ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என

ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என்று யாராவது கூறியுள்ளார்களா? 

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்று எந்த அறிஞராவது கூறி இருக்கிறாரா?

ஜாபர் அலி

பதில்

இந்தக் கேள்விக்குரிய பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் இஸ்லாத்தின் முக்கியமான  ஒரு அடிப்படையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கருத்துக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரம் இல்லையென்றால் அது ஒரு போதும் மார்க்க அங்கீகாரத்தைப் பெறாது.

உலகில் உள்ள மார்க்க அறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவாக அது இருந்தாலும் சரியே. நீ குர்ஆன் ஹதீஸை கடைப்பிடித்தாயா? என்று தான் இறைவன் மறுமையில் நம்மிடம் கேட்பான். அறிஞர்கள் கூறிய கருத்தை ஏன் கடைப்பிடிக்கவில்லை என்று கேட்க மாட்டான்.

குர்ஆன் ஹதீஸில் ஆதாரமில்லாத ஒரு விஷயத்தை அறிஞர்களின் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தினால் நீ ஏன் இதைப் பின்பற்றினாய்? என்று தான் இறைவன் மறுமையில் கேட்பான். எனவே கொடுத்த பொருளுக்கு மறுபடியும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. அப்படியிருக்க அறிஞர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்பதற்காக கொடுத்த பொருளுக்கு மறுபடியும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கினால் இறைவனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது.

ஸகாத் விஷயத்தில் நம்முடைய இந்த நிலைபாட்டை மறுப்பவர்கள் நமக்கு முன் ஒரு அறிஞர் கூட இந்தக் கருத்தை கூறவே இல்லை என்று பேசி வருகின்றனர். இவர்களின் இந்த வாதம் சத்தியத்தை அறிய உதவாது என்றாலும் இது உண்மைக்குப் புறம்பான கருத்தாகும். ஒரு பொருளுக்கு ஒரு முறை மட்டுமே ஸகாத் கடமை என்ற சட்டத்தை அனைத்து செல்வங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்பது நமது நிலைபாடு.

நமக்கு முன்னால் வாழ்ந்த சில அறிஞர்கள் அனைத்து செல்வங்களுக்கும் இவ்வாறு கூறாவிட்டாலும் சில விஷயங்களில் நமது கருத்தையே கூறியுள்ளனர்.

உரிமையாளரால் தீனி போடப்பட்டு வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு அவற்றின் ஆயுளில் ஒரு முறை மட்டுமே ஸகாத் உண்டு என்ற கருத்தை சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

ஆபரணங்களுக்கும் பணிக்கு ஈடுபடுத்தப்படும் கால்நடைகளுக்கும் ஒரு முறை ஸகாத் கொடுத்துவிட்டால் மறு தடவை கொடுக்க வேண்டியதில்லை என்று சிலர் கூறியுள்ளனர்.

அறுவடை செய்யப்பட்ட பயிர்களுக்கும் ஒரு முறை மட்டுமே ஸகாத் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தகவல்களை இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அல்முஹல்லா என்ற தனது சட்ட ஆய்வு நூலில் ஸகாத்துடைய பாடத்தில் பதிவு செய்துள்ளார். (பாகம் : 6 பக்கம் : 47)

அணியப்படும் ஆபரணங்களில் ஒரு முறை மட்டுமே ஸகாத் என்று நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்தத் தகவல் பைஹகீயில் 7331 வது செய்தியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

எனவே ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதில் யாரும் மாற்றுக் கருத்து கொண்டதில்லை என்ற வாதம் பொய்யானது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

30.05.2011. 12:52




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
85 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி