சிறு குழந்தைகளுக்கு கூட ஃபித்ரா கடமையாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

? ரமளானில் ஃபித்ரு ஸதகா வழங்குவதால் நோன்பாளியின் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றது. மேலும் அதன் பயனாக வசதியற்ற நமது சகோதரர்கள் பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் இறைவன் வழியமைத்துள்ளான். அதே சமயம், நோன்பு கடமையாகாத, எவ்வித பாவமும் செய்திராத குழந்தைகளுக்கும் இந்த ஃபித்ரு ஸதகா கடமையாக்கப் பட்டிருப்பதன் நோக்கம் என்ன? இதில் இறைவன் நன்மையை நாடியிருப்பான் என்றாலும் இதற்கு மேலும் தெளிவு உள்ளதா? விளக்கவும்.

அபூபிலால், தோஹா கத்தர்

நோன்பு நோற்றவர் வீணான காரியங்கüல் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும் ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்கüல் ஒரு தர்மம் போல் அமையும் என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), 

நூல்: அபூதாவூத் 1371

இந்த ஹதீஸில் ஸதகத்துல் ஃபித்ர் கடமையாக்கப் பட்டதன் நோக்கத்தைக் குறிப்பிடும் போது, நோன்பின் தவறுகளுக்குப் பரிகாரம், ஏழைகளுக்கு உணவு என்று இரண்டு காரணங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதைத் தங்களின் கேள்வியிலும் குறிப்பிட்டுள்ளீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தெளிவான காரணத்தைக் கூறி விட்ட பிறகு நாம் வேறு காரணங்களை ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

சிறுவர்களுக்கு நோன்பு கடமையில்லை என்றாலும் ஏழைகளின் உணவுத் தேவையை நிறைவேற்றும் பொருட்டு, அவர்கள் மீதும் ஸதகத்துல் ஃபித்ரை கடமையாக்கி, அதை அந்தச் சிறுவர்களின் பொறுப்பாளர்களை நிறைவேற்றுமாறு மார்க்கம் கட்டளையிடுகின்றது.

பெரியவர்கள் ஸதகத்துல் ஃபித்ர் வழங்கும் போது நோன்பின் தவறுகளுக்குப் பரிகாரம், ஏழைகளுக்கு உணவு என்று இரண்டு நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள். சிறுவர்களுக்காக ஸதகத்துல் ஃபித்ர் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவு வழங்கும் நன்மையை மட்டும் பெற்றுக் கொள்வார்கள்

 

குறிப்பு: 2004 ஏப்ரல் மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி

January 9, 2015, 6:02 PM

விவசாயத்துக்கு செலவு செய்ததைக் கழித

விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் பயிர்களுக்குச் செலவிட்ட தொகையைக் கழித்துவிட்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது கழிக்காமல் மொத்த வருமானத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு கொடுக்க வேண்டுமா?

தொடர்ந்து படிக்க June 10, 2011, 11:58 PM

நெல்லுக்கு ஜகாத் உண்டா

நெல்லுக்கு ஸகாத் உண்டா? குறிப்பிட்ட நான்கு தானியங்களைத் தவிர மற்ற தானியங்களுக்கு ஸகாத் இல்லை என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு நெல்லுக்கு ஸகாத் இல்லை எனச் சிலர் கூறுகின்றனர்.

தொடர்ந்து படிக்க June 10, 2011, 11:51 PM

ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என

ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என்று யாராவது கூறியுள்ளார்களா? 

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்று எந்த அறிஞராவது கூறி இருக்கிறாரா?

தொடர்ந்து படிக்க May 30, 2011, 11:22 PM

ஜகாத் என்று சொல்லித் தான் ஜகாத் கொடு

ஜகாத் என்று சொல்லித் தான் ஜகாத் கொடுக்க வேண்டுமா

எவ்வளவு பணம் இருந்தால் ஸ்காத் கடமையாகும்? ஸகாத் பணம் என்று சொன்னால் அதை என் உறவினவர் வாங்க மாட்டார். எனவே இது ஸகாத் பணம் என்று சொல்லாமல் ஸகாத் கொடுக்கலாமா?

தொடர்ந்து படிக்க May 14, 2011, 12:10 AM

கடனாளிக்கு ஜகாத் கடமையா

கடனாளிக்கு ஜகாத்   “உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகள் போக எஞ்சியிருக்கும் சொத்துக்குத் தான் ஜகாத் கடமையாகும்” என்று இங்கே   http://www.onlinepj.com/kelvi_pathil/jakath_kelvi/pennin_nakaikaluku/  கூறியுள்ளீர்கள்

தொடர்ந்து படிக்க March 25, 2011, 11:43 AM

ஜகாத் கொடுத்த பணத்தில் இருந்து நகை வ

ஜகாத் கொடுத்த பணத்தில் இருந்து நகை வாங்கினால் அதற்கும் ஜகாத் உண்டா 

நகைக்கு ஜகாத் கொடுத்த பின் அந்த நகையை நான் விற்று விட்ட பின் அந்தப் பணத்திற்கு வேறு பொருள் வாங்குகின்றேன். இப்பொழுது இந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா

தொடர்ந்து படிக்க February 26, 2011, 6:47 PM

பணமாக பித்ரா கொடுக்கலாமா

 பணமாக பித்ரா கொடுக்கலாமா?  ரமலான் மாதம் ஃபித்ரா தர்மமாக உணவுப் பொருள்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் திரட்டி விநியோகிக்கப்பட்டது. ஆனால் இப்போது பணமாகத் திரட்டி விநியோகம் செய்வது நபிவழிக்கு முரண் இல்லையா என்று மாற்றுக் கருத்துடையவர்கள் கேட்கின்றனர். இதற்குத் தகுந்த விளக்கம் தரவும்

தொடர்ந்து படிக்க April 8, 2010, 10:27 AM

பயிர் விளைச்சலில் நீர் பாய்ச்சி

 

பயிர் விளைச்சலில் நீர் பாய்ச்சி விளைபவற்றில் 5 விழுக்காடும், தானாக விளைபவற்றில் 10 விழுக்காடும் ஜகாத் கொடுக்க வேண்டும். இது நாம் செய்த செலவு போக கிடைக்கும் இலாபத்திலா? அல்லது மொத்த விளைச்சலிலா?

தொடர்ந்து படிக்க August 16, 2009, 7:48 AM

இருப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் ஜகாத

இருப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? 

கேள்வி : நான் கடந்த மூன்று வருடங்களாக வங்கியில் 2 இலட்சம் ரூபாய் வைத்துள்ளேன். நான் ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு தடவை கொடுத்தால் போதுமா? ஒருவரிடம் ஐந்து இலட்சம் மதிப்புள்ள கடை உள்ளது. வாடகையாக மாதாமாதம் 12,000 ரூபாய் வருமானம் வருகிறது. இப்போது அவர் ஐந்து இலட்சத்திற்கு மட்டும் ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது வாடகையாக வரும் 12,000க்கும் ஸகாத் கொடுக்க வேண்டுமா?

தொடர்ந்து படிக்க March 24, 2012, 10:10 AM

உறவினர்களுக்கு ஜகாத் கொடுக்கும் போது ஜகாத் என்று சொல்லாமல் கொடுக்கலாமா ?

 

உறவினர்களுக்கு ஜகாத் கொடுக்கும் போது ஜகாத் என்று சொல்லாமல் கொடுக்கலாமா ?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

January 13, 2014, 12:59 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top