விளக்கம் கொடுக்கமுடியாத ஹதீஸ்களை நி

விளக்கம் கொடுக்கமுடியாத ஹதீஸ்களை நிறுத்தி வைக்க வேண்டுமா

ஒரு ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் எவ்விதத்திலும் அந்த ஹதீசுக்கு விளக்கம் கொடுக்க முடியாவிட்டால் அந்த ஹதீஸை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஹதீஸ் கலையில் ஒரு விதி உள்ளது என்பதற்கு ஆதாரம் என்ன?

ராசிக் ரஃபீக்தீன்

பதில்

ஒரு ஹதீஸிற்கு சிலருக்கு விளக்கம் கொடுக்க முடியவில்லை என்றால் அது அவரது அறியாமையாகும். அது போன்ற ஹதீஸ்களை நிறுத்தி வைக்க முடியாது.

ஆனால் யாராலும் விளக்கம் கொடுக்க முடியாவிட்டால் அந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ஹதீஸ் கலையில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

செய்தி மோசமான கருத்தை உள்ளடக்கி இருந்தால் அல்லது அதன் கருத்து குர்ஆனுடைய போதனைக்கு எதிராக இருந்தால் மட்டுமே அந்த செய்திக்கு யாராலும் விளக்கம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எதார்த்தமான உண்மைக்கு மாற்றமாக இருந்தாலும் இந்த நிலை ஏற்படும்.

இது போன்ற செய்திகள் பொய்யானவை என்று அதன் கருத்தை வைத்தே முடிவு செய்து விடலாம். அறிவிப்பாளர்களின் குறை நிறைகளை எடைபோடுவதற்குக் காரணம் அவர்கள் அறிவிக்கும் செய்தியில் தவறு வந்துவிடக் கூடாது என்பது தான்.

 

செய்தியில் தவறு இருப்பது உறுதியாகி விட்டால் இதற்குப் பின் அறிவிப்பாளர்களை ஆராய வேண்டிய அவசியம் இல்லாமல் போகின்றது. நமக்கு முன் பல அறிஞர்கள் இந்த விதியை மக்களுக்குத் தெளிவுபடுத்தியும் இதனடிப்படையில் பல செய்திகளை நிராகரித்தும் இருக்கின்றனர். 

ஹதீஸ் கலையில் இந்த விதி இருக்கின்றதா என்று நீங்கள் கேட்டுள்ளதால் அதற்கான ஆதாரத்தைத் தருகின்றோம்.

تدريب الراوي ج: 1 ص: 276

أن من جملة دلائل الوضع أن يكون   مخالفا  للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة أو يكون منافيا لدلالة الكتاب القطعية أو السنة المتواترة أو الإجماع القطعي أما المعارضة مع إمكان الجمع فلا

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று : விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவுக்கு அச்செய்தி மாற்றமாக இருக்கும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 276

تدريب الراوي ج: 1 ص: 277

وقال ابن الجوزي ما أحسن قول القائل إذا رأيت الحديث   يباين المعقول  أو يخالف المنقول أو يناقض الأصول فاعلم أنه موضوع

ஒரு செய்தி அறிவுக்கு மாற்றமாகவோ (சரியான) ஆதாரத்திற்கு மாற்றமாகவோ அடிப்படை விதிமுறைகளுக்கு எதிராகவோ இருப்பதை நீ கண்டால் அது இட்டக்கட்டப்பட்ட செய்தி என்று அறிந்துகொள் எனக் கூறியவரின் கூற்று மிக அழகானது. இவ்வாறு இப்னுல் ஜவ்ஸி கூறினார்.

التعريفات ج: 1 ص: 113

549 الحديث الصحيح ما سلم لفظه من ركاكة ومعناه من   مخالفة  آية أو خبر متواتر أو إجماع وكان رواية عدل وفي مقابله السقيم

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதில் மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.

நூல்: அத்தஃரீஃபாத், பாகம்: 1, பக்கம்: 113

08.01.2012. 12:54




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
71 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி