உபரியான நோன்புக்கு சஹர் உணவு அவசியமா

உபரியான நோன்புக்கு சஹர் உணவு அவசியமா  

உபரியான நோன்பு நோற்க சஹர் உணவு உட்கொள்வது அவசியம் இல்லை என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் உள்ளது என்று ஒரு நண்பர் கூறுகிறார். அப்படியே அவர் கடிப்பிடித்தும் வருகிறார்.அப்படி ஹதீஸ் உள்ளதா

தொடர்ந்து படிக்க May 26, 2011, 2:31 PM

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோ�

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா? 

ஷஃபீக்

பதில் :

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை நோற்காமல் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது

தொடர்ந்து படிக்க March 12, 2011, 12:47 PM

நாளின் ஆரம்பம் எது?

நாளின் ஆரம்பம் எது? உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா   

கேள்வி பிறையை பல வருடத்திற்கு முன்கூட்டியே கணித்து விடலாம் என்றும், சுபுஹுடைய நேரம் தான் நாளுடைய ஆரம்பம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமை கோஷம் கூறும் கூட்டத்தை அவர்கள் குறிவைத்து செயல்படுகிறார்கள். பிறை முன்கூட்டியே தெரிந்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும் அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள்.

தொடர்ந்து படிக்க July 12, 2010, 2:33 AM

ஆறு நோன்பு

ஆறு நோன்பு
ஆறு நோன்பு வைப்பது நபி வழியா?
ரமலான் முடிந்த உடன் தொடர்ந்து தான் வைக்க வேண்டுமா?
ஷவ்வால் மாதத்தில் எப்போது வேண்டுமனாலும் வைக்கலாமா?
இங்கே கிளிக் செய்யவும்

September 17, 2009, 9:23 PM

நோன்பை தாமதமாக திறத்தல்

நோன்பை தாமதமாக திறத்தல் நோன்பு நேரங்களில் சூரியன் மறையக் கூடிய நேரத்தை விஞ்ஞானக் கணிப்பு மூலம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் சில நிமிடங்கள் முன் பின்னாக முரண்பட்டுக் கூறுகின்றனர். இதனால் பேணுதலுக்காக சில நிமிடங்கள் கூடுதலாக்கி நோன்பைத் திறக்கலாமா?

தொடர்ந்து படிக்க August 12, 2009, 10:21 PM

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்ற

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா

'கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்' என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதற்கான நேரடியான எந்த ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை. ஆனால் நோன்பை விட்டு விடலாம்; மீட்டத் தேவையில்லை' என்ற கருத்தில் நபித்தோழர்கள் கூறிய செய்தி தாரகுத்னீ, தப்ரானீ போன்ற நூற்களில் உள்ளது. இந்த விளக்கம் இல்லையென்றால் தங்களின் விளக்கத்தை ஏற்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் மேற்கண்ட ஹதீஸைத் தாங்கள் புரிந்து கொண்டு விளக்கியதை விட நபித்தோழர்களின் கூற்று பொருத்தமான விளக்கமாகத் தோன்றுகிறது. இது குறித்து விளக்கவும்.

தொடர்ந்து படிக்க March 20, 2010, 11:50 PM

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்பட

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா ? ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா?

தொடர்ந்து படிக்க January 21, 2011, 7:09 PM

ஆஷூராவுக்கு பல நிலைபாடுகள்

ஆஷூராவுக்கு பல நிலைபாடுகள்

ஆஷூராப்பற்றிய ஹதீஸில், ஒரு ஹதீஸ் ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததாகவும் , மற்றொரு ஹதீஸில் நான் அடுத்த வருடம் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்றும் கூரியுள்ளர்கள் ! அப்படியென்றால் நபி (ஸல்) அவர்கள் ஒரு வருடம் தான் ரமலான் நோன்பையும் வைத்துள்ளார்கள் என்று அர்த்தம் வருமே ? ஆனால் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதலே ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டு விட்டதே ? விளக்கம் தரவும்.

தொடர்ந்து படிக்க December 14, 2010, 1:22 PM

அரபா நோன்பு உண்டா

அரபா நோன்பு உண்டா அரபா நாளை குறித்து அந்த நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றாத மற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும் அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். இங்கு அந்த நாள் என்பது ஹாஜிகள் அரபா மைதானத்தில் கூடியிருக்கும் அந்த நாளை தான் குறிக்கும் என்று கூறப்படுகிறது ஆனால் நீங்கள், நமக்கு எப்பொழுது பிறை ஒன்பது வருகிறதோ அன்று தான் அரபாவுடைய நாள் என்று கூறி அன்று நோன்பு வைக்க சொல்கிறீர்கள் .

தொடர்ந்து படிக்க December 13, 2010, 5:18 PM

வியாழக்கிழமை நோன்பு வைக்கலாமா?

வியாழக்கிழமை நோன்பு வைக்கலாமா?

கேள்வி

வாரத்தில் திங்கள் வியாழன் ஆகிய இருநாட்கள் நோன்பு வைப்பது நபிவழி. வியாழக்கிழமை மட்டும் நோன்பு வைக்கலாமா? அல்லது திங்கள் வியாழன் ஆகிய இரண்டு நாட்களிலும் தான் நோன்பு நோற்க வேண்டுமா?

ராஜா முஹம்மத்

தொடர்ந்து படிக்க December 12, 2011, 7:36 PM

சுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத்

சுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத் அவசியமா

சுப்ஹுக்கு முன் தீர்மானிக்காவிட்டால் நோன்பாகாது என்ற ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா?

முஹம்மத் ஸபீர்

தொடர்ந்து படிக்க January 8, 2012, 10:49 PM

இலங்கை பிறைக் குழப்பம்

இலங்கை பிறைக் குழப்பம்

இலங்கையைச் சேர்ந்த சிலர் பிறை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு தவறு என்றும் ஆதாரமற்றவை என்றும் ஹதீஸ்கலை பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு ஞானம் இல்லை என்றும் ஆணவமாகவும், தலைக்கனம் கொண்டும் சில வாதங்களை முன்வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அவை நம்முடைய கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது அதில் பதில் சொல்லத்தக்க அளவுக்கு ஒரு விஷயமும் இல்லை என்று நாம் கருதியதால் அதை அலட்சியப்படுத்தி விட்டோம். ஆனால் இலங்கையைச் சேர்ந்த சகோதரர் நாம் இதற்கும் பதில் கொடுத்தால் அது இலங்கை தாவாவுக்கு உதவும் என்று கேட்டுக் கொண்டதன்படி அதற்கான விளக்கம் இங்கே வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து படிக்க March 15, 2012, 9:27 PM

பிறை மறுப்புக்கு மறுப்பு

பிறை மறுப்புக்கு மறுப்பு

பிறை விஷயத்தில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் சமுதாயத்தில் நிலவுகின்றன. வேறு எந்த மார்க்கச் சட்டத்திலும் இந்த அளவுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படவில்லை.

ஒவ்வொருவரும் தன் மனதுக்குத் தெரிந்ததை மக்களிடம் சொல்லி குழப்பி வருகின்றனர். தன்னுடைய அறிவுக்குப் படுவதையெல்லாம் ஏற்காமல் நபிமொழியில் இருப்பதை மட்டும் ஒருவர் நம்பினால் அவர் குழப்பம் அடைய மாட்டார். தற்போது சிலர் புதிதாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு

ரமளான் மாதத்தின் துவக்கத்தை முடிவு செய்வதற்காக ஷஃபான் மாதத்தின் 30 வது இரவில் பிறை பார்ப்போம். அன்று பிறை தென்பட்டுவிட்டால் ஷஃபான் மாதத்தை 29 நாட்களாகக் கருதி அப்போதிருந்தே ரமளான் மாதம் துவங்கிவிடும். அன்று பிறை தென்படாவிட்டால் அன்றைய நாளை ஷஃபான் மாதத்தின் 30 வது நாளாகக் கணக்கிட்டு அதற்கு மறுநாளிலிருந்து ரமளான் மாதம் தொடங்கும்.

நமது ஜமாஅத் இந்த நிலைபாட்டில் இருந்து வருகின்றது. இந்த நிலைபாட்டிற்கு மாற்றமான கருத்தை இன்றைக்கு சிலர் புதிதாக கூறுகின்றனர். அதாவது ஷஃபான் மாதத்தின் முப்பதாவது இரவில் பிறை தென்படாவிட்டால் ஷஃபான் மாதத்தை 29 நாட்களாக முடிவு செய்ய வேண்டும். அன்றிலிருந்தே ரமளான் மாதத்தை துவங்கிவிட வேண்டும் என்று கூறுகின்றனர்.

பிறை தொடர்பாக வந்துள்ள அனைத்து ஹதீஸ்களையும் கவனத்தில் கொண்டால் இந்தக் கருத்து முற்றிலும் தவறானது என்பதை அறியலாம். இந்தக் கட்டுரையில் இவர்கள் வைக்கும் ஒவ்வொரு வாதங்களுக்கும் ஹதீஸ் ஆதாரங்களுடன் பதில் தருகிறோம்.

இப்படிப்பட்ட தவறான கருத்தை வைப்பவர்கள் முவத்தா, முஸ்லிம் ஆகிய இரு நூற்களை மட்டும் – அதுவும் மூலத்தில் இருந்து படிக்காமல் மொழி பெயர்ப்புகளைப் - படித்துவிட்டு அரைகுறையாக ஆய்வு செய்துள்ளனர். மற்ற ஹதீஸ் நூற்களைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. இவ்வாறு செய்யப்பட்ட ஆய்வு எப்படி சரியான ஆய்வாக இருக்க முடியும்?

தவறான வாதம்

557حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ فَقَالَ لَا تَصُومُوا حَتَّى تَرَوْا الْهِلَالَ وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ رواه مالك

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிறையை நீங்கள் காணாதவரை நோன்பு நோற்க வேண்டாம். பிறையை நீங்கள் காணாத வரை நோன்பை விட வேண்டாம். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் அதை கணித்துக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : மாலிக் (557)

இந்த ஹதீஸில் கணித்துக் கொள்ளுங்கள் என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் ஃபக்துரூ லஹு என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. இந்த வார்த்தைக்கு இவர்கள் 29 நாட்களாகக் குறைத்து பூர்த்தியாக்குங்கள் என்று பொருள் செய்கின்றனர்.

கதர என்ற சொல்லுக்கு குறைத்தல் என அர்த்தம் இருக்கின்றது என்று கூறி இதற்கு ஆதாரமாக சில குர்ஆன் வசனங்களையும் மேற்கோள் காட்டுகின்றனர்.

நமது பதில்

முதலில் 29 நாட்களாக என்ற வாசகம் ஹதீஸில் இல்லவே இல்லை. கதர என்ற வார்த்தைக்கு குறைத்தல் என்ற பொருள் இருந்தாலும் குறைத்து பூர்த்தியாக்குங்கள் என்று இவர்கள் கூறும் அர்த்தம் அறவே இல்லை. குறைத்தல் என்ற பொருள் மட்டுமே உள்ளது. பூர்த்தியாக்குங்கள் என்பது இவர்களாகச் சேர்த்துக்கொண்டது.

ஒரு வார்த்தைக்கு பல பொருட்கள் இருந்தாலும் குறிப்பிட்ட இடத்தில் அதன் பொருள் என்ன என்பதை இடம் பொருள் ஏவலை வைத்து முடிவு செய்ய வேண்டும்.

இந்த அடிப்படையில் கதர என்ற வார்த்தைக்கு குறைத்தல் என்ற பொருள் இருந்தாலும் இந்த அர்த்தம் இந்த ஹதீஸில் அறவே பொருந்தாது. கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்ற அர்த்தம் மட்டுமே இங்கே பொருந்தக்கூடியதாகும்.

ஏனென்றால் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இதே அறிவிப்பு முஸ்லிமில் இதற்கு தெளிவுதரும் வகையில் இடம்பெற்றுள்ளது.

1796 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ فَضَرَبَ بِيَدَيْهِ فَقَالَ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا ثُمَّ عَقَدَ إِبْهَامَهُ فِي الثَّالِثَةِ فَصُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ ثَلَاثِينَ و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا ثَلَاثِينَ نَحْوَ حَدِيثِ أَبِي أُسَامَةَ و حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَضَانَ فَقَالَ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا وَقَالَ فَاقْدِرُوا لَهُ وَلَمْ يَقُلْ ثَلَاثِينَ رواه مسلم

உங்களுக்கு மேக மூட்டம் ஏறபட்டால் முப்பதாக கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : முஸ்லிம்

இந்த அறிவிப்பிலும் ஃபக்துரரூ லஹு என்ற சொல் தான் உள்ளது. இச்சொல்லுடன் முப்பது நாட்களாக என்ற சொல் இனைத்து கூறப்படுகிறது. இவர்கள் சொல்லக் கூடியவாறு பொருள் செய்வதாக இருந்தால் முப்பது நாட்களாக குறைத்துக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்ய வேண்டும். அப்படி பொருள் செய்தால் அது மூளைக் கோளாறு உள்ளவர்களின் உளறலாகத்தான் இருக்க முடியும்.

இது மட்டுமின்றி நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக வந்துள்ள அறிவிப்பில் ஃபக்துரு என்ற சொல்லுக்குப் பகரமாக அக்மிலூ இந்தத்த ஷஃபான் சலாசீன (ஷஃபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பதாக முழுமை செய்யுங்கள்) என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

இந்த வாசகம் ஃபக்துரு என்பதின் சரியான பொருளைச் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்திவிட்டது.

1909حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِينَ  رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (1019)

இதே அறிவிப்பு முஸ்லிமில் 1810 வது அறிவிப்பாக இடம்பெற்றுள்ளது. இதில் உத்தூ சலாசீன் (முப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்} என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

1810و حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غُمِّيَ عَلَيْكُمْ الشَّهْرُ فَعُدُّوا ثَلَاثِينَ رواه مسلم

மேலும் திர்மிதியில் 624 வது இலக்கத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் முப்பது நாட்களாக முழுமைப் படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

624حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَصُومُوا قَبْلَ رَمَضَانَ صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ حَالَتْ دُونَهُ غَيَايَةٌ فَأَكْمِلُوا ثَلَاثِينَ يَوْمًا وَفِي الْبَاب عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي بَكْرَةَ وَابْنِ عُمَرَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ رواه الترمذي

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில் உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நஸாயீ கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2087أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ شَبِيبٍ أَبُو عُثْمَانَ وَكَانَ شَيْخًا صَالِحًا بِطَرَسُوسَ قَالَ أَنْبَأَنَا ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ حُسَيْنِ بْنِ الْحَارِثِ الْجَدَلِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ أَنَّهُ خَطَبَ النَّاسَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ فَقَالَ أَلَا إِنِّي جَالَسْتُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَاءَلْتُهُمْ وَإِنَّهُمْ حَدَّثُونِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ وَانْسُكُوا لَهَا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا ثَلَاثِينَ فَإِنْ شَهِدَ شَاهِدَانِ فَصُومُوا وَأَفْطِرُوا رواه النسائي

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு செய்தி அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பது நாட்களாக எண்ணிக்கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

14001حَدَّثَنَا رَوْحٌ حَدَّثَنَا زَكَرِيَّا حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَيْتُمْ الْهِلَالَ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَعُدُّوا ثَلَاثِينَ يَوْمًا رواه أحمد

ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக வந்துள்ள ஒரு அறிவிப்பு அபூதாவுதில் இடம்பெற்றுள்ளது. இதிலும் முப்பது நாட்களாக முழுமைபடுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

1980حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ قَالَ سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَفَّظُ مِنْ شَعْبَانَ مَا لَا يَتَحَفَّظُ مِنْ غَيْرِهِ ثُمَّ يَصُومُ لِرُؤْيَةِ رَمَضَانَ فَإِنْ غُمَّ عَلَيْهِ عَدَّ ثَلَاثِينَ يَوْمًا ثُمَّ صَامَ رواه أبو داود

நபி (ஸல்) அவர்கள் பிறை பார்த்து ரமளானில் நோன்பு வைப்பார்கள். அவர்களுக்கு மேகம் குறுக்கிட்டால் (ஷஃபானை) முப்பது நாட்களாக எண்ணிக்கொண்டு பிறகு நோன்பு நோற்பார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : அபூதாவுத் (1980)

எனவே பிறை தெரியாவிட்டால் முப்பது நாட்களாகக் கணக்கிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) ஆயிஷா (ரலி) அப்துர் ரஹ்மான் பின் ஸைத் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) அபூஹுரைரா (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகிய ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்துள்ளார்கள்.

முப்பதாக கணக்கிடக்கூடாது. 29 நாட்களாக்க் கணக்கிட வேண்டும் என்று கூறுவது  நபிமொழிகளுக்கு எதிரான கருத்தாகும். ஹதீஸில் வந்து வந்துள்ள ஃபக்துரூ என்ற வார்த்தைக்கு குறைத்துக் கொள்ளுங்கள் என்று இங்கே பொருள் செய்வது முற்றிலும் தவறானது என்பதை அறிய முடிகின்றது.

அறிவீனர்கள் வாய்க்கு வந்தவாறு பதவா கொடுத்து தானும் கெட்டு மக்களையும் கெடுப்பார்கள் என்பது இது போன்ற அற்விவீனர்கள் குறித்து எச்சரிக்கை செய்யவே நபியவர்கள் முன்ன்றவிவ்விப்பு செய்தார்கள்.

முரண்பாடா? உடன்பாடா?

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து வரும் அறிவிப்புகளில் அபூ உசாமா மற்றும் அப்துல்லாஹ் பின் நுமைர் அப்துல்லாஹ் பின் தீனார் ஆகிய மூருவருடைய அறிவிப்பில் முப்பதாக என்ற வாசகம் வந்துள்ளது. இது முஸ்லிமிலும் புகாரியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அல்லாத மற்றவர்களின் அறிவிப்பில் 30 என வரவில்லை என்பதால் அம்மூவரின் அறிவிப்பும் பலவீனமானது என்று கூறக் கூடாது.

1796حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ فَضَرَبَ بِيَدَيْهِ فَقَالَ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا ثُمَّ عَقَدَ إِبْهَامَهُ فِي الثَّالِثَةِ فَصُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ ثَلَاثِينَ و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا ثَلَاثِينَ نَحْوَ حَدِيثِ أَبِي أُسَامَةَ و حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَضَانَ فَقَالَ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا وَقَالَ فَاقْدِرُوا لَهُ وَلَمْ يَقُلْ ثَلَاثِينَ رواه مسلم

1907حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا مَالِكٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً فَلَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ رواه البخاري

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து முப்பதாக கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்ற வாசகம் அதிகமான அறிவிப்புகளில் வருகின்றதா? குறைவான அறிவிப்புகளில் வந்துள்ளதா? என்ற ஆய்வுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

ஏனென்றால் ஒரு நம்பகமானவர் அறிவிக்கும் கூடுதல் தகவல் மற்ற பல நம்பகமானவர்கள் அறிவிப்பதற்கு முற்றிலும் முரணாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அந்த ஒருவருடைய அறிவிப்பு ஏற்கப்படாது. முரணில்லாமல் மற்றவர்களின் அறிவிப்புக்கு விளக்கம் தரக்கூடிய வகையில் கூடுதலான வாசகங்கள் இடம்பெற்றால் அதை குறைகூறக்கூடாது. ஏற்க வேண்டும்.

இங்கே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள் கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்று பொதுவாக கூறுகின்றனர். ஆனால் அபூ உசாமா அப்துல்லாஹ் பின் நுமைர் அப்துல்லாஹ் பின் தீனார் ஆகிய மூவரும் முப்பதாக கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்று முழு விபரத்துடன் அறிவித்துள்ளார்கள்.

29 ஆக கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்று பலர் கூறி ஒருவர் மட்டும் 30 ஆக என்று கூறினால் இதை முரண் என்று கூறலாம். பலர் எந்த எண்ணிக்கையையும் குறிப்பிடாமல் அறிவித்து ஒருவர் அந்த எண்ணிக்கையை தெளிவுபடுத்தும் வகையில் 30 என்று கூறினால் இதை முரண் என்று அறிவுள்ளவர்கள் கூற மாட்டார்கள். மற்றவர்கள் விட்டதை இவர் கவனமாக குறிப்பிட்டுவிட்டார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

முப்பதாக என்று இந்த மூவர் மட்டும் அறிவிக்கவில்லை. ஏராளமான நபித்தோழர்கள் இவ்வாறு அறிவித்துள்ளனர் என்பதை முன்பு பார்த்தோம். எனவே ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் போது முப்பதாக கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்று வரும் அறிவிப்பு பலவீனம் என்று கூறுவது சத்தியத்திற்கு புறம்பான கருத்தாகும்.

மாதம் என்பது எத்தனை நாட்கள்?

மாதம் என்பது 29 நாட்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பிறை தென்படாவிட்டால் 29 நாட்களாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவோர் இந்த ஹதீஸையும் ஆதாரமாக காட்டுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மாதம் என்பது 29 நாட்களாகும் என்று கூறினார்களே தவிர எங்கேயும் 30 நாட்கள் என்று கூறவில்லை என்பது இவர்களின் வாதம்.

பிறை தென்படாவிட்டால் 30 ஆக பூர்த்தி செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதற்கு முன்பு பல ஆதாரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் சிந்தித்தால் ஒரு மாதத்தில் முப்பது நாட்களும் வரும் என்பதை தெளிவாக அறிய முடியும்.

ஒரு மாதத்தில் 29 நாட்கள் மட்டுமே வரும் எனக் கூறுவோருக்கு இந்த ஆதாரங்கள் எதிராக உள்ளது. இது மட்டுமின்றி மாதத்தில் 30 நாட்களும் வரும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாகவே கூறியுள்ளார்கள்.

1805و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عُقْبَةَ وَهُوَ ابْنُ حُرَيْثٍ قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ وَطَبَّقَ شُعْبَةُ يَدَيْهِ ثَلَاثَ مِرَارٍ وَكَسَرَ الْإِبْهَامَ فِي الثَّالِثَةِ قَالَ عُقْبَةُ وَأَحْسِبُهُ قَالَ الشَّهْرُ ثَلَاثُونَ وَطَبَّقَ كَفَّيْهِ ثَلَاثَ مِرَارٍ رواه مسلم

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்'' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் இதைக் கூறுகையில், இரு கைகைளையும் முன்று முறை கோத்துக் காட்டி, முன்றாவது தடவையில் பெருவிரலை மடித்துக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் உக்பா பின் ஹுரைஸ் (ரஹ்) அவர்கள், "ஒரு மாதம் என்பது முப்பது நாட்களாகும் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி, தம்மிரு கைகளையும் மூன்று முறை கோத்துக் காட்டியதாகவே நான் கருதுகிறேன்'' என்று கூறினார்கள்.

முஸ்லிம் (1969)

இப்னு உமர் (ரலி) அவர்கள் மாதம் என்பது முப்பது என்பதை செய்து காட்டி விளக்கினார்கள் என நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் சந்தேகத்துடன் கூறியுள்ளார். எனவே இதை ஆதாரமாக எடுக்க இயலாது என்று வாதிடுகின்றனர்.

இங்கே அறிவிப்பாளர் சந்தேகத்துடன் கூறினாலும் இவர் கூறியது சரியானத தகவல் தான் என்பதை பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

2109أَخْبَرَنَا أَبُو دَاوُدَ قَالَ حَدَّثَنَا هَارُونُ قَالَ حَدَّثَنَا عَلِيٌّ هُوَ ابْنُ الْمُبَارَكِ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الشَّهْرُ يَكُونُ تِسْعَةً وَعِشْرِينَ وَيَكُونُ ثَلَاثِينَ فَإِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ رواه النسائي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். பிறையை நீங்கள் கண்டால் நோன்பு வையுங்கள். அதைப் பார்த்தே நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் குறுக்கிட்டால் எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : நஸாயீ (2109)

நபி (ஸல்) அவர்கள் மாதம் என்பது 29 நாட்களாகும் என்று கூறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. பொதுவாக அன்றைய காலத்து மக்கள் மாதம் என்பது 30 நாட்கள் என்பதை அறிந்து வைத்திருந்தனர். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருந்ததில்லை. இந்த நம்பிக்கை தவறானது என்று நபி (ஸல்) அவர்களும் கூறவில்லை.

ஆனால் ஒரு மாதத்தில் 29 நாட்களும் வரும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திய பிறகு இதை மக்கள் அறிந்து கொண்டனர். இதை பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம்.

1910حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ عَنْ عِكْرِمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آلَى مِنْ نِسَائِهِ شَهْرًا فَلَمَّا مَضَى تِسْعَةٌ وَعِشْرُونَ يَوْمًا غَدَا أَوْ رَاحَ فَقِيلَ لَهُ إِنَّكَ حَلَفْتَ أَنْ لَا تَدْخُلَ شَهْرًا فَقَالَ إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعَةً وَعِشْرِينَ يَوْمًا رواه البخاري

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் "ஒரு மாதம் தம் மனைவியருடன் சேர்வதில்லை' என்று சத்தியம் செய்திருந்தார்கள்; இருபத்தி ஒன்பது நாட்கள் முடிந்ததும் (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் "நீங்கள் ஒருமாதம் (வீட்டிற்கு) வர மாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், " ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் அமையும்!'' என்றார்கள்.

நூல் : புகாரி (1910)

29 நாட்கள் முடிந்துவிட்டால் பிறை பார்க்க வேண்டும். 30 நாட்கள் முடிவடைய வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. இதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துவதற்காகவே மாதம் என்பது 29 நாட்கள் என்று கூறுகிறார்கள்.

ஷஃபான் 30 வது நாளில் பிறை தென்படாவிட்டாலும் அன்று ரமளான் என்று இவர்கள் கூறுவது அறிவீனமாக உள்ளது. 30 வது இரவில் பிறை தெரிந்தாலும் ரமளான் மாதம் தொடங்கிவிடும். பிறை தெரியாவிட்டாலும் ரமளான் மாதம் தொடங்கிவிடும் என்றால் அந்த இரவில் பிறையை ஏன் பார்க்க வேண்டும்? பிறையை பார்க்க வேண்டிய அவசியமே இல்லையே? பிறை பார்க்காமல் ரமளான் மாதத்தை முடிவு செய்யாதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அர்த்தம் இல்லாமல் போகிறதே?

எந்தக் காலத்திலும் முப்பது நாட்கள் என்பதே வராமல் போய்விடுமே? முப்பது நாட்கள் என்ற கருத்தில் அமைந்த எல்லா ஹதீஸ்களும் மறுக்கப்படும் நிலை ஏற்படுமே என்றெல்லாம் இந்த கேடு கெட்ட மூடர்களுக்கு கவலை இல்லை. தங்களுக்கு ஞானமும் அறிவும் இல்லாத விஷயங்களில் இறங்கி மக்களை வழிகெடுப்பது மட்டுமே இவர்களின் ஒரே இலக்கு என்பது இதில் இருந்து தெரிகிறது.

யாராவது ஒருவர் இரண்டு மூன்று ஹதீஸ்களை காட்டி ஒரு வாதத்தை வைத்தால் அதை அப்படியே நம்பிவிடக்கூடாது. எந்த மார்க்க சட்டமாக இருந்தாலும் அது தொடர்பான அனைத்து செய்திகளையும் படித்த பிறகே அந்த ஆய்வு சரியானதா? தவறானதா? என்ற முடிவுக்கு வர வேண்டும்.

ஒரு ஆய்வில் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்களை பார்ப்பது எவ்வளவு முக்கியமோ அது போன்று அனைத்து ஆதாரங்களையும் பார்த்து முடிவெடுப்பது முக்கியமானதாகும்.

28 வது நாளில் பிறை தெரிந்தால்?

மாதம் என்பது 30 நாட்கள் இல்லை என்று கூறுவோர் ஒரு கேள்வியைக் கேட்கின்றனர்.

ஷஃபான் 30 வது நாளில் பிறை வெளிப்பட்டு மேகமூட்டம் போன்ற காரணங்களால் நமது கண்களுக்குத் தெரியவில்லை. இப்போது நாம் அதை ரமளானின் முதல் நாளாக கணக்கிடமாட்டோம். இதன் பிறகு ரமளானை தொடருவோம்.

மாதம் என்பது 29 நாட்களும் வரும் என்ற அடிப்படையில் ரமளான் மாதத்தின் 28 வது இரவில் பிறை தென்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று கேட்கின்றனர்.

பிறையைக் கண்ணால் பார்த்து முடிவெடுப்பவர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை எப்போதும் ஏற்பட்டதில்லை. ஒரு பேச்சுக்கு இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கேள்விக்கு வருவோம்.

ஆய்வாளர்களுக்கு இது எளிதில் தீர்வு காணக்கூடிய கேள்வி தான். சிந்திக்கும் திறனும் மார்க்க அறிவும் அற்றவர்களுக்குத் தான் இது பெரிய கேள்வியாகத் தோன்றும்.

28 முடிந்து பிறை தென்பட்டு விட்ட்தால் – பிறையை நாம் பார்த்து விட்ட்தால் மாதம் பிறந்து விட்டது என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் மாத்த்துக்கு குறைந்த்து 29 நாட்கள் இருக்க வேண்டும். 28 நாட்கள் இருக்க முடியாது என்ற ஹதீஸின் கருத்தையும் நாம் செயல்படுத்த வேண்டும்.

கண்ணால் பார்த்தை பிறையை மறுக்கவும் கூடாது. 28 நாட்கள் ஒரு மாத்த்துக்கு இருக்கவும் முடியாது. இந்த இரண்டில் எதையும் மறுக்காத வகையில் இணக்கமான ஒரு முடிவுக்கு வருவது அவசியமாகும்.

பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் மாதம் பிறந்து விட்ட்து என்று முடிவு செய்ய வேண்டும். முந்தைய மாதங்களில் நாம் விட்ட பிழையின் காரணமாக 29 ஐ 28 என்று நாம் முடிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விளங்கிக் கொண்டு பின்னர் ஒரு நோன்பை களா செய்தால் இரண்டு ஹதீஸ்களும் நடைமுறைக்கு வந்து விடும்.

இதை பின்வரும் ஹதீஸ் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

1820 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ حُصَيْنٍ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ أَبِي الْبَخْتَرِيِّ قَالَ خَرَجْنَا لِلْعُمْرَةِ فَلَمَّا نَزَلْنَا بِبَطْنِ نَخْلَةَ قَالَ تَرَاءَيْنَا الْهِلَالَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلَاثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ قَالَ فَلَقِينَا ابْنَ عَبَّاسٍ فَقُلْنَا إِنَّا رَأَيْنَا الْهِلَالَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ ثَلَاثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ هُوَ ابْنُ لَيْلَتَيْنِ فَقَالَ أَيَّ لَيْلَةٍ رَأَيْتُمُوهُ قَالَ فَقُلْنَا لَيْلَةَ كَذَا وَكَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ مَدَّهُ لِلرُّؤْيَةِ فَهُوَ لِلَيْلَةٍ رَأَيْتُمُوهُ رواه مسلم

அபுல் பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

நாங்கள் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் "பத்னு நக்லா' எனுமிடத்தில் தங்கியிருந்த போது, பிறையைப் பார்க்க ஒன்றுகூடினோம். அப்போது மக்களில் சிலர், "அது மூன்றாவது பிறை'' என்று கூறினர். வேறுசிலர், "(அல்ல) அது இரண்டாவது பிறை'' என்று கூறினர். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களைச் சந்தித்தபோது, "நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர் "அது மூன்றாவது பிறை' என்றனர். வேறு சிலர் "அது இரண்டாவது பிறை' என்று கூறினர்'' என்று சொன்னோம். அதற்கு  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு, "இன்ன (மாதத்தின்) இன்ன இரவில்' என்று பதிலளித்தோம். அப்போது, "பார்ப்பதற்காகவே  பிறையை அல்லாஹ் சிறிது நேரம் தென்படச் செய்கிறான். ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.

நூல் : முஸ்லிம் (1984)

August 18, 2012, 4:17 AM

பாலூட்டும் தாய் (மலையாள மொழி பெயர்ப்

பாலூட்டும் தாய் நோன்பு வைக்க வேண்டுமா (மலையாள மொழி பெயர்ப்பு) ചോദ്യം :

മുലകൊടുക്കുന്ന അമ്മമാര്‍ നോമ്പ് എടുക്കല്‍ നിര്‍ബന്ധമാണോ ...??

தொடர்ந்து படிக்க November 5, 2012, 12:13 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top