வயதில் மூத்த பெண்ணை மணக்கலாமா

தன்னை விட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்யலாமா?.

அப்துல் பாரி

ஒரு பெண்ணினுடைய மார்க்கப்பற்று அவளுடைய நற்குணம் மற்றும் ஒழுக்கங்கள் ஒரு ஆணிற்கு பிடித்திருந்தால் இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்தலாம் என்ற நம்பிக்கையிருந்தால் வயதில் அதிகமான பெண்ணையோ அல்லது தன்னை விட வயதில் குறைவான் பெண்ணையோ. விதவைப் பெண்ணையோ அல்லது கன்னிப் பெண்ணையோ  திருமணம் செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் தடையில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் நபியாவதற்கு முன்பாக தம்முடைய இருபத்தைந்தாம் வயதில் தம்மைவிட வயதில் மூத்தவரான அன்னை ஹதீஜா (ரலி) அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். தாம் நபியான பிறகும் ஹதீஜா (ரலி) அவர்களுடன் பல்லாண்டுகள் வாழ்க்கை நடத்தியுள்ளார்கள். நபியவர்கள் தம்முடைய மனைவிமார்களில் ஹதீஜா (ரலி) அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கையைத்தான் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வும் ஜிப்ரீலும் ஹதீஜா (ரலி) அவர்களுக்கு ஸலாம் சொல்லியனுப்பி சொர்க்கத்தை கொண்டு நற்செய்தி கூறும் அளவிற்கு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள்.

3821  حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ عُمَارَةَ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَتَى جِبْرِيلُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْ مَعَهَا إِنَاءٌ فِيهِ إِدَامٌ أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ فَإِذَا هِيَ أَتَتْكَ فَاقْرَأْ عَلَيْهَا السَّلَامَ مِنْ رَبِّهَا وَمِنِّي وَبَشِّرْهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ لَا صَخَبَ فِيهِ وَلَا نَصَبَ وَقَالَ إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ اسْتَأْذَنَتْ هَالَةُ بِنْتُ خُوَيْلِدٍ أُخْتُ خَدِيجَةَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَفَ اسْتِئْذَانَ خَدِيجَةَ فَارْتَاعَ لِذَلِكَ فَقَالَ اللَّهُمَّ هَالَةَ قَالَتْ فَغِرْتُ فَقُلْتُ مَا تَذْكُرُ مِنْ عَجُوزٍ مِنْ عَجَائِزِ قُرَيْشٍ حَمْرَاءِ الشِّدْقَيْنِ هَلَكَتْ فِي الدَّهْرِ قَدْ أَبْدَلَكَ اللَّهُ خَيْرًا مِنْهَا    رواه البخاري

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா தம்முடன்  ஒரு பாத்திரத்தில் குழம்பு ...அல்லது உணவு... அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டி ருக்கிறார். அவர் உங்கüடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ காண முடியாத முத்து மாüகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று சொன்னார்கள்.

புகாரி (3820)

பின்வரும் ஹதீசும் நபியவர்கள் ஹதீஜா (ரலி) அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கையின் மகிமையை பறைசாற்றுகிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹாலா பின்த்து குவைலித் (ரலி) கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் (கதீஜா ரலி அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி ''இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்'' என்று சொன்னார்கள். உடனே நான் ரோஷமடைந்து ''எப்போதோ மரணமடைந்து விட்ட தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்)'' என்று கேட்டேன்

புகாரி (3821)

மேலும் நபித் தோழர்களில் பலர் தம்மை விட வயதில் அதிகமான ஸஹாபிப் பெண்களை திருமணம் செய்துள்ளனர். எனவே இதற்கு மார்க்க அடிப்படையில் எந்தத் தடையும் இல்லை

03.02.2012. 16:42

ஆண்களின் திருமண வயது என்ன

கேள்வி : ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு குறைந்த பட்ச வயது என்ன

அப்துல் பாரி

பதில் :

ஆண்களுக்குரிய திருமண வயது என்று ஒரு குறிப்பிட்ட வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

இஸ்லாம் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கருதுகிறது.

அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர்

(அல்குர்ஆன் 4 : 21)

இந்த வசனத்தில் திருமணத்தைக் கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. திருமணம் என்பது கடுமையான உடன்படிக்கை என்றால் கணவன் மனைவி ஆகிய இருவரும் திருமணம் என்றால் என்ன? எதற்காகத் திருமணம் செய்யப்படுகிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையெல்லாம் அறிந்தால் தான் அதை ஒப்பந்தம் என்று கூற முடியும். எனவே இதை எல்லாம் அறிய முடியாத பருவத்தில் உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதற்கு அனுமதி இல்லை.

மேலும் திருமணத்திற்கு பருவ வயதை அடைவது மட்டுமில்லாமல் தனக்கு மனைவியாக வரும் பெண்ணிற்கு பல்வேறு கடமைகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு ஆணிற்கு உள்ளது.

1974 عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ الْحَدِيثَ يَعْنِي إِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا فَقُلْتُ وَمَا صَوْمُ دَاوُدَ قَالَ نِصْفُ الدَّهْرِ رواه البخاري

அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்  நபி (ஸல் ) அவர்கள் என்னிடம் வந்து உமது விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன  உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன என்ற கூறினார்கள்    

(நூல் : புகாரி  (1974)

ஒருவர் திருமணம் செய்யும் மணப் பெண்ணிற்கு மஹர் கொடுத்தல் மற்றும் அவளுடன்  வாழ்க்கை நடத்துவதற்குரிய வசதியைப் பெற்றிருப்பது அவசியமாகும். கணவன் மனைவிக்காக செலவு செய்தல் ஆடை வழங்குதல் உணவளித்தல் போன்ற பல்வேறு பொறுப்புகளை கணவன் மீது மார்க்கம் கடமையாக்கியுள்ளது.

5066 حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ حَدَّثَنِي عُمَارَةُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ دَخَلْتُ مَعَ عَلْقَمَةَ وَالْأَسْوَدِ عَلَى عَبْدِ اللَّهِ فَقَالَ عَبْدُ اللَّهِ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَبَابًا لَا نَجِدُ شَيْئًا فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ رواه البخاري

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :  நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்து கொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள்.

புகாரி (5066)

நஸாயீ கிரந்தத்தில் 2211 இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பில் உங்களில் வசதி படைத்தவர் திருமணம் முடித்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூறப்பட்டுள்ளது

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا(34) 4

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும் ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.

(அல் குர்ஆன் 4 : 34 )

19190  عَنْ جَدِّي قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ نِسَاؤُنَا مَا نَأْتِي مِنْهُنَّ وَمَا نَذَرُ قَالَ حَرْثُكَ ائْتِ حَرْثَكَ أَنَّى شِئْتَ فِي أَنْ لَا تَضْرِبَ الْوَجْهَ وَلَا تُقَبِّحْ وَأَطْعِمْ إِذَا أُطْعِمْتَ وَاكْسُ إِذَا اكْتَسَيْتَ وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ كَيْفَ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ إِلَّا بِمَا حَلَّ عَلَيْهِنَّ  رواه احمد

ஹய்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன? என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள் (உங்கள் மனைவிமார்கள்) உங்கள் விளைநிலங்கள் உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று கொள்ளுங்கள். (அவளை கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதே அவளை அசிங்கமாகத் திட்டாதே நீ உண்ணும் போது  அவளையும் உண்ணச் செய் நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு. வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே.  நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு ஆகுமானவை தவிர மற்ற விஷயங்களில் எப்படி நீங்கள் (அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முடியும்?) என்று கூறினார்கள்.

(நூல் : அஹ்மத் (19190)

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் ஒருவர் பருவ வயதை அடைந்து இஸ்லாம் கூறும் மேற்கண்ட தகுதிகள் அவரிடம் இருந்தால் அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

திருமணத்திற்குப் பின் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் உடற்தகுதி அனைத்தும் இருந்து ஒருவருக்கு திருமணத்தின் போது மணப் பெண்ணிற்கு மஹர் கொடுப்பதற்கு வசதி இல்லை என்றால் அவருக்கு ஆட்சித் தலைவர் அல்லது ஜமாஅத்தினர்கள் உதவி செய்து திருமணம் செய்து வைக்கலாம். 

وَأَنكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمْ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ(32)32

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும் நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (24 : 32)

03.02.2012. 16:40

வெளிநாட்டில் இருந்துகொண்டு தலாக் சொ

வெளிநாட்டில் இருந்துகொண்டு தலாக் சொல்லலாமா?

வெளிநாட்டில் வேலை செய்து வரும் ஒருவர் தன மனைவியை அங்கிருந்து ஊர்செல்லும் இரு நபர்களை சாட்சியாக வைத்து அவ்விருவரும் ஊர் ஜமாத்தில் சாட்சி சொல்லும் பட்சத்தில் விவாகரத்து பண்ணினால் விவாகரத்து செல்லுமா?

ரபியுத்தீன்

பதில்

கணவன் மனைவியை விவாகரத்துச் செய்யும் போது நேர்மையான இரண்டு சாட்சியாளர்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நபியே! பெண்களை நீங்கள் விவாக ரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாக ரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். 

அல்குர்ஆன் (65 : 1,2)

இவ்வசனத்தில்  விவாகரத்துக்குரிய முக்கிய விதியை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாகரத்துச் செய்யும் போது இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியம் என்பதே அந்த விதியாகும்.

ஒருவர் தம் மனைவியை விவாகரத்துச் செய்வதாக இரண்டு நபர்களிடம் கூறிவிட்டால் அவ்விருவரும் சாட்சியாகிவிட மாட்டார்கள்.

விவாகரத்துச் செய்பவனையும், செய்யப்பட்டவளையும் இருவருக்கிடையே விவாகரத்து நடப்பதையும் கண்ணால் காண்பவர் தான் அதற்குச் சாட்சியாக இருக்க முடியும். இத்துடன் தலாக்கில் இன்னும் பல விஷயங்களையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

எதிர்த் தரப்பில் உள்ள பெண் யார்? அவளுடைய கோரிக்கை என்ன? விவாகரத்துக்குப் பின் அவன் அவளுக்கு எவ்வளவு உதவித் தொகை கொடுக்க வேண்டும்? பிள்ளைகள் இருந்தால் அப்பிள்ளைகளுக்கு இவன் செய்ய வேண்டியது என்ன? ஆகிய விஷயங்கள் விவாகரத்து வழங்குவதற்கு முன்பு பேசப்பட வேண்டும்.  இதைப் பின்வரும் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

لَا جُنَاحَ عَلَيْكُمْ إِنْ طَلَّقْتُمُ النِّسَاءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضَةً وَمَتِّعُوهُنَّ عَلَى الْمُوسِعِ قَدَرُهُ وَعَلَى الْمُقْتِرِ قَدَرُهُ مَتَاعًا بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُحْسِنِينَ (236)2

அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் அவருக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.

அல்குர்ஆன் (2 : 236)

விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவன் என்றால் அவனது வசதிக்கேற்ப கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.

وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ البقرة : 233

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார்.

அல்குர்ஆன் (2 : 233)

மேலும் கணவன் மனைவிக்கிடையே பிளவு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் காரியத்தில் சிலர் ஈடுபட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا (35) 4

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (4 : 35)

 

இவை அனைத்தும் பேசி முடிக்கப்பட்ட பின்பே கணவன் தலாக் சொல்ல முடியும். சாட்சி கூற வருபவர்கள் மேலுள்ள அனைத்து விஷயங்களுக்கும் சாட்சிகளாக இருக்க வேண்டும். 

எனவே பிறரிடம் தலாக் சொல்லி அனுப்புவது இஸ்லாம் கூறும் இந்த ஒழுங்கு முறைகளை மீறும் செயலாகும். அவ்வாறு கூறப்படும் தலாக் செல்லத்தக்கதல்ல.

13.01.2012. 22:33

மனைவி பீடி சுற்றும் தொழிலை விட மறுத்

மனைவி பீடி சுற்றும் தொழிலை விட மறுத்தால்?

திருமணத்திற்குப்பின் மனைவி பீடி சுற்றுவதை கணவன் விரும்பவில்லை. இதை அன்பாகவும் கடுமையாகவும் தெரிவித்தும் அதை அவர்  விடுவதாக இல்லை. அவ்வாறு கணவன் பேச்சை மீறி மனைவி பீடி சுற்றலாமா?

முஹம்மத்

பதில்

மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களைத் தாயாரிப்பதையும், அது தொடர்பான வேலைகளைச் செய்வதையும் மார்க்கம் தடை செய்துள்ளது.

وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ(195)2

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் (2 : 195)

மதுவை இஸ்லாம் தடைசெய்துள்ளது. இதைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் அனைவரும் குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மதுவையும், அதைப் பருகக்கூடியவனையும், அதைப் பரிமாறக்கூடியவனையும், அதை விற்பவனையும், வாங்குபவனையும் அதைத் தயாரிப்பவனையும்,  தயாரிக்குமாறு கோருபவனையும், அதைச் சுமந்து செல்பவனையும், யாரிடம் அது கொண்டுசெல்லப்படுமோ அவனையும் அல்லாஹ் சபிக்கின்றான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

 நூல் : அபூதாவுத் 3189

மார்க்கத்திற்கு முரணில்லாமல் கணவன் இடும் கட்டளைகளுக்கு மனைவி அவசியம் கட்டுப்பட வேண்டும். குறிப்பாக கணவன் மார்க்கத்தில் உள்ள இதுமாதிரியான கட்டளையை மனைவிக்கு ஏவினால் தயங்காமல் அதற்குக் கட்டுப்பட வேண்டும்.

இதை மீறினால் மார்க்க வரம்பை மீறிய குற்றமும், கணவனுக்குக் கட்டுப்பட மறுத்த குற்றமும் ஏற்படும். நல்ல பெண்மணி இப்படிப்பட்ட காரியத்தைச் செய்யமாட்டார். பின்வரும் செய்திகள் மனைவி கணவனுக்குக் கட்டுப்படுவதின் அவசியத்தைத் தெளிவுபடுத்துகின்றது.

1417حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى الْمُحَارِبِيُّ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا غَيْلَانُ عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ قَالَ كَبُرَ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا أُفَرِّجُ عَنْكُمْ فَانْطَلَقَ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ إِنَّهُ كَبُرَ عَلَى أَصْحَابِكَ هَذِهِ الْآيَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضْ الزَّكَاةَ إِلَّا لِيُطَيِّبَ مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ وَإِنَّمَا فَرَضَ الْمَوَارِيثَ لِتَكُونَ لِمَنْ بَعْدَكُمْ فَكَبَّرَ عُمَرُ ثُمَّ قَالَ لَهُ أَلَا أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ الْمَرْأَةُ الصَّالِحَةُ إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ رواه أبو داود

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடத்தில் ஒரு மனிதன் சேமிக்கும் சொத்துக்களில் சிறந்ததை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? (அது) நற்குணமுள்ள பெண்மணியாகும். கணவன் அவளைக் காணும் போது கணவனுக்கு மகிழ்ச்சியூட்டுவாள். கணவன் உத்தரவிட்டால் கட்டுப்படுவாள். கணவன் இல்லாத போது அவனுக்காக (உடமைகளை) பாதுகாப்பாள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அபூதாவுத் 1417

 

ஹுசைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரி ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு தேவைக்காக வந்திருந்தார். தேவையை முடித்துக்கொண்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடத்தில் உனக்குக் கணவன் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடத்தில் நீ எவ்வாறு நடந்து கொள்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்னால் இயலாமல் போனாலே தவிர அவருக்கு நன்மை செய்வதில் நான் குறைவு வைக்க மாட்டேன் என்று கூறினார். நீ எவ்வாறு அவரிடத்தில் நடந்து கொள்கிறாய் என்பதில் கவனமாக இருந்து கொள். ஏனென்றால் அவர் தான் உனது சொர்க்கமாவார். உனது நரகுமுமாவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : ஹுஸைன் பின் மிஹ்ஸன் (ரலி)

நூல் : அஹ்மத் 18233

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் இன்னொருவருக்குச் சிரம்பணியுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்திருந்தால் மனைவி தன் கணவனுக்குச் சிரம்பணியுமாறு கட்டளையிட்டிருப்பேன்.

அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)

நூல் : அஹ்மத் 20983

(நான் சூரிய கிரகணத் தொழுகையில் இருந்த போது) எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் அதிகம் பேர் நிராகரிக்கும் பெண்களாகவே இருந்தனர்'' என்று கூறினார்கள். அப்போது "இறைவனையா அவர்கள் நிராகரித்தார்கள்?'' என்று கேட்கப்பட்டதுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கணவனை நிராகரிக்கிறார்கள்; (அதாவது அவன் செய்த) உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் அவள் கண்டு விட்டாளானால் "உன்னிடமிருந்து ஒரு போதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை'' என்று பேசிவிடுவாள்'' என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (29)

13.01.2012. 11:06

திருமணத்தை வீடியோ எடுக்கலாமா

திருமணத்தை வீடியோ எடுக்கலாமா

ஆயிஷா

பதில்

எளிமையான முறையில் நடத்தப்படும் திருமணமே சிறந்த திருமணம் என்று மார்க்கம் கூறுகின்றது.

"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்'' என்று  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அஹ்மத் 23388

திருமணத்தில் தேவையற்ற செலவுகளும் வீண் விரையங்களும் ஆடம்பரங்களும் தவிர்க்கப்பட வேண்டும் என்று இந்த நபிமொழி கூறுகின்றது.

வீடியோ எடுப்பதில் பயன் இருக்கின்றதா? இல்லையா? என்பதைப் பொறுத்துத் தான் அதற்காகச் செலவிடலாமா? செலவிடக் கூடாதா? என்று முடிவு செய்ய வேண்டும்.

திருமணக் காட்சிகளை வீடியோ எடுப்பதில் ஏதாவது நன்மை இருந்தால் அதற்காகச் செலவிடுவது தவறல்ல. உதாரணமாக நபிவழி அடிப்படையில் நடக்கும் திருமணத்தில் மார்க்க சொற்பொழிவு ஆற்றப்படுகின்றது. இந்தச் சொற்பொழிவை வீடியோ எடுத்து அதை இன்னும் பலர் கேட்பதால் அவர்களுக்கு நல்ல அறிவுரை கிடைக்கும் என்றால் அது பயனுள்ள செலவாகும்.

திருமணத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும் இந்த உரை பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை வீடியோ எடுத்து மற்றவர்களை பார்க்கச் செய்வது வீண் விரையமாகாது. இதற்காகச் செலவிடுவது தவறல்ல.

ஆனால் இன்றைக்குப் பல திருமணங்களில் எந்தப் பயனும் இல்லாமல் வீடியோ எடுக்கப்படுகின்றது. திருமணத்துக்கு வருபவர்களையும் செல்பவர்களையும் வீடியோ எடுக்கின்றனர். மணமகனையும் மணமகளையும் வீடியோ எடுக்கின்றனர்.

பெண்கள் தங்களுடைய அலங்காரங்களை அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்துவதும் அந்நிய ஆண்கள் அந்த அலங்காரங்களைப் பார்த்து ரசிப்பதும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு வரும் அனைத்து பெண்களும் அலங்காரம் செய்துகொண்டே வருகின்றனர். வீடியோ எடுப்பவன் இந்தப் பெண்களை அவர்களின் அலங்காரத்துடன் படம் எடுக்கிறான். இதனால் இந்த திருமணத்தில் இஸ்லாமிய ஒழுங்கு முறை மீறப்படுகின்றது.

நமது வீட்டுப் பெண்களை அந்நியன் எவனோ படம் எடுத்தால் கோபம் வருகிறது. இந்தக் கோபம் நியாயமானது. நன்மையானது. இதே காரியத்தைத் தான் கல்யாண நிகழ்ச்சியிலும் செய்கிறார்கள். இதை மட்டும் நாம் எப்படி அனுமதிக்கலாம்?

எந்த நன்மையும் தராத காட்சிகளை வீடியோ எடுத்தால் அதில் பொருளாதாரம் விரையமாகுவதைத் தவிர எந்த நன்மையுமில்லை. எனவே இந்த வீண் விரையத்தைத் தவிர்க்க வேண்டும்.

அது மட்டுமின்றி வீடியோ எடுத்து தருபவர்கள் அதில் ஒரு பிரதியை வைத்துக் கொண்டு தங்கள் நண்பர்களுடன் அதைப் பார்த்து அசிங்கமான விமர்சனம் செய்வதும் நம் காதுகளுக்கு வருகிறது. இன்னும் சிலர் வீடியோவில் எடுக்கப்பட்ட காட்சியில் முகத்தை மாற்றி அல்லது முகத்தை வைத்துக் கொண்டு உடலை மாற்றி ஆபாச வீடிய்யோக்களாக இணைய தளங்களில் வெளியிடுவதும் நடக்கிறது. இதனால் நல்ல பெண்கள் பலரின் குடும்ப் வாழ்க்கை நாசமாகப் போகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு நடந்து கொள்பவன் தான் மானமுள்ள சரியான முஸ்லிமாவான்.

01.01.2012. 11:36

மாதவிடாயில் உடலுறவுக்குப் பரிகாரம்?

மாதவிடாயில் உடலுறவுக்குப் பரிகாரம்?

மாதவிடாய் நேரத்தில் மனைவியுடன் கூடினால் அதற்குரிய பரிகாரம் என்ன?

அப்துல்லாஹ்

பதில்

மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

இத்தடையை மீறியவர்கள் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும். இதுவே அந்தப் பாவத்துக்குரிய பரிகாரமாகும்.

230حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ حَدَّثَنِي الْحَكَمُ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ قَالَ أَبُو دَاوُد هَكَذَا الرِّوَايَةُ الصَّحِيحَةُ قَالَ دِينَارٌ أَوْ نِصْفُ دِينَارٍ رواه أبو داود

இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் கூறுகிறார்கள் :

தனது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவருடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

நூல் : அபூதாவுத் (230)

ஒரு தீனார் என்பது அன்று வழக்கத்தில் இருந்த தங்க நாணயமாகும். சுமார் நான்கரை கிராம் எடை கொண்ட நாணயம் தீனார் எனப்படும். நான்கரை கிராம் அல்லது இரண்டேகால் கிராம் தங்கத்தின் மதிப்பிலான தொகையை தர்மம் செய்ய வேண்டும் என்பது இதற்கான பரிகாரமாகும்.

 

 

23.12.2011. 23:40

நடத்தை கெட்ட மனைவியுடன் வாழலாமா

நடத்தை கெட்ட மனைவியுடன் வாழலாமா

கேள்வி

கள்ளக்காதல் செய்தால் திருமண உறவு முறிந்துவிடுமா? இத்தவறைச் செய்தவரை மன்னித்து அவருடன் வாழ்க்கை தொடரலாமா?

கலைஞன்

பதில்

கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் வேறு ஒருவருடன் கள்ள உறவு வைத்தால் இதனால் அவ்விருவருக்கிடையே உள்ள திருமண உறவு முறிந்துவிடாது.

தவறு செய்தவர் தான் செய்த தவறுக்காக வருந்தி இனி இந்தத் தவறை செய்யமாட்டேன் எனக் கூறி மன்னிப்புக் கேட்கிறார். இதை ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் அவருடைய வாழ்க்கைத் துணைக்கு உரிமையுள்ளது. அவர் இதை ஏற்றுக் கொண்டால் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாகவே வாழலாம்.

அவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த குற்றத்தைச் செய்தவரை விட்டும் பிரிந்து விடலாம். ஆண் தவறு செய்திருந்தால் பெண் தனக்குரிய விவாகரத்து முறையின் படி (குலஃ) கணவனிடமிருந்து பிரிந்து கொள்ளலாம்.

பெண் தவறு செய்திருந்தால் அதை அவன் அம்பலப்படுத்துவதில் உறுதியாக இருந்தால் லிஆன் என்ற முறையில் பிரிந்து கொள்ளலாம்.

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும். "அவனே பொய்யன்'' என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனையிலிருந்து அவளைக் காக்கும். "அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்'' என்பது ஐந்தாவதாகும்.

திருக்குர்ஆன் 24:6-9

மனைவி நடத்தை கெட்டவள் எனக் குற்றம் சாட்டும் கணவனுக்கு தன்னைத் தவிர வேறு ஆதாரம் இல்லாவிட்டால் அவன் தான் சொல்வது உண்மையே என நான்கு தடவை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும். ஐந்தாவது தடவையாக நான் கூறுவது பொய்யாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என் மீது ஏற்பட்ட்டும் என்று அவன் கூற வேண்டும்.

இதைத் தொடர்ந்து அவனது மனைவி நான்கு தடவை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அதை மறுக்க வேண்டும். ஐந்தாவது தடவை நான் சொல்வது பொய்யாக இருந்தால் என் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்ட்டும் எனக் கூற வேண்டும்

இவ்வாறு இருவரும் கூறிய உடன் இருவருக்கும் இடையே இருந்த திருமண உறவு தானாக முறிந்து விடும். இதன் பின்னர் மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ அனுமதி இல்லை. மேலும் அவள் பெற்ற குழந்தை தன்னுடையது அல்ல என்று அவன் மறுத்தால் அந்தக் குழந்தை தாயுடன் சேர்க்கப்படும். அவனது குழந்தையாகக் கருதப்படாது. இதற்கான் ஆதாரங்கள் வருமாறு:

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனைக் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப் பழியாக) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர் களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அப்போது அல்லாஹ் அந்தக் கணவன் மனைவி தொடர் பாகக் குர்ஆனில் தான் கூறியுள்ள லிஆன்' எனும் சாப அழைப்புப் பிரமாணச் சட்டத்தை அருளினான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மனிதரிடம், உமது விஷயத்திலும், உம்முடைய மனைவி விஷயத்திலும் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள். பிறகு அந்த (கணவன், மனைவி) இருவரும் லிஆன்' செய்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதர் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார். (அன்றி லிருந்து) அந்த நிகழ்ச்சியே லிஆன்' செய்யும் கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பதற்கு முன்மாதிரியாகிவிட்டது. அப்பெண் கருவுற்றி ருந்தாள். அவளுடைய கணவர் அக்கருவை (தனக்குரியது' என) ஏற்க மறுத்தார். (பின்னர் அவளுக்குப் பிறந்த) அவளுடைய மகன் அவளுடன் இணைத்தே (இன்னவளின் மகன்) என்று அழைக்கப்பட்டு வந்தான். பிறகு அவன் அவளிடமிருந்தும், அவள் அவனிடமிருந்தும் அல்லாஹ் ஏற்படுத்திய பங்கினைப் பெறுகின்ற வாரிசுரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.

புகாரி 4746

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின்•தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் (உவைமிர்) தம் மனைவியின் மீது (விபசாரக்) குற்றம்சாட்டி அவளுடைய குழந்தையை (தன்னுடையதாக) ஏற்க மறுத்தார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் (சாப அழைப்புப் பிரமாணம்' செய்திடுமாறு) உத்தரவிட்டார்கள். அவர்களும் (குர்ஆனில்) அல்லாஹ் கூறியுள்ள முறைப்படி (லிஆன்' எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். பிறகு, நபி (ஸல்) அவர்கள் குழந்தை அப் பெண்ணிற்குரியது என்று தீர்ப்பளித்து, லிஆன்' செய்த (கணவன், மனைவி) இருவரையும் (மண பந்தத்திலிருந்து) பிரித்துவைத்தார்கள்.

புகாரி 4748

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் தம் மனைவி மீது விபசாரக் குற்றம் சாட்டினால் (சட்டம் என்ன)? என்று கேட்டேன். அதற்கவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை (இதைப் போன்ற நிலையில்) நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள். பிறகு உங்களிருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா? என்றார்கள். உடனே அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா? என்று கேட் டார்கள். அப்போதும் அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மூன்றாம் முறையாக அதைப் போன்றே) உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரித் திரும்புகிறவர் உண்டா? என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் மறுத்தார்கள். ஆகவே, அவர்கள் இருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்த ஹதீஸில் ளசயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டன ஒரு விஷயத்தைத் தாங்கள் கூறவில்லை என்றே கருதுகிறேன் என்று என்னிடம் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். பிறகு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: (சாப அழைப்புப் பிரமாணம் செய்த) அந்த மனிதர், (மஹ்ராக நான் அளித்த) எனது பொருள் (என்ன ஆவது)?' என்று கேட்டார். அதற்கு அவரிடம், (உம்முடைய மனைவி மீது நீர் சுமத்திய குற்றச்சாட்டில்) நீர் உண்மையாளராய் இருந்தால், அவளுடன் நீர் ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டுள்ளீர்! (அதற்கு இந்த மஹ்ர் நிகராகிவிடும்.) நீர் பொய் சொல்லி யிருந்தால் (மனைவியை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அந்தச் செல்வம் உம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது' என்று கூறப்பட்டது.

புகாரி 5311

நான் லிஆன் செய்த போது அங்கே இருந்தேன். இருவரும் பிரிந்து விட வேண்டும் என்பதும் இருவரும் ஒரு போதும் சேரக்கூடாது என்பதும் அப்போது முதல் சுன்னத்தாக ஆனது என்று ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.

அபூதாவூத் 1918

கணவன் அவளை அம்பலப்படுத்தாமல் அவளிடமிருந்து விலகி விட விரும்பினால் தலாக் கூறி பிரிந்து கொள்ளலாம்.

அல்லது அவன் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் முடிவு எடுத்தால் அதற்கான உரிமை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பின்வரும் செய்தி இதைத் தெளிவுபடுத்துகின்றது.

1753قَالَ أَبُو دَاوُد كَتَبَ إِلَيَّ حُسَيْنُ بْنُ حُرَيْثٍ الْمَرْوَزِيُّ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنْ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ عَنْ عُمَارَةَ بْنِ أَبِي حَفْصَةَ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ امْرَأَتِي لَا تَمْنَعُ يَدَ لَامِسٍ قَالَ غَرِّبْهَا قَالَ أَخَافُ أَنْ تَتْبَعَهَا نَفْسِي قَالَ فَاسْتَمْتِعْ بِهَا رواه أبو داود

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எனது மனைவி (தன்னைத்) தொடுபவரின் கையைத் தட்டிவிடுவதில்லை என்று கூறினார். அவளை ஒதுக்கிவைத்துவிடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனது மனம் அவளைப் பின்தொடர்ந்தே செல்லுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்றார். அப்படியானால் அவளை அனுபவித்துக்கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் (1753)

09.12.2011. 18:59

நபிகள் நாயகம் மகளுக்கு சீதனம் கொடுத்

நபிகள் நாயகம் மகளுக்கு சீதனம் கொடுத்தார்களா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகளின் திருமணத்தின் போது சில பாத்திரங்களை கொடுத்தார்கள் என்று ஹதீஸ் உள்ளதா

உஸ்மான் துபை

أخبرنا نصير بن الفرج قال حدثنا أبو أسامة عن زائدة قال حدثنا عطاء بن السائب عن أبيه عن علي رضي الله عنه قال جهز رسول الله صلى الله عليه وسلم فاطمة في خميل وقربة ووسادة حشوها إذخر

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமாவை திருமணம் முடித்துக் கொடுத்த போது ஒரு கனமான போர்வை, (தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளும்) ஒரு தோல் துருத்தி, இத்கிர் என்ற புல் சருகு அடைக்கப்பட்ட ஒரு தலையனை ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பினார்கள் என்று அலி ரலி அறிவிக்கிறார்கள்.

நஸாயீ 3331 மற்றும் இப்னுமாஜா அஹ்மத்

பெற்ற மகளுக்கு நாமாக விரும்பி சில பொருட்களைக் கொடுக்கலாம் என்பது இதில் இருந்து தெரிகிறது.

ஆனால் விரும்பி தரப்படுகிறதா அதில் நேரடியான மறைமுகமான நிர்பந்தம் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

இவற்றையும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/illaram_kelvi/evai-varathatsanai/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/virumbi_kodutha_varathatsanai/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/virumbi_tharuvathu_varathatsanaiyaa/

http://onlinepj.com/kutumbaviyal/virumpi_kodukum_varathatsanai/

http://onlinepj.com/kelvi_pathil/illaram_kelvi/nabiyin_mamanar_thirumana_virunthu/

28.10.2011. 14:03

திருமணம் செய்யாமல் இருக்கலாமா

திருமணம் செய்யாமல் இருக்கலாமா

கேள்வி

இஸ்லாத்தில் திருமணம் செய்யாமல் இருக்க அனுமதியுண்டா?

பதில்

ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் இயற்கையாகவே பாலுணர்வை ஏற்படுத்தியுள்ளான். இந்த ஆசையை முறையாக அவன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் என்ற முறையை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

எனவே உடலில் எந்தக் குறைபாடும் இல்லாமல் பாலுணர்வு உள்ளவர் கட்டாயமாக திருமணம் முடிக்க வேண்டும். இவர் திருமணத்தைப் புறக்கணித்தால் ஒரு நேரம் இல்லாவிட்டால் இன்னொரு நேரத்தில் தவறான பாதைக்குச் சென்று விடுவார். மனிதர் ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு திருமணம் சிறந்த வழிமுறை என்பதால் இதை மார்க்கம் வலியுறுத்துகின்றது.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (24 : 32)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள்.

புகாரி (5066)

திருணம் செய்து கொள்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். தனக்குத் திருமணம் செய்து கொள்ள தகுதி இருந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் துற்வறாம் மேற்கொள்வதற்கு அனுமதியில்லை. இத்தகையவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

அனஸ்  பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், "(இனி மேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமா! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள்.

புகாரி 5063

திருமணம் செய்வது நபி (ஸல்) அவர்களின் வழி மட்டுமல்ல. அனைத்து நபிமார்களின் வழிமுறையாகும்.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம்.

அல்குர்ஆன் (13 : 38)

திருமணம் செய்தால் சுதந்திரம் பறிபோய் விடும் என்பதற்காக திருமணத்தைப் புறக்கணிப்பவர்களும் இருக்கின்றார்கள். இதற்காக திருமணத்தைப் புறக்கணிப்பதும் தவறாகும்.

அதே நேரத்தில் சிலருக்கு இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது. தன் வாழ்க்கைத் துணையின் இல்லறத் தேவையை நிறைவேற்ற முடியாது. இந்த நிலை இருந்தால் இத்தகையவர்கள் மட்டும் திருமணத்தைத் தவிர்க்கலாம். இந்தக் குறைக்கு சிகிச்சை செய்து குணமான பின் திருமணம் செய்து கொள்ளலாம்.

28.10.2011. 13:33

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது உடலுற

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்ளலாமா

ரியாஸ்

மார்க்கத்தில் இதற்கு எந்த்த் தடையும் இல்லை. ஆனால் உடல் ரீதியாக இதில் பிரச்சனை இருப்பவர்கள் அதைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

சில பெண்களின் கர்ப்ப்ப்பை பலவீனம் காரணமாக சின்ன அசைவுகளும் கருவைக் கலைத்து விடக்கூடும் இவ்வாறு குறைந்த சதவிகிதம் பெண்கள் இருக்கிறார்கள். கரு உறுதிப்பட சில மாதங்கள் ஆகலாம். அதன் பின்னர் உடலுறவு கொண்டால் கருவுக்கு பாதிப்பு ஏற்படாது. இது போன்ற நிலையில் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை இருந்தால் உடலுறவை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அது போல் சில உடலுறவு முறைகளால் கருவுக்கு பாதிப்பு ஏற்படலாம். அது குறித்து சரியாக அறிந்து கொண்டு செயல்பட வேண்டும். கருவுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் நட்ந்து கொள்ள வேண்டும்.

உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்பது அல்லாஹ்வின் கட்டளை. பார்க்க திருக்குர்ஆன்,, 2:195

27.10.2011. 14:07

விந்து பட்ட ஆடையுடன் தொழலாமா?

விந்து பட்ட ஆடையுடன் தொழலாமா?

நிஸார்

பதில்

ஸ்கலிதம் அல்லது உடலுறவின் காரணமாக ஆடையில் அசுத்தம் ஏற்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவி விட்டால் போதுமானது. ஆடை முழுவதையும் துவைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த அசுத்தம் காய்ந்து விட்டால் அந்தப் பகுதியைச் சுரண்டி விட்டு பின்னர் அந்தப் பகுதியை மட்டும் கழுவினால் போதுமானது. பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

நான் நபி (ஸல்) அவர்களுடைய ஆடையில் இந்திரியம் பட்ட இடத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வார்கள். ஆடையில் ஈரம் தெளிவாகத் தெரியும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 229

ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் (அது காய்ந்து விட்டிருந்தால்) அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்துவிடட்டும். பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)

நூல் : புகாரீ (307)

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வோம். என்னிடமிருந்து (இரத்தம்)ஏதேனும் அவர்களின் மீது பட்டுவிடுமானால் அவ்விடத்தைக் கழுவிக் கொள்வார்கள். அதற்கு மேல் வேறெதுவும் செய்ய மாட்டார்கள். அதே ஆடையுடனே தொழவும் செய்வார்கள். மீண்டும் வந்து படுத்துக் கொள்வார்கள். என்னிடமிருந்து ஏதேனும் அவர்கள் மீது பட்டுவிடுமானால் அவ்வாறே செய்துவிட்டு அந்த ஆடையுடனே தொழுது கொள்வார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : தாரமீ (995)

27.10.2011. 11:06

உடலுறவுக்கு தடுக்கப்பட்ட நாட்கள் உண

உடலுறவுக்கு தடுக்கப்பட்ட நாட்கள் உண்டா
கேள்வி 
மனைவியிடம் உடலுறவு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்ட நேரம் தடைசெய்யப்பட்ட நேரம் என்று மார்க்கத்தில் உள்ளதா? அப்படி ஒரு நூலில் படித்தேன்

ஃபைசல் துபை

பதில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என்றோ உடலுறவு கொள்வது கூடாது என்றோ மார்க்கம் கூறவில்லை. இதற்கு தேவையில்லாமல் கால நிர்ணயம் செய்தால் அது யாராலும் செயல்படுத்த முடியாத சட்டமாகவே இருக்கும். 

வேறு மதங்களில் தான் இதற்கு நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பார்ப்பார்கள். இஸ்லாத்தில் இந்த மூடநம்பிக்கைக்கு அனுமதியே இல்லை. எனவே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம்.  

மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டின் நேரத்திலும் நோன்பு வைப்பவர் நோன்பு வைத்திருக்கும் நேரத்திலும் இஹ்ராமின் போதும்,மட்டும் இதைத் தவிர்க்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது.

இதைத் தவிர எந்த நாளிலும் எந்த நேரத்திலும் உடலுறவு கொள்வது மார்க்கத்தில் அனும்னதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த நூலில் அப்படி படித்திருந்தாலும் அது கட்டுக்கதையாகத் தான் இருக்கும். அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்னதாக இருக்காது

24.10.2011. 12:50

இல்லறம் கேள்விகளின் தொகுப்பு

இல்லறம் கேள்விகளின் தொகுப்பு

திருமணம்

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா

மத்ஹபைப் பின்பற்றும் பெண்களை மணந்து கொள்ளலாமா


திருமணத்தின் போது கழுத்துப்பட்டி அணியலாமா

திருமணத்துக்கு பத்திரிகை அடிக்கலாமா

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா?

நபிகள் நாயகம் சிறு வயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?

மணமுடிக்க உரிய சக்தி எவ்வளவு?

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

இணை கற்பிக்கும் பெண்கள்

தாலி கருகமணி அணியலாமா? அதை அணியும் போது என்ன கூற வேண்டும்?

தாயின் சகோதரி மகளை திருமணம் செய்யலாமா?

பால்ய விவாகம் கூடுமா?

வலீமா விருந்து

ஆடம்பர விருந்துக்கு தடை இல்லையாமே

ஏழைக்கு தனியாக விருந்து வைக்கலாமா?

திருமண நாளில் வலீமா விருந்து வைக்கலாமா?

நபியின் மாமனார் திருமண விருந்து கொடுத்தார்களா?

பெண் வீட்டார் விருந்து கூடுமா?

திருமணத்திற்கும், வலீமாவிற்கும் அவசியம் என்ன?

பெண் வீட்டு விருந்து கூடுமா?

மஹர் வரதட்சணை

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா?

வாங்கிய வரதட்சனையை திருப்பிக் கொடுத்தல்

 

எவை எல்லாம் வரதட்சனையாகக் கருதப்படும்?

இத்தா

கணவர் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா

தள்ளாத கிழவியின் இத்தா காலம் எவ்வளவு?

தாம்பத்தியம்

குளிப்பு எப்போது கடமையாகும்

குழந்தை உருவாகாமல் தடுக்க ஆணுறை அணியலாமா?

குளிப்பது எப்போது கடமையாகும்?

கருகலைப்பு செய்வது குற்றமா?

மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்து இருக்கலாம்?

மனைவியின் விந்தை சுவைப்பது கூடுமா?

குடும்ப கட்டுப்பாடு கூடுமா?
 

பிரச்சணைகள் விவாகரத்து

மனைவிக்காக தாயைத் திட்டலாமா?

பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியை தலாக் விடலமா?

ஸாபித் பின் கைஸ் அவர்களை பற்றி.....

கணவனின் பணத்தை கணவனுக்கு தெரியாமல் மனைவி எடுக்கலாமா?

கணவனை பிடிக்காத பெண்கள் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டுமா?

குலா என்றால் என்ன? தலாக், குலா இவைகளுக்கிடையில் உள்ள வித்தியாசம் என்ன?


 

இஸ்லாம் கூறும் குடும்பவியல் தொகுப்பு


வீடியோ வடிவில் கேள்விகள்

திருமணச் சட்டங்கள்

பிற மதத்தவர்களின் திருமணங்களில் கலந்து கொள்ளலாமா

பிறமதத்தவரை திருமணம் செய்ய மறுப்பது ஏன்

சித்தப்பா மகளைத் திருமணம் செய்வது சரியா

மணமக்களை மண மேடையில் சேர்த்து வைக்கலாமே

மணமேடயில் மாப்பிள்ளை மட்டும் அமர்வது ஏன்

இஸ்லாத்தில் முத்ஆ வாடகை மனைவி உண்டா

முஸ்லிம் ஆண் இந்துப் பெண்ணை மணக்கலாமா

சித்தப்பா மகளை திருமணம் செய்வது சரியா

திருமணத்தில் ஆண்கள் முகம் மறைப்பது ஏன்

முஸ்லிமல்லாதவர்களைத் திருமணம் செய்ய மறுப்பது ஏன்

இஸ்லாத்தின் திருமணச் சடங்குகள் யாவை 

விவாக ரத்து

பெண்களுக்கு விவாக ரத்து உரிமை தேவையா

ஜீவனாம்சம், முத்தலாக் குறித்து இஸ்லாம் சொல்வது என்ன

திருமணம் - விவாகரத்து

கருக்கலைப்பு செய்யலாமா 

கணவன் மனைவி பிரச்சணைக்கு தீர்வு என்ன 

ஆலிமாக்களைத் தான் திருமணம் செய்ய வேண்டுமா 

கணவன் மனைவி பொறுப்புகள் என்ன 

ஒரே நேரத்தில் மூன்று தலாக் கூடுமா 

தலாக்குக்கு உரிய இத்தா காலம் எவ்வளவு 

தலைப்பிரசவம் தாய் வீட்டில் தான் நடத்தனுமா 

வளைகாப்புக்கு அனுமதி உண்டா 

வரதட்சணை திருமணத்துக்கு சமைத்துக் கொடுக்கலாமா 

வரதட்சணைக்காக கடன் பட்டவருக்கு உதவலாமா 

திருமணத்தில் ஃபாத்திஹா ஓதலாமா 

பெண்கள் பல திருமணங்கள் செய்தால் என்ன 

பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டா  

விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய கேவலமான நிபந்தனை ஏன்

ஆடம்பர திருமணத்தில் கலந்து கொள்ளலாமா 

வரதட்சணைக்கு உதவலாமா 

இணை கற்பிப்பவர்களைத் திருமணம் செய்யலாமா 

மனைவி கணவனை அடிக்கலாமா 

தலாக் இத்தால் குலா இத்தா வேறுபாடு 

இத்தாவின் சட்டங்கள் 

வரதட்சணை திருமணத்தில் கலந்து கொள்வது 

விரும்பித் தருவது வரதட்சணையா 

தடை செய்யப்பட்டவரை திருமணம் செய்திருப்பது இஸ்லாத்தை ஏற்பதற்கு தடையாக அமையுமா 

திருமணத்திற்கு தலைவர்களை அழைப்பது 

அழகான பெண்ணைத் தான் மணமுடிப்பேன் என்பது சரியா 

குலம் பார்த்து திருமணம் செய்யலாமா 

வரதட்சணைக்காக உறவினர் திருமணத்தைப் புறக்கணிக்கலாமா 

கணவன் காணாமல் போய்விட்டால் 

விரும்பிக் கொடுக்கும் வரதட்சணையை வாங்கலாமா 

வரதட்சனைக்கு யார் காரணம் 

மணமகன் மணப்பெண்ணைப் பார்க்கலாமா 

உறவினரிடையே திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகுமா 

விபச்சாரம் செய்தவரை திருமணம் செய்யலாமா 

இரண்டாம் திருமணம் செய்தால் முதல் மனைவியை தலாக் கூற வேண்டுமா 

படிச்ச பொண்ணுதான் வேண்டும் என்பது சரியாநிச்சயம் செய்தபின் மாறலாமா

மாமனாரைக் கவனிப்பது மருமகளுக்கு கடமையா 

இத்தா என்றால் என்ன 

விபச்சாரம் செய்தவரை திருமணம் செய்யலாமாமுத்தலாக் கூடுமா

தாலி மெட்டிக்கு அனுமதி உண்டா 

மனைவியின் பெற்றோரைக் கவனிப்பது கடமையா

09.06.2011. 11:23

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மற

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா  

என் விருப்பமின்றி பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். எனக்கு இஸ்லாத்தில் உள்ள உரிமை என்ன?

தொடர்ந்து படிக்க 16.05.2011. 14:09

நபியின் மாமனார் திருமண விருந்து கொடு

நபியின் மாமனார் திருமண விருந்து கொடுத்தார்களா?

எனது உறவினர் வீட்டில் சமீபத்தில் திருமணம் நடந்தது. உறவினர் மாப்பிள்ளை வீட்டார் தான். ஆனாலும் திருமணத்தின் போது மண்டபத்தில் மதிய உணவு பெண் வீட்டார் சார்பில் வழங்கப்பட்டது. இது தவறு என்று அவரிடத்தில் கூறிய போது  "நாங்களாக வற்புறுத்தவில்லை. பெண் வீட்டாரே தானாக முன்வந்து தருகிறார்கள். ஆகவே, இது எப்படி தவறாகவோ அல்லது வரதட்சனை ஆகவோ எடுத்துக் கொள்ள முடியும்?"  என்று கேட்கின்றனர். நாம் 'அப்துர்ரஹ்மான் பின் அவுப்' அவர்களின் ஹதீஸ் மற்றும் 'ஜகாத் வசூலித்தவருக்கு அன்பளிப்பு கொடுக்கப்பட்ட ஹதீஸ்களைக் கூறிய போது நபிகள் நாகயமும் அன்னை உம்மு ஹபீபா அவர்களும் திருமணம் செய்த போது, உம்மு ஹபீபா அவர்களின் தந்தை நஜ்ஜாசி மன்னர் அவர்கள் தானாக முன்வந்து விருந்து கொடுத்தார்கள். அதை நபிகள் நாயகம் அவர்கள் தடுக்கவில்லை என்று ஒரு ஹதீஸ் இருப்பதாகவும், அதனால் திருமணத்திற்கு மணமகள் வீட்டில் விருந்து கொடுப்பது கூடும் என்றும் தங்களின் செயலை நியாயப்படுத்துகிறார்கள். இந்த ஹதீஸ் இடம் பெற்ற நூல் மற்றும் எண்களைக் கேட்ட போது- 'தான் இதை ஒரு புத்தகத்தில் படித்ததாகவும் ஹதீஸ் நூல் மற்றும் எண் நினைவில் இல்லை' என்று கூறி விட்டார்கள்

தொடர்ந்து படிக்க 24.04.2011. 22:54

மனைவிக்காக தாயைத் திட்டலாமா

மனைவிக்காக தாயைத் திட்டலாமா

எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி அவரது மனைவியிடம் சந்தோக்ஷமாக இருப்பதற்கு அவரது தாயார் எப்போதும் இடையூராக இருக்கிறாராம் அதனால் அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டுமானால் அவரது தாயாரைத் திட்டினால் தான் அவர் பேசாமல் இருக்கிறாராம். இஸ்லாத்தின் பார்வையில் அவ்வாறு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர் அவரது தாயாரிடம் எவ்வாறாக நடந்து கொள்வது விளக்கம் தேவை

தொடர்ந்து படிக்க 19.04.2011. 06:54

பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்பத

பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியை தலாக் சொல்லலாமா 

கணவன் இடத்தில் நல்ல விதமாக நடக்கும் எந்த குறையும் சொல்ல முடியாத ஒரு மனைவியை கணவனின் தாய் தலாக் செய்துவிடு என்று சொன்னால் உடனே தலாக் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் தேவை

தொடர்ந்து படிக்க 18.04.2011. 03:30

தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு காலம்

தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு காலம்
மாதவிடாய் நின்ற பெண்ணின் கணவர் இறந்து விட்டால் அவரது இத்தா எவ்வளவு காலம்? கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்ணின் கணவர் இறந்து விட்டால் அவரது இத்தா எவ்வளவு நாட்கள்

தொடர்ந்து படிக்க 12.04.2011. 13:59

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா

பதில்

தந்தை தன் மகளுக்கு அன்பளிப்புச் செய்வது தவறல்ல. பின்வரும் செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

தொடர்ந்து படிக்க 10.04.2011. 09:17

குழந்தை உருவாகாமல் தடுக்க ஆணுறை பயன்

குழந்தை உருவாகாமல் தடுக்க ஆணுறை பயன்படுத்தலாமா

தொடர்ந்து படிக்க 25.03.2011. 01:41

<< First < Previous [1 / 3] Next > Last >>



செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
85 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி