கடுமையான அசுத்தம் பட்டால் மண் போட்டு

கடுமையான அசுத்தம் பட்டால் மண் போட்டு கழுவ வேண்டுமா

கடுமையான நஜிஸ் பட்டால் மண் போட்டு கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள் அது உண்மை தானா?

நஸீம்

பதில்

பொதுவாக அப்படி மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. நாயில் எச்சில் பாத்திரத்தில் பட்டால் மண் போட்டு கழுவுமாறு நபிகள் நாய்கம் ஸல் அவர்கள் கட்டளையிட்டுள்ளனர்.    

நாயின் எச்சில் மிகவும் விஷத்தன்மையுடையது. இதன் மூலம் ரேபிஸ் என்ற நோய்  பரவுவதாகச் செய்திகள், எச்சரிக்கை நோட்டீஸ்கள் எல்லா மருத்துவமனையிலும் ஒட்டப்பட்டுள்ளன.

எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாய் பாத்திரத்தில் வாய் வைத்துவிட்டால் அதை ஏழு முறை கழுவ வேண்டும் என்றும் முதலாவது தடவை மண்ணால் கழுவ வேண்டும் என்றும் கூறினார்கள்.

420و حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ رواه مسلم

உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அதைத் தூய்மை செய்யும் முறையானது, ஏழு முறை அதை அவர் கழுவுவதாகும். முதல் முறை மண்ணால் அதைக் கழுவ வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 471

மண்ணால் கழுவ வேண்டும் என்ற சட்டம் நாய் வாய் வைத்த பாத்திரத்திற்கும் மட்டும் உரிய சட்டமாகும். இது அல்லாத முறையில் அசுத்தம் ஏற்பட்டால் அதை வெறுமனே நீரினால் சுத்தம் செய்வது போதுமானது.

01.06.2011. 06:42




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
78 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி