கடனாளிக்கு ஜகாத் கடமையா

கடனாளிக்கு ஜகாத்
  உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகள் போக எஞ்சியிருக்கும் சொத்துக்குத் தான் ஜகாத் கடமையாகும் என்று இங்கே   http://www.onlinepj.com/kelvi_pathil/jakath_kelvi/pennin_nakaikaluku/  கூறியுள்ளீர்கள்.

தேவைக்கு மேல் மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்று குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்படவில்லை. செலவு போக மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்ற  கருத்தைச் சில அறிஞர்கள் கூறினாலும் அது ஏற்கத்தக்கதல்ல. தேவைக்கு மேல் மீதமானவை என்பது குழப்பமான கருத்துடையதாகும். தேவைக்கு மேல் என்றால் ஒரு நாள் தேவையா? ஒரு மாதத் தேவையா? ஒரு வருடத் தேவையா? என்பது பற்றி அவரவர் விளக்கம் கூறிக் கொண்டு  ஜகாத் கொடுக்காமல் இருக்கும் தந்திரத்தை இதன் மூலம் கையாள்வார்கள்ஒருவன் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு இது என் தேவைக்கு உரியது என்று கூறலாம். இன்னும் தனக்குத் தேவையான தோட்டம், துரவு, கார், பங்களா ஆகிய அனைத்துமே தேவைக்கு உரியது என்று வாதிட இந்தக் கருத்து வழி வகுக்கும்கிலோ கணக்கில் தங்க ஆபரணத்தை அணிந்து கொண்டு கணவனை மகிழ்விக்கும் தேவைக்காக இதை வைத்துள்ளேன் என்று பெண்கள் கூறலாம். மொத்தத்தில் ஜகாத் என்பதே நடைமுறையில் இல்லாமல் போய் விடும். என்று இங்கே http://www.onlinepj.com/kelvi_pathil/jakath_kelvi/ கூறியுள்ளீர்கள். 

மேலே நீங்கள் குறிப்பிட்ட இரண்டும் ஒன்றோடு ஒன்று வேறுபடுகிறதேசரியான விளக்கத்தை தருமாறு கேட்டுகொள்கிறேன் 

மேலும், கடன் இருந்தால் ஜகாத்' எவ்வாறு கொடுக்க வேண்டும்கடன்' எல்லாம் முழுமையாக அடைத்துவிட்டு ஜகாத் குடுக்க வேண்டுமா? அல்லது கடன் இருந்தாலும் ஜகாத்' முறையாக கொடுத்துவிட வேண்டுமா?  

பதில்

நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள விஷயம் முரண்பாடானவை தான். இரண்டாவதாக நீங்கள் சுட்டிக்காட்டும் கருத்து தான் சரியானது. முதலாவதாக நீங்கள் சுட்டிக்காட்டிய பதிலில் தேவைக்கு போக மிஞ்சியதற்குத் தான் ஜகாத் என்ற வாசகம் கவனக் குறைவாக இடம் பெற்றுள்ளது. நீங்கள் சுட்டிக்காட்டிய பின் அதை சரி செய்து விட்டோம்.

நன்றி

கடன் இருந்து அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஸகாத் கடமையில்லை.

ஏனென்றால் கடன்பட்டவர் ஸகாத்தை வாங்கும் நிலையில் இருக்கின்றார். ஸகாத்தைப் பெறும் நிலையில் இருப்பவர் பிறருக்கு ஸகாத்தை வழங்க முடியாது.

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَاِبْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنْ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ(60)9

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் (9 : 60)

1393حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلَّا لِخَمْسَةٍ لِغَازٍ فِي سَبِيلِ اللَّهِ أَوْ لِعَامِلٍ عَلَيْهَا أَوْ لِغَارِمٍ أَوْ لِرَجُلٍ اشْتَرَاهَا بِمَالِهِ أَوْ لِرَجُلٍ كَانَ لَهُ جَارٌ مِسْكِينٌ فَتُصُدِّقَ عَلَى الْمِسْكِينِ فَأَهْدَاهَا الْمِسْكِينُ لِلْغَنِيِّ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து நபர்களைத் தவிர வேறு எந்த செல்வந்தருக்கும் ஸகாத் பொருள் ஆகுமானதல்ல. (அவர்கள் யாரென்றால்) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர். ஸகாத்தை வசூலிக்கும் பணியாளர். கடன்பட்டவர். தனது செல்வத்தைக் கொடுத்து ஸகாத் பொருளை விலைக்கு வாங்கிக்கொண்டவர். ஏழை அண்டை வீட்டார் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸகாத் பொருளை அந்த ஏழையிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற செல்வந்தர்.

அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி) அவர்கள்

நூல் : அபூதாவுத் (1393)

"அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. கடனைத் தவிர!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 3498

எனவே கடன் வாங்கியவர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவது தான் அவருடைய முதல் கடமை.

ஒருவருடைய சொத்துக்கள் அவர் பட்ட கடனை விட அதிகமாக இருந்தால் கடன் எவ்வளவு உள்ளதோ அதைக் கழித்துவிட்டு மீதமுள்ள சொத்தின் மதிப்பைக் கணக்கிட வேண்டும். எஞ்சியுள்ள சொத்துக்கள் ஸகாத் கடமையாகுவதற்குரிய அளவு (நிஸாப்) அல்லது அதை விடவும் அதிகமாக இருந்தால் எஞ்சியுள்ள இந்தச் சொத்துக்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவரிடம் 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. இவருக்கு 5 லட்சம் கடன் உள்ளது என்றால் இந்த 5 லட்சத்தைக் கழித்துவிட்டு மீதமுள்ள 45 லட்சங்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.கேள்வி பதில்தொழுகைகடனாளிஜகாத்கடமை

Published on: March 25, 2011, 11:43 AM Views: 3819

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top