ஜகாத் என்று சொல்லித் தான் ஜகாத் கொடு�

ஜகாத் என்று சொல்லித் தான் ஜகாத் கொடுக்க வேண்டுமா

எவ்வளவு பணம் இருந்தால் ஸ்காத் கடமையாகும்? ஸகாத் பணம் என்று சொன்னால் அதை என் உறவினவர் வாங்க மாட்டார். எனவே இது ஸகாத் பணம் என்று சொல்லாமல் ஸகாத் கொடுக்கலாமா?

அபூ பக்கர்

பதில்

11 பவுன் அளவிற்கு நகையோ அல்லது அதற்கு நிகரான பணமோ இருந்தால் ஸகாத் கடமையாகி விடும். நீங்கள் வீட்டை விற்றதன் மூலம் கிடைத்தத் தொகை இந்த அளவிற்கோ இதை விட அதிகமாகவோ இருந்தால் அப்பணத்துக்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.

உங்கள் உறவினர் ஏழையாக இருந்தால் அவருடைய மருத்துவ செலவுக்காக உங்களுடைய ஸகாத் பணத்தை அவருக்கு தாரளமாக வழங்கலாம்.

ஸகாத் வாங்குபவரிடம் இது ஸகாத் பணம் என்று சொல்லித் தான் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. எனவே இதைத் தெரிவிக்காமல் நீங்கள் ஸகாத் கொடுப்பது தவறல்ல. கேள்வி பதில்தொழுகைஜகாத்மார்க்கம்

Published on: May 14, 2011, 12:10 AM Views: 2593

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top