அசைவத்தை இஸ்லாம் அனுமதித்தது ஏன்

 அசைவத்தை இஸ்லாம் அனுமதித்தது ஏன்

அசைவம் சாப்பிடலாம் என்பதற்கு உள்ள அணைத்து அறிவியல் பூர்வமான சான்றுகளையும் அனுப்புங்கள் இந்து சஹோதரருக்கு இஸ்லாத்தை பற்றி சொல்லி புரிய வைக்க வேண்டும் அசைவம் பாவம் என்கின்றனர் விளக்கம் தரவும் பலமுறை கேள்வி அனுப்பியும் பதில் வரவில்லை

தொடர்ந்து படிக்க 11.03.2010. 23:15

உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன

உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்?

தொடர்ந்து படிக்க 23.01.2010. 14:09

அசைவ உணவு உட்கொள்வது சரியா?

அசைவ உணவு உட்கொள்வது சரியா?

ஃபாத்திமா

அசைவ உணவு உட்கொள்வது சரியா? அது உயிர்வதை இல்லையா? என்ற கேள்விகள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கேட்கப்பட்டு விரிவாக பதில் சொல்லப்பட்டுள்ளன. பார்க்க இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் வீடியோஆடியோ

 இது தவிர குற்றச்சாட்டுக்களும் பதில்களும் என்ற நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அது இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும் திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது பார்க்க

16.01.2010. 15:33

இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவரா?

இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவரா?
அஸ்ஸலாமு அலைக்கும்.ஒரு கிறிஸ்த்துவ நண்பரின் கேள்வி:"அல்லாஹ் குரானிலே இயேசுவையும்,மரியத்தையும் சைத்தான் தீண்டாதவர்கள் என்று குரிப்பிடுக்கிறானே. ரசூல்(ஸல்)அவர்களும் இயேசுவை சைத்தான் தீண்ட மாட்டான் என்றுதான் கூறி இருக்கிறார்கள்.ஆனால் ரசூல்(ஸல்) அவர்கள் தவறு செய்ததாகத்தானே குரானில் பார்க்க முடிகிறது.எனவே இயேசுவை குரானே பரிசுத்த ஆவி என்று கூறுவதால்,ஏசுதான் கர்த்தர்.(நவூதுபில்லாஹ்).ஏன் என்றால் கர்த்தரைத்தான் சைத்தான் தீண்ட முடியாது."(நவூதுபில்லாஹ்) என்று அவர் கூறுகிறார்.அவருக்குஒரு தெளிவான பதிலை எப்படி கூறுவது.

தொடர்ந்து படிக்க 16.01.2010. 00:14

கஅபாவுக்கு தங்கத் திரை ஏன்

காபாவுக்கு தங்கத் திரை ஏன்
அஸ்ஸலாமு அலைக்கும். நான் எனது நண்பர்களுக்கு தினசரி இஸ்லாத்தை அறிமுகம் செய்து வருகிறேன். காபா வில் தொங்கும் திரை பற்றி அவர்கள் கேட்கின்றனர். ஏன் அந்த திரை? அதில் உள்ள வேலைபாடுகள் ஏன் தங்கத்தில் உள்ளன அடுத்தது நமக்கு என்று தொழுகை முறை இருந்தாலும் ஏன் காபாவை மாற்று மத சகோதரர்கள் போல சுற்றி வர வேண்டும்? அடுத்தது காபா தான் உலகின் முதல் பள்ளியா?

தொடர்ந்து படிக்க 15.01.2010. 23:26

பெற்றோர் முஸ்லிமாக

பெற்றோர் முஸ்லிமாக இருப்பதால் குழந்தையும் முஸ்லிமாகவே வளருகிறது. ஆனால் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் அந்தப் பெற்றோரின் மார்க்கத்தைத் தானே பின்பற்றும். அப்படியிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது எப்படித் தெரியும்? என்று மாற்று மதத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கேட்கிறார். இதற்கு எப்படி விளக்கம் தருவது?

தொடர்ந்து படிக்க 26.08.2009. 18:33

நீ இந்தியனா அல்லது முஸ்லீமா?

கேள்வி

எனது நன்பர் நீ இந்தியனா அல்லது முஸ்லிமா என்று கேட்கிறார் நான் முதலில் முஸ்லிம் இரண்டாவது இந்தியன் என்று பதில் சொன்னேன் இது சரியா நபியவர்கள் என்ன சொல்கிறார்கள்?

செய்யது இப்றாஹீம்

பதில் :

நீ இந்தியனா அல்லது முஸ்லிமா? என உங்கள் நண்பர் உங்களிடம் கேட்டுள்ளார். இக்கேள்வி தவறானதாகும்.

இந்தியன் என்பதும் முஸ்லிம் என்பதும் ஒன்றொக்கொன்று எதிரான அர்த்தம் கொண்ட பெயர்கள் என்று கருதினாலே இவ்வாறு கேள்வி கேட்க முடியும். இந்தியனாக இருப்பவர் முஸ்லிமாக இருக்க முடியாது. முஸ்லிமாக இருப்பவர் இந்தியனாக இருக்க முடியாது என்ற தவறான கருத்து இக்கேள்வியில் அடங்கியிருக்கின்றது.

ஒருவர் இந்தியனாக இருந்துகொண்டு முஸ்லிமாக வாழ முடியும். இந்திய நாட்டில் வாழ்பவருக்கு இந்தியன் என்று சொல்லப்படும். இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றவருக்கு முஸ்லிம் என்று சொல்லப்படும். இந்திய நாட்டில் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று அதனடிப்படையில் வாழ்வதற்கு எந்தத் தடையும் இல்லை. நாம் அனைவரும் அவ்வாறே வாழ்ந்துகொண்டுஇருக்கின்றோம். இதை விளங்கியிருந்தால் இக்கேள்வியை உங்கள் நண்பர் கேட்டிருக்கமாட்டார்.

உதாரணமாக உங்களைப் பார்த்து நீ மனிதனா? உயிரினமா? என்று கேட்டால் அக்கேள்வி எப்படி அர்த்தமற்றதோ அது போன்றே இந்த கேள்வியும் அமைந்துள்ளது. இப்படி ஒருவர் நம்மிடம் கேட்டால் நான் மனித உயிரினமாக இருக்கின்றேன் என பதிலளிப்போம். அதேப் போன்று நான் இந்திய நாட்டில் வாழும் முஸ்லிமாக இருக்கின்றேன் என்று உங்கள் நண்பருக்கு பதிலளியுங்கள். 

17.08.2010. 14:40

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து க

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்வது

பிற மதத்தினரின் அழைப்பை ஏற்று அவர்களது திருமணங்களில் கலந்து கொள்ளலாமா? இஸ்லாமியர்களுக்குத் தானே இறைவன் கட்டளையும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும். மற்றவர்களுக்கு அது எப்படிப் பொருந்தும்? எளிமையாக திருமணங்களை நடத்தி நாம் தானே அவர்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காட்ட வேண்டும். உங்கள் விளக்கம் தேவை.

தொடர்ந்து படிக்க 11.07.2010. 16:28

இஸ்லாமிய ஆட்சியால் பயன் இல்லை என்பது

இஸ்லாமிய ஆட்சியால் பயன் இல்லை என்பது சரியா
இஸ்லாமிய ஆட்சி அமைந்தால் குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு பலன் இல்லை என்று கூறப்படுகின்றதே. இது சரியா
?

தொடர்ந்து படிக்க 29.06.2010. 22:33

முஸ்லிமல்லாத நண்பர்கள் இஸ்லாத்தை அற

முஸ்லிமல்லாத நண்பர்கள் இஸ்லாத்தை அறிந்திட  

முஸ்லிமல்லாத நண்பர்களுக்கு

16.05.2010. 13:35

அறுத்துப் பலியிடுதல் நியாயம் தானா

 அறுத்துப் பலியிடுதல் நியாயம் தானா

அல்ஜன்னத் இதழில் பிஜே ஆசிரியராக இருந்த போது ஜனவரி 1996ல் அளித்த பதில்

உங்களுடைய இஸ்லாம் மாக்கத்தின் சட்டங்கள் எல்லாம் எனக்குப் பிடித்து இருக்கிறது. ஆனால் ஆடுமாடு ஒட்டகங்களைக் கட்டாயமாக அறுத்துப் பலியிட வேண்டும் என இஸ்லாம் கூறுவது தான் எனக்குப் பிடிக்கவில்லை. மேலும் அரபு நாடுகளில் ஏராளமானோர் அறுத்துப் பலியிடுவதால் வாங்குவோர் இன்றி மாமிசங்கள் புதைக்கப்படுகின்றன. இது வேஸ்ட் தானே! என்று என் தோழி ஒருத்தி கூறுகிறாள். இதற்கு என்ன பதில் கூறலாம்.

தொடர்ந்து படிக்க 27.09.2010. 08:34

திருந்திய பெண்ணை நபி தண்டித்தது சரிய

திருந்திய பெண்ணை நபி தண்டித்தது சரியா?

விபச்சாரம் செய்த பின் அதை தவறு என்று உணர்ந்துவிட்ட பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் ஏன் தண்டனை வழங்கினார்கள்? என்று இந்து நண்பர் கேட்கிறார். இதற்கு என்ன பதில் சொல்வது?

பதில்

நீங்கள் குறிப்பிடும் சம்பவம் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3209حَدَّثَنِي أَبُو غَسَّانَ مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا مُعَاذٌ يَعْنِي ابْنَ هِشَامٍ حَدَّثَنِي أَبِي عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ حَدَّثَنِي أَبُو قِلَابَةَ أَنَّ أَبَا الْمُهَلَّبِ حَدَّثَهُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ أَتَتْ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ حُبْلَى مِنْ الزِّنَى فَقَالَتْ يَا نَبِيَّ اللَّهِ أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَيَّ فَدَعَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِيَّهَا فَقَالَ أَحْسِنْ إِلَيْهَا فَإِذَا وَضَعَتْ فَأْتِنِي بِهَا فَفَعَلَ فَأَمَرَ بِهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشُكَّتْ عَلَيْهَا ثِيَابُهَا ثُمَّ أَمَرَ بِهَا فَرُجِمَتْ ثُمَّ صَلَّى عَلَيْهَا فَقَالَ لَهُ عُمَرُ تُصَلِّي عَلَيْهَا يَا نَبِيَّ اللَّهِ وَقَدْ زَنَتْ فَقَالَ لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ سَبْعِينَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ لَوَسِعَتْهُمْ وَهَلْ وَجَدْتَ تَوْبَةً أَفْضَلَ مِنْ أَنْ جَادَتْ بِنَفْسِهَا لِلَّهِ تَعَالَى رواه مسلم

புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

"ஃகாமிதிய்யா' குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். (உரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்'' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணைத் திருப்பியனுப்பி விட்டார்கள். அப்பெண் மறுநாள் (வந்து), "அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னைத் திருப்பியனுப்புகிறீர்கள்? மாஇஸ் அவர்களைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் தாங்கள் திருப்பியனுப்புகிறீர்கள் போலும். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (தகாத உறவில் ஈடுபட்டு) கர்ப்பமுற்றுள்ளேன்'' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, நீ சென்று குழந்தை பெற்றெடு (பிறகு திரும்பி வா)'' என்று சொன்னார்கள். குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தையை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இது நான் பெற்றெடுத்த குழந்தை'' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்த பின் திரும்பி வா'' என்றார்கள். பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண், "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்'' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். ஆகவே, அவருக்காக நெஞ்சளவு குழி தோண்டப்பட்டது. (பின்னர் அக்குழிக்குள் அப்பெண்ணை நிறுத்திய பின்) மக்களுக்குக் கட்டளையிட, அவருக்குக் கல்லெறி தண்டனையை மக்கள் நிறைவேற்றினார்கள்.

நூல் : முஸ்லிம் (3500)

தவறு செய்தவர் திருந்தி விட்டால் அவரை அல்லாஹ் மன்னிப்பான் என்று இஸ்லாம் சொல்கிறது. ஒருவர் திருந்தி விட்டாரா இல்லையா என்பது அவரது உள்ளத்துக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாகும்.

அது போல் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் தவறு செய்து அதில் இருந்து திருந்தி விட்டதாகக் கூறுகிறான். அவனால் பாதிக்கப்பட்ட மனிதனும் அதை நம்பி ஏற்றுக் கொண்டு அவனை மன்னித்தால் அதிலும் இஸ்லாம் தலையிடாது.

ஆனால் உலகில் உள்ள எல்லா அரசுகளும் சட்டங்கள் வகுத்துள்ளன. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காகவும் அநீதி இழைக்கப்பட்டவர்கள் மனநிறைவு அடைவதற்காகவும் தான் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்கள் ஒருவன் குற்றம் இழைத்தானா இல்லையா என்று தான் பார்க்குமே தவிர குற்றம் செய்தவன் திருந்தினானா இல்லயா என்று பார்ப்பதில்லை. பார்க்கவும் கூடாது.

அப்படிப் பார்த்தால் சட்டங்கள் வகுக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும். குற்றம் செய்த ஒவ்வொருவனும் தனது குற்றம் நிரூபிக்கப்படும் போது நான் குற்றம் செய்தது உண்மை தான். ஆனால் நான் இப்போது திருந்தி விட்டேன் எனக் கூறி தப்பித்து விடுவான். ஒருவனைக் கூட எந்தக் குற்றத்துக்கும் தண்டிக்க முடியாமல் போய்விடும்.

இது தான் எல்லா உலக நாடுகளும் கடைப்பிடிக்கும் நியதியாகும். அனைத்து மக்களின் நன்மை கருதி உருவாக்கப்பட்ட சட்டத்தை ஒரு அதிபர் மன்னித்து விட முடியாது.

நபிகள் நாயகத்துக்குத் தனிப்பட்ட முறையில் அநீதி இழைத்தவர்களை அவர்கள் பல முறை மன்னித்து இருக்கிறார்கள். இது அவர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்ல. சட்டத்தை நிலை நாட்டும் பிரச்சனையாகும்.

எனவே சட்டத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட குற்றத்துக்கு தண்டனையை வழங்குவது தான் ஆட்சி செய்பவரின் கடமையாகும்.

அதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் செய்தார்கள்.

சட்டத்தை நிலை நாட்டுவோருக்கு இது போன்ற நெஞ்சுரம் இருக்க வேண்டும். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு பலரைக் கொன்று குவித்தது நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும் போது அதை எதிர்த்து கூட்டம் போட்டு கொடி பிடித்தால் சட்டம் வளைகிறது. சட்டம் இயற்றும் சட்டசபைகளும் வளைகின்றன. நீதிமன்றங்களும் வளைகின்றன. இது போன்ற நிலையையே பார்த்துப் பழகியதால் அந்த நண்பர் இப்படி கேட்டுள்ளார்.

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் பற்றி மேலும் அறிய

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/43-islamiya-kutraviyal-sattangal/

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/401/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/katumaiyan_sattam_manithaurimai_meerala/

30.08.2011. 13:39

சகோதரி மகளை திருமணம் செய்தவர் இஸ்லாத

சகோதரி மகளை திருமணம் செய்தவர் இஸ்லாத்தில் சேர முடியுமா?

இந்து மதத்தைச் சார்ந்த சகோதரர் ஒருவர் குடும்பத்துடன் இஸ்லாத்தில் இணைய ஆர்வப்படுகிறார். அவர் தனது சகோதரியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். இஸ்லாத்தில் சகோதரியின் மகளைத் திருமணம் செய்வது கூடாது. எனவே இஸ்லாத்திற்கு வர விரும்பும் இவர் என்ன செய்ய வேண்டும்?

ரஷீத்

பதில்

சகோதரியின் மகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. சட்டம் தெரியாமல் யாரேனும் இவ்வாறு திருமணம் செய்திருந்தால் சட்டத்தை அறிந்த பிறகு அவ்விருவரும் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு பிரிந்துவிட வேண்டும் என்பதே மார்க்கச் சட்டம்.

வேறு கொள்கையில் இருப்பவர் இவ்வாறு திருமணம் செய்திருந்தால் இந்தச் சட்டத்தை செயல்படுத்தி விட்டுத் தான் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை.

வேறு கொள்கையில் இருக்கும் ஒருவர் இஸ்லாத்தில் இணைய நினைத்தால் அவர் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்கள் என்று மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டு இதை வெளிப்படையாக மொழிய வேண்டும்.

இதை அவர் செய்துவிட்டால் அவர் முஸ்லிமாகி விடுவார். அவர் இஸ்லாத்தில் இணைவதற்கு நாம் கூறிய இந்த விஷயத்தைத் தவிர்த்து வேறு எந்த நிபந்தனையும் இல்லை.

புதிதாக இஸ்லாத்திற்கு வருபவர்கள் இஸ்லாத்தைப் பற்றி முழுமையாக புரிந்திருக்க மாட்டார்கள். உறுதியான நம்பிக்கையை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இந்நிலையில் இருப்பவரிடம் இஸ்லாத்தில் கூடாத எல்லா விஷயங்களையும் விட்டுவிட்டுத் தான் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்று கூறினால் இது பெரும் சுமையாக அவருக்குத் தோன்றலாம். இதன் காரணத்தால் அவர் இஸ்லாத்தில் இணைவதைக் கைவிட நினைக்கலாம்.

இந்நிலை ஏற்படாமல் இருக்க அவருக்கு கலிமாவை சொல்லிக் கொடுத்து அவர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு சிறிது காலம் மார்க்க உபதேசங்களைக் கேட்பார். மார்க்கத்தைப் பற்றி தெளிவாக அறிந்து கொண்ட பின் தானாகவே அவர் இஸ்லாமியச் சட்டத்தைச் செயல்படுத்தத் துவங்கி விடுவார். இஸ்லாத்தில் அவருக்குப் பிடிப்பு ஏற்பட்ட பின் அவர் தன்னுடைய சகோதிரியின் மகளை விவாகரத்துச் செய்ய வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தலாம்.

எனவே தான் ஒருவர் இஸ்லாத்தில் இணைவைதற்கு கலிமாவை மனப்பூர்வமாக மொழிவதைத் தவிர்த்து வேறு எதையும் இஸ்லாம் நிபந்தனையாக்கவில்லை.

முஸ்லிமாகப் பிறந்த பலர் இஸ்லாம் தடுத்துள்ள பல காரியங்களைச் செய்து கொண்டு முஸ்லிம்களாக நீடிக்கிறார்கள். அது போல் இஸ்லாத்தில் இணைபவரிடம் சில தீமைகள் இருக்கலாம். குடிப்பழக்கம், வட்டி, விபச்சாரம் போன்ற தீமைகள் அவர்களிடம் காணப்பட்டாலும் அவற்றை எல்லாம் விட்ட பிறகு தான் இஸ்லாத்தில் சேர வேண்டும் என்று மார்க்கமும் சொல்லவில்லை. நாமும் சொல்லக் கூடாது.

இஸ்லாத்தில் இணைவதன் மூலம் அவர் நிரந்தர நரகத்திற்குச் செல்லாமல் தன்னைக் காத்துக் கொள்வார். நாளடைவில் இஸ்லாமிய அறிவுரைகள் அவரிடம் உள்ள தீய செயல்களை ஒவ்வொன்றாக விட வைத்து விடும், இன்ஷா அல்லாஹ்
மேலும் பார்க்க
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/114-manamutika-thakathavarkali-manamutithal/

24.08.2011. 14:57

கடவுளை அவன் என்று கூறுவது ஏன்

கடவுளை அவன் என்று கூறுவது ஏன்

சுரேஷ் டேவிட்

தில்

இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனையாகும். திருக்குர்ஆன் அருளப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு மொழியில் இத்தகைய நிலை ஏற்படாது.

"அவன்' என்பதற்கு அரபு மொழியில் "ஹூவ' என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அவர்கள் என்பதற்கு ஹூம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஒருவனைக் குறிப்பது என்றால் ஹூவ என்றும் பலரைக் குறிப்பது என்றால் ஹூம் என்றும் கூறுவார்கள். மரியாதைக்காக ஒருவனைக் குறிக்கும் போது (ஹூம்) அவர்கள் என்று கூறவே மாட்டார்கள்.

அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது "ஹூவ' என்று தான் குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். மரியாதைக்காக ஹூம் (அவர்கள்) என்று அவன் பயன்படுத்தவில்லை.

அது போலவே இப்லீஸ், பிர்அவ்ன் போன்ற தீயவர்களுக்கும் ஹூவ (அவன்) என்று தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் "ஹூவ' என்று தான் கூற வேண்டும். மரியாதைக்காக ஒருமையைப் பன்மையாக மாற்றுவது அரபு மொழியில் கிடையாது.

"ஹூவ' (அவன்) என்ற குறிப்பிடும் போது பலரைப் பற்றிக் கூறப்படவில்லை. ஒரு நபரைப் பற்றி மட்டும் தான் கூறப்படுகிறது என்று தான் அரபுகள் விளங்குவார்களே தவிர அவர் மரியாதைக்குரியவரா? இல்லையா? என்பதை இவ்வார்த்தையிலிருந்து புரிந்து கொள்ள மாட்டார்கள்: இதே போல் ஆங்கிலத்தில் He என்ற வார்த்தை ஒருவரை குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றது. They (அவர்கள்) என்பது பலரை குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றது. மரியாதைக்காக ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது They என்று குறிப்பிடுவதில்லை. இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த நிலை தான் உள்ளது.

தமிழ் மொழியைப் பொருத்த வரை ஆரம்ப காலத்தில் இந்த நிலை தான் இருந்தது. "அவன்' என்பது ஒருவரைக் குறிக்கும். அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ் இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்தது.

ஒரு நபரைக் குறிப்பிடுவதற்குப் பலரைக் குறிப்பிடுவதற்குரிய சொல்லை மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமாக மாறி விட்டது. ஒருவரைக் குறிப்பிட அவர் என்ற பன்மைச் சொல்லைப் பயன்படுத்தலானார்கள். அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி அவர்கள் என்றனர்.

மரியாதை கொடுக்க தகுதி இல்லாதவரைக் குறிப்பிடும் போது அவன் எனவும், மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரைக் குறிப்பிடும் போது அவர் எனவும் அதிகம் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும் மாற்றிக் கொண்டனர்.

தமிழில் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் தமிழில் அவன் என்றே குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே குறிப்பிடப்படுகின்றனர்.

வள்ளுவன் சொன்னான். கம்பன் கூறுகிறான். ராமன் வில்லை ஒடித்தான். என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம். அதே போலவே கடவுளைக் குறிக்கும் போதும் அவன் நீ என்று தான் குறிப்பிடப்பட்டது. மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வருவதற்கு முன்பே இலக்கியங்களில் அவன் என்று கடவுள் குறிப்பிடப்பட்டதால் அதுவே தொடர்ந்து வருகிறது.

மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமானததால் "அவர்கள்' எனக் கூறப்பட்டனர்.

கம்பன் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கூற மாட்டோம். கருணாநிதி சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்போம். இதற்குக் காரணம் கருணாநிதி மரியாதைப் பன்மை வழக்கமாகி விட்ட காலத்தில் வாழ்கிறார். கம்பன் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வராத காலத்தில் வாழ்ந்தான்.

கடவுள் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு அல்ல. நபிகள் நாயகத்தை அவ்வாறு கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கருதுகிறோம். மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வருவதற்கு முன்னரே கடவுள் அவன் என்றும் நீ என்றும் குறிப்பிடப்பட்டான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு தான் தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்தார்கள் என்பது தான் இதற்குக் காரணம்.

அல்லாஹ்வை அவன் என்று கூறுகின்ற முஸ்லிம்கள் மற்ற எந்தச் சமுதாயமும் கடவுளுக்கு அளிக்கும் மரியாதையை விட அதிக மரியாதை அளிப்பதைக் காணலாம். எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போதும் கடவுளைப் பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் தான்.

அவன் என்று கூறுவது மரியாதைக் குறைவுக்காக அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மேலும் "அவர்' என்பதும் அவர்கள் என்பதும் பலரைக் குறிக்கின்ற சொல்லாகும்.

அல்லாஹ் கூறினார்கள் எனக் கூறும் போது நிறைய அல்லாஹ் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும். வார்த்தையில் காட்டும் மரியாதையை விட ஏகத்துவம் மிகவும் முக்கியமானதாகும். அல்லாஹ்வை அவர்கள் என்று கூறிப் பழகி விட்டால் எதிர்காலத்தில் நிறைய அல்லாஹ்கள் இருந்திருப்பார்களோ என்று நினைத்து விடலாம். அவ்வாறு நினைத்தால் இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து விடும். ஒருவன் என்ற கூறுவது தான் முக்கியமானது என்பதால் அவன் என்று கூறுவதை தமிழ் கூறும் முஸ்லிம்கள் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அதே சமயத்தில் மார்க்கத்தில் இப்படி எந்தக் கட்டளையும் இல்லை.

அல்லாஹ்வை அவர் என்றோ நீங்கள் என்றோ ஒருவர் கூறினால் மார்க்கத்தில் இது குற்றமாகாது. அவ்வாறு கூறும் உரிமை அவருக்கு உள்ளது.

மரியாதையை மனதில் வைத்து ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் "அவன்' எனக் கூறுவதே சிறந்தது என்பது நமது கருத்தாகும்.

04.08.2011. 15:54

<< First < Previous [4 / 4] Next > Last >>



செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
90 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி