காயடிக்கப்பட்ட பிராணியை அகீகா கொடுக�

காயடிக்கப்பட்ட பிராணியை அகீகா கொடுக்கலாமா?

சாதிக்

அகீகாவுக்கான பிராணிகளுக்கு தனியாக சட்டம் எதுவும் கூறப்படவில்லை. ஆனாலும் குர்பானிப் பிராணிகளுக்கான சட்டங்கள் கூறப்பட்டுள்ளன. குர்பானியும் அகீகாவும் அல்லாஹ்வுக்காக செய்யப்படும் வணக்கம் என்பதால் குர்பானிப் பிராணிகளை போல் அகீகா பிராணியும் இருப்பதே சிறந்ததாகும்.


காயடிக்கப்பட்ட பிராணியை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்ததாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் இடம் பெறுகிறது. இந்த ஹதீஸில் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார். இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் காயடிக்கப்பட்ட ஆட்டைக் கொடுப்பதற்கு நம்பத் தகுந்த ஹதீஸ்களில் எந்தத் தடையும் வரவில்லை. ஆட்டிற்குக் காயடிப்பதினால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்குமே தவிர தரம் எந்த விதத்திலும் குறைந்து விடாது. ஆகையால் காயடிக்கப்பட்ட பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம். அது போல் அகீகாவும் கொடுக்கலாம்கேள்வி பதில்இதர வணக்கங்கள்காயடிக்கப்பட்டபிராணிகளையும்குர்பானி கொடுக்கலாம்அகீகாவும் கொ

Published on: August 25, 2011, 4:16 AM Views: 2725

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top