விதி என்றால் என்ன
விதி என்றால் என்ன
செய்யத் அஹ்மத் குலாம்
பதில்
இந்த உலகத்தில் நடக்கின்ற அனைத்துக் காரியங்களும் இறைவனின் நாட்டத்தாலே நடக்கின்றது. இறைவன் நாடாமல் உலகத்தில் அனு கூட அசைவதில்லை.
நம் வாழ்க்கையில் இன்பம் ஏற்பட்டாலும் துன்பம் ஏற்பட்டாலும் அவை அனைத்து இறைவன் நாடியதாலே ஏற்படுகின்றது. இந்த நம்பிக்கைக்கு விதி என்று கூறுகிறோம். இதை நம்பியவர் தான் முஸ்லிமாக இருக்க முடியும்.
ஜிப்ரீல் (அலை) அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையை மக்களுக்கு விளக்குவதற்காக மனித வடிவில் வந்து சில கேள்விகளை நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். விதியைப் பற்றியும் கேட்டார்கள்.
அடுத்து அவர், "ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்'' என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் "உண்மைதான்'' என்றார்.
நூல் : முஸ்லிம் (1)
இது குறித்து மேலும் அறிய
http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/-/
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/vithiyai_nambuvathu_eppadi/
http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/vithiyai_nambuvathu_eppadi/
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/vithi_unmai_enraal_sorkam_narakam_en/
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/Vithi/
http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/ellam_vithipadi_than_wadakkiratha/
http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/vithiyai_vella_mudiyuma/
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/vithiyai_nambi_virupam_pol_vazalama/
13.01.2012. 12:18
