கொலை செய்தவனை என்ன செய்ய வேண்டும்?

கொலை செய்தவனை என்ன செய்ய வேண்டும்?
மீரான்

முஸ்லிமல்லாத ஒருவர் ஒரு முஸ்லிமைக் கொன்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

பதில்

ஒரு உயிரை அநியாயமாகக் கொலை செய்வது இஸ்லாத்தில் பெரும் பாவமாகக் கூறப்பட்டிருக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?'' என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட  அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று  கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6857

இந்தப் பாவத்தைச் செய்தவர் கொல்லப்பட வேண்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுகின்றது. கொல்லப்பட்டவனின் உறவினர் மன்னித்தால் மட்டுமே இந்தத் தண்டனை விலக்கிக்கொள்ளப்படும்.

கொலை செய்தவனுக்கு இஸ்லாம் கூறும் இந்த்த் தண்டனையை அனைவரும் செயல்படுத்திவிட முடியாது. ஆட்சி அதிகாரம் உள்ளவர்களே இந்த்த் தண்டனையை வழங்க முடியும்.      நாம் வாழும் நாடு இஸ்லாமிய நாடல்ல. இங்குள்ளவர்கள் இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

இஸ்லாமியச் சட்டத்தை நாம் செயல்படுத்த  வேண்டுமேன்றால் நமக்கு அதிகாரம் இருக்க வேண்டும். ஆனால் நாம் இந்திய அரசாங்கத்தின் கீழ் வாழும் சாதாரண குடிமக்களாகவே உள்ளோம். சட்டத்தை நாமே கையில் எடுத்தால் பெரும் விபரீதங்களைச் சந்திக்க வேண்டிவரும்.

எனவே இந்தச் சூழ்நிலையில் இந்தக் குற்றத்துக்கு அரசாங்கம் என்ன தண்டனை வழங்கினாலும் அதைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நம்முடைய ஆதங்கத்தை இறைவனிடம் தான் முறையிட முடியும்.

26.12.2011. 12:00




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
66 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி