நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்

நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்

ஒருவா் நோன்பு நோற்றுக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபட்டால் நோன்பின் நிலை என்ன?

நாளிர்

இச்சை மேலாங்கும் போது சுயமாக விந்தை வெளியேற்றுவதே சுய இன்பம் எனப்படுகிறது.

வழிகெட்ட சலபிக் கூட்டத்தை தவிர மற்ற அனைவரிடமும் சுய இன்பம் கொள்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட பாவமான செயலாகும்.

வழிகெட்ட சலபிக் கும்பல் காமக்களியாட்டத்துக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்பதை அறிய

http://www.adiraitntj.com/2013/02/blog-post_24.html 

அதற்கான விபரத்தை அறிய இதை க்ளிக் செய்து வாசிக்கவும். சுய இன்பம் கூடாது என்பதற்கான ஆதாரங்களை அறிந்து கொள்ள கீழ்க்காணும் ஆக்கத்தைப் பார்க்கவும்

http://onlinepj.com/kelvi_pathil/panbadukal_kelvi/suya_inbam_kuduma/

நோன்பு என்பது சுப்ஹ் முதல் மக்ரிப் வரை  உண்ணாமல் பருகாமல் இருப்பதோடு இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்வதுமாகும். இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் "நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ (ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) "எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலிலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறுகிறான்)

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 1894

இந்த அடிப்படையில் தான் நோன்பு கால கட்டத்தில் பகல் நேரங்களில் மனைவியுடன் உறவு கொள்வதும் தடுக்கப்படுகிறது.

நோன்பு என்பது இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்வது தான் எனும் போது சுய இன்பம் கொண்டு இச்சையைத் தீா்த்துக் கொள்வது எப்படி நோன்பாகும்?

நோன்பு நோற்றுக் கொண்டு ஹலாலான வழிமுறையிலேயே (மனைவியுடன் உறவு கொண்டு) இச்சையைத் தணிக்க கூடாது என்றால் தடை செய்யப்பட்ட ஹராமான சுய இன்பம் மூலமாக இச்சையைத் தணிப்பது அறவே கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!

அறிவிப்பவா் அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1903

வெறுமனே உண்ணாமல் பருகாமல் இருப்பது மாத்திரம் நோன்பல்ல தீய நடவடிக்கைகளை முற்றிலுமாக விட்டொழிப்பது தான் நோன்பின் நோக்கம் என்று இந்த நபிமொழி உணா்த்துகின்றது. எனவே ஒருவா் நோன்பு நோற்றுக் கொண்டு இது போன்ற செயலில் ஈடுபட்டால் அது நோன்பாகவே ஆகாது. அல்லாஹ்விடத்தில் அதற்கு எந்த கூலியையும் பெற முடியாது.நோன்பாளிசுய இன்பம்இச்சைதீய நடவடிக்கைகூலி இல்லை

Published on: April 20, 2013, 10:26 AM Views: 20618

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top