எனக்காக துஆ செய்யுங்கள் எனக்கேட்கலா
நாம் பிறரிடம்எனக்காக துஆ செய்யுங்கள்" என்று சொல்கிறோமே. இது ஒரு வகையில் யோசிக்கும் போது அல்லாஹ்விற்கு இணை வைப்பது போல? தெரிகிறதே இவ்வாறு சொல்வதற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளதா? மற்றவர்கள் ரசூல் (சல்) அவர்களிடம் இவ்வாறு கேட்டதாக ஆதாரம் உண்டு என்று நினைக்கிறேன். ரசூல் (சல்) அவர்கள் பிறரிடம் இவ்வாறு கூறியிருக்கிறார்களா? ஆதாரம் தரவும்.
நாஷித் அஹ்மத்
பதில்
இறைவனுடைய இடத்தில் பிறரை வைப்பதே இணைவைப்பாகும். நமக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு பிறரிடம் கூறும் போது இறைவனுடைய எந்தத் தகுதியையும் அவருக்கு நாம் வழங்கவில்லை. மாறாக நாம் யாரிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறுகிறோமோ அவரும் அல்லாஹ்வின் அடிமை தான் என்ற கருத்து இந்தக் கோரிக்கையில் அடங்கியுள்ளது.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தைச் செய்யுமாறு பிறரிடம் கூறுவது தவறல்ல. பிறருக்காக பிரார்த்தனை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது மட்டுமின்றி மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ (10) 59
அவர்களுக்குப் பின் வந்தோர் "எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (59 : 10)
رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا (28) 71
"என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே!'' (எனவும் பிரார்த்தித்தார்)
அல்குர்ஆன் (71 : 28)
4914حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ صَفْوَانَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ وَكَانَتْ تَحْتَهُ الدَّرْدَاءُ قَالَ قَدِمْتُ الشَّامَ فَأَتَيْتُ أَبَا الدَّرْدَاءِ فِي مَنْزِلِهِ فَلَمْ أَجِدْهُ وَوَجَدْتُ أُمَّ الدَّرْدَاءِ فَقَالَتْ أَتُرِيدُ الْحَجَّ الْعَامَ فَقُلْتُ نَعَمْ قَالَتْ فَادْعُ اللَّهَ لَنَا بِخَيْرٍ فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ قَالَ فَخَرَجْتُ إِلَى السُّوقِ فَلَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَقَالَ لِي مِثْلَ ذَلِكَ يَرْوِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه مسلم
ஸஃப்வான் கூறுகிறார் : நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்ற போது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலிலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா (ரலி) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், "இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?'' என்று கேட்டார். நான் "ஆம்'' என்றேன். அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும் போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், "இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக் கொள்வாயாக! என இறைவனிடம் பிரார்த்திக்கிறார். அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்'' என்று கூறினார்கள்.
பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்ற போது, அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் அவ்வாறு கூறியதாக அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள்.
முஸ்லிம் (5281)
4912 حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُمَرَ بْنِ حَفْصٍ الْوَكِيعِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ حَدَّثَنَا أَبِي عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلَّا قَالَ الْمَلَكُ وَلَكَ بِمِثْلٍ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் போது, வானவர் "உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்!'' என்று கூறாமல் இருப்பதில்லை.
அறிவிப்பார் : அபுத்தர்தா (ரலி)
முஸ்லிம் (5279)
நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் பல சந்தர்ப்பங்களில் தங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அந்தத் தோழர்களுக்காக பிரார்த்தனை செய்துள்ளார்கள். இவ்வாறு கூறுவது இணைவைப்பு என்றால் இதைகள் நாயகம் நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று பிரார்த்தனை செய்திருக்க மாட்டார்கள்.
5652حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي أَنْ لَا أَتَكَشَّفَ فَدَعَا لَهَا حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا مَخْلَدٌ عَنْ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِي عَطَاءٌ أَنَّهُ رَأَى أُمَّ زُفَرَ تِلْكَ امْرَأَةً طَوِيلَةً سَوْدَاءَ عَلَى سِتْرِ الْكَعْبَةِ رواه البخاري
கறுப்பு நிறப் பெண்மணி ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்'' என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, "நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும் போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (5652)
3805 حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ قَالَ نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي قَالَ فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا وَوَطْبَةً فَأَكَلَ مِنْهَا ثُمَّ أُتِيَ بِتَمْرٍ فَكَانَ يَأْكُلُهُ وَيُلْقِي النَّوَى بَيْنَ إِصْبَعَيْهِ وَيَجْمَعُ السَّبَّابَةَ وَالْوُسْطَى قَالَ شُعْبَةُ هُوَ ظَنِّي وَهُوَ فِيهِ إِنْ شَاءَ اللَّهُ إِلْقَاءُ النَّوَى بَيْنَ الْإِصْبَعَيْنِ ثُمَّ أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَهُ ثُمَّ نَاوَلَهُ الَّذِي عَنْ يَمِينِهِ قَالَ فَقَالَ أَبِي وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ ادْعُ اللَّهَ لَنَا فَقَالَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ رواه مسلم
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தை (புஸ்ர் பின் அபீபுஸ்ர்-ரலி) அவர்களிடம் (விருந்தாளியாகத்) தங்கினார்கள். அப்போது அவர்களுக்கு அருகே உணவும் (பேரீச்சம் பழம், பாலாடை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட "வத்பா' எனும்) ஒரு வகைப் பலகாரமும் வைத்தோம். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு பேரீச்சம் பழங்கள் கொண்டு வரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, அவற்றின் கொட்டைகளை (பாத்திரத்தினுள்ளே போடாமல்) தம்மிரு விரல்களுக்கிடையே வைத்திருந்(துவிட்டு பிறகு வீசியெறிந்)தார்கள். பிறகு ஒரு பானம் கொண்டு வரப்பட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அருந்தினார்கள். பிறகு மீதியிருந்ததைத் தமக்கு வலப் பக்கத்திலிருந்தவருக்குக் கொடுத்தார்கள். பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படத் தயாரான போது) என் தந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு, "எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக!'' (அல்லாஹும்ம, பாரிக் லஹும் ஃபீமா ரஸக்த்தஹும்,, வஃக்ஃபிர் லஹும், வர்ஹம்ஹும்) எனப் பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)
நூல் : முஸ்லிம் (4149)
மேலும் நாம் அன்றாடம் நமது தொழுகையில் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்காக ஸலவாத் எனும் துஆ செய்கிறோம். இவ்வாறு தனக்காக துஆ செய்யுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நம்மை வலியுறுத்தி உள்ளனர். மேலும் பாங்கு முடிந்தவுடன் எனக்காக துஆச் செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்று நாம் அல்லாஹும்ம் ரப்ப ஹாதிஹித் ... என்ற துஆவை பாங்குக்குப் பின்னர் ஓதுகிறோம். இதையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
உயிருள்ளவர் தன்னைப் போன்று உயிருடன் இருப்பவரிடம் தனக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கூறுவது தவறல்ல. ஆனால் உயிருள்ளவர் இறந்து போனவரிடம் இவ்வாறு கோரிக்கை வைப்பது இணை வைப்பாகும்.
நாம் உயிருள்ளவரிடம் பேசும் போது அவரை சாதாரண மனிதன் என்றே கருதுகின்றோம். ஆனால் இறந்து போனவரிடம் பேசும் போது அவருக்கு இறைவனுடைய தன்மைகள் இருப்பதாக கருதப்படுகின்றது.
சப்தமின்றி மனதுக்குள் கேட்கப்படும் கோரிக்கையை அல்லாஹ்வால் மட்டுமே அறிய முடியும். எந்த மொழியில் கேட்டாலும் அதை இறைவனால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஒரே நேரத்தில் எத்தனை பேர் அழைத்தால் அனைவரின் பிரார்த்தனையையும் அவனால் மட்டுமே பிரித்து அறிய முடியும். இந்தத் தன்மைகள் மனிதர்களுக்கு இல்லை.
இறந்து போனவரிடம் கோரிக்கை வைப்பவர்கள் மேற்கண்ட தன்மைகள் இறந்து போனவர்களுக்கு இருப்பதாக நினைக்கின்றனர். எனவே தான் அல்லாஹ்விடம் கேட்பது போன்று இவர்களிடம் கேட்கின்றனர். இது இணைவைப்பாகும்.
19.04.2011. 06:13
தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்
தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்குமா?
திருக்குர்ஆன் மூலம் ஒரு முஸ்லிம் பல வித நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.
குர்ஆனைச் சிந்திப்பது மட்டுமின்றி அதன்படி அமல் செய்தால் அதற்கான நன்மையைப் பெற முடியும்.
ஒருவர் மூலத்தை வாசித்து மொழி பெயர்ப்பைப் பார்த்து புரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் அவர்கள் எல்லா விதமான நன்மைகளையும் பெற்றுக் கொள்வார்கள்.
ஒருவர் அர்த்தத்தை விளங்காமல் வெறுமனே ஓதிக் கொண்டு வந்தால் அந்த நன்மை மட்டும் தான் அவருக்குக் கிடைக்கும். மற்றொருவர் மூலத்தை ஓதத் தெரியாமல் புரிந்து கொள்ள மட்டும் முயற்சி செய்தால் அதற்கான நன்மை அவருக்குக் கிடைக்கும்.
15.04.2011. 13:39
கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா
கடன் வாங்கி குர்பானி கொடுப்பது சரியா?
சலீம் பாஷா
பதில்
குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமை என்று மார்க்கம் கூறவில்லை. இது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட வணக்கமாகும். இவ்வணக்கத்தை நிறைவேற்றியவருக்கு நன்மை உண்டு. இதைச் செய்யாவிட்டால் குற்றம் ஏதுமில்லை.
அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை உள்ளது.
கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (3498)
வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில் இருக்கும்போது மேலும் கடன் பட்டு தன் மீது சுமையை அதிகப்படுத்திக் கொள்வதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
இதையும் பார்க்கவும்.
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/kadan_vangi_kurbani/
http://onlinepj.com/books/kurbaniyin_sattangal/
11.04.2011. 13:55
நபியின் கப்ருக்கு சென்றால் என்ன ஓதவே
நபியின் கப்ருக்கு சென்றால் என்ன ஓதவேண்டும்
சதகத்துல்லாஹ்
நாம் பொது மையவாடிக்குச் சென்றால் கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனையைத் தான் நபியின் கப்ருக்குச் சென்றால் கூறிக் கொள்ள வேண்டும். இதற்கு என பிரத்யேகமாக எதையும் கூற வேண்டியதில்லை.
"அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்லிலித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்'' என்று சொல்'' என்றார்கள்.
(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக் கூடியவர்களாக உள்ளோம்.)
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (1774)
மதீனாவுக்குச் செல்வது பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்வது பற்றியும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.
"(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: புகாரி 1189, 1197, 1864, 1996
இந்த ஹதீஸினடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் உட்பட எந்த அடக்கத்தலத்துக்கும் பிரயாணம் செய்யக் கூடாது என்று அறிய முடியும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் வீடுகளை அடக்கத் தலங்களாக ஆக்காதீர்கள். மேலும் எனது அடக்கத் தலத்தில் விழா எடுக்காதீர்கள். என் மீது சலவாத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் கூறும் சலவாத்து நீங்கள் எங்கிருந்தாலும் என்னை வந்தடையும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அபூதாவுத் (1746)
தனது மண்ணறையில் மக்கள் குழுமி விடக் கூடாது என்பதற்காக நபியவர்கள் என் மீது சலவாத்துச் சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அது என்னை வந்தடையும் என்று போதிக்கிறார்கள்.
நபியவர்கள் மீது நாம் கூறும் சலவாத்தை வானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்கிறார்கள். எனவே மதீனாவிற்குச் சென்று சலாம் சொல்ல வேண்டும் என்று நினைப்பது தவறு.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பூமியில் சுற்றித் திரியும் வானவர்கள் அல்லாஹ்விற்கு இருக்கிறார்கள். அவர்கள் என் சமூகத்தினரிடமிருந்து சலாத்தை எனக்கு எத்தி வைக்கிறார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : அஹ்மத் (3484)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளிவாசல் மதீனாவில் உள்ளது; பிரயாணம் செய்து அதிக நன்மையை நாடும் மூன்று பள்ளிகளில் ஒன்றாக அது அமைந்துள்ளது; அங்கே தொழுவது ஏனைய பள்ளிகளில் (மஸ்ஜிதுல் ஹராம் நீங்கலாக) தொழுவதை விட ஆயிரம் மடங்கு உயர்வானது என்ற நோக்கத்திற்காக மதீனாவுக்குச் செல்லலாம். ஹஜ்ஜுக்குச் சென்றவர்களும் மதீனா செல்லலாம்.
சொந்த ஊரிலிருந்தே அப்பள்ளியில் தொழுவதற்காகவே தனிப் பிரயாணமும் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு மதீனாவுக்குச் சென்றவர்கள் அப்பள்ளியில் இயன்ற அளவு தொழ வேண்டும். அதன் பிறகு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தையும், மற்ற அடக்கத்தலங்களையும் ஸியாரத் செய்யலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை பிரத்யேகமாக ஸியாரத் செய்வது பற்றி ஒரே ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூட இல்லை. பொதுவாக கப்ருகளை ஸியாரத் செய்வது பற்றிக் கூறப்படும் ஹதீஸ்களின் அடிப்படையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரையும் ஸியாரத் செய்யலாம்.
10.04.2011. 08:54
தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்
தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்ற ஹதீஸ் சரியானதா
குளிப்பு கடமையான நிலையிலும், மாதவிடாய் நேரத்திலும் குர்ஆன் ஓதலாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் அபூதாவூதில் 229 வது ஹதீஸில் குளிப்பு கடமையான நேரங்களில் குர்ஆன் ஓதக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதே?
யூசுஃப்
நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்:
198 حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ قَالَ دَخَلْتُ عَلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا وَرَجُلَانِ رَجُلٌ مِنَّا وَرَجُلٌ مِنْ بَنِي أَسَدٍ أَحْسَبُ فَبَعَثَهُمَا عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَجْهًا وَقَالَ إِنَّكُمَا عِلْجَانِ فَعَالِجَا عَنْ دِينِكُمَا ثُمَّ قَامَ فَدَخَلَ الْمَخْرَجَ ثُمَّ خَرَجَ فَدَعَا بِمَاءٍ فَأَخَذَ مِنْهُ حَفْنَةً فَتَمَسَّحَ بِهَا ثُمَّ جَعَلَ يَقْرَأُ الْقُرْآنَ فَأَنْكَرُوا ذَلِكَ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَخْرُجُ مِنْ الْخَلَاءِ فَيُقْرِئُنَا الْقُرْآنَ وَيَأْكُلُ مَعَنَا اللَّحْمَ وَلَمْ يَكُنْ يَحْجُبُهُ أَوْ قَالَ يَحْجِزُهُ عَنْ الْقُرْآنِ شَيْءٌ لَيْسَ الْجَنَابَةَ رواه أبو داود
நானும் இன்னும் இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். (அவ்விருவரில்) ஒருவர் எங்களைச் சார்ந்தவர். இன்னொருவர் பனூ அசத் கிளையைச் சார்ந்தவர் என்று கருதுகிறேன். அவ்விருவரையும் அலீ (ரலி) அவர்கள் ஒரு (முக்கிய) பணி நிமித்தமாக அனுப்பினார்கள். அப்போது (அவ்விருவரையும் நோக்கி) நீங்கள் இருவரும் செயலாற்றுவதில் திறம் படைத்தவர்கள். உங்கள் மார்க்கப் பணியை திறம்படச் செய்யுங்கள் என்று அறிவுரை பகர்ந்தார்கள். பிறகு கழிப்பிடம் சென்று வெளியே வந்து தண்ணீர் கொண்டு வரச் செய்து அதில் ஒரு கையளவு நீரள்ளி அதை (கைகளில் அல்லது வேறு உறுப்பில்) தடவிக் கொண்டார்கள். பிறகு குர்ஆன் ஓதத் துவங்கினார்கள். இதை அவர்கள் (தோழர்கள்) ஆட்சேப்பித்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளிவந்து எங்களுக்கு குர்ஆனைக் கற்றுத் தருவார்கள். எங்களுடன் இறைச்சியைச் சாப்பிடுபவர்கள். கடமையான குளிப்பைத் தவிர வேறு எதுவும் குர்ஆன் ஓதுவதை விட்டும் அவர்களைத் தடுக்காது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் சலமா
நூல் : அபூதாவுத் (198)
இந்தச் செய்தியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் சலமா நல்லவர் என்றாலும் அவருடைய மனன சக்தியில் கோளறு உள்ளது. இவருடைய மோசமான மனனத் தன்மையின் காரணத்தால் பல அறிஞர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
இவரிடத்தில் பலவீனம் இருப்பதாக இமாம் புகாரி கூறியுள்ளார். இவர் சரியான செய்திகளையும் பிழையான செய்திகளையும் அறிவிப்பவர் என இமாம் அபூஹாதிம் கூறியுள்ளார். இவர் தவறிழைப்பவர் என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இவர் அறிவிக்கும் செய்திகள் சரியானவை அல்ல என இமாம் ஹாகிம் கூறியுள்ளார். இவரது மனன சக்தியில் பாதிப்பு ஏற்பட்டு மாறிவிட்டது என இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.
ஹதீஸ் கலை அறிஞர்கள் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என இமாம் ஷாஃபி கூறியுள்ளார். இவருக்கு வயது முதிர்ந்தவுடன் மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மேற்கண்ட செய்தியை இவர் பாதிப்பு ஏற்பட்ட காலத்திலே அறிவித்ததாகவும் ஷுஃபா கூறியதாக இமாம் பைஹகீ தெரிவிக்கின்றார். அப்துல்லாஹ் பின் சலமா பலவீனமானவர் என்பதால் இவர் இடம்பெறும் மேற்கண்ட ஹதீஸை இமாம் அஹ்மது பின் ஹம்பள் பலவீனமானது என்று கூறியுள்ளார்.
எனவே இந்த பலவீனமான செய்தியை வைத்துக் கொண்டு குளிப்புக் கடமையானவர்கள் குர்ஆனை ஓதக் கூடாது எனக் கூற முடியாது.
இது குறித்து மேலும் விபரம் அறிய கீழ்க்காணும் லின்குகளைக் காணுங்கள்!
http://onlinepj.com/kelvi_pathil/penkal_kelvi/MATHAVIDAY_KALATHIL_QURANAI_THODALAMA/
http://onlinepj.com/kelvi_pathil/ithara_vanakangal/ulu_illamal_quranai_thosalama/
07.04.2011. 23:48
இறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்ப
இறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன்
அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு
இது போன்று இன்னும் பல துஆக்களில் இறைவனிடம் நபிகள் நாயகம் (ஸல்) )அவர்களுக்கு வாகளித்ததை த்தருவாயாக! என்று கேட்கின்றோம். என் கேள்வி என்ன வென்றால் இறைவன் வாக்கு தவறுபவன் இல்லை. அப்படி இருக்க இறைவன் வாகளித்ததை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய அவசியம் என்ன? குரான் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும்.
முஹம்மத் யூனுஸ்
பதில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன்வழங்குவதாக வாக்களித்த பின் அவனிடம் அதையே வேண்டுவது தேவையற்றது என்று மேலோட்டமாகப் பார்க்கும் போது தோன்றலாம். ஆனால் பிரார்த்தனை செய்வதில் தேவைகளை கோருவது மட்டுமே நோக்கம் இல்லை. வேறு பல நோக்கங்களும் அதனுள் அடங்கியுள்ளன.
இறைவன் வாக்களித்ததையே நாம் கேட்டாலும் இறைவன் வாக்கு மாற மாட்டான் என்று புகழ்பாடுதல் அதனுள் அடங்கியுள்ளது.
அவன் வாக்களித்ததை நிறைவேற்ற மறுத்து விட்டாலும் அவனை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவனாக அதை நிறைவேற்றினால் தவிர யாரும் கட்டுப்படுத்த முடியாது. நீ வாக்களித்து விட்டாய். அதை தருவதைத் தவிர வேறு வழி இறைவனுக்கு இல்லை என்று நினைக்காமல் அவனாக பெருந்தன்மையுடன் நிறைவேற்றினால் தவிர அவனை யாரும் வற்புறுத்த முடியாது என்ற நம்பிக்கை இவ்வாறு பிரார்த்திப்பதில் அடங்கியுள்ளது.
அத்துடன் நமக்கு மார்க்கத்தை போதித்த நபியவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அந்த நன்றிக்கடனை நாம் தீர்க்க எந்த வாய்ப்பும் இல்லை. நபியவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்யும் போது நமக்கு நேர்வழி காட்ட பாடுபட்ட நபியவர்களுக்கு நாம் நன்றி செலுத்திய கடமையும் நிறைவெறி விடுகிறது.
இறைவனை எஜமானனாக ஒப்புக் கொண்டு அவனிடம் இறைஞ்சுவதால் நமக்கு நண்மை கிடைக்கிறது. இப்படி இது போல் நமக்குத் தெரியாத இன்னும் பல நன்மைகள் இதனால் நமக்குக் கிடைக்கும்.
28.03.2011. 13:34
சலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவே
சலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா
சிலர் "துஆ கேட்கும் போது அல்லாஹ்வை புகழ்ந்து , நபி( ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்ன பிறகு தான் நம் தேவைகளை கேட்க வேண்டும். துஆவை முடிக்கும் போதும் ஸலவாத் சொல்லித் தான் முடிக்க வேண்டும். இப்படி கேட்டால் தான் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்" என்கிறார்கள். இதற்கு திர்மிதியில் ஹதீஸ் உண்டு என்கிறார்கள். அது ஆதாரப்பூர்வமான ஹதீஸா? இப்படித் தான் கேட்க வேண்டுமா?
காதிர்
பதில் :
பொதுவாக எப்போது பிரார்த்தனை செய்தாலும் முதலில் இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலாவாத்துக் கூற வேண்டும். இதன் பிறகே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சிலர் கூறிவருகிறார்கள்.
இதற்கு திர்மிதி அபூதாவூத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கூறுவது போல் அனைத்து பிராத்தனைகளிலும் இந்த ஒழுங்கு முறை பேணப்பட வேண்டும் என அந்த ஹதீஸ் கூறவில்லை.
மாறாக அந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் தொழுகையில் அத்தஹிய்யாத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைக்கு மட்டுமே இந்த ஒழுங்கு முறையைக் கடைபிடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை அறியலாம்.
1266حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِي أَبُو هَانِئٍ حُمَيْدُ بْنُ هَانِئٍ أَنَّ أَبَا عَلِيٍّ عَمْرَو بْنَ مَالِكٍ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدْ اللَّهَ تَعَالَى وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجِلَ هَذَا ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ رواه أبو داود (3399 ترمذي)
ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)
நூல் : அபூதாவுத் (1266) திர்மிதீ (3399)
தொழுகையின் இறுதி அமர்வில் நாம் ஓத வேண்டியவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். முதலில் அத்தஹிய்யாத் ஓதி இறைவனைப் புகழ வேண்டும். இதன் பிறகு ஸலவாத்துச் சொல்ல வேண்டும். ஆனால் மேற்கண்ட சம்பவத்தில் அந்த நபித்தோழர் இவற்றைச் செய்யாமல் எடுத்த எடுப்பில் பிரார்த்தனையைத் துவங்கி விடுகிறார். அத்தஹிய்யாத் அமர்வில் ஓத வேண்டியதை ஓதாமல் விட்டு விடுகின்றார். இச்செயலையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு வெளியில் எத்தனையோ பிரார்த்தனைகளைச் செய்துள்ளார்கள். நமக்கும் பல பிரார்த்தனைகளைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
உதாரணமாக கழிவறைக்குள் நுழையும் முன்பு இறைவா ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்றும் கழிவறையிலிருந்து வெளியேறும் போது இறைவா உன் மன்னிப்பை வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்கள்.
மேற்கண்ட பிரார்த்தனையை அல்லாஹ்வை போற்றி நபியவர்கள் மீது ஸலவாத்துக் கூறிய பிறகு தான் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. இது போன்று வெறுமனே பிரார்த்தனை வாசகங்கள் மட்டும் அடங்கிய எண்ணற்ற துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவே இறைவனிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதற்கும் ஹதீஸ்களில் எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன.
எனவே அல்லாஹ்வைப் புகழ்ந்து நபியவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லிய பிறகு தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று மார்க்கம் நிபந்தனையிடவில்லை.
ஒவ்வொரு துஆவின் போதும் ஒருவர் அல்லாஹவைப் புகழ்ந்து பின்னர் ஸலவாத்து ஓதி அதன் பின்னர் கோரிக்கையைக் கேட்டால் அது தடுக்கப்பட்டதல்ல. ஆனால் அது துஆவுக்கான நிபந்தனைகளில் ஒன்றாக மார்க்கம் கூறவில்லை.
22.02.2011. 23:12
தூங்கும் முன் 67வது சூரா ஓதலாமா?
தூங்கும் முன் 67வது சூரா ஓதலாமா?
இரவில் தபாரகள்ளதி சூராவை ஒதுவது சம்பந்தமாக வரும் ஹதீஸ் என்ன தரத்தில் உள்ளது?
தொடர்ந்து படிக்க 07.04.2010. 22:12
எவ்வாறு துஆ கேட்பது?
எவ்வாறு துஆ கேட்பது?
தொடர்ந்து படிக்க 05.04.2010. 17:28
கூட்டு குர்பானியில் சமமாக பணம் போட வ
கூட்டு குர்பானியில் சமமாக பணம் போட வேண்மா
தொடர்ந்து படிக்க 09.03.2010. 23:04
இரண்டு வயதுப் பிள்ளைக்கு அகீகா கொடுக
இரண்டு வயதுப் பிள்ளைக்கு அகீகா கொடுக்கலாமா
என் மகனுக்கு இரண்டு வயதாகிறது. அகீகா எப்போது கொடுக்க வேண்டும்?
அல்ஹலீஃபா
ஏழாம் நாள் தான் கொடுக்க வேண்டும். அது கடந்து விட்டால் கொடுக்க முடியாது.
இது குறித்து முழு விபரம் அறிய ஏற்கனவே அளிக்கப்பட்ட பின்வரும் பதிலைக் காணவும். அகீகா எப்போது கொடுப்பது
08.03.2010. 16:25
ஸலவாத் எப்படி கூறுவது
ஸலவாத் எப்படி கூறுவது
நபி(ஸல்)அவர்கள் மீது ஸலவாத் எவ்வாறு கூறுவது என்பது அறியும் ஆனால் நாம் ஒவ்வொரு தடவையும் நபி(ஸல்)அவர்கள் பெயர் செவியுறும் போது நாம் எவ்வாறு பதில் கூறுவது!முழு ஸலவாத்தைக் கூற வேண்டுமா? அல்லது வெறுமனே ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் என்று கூறினால் போதுமா? விளக்கம் தரவும். தொடர்ந்து படிக்க 16.01.2010. 11:15
கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா? கண்களை மூடிக்கொண்டு துஆச் செய்யும் போது உள்ளச்சம் ஏற்படுகிறது. ஆனால் மாற்று மதத்தினரின் வழக்கமாக இது உள்ளதால் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். தொடர்ந்து படிக்க 23.08.2009. 02:05 கூட்டு துஆ கூடாது கூட்டு துஆ கூடாது என்பதற்கு திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் தொடர்ந்து படிக்க 05.05.2010. 10:54 உளு நீங்குவது போல உணர்ந்தால்? தொழுகைக்கு உளு செய்யும் போது அல்லது உளு செய்த பிறகு எனக்கு உளு நீங்கி விடுவது போல உணர்கின்றேன். நான் என்ன செய்வது? தொடர்ந்து படிக்க 03.05.2010. 16:49 தொடர்ந்து படிக்க 26.05.2010. 19:41 நபியின் பெயருடன் ஸலவாத் அவசியமா இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகச்சியில் நீங்கள் பேசும் போது நபிகள் நாயகம், அல்லது முஹம்மது நபி என்று சொல்கிறீர்கள் அதில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொன்னால் என்ன? மாற்று மத நன்பர்களிடம் பேசுவதால் சொல்லத் தேவையில்லை என்று சொல்லப் போறீர்களா? தொடர்ந்து படிக்க 16.05.2010. 00:36 காஜா மைதீன் பதில்: அல்முல்கு மற்றும் அஸ்ஸஜ்தா அத்தியாயங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தபாரகல்லதீ என்று துவங்கும் அல்முல்க் 67 ஆவது அத்தியாயத்தையும் அஸ்ஸஜ்தா என்ற 32 வது அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹாகிம் அஸ்ஸுனனுல் குப்ரா மற்றும் ஷுஃபுல் ஈமான் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : السنن الكبرى للنسائي - كتاب عمل اليوم والليلة ذكر ما يستحب للإنسان أن يقرأ كل ليلة قبل أن ينام - حديث : 10140 أخبرنا أبو داود ، قال : حدثنا الحسن ، قال : حدثنا زهير ، قال : سألت أبا الزبير : أسمعت جابرا يذكر أن نبي الله صلى الله عليه وسلم كان لا ينام حتى يقرأ الم تنزيل وتبارك ؟ " . قال : ليس جابر حدثنيه ، ولكن حدثني صفوان أو أبو صفوان ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலிஃப் லாம் மீம் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும் தபாரகல்லதீ (என்று துவங்கும் 67 ஆவது) அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள். நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா இந்த செய்தியில் நபித்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் உட்பட ஸஃப்வான் அபுஸ்ஸுபைர் ஸுஹைர் ஹசன் மற்றும் அபூதாவுத் ஆக மொத்தம் ஆறு நபர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாகும். எனவே இரவில் உறங்கச் செல்லும் முன் இவ்விரு அத்தியாயங்களை ஓதிக் கொள்வதற்கு நபிமொழியில் ஆதாரம் உள்ளது. அல்இக்லாஸ் அல்ஃபலக் அந்நாஸ் அத்தியாயங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு உறங்கச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல் ஹுவல்லாஹு அஹது, குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற அளவில் தடவிக் கொள்வார்கள். பிறகு தமது