குப்புறப்படுத்து தூங்கலாமா

வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா?

பதில்

குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளன.

இந்த அறிவிப்பாளர் தொடர் குறித்த விமர்சனம் நுணுக்கமானதாக இருந்தாலும் இதை சரியான ஹதீஸ் என்று சிலர் வாதிடுவதால் விரிவாகவே இதை விளக்குகிறோம்.

முதல் ஹதீஸ்

2692    حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ وَعَبْدُ الرَّحِيمِ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مُضْطَجِعًا عَلَى بَطْنِهِ فَقَالَ إِنَّ هَذِهِ ضَجْعَةٌ لَا يُحِبُّهَا اللَّهُ وَفِي الْبَاب عَنْ طِهْفَةَ وَابْنِ عُمَرَ قَالَ أَبُو عِيسَى وَرَوَى يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ يَعِيشَ بْنِ طِهْفَةَ عَنْ أَبِيهِ وَيُقَالُ طِخْفَةُ وَالصَّحِيحُ طِهْفَةُ وَقَالَ بَعْضُ الْحُفَّاظِ الصَّحِيحُ طِخْفَةُ وَيُقَالُ طِغْفَةُ يَعِيشُ هُوَ مِنْ الصَّحَابَةِ  رواه الترمدي

7524 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ مُضْطَجِعٍ عَلَى بَطْنِهِ فَقَالَ إِنَّ هَذِهِ لَضِجْعَةٌ مَا يُحِبُّهَا اللَّهُ عَزَّ وَجَلَّ  رواه أحمد

7698 حَدَّثَنَا أَبُو كَامِلٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا مُضْطَجِعًا عَلَى بَطْنِهِ فَقَالَ إِنَّ هَذِهِ ضِجْعَةٌ لَا يُحِبُّهَا اللَّهُ  رواه أحمد

ஒருமனிதர் தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருப்பதை நபியவர்கள் பார்த்தார்கள். இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்  அபூ ஹூரைரா (ரலி)

நூல் திர்மிதி (2692)  அஹ்மது (7524, 7698)

திர்மிதி, மற்றும் அஹ்மதில் முதல் மூன்று அறிவிப்பாளர்கள் பின்வருபவர்கள் ஆவர்.

நபியவர்களிடமிருந்து அபூ ஹூரைரா (ரலி)

அபூ ஹூரைராவிடமிருந்து அபூ ஸலமா

அபூ ஸலமாவிடமிருந்து முஹம்மது பின் அமர்

இந்த அறிவிப்பாளர் வரிசையில் வருவது ஸஹீஹானது ஆதாரப்பூர்வமானது - கிடையாது என இமாம் புகாரி அவர்கள் கூறுகின்றனர்.

  (التاريخ الصغير - (ج 1 / ص 152)

682 - وقال محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم نحوه ولا يصح

நபியவர்களிடமிருந்து அபூ ஹூரைரா (ரலி)., அபூ ஹூரைராவிடமிருந்து அபூ ஸலமா  , அபூ ஸலமாவிடமிருந்து முஹம்மது பின் அமர்  என்ற அறிவிப்பாளர் வரிசையில் வருவது ஸஹீஹானது கிடையாது என இமாம் புகாரி கூறியுள்ளார்கள்

நூல்  தாரீகுஸ் ஸகீர்  (பாகம்  1 பக்கம் 152)

التاريخ الكبير - (ج 4 / ص 365)

3167 - طخفة الغفاري له صحبة وقال محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم ولا يصح   وقال لنا أحمد بن الحجاج نا عبد العزيز بن محمد عن محمد بن عمرو بن حلحلة الديلي عن محمد بن عمرو بن عطاء عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم ولا يصح أبو هريرة

நபி (ஸல்)- அபூ ஹூரைரா முஹம்மத் பின் அம்ர் பின் அதா முஹம்மத் பின் அம்ர் பின் ஹல்ஹலா அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் என்ற அறிவிப்பாளர் வரிசையில் அஹ்மத் பின் ஹஜ்ஜாஜ் என்பவர் எங்களுக்கு அறிவித்தார் என இமாம் புகாரி அவர்கள் குறிப்பிட்டு விட்டு (குப்புறப் படுப்பது தொடர்பான செய்தி ) அபூ ஹூரைரா வழியாக அறிவிக்கப்படுவது ஸஹீஹானது கிடையாது என்று குறிப்பிட்டார்கள்.

நூல்  தாரீகுல் கபீர் (பாகம்  4 பக்கம் 365)

புகாரி இமாம் அவர்கள் இதற்கான காரணத்தைக் கூறவில்லை. இமாம் இமாம் அபூ ஹாத்தம் அவர்கள் காரணத்துடன் தமது இலலுல் ஹதீஸ் என்ற நூலில் இதை விளக்கியுள்ளானர்.

علل الحديث - (ج 2 / ص 233)

 

 

 

2186- وَسَأَلْتُ أَبِي عَنْ حَدِيثٍ ؛ رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ بِرَجُلٍ مُضْطَجِعٍ عَلَى بَطْنِهِ ، فَقَالَ : هَذِهِ ضِجْعَةٌ لا يُحِبُّهَا اللَّهُ. قَالَ أَبِي : لَهُ عِلَّةٌ.قُلْتُ : وَمَا هُوَ ؟ قَالَ : رَوَاهُ ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنْ خَالِهِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : دَخَلْتُ أَنَا ، وَأَبُو سَلَمَةَ عَلَى ابْنِ طَهْفَةَ ، فَحَدَّثَ عَنْ أَبِيهِ ، قَالَ : مَرَّ بِي وَأَنَا نَائِمٌ عَلَى وَجْهِي ، وَهُوَ الصَّحِيحُ.

 

 

 

2187- وَسَأَلْتُ أَبِي عَنْ حَدِيثٍ ؛ رَوَاهُ عَبْدُ الْعَزِيزِ الدَّرَاوَرْدِيُّ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ الدُّؤَلِيِّ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ الْعَامِرِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَأَنَا مُنْكَبٌّ عَلَى وَجْهِي نَائِمٌ فَأَقْرَعَنِي ، ثُمَّ قَالَ : هَذِهِ ضِجْعَةٌ يَبْغَضُهَا اللَّهُ.قَالَ أَبِي : إِنَّمَا هُوَ مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ ، عَنِ ابْنِ طَخْفَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : مَرَّ بِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم.

 

 

குப்புறப்படுப்பது தொடர்பாக அபூ ஹூரைரா வழியாக அறிவிக்கப்படும் செய்தியைப் பற்றி என்னுடைய தந்தை அபூ ஹாதிமிடம் நான் கேட்டபோது அதில் குறையுள்ளது என்று கூறினார்கள்

நான் அது என்ன? என்று கேட்டேன். (குப்புறப்படுப்பது தொடர்பாக) தஹ்ஃபா அவர்களிமிடமிருந்து அவருடைய மகன் இப்னு தஹ்ஃபா அறிவிப்பது தான் சரியானது எனக் குறிப்பிட்டார்கள்.  (எண் 2186)

என்னுடைய தந்தையிடம் (குப்புறப் படுப்பது தொடர்பாக) அபூ ஹூரைரா வழியாக அறிவிக்கப்படுவது பற்றி கேட்டேன் அதற்கவர்கள்.

(குப்புறப்படுப்பது தொடர்பாக) தஹ்ஃபா அவர்களிமிடமிருந்து அவருடைய மகன் இப்னு தஹ்ஃபா வழியாக முஹம்மத் பின் அம்ர் என்பார் அறிவிப்பது தான் சரியானது எனக் குறிப்பிட்டார்கள்.   (எண் 2187)

நூல்  இலலுல் ஹதீஸ் பாகம்  2 பக்கம்  233)

நுணுக்கமான குறைபாடு

மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களில் யாரும் நம்பிக்கை குறைவானவர்கள் அல்ல.. அனைவருமெ நமபகமானவர்கள் தான். ஆனாலும் அறிவிப்பாளர் குறித்து எந்தக் குறைபாடும் இல்லாமல் இருந்தும் இதை சரியானது அல்ல என்று புகாரி இமாம், அபூஹாதம் இமாம் ஆகியோர் கூறியிருப்பது ஏன் என்பதை நாம் விளங்கிக் கொள்ல வேண்டும்.

ஹதீஸ்களில் அறிவிப்பாளரின் நினைவாற்றல் நம்பகத்தனமை தொடர்பு அறுந்துள்ளமை போன்ற காரணங்களால் ஹதீஸ்கள் பலவீனமாக ஆகின்றன என்பதை நாம் பரவலாக அறிந்துள்ளோம். இது அல்லாத நுணுக்கமான காரணங்களாலும் சில ஹதீஸ்கள் பலவீனமடையும். அது போன்ற பலவீன்ங்களை இல்ல் என்று ஹதீஸ்கலையில் வகைப்படுத்தியுள்ளனர். இந்த வகையிலான் நுணுக்கமான பலவீனங்களை கூறும் நூல்கள் இலல் அல்ஹதீஸ் எனப்படும்.

مقدمة ابن الصلاح (ص: 52)

 اعلم : أن معرفة علل الحديث من أجل علوم الحديث وأدقها وأشرفها وإنما يضطلع بذلك أهل الحفظ والخبرة والفهم الثاقب وهي عبارة عن أسباب خفية غامضة قادحة فيه  ( 53 ) فالحديث المعلل هو : الحديث الذي اطلع فيه على علة تقدح في صحته مع أن ظاهرة السلامة منها  ويتطرق ذلك إلى الإسناد الذي رجاله ثقات الجامع شروط الصحة من حيث الظاهر  ويستعان على إدراكها بتفرد الراوي وبمخالفة غيره له مع قرائن تنضم إلى ذلك تنبه العارف بهذا الشأن على إرسال في الموصول أو وقف في المرفوع أو دخول حديث في حديث أو وهم واهم بغير ذلك بحيث يغلب على ظنه ذلك فيحكم به أو يتردد فيتوقف فيه . وكل ذلك مانع ممن الحكم بصحة ما وجد ذلك فيه  وكثيرا ما يعللون الموصول بالمرسل مثل : أن يجيء الحديث بإسناد موصول ويجيء أيضا بإسناد منقطع أقوى من إسناد الموصول ولهذا اشتملت كتب علل الحديث على جمع طرقه

இல்ல் அல்ஹ்தீஸ் எனும் கலை தான் ஹதீஸ் கலையில் மிக நுணுக்கமானதாகும். இதை கூர்மையான அறிவுள்ளவரும், ஏராளமான ஹதீஸ்களை மனனம் செய்தவரும் தான் புரிந்து கொள்வார்கள். ஒரு ஹதீஸை மட்டும் பார்க்காமல் அது பற்றி வந்துள்ள மொத்த ஹதீஸ்கள் எத்தனை? அனைத்தும் ஒரே மாதிரி அமைந்துள்ளனவா? சிறு சிறு வேறுபாடுகள் உள்ளனவா? என்று நுணுக்கமாக ஆராய்ந்து கண்டுபிடிக்கும் குறைபாடுகளே இலல் எனப்படும்.

குப்புறப்படுப்பது குறித்த அனைத்து ஹதீஸ்களையும் திரட்டி வைத்துக் கொண்டு ஆராயும் போது முஹம்மத் பின் அம்ர் என்பார் இப்னு துஹ்பா வழியாகவும் இப்னு துஹ்பா என்பார் தனது தந்தை துஹ்பா வழியாகவும் அறிவிப்பதாக ஏராளமான அறிவிப்புகள் உள்ளன.

ஆனால் ஒரே ஒரு அறிவிப்பில் மட்டும் முஹம்மத் பின் அம்ர் என்பார் அபூஹுரைராவிடமிருந்து அறிவிப்பதாக உள்ளது.

அனைத்து அறிவிப்புகளையும் ஆய்வு செய்த இல்ல் துறையில் விற்பண்ணர்களான் அபூஹாத்தம் புகாரி போன்றவர்கள் குப்புறப்படுப்பது குறித்த ஹதீஸை அபூஹுரைரா வழியாக முஹம்மத் பின் அம்ர் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று கண்டறிந்து இது பலவீனமானது என்று முடிவு செய்கின்றனர். ஆனால் முஹம்மத் பின் அமர் என்பார் துஹ்பா என்பார் வழியாக அறிவிக்கும் ஹதீஸை அறிவிக்கவே வாய்ப்பு உள்ளது என்று முடிவுக்கு வருகின்றனர்.

(இலல் சம்மந்தமாக தனியாக விரைவில் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியிட உள்ளோம். அது வரை இந்த அளவுக்கு சுருக்கமாகப் புரிந்து கொள்வதே போதுமானது.)

இரண்டாவது ஹதீஸ்

எந்த ஹதீஸை முஹம்மத் பின் அமர் என்பார் துஹ்பா என்பாரிடமிருந்து அறிவிக்க் வாய்ப்பு உள்ளதாக மேற்கண்ட இமாம்கள் கருதுகிறார்களோ அந்த ஹதீஸ் இது தான்.

22510 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ ابْنِ إِسْحَاقَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ عَنْ يَعِيشَ بْنِ طِخْفَةَ الْغِفَارِيِّ عَنْ أَبِيهِ قَالَ ضِفْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَنْ تَضَيَّفَهُ مِنْ الْمَسَاكِينِ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي اللَّيْلِ يَتَعَاهَدُ ضَيْفَهُ فَرَآنِي مُنْبَطِحًا عَلَى بَطْنِي فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ لَا تَضْطَجِعْ هَذِهِ الضِّجْعَةَ فَإِنَّهَا ضِجْعَةٌ يَبْغَضُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ  رواه أحمد

தஹ்பா அல்கிபாரி (ரலி) அறவிக்கிறார்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் விருந்தளித்த ஏழைகளில் நானும் ஒருவனாக விருந்தில் கலந்து கொண்டேன். தமது விருந்தினரைக் கவனிக்க நபிகள் நாயகம் ஸல அவர்கள் வந்த போது நான் வயிற்றின் மீது அதாவது குப்புற படுத்து இருப்பதைப் பார்த்தார்கள். தமது காலால் என்னை உசுப்பிவிட்டார்கள். நீ இவ்வாறு படுக்காதே. இது அல்லாஹ்வுக்குப் பிடிக்காத படுக்கும் முறையாகும் என்றார்கள்.

அறிவிப்பவர் : துஹ்பாவின் மகன் எயீஷ்

நூல் :அஹமத் 25510

துஹ்பாவின் மகனிடமிருந்து இதைக் கேட்டு அறிவிப்பவர் முஹம்மத் பின் அமர் ஆவார். இவரைப் போலவே இன்னும் பலர் இந்த ஹதீஸை துஹ்பா வழியாக அறிவித்திருப்பதாலும் இவரும் துஹ்பா வழியாக அறிவித்திருப்பதாலும் இது தான் சரியானது. இவர் அபூஹுரைரா வழியாக அறிவிப்பதாக வருவது சரியான அறிவிப்பு அல்ல.

அப்படியானால் அபூஹுரைரா ரலி வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ் தானே பலவீனமானது? இந்த ஹதீஸ் பலவீனமானது அல்லவே? இந்த ஹதீஸ் அடைப்படையில் குப்புறப்படுக்க்க் கூடாது என்று கூறலாமா  என்ற கேள்வி எழலாம்.

ஆனால் இந்த ஹதீஸ் வேறு காரணங்களால் பலவீனமடைகின்றது. அதாவது இந்த ஹதீஸை அறிவுக்கும் பலர் பலவாறாக முரண்பட்டு அறிவிக்கின்றனர். அதாவது இள்திராப் எனும் குழப்பம் இதில் அதிகமாக உள்ளது.

அந்த ஹதீஸ்களில் சிலவற்றை பார்ப்போம்.

4383 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ يَعِيشَ بْنِ طَخْفَةَ بْنِ قَيْسٍ الْغِفَارِيِّ قَالَ كَانَ أَبِي مِنْ أَصْحَابِ الصُّفَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْطَلِقُوا بِنَا إِلَى بَيْتِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَانْطَلَقْنَا فَقَالَ يَا عَائِشَةُ أَطْعِمِينَا فَجَاءَتْ بِحَشِيشَةٍ فَأَكَلْنَا ثُمَّ قَالَ يَا عَائِشَةُ أَطْعِمِينَا فَجَاءَتْ بِحَيْسَةٍ مِثْلِ الْقَطَاةِ فَأَكَلْنَا ثُمَّ قَالَ يَا عَائِشَةُ اسْقِينَا فَجَاءَتْ بِعُسٍّ مِنْ لَبَنٍ فَشَرِبْنَا ثُمَّ قَالَ يَا عَائِشَةُ اسْقِينَا فَجَاءَتْ بِقَدَحٍ صَغِيرٍ فَشَرِبْنَا ثُمَّ قَالَ إِنْ شِئْتُمْ بِتُّمْ وَإِنْ شِئْتُمْ انْطَلَقْتُمْ إِلَى الْمَسْجِدِ قَالَ فَبَيْنَمَا أَنَا مُضْطَجِعٌ فِي الْمَسْجِدِ مِنْ السَّحَرِ عَلَى بَطْنِي إِذَا رَجُلٌ يُحَرِّكُنِي بِرِجْلِهِ فَقَالَ إِنَّ هَذِهِ ضِجْعَةٌ يُبْغِضُهَا اللَّهُ قَالَ فَنَظَرْتُ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  رواه أبوداد

நூல்  அபூதாவூத் (4383)

14993 حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ يَعِيشَ بْنِ طِخْفَةَ بْنِ قَيْسٍ الْغِفَارِيِّ قَالَ كَانَ أَبِي مِنْ أَصْحَابِ الصُّفَّةِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِمْ فَجَعَلَ الرَّجُلُ يَنْقَلِبُ بِالرَّجُلِ وَالرَّجُلُ بِالرَّجُلَيْنِ حَتَّى بَقِيتُ خَامِسَ خَمْسَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْطَلِقُوا فَانْطَلَقْنَا مَعَهُ إِلَى بَيْتِ عَائِشَةَ فَقَالَ يَا عَائِشَةُ أَطْعِمِينَا فَجَاءَتْ بِحَشِيشَةٍ فَأَكَلْنَا ثُمَّ جَاءَتْ بِحَيْسَةٍ مِثْلَ الْقَطَاةِ فَأَكَلْنَا ثُمَّ قَالَ يَا عَائِشَةُ اسْقِينَا فَجَاءَتْ بِعُسٍّ فَشَرِبْنَا ثُمَّ جَاءَتْ بِقَدَحٍ صَغِيرٍ فِيهِ لَبَنٌ فَشَرِبْنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ شِئْتُمْ بِتُّمْ وَإِنْ شِئْتُمْ انْطَلَقْتُمْ إِلَى الْمَسْجِدِ فَقُلْتُ لَا بَلْ نَنْطَلِقُ إِلَى الْمَسْجِدِ قَالَ فَبَيْنَا أَنَا مِنْ السَّحَرِ مُضْطَجِعٌ عَلَى بَطْنِي إِذَا رَجُلٌ يُحَرِّكُنِي بِرِجْلِهِ فَقَالَ إِنَّ هَذِهِ ضِجْعَةٌ يَبْغُضُهَا اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فَنَظَرْتُ فَإِذَا هُوَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا هَاشِمٌ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ يَعْنِي شَيْبَانَ حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ أَخْبَرَنِي يَعِيشُ بْنُ طِخْفَةَ بْنِ قَيْسٍ عَنْ أَبِيهِ وَكَانَ أَبُوهُ مِنْ أَهْلِ الصُّفَّةِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا فُلَانُ انْطَلِقْ بِهَذَا مَعَكَ فَذَكَرَ مَعْنَاهُ   رواه أحمد

முஸ்னத் அஹமத் 14993

22512 حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ يَعِيشَ بْنِ طِخْفَةَ الْغِفَارِيِّ قَالَ كَانَ أَبِي مِنْ أَصْحَابِ الصُّفَّةِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِمْ فَجَعَلَ يَنْقَلِبُ الرَّجُلُ بِالرَّجُلِ وَالرَّجُلَيْنِ حَتَّى بَقِيتُ خَامِسَ خَمْسَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْطَلِقُوا فَانْطَلَقْنَا مَعَهُ إِلَى بَيْتِ عَائِشَةَ فَقَالَ يَا عَائِشَةُ أَطْعِمِينَا فَجَاءَتْ بِحَشِيشَةٍ فَأَكَلْنَا ثُمَّ جَاءَتْ بِحَيْسَةٍ مِثْلِ الْقَطَاةِ فَأَكَلْنَا ثُمَّ قَالَ يَا عَائِشَةُ اسْقِينَا فَجَاءَتْ بِعُسٍّ فَشَرِبْنَا ثُمَّ جَاءَتْ بِقَدَحٍ صَغِيرٍ فِيهِ لَبَنٌ فَشَرِبْنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ شِئْتُمْ بِتُّمْ وَإِنْ شِئْتُمْ انْطَلَقْتُمْ إِلَى الْمَسْجِدِ فَقُلْنَا لَا بَلْ نَنْطَلِقُ إِلَى الْمَسْجِدِ قَالَ فَبَيْنَا أَنَا فِي الْمَسْجِدِ مُضْطَجِعًا عَلَى بَطْنِي إِذَا رَجُلٌ يُحَرِّكُنِي بِرِجْلِهِ فَقَالَ إِنَّ هَذِهِ ضِجْعَةٌ يَبْغَضُهَا اللَّهُ فَنَظَرْتُ فَإِذَا هُوَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا هَاشِمٌ يَعْنِي ابْنَ الْقَاسِمِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ يَعْنِي شَيْبَانَ عَنْ يَحْيَى يَعْنِي ابْنَ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ أَخْبَرَنِي يَعِيشُ بْنُ قَيْسِ بْنِ طِخْفَةَ عَنْ أَبِيهِ وَكَانَ أَبُوهُ مِنْ أَهْلِ الصُّفَّةِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا فُلَانُ انْطَلِقْ بِهَذَا مَعَكَ وَذَكَرَ مَعْنَاهُ  رواه أحمد

முஸ்னத் அஹ்மத் 22512

இந்த ஹதீஸ் இன்னும் பல நூல்களில் இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள முரண்படுகள ஏராளம் என்று தஹ்தீபுல் கமால் ஆசிரியர் ஒரு பட்டியலே போட்டுள்ளார்.

تهذيب الكمال - (ج 13 / ص 375)

 ( من اسمه طخفة وطرفة وطريف )

 2959 - بخ د س طخفة بن قيس الغفاري صحابي له حديث واحد في النهي عن النوم على بطنه رواه يحيى بن أبي كثير وفيه عنه اختلاف طويل عريض

 فقيل عنه د س عن أبي سلمة بن عبد الرحمن عن يعيش بن طخفة بن قيس عن أبيه

وقيل عنه س ق عن أبي سلمة عن يعيش بن قيس بن طخفة عن أبيه

 وقيل عنه بخ عن أبي سلمة عن بن طخفة عن أبيه

وقيل عنه س عن محمد بن إبراهيم بن الحارث التيمي عن عطية بن قيس عن أبيه وهو وهم

 وقيل عنه س عن محمد بن إبراهيم عن بن ليعيش بن طغفة

وفي نسخة بن طخفة عن أبيه

وقيل عنه س عن بن لقيس بن طغفة

وفي نسخة بن طخفة عن أبيه من غير ذكر لأبي سلمة ولا لمحمد بن إبراهيم بينهما

وقيل عنه ق عن قيس بن طهفة عن أبيه من غير ذكر لأحد بينه وبين قيس

ورواه يعقوب بن حميد بن كاسب ق عن إسماعيل بن عبد الله هو بن أبي أويس عن محمد بن نعيم المجمر عن أبيه عن طهفة عن أبي ذر وهو قول منكر لا نعلم أحدا تابعه عليه

 وفيه اختلاف غير ذلك اقتصرنا منه على ما ذكره هؤلاء الأئمة روى له البخاري في الأدب وأبو داود والنسائي وبن ماجة

முரண் ஒன்று

துஹ்பா என்ற நபித்தோழர் பற்றி குறிப்பிடும் போது

ஒருவர் طخفة என்கிறார்

இன்னொருவர் طهفة என்கிறார்

மற்றொருவர் طغفة என்கிறார்

முரண் இரண்டு

துஹ்பா என்பவர் கைஸின் மகன் என்று சிலரும்

கைஸின் தந்தை என்று வேறு சிலரும் அறிவித்துள்ளனர்.

முரண் மூன்று

எயீஷ் என்பார் துஹ்பாவின் மகன் என்று ஒருவர் கூறுகிறார்.

இன்னொருவர் எயீஷ் என்பார் கைசின் மகனும் துஹ்பாவின் பேரனுமாவார் என்கிறார்.

இது குறித்து ஒவ்வொருவரும் அறிவிப்பாளர் வரிசையும் ஒவ்வொரு விதமாக உள்ளதைக் கீழே காண்க

முதல் தொடர்

1-கைஸ்

2-துஹ்பா

3- எயீஷ்

4- அபூசலமா பின் அப்துர்ரஹ்மான்

5-யஹ்யா பின் அபீ கஸீர்

இரண்டாம் தொடர்

1-துஹ்பா

2-கைஸ்

3- எயீஷ்

4- அபூசலமா பின் அப்துர்ரஹ்மான்

5-யஹ்யா பின் அபீ கஸீர்

மூன்றாவது தொடர்

1-துஹ்பா

2-துஹ்பாவின் மகன்

3- அபூசலமா பின் அப்துர்ரஹ்மான்

4-யஹ்யா பின் அபீ கஸீர்

நான்காவது தொடர்

1-கைஸ்

2-அவரது மகன் அதிய்யா

3- முஹம்மத் பின் இப்ராஹீம்

4-யஹ்யா பின் அபீ கஸீர்

ஐந்தாவது தொடர்

1-துஹ்பா

2-எயீஷின் மகன்

3- முஹம்மத் பின் இப்ராஹீம்

4-யஹ்யா பின் அபீ கஸீர்

ஆறாவது தொடர்

1-துஹ்பா

2-துஹ்பாவின் மகன்

3-யஹ்யா பின் அபீ கஸீர்

ஏழாவது தொடர்

1-துஹ்பா

2-அவரது மகன் கைஸ்

3- யஹ்யா பின் அபீ கஸீர்

இப்படி பலவாறாக முரண்பட்டு அறிவிக்கப்படும் இந்த ஹதீஸில் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் மட்டும் சரியாகக் குறிப்பிடப்படுகிறார். மற்ற பெயர்கள் அனைத்திலும் குழப்பம் உள்ளது. எனவே யஹ்யா பின் அபீகஸீர் தான் இப்படி மாற்றி மாறிக் கூறுகிறார். இதன் காரணமாக இந்த ஹதீஸ் பலவீனமாகிறது.

(நூல்  தஹ்தீபுல் கமால் பாகம்  13 பக்கம் 375)

இந்த அறிவிப்புகள் குழப்பமானவை என்று பல அறிவிப்பாளர்கள் பற்றிய விமர்சன நூற்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு செய்பவர்களுக்காக அதன் அரபி மூலத்தை கீழே தந்துள்ளோம்.

إكمال الكمال - (ج 7 / ص 430)

ويعيش بن طخفة عن أبيه على اختلاف في اسم أبيه، روى حديثه يحيى بن أبي كثير.

الكاشف - (ج 1 / ص 513)

 2462 - طخفة بن قيس الغفاري له صحبة حديثه في النوم منبطحا في حديثه واسمه اضطراب د س

التاريخ الكبير - (ج 4 / ص 365)

3167 - طخفة الغفاري له صحبة

قال معاذ بن هشام حدثني أبي عن يحيى نا أبو أسامة نا يعيش بن طخفة بن قيس الغفاري عن أبيه قال وكان من أصحاب الصفة فبينا أنا مضطجع من السحر على بطني إذ رجل يحركني برجله فقال إن هذه ضجعة يبغضها الله فنظرت فإذا هو النبي صلى الله عليه و سلم

وقال لي خلف بن موسى بن خلف نا أبي نا يحيى عن أبي سلمة عن يعيش بن طخفة الغفاري أن أباه أخبره وكان من أصحاب الصفة في النوم

وقال لنا موسى عن موسى بن خلف يعيش عن طهفة حدثنا آدم نا بن أبي ذئب نا الحارث بن عبد الرحمن كنت مع أبي سلمة فأتانا بن لعبد الله بن طهفة قال أبو سلمة حدث عن أبيك قال حدثني أبي عن النبي صلى الله عليه و سلم نحوه قلت من هذا قال عبد الله بن طهفة قال هذه ضجعة يكرهها الله

وقال لي عبد الله بن محمد نا أبو عامر نا زهير بن محمد عن محمد بن عمرو بن حلحلة عن نعيم بن عبد الله المجمر عن بن طخفة الغفاري أخبرني أبي أنه ضاف النبي صلى الله عليه و سلم نحوه

وقال محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم ولا يصح

وقال لي عبيد حدثنا يونس أنا بن إسحاق عن محمد بن عمرو بن عطاء عن نعيم بن محمد عن يعيش بن طهفة ناه عن طهفة الغفاري

 وقال لي معاذ بن فضالة نا هشام عن يحيى عن أبي سلمة عن يعيش بن طخفة بن قيس الغفاري كان أبي من أصحاب الصفة ولا يصح بن قيس فيه

 وقال لنا أحمد بن الحجاج نا عبد العزيز بن محمد عن محمد بن عمرو بن حلحلة الديلي عن محمد بن عمرو بن عطاء عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم ولا يصح أبو هريرة

وقال محمد أنا عبد الله أنا هشام عن يحيى عن أبي سلمة عن يعيش بن طغفة الغفاري قال كان أبي قال أبو عبد الله طغفة خطأ أيضا

تهذيب التهذيب - (ج 5 / ص 10)

بخ د س ق (البخاري في الادب المفرد وأبي داود والنسائي وابن ماجة) طخفة (1) بن قيس الغفاري.

صحابي له حديث واحد في النهي عن النوم على البطن رواه يحيى بن أبي كثير عن أبي سلمة عن يعيش بن طحنة عن أبيه واختلف فيه على يحيى

 فقيل عنه عن قيس بن طهفة عن أبيه اختلافا كثيرا

فقيل في اسمه قيس بن طخفة وقيل طغفة بن قيس وقيل طهفة

ورواه محمد بن نعيم المجمر عن أبيه عن طهفة عن أبي ذر وهو قول منكر وفيه اختلاف كثير.

قلت: وقيل أن الحديث عن عبدالله بن طهفة قال ابن السكن اختلفوا في اسمه وكان يسكن غيفة (2) وذكره البخاري في الاوسط في فصل من مات بين الستين إلى السبعين وقال طهفة وهم واخرج ابن حبان حديثه في صحيحه من طريق الاوزاعي عن يحيى ابن أبي كثير عن أبي طغفة ابن قيس عن أبيه.

மற்றொரு ஹதீஸ்

மேலும் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து இப்னு தஹ்ஃபா அல்கிஃபாரி அறிவிப்பதாக இப்னு மாஜா (3714) ல் இடம் பெற்றுள்ளது.

3714 حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ طِخْفَةَ الْغِفَارِيِّ عَنْ أَبِي ذَرٍّ قَالَ مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُضْطَجِعٌ عَلَى بَطْنِي فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ يَا جُنَيْدِبُ إِنَّمَا هَذِهِ ضِجْعَةُ أَهْلِ النَّارِ  رواه ابن ماجة

இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றதல்ல. இந்த அறிவிப்பாளர் தொடரும் மறுக்கத் தக்கதாகும்.

تهذيب الكمال - (ج 13 / ص 375)

 ( من اسمه طخفة وطرفة وطريف )

 2959

ورواه يعقوب بن حميد بن كاسب ق عن إسماعيل بن عبد الله هو بن أبي أويس عن محمد بن نعيم المجمر عن أبيه عن طهفة عن أبي ذر وهو قول منكر لا نعلم أحدا تابعه عليه

அபூதர் வழியாக அறிவிக்கப்படும் (இப்னுமாஜா) அறிவிப்பாளர் தொடர் நிராகரிக்கத்தக்கதாகும்.எந்த ஒருவரும் இந்த அறிவிப்பாளர் வரிசையை துணைச் சான்றாகக் கொண்டதாக நான் அறியவில்லை.

நூல் தஹ்தீபுல் கமால் (பாகம்  13 பக்கம் 375)

மற்றொரு ஹதீஸ்

18654حَدَّثَنَا رَوْحٌ حَدَّثَنَا زَكَرِيَّا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ أَنَّهُ سَمِعَ عَمْرَو بْنَ الشَّرِيدِ يَقُولُ بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ وَهُوَ رَاقِدٌ عَلَى وَجْهِهِ فَقَالَ هَذَا أَبْغَضُ الرُّقَادِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ  رواه أحمد

18639   حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ عَنْ عَمْرٍو عَنِ الشَّرِيدِ أَنَّهُ سَمِعَهُ يُخْبِرُهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا وَجَدَ الرَّجُلَ رَاقِدًا عَلَى وَجْهِهِ لَيْسَ عَلَى عَجُزِهِ شَيْءٌ رَكَضَهُ بِرِجْلِهِ وَقَالَ هِيَ أَبْغَضُ الرِّقْدَةِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ  رواه أحمد

அம்ர் பின் அஸ்ஸரீத் கூறுகின்றார்  நபியவர்கள் தன்னுடைய முகம்குப்புற படுத்துக் கிடந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அப்போது இவர்தான் தூங்குபவர்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரியவர் ஆவார் என்று கூறினார்கள்.

நூல்  அஹ்மத் (18654, 18639)

இந்த செய்தியை அறிவிக்கின்ற அம்ர் பின் அஸ்ஸரீத் என்பவர் நபித் தோழர் கிடையாது. இவர் ஸஹாபாக்களுக்கு அடுத்தகாலத்தைச் சார்ந்த தாபிஈ ஆவார்.

எனவே இது அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த முர்ஸல் என்ற வகையைச் சார்ந்த செய்தியாகும். இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.

அஸ்ஸரீத் (ரலி) அவர்களிடமிருந்து தனக்கு கூறியவர் யார்? என்பதை அம்ர் பின் அஸ்ஸரீத் குறிப்பிடவில்லை. எனவே இதுவும் அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த பலவீனமான செய்தியாகும்.

மற்றொரு ஹதீஸ்

3715 حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ حَدَّثَنَا سَلَمَةُ بْنُ رَجَاءٍ عَنْ الْوَلِيدِ بْنِ جَمِيلٍ الدِّمَشْقِيِّ أَنَّهُ سَمِعَ الْقَاسِمَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ يُحَدِّثُ عَنْ أَبِي أُمَامَةَ قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ نَائِمٍ فِي الْمَسْجِدِ مُنْبَطِحٍ عَلَى وَجْهِهِ فَضَرَبَهُ بِرِجْلِهِ وَقَالَ قُمْ وَاقْعُدْ فَإِنَّهَا نَوْمَةٌ جَهَنَّمِيَّةٌ  رواه ابن ماجة

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 

பள்ளிவாசலில் தன்னுடைய முகம் குப்புற தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதரை நபியவர்கள் கடந்து சென்றார்கள். அவரை தன்னுடைய காலினால் உசுப்பினார்கள். எழுந்து அமர்வீராக. இது நரகவாசிகளுடைய தூக்கமாகும் என்று கூறினார்கள்.

நூல்  இப்னுமாஜா (3715)

இந்த செய்தி பின்வரும் அறிவிப்பாளர்களில் வரிசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது

அபூ உமாமா (ரலி)

அல்காஸிம் இப்னு அப்திர் ரஹ்மான்

அல்வலீத் பின் ஜமீல்

ஸலமா பின் ரஜா

யஃகூப் பின் ஹூமைத்

மேற்கண்ட அறிவிப்பாளர்களில் அல்வலீத் பின் ஜமீல் என்பாரும் ஸலமா பின் ரஜா என்பாரும் பலவீனமானவர்கள் ஆவர்.

குறிப்பாக அல்வலீத் பின் ஜமீல் என்பார் அல்காஸிம் இப்னு அப்திர்ரஹ்மான் வழியாக அறிவிக்கும் செய்திகள் நிராகரிக்கத்தக்கவை என இமாம் அபூ ஹாதிம் விமர்சனம் செய்துள்ளார்.

இதற்குரிய சான்றுகள் வருமாறு  

تهذيب الكمال - (ج 31 / ص 7)

6700 - بخ ت ق الوليد بن جميل بن قيس القرشي ويقال الكندي ويقال الكناني أبو الحجاج الفلسطيني يمامي الأصل روى عن القاسم أبي عبد الرحمن بخ ت ق ومكحول الشامي ويحيى بن أبي كثير  روى عنه سلمة بن رجاء ت ق وصدقة بن عبد الله السمين وأبو النضر هاشم بن القاسم ويزيد بن هارون بخ ت فق قال أبو الحسن بن البراء عن علي بن المديني الوليد بن جميل لا أعلم روى عنه غير يزيد بن هارون قلت له كيف أحاديثه قال تشبه أحاديثه أحاديث القاسم أبي عبد الرحمن ورضيه وقال أبو زرعة شيخ لين الحديث وقال أبو حاتم شيخ يروي عن القاسم أحاديث منكرة وقال أبو عبيد الآجري سألت أبا داود عن الوليد بن جميل صاحب القاسم فقال دمشقي ليس به بأس قال يزيد بن هارون ما رأيت شاميا أسن منه قال أبو داود يقال أصله فلسطيني وذكره بن حبان في كتاب الثقات وقال أبو أحمد بن عدي وهو راو له عن القاسم أبي عبد الرحمن ولم أجد له عن غير القاسم شيئا روى له البخاري في الأدب والترمذي وبن ماجة

அல்வலீத் பின் ஜமீல் வயோதிகர், ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் அபூ சுர்ஆ கூறியுள்ளார்.

இவர் வயோதிகர், அல்காஸிம் என்பாரிடமிருந்து நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என இமாம் அபூ ஹாத்திம் கூறியுள்ளார்

நூல்  தஹ்தீபுல் கமால்  பாகம் 31 பக்கம் 7

ஸலமா பின் ரஜா என்ற அறிவிப்பாளரையும் பல்வேறு இமாம்கள் குறைகூறியுள்ளனார்.

ميزان الاعتدال - (ج 2 / ص 189)

 

 

 

3395 - سلمة بن رجاء [ خ، ت، ق ] الكوفى. عن إبراهيم بن أبى عبلة وغيره. قال أبو زرعة: صدوق. وقال عباس، عن يحيى: ليس بشئ. وقال النسائي: ضعيف. وقال ابن عدى: حدث بأحاديث لا يتابع عليها،

இவர் ஒருபொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என இமாம் யஹ்யா பின் முயீன் விமர்சித்துள்ளார்.

இவர் பலவீனமானவர் என இமாம் நஸாயீ கூறியுள்ளார்.

துணைச் சான்றாக கொள்ள முடியாத ஹதீஸ்களை இவர் அறிவித்துள்ளார் என இமாம் இப்னு அதீ விமர்சித்துள்ளார்.

எனவே மேற்கண்ட அறிவிப்பும் பலவீனம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை

குப்புறப் படுப்பது வெறுப்பிற்குரியது என்ற கருத்தில் வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாக இருக்கின்ற காரணத்தினால் இவ்வாறு படுப்பது மார்க்க அடிப்படையில் தவறு என்று கூறமுடியாது.

மேலும் இந்த் ஹதீஸ் கருத்து அடிப்படையிலும் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கக் கூடியதாக உள்ளது.

கருத்தும் சரியானது அல்ல

எந்த மனிதராக இருந்தாலும் அவர் ஒரே விதமாகப் படுத்து உறங்கி எழ முடியாது. பலவிதமாகப் புரண்டு படுப்பது தான் மனிதனின் இயல்பாக உள்ளது. அவ்வாறு புரண்டு படுப்பவனுக்கு தான் குப்புறப்படுத்து இருக்கிறோம் என்பதே தெரியாது. மனிதனின் சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் தான் மார்க்கம் தலையிடும். அல்லாஹ் கேள்வி கேட்பான். மனிதனை மீறி நடக்கும் எந்தக் காரியத்துக்கும் அவன் பொறுப்பாளியாக மாட்டான். இந்த அடிப்படை பல குர்ஆன் வசனங்கள் மூலமும் நபிமொழிகள் மூலமும் அனைவரும் அறிந்து வைத்துள்ளது தான்.

மேற்க்ண்ட ஹதீஸ்களில் ஒருவர் படுக்கைக்குச் செல்லும் போது குப்புறப்படுப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்ததாக கூறப்படவில்லை. நன்றாக ஆழ்ந்து உறங்கும் போது சஹர் நேரத்தில் வந்து பார்த்து தூங்குபவரை எழுப்பி விட்டு கண்டிப்பதாக வந்துள்ளது. ஆழ்ந்து தூங்கும் போது ஒருவர் குப்புறப்படுத்தால் அது அவருக்கே தெரியாமல் நடப்பதாகும். அதை எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்க்ள் கண்டிப்பார்கள்?

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படுத்து உறங்கும் மனிதரைக் கையால் எழுப்பாமல் காலால் உதைத்து எழுப்பினார்கள் என்பது அவர்களின் நற்குணத்துக்கு மாற்றமாகத் தெரிகிறது என்பதையும் கவனிக்கும் போது இது கூடுதல் பலவீனத்தை அடைகிறது.
படுக்க ஆரம்பிக்கும் போது வலது புறமாக ஒருக்களித்து படுப்பது நபிவழியாகும். அதைப் பேணுவதன் மூலம் நன்மைகளை அடையலாம். ஒருக்களித்து படுத்தபின் புரண்டு படுத்து விட்டால் அதனால் நன்மைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. படுக்கும் போதே குப்புறப்படுத்தால் அதனால் சுன்னத்தை விட்டதால் நன்மை கிடைக்காமல் போகும். அது நரகத்துக்குக் கொண்டு செல்லும் குறற்மாக ஆகாது.
இந்த ஹதீஸின் நுணுக்கமான குறைபாடுகலைக் கவனிக்காமல் குப்புறப்படுத்து தூங்க்ஜக் கூடாது என்று முன்னர் கூறி இருந்தோம் என்பதையும் அதை மாற்றிக் கொண்டோம் என்பதையும் தகவலுக்காகப் பதிவு செய்கிறோம்

03.02.2012. 15:57

நிர்வாணமாக குளிப்பது உளூ செய்வது கூட

நிர்வாணமாக குளிப்பது உளூ செய்வது கூடுமா

கேள்வி  கடமையான குளிப்பை நிர்வாணமாக குளிப்பதும்  நிர்வாணமாக உளுச் செய்வதும் கூடுமா?

முஹம்மது நஸீர்

பதில்

ஒருவர் மற்றவரின் பார்வை படும்படி குளிக்கும் போது நிர்வாணமாகக் குளிப்பது அறவே தடுக்கப்பட்டதாகும்

3497  حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ نُفَيْلٍ حَدَّثَنَا زُهَيْرٌ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ الْعَرْزَمِيِّ عَنْ عَطَاءٍ عَنْ يَعْلَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَغْتَسِلُ بِالْبَرَازِ بِلَا إِزَارٍ فَصَعَدَ الْمِنْبَرَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَيِيٌّ سِتِّيرٌ يُحِبُّ الْحَيَاءَ وَالسَّتْرَ فَإِذَا اغْتَسَلَ أَحَدُكُمْ فَلْيَسْتَتِرْ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ عَنْ عَطَاءٍ عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْحَدِيثِ قَالَ أَبُو دَاوُد الْأَوَّلُ أَتَمُّ  رواه أبوداود

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் வெட்ட வெளியில் கீழாடை இல்லாமல் குளிப்பதைப் பார்த்தார்கள். உடனடியாக மிம்பரில் ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினார்கள். பிறகு நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படக் கூடியவனும் (தனக்கு) திரையேற்படுத்திக் கொள்பவனும் ஆவான். அவன் வெட்கத்தையும் திரையிட்டுக் கொள்வதையும் விரும்புகின்றான். உங்களில் ஒருவர் குளித்தால் அவர் திரையிட்டுக் கொள்ளட்டும்

அறிவிப்பவர்  யஃலா பின் உமைய்யா (ரலி)

நூல்  அபூதாவூத் (3497)

மேலும் ஒருவர் தனியாக குளியலறையில் குளிக்கும் போதும் சரி அல்லது தனிமையில் இருக்கும் போதும் சரி தன்னுடைய அந்தரங்கத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது இறையச்சத்தின் அடையாளமாகும்.  

பின்வரும் ஹதீஸிலிருந்து இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

2693  حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ قَالَ احْفَظْ عَوْرَتَكَ إِلَّا مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ فَقَالَ الرَّجُلُ يَكُونُ مَعَ الرَّجُلِ قَالَ إِنْ اسْتَطَعْتَ أَنْ لَا يَرَاهَا أَحَدٌ فَافْعَلْ قُلْتُ وَالرَّجُلُ يَكُونُ خَالِيًا قَالَ فَاللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَجَدُّ بَهْزٍ اسْمُهُ مُعَاوِيَةُ بْنُ حَيْدَةَ الْقُشَيْرِيُّ وَقَدْ رَوَى الْجُرَيْرِيُّ عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ وَهُوَ وَالِدُ بَهْزٍ  رواه الترمدي

 

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்? யாரிடம் மறைக்க வேண்டியதில்லை?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்'' என்று சொன்னார்கள். "ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்'' என்றார்கள். "ஒருவர் தனியாக இருக்கும் போது?'' என்று நான் கேட்டதற்கு "அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)

நூல் : திர்மிதி 2693

17.01.2012. 00:06

நட்பின் இலக்கணம் என்ன

நட்பின் இலக்கணம் என்ன

நண்பர்கள் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? முகஸ்துதிக்காக பழகினால் என்ன செய்யலாம்? உண்மையான நட்பு எது?

ஹக்

பதில்

அழகிய முறையில் நட்பு கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

நூல் : முஸ்லிம் (4760)

நல்ல நண்பனைத் தேர்வு செய்வதற்கு முன்னால்

ஒரு நல்ல நண்பனை நாம் தேர்வு செய்வதற்கு முன்னால் நம்மை நாம் நல்லவனாக மாற்றிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் நம்மிடத்தில் நல்ல பண்புகள் இருந்தால் தான் நல்லவர்கள் நம்மிடம் பழகுவார்கள். இனம் இனத்தைச் சாரும் என்ற அடிப்படையில் நல்லவர்கள் நல்லவர்களுடன் தான் நட்பு வைப்பார்கள். இதனால் தான் மோசமான குணம் உள்ளவர்களிடம் அது போன்ற குணம் உள்ளவர்கள் தான் அண்டுவார்களே தவிர நற்குணம் படைத்தவர்கள் அண்டுவதில்லை. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் சுட்டிக் காட்டுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (3336)

நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுதல்

பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும் என்று கூறுவார்கள். நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய இரு உலக வாழ்க்கையும் சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகான உதாரணத்தைக் கூறி விளக்கியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)

நூல் : புகாரி (2101)

தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து நாசப்படுத்திவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலுள்ள ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். வீணர்களுடைய சகவாசத்தால் மறு உலக வாழ்கையைத் தொலைத்தவர்களின் புலம்பல்களை இறைவன் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்.

குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (74 : 45)

நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல்லி அதில் விழவிடாமல் நம்பை பாதுகாத்து விடுவான். நபிமார்கள் நல்வழியை மக்களுக்குப் போதிப்பதற்காக வந்தார்கள். அவர்களை இப்பணியில் தூண்டிவிடுவதற்காக அல்லாஹ் அவர்களுக்கென்று ஒரு நண்பரை ஏற்படுத்தியுள்ளான். நபிமார்களுக்கே நல்ல நண்பர் தேவைப்படுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் நல்லவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்க வேண்டும்.

அல்லாஹ் எந்த ஒரு இறைத்தூதரை அனுப்பினாலும் இன்னும் எந்த ஒரு ஆட்சித் தலைவரை நியமித்தாலும் அவருக்கு நெருக்கமான இரு ஆலோசகர்கள் இருப்பார்கள். ஒரு ஆலோசகர் நன்மையை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். மற்றொருவர் தீமை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : புகாரி (7198)

அல்லாஹ்விற்காக நட்புவைத்தல்

பெரும்பாலான நண்பர்கள் வீணாகப் பேசுவது, ஊர் சுற்றுவது, திரையரங்குகளுக்குச் செல்வது போன்ற தீய காரியங்களில் ஒன்றுபடுகிறார்கள். அனைவரும் அல்லாஹ்வுடைய மார்க்கம் மேலோங்குவதற்காக ஒன்று கூடுவது அரிதிலும் அரிதாகி விட்டது. இஸ்லாத்தைப் பரப்புவதற்காக அறிமுகமில்லாத பலரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தி நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவனுக்காக நட்புவைத்தவர்களுக்கு ஏராளமான சிறப்புகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்காமல் இருக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக் கொண்டார்.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) அவர்கள்

நூல் : அபூதாவுத் (4061)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் வேறொரு ஊரில் இருக்கும் தன் சகோதரனைச் சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்த போது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை (சந்திக்க) நாடிச் செல்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா என்று வானவர் கேட்டார். அதற்கு அவர் இல்லை. கண்ணியமானவனும் சங்கையானவனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான் என்று கூறினார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (4656)

என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகி விட்டது என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆத் (ரலி)

நூல் : அஹ்மத் (21114)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (4655)

உதவும் நண்பனே உண்மையான நண்பன்

நாம் வசதி வாய்ப்புகளுடன் வாழும் போது நமக்கு ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் கஷ்டங்கள் வரும் போது அனைவரும் ஓடி விடுவார்கள். இவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல. நாம் சிரமப்படும் போதும் நமக்கு உதவி செய்பவர்களே உண்மையான நண்பர்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (13)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : புகாரி (2442)

நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்

தீமையான காரியங்களில் நன்பனுக்க ஒத்துப் போவது கூடாது. நன்பன் நன்மையான காரியங்களைச் செய்ய மறந்து விட்டால் உண்மை நன்பன் அவனுக்கு ஞாபகமூட்ட வேண்டும். நண்பன் தொழ மறந்து விட்டால் இதை அவனிடத்தில் தெரியப்படுத்தி அவனை தொழ வைக்க வேண்டும். நண்பன் நல்ல காரியங்களைச் செய்தால் அவனுடன் சேர்ந்து நாமும் செயல்பட வேண்டும். பின்வரும் நபிமொழிகள் நண்பர்கள் ஒருவரையொருவர் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது.

19.04.2011. 06:35

தவ்ஹீத் ஜமாஅதினர் சொல்லியவண்னம் செய

தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆன் ஹதீஸை வாயளவில் பேசுவார்கள். ஆனால் செயல்படுத்த மாட்டார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு உண்மையா?

 

இன்ஆமுல் ஹஸன்

பதில் :

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி முழுமையான விபரம் தெரியாதவர்களே இந்தக் குற்றச்சாட்டைக் கூறியிருக்க முடியும். நமது ஜமாஅத்தைப் பற்றியும் தமிழகத்தில் தவ்ஹீது வளர்ந்த வரலாறையும் நன்கு அறிந்தவர்கள் இவ்வாறு கூற மாட்டார்கள்.

ஏனென்றால் குர்ஆன் ஹதீஸைப் பேசுவதோடு நின்றுவிடாமல் அவற்றைச் சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தி மாபெரும் புரட்சி ஏற்படுவதற்கு இந்த ஜமாஅத் தான் முழுக் காரணமாக இருந்ததுள்ளது. குர்ஆன் ஹதீஸை வாழ்க்கையில் செயல்படுத்தும் போது எத்தனை தடைகள் வந்தாலும் அந்தத் தடைகள் எத்துணை பெரியதாக இருந்தாலும் அதை எதிர்த்துப் போராடி மார்க்கத்தைச் செயல்படுத்திக் காட்டியவர்களை இந்த ஜமாஅத்தில் தான் பார்க்க முடியும்.

இதற்கு உதாரணமாகச் சில விஷயங்களை நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

1.         வரதட்சணை மற்றும் பித்அத்கள் இல்லாத நபிவழித் திருமணங்களை பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிகச் சிக்கனமான முறையில் சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தியது.

2.         பெருநாளை ஏழை எளியவர்கள் சந்தோஷமாகக் கழிப்பதற்காக நபியவர்கள் ஃபித்ரா என்ற பெருநாள் தர்மத்தை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். சமுதாயத்தில் அறவே நடைமுறையில் இல்லாமல் இருந்த நபிவழிக்கு புத்துயிரூட்டி நடைமுறைப்படுத்தியது.

3.         சமுதாயம் அறியாது இருந்த திடல் தொழுகை என்ற நபிவழியை சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தியது.

4.         பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்ற கருத்து பரவலாக முஸ்லிம்களிடம் இருந்தது. இது தவறு என்பதை உணர்த்தி நபியவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்தது போன்று தற்போது பெண்கள் இறையில்லங்களை நோக்கி வரும் நிலையை ஏற்படுத்தியது.

மார்க்கத்துடன் இளைஞர்களுக்கு அறவே சம்பந்தம் இல்லாத நிலை இருந்தது.  இந்நிலை மாறி இன்றைக்கு மார்க்கப் பணிகளில் அதிகம் ஈடுபடக்கூடியவர்களாக இளைஞர்களே உள்ளனர். மேலும் தாடி வைப்பது போன்ற நபிவழிகளை கடைப்பிடிக்கக் கூடியவர்களாக மாறியுள்ளனர்.

அதே நேரத்தில் நமது ஜமாஅத்தில் உள்ளவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் மிகச் சரியாக செயல்படுகிறார்கள் என்று நாம் கூற மாட்டோம். மனிதன் என்ற அடிப்படையில் நம்மிடமும் சில தவறுகள் குறைபாடுகள் இருப்பதை மறுக்க முடியாது.

ஆனால் மற்ற இயக்கத்துடன் மற்ற ஜமாஅத்தினருடன் நமது ஜமாஅத்தை ஒப்பிடுகையில் நற்காரியங்களில் நமது ஜமாஅத் மற்றவர்களை மிஞ்சி நிற்பதையும் மற்றவர்களிடம் உள்ள குறைகளை விட நமது ஜமாஅத்திடம் குறைகள் குறைவாக இருப்பதையும் காணலாம்.
இந்த உரையையும் கேட்கவும்
http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/sathithathu_enna/

28.02.2011. 23:12

நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாமா

நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாமா

 

சம்சுல் ஆரிஃப்

பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமான நேரங்களில் அமர்ந்தே சிறுநீர் கழித்துள்ளார்கள். எனவே நாமும் அமர்ந்தே சிறுநீர் கழிக்க வேண்டும்.

(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை.

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)

நூல்: அஹ்மத் 24604

ஆனால் சில நேரங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்துள்ளார்கள். சிறுநீர் கழிக்கக் கூடிய இடம் அசுத்தமாக இருக்குமானால் நாம் உட்கார வேண்டியதில்லை. உட்கார்ந்து இருப்பதன் நோக்கமே அசுத்தம் படக் கூடாது என்பது தான். உட்கார்ந்தால் அசுத்தம் பட்டுவிடும் என்று இருந்தால் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதே சிறந்தது. மொத்தத்தில் தூய்மை அவசியம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்.

அறிவிப்பாளர்: ஹுதைஃபா (ரலி)

நூல்: புகாரி 224

20.02.2011. 11:52

ஸலாமுக்கு முழுமையாக பதில் சொல்ல வேண்

ஸலாமுக்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டுமா

ஒருவர் சலாம் முழுமையாகச் சொன்னால் பதிலும் முழுமையாகச் சொல்ல வேண்டுமா?

மன்சூர் தம்மாம்


ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக சலாம் கூறும் போது நாமும் அவருக்கு வஅலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக சலாத்திற்கு பதில் தர வேண்டும்.

 

ஏனென்றால் நமக்கு கூறப்பட்ட முகமனையோ அல்லது அதை விட சிறந்த முகமனையோ கூறும் படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். பதிலளிப்பவரின் சலாம் முதலில் சலாம் கூறியவரின் சலாத்தைப் போன்று இருக்க வேண்டும். அல்லது அதை விடச் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا(86)4

உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் (4 : 86)

ஆதம் (அலை) அவர்கள் மலக்குமார்களுக்கு சலாம் சொன்னார்கள். மலக்குமார்கள் ஆதம் (அலை) அவர்கள் கூறிய சலாத்தை விட சிறந்த சலாத்தைக் கூறினார்கள். அந்த மலக்குமார்கள் கூறிய சலாமே முஹம்மது நபியின் சமுதாயமாகிய நாம் கூற வேண்டிய சலாமாகும்.

حدثنا يحيى بن جعفر حدثنا عبد الرزاق عن معمر عن همام عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال خلق الله آدم على صورته طوله ستون ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك النفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله فزادوه ورحمة الله فكل من يدخل الجنة على صورة آدم فلم يزل الخلق ينقص بعد حتى الآن

அல்லாஹ் ஆதமைத் தன்னுடைய உருவில் படைத்தான். அப்போது அவரது உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்த போது நீங்கள் சென்று அங்கு அமர்ந்து கொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் அது தான் உங்களது முகமனும் உங்களது சந்ததிகளின் முகமனும் ஆகும். என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று) அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் சொன்னார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (சாந்தியும் இறைவனின் கருணையும் உங்கள் மீது நிலவட்டும்) என்று வானவர்கள் பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (6227)

மேலும் பதில் சலாம் கூறுவதை நபி (ஸல்) அவர்கள் கடமை என்று கூறியுள்ளார்கள். சலாம் கூறியவர் பூரணமாக சலாம் கூறி நாம் குறைவாக பதில் சலாம் கூறினால் நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமையில் குறைவு ஏற்பட்டதாக ஆகி விடுகின்றது.

حدثنا محمد حدثنا عمرو بن أبي سلمة عن الأوزاعي قال أخبرني ابن شهاب قال أخبرني سعيد بن المسيب أن أبا هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس تابعه عبد الرزاق قال أخبرنا معمر ورواه سلامة بن روح عن عقيل          

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓரு முஸ்லிம் (இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.

1. சலாமிற்குப் பதில் சொல்லுதல்.

2. நோயாளியை நலம் விசாரித்தல்.

3. ஜனாசாவைப் பின்தொடர்ந்து செல்லுதல்.

4. அழைப்பை ஏற்றுக் கொள்ளுதல்.

5. தும்மியவருக்கு எர்ஹமுக்கல்லாஹ் என்று கூறுதல்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா  ரலி

நூல் : ( புகாரி 1240 )

حدثنا أحمد بن حنبل حدثنا عبد الرحمن بن مهدي عن سفيان عن أبي مالك الأشجعي عن أبي حازم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لا غرار في صلاة ولا تسليم قال أحمد يعني فيما أرى أن لا تسلم ولا يسلم عليك ويغرر الرجل بصلاته فينصرف وهو فيها شاك

சலாம் கூறுவதிலும் தொழுவதிலும் குறைவு வைக்கக் கூடாது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவூத் (793)

சலாம் கூறியவருக்காக இறைவனிடம் சாந்தியை வேண்டுவதுடன் இறைவனுடைய அருளையும் அபிவிருத்தியையும் சேர்த்து வேண்டினால் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

حدثنا محمد بن كثير أخبرنا جعفر بن سليمان عن عوف عن أبي رجاء عن عمران بن حصين قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم فرد عليه السلام ثم جلس فقال النبي صلى الله عليه وسلم عشر ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله فرد عليه فجلس فقال عشرون ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته فرد عليه فجلس فقال ثلاثون حدثنا إسحق بن سويد الرملي حدثنا ابن أبي مريم قال أظن أني سمعت نافع بن يزيد قال أخبرني أبو مرحوم عن سهل بن معاذ بن أنس عن أبيه عن النبي صلى الله عليه وسلم بمعناه زاد ثم أتى آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته فقال أربعون قال هكذا تكون الفضائل

''நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் '' என்று கூறினார். நபியவர்கள் அவருக்குப் பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார்.  நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ''(இவருக்கு) இருபது (நன்மைகள்)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள்)'' என்று கூறினார்கள்.''

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல் : அபூ தாவூத் (4521)

06.11.2010. 15:48

நின்றவாறு சிறுநீர் கழிக்கலாமா

நின்றவாறு சிறுநீர் கழிக்கலாமா

 

ரினூஸ்

பதில் :

அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத் தருகின்றது.

حدثنا وكيع وعبد الرحمن المعنى عن سفيان عن المقدام بن شريح عن أبيه عن عائشة قالت من حدثك أن رسول الله صلى الله عليه وسلم بال قائما بعدما أنزل عليه الفرقان فلا تصدقه ما بال قائما منذ أنزل عليه الفرقان قال عبد الرحمن في حديثه ما بال رسول الله صلى الله عليه وسلم قائما منذ أنزل عليه الفرقان
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை.

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)

நூல்: அஹ்மத் 24604

ஆனால் சில நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்துள்ளார்கள்.

சிறுநீர் கழிக்கக் கூடிய இடம் அசுத்தமாக இருக்குமானால் நாம் உட்கார வேண்டியதில்லை. உட்கார்ந்து இருப்பதன் நோக்கமே அசுத்தம் படக் கூடாது என்பது தான். உட்கார்ந்தால் அசுத்தம் பட்டுவிடும் என்று இருந்தால் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதே சிறந்தது. மொத்தத்தில் தூய்மை அவசியம்.

حدثنا آدم قال حدثنا شعبة عن الأعمش عن أبي وائل عن حذيفة قال أتى النبي صلى الله عليه وسلم سباطة قوم فبال قائما ثم دعا بماء فجئته بماء فتوضأ

 நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்.

அறிவிப்பாளர்: ஹுதைஃபா (ரலி)

நூல்: புகாரி 224

06.11.2010. 15:33

பட்டப்பெயர் வைத்து விமர்சிக்கலாமா

 

பட்டப்பெயர் வைத்து விமர்சிக்கலாமா

ஷாஹுல்

பட்டப்பெயர் சூட்டக் கூடாது; புறம் பேசக் கூடாது; ஒருவரின் குறையை அம்பலப்படுத்தக் கூடாது என்றெல்லாம் மனிதனின் மானம் மரியாதை தொடர்பாகக் கூறப்படும் ஆதாரங்களை உரிய முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களின் குறைகளை அம்பலப்படுத்தக் கூடாது என்பதன் பொருள் என்ன? மார்க்கத்துக்கோ மனித குலத்துக்கோ நன்மை தராத போது அப்படி பேசக் கூடாது என்பதே அதன் பொருள்.

மார்க்கம் என்றாலே பிறர் நலம் நாடுதல் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யாருடைய நலன் நாட வேண்டும் என்று நாங்கள் கேட்டோம்.  அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம் சமுதாயத் தலைவர்களூக்கும், முஸ்லிம் பொதுமக்களுக்கும் நலம் நாட வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் விடையளித்தார்கள்.

حدثنا محمد بن عباد المكي حدثنا سفيان قال قلت لسهيل إن عمرا حدثنا عن القعقاع عن أبيك قال ورجوت أن يسقط عني رجلا قال فقال سمعته من الذي سمعه منه أبي كان صديقا له بالشام ثم حدثنا سفيان عن سهيل عن عطاء بن يزيد عن تميم الداري أن النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم حدثني محمد بن حاتم حدثنا ابن مهدي حدثنا سفيان عن سهيل بن أبي صالح عن عطاء بن يزيد الليثي عن تميم الداري عن النبي صلى الله عليه وسلم بمثله و حدثني أمية بن بسطام حدثنا يزيد يعني ابن زريع حدثنا روح وهو ابن القاسم حدثنا سهيل عن عطاء بن يزيد سمعه وهو يحدث أبا صالح عن تميم الداري عن رسول الله صلى الله عليه وسلم بمثله

நூல் முஸ்லிம்

ஒரு மனிதருக்கு இன்னொருவர் தனது மகளை மணமுடித்துக் கொடுக்க விரும்புகிறார். அந்த மனிதர் மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளவர் என்று உங்களுக்குத் தெரிகிறது. மகளை மணமுடித்துக் கொடுப்பவர் அந்த மனிதர் பற்றி உங்களிடம் கேட்டால் யாரையும் குறை சொல்லக் கூடாது என்பதற்காக  அவர் நல்லவர் என்று சொல்ல வேண்டுமா? அல்லது அவரது குறையைச் சொல்லி அந்தப் பெண்ணின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டுமா?

ஒருவர் பண மோசடி செய்பவர் என்று உங்களுக்குத் தெரிகிறது. அவரைத் தனது நிறுவனத்தில் காசாளராக நியமிக்க எண்ணும் ஒருவர் உங்களிடம் கருத்து கேட்கிறார். அப்போது அவரது நேர்மையின்மை பற்றி தெரிவிப்பது குறை கூறுவதில் சேருமா?

ஒருவர் பொது வாழ்வில் பண மோசடி செய்பவர் என்று உங்களுக்குத் தெரிகிறது. அவர் ஏதோ ஒரு பணியைச் சொல்லி நிதி திரட்டுகிறார். மக்கள் அவரை நம்பி பணம் கொடுத்தால் அது அந்தப் பணிக்கு பயன்படாது என்று தெரிந்தால் அவர் ஒரு பிராடு பேர்வழி என்று சமுதாயத்தை எச்சரிப்பது அவரது மானத்துடன் விளையாடியதாக ஆகாது.

அது போல் ஹதீஸ்கள் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாத காலத்தில் வாய் மொழியாக அறிவிப்பதை வைத்தே ஹதீஸ்கள் கிடைத்து வந்த காலத்தில் அதை அறிவிப்பவரின் நாணயம் நேர்மை நல்லொழுக்கம் போன்றவைகளை வைத்தே அவர் சொல்வது உண்மையா என்று அறியும் நிலை இருந்தது. அந்தக் கால கட்டத்தில் அறிவிப்பாளரிடம் குறை இருந்தால் அதை வெளிப்படுத்தி அவர் அறிவிக்கும் ஹதீஸ்களை நிராகரிக்காவிட்டால் பொய்களெல்லாம் ஹதீஸ்களாகிப் போய் மார்க்கம் சிரழிந்திருக்குமே? இது பரவாயில்லையா?

உங்கள் மீது ஒருவர் பொய்யாக வழக்குப் போட்டு பொய் சாட்சிகளையும் தயார்படுத்துகிறார். வழக்கு நடக்கும் போது அந்தப் பொய்யர் சொன்ன பொய்களைப் பட்டியல் போடாவிட்டால் நீங்கள் பொய்யராகவும் குற்றவாளியாகவும் ஆகி விடுவீர்கள். இப்படித்தான் நடப்பீர்களா?

மேற்கண்டது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் ஒருவரது குறைகளை அம்பலப்படுத்தினாலும் அதில் உங்களுக்கு நன்மை இருக்கும். அல்லது மற்றவருக்கு நன்மை இருக்கும். அல்லது மார்க்கத்துக்கு நன்மை இருக்கும் என்பதால் அது அனுமதிக்கப்பட்டது என்று புரிந்து கொள்ளவேண்டும்.

அது போல் கடந்த காலங்களில் கெட்டவர்களாக வாழ்ந்தவர்களுக்கு ஏற்பட்ட விளைவுகளைச் சொல்லி மக்களூக்கு எச்சரிப்பதும் இதில் சேராது. இதனால் தான் ஃபிர் அவ்னைப் பற்றியும் அபூஜஹ்ல் பற்றியும் பேசுகிறோம்.

நாம் வாழும் காலத்தில் நமக்கு அநீதி இழைப்பவர்கள் குறித்து சமுதாயத்தை எச்சரிப்பதற்காக அரசியல் வாதிகளின் தவறுகளை அம்பலப்படுத்துகிறோம்.

ஒருவரது பொருளை இன்னொருவர் திருடுவதை நாம் கண்டால் அவனைப் பிடித்துக் கொடுக்க வேண்டுமா? குறைகளை மறைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு கண்டும் காணாமல் இருக்க வேண்டுமா? நான் யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு பெண்மணி நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் கேட்ட போது அந்த நபர்களின் குறைகளை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வெளிப்படுத்தியதை பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.

حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك عن عبد الله بن يزيد مولى الأسود بن سفيان عن أبي سلمة بن عبد الرحمن عن فاطمة بنت قيس أن أبا عمرو بن حفص طلقها البتة وهو غائب فأرسل إليها وكيله بشعير فسخطته فقال والله ما لك علينا من شيء فجاءت رسول الله صلى الله عليه وسلم فذكرت ذلك له فقال ليس لك عليه نفقة فأمرها أن تعتد في بيت أم شريك ثم قال تلك امرأة يغشاها أصحابي اعتدي عند ابن أم مكتوم فإنه رجل أعمى تضعين ثيابك فإذا حللت فآذنيني قالت فلما حللت ذكرت له أن معاوية بن أبي سفيان وأبا جهم خطباني فقال رسول الله صلى الله عليه وسلم أما أبو جهم فلا يضع عصاه عن عاتقه وأما معاوية فصعلوك لا مال له انكحي أسامة بن زيد فكرهته ثم قال انكحي أسامة فنكحته فجعل الله فيه خيرا واغتبطت

நூல் முஸ்லிம்

உங்களில் நேர்மையான இருவரை சாட்சியாக்குங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.(65:2) ஒருவர் நேர்மையாளரா என்று ஆய்வு செய்யும் போது அவருடைய குறை நிறைகள் வெளியே வந்து தீரும்.

இது போல் தான் கீழக்கரையைச் சேர்ந்த ஒருவர் நம்மைப் பொய்யர் என்று பலருக்கும் பரப்பிக் கொண்டிருக்கும் போது அவரை அடையாளம் காட்டா விட்டால் நாம் பொய்யர் என்ற கருத்து பதிந்துவிடும். அதைத் தடுக்கும் உரிமை எமக்கு உண்டு.

அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:148

நம்முடைய இது போன்ற எந்த விமர்சனமும் எதிரிகளின் விமர்சனத்துக்கு பதில் என்ற முறையில் தான் இருக்கும். இதற்கு நமக்கு அனுமதி உண்டு.ஒருவரது குறைகளை அம்பலப்படுத்துவதால் மேற்கண்ட நன்மைகள் ஏதும் இல்லாமலோ பதிலடி என்ற முறையில் இல்லாமலோ ஒருவரை இழிவு ப்டுத்தும் வகையில் இருந்தால் அல்லது பொய்யான வாதங்கள் இருந்தால் அது தான் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

கீழைப் பொய்யர் என்பது பட்டப்பெயர் அல்ல. கீழக்கரையைச் சேர்ந்த பொய் சொல்பவர் என்பது ஒரு விமர்சனம் தான்.

10.03.2010. 23:02

பொறுமையின் எல்லை என்ன?

 

பொறுமையின் எல்லை என்ன?

இஸ்லாத்தில் எந்த அளவு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்?

முஹம்மத் இஸ்மாயீல்

பொறுமை என்பது இரு வகைப்படும்.

ஒன்று அல்லாஹ் நமக்குத் தரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது. நூறு சதவிகிதம் இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். துன்பத்தை முறையிட்டாலும் அழுதாலும் அல்லாஹவை விமர்சிக்காமல் இருந்தால் நாம் பொறுமையைக் கடைபிடித்தவர்களாவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அழுதுள்ளனர்.

ஆனால் மனிதர்கள் நமக்கு அநியாயம் செய்யும் போது பொறுமை காக்க வேண்டுமென்பது கட்டாயம் அல்ல.

நாம் விரும்பினால் பதில் நடவடிக்கையில் இறங்கலாம். விரும்பினால் மன்னிக்கலாம். மன்னிப்பதே சிறந்தது.

பினவரும் வசனங்களை வாசிக்கவும்

உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:194

போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்'' என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன்22:39

இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) யாரேனும் தாம் துன்புறுத்தப்பட்டது போல் (அதற்குக் காரணமானவர்களைத்) துன்புறுத்தும் போது அதற்காக அவர் மீது மீண்டும் அநீதி இழைக்கப்பட்டால் அல்லாஹ் அவருக்கு உதவுவான். அல்லாஹ் மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.

திருக்குர்ஆன்22:60

அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன்4:148

 தீமையின் கூலி அது போன்ற தீமையே. மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநீதி இழைத்தோரை விரும்ப மாட்டான்.. தமக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் யார் உதவி பெறுகிறாரோ அவருக்கு எதிராக எந்த வழியும் இல்லை.மக்களுக்கு அநீதி இழைத்து நியாயமின்றி பூமியில் வரம்பு மீறுவோருக்கு எதிராகவே குற்றம் பிடிக்க வழி உண்டு. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.

திருக்குர்ஆன்42:40-43

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். "அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன்24:22

08.03.2010. 16:52

குப்புறப் படுத்து தூங்கலாமா?

குப்புறப் படுத்து தூங்கலாமா?

ஆண்கள் குப்புறப் படுத்துத் தூங்கக் கூடாது என்றும் பெண்கள் நிமிர்ந்து படுத்துத் தூங்கக் கூடாது என்றும் கூறுகின்றார்களே! இதற்கு ஹதீஸ் ஆதாரம் உள்ளதா?

எம். அபூபக்ர், திருமங்கலக்குடி

நான் ஸஹர் நேரத்தில் மஸ்ஜிதில் குப்புறப்படுத்துக் கிடக்கும் போது, ஒருவர் காலால் என்னை அசைத்து, இது அல்லாஹ்வை கோபம் கொள்ளச் செய்யும் படுக்கையாகும்'' என்று கூறினார். நான் (விழித்துப்) பார்த்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: யயீஸ் பின் தஹ்ஃபா பின் கைஸ் அல்கிஃபாரி (ரலி)

நூல் : அபூதாவூத் (5040)

இந்த ஹதீஸின் அடிப்படையில் குப்புறப் படுப்பதற்குத் தடை உள்ளது. ஆனால் பெண்கள் நிமிர்ந்து படுப்பதற்குத் தடை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பொதுவாக நபி (ஸல்) அவர்கள் வலதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.

நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், யா அல்லாஹ்! நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன்' என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகி விடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆஸிப் (ரலி)

நூல் : புகாரி (247)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வலது புறமாக ஒருக்களித்துப் படுப்பது நபிவழி என்பதை அறியலாம். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதாகும்.

மருத்துவ சோதனை, மருத்துவரின் ஆலோசனை போன்ற காரணங்கள் இருந்தால் அல்லது குப்புறப்ப்டுக்கும் தேவை இருந்தால் அது இவர்களைக் கட்டுப்படுத்தாது.

மேலும் ஒருக்களித்து படுத்த பின் தூக்கத்தில் ஒருவர் இயல்பாக குப்புறப்படுத்தால் அதையும் கட்டுப்படுத்தாது.

19.01.2010. 16:08

சுய இன்பம் கூடுமா?

சுய இன்பம் கூடுமா?
ஃபாஸில் ரஹ்மான்

காம உணர்வு மேலோங்கும் போது சுயமாக விந்தை வெளியேற்றுவது சுய இன்பம் எனப்படுகிறது. பரவலாக இளைஞர்களிடம் இந்த வழக்கம் காணப்படுகிறது.

இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா என்ற சர்ச்சை நடந்து வருகிறது.

இமாம் அஹ்மத் பின் ஹம்பல், இப்னு ஹஸ்ம் போன்ற மிகச் சிறந்த அறிஞர்கள் இவ்வாறு செய்வது குற்றம் அல்ல என்று கூறியதை அடிப்படையாகக் கொண்டு ஹராமை ஹலாலாக்கும் கொள்கையுடைய யூசுப் கர்ளாவி போன்றவர்கள் இது ஹலால் என்று பத்வா கொடுப்பதால் எவ்வித உறுத்தலும் இல்லாமல் இதைச் சில இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் விபச்சாரத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிர்பந்தத்தைத் தான் காரணம் காட்டுகின்றனர்.

ஆனால் திருக்குர்ஆனும், நபிவழியும் இவர்களின் கருத்துக்கு எதிராகவே அமைந்துள்ளன.

தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.. இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.

திருக்குர்ஆன் 23:5,6,7

ஆண்கள் தமது மனைவியர் மூலம் அல்லது அடிமைப் பெண்கள் மூலம் தவிர மற்ற வழிகளில் கற்பைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றும், இவ்விரு வழிகளில் தவிர மற்ற வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்வோர் பழிக்கப்பட்டவர்கள் என்றும் வரம்பு மீறியவர்கள் என்றும் இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன. இப்போது அடிமைப் பெண்கள் இல்லாததால் மனைவியர் மூலம் தவிர வேறு வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்வது வரம்பு மீறிய குற்றம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போது ஏற்படுவது போலவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும் இருந்தது. இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்று வழியையும் நமக்குச் சொல்லித் தந்துள்ளனர்.

1905 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புஹாரி 1905,

5066 அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று சொன்னார்கள்.

புஹாரி 5066

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆட்சியின் துவக்க காலத்தில் காணப்பட்ட வறுமை போல் இனி ஒரு காலத்தில் வறுமை ஏற்பட முடியாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சம் பழம் கூட கிடைக்காத் – ஒரு ஆடைக்கு மறு ஆடை இல்லாத- அளவுக்கு அந்த வறுமை இருந்தது. பலருக்கு பள்ளிவாசலே வீடாக இருந்தது.

இந்த நிலையில் தான் திருமணம் செய்வதற்கான மஹர் இன்ன பிற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நபித்தோழர்களிடம் ஒன்றுமில்லாததால்  திருமணம் செய்ய முடியாத நிலையில்
பலர் இருந்தனர். அவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள நோன்பு எனும் ஆயுதத்தைக் கையில் எடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

சுய இன்பம் செய்ய அனுமதி இருந்தால் அதைச் சொல்ல வேண்டிய பொருத்தமான இடம் இது தான். ஆனால் அவ்வாறு கூறாமல் நோன்பு நோற்று உணர்வுகளைக் கட்டுப்படுத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி விட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய இந்த வழியை விட சுய இன்பம் விபச்சாரத்தைத் தடுக்கக் கூடியதாக இருக்காது. உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பயிற்சி இல்லாமல் இப்படி நடந்து கொள்பவர்கள் வாட்ப்புக் கிடைத்தால் விபச்சாரத்தில் எளிதில் விழுவதற்குத் தான் இது வழி வகுக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் போர் செய்வதற்காக வெளியே செல்லும் போது மனைவியர் இல்லாததால் விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று நபித்தோழர்கள் அஞ்சினார்கள். எனவே அவர்கள் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர்.

5071 இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? எனறு கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.

புஹாரி 5071

5075 கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம், (ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா? என்று கேட்டோம். அவ்வாறு செய்ய வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணமுடித்துக் கொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்:

இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. (5:87)14

புஹாரி 5075

குறைந்த மஹரைக் கொடுத்தாவது திருமணம் தான் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

சுய இன்பம் என்பது விபச்சாரமாகவே நபித்தோழர்களால் கருதப்பட்டதால் தான் எந்த நபித்தோழரும் சுய இன்பம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாகக் காண முடியவில்லை.

மார்க்கத்தில் இது தடை செய்யப்பட்டது என்றாலும் விபச்சாரத்தில் விழுந்து விடாமல் தற்காத்துக் கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டால் இவ்வாறு செய்யலாமா? என்று சிலர் வாதிடுகின்றனர். இவ்வாறு வாதிடுவது தவறாகும்.

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிகள் இல்லாவிட்டால் தான் நிர்பந்தம் என்பது ஏற்படும்.

நபித்தோழர்களுக்காவது திருமணம் முடிக்கும் வசதிகள் இல்லாமல் இருந்தது. இன்று அத்தகைய நிலை இல்லை. மேலும் குறைந்த மஹருக்கு வாழ்க்கைப்பட பெண்கள் காத்திருக்கிறார்கள். இளைஞர்கள் தக்க வயது வந்த பின்பும் பொருந்தாத காரணம் கூறி திருமணத்தைத் தள்ளிப் போட்டு விட்டு அதை நிர்பந்தம் என்று சொல்ல முடியாது.

மேலும் வெளி நாட்டுக்குச் சென்று பல வருடங்கள் தங்கினால் இல்லற இன்பம் கிடைக்காது என்பது சாதாரணமாக அனைவருக்கும் தெரியும். தெரிந்து கொண்டே இந்த நிலையை நாமாக தலையில் போட்டுக் கொண்டால அது நிர்பந்தம் ஆகாது.

ஒரு ஊரில் பன்றி தவிர வேறு ஒன்றும் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. கண்டிப்பாக பன்றியைத் தான் சாப்பிடும் நிலை ஏற்படும் என்று தெரிந்தால் அந்த ஊருக்குச் சென்று பன்றியைச் சாப்பிடுவது நிர்பந்த நிலையில் சேராது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர் ஆன் 2:173

மேலும் பார்க்க 5:3, 6:145, 16:115,

வலியச் செல்லாத நிலையில் இருந்தால் தான் அது நிர்பந்தம். நாமாக வலியச் சென்று அந்த நிலையை நாமே ஏற்படுத்திக் கொண்டால் அது நிபந்தம் இல்லை என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

மேலும் இது விபச்சாரத்தைத் தடுக்காது. தூண்டவே செய்யும் என்பதயும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சரி குடும்ப நிலை காரணமாக வெளிநாடு வந்து விட்டு மனைவியின் துணை இல்லாமல் இருக்கிறோம். அந்த நிலையில் இது போன்ற கெட்ட எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள முடியாதா? நிச்சயம் முடியும்.

இந்த நிலை ஏன் ஏற்படுகிறது? விபச்சாரத்தைத் தூண்டும் சினிமாக்கள், பாலியல் காட்சிகளின் வீடியோக்கள் மற்றும் ஆபாசக் காட்சிகளை எவ்வித உறுத்தலும் இன்றிப் பார்ப்பது தான் இதற்கு முதல் காரணமாக உள்ளது. பொதுவாகவே இது தவிர்க்கப்பட வேண்டியவை என்றாலும் மனைவியின் துணை இன்றி இருக்கும் போது அதிகம் தவிர்க்கப்பட வேண்டும். இது போன்ற காட்சிகளைப் பார்ப்பது நம்மைத் தீய செயலில் தள்ளும் என்று உணர வேண்டும்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழிமுறையில் நோன்பு நோற்று கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

தனிமையாக இருப்பதால் இது போன்ற எண்ணம் ஏற்பட்டால் நல்ல நண்பர்களுடன் சேர்ந்து தங்குவதன் மூலம் தீய எண்ணத்தை மாற்றலாம். வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுச் சேவைகளில் ஈடுபடுவதன் மூலமும் இது போன்ற செயலை விட்டு ஒழிக்கலாம்.

இப்படி சுய இன்பம் செய்த பின் ஒரு அழகான பெண்ணுடன் தனித்திருக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அப்போது கட்டுப்பாடாக இருக்க சுய இன்பப்பழக்கம் நிச்சயம் உதவவே செய்யாது. நோன்பு நோற்று நல்லொழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டால் அது நிச்சயம் விபச்சாரத்தில் இருந்து காப்பற்றும்.

இதையும் மீறி உடலில் ரொம்ப முறுக்கு ஏறி விட்டால் தூக்கத்தில் ஸ்கலிதமாவதன் மூலம் அதற்கு அல்லாஹ் இயற்கையாக வடிகாலை அமைத்துள்ளான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது போன்ற செயலில் கடந்த காலத்தில் ஈடுபட்டவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்ள வேண்டும்.

09.01.2010. 16:30

விவாதத்தில் ஆபாசம் தேவையா

விவாதத்தில் ஆபாசம் தேவையா
களியக்காவிளையில் நடைபெற்ற விவாதம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது. அதில் நீங்கள் விவாதம் செய்த சில தலைப்புகள் மிகவும் ஆபாசமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. அதைத் தவிர்த்து இருக்கலாமே
?

தொடர்ந்து படிக்க 15.08.2009. 10:57

குடிப்பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் கூறு

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு இஸ்லாம் காட்டும் வழி என்ன? இத்தகையவர்கள் உலகில் அதிகமாக இருக்கும் போது இவர்கள் அனைவரையும் தண்டிப்பதால் தீர்வு கிடைத்துவிடுமா?

பதில்

ஒரு தீமை பல வழிகளில் பரவ வாய்ப்பு இருந்தால் இஸ்லாம் அந்த வழிகள் அனைத்தையும் அடைத்துவிடும். போதைப் பொருட்களை ஒழிப்பதற்கும் இஸ்லாம் இந்த வழிமுறையைக் கடைபிடிக்கின்றது.

குடிகாரர்களுக்கு தண்டனை தருவதால் மட்டும் போதைப் பொருட்களை அழித்துவிட முடியாது. போதைப் பொருட்களை முற்றிலுமாக அழித்தல் அவை நாட்டுக்குள் ஊடுறவிடாமல் தடுத்தல் இவை பரவுவதற்கு காரணமாக உள்ள அனைவரையும் தண்டித்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலமே போதைப் பொருட்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும்.

போதைப் பொருளுடன் சம்பந்தப்படக்கூடிய அனைவரையும் குற்றவாளிகள் என்று இஸ்லாம் கூறுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ் மதுவையும் அதைப் பருகக்கூடியவன் அதைப் பரிமாறக்கூடியவன் அதை விற்பவன் வாங்குபவன் அதைத் தயாரிப்பவன் தயாரிக்குமாறு கோருபவன் அதைச் சுமந்து செல்பவன் யாரிடம் அது கொண்டுசெல்லப்படுமோ அவன் ஆகியோரையும் சபிக்கின்றான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல் : அபூதாவுத் (3189)

25.06.2011. 01:44

வலது கையால் சாப்பிடும் போது இடது கைய

வலது கையால் சாப்பிடும் போது இடது கையால் தண்ணீர் அருந்தலாமா?

ஃபைரோஸ்

சாப்பிடுவதற்கும் பருகுவதற்கும் வலது கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இக்காரியங்களை இடது கையால் செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக் கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக் கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால் தான் உண்கிறான்; இடக் கையால் தான் பருகுகிறான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் (4108)

3764 عَنْ جَدِّهِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் யாரும் இடக் கையால் உண்ண வேண்டாம்; இடக் கையால் பருக வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால் தான் உண்கிறான்; இடக் கையால் தான் பருகுகிறான்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் (3764)

வலது கையின் உட்புறத்தில் உணவு ஓட்டியிருக்கும் போது தண்ணீர் பாத்திரத்தை வலக் கையால் எடுத்தால் கையில் உள்ள உணவு தண்ணீர் பாத்திரத்தின் மீது படும் நிலை ஏற்படும்.

இதைத் தவிர்ப்பதற்காக இடது கையால் அந்தப் பாத்திரத்தை எடுத்து வலது கையின் மேற்புறத்தின் மீது அதை வைத்துப் பருகிக் கொள்ளலாம். பருகிய பிறகு இடது கையால் அந்தப் பாத்திரத்தை எடுத்து கீழே வைத்து விடலாம். இவ்வாறு செய்வது மேற்கண்ட நபிமொழிக்கு மாற்றமாகாது.

ஒரு பாத்திரத்தை இரண்டு கைகளால் பிடித்தால் தான் சுலபமாகப் பருக முடியும் என்றால் இந்நேரத்தில் வலது கையைப் பிரதானக் கருவியாகவும் இடது கையை துணைக் கருவியாகவும் கருதி இரண்டையும் பயன்படுத்தலாம். இதில் தவறேதுமில்லை.

14.06.2011. 12:27

நான் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து விட்

நான் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து விட்டேன். எனக்கு மன்னிப்பு உண்டா?

 

பதில்

ஒரு பாவத்தைச் செய்து திருந்தி விட்டால் அந்தப் பாவத்தை பிறரிடம் பகிரங்கப்படுத்தக் கூடாது என மார்க்கம் கூறுகின்றது.

6069 حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ ابْنِ أَخِي ابْنِ شِهَابٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ أُمَّتِي مُعَافًى إِلَّا الْمُجَاهِرِينَ وَإِنَّ مِنْ الْمُجَاهَرَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلًا ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللَّهُ عَلَيْهِ فَيَقُولَ يَا فُلَانُ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்து விட்டிருக்க, "இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்'' என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்து விட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான்

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (6069)

பொதுவாக ஆணும் பெண்ணும் தவறிழைப்பவர்களாகவே உள்ளனர். ஒழுக்க விஷயங்களிலும் இந்தத் தவறுகள் ஏற்படவே செய்கின்றன.

திருமணத்துக்கு முன்பு தன் வாழ்க்கைத் துணையாக வருபவரிடம் இந்தத் தவறுகளை வெளிப்படுத்தினால் பெரும்பாலும் யாரும் திருமணத்துக்கு உடன்பட மாட்டார்கள். இதனால் பலருக்குத் திருமணமே ஆகாத நிலை ஏற்படும்.

அப்படியே உடன்பட்டாலும் ஒரு நெருடல் அவருடைய மனதில் இருந்து கொண்டே இருக்கும். நாளடைவில் இதுவே குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகக் காரணமாகலாம்.

எனவே ஒருவர் தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி திருந்தி விட்டால் அவர் அத்தவறை செய்யாதவரைப் போன்றவராகி விடுகின்றார். இத்தவறைப் பிறரிடம் வெளிப்படுத்தாமல் இருப்பதே நல்லது.

விபச்சாரம் செய்தவருக்குத் தண்டனை என்பது இஸ்லாமிய அரசாங்கம் இருந்தாலே அத்தண்டனையை நிறைவேற்றும். இந்தியாவில் இஸ்லாமிய அரசு இல்லை என்பதால் இதற்கான தண்டனையை இங்கு நிறைவேற்ற முடியாது.

அதே நேரத்தில் இந்தப் பாவத்தை மன்னிப்பதும் மன்னிக்காமால் தண்டிப்பதும் இறைவனுடைய நாட்டத்தைப் பொறுத்து உள்ளது. எனவே நீங்கள் இந்தத் தவறுக்காக இறைவனிடம் அதிகமாக மன்னிப்புக் கேளுங்கள்.

18 حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ عَائِذُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ شَهِدَ بَدْرًا وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ لَيْلَةَ الْعَقَبَةِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ بَايِعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلَا تَسْرِقُوا وَلَا تَزْنُوا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ وَلَا تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ وَلَا تَعْصُوا فِي مَعْرُوفٍ فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَفَا عَنْهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ فَبَايَعْنَاهُ عَلَى ذَلِك رواه البخاري

உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, "அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்க மாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரிய மாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்ய மாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்கரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்ற சொன்னார்கள்.உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

நூல் : புகாரி (18)

10.06.2011. 06:22




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
106 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி