மனிதன் 950 ஆண்டுகள் வாழ்ந்திருக்க முடி

மனிதன் 950 ஆண்டுகள் வாழ்ந்திருக்க முடியுமா

என் பெயர் அப்துர்ரஹ்மான் (ஹரி ஹர சுதன்),

நான் கல்லூரியில் படிகின்றேன், நான் இஸ்லாத்தை ஏற்று 4வருடங்கள் ஆனது எனினும் என் தந்தை தாயுடன் தான் வசித்து வருகிறேன் அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை.

ஒரு சமயம் என் தோழர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும்போது பி ஜே அவர்கள் பேசிய (குரானும் நவீன அறிவியலும்) என்ற டீவீடீயைப் போட்டுக் காட்டினேன்.

அதில் பி.ஜே அவர்கள் பேசும் போது நுஹ் (அலைஹிவசல்லாம்) அவர்கள் 950 வருடங்கள் வாழ்த்தாக குரான் சொல்வதாக கூறினார் , அது அல்லாவின் வார்த்தை எனவே எனக்கு எந்த ஐயமும் இல்லை, எனினும் என் தோழர்கள் மனிதனின் வாழ்நாளோ 60 , 70 ஆண்டுகளாக இருக்க குரான் 950 வருடங்கள் மனிதன் வாழ்ந்ததாகக் கூறுவதற்கு எதேனும் அறிவியல் சான்றுகள் உள்ளதா , என்று கேட்கின்றார்கள் எனினும் அந்தக் கப்பலைக் கண்டு படித்திருப்பதை நான் கூறினேன் எனினும் அது இருக்கட்டும் , வாழ்நாள் குறித்த கேள்விக்கு பதில் அறிவியல் பூர்வமாக வேண்டும் என்று கேட்கின்றார்கள்.

அப்துர்ரஹ்மான்

பதில்

ஒரு மனிதர் 950 வருடங்கள் வாழ்ந்தார் என்பது வரலாற்றுச் செய்தி. அந்த மனிதர் மட்டுமல்ல. அந்தச் சமுதாயமே இது போல் அதிக காலம் வாழ்ந்துள்ளது.

அவர் (நூஹ்) அவர்களிடையே 950 வருடங்கள் வாழ்ந்தார் என்ற திருக்குர்ஆனின் வாக்கியம். அவர்களிடையே என்ற சொல்லில் இருந்து அந்த மக்களும் நூஹ் நபியைப் போல் 950 வருடங்கள் வாழ்ந்துள்ளனர் என்ற கருத்தை நாம் பெறலாம்.

இப்போது மனிதர்களின் அதிக பட்ச உயரம் ஆறு அடி என்ற அளவில் இருப்பதை நாம் காண்கிறோம். ஆனால் முன் காலத்தில் வாழ்ந்த மனிதனின் எலும்புக்கூடுகள் மற்றும் படிமங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் தற்போதைய மனிதனின் பருமன், உயரம் ஆகியவற்றை விட அதிகமாக உள்ளன. இப்போது வாழும் மனிதனின் அளவில் தான் முந்தைய சமுதாயம் இருக்கவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

இது போல் தான் முந்தைய சமுதாயத்தின் வாழ்நாள் இப்போது உள்ளதை விட பன்மடங்கு அதிகமாக இருந்திருக்கலாம் என்பது விஞ்ஞானத்துக்கு எதிரானது அல்ல.

எந்த விஞ்ஞானமும் ஆரம்பம் முதலே மனிதனின் ஆயுள் காலம் 60 ஆண்டுகள் என்று கூறவில்லை.

இது போன்ற வரலாற்றுச் செய்திகளைப் பார்க்கும் போது அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்பதாக இருந்தால் இது இன்ன விஞ்ஞானத்துக்கு முரணாக உள்ளது என்ற அளவில் தான் கேட்கலாம். வரலாறுகளுக்கு அறிவியல் சான்று கேட்பதே அடிப்படையில் தவறாகும்.

இப்போதைய மனிதன் சராசரியாக 50 ஆண்டுகள் வாழ்கிறான். ஆனால் நம்முடைய பாட்டன்மார்களின் சராசரி வயது 70 என்ற அளவில் இருந்தது. ஐம்பது ஆண்டுகளுக்குள் இப்படி வித்தியாசம் இருக்கும் போது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இதை விட பன்மடங்கு வித்தியாசம் இருப்பதை எந்த விஞ்ஞானத்தாலும் மறுக்க முடியாது

Published on: April 15, 2013, 7:22 AM Views: 3709

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top