உடலின் முன் பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள் . அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல் புகாரி (5017) ஆயத்துல் குர்சி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார் . காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்கவே மாட்டான் . அறிவிப்பவர் அபூஹீரைரா (ரலி) நூல் புகாரி ( 3275 ) அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை யார் இரவு நேரத்தில் ஓதுகின்றாரோ அந்த இரண்டும் அவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக ஆகிவிடும் , அறிவிப்பவர் அபூ மஸ்வூத் ( ரலி ) நூல் புகாரி ( 4008 ) 31.12.2010. 11:51 கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஹபீபுர்ரஹ்மான் கடமையான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்சி ஓதுவதைச் சிறப்பித்து பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியை இமாம் நஸாயீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா எனும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள். السنن الكبرى للنسائي - كتاب عمل اليوم والليلة ثواب من قرأ آية الكرسي دبر كل صلاة - حديث : 9585 8603 أخبرنا الحسين بن بشر ، بطرسوس ، كتبنا عنه قال : حدثنا محمد بن حمير قال : حدثنا محمد بن زياد ، عن أبي أمامة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت " * அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்சியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை. அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா (9585) இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இது ஆதாரப்பூர்வமான செய்தி. எனவே ஆயத்துல் குர்ஸியை ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதிக் கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்சியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை. அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா (9585) இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும். ஆனால் சிலர் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிடுகின்றனர். மேற்கண்ட செய்தியில் முஹம்மது பின் ஹிம்யர் என்ற அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். இவரைத் தவிர இதில் இடம்பெறும் மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. இவர் விஷயத்தில் மட்டும் இவர் பலவீனமானவர் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அறிஞர்களின் ஒட்டுமொத்த விமர்சனங்களையும் சேர்த்துப் பார்க்கையில் இவர்களின் இந்த முடிவு தவறானது என்பதை அறியலாம். முஹம்மது பின் ஹிம்யர் நம்பகமானவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் இமாம் யஹ்யா பின் மயீன் மற்றும் துஹைம் ஆகியோர் கூறியுள்ளனர். இவர் விஷயத்தில் நான் நல்லதைத் தவிர வேறெதையும் அறியவில்லை என இமாம் அஹ்மது கூறியுள்ளார். இமாம் நஸயீ அவர்களும் இமாம் தாரகுத்னீ அவர்களும் இவரிடம் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளனர். இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவர் நம்பகமானவர் என்று சான்றளித்துள்ளார். இவர் விஷயத்தில் இரண்டு அறிஞர்கள் மட்டுமே குறை கூறியுள்ளனர். இமாம் அபூஹாதிம் இவரை ஆதாரமாக எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இமாம் அபூஹாதிமைப் பொறுத்தவரை அறிவிப்பாளர்களைக் குறை கூறுவதில் கடினப் போக்குள்ளவர் ஆவார். இத்துடன் பலகீனத்துக்குரிய காரணத்தையும் அவர் தெளிவுபடுத்தவில்லை. எனவே இந்த அறிவிப்பாளர் குறித்து இவர் செய்துள்ள விமர்சனம் பல அறிஞர்களின் கூற்றுக்கு முரணாகவும் தெளிவில்லாமலும் இருப்பதால் இதை ஏற்க இயலாது. இவர் குறை கூறுவதில் நடுநிலை பேணாதவர் என்பதால் இவருடைய கூற்றை விட்டுவிட்டு மேற்கண்ட அறிஞர்களின் கூற்றை ஏற்பதே சரி. அடுத்து யஃகூப் பின் சுஃப்யான் என்பவர் முஹம்மது பின் ஹிம்யர் வலிமையானவர் இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார். இந்தச் செய்தி பலவீனமானது என்று கூறுவோர் இந்த அறிஞரின் கூற்றையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர். ஆனால் இந்த அறிஞர் செய்துள்ள விமர்சனத்தால் அறிவிப்பாளர் ஹிம்யர் பலகீனமடைய மாட்டார். மேலும் இவர் குறித்து நல்ல விதமாகக் கூறியுள்ள அறிஞர்களின் கருத்துக்கு முரணில்லாத வகையில் யஃகூப் பின் சுஃப்யான் அவர்களின் விமர்சனத்தை நாம் புரிந்து கொள்ள இயலும். லைச பில் கவீ என்ற அரபுச் சொல்லை இவர் பயன்படுத்தியுள்ளார். இச்சொல் மோசமான மனனதத் தன்மையுள்ளவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்காது. மாறாக இலேசான மனனத் தன்மையுள்ளவர் என்ற அர்த்தத்தைக் கொண்டது என்று ஹதீஸ் கலை நூற்களில் கூறப்பட்டுள்ளது. ஹதீஸ் கலையில் உறுதியான மனனத் தன்மையுள்ளவர்களின் அறிவிப்புகள் ஏற்கப்படுவதைப் போன்று இலேசான மனனத் தன்மையுள்ளவர்களின் அறிவிப்புகளும் ஏற்கப்படும். முரண்பாடுகள் வரும் போதே இத்தகையவர்களின் அறிவிப்புகள் பின்னுக்குத் தள்ளப்படும். உறுதியான மனனத் தன்மை கொண்டவர்களுக்கு அடுத்த அந்தஸ்தை இலேசான மனனத் தன்மை கொண்டவர்கள் பெறுகின்றனர். அறிவிப்பாளர் ஹிம்யர் முதல் தரத்தைப் பெற்றவர் அல்ல. இரண்டாம் தரத்தைப் பெற்றவர் என்ற கருத்தில் தான் யஃகூப் பின் சுஃப்யான் விமர்சனம் செய்துள்ளார். இவரிடம் பிரச்சனை இல்லை என இமாம் நஸாயீ மற்றும் தாரகுத்னீ ஆகியோர் செய்த விமர்சனமும் இந்த அடைப்படையில் உள்ளவை தான். எனவே இவருடைய விமர்சனத்தால் அறிவிப்பாளர் ஹிம்யர் பலவீனராக மாட்டார். அறிவிப்பாளர் ஹிம்யர் விஷயத்தில் இன்னொரு தவறான வாதத்தையும் வைக்கின்றனர். இவர் தனித்து அறிவித்த எந்தச் செய்தியையும் இமாம் புகாரி அவர்கள் தனது நூலில் பதிவு செய்யவில்லை என்பதாலும் இவர் பலவீனமானவர் என்று வாதிடுகின்றனர். இது மிகத் தவறான வாதமாகும். ஒரு இமாம் ஒரு அறிவிப்பாளரைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டால் அந்த அறிவிப்பாளர் பலவீனராகி விடுவார் என ஹதீஸ் கலையில் எங்கும் சொல்லப்படவில்லை. ஹதீஸைத் தொகுப்பவர் எத்தனையோ பல காரணங்களுக்காக ஒருவரிடமிருந்து பதிவு செய்யாமல் இருப்பார். பலகீனம் என்பது தான் இதற்குக் காரணம் என இவர்களால் எப்படி அடித்துச் சொல்ல முடியும்? ஏனென்றால் இமாம் புகாரி அவர்கள் தனது நூலில் ஒருவரின் செய்தியைப் பதிவு செய்வதற்கு தேவையான நிபந்தனைகளைக் காட்டிலும் கூடுதலாக சில நிபந்தனைகளை விதித்துள்ளார்கள். எத்தனையோ நம்பகமானவர்கள் இந்தக் கூடுதல் நிபந்தனைக்கு உட்படவில்லை என்பதால் அவர்களிடமிருந்து இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்யவில்லை. எனவே இவர்கள் அனைவரும் பலவீனமானவர்கள் என்ற முடிவுக்கு நாம் வர முடியுமா? இமாம் இப்னு ஹஜர் அவர்கள் அனைத்து அறிஞர்களின் விமர்சனங்களையும் படித்துவிட்டு அவை ஒன்றுக்கொன்று எதிராக அமைந்திருந்தாலும் அவற்றிலிருந்து தனது முடிவை சுருக்கமாக ஒரு வரியில் தெரிவிப்பார். இந்த அறிஞர் அறிவிப்பாளர் ஹிம்யரைப் பற்றி ளயீஃப் (பலவீனமானவர்) என்று குறிப்பிடாமல் சதூக் நம்பிக்கைக்குரியவர். இலேசான மனனத் தன்மை கொண்டவர் என்று சான்றளித்துள்ளார். அறிவிப்பாளர் ஹிம்யர் விஷயத்தில் அதிகமான அறிஞர்கள் நல்லவிதமாக கூறிய கருத்துக்களே ஏற்புடையதாக இருக்கின்றது. 23.12.2010. 03:30 எதையாவது மறந்து விடும் போது ஸலவாத் கூறினால் உடனே அது நினைவுக்கு வரும் என்று கூறுகிறார்களே இது உண்மையா? M.H.M.நிம்சாத் பதில் : நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதின் சிறப்பை விவரித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. ஆனால் ஸலவாத்துச் சொன்னால் மறந்த விஷயம் நினைவுக்கு வந்துவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸையும் நாம் பார்க்கவில்லை. யார் உங்களிடம் இதைக் கூறினார்களோ அவர்களிடம் இதற்கு ஆதாரத்தைக் கேளுங்கள். 05.12.2010. 10:43கண்களை மூடி துஆச் செய்யலாமா
கூட்டு துஆ கூடாது
உளு நீங்குவது போல உணர்ந்தால்?
இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்புகட
இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையா?
விந்து வெளிப்படுவதற்கு முன்பு இச்சைநீர் மட்டும் வந்தால் குளிப்புக் கடமையாகுமா? அல்லது விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பு கடமையாகுமா?நபியின் பெயருடன் ஸலவாத் அவசியமா
இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்
இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள் எவை?கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர
கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்சி ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா
பதில்
ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத சொல்ல வே
