மனைவி பீடி சுற்றும் தொழிலை விட மறுத்

மனைவி பீடி சுற்றும் தொழிலை விட மறுத்தால்?

திருமணத்திற்குப்பின் மனைவி பீடி சுற்றுவதை கணவன் விரும்பவில்லை. இதை அன்பாகவும் கடுமையாகவும் தெரிவித்தும் அதை அவர்  விடுவதாக இல்லை. அவ்வாறு கணவன் பேச்சை மீறி மனைவி பீடி சுற்றலாமா?

முஹம்மத்

பதில்

மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களைத் தாயாரிப்பதையும், அது தொடர்பான வேலைகளைச் செய்வதையும் மார்க்கம் தடை செய்துள்ளது.

وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ(195)2

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் (2 : 195)

மதுவை இஸ்லாம் தடைசெய்துள்ளது. இதைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் அனைவரும் குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மதுவையும், அதைப் பருகக்கூடியவனையும், அதைப் பரிமாறக்கூடியவனையும், அதை விற்பவனையும், வாங்குபவனையும் அதைத் தயாரிப்பவனையும்,  தயாரிக்குமாறு கோருபவனையும், அதைச் சுமந்து செல்பவனையும், யாரிடம் அது கொண்டுசெல்லப்படுமோ அவனையும் அல்லாஹ் சபிக்கின்றான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

 நூல் : அபூதாவுத் 3189

மார்க்கத்திற்கு முரணில்லாமல் கணவன் இடும் கட்டளைகளுக்கு மனைவி அவசியம் கட்டுப்பட வேண்டும். குறிப்பாக கணவன் மார்க்கத்தில் உள்ள இதுமாதிரியான கட்டளையை மனைவிக்கு ஏவினால் தயங்காமல் அதற்குக் கட்டுப்பட வேண்டும்.

இதை மீறினால் மார்க்க வரம்பை மீறிய குற்றமும், கணவனுக்குக் கட்டுப்பட மறுத்த குற்றமும் ஏற்படும். நல்ல பெண்மணி இப்படிப்பட்ட காரியத்தைச் செய்யமாட்டார். பின்வரும் செய்திகள் மனைவி கணவனுக்குக் கட்டுப்படுவதின் அவசியத்தைத் தெளிவுபடுத்துகின்றது.

1417حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى الْمُحَارِبِيُّ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا غَيْلَانُ عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ قَالَ كَبُرَ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا أُفَرِّجُ عَنْكُمْ فَانْطَلَقَ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ إِنَّهُ كَبُرَ عَلَى أَصْحَابِكَ هَذِهِ الْآيَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضْ الزَّكَاةَ إِلَّا لِيُطَيِّبَ مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ وَإِنَّمَا فَرَضَ الْمَوَارِيثَ لِتَكُونَ لِمَنْ بَعْدَكُمْ فَكَبَّرَ عُمَرُ ثُمَّ قَالَ لَهُ أَلَا أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ الْمَرْأَةُ الصَّالِحَةُ إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ رواه أبو داود

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடத்தில் ஒரு மனிதன் சேமிக்கும் சொத்துக்களில் சிறந்ததை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? (அது) நற்குணமுள்ள பெண்மணியாகும். கணவன் அவளைக் காணும் போது கணவனுக்கு மகிழ்ச்சியூட்டுவாள். கணவன் உத்தரவிட்டால் கட்டுப்படுவாள். கணவன் இல்லாத போது அவனுக்காக (உடமைகளை) பாதுகாப்பாள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அபூதாவுத் 1417

 

ஹுசைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரி ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு தேவைக்காக வந்திருந்தார். தேவையை முடித்துக்கொண்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடத்தில் உனக்குக் கணவன் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடத்தில் நீ எவ்வாறு நடந்து கொள்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்னால் இயலாமல் போனாலே தவிர அவருக்கு நன்மை செய்வதில் நான் குறைவு வைக்க மாட்டேன் என்று கூறினார். நீ எவ்வாறு அவரிடத்தில் நடந்து கொள்கிறாய் என்பதில் கவனமாக இருந்து கொள். ஏனென்றால் அவர் தான் உனது சொர்க்கமாவார். உனது நரகுமுமாவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : ஹுஸைன் பின் மிஹ்ஸன் (ரலி)

நூல் : அஹ்மத் 18233

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் இன்னொருவருக்குச் சிரம்பணியுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்திருந்தால் மனைவி தன் கணவனுக்குச் சிரம்பணியுமாறு கட்டளையிட்டிருப்பேன்.

அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)

நூல் : அஹ்மத் 20983

(நான் சூரிய கிரகணத் தொழுகையில் இருந்த போது) எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் அதிகம் பேர் நிராகரிக்கும் பெண்களாகவே இருந்தனர்'' என்று கூறினார்கள். அப்போது "இறைவனையா அவர்கள் நிராகரித்தார்கள்?'' என்று கேட்கப்பட்டதுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கணவனை நிராகரிக்கிறார்கள்; (அதாவது அவன் செய்த) உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் அவள் கண்டு விட்டாளானால் "உன்னிடமிருந்து ஒரு போதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை'' என்று பேசிவிடுவாள்'' என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (29)

13.01.2012. 11:06




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
43 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி