ஜகாத் கொடுத்த பணத்தில் இருந்து நகை வ�

ஜகாத் கொடுத்த பணத்தில் இருந்து நகை வாங்கினால் அதற்கு ஜகாத் உண்டா? 

நகைக்கு ஜகாத் கொடுத்த பின் அந்த நகையை விற்று அந்தப் பணத்திற்கு வேறு பொருள் வாங்குகின்றேன். இப்பொழுது இந்தப் பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?

பதில் :

நமது செல்வங்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுது கொள்ளுங்கள். உங்கள் மாதம் (ரமலானில்) நோன்பு வையுங்கள். உங்கள் செல்வங்களுக்குரிய ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்களில் அதிகாரம் படைத்தவர்களுக்குக் கட்டுப்படுங்கள். உங்கள் இறைவனுடைய சொர்க்கத்தில் நுழைவீர்கள்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)

நூல் : திர்மிதீ 559

நகைக்கு ஜகாத் கொடுத்து விட்டால் அந்தச் செல்வத்துக்குரிய ஜகாத கடமை நிறைவேறி விடுகின்றது. அதன் பிறகு அந்த நகையை விற்று வேறு பொருள் வாங்கினால் பொருள் மாறுபட்டாலும் செல்வம் என்ற அடிப்படையில் இதற்குரிய கடமை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. இப்போது அதே செல்வம் தான் வேறு வடிவமாக மாற்றப்பட்டுள்ளது.

எனவே வாங்கப்பட்ட புதிய பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

உங்களிடம் உள்ள பணத்துக்கு ஜகாத் கொடுத்து விட்டு அந்தப்பணத்தில் இருந்து வீடோ, வேறு சொத்தோ வாங்கினால் அப்போதும் இது தான் நிலை. கேள்வி பதில்தொழுகைஜகாத்மார்க்கம்

Published on: February 26, 2011, 6:47 PM Views: 2944

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top