வருடம் முழுவதும் நோன்பு வைப்பதும் ஒரு நாளைக்கு 1000 ரக்அத் தொழுவதும் நபிவழியா?

? பெரியார்கள் வருடம் முழுவதும் நஃபில் நோன்புகள் நோற்றுள்ளதாகவும் ஒரு நாளைக்கு 1000 ரக்அத்துகள் தொழுததாகவும் எங்கள் ஊர் ஆலிம் பயான் செய்தார். இவை நபிவழியா?

எஸ்.ஏ. அமீர் அலீ, கிள்ளை.

! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து கேட்டனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள், நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு, "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே?'' என்று சொல்லிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், "நான் என்ன செய்யப் போகின்றேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகின்றேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகின்றேன்'' என்றார். மூன்றாம் நபர், "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகின்றேன். ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்'' என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தானே! அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவனாவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கின்றேன். விட்டு விடவும் செய்கின்றேன். தொழவும் செய்கின்றேன். உறங்கவும் செய்கின்றேன். மேலும் நான் பெண்களை மணம் முடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல் : புகாரி 5063

"அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூது (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூது (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பை விட்டு விடுவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி),

நூல் : புகாரி 1131

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆண்டு முழுவதும் நஃபிலான நோன்புகள் நோற்பதற்கும், உறங்காமல் தொழுது கொண்டிருப்பதற்கும் தடை உள்ளதை அறியலாம்.

ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பதாவது சாத்தியம் என்று கூறலாம். ஆனால் ஒரு நாளில் ஆயிரம் ரக்அத்துகள் தொழுவது சாத்தியமில்லாத விஷயம். எவ்வளவு விரைவாகத் தொழுதாலும் ஒரு ரக்அத் தொழுவதற்குக் குறைந்தது இரண்டு நிமிடங்களாவது ஆகும். அப்படியானால் ஆயிரம் ரக்அத்துக்கள் தொழுவதற்கு 2000 நிமிடங்கள் தேவை. ஆனால் ஒரு நாளைக்கு 1440நிமிடங்கள் தான் இருக்கின்றன.

தொழுகையைத் தவிர வேறு எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல் தொடர்ந்து தொழுது கொண்டேயிருந்தாலும் 720 ரக்அத்துகளுக்கு மேல் தொழ முடியாது. எனவே பெரியார்கள் ஆயிரம் ரக்அத்கள் தொழுததாகக் கூறுவது முழுக்க முழுக்க கட்டுக் கதை என்பதில் சந்தேகமில்லை.

அப்படியே அவர்கள்  தொழுதிருந்தாலும் அவர் மார்க்க அடிப்படையில் அவர்கள் பெரியார்கள் அல்லர் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் உணர்த்துகின்றன. இது போன்றவர்களை நபி (ஸல்) அவர்கள், "என்னைச் சார்ந்தவர் இல்லை' என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்ட பிறகு, "பெரியார்' பட்டம் கொடுத்து புகழ்ந்து பேசுவதற்கு உண்மை முஸ்லிம்கள் யாரும் முன்வர மாட்டார்கள்.

December 20, 2014, 6:04 AM

ஆயத்துல் குர்ஸி ஓதினால் ஹஜ் செய்த நன்மை கிடைக்குமா

ஆயத்துல் குர்ஸி ஓதினால் வறுமை விலகும் என்பதும், 70000 மலக்குகளின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதும், 40 ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் என்பதும், 40 படித்தரங்கள் உயர்த்தப்படும் என்பதும் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின் யாரெல்லாம் ஆயதுல்குர்ஸி (குர்ஆன் 2:255) ஓதுகிறாரோ, மரணத்தைத் தவிர அவர் சொர்க்கத்தை அடைவதிலிருந்து தடுப்பது ஏதுமில்லை என்ற நபிமொழியும் ஆதாரப்பூர்மானதா?

தொடர்ந்து படிக்க April 9, 2014, 12:27 PM

கவனமற்ற காயல் ஃபத்வா

கவனமற்ற காயல் ஃபத்வா

பெருநாள் தினத்தில் கூட்டாகவும் சப்தமிட்டும் தக்பீர் கூறலாமா? அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா என்ற தக்பீரை ஓதுவது நபிவழிக்கு உட்பட்டதா என்ற கேள்விக்கு காயல் பட்டிணம் ஆயிஷா சித்தீகா மகளிர் கல்லூரியில் இருந்து ஒரு ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் சில ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த செயல்களை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக இவர்கள் குர் ஆன் ஹதீஸை வளைத்து தவறான ஃபத்வா அளித்து மக்களை குர் ஆன் ஹதீஸ் என்ற பெயரில் வழி கெடுக்க முயன்றுள்ளனர் என்பது இவர்களின் ஃபத்வாவில் இருந்து தெளிவாகிறது. இது குறித்து அப்துன்னாஸர் அவர்கள் ஆய்வு செய்து இந்த ஃபத்வா எவ்வளவு அபத்தமானது என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.

அந்த ஃபத்வாவையும் அதற்கு அப்துன்னாசர் அளித்த மறுப்பையும் இங்கே இடம்பெறச் செய்துள்ளோம்.

தொடர்ந்து படிக்க August 21, 2011, 3:48 AM

சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிக

சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா

சத்தியம் செய்து முறித்தால் அதற்கான பரிகாரம் என்ன?

ஒரு பாவத்தைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து ஒருவர் அதை மீறி அந்தப் பாவத்தைச் செய்து விட்டார். அந்தப் பாவத்தை ஒரு தடவை மட்டுமின்றி பல தடவை செய்கிறார். இவர் பல தடவை சத்தியத்தை முறித்தவராவாரா? எத்தனை தடவை பாவம் செய்தாரோ அத்தனை தடவை பரிகாரம் செய்ய வேண்டுமா?

முஹம்மத்

தொடர்ந்து படிக்க August 13, 2011, 1:36 AM

பாரகல்லாஹு என்று கூறுவது சரியா

பாரகல்லாஹு என்று கூறுவது சரியா

ஜஸாகல்லா என்று கூறினால் அதற்கு என்ன மறுமொழி சொல்ல வேண்டும்? பாரகல்லாஹு லக என்று கூறுகிறார்களே இதுசரியா?

முஹம்மத் தரோஜ்

தொடர்ந்து படிக்க July 4, 2011, 10:37 AM

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாய

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா?

 

தொழுகையில் ஸலவாத் ஓதும் போது இப்ராஹீம் நபிக்கு அருள் புரிந்த்து போல் முஹம்மத் நபிக்கும் அருள் புரிவாயாக என்று கேட்கிறோம். அல்லாஹ்விடம் கேட்கும் போது இது போல் வேண்டும் அது போல் வேண்டும் என்று கேட்பது சரியா?

செய்யத் நஸ்ஸார்

தொடர்ந்து படிக்க June 8, 2011, 12:46 AM

பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா?

பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா?

 

டாய்லெட் செல்லும் போது ஓதுவதற்கு துவா உள்ளது. அது போல் டாய்லெட் விட்டு வெளி வருவதற்கும் துவா உள்ளது. அதே போல் உளு செய்வதற்கும் முடிப்பதற்கும் பிச்மில்லாஹ்வும் இன்ன பிற வாசகங்களும் உள்ளன, டாய்லெட் உலூ போன்றவை ஒரே இடத்தில இறக்கும் பட்சத்தில் பாத்ரூமிலே எல்லா துவாக்களையும் ஓதலாமா ?

முஹம்மத் ரிஸ்வான்

தொடர்ந்து படிக்க June 3, 2011, 9:36 AM

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வே

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா

பாவமன்னிப்பு கேட்கும் போது பொதுவாக கேட்டால் போதுமா? அல்லது ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டு தனித்த்னியாக பாவமன்னிப்பு கேட்க வேண்டுமா? சில பாவங்களில் இருந்து நாம் திருந்திக் கொள்கிறோம். ஆனால் அத்ற்காக நாம் மன்னிப்பு கேட்காமல் இருந்து விடுகிறோம். இது போதுமா? சிறு பாவங்களுக்கும் மன்னிப்பு கேட்க வேண்டுமா?

ஃபாத்திமா

தொடர்ந்து படிக்க May 26, 2011, 4:08 PM

எனக்காக துஆ செய்யுங்கள் எனக்கேட்கலா

நாம் பிறரிடம்எனக்காக  துஆ செய்யுங்கள்" என்று சொல்கிறோமே. இது ஒரு வகையில் யோசிக்கும் போது அல்லாஹ்விற்கு இணை வைப்பது போல? தெரிகிறதே  இவ்வாறு சொல்வதற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளதா?  மற்றவர்கள் ரசூல் (சல்) அவர்களிடம் இவ்வாறு கேட்டதாக ஆதாரம் உண்டு என்று நினைக்கிறேன். ரசூல் (சல்) அவர்கள் பிறரிடம் இவ்வாறு கூறியிருக்கிறார்களா?  ஆதாரம் தரவும்.

நாஷித் அஹ்மத்

தொடர்ந்து படிக்க April 19, 2011, 4:43 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top