அடிமை இல்லாத காலத்தில் என்ன செய்வது?
அடிமை இல்லாத காலத்தில் என்ன செய்வது?
கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின் கர்ப்பம் ஒருவரால் கலைக்கப்பட்டால் அவ்வாறான சந்தர்ப்பத்தில் அதற்கு உயிரீடாக ஓர் ஆண் அடிமை அல்லது ஓர் அடிமைப் பெண் கொடுக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீர்ப்புக் கூறியதாக ஸஹீஹ் புகாரியில் 5758, 5759, 5760, 7317 ஆகிய ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. முக்கிய கருத்தை மட்டுமே நான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.
பிழைகளுக்குப் பிராயச்சித்தமாக அடிமை விடுதலை குறிப்பிடப்பட்ட இடங்களில் அல்லது நோன்பு அல்லது ஏழைகளுக்கு உணவு என்று பகரம் கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ்களில் அவ்வாறில்லை. அடிமை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
அடிமைகள் இல்லாத காலத்தில் அல்லது ஒருவரிடம் அடிமை இல்லாத போது, அல்லது அடிமை ஒருவனை விலை கொடுத்து வாங்க வசதியில்லாத ஒருவர் என்று பார்க்கும் போது இது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்பது தெளிவு. எனவே, கீழ் வரும் வினாக்கள் எழுகின்றன:
கேள்வி 1: இந்த ஹதீஸ்களுடன் சேர்த்து வாசித்து விளக்கம் பெறப் போதுமான குர்ஆன் வசனமோ அல்லது மற்றும் ஹதீஸ்களோ உள்ளனவா?
கேள்வி 2: அவ்வாறில்லை என்றால் இந்த ஹதீஸ்களின் தரம் என்ன?
P.G.M.M. ளாஃபிர்
புளுகஹதென்னை, அக்குறணை, இலங்கை
பதில்: வயிற்றில் உள்ள குழந்தையைக் கொலை செய்தால் அடிமையை நட்ட ஈடாகக் கொடுக்க வேண்டும் என்று மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. வேறு பரிகாரத்தையும் கூறியுள்ளனர். அடிமை இல்லாத காலத்திலும் அடிமைகள் இருக்கும் காலத்திலும் அந்த நட்ட ஈட்டையும் கொடுக்கலாம்.
அந்தப் பரிகாரம் இது தான்:
أخبرنا يعقوب بن إبراهيم وإبراهيم بن يونس بن محمد قالا حدثنا عبيد الله بن موسى قال حدثنا يوسف بن صهيب عن عبد الله بن بريدة عن أبيه أن امرأة حذفت امرأة فأسقطت فجعل رسول الله صلى الله عليه وسلم في ولدها خمسين شاة ونهى يومئذ عن الخذف أرسله أبو نعيم
Nasayi 4731
ஒரு பெண் கல்லைச் சுண்டி விட்டு இன்னொரு பெண்ணின் கருவைக் கலையச் செய்து விட்டாள். அவளது குழந்தைக்கான நட்டஈடாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐம்பது ஆடுகளை நிர்ணயித்தார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : நஸாயீ
06.02.2012. 01:50
