அமாவாசையில் மனநிலை பாதிக்குமா?
அமாவாசையில் மனநிலை பாதிக்குமா?
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பது உண்மையா?
ராஜா முஹம்மத்
மனநோயாளிகளுக்கு இந்த நாட்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியில் பாதிப்புகள் ஏற்படும். கடல் அலை ஏற்படுவதற்கு நிலவின் ஈர்ப்புவிசையே காரணமாக உள்ளது. இந்த ஈர்ப்பு விசை பவுர்ணமி அமாவாசை நாட்களில் அதிகமாக இருப்பதால் அந்த நாட்களில் மற்ற நாட்களை விட அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். இந்த நாட்களில் மன நோயாளிகளின் மனநிலை அதிகம் பாதிக்கப்படுவதை மனநோயாளிகளை கண்காணிப்பவர்கள் மூலம் நாம் அறிகிறோம். இதற்கு நிலவின் சீற்றம் இந்த நாட்களில் அதிகமாக இருப்பது காரணமாக இருக்கலாம்.
09.12.2011. 22:04
