என் தந்தையின் சொத்தை எவ்வாறு பங்கிடு

என் தந்தையின் சொத்தை எவ்வாறு பங்கிடுவது

 

என் தந்தை வபாத் ஆகி 10 வருடம் ஆகின்றது .என் தந்தைக்கு சொத்து  (வீடு) உள்ளது .இப்போது இந்தச் சொத்தை சில காரணங்களுக்காக விற்க உள்ளோம் .வீட்டின் மதிப்பு ஒரு லட்சம் ஆகும் .என் தந்தைக்கு ஒரு மனைவி மற்றும் பிள்ளைகளாக நான் மற்றும் எனது தம்பி ,எனது சகோதரி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளோம்.சொத்தை எவ்வாறு பங்கிடுவது?

பதில் :

இறந்தவருக்கு மனைவி இருந்தால் இஸ்லாமிய வாரிசு உரிமைச் சட்டப்படி மனைவிக்குப் பங்கு உண்டு. இறந்தவருக்கு பிள்ளைகள் இருந்தால் மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும் பிள்ளைகள் இல்லாவிட்டால் மனைவிக்கு நான்கில் ஒரு பாகமும் அதாவது கால் பாகம் கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் உத்தரவிடுகின்றது.

وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِنْ لَمْ يَكُنْ لَهُنَّ وَلَدٌ فَإِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمْ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِنْ لَمْ يَكُنْ لَكُمْ وَلَدٌ فَإِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِنْ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ (12)4

உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்).

அல்குர்ஆன் (4 : 12)

இந்த வசனத்தின் அடிப்படையில் உங்கள் தாய்க்கு மொத்த சொத்தில் எட்டில் ஒரு பாகத்தைக் கொடுக்க வேண்டும். மீதமுள்ள சொத்து மகனுக்கு இரண்டு பங்கு மகளுக்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில் பங்கிடப்பட வேண்டும்.

ஆண் மக்கள் இருவர் இருப்பதால் ஒவ்வொருவருக்கும் இரண்டு பங்கு என்ற கணக்கில் நான்கு பங்குகள் உண்டு. உங்கள் சகோதரிக்கு ஒரு பங்கு உண்டு.

"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன் (4 : 11)

ஒரு லட்சத்தில் எட்டில் ஒரு பாகம் என்பது 12500 ரூபாயாகும். எனவே இந்தத் தொகை உங்களுடைய தாய்க்கு உரிய பங்கு. இது போக மீதமுள்ள 87500 ரூபாயை 5 பங்குகளாக ஆக்கினால் ஒரு பங்கின் மதிப்பு 17500 ஆகும்.

உங்கள் சகோதரிக்கு ஒரு பங்கு உண்டு என்பதால் 17500 ரூபாய் அவருக்கு உரியது. உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் இரண்டு இரண்டு பங்குள் வீதம் உங்களில் ஒவ்வொருவருக்கும் 35000 ரூபாய் உண்டு. 

26.02.2011. 04:29




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
85 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி