குடிப்பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் கூறு�

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு இஸ்லாம் காட்டும் வழி என்ன? இத்தகையவர்கள் உலகில் அதிகமாக இருக்கும் போது இவர்கள் அனைவரையும் தண்டிப்பதால் தீர்வு கிடைத்துவிடுமா?

பதில்

ஒரு தீமை பல வழிகளில் பரவ வாய்ப்பு இருந்தால் இஸ்லாம் அந்த வழிகள் அனைத்தையும் அடைத்துவிடும். போதைப் பொருட்களை ஒழிப்பதற்கும் இஸ்லாம் இந்த வழிமுறையைக் கடைபிடிக்கின்றது.

குடிகாரர்களுக்கு தண்டனை தருவதால் மட்டும் போதைப் பொருட்களை அழித்துவிட முடியாது. போதைப் பொருட்களை முற்றிலுமாக அழித்தல் அவை நாட்டுக்குள் ஊடுறவிடாமல் தடுத்தல் இவை பரவுவதற்கு காரணமாக உள்ள அனைவரையும் தண்டித்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலமே போதைப் பொருட்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும்.

போதைப் பொருளுடன் சம்பந்தப்படக்கூடிய அனைவரையும் குற்றவாளிகள் என்று இஸ்லாம் கூறுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ் மதுவையும் அதைப் பருகக்கூடியவன் அதைப் பரிமாறக்கூடியவன் அதை விற்பவன் வாங்குபவன் அதைத் தயாரிப்பவன் தயாரிக்குமாறு கோருபவன் அதைச் சுமந்து செல்பவன் யாரிடம் அது கொண்டுசெல்லப்படுமோ அவன் ஆகியோரையும் சபிக்கின்றான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல் : அபூதாவுத் (3189)கேள்வி பதில்பண்பாடுகள்போதைப் பொருளுடன்அனைவரையும் குற்றவாளிகள்இஸ்லாம்அல்லாஹ்சம்பந்தப்ப

Published on: June 25, 2011, 12:14 PM Views: 2162

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top