உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன

உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்?

கிதுர் ஒலி

இந்தக் கேள்விக்கு விடை சொல்லாவிட்டால் அதன் மூலம் இறைவன் இல்லை என்று வாதிடுவதற்காக இக்கேள்வியை அவர் கேட்டிருந்தால் அது பொருத்தமற்றதாகும்.

முதலில் இறைவன் இருக்கிறானா இல்லையா என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தித்து முடிவுக்கு வர வேண்டும். இறைவன் இருக்கிறான் என்று முடிவுக்குவந்து விட்டால் மாபெரும் சூப்பர் பவராக இருப்பவனிடம் அவனது நடவடிக்கைபற்றிக் கேட்க முடியாது.

நமக்குச் சமமானவர்களை அல்லது நமக்குக் கீழேஉள்ளவரின் நடவடிக்கைகளைத் தான் கேள்விக்கு உட்படுத்த முடியும். நம்மைப்படைத்த சர்வ ஆற்றலும் உடையவனைக் கேள்விக்கு உட்படுத்த முடியாது. அவன் என்ன செய்கிறான் என்பதை அந்த இறைவன் மனிதனுக்குச் சொல்லக் கடமைப்பட்டவன்அல்ல. கடமைப்பட்டவனாக இருந்தால் அவன் இறைவன் அல்ல.

இறைவன் இருப்பதையே அவர்நம்பவில்லை என்றால் இறைவன் இருக்கிறானா என்பதைப்பற்றித் தான் கேள்வி கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால் அதற்கான விடைநாத்திகர்களுடன் நடந்த விவாதத்தின் போது அளிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் பிரதமராவதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதுநமக்குத் தெரியாவிட்டால், அல்லது அவர் தனது வீட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது நமக்குத் தெரியா விட்டால் மன்மோகன் சிங் என்றுஒருவர் இல்லை என்று ஆகாது.

அது போல் இறைவன் என்ன செய்துகொண்டிருந்தான் என்ற கேள்விக்கு நமக்கு விடை தெரியாததால் அல்லது இனி என்னசெய்வான் என்பதற்கு விடை தெரியாது என்பதால் இறைவன் இல்லை என்று ஆகாது.

அதுபற்றி நமக்குத் தெரியவில்லை என்று தான் ஆகும்.

நம்மோடு வாழும்மனிதர்களின் நடவடிக்கையையே நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடிவதில்லை எனும்பொது இறைவனின் செயல்பாடுகள் பற்றி கேட்பது அறிவுடமை அல்ல என்று அவருக்குப்பதில் கூறுங்கள்

23.01.2010. 14:09




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
68 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி