் பூசுவது பற்றி நபிகள் நாயகம் கூறுவதால் ஆண்கள் சபைக்குச் சென்று அவர்கள் அப்பெண்ணை ஏறெடுத்துப் பார்க்கும் நிலையை ஏற்படுத்துவதால் அவளும் விபச்சாரி எனக் கூறியுள்ளனர்.
மற்றொரு ஹதீஸில்
أخبرنا إسمعيل بن مسعود قال حدثنا خالد قال حدثنا ثابت وهو ابن عمارة عن غنيم بن قيس عن الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة استعطرت فمرت على قوم ليجدوا من ريحها فهي زانية
Nasayi 5036
தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் விபச்சாரி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.
நஸாயீ 5036
அன்னிய ஆண்களைக் கவரும் நோக்கத்தில் நறுமணம் பூசில் செல்வதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதையும் அவ்வாறு இல்லாமல் நறுமணம் பூசிக் கொண்டு செல்ல தடை இல்லை என்பதையும் இதில் இருந்து ஊகம் செய்யலாம். இன்னும் சொல்லப் போனால் தெளிவாக அனுமதிக்கும் ஹதீஸ்களும் உள்ளன.
حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا يحيى بن سعيد القطان عن محمد بن عجلان حدثني بكير بن عبد الله بن الأشج عن بسر بن سعيد عن زينب امرأة عبد الله قالت قال لنا رسول الله صلى الله عليه وسلم إذا شهدت إحداكن المسجد فلا تمس طيبا
Muslim 674
உங்களில் ஒருத்தி பள்ளிவாசலுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிம் 674 வது ஹதீஸ் கூறுவதைப் பொதுவான தடைக்கு ஆதாரமாக சிலர் காட்டுவது ஏற்க முடியாததாகும்.
ஏனெனில் இது இஷாத் தொழுகைக்கு அதாவது இரவுக்கு மட்டும் உள்ள தடை என்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் விளக்குகின்றன.
حدثنا هارون بن سعيد الأيلي حدثنا ابن وهب أخبرني مخرمة عن أبيه عن بسر بن سعيد أن زينب الثقفية كانت تحدث عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا شهدت إحداكن العشاء فلا تطيب تلك الليلة
Muslim 673
உங்களில் ஒருத்தி இஷாவுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
முஸ்லிம் 673
இந்த ஹதீஸையும் முந்திய ஹதீஸையும் ஸைனப் என்ற சஹாபி தான் அறிவிக்கிறார். எனவே அவர் பொதுவாக அறிவிப்பதை விட குறிப்பாக அறிவிப்பதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த அறிவிப்பை அபூ ஹுரைரா அவர்களின் அறிவிப்பும் உறுதி செய்கின்றது. அது வருமாறு:
حدثنا يحيى بن يحيى وإسحق بن إبراهيم قال يحيى أخبرنا عبد الله بن محمد بن عبد الله بن أبي فروة عن يزيد بن خصيفة عن بسر بن سعيد عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة أصابت بخورا فلا تشهد معنا العشاء الآخرة
Muslim 675
எந்தப் பெண்ணாவது நறு மணப் புகை பூசிக் கொண்டால் அவள் நம்மோடு இஷா தொழுகைக்கு வர வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி)
நூல் முஸ்லிம் 675
எனவே இஷா தொழுகைக்கு போகும் போது நறுமணம் பூசிக் கொண்டு செல்லக் கூடாது என்றால் அது இஷாவுக்கு மட்டும் உரியது என்று புரிந்து கொள்ளலாம். அது இரவில் நறுமணம் பூசிக் கொண்டு செல்லக் கூடாது என்ற கருத்தையும் தரும் என்றும் புரிந்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் பெண்கள் ஆண்களைச் சுண்டி இழுக்கும் வகையிலான நறுமணமாக இல்லாமல் சாதாரண நறுமணம் பூசி வெளியே செல்ல அனுமதி உண்டு என்பதை இந்த ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.
10.11.2011. 01:39
ஆண்கள் மருதானி இடலாமா?
ஆண்கள் மருதானி இடலாமா?
பரக்கத்
பதில் தொடர்ந்து படிக்க 30.05.2011. 12:35 பெண்கள் வீடு வீடாகச் சென்று பெண்களுக்கு அழைப்புப் பணி செய்ய மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? கூடும் என்றால் எவ்வாறு முறையாகச் செய்வது,? ஆதாரம் தரவும் முஹம்மத் பதில் தொடர்ந்து படிக்க 26.05.2011. 10:24 பெண்கள் அறைகுறையாக தலையை மறைப்பது சரியா ஃபர்வீன் பதில் தொடர்ந்து படிக்க 17.05.2011. 04:59 மாதவிடாய் முழுவதுமாக நின்று விட்டது. ஆனால் அதற்கான குளியல் குளிக்கவில்லை. இந்நிலையில் கணவனுடன் உறவு கொள்ளலாமா? கரீம் பதில்[ தொடர்ந்து படிக்க 13.05.2011. 22:17 அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா? என்ற இக்கேள்விக்குப் பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து படிக்க 05.05.2011. 04:19 தொடர்ந்து படிக்க 24.03.2011. 01:03 ஆண்கள் பெண்களிடம் கை குலுக்கலாமா நான் பணி செய்யும் இடத்தில் அன்னியப் பெண்கள் என்னுடன் ஆண்களுடன் கை குலுக்குகின்றனர். அந்த நிலை ஏற்பட்டால் நான் கை குலுக்கலாமா ஆஷிக் எந்த நிலையிலும் ஆண்கள் பெண்களுடன் கை குலுக்குதல் கூடாது. அதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் சில பெண்கள் முஸாபஹா செய்ய – கை குலுக்க முயன்ற போது அதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மறுத்து விட்டனர். இது நஸயியில் பதிவாகி உள்ளது. أخبرنا محمد بن بشار قال حدثنا عبد الرحمن قال حدثنا سفيان عن محمد بن المنكدر عن أميمة بنت رقيقة أنها قالت أتيت النبي صلى الله عليه وسلم في نسوة من الأنصار نبايعه فقلنا يا رسول الله نبايعك على أن لا نشرك بالله شيئا ولا نسرق ولا نزني ولا نأتي ببهتان نفتريه بين أيدينا وأرجلنا ولا نعصيك في معروف قال فيما استطعتن وأطقتن قالت قلنا الله ورسوله أرحم بنا هلم نبايعك يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم إني لا أصافح النساء إنما قولي لمائة امرأة كقولي لامرأة واحدة أو مثل قولي لامرأة واحدة 18.03.2011. 01:41 பெண்கள் முகத்தை மறைக்க ஆதாரம் இருக்கிறதே தொடர்ந்து படிக்க 20.02.2011. 11:36 பெண்கள் கால்களை மறைக்க வேண்டுமா? பெண்கள் தங்கள் கால்களை மறைக்க வேண்டுமா? அபாயா கால்களை மறைத்தால் அது தரையில் இழுபடுமே.! தொழும் பொழுதும் கால்களை மறைக்க வேண்டுமா? மார்க்க அடிப்படையில் விளக்கம் தரவும்! தொடர்ந்து படிக்க 03.01.2011. 06:06 நஸ்ரின் தொடர்ந்து படிக்க 23.12.2010. 02:21 பெண்கள் உலகக் கல்வியை கற்பது பற்றி இஸ்லாம் ஃபாத்திமா நவ்ஷீன் தொடர்ந்து படிக்க 13.12.2010. 07:43 பெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் குறைத்தல் கூடுமா பெண்கள் தலைமுடியை வெட்டலாமா? ஷேக் முஹம்மத் தொடர்ந்து படிக்க 11.12.2010. 03:27 அந்நியப் பெண்களுடன் பேசலாமா நான் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிகிறேன். அங்கே பெரும்பாலும் பெண்களே பணிபுரிகின்றனர். அவர்களுடன் நான் பேசலாமா சலீம் மாலிக் தொடர்ந்து படிக்க 08.12.2010. 02:37பெண்கள் வீடுவீடாக சென்று பிரச்சாரம்
பெண்கள் அறைகுறையாக தலையை மறைப்பது சர
மாதவிடாய் நின்றபின் குளிக்காமல் உடல
அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியல
இணையதளம் மூலம் பெண்களுடன் அரட்டை கூட
இணையதளம் மூலம் பெண்களுடன் அரட்டை கூடுமா ஆண்கள் பெண்களிடம் கை குலுக்கலாமா
பெண்கள் முகத்தை மறைக்க ஆதாரம் இருக்க
பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கு 33:59 வசனம் சொல்கிறதே? மேலும் நபிகள் நாயகம் ஸல அவர்களின் காலத்தில் பெண்கள் தங்கள் முகத்தை மறைத்ததாகவும் ஹதீஸ் உள்ளதே? இதற்கு விளக்கம் தரவும்.பெண்கள் கால்களை மறைக்க வேண்டுமா?
அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியல
அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா?
பெண்கள் உலகக் கல்வியை கற்பது பற்றி இ
பெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் கு
அந்நியப் பெண்களுடன் பேசலாமா